Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்துக்குத் தடை அல்ல..! நிலம் கையகப்படுத்தும் அரசாணை மட்டுமே ரத்து!
எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்குத் தடை அல்ல - நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது, அரசு அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் பட்சத்தில், இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் மத்திய அரசின் பாரத்மால பரியோஜனா என்னும் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக 276 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு அதிகம் எனவும், இந்தத் திட்டத்தால், உண்மையில் சென்னை - சேலம் இடையே உள்ள தூரம் 45 கிலோமீட்டர் மட்டுமே குறைக்கப்படும் எனவும், அரசு சொல்வதுபோல, இந்தத் திட்டம் சென்னை - வண்டலூர் சாலை உள்ளிட்ட சாலைகளில், குறித்துக் கூறப்படும் அளவு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை எனவும், இந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் சட்ட மீறல்கள் இருப்பதாகவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்காக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன்கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு.
[color][font]
மேலும், எட்டுவழி பசுமைச் சாலை திட்டமே ரத்து செய்யப்பட்டதாகச் செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்குத் தடை அல்ல - நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அரசு அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும்பட்சத்தில், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்பு உள்ளது" என்றார்.
[/font][/color]
[color][font]
தமிழக மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றிருக்கும் இந்தத் தீர்ப்பின் விசாரணை ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் நேரடியாகப் பாதிப்படைந்த மக்களும், விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவது, இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக பல்வேறு பொது நல வழக்குகளும் எனச் சுமார் 45 வழக்குகளை ஒன்றாக விசாரித்த நிலையில், இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் டிசம்பர் 14-ம் தேதி முடிவடைந்தது, வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
[/font][/color]
[color][font]
மனுதாரர் தரப்பு வாதங்கள் :
* 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் இல்லை.
* தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு முன்னதாகவே அரசு நிலம் கையகப்படுத்துவதை ஆரம்பித்தது சட்டத்துக்குப் புறம்பானது.
* சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் விவசாய நிலங்கள், கிணறுகள், குளம், ஏரி மற்றும் மலைகள், வனங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட உள்ளது.
* இயற்கை வளங்களைப் பாதிப்புக்குள்ளாகி இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது, (sustainable development) எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு எதிரானது. இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது.
* இந்தத் திட்டத்தால் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் அதற்கான சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை.
* J.S.W ஸ்டீல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம், சேலம் அருகே கனிம வளங்களுக்காக ஏறத்தாழ 4,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியிருக்கிறது. இப்படி, தனியார் நிறுவனங்களின் கனிமவளச் சுரங்கங்கள் பயன்பாட்டுக்காகத்தான் இந்த எட்டுவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த மறைமுக நலனுக்காகவே அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
* இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி அரசு முழுமையாக ஆராயாமல், அவசரமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* மத்திய அரசு, முதலில் மதுரை - சென்னை இடையே சாலை அமைக்கப் போடப்பட்ட திட்டம், பின்னர் அறியப்பட்ட காரணங்களுக்காகவே சென்னை - சேலம் இடையே மாற்றி அமைக்கப்பட்டது.
* இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் குறித்து ஆலோசனைகளை வழங்கி தனியார் நிறுவனம் அளித்த மதிப்பீட்டு அறிக்கை பிழையானது.
* இந்தத் திட்டத்துக்காக வனங்கள் அழிக்கப்பட்டு சாலை அமைக்கப்படுவது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் புறம்பானது.
இவ்வாறு ஏராளமான வாதங்கள் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்குகள் மிக அவசரமாகத் தொடுக்கப்பட்டவை என்றும், அரசு அதன் முழு திட்ட விளக்கத்தையும் அளிக்கும் வரையில், இந்த வழக்குகளுக்கு முகாந்திரம் இல்லை எனவும், பல்வேறு வகைகளில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களின் அடிப்படையில், நீதிமன்றம் கீழ்க்கண்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது,
* சென்னை - சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காகத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து.
* இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
* எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்காக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது மிகவும் அவசியம்.
* இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, மதிப்பீட்டு அறிக்கை வழங்கிய தனியார் நிறுவன அறிக்கை, இந்தத் திட்டத்துக்காகப் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டதில்லை எனும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* எட்டுவழி பசுமைச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும்போது, அதில் சுமார் ஆறு இடங்களில் மட்டுமே நுழைவு வழிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல... சிறு ஊர்களில் உள்ள மக்கள், எட்டுவழிச் சாலையைப் பயன்படுத்தவே பல கிலோமீட்டர் தூரம் பயணப்பட வேண்டும் என்பது மக்கள் நலனுக்கு ஏற்றதல்ல... எனவே, இதுகுறித்து அரசு ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
* இந்த வழியில் உள்ள சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுடன் முன்னர் கையெழுத்திட்ட ஆவணப்படி, சுங்கச்சாவடிகள் விரிவுபடுத்தப்படும் வேலைகளுக்காக மூடப்பட்டால், அவர்கள் சுங்கம் வசூலிக்கும் காலம் மீண்டும் ஐம்பதிலிருந்து, நூறு சதவிகிதம் அதிகரிக்கப்படும். ஆதலால், அவர்கள் பல வருடங்களுக்குச் சுங்கம் வசூலிப்பார்கள். இது, பொதுமக்களைக் கடும் அவதிக்குள்ளாகும்.
* இவ்வளவு பெரிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும், அதைச் செய்யாதது தவறு.
* விதிமீறல்களால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் அதற்குரியவர்களிடம் எட்டு வாரங்களுக்குள் ஒப்படைக்கப்பட்டு, அந்த நிலங்களின் அரசு ஆவணங்களை அவர்களின் பெயர்களில் பழைய நிலையிலேயே பதிவுசெய்து தர வேண்டும். அதிலிருந்து இரண்டு வாரங்களில் நிலத்துக்குச் சொந்தக்காரர்களிடம் இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும்.
இத்தகைய முக்கிய அம்சங்களைக் கொண்ட 117 பக்க தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பல இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாடி வருகின்றனர். [/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரவுடி கொலை வழக்கில் மதுரை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் நீதிமன்றத்தில் சரண்!
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர்மீது கொலை உட்பட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்கு தாலி வாங்க, கடந்த 6-ம் தேதி சோலைஅழகுபுரத்தில் உள்ள நகைக்கடைக்கு நண்பர் ராமகிருஷ்ணனுடன் சென்றபோது, ஒரு கும்பலால் துரத்தப்பட்டு வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இதுபற்றி ஜெய்ஹிந்துபுரம் காவல் துறை, ஐயப்பனின் நண்பர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில், ''மூன்று வருடங்களுக்கு முன் மனைவி இறந்துள்ள நிலையில், கட்டட வேலைக்குச் சென்றுவந்த ஐயப்பன், இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து, நகை வாங்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஐயப்பனுக்கும் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாருக்கும் இடையே முன் பகை இருந்துள்ளது. அன்றைய தினம் சதீஷ்குமார், தன் நண்பர்கள் ஜெய்கணேஷ், அருள்முருகன், லிங்கம், விக்னேஷ் ஆகியோருடன் வந்து கொலை செய்துள்ளார்' என்று கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்டவர்கள், கொலை செய்தவர்கள் பதிவாகியுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள், திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தேர்தல் காலம் என்பதால், இந்து முன்னணி நிர்வாகிமீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`பர்தாவில் பிட்டு; ஜோசப் விஜய்; தேசத் துரோகி!’ - சிவகங்கையை வெல்வாரா ஹெச்.ராஜா?
நட்சத்திர வேட்பாளர் : ஹெச்.ராஜா (சிவகங்கை)
ஹரிஹர ராஜ சர்மா!
தஞ்சாவூரை அடுத்த மெலட்டூர் கிராமத்தில் ஹரிஹரன் சர்மா என்பவருக்கு மகனாக 1957-ம் ஆண்டு மே 1-ம் தேதி பிறந்தார். வணிகவியலில் இளங்கலை பட்டமும் சட்டப்படிப்பையும் முடித்தவர். வழக்கறிஞராகவும் ஆடிட்டராகவும் இருப்பது ஸ்பெஷல். மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதுள்ள ஈடுபட்டால், அதில் தீவிரமாக இயங்கியவர். பின்னர் பா.ஜ.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்த்தெடுத்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
அரசியல் குரு:
சிவகங்கை மாவட்டத்தில் தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறார். இவரது அரசியல் குரு இல.கணேசன். ஒரு கட்டத்தில் அவரை எதிர்க்கவும் தொடங்கினார். மாவட்டத்தில் இருந்த முக்கியமான நிர்வாகிகள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் ராஜாவால் ஓரங்கங்கட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாற்றுக்கட்சிகளில் செட்டில் ஆகிவிட்டதால், இப்போது தேர்தல் வேலை பார்ப்பதற்குக்கூட சீனியர்கள் இல்லாமல் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சிவகங்கையில் பொன்னார் அணியும் ராஜா அணியும் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். பெயருக்குத் தேசியச் செயலாளராக இருந்தாலும் காரைக்குடியில் ஒரு கூட்டத்தைக்கூட ஹெச்.ராஜா நடத்த முடியாத அளவுக்குப் பொன்னார் தரப்பினர் அரசியல் செய்து வருகின்றனர்.
காரைக்குடி எம்.எல்.ஏ:
இவருக்குத் தேர்தல் களம் புதிதல்ல. சட்டமன்றம், நாடாளுமன்றம் என 5 முறை போட்டியிட்டார். இதில் ஒருமுறை மட்டுமே வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். அடுத்து, 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இந்த முறை காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தோல்வி. 2014-ல் மோடி அலை வீசியது. பா.ஜ.க, தே.மு.தி.க அணியில் சிவகங்கை தொகுதியில் களம் கண்டார். 1,33,763 வாக்குகள் கிடைத்தாலும் மூன்றாவது இடத்தை மட்டுமே பெற முடிந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.நகரில் போட்டியிட்டுத் தோற்றார். இப்போது மீண்டும் சிவகங்கைத் தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறார்.
டாப் 5 சுவாரஸ்யங்கள்:
1. மனதில் பட்டதை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துவது.
2. விவசாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவது.
3. ஆதரவாளர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அதை எப்படியாவது செய்து கொடுப்பது.
4. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை முழுமையாகக் காது கொடுத்துக் கேட்பது.
5. `ராஜா கெட்டவர் அல்ல, அவர் ஒரு குழந்தையைப் போன்றவர்' என ஆதரவாளர்கள் உருகுவது.
டாப் 10 சர்ச்சைகள்:
1. பெரியார், சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியதால் 2014 அக்டோபரில் வழக்குப் பதிவு (அக்டோபர் 2014).
2. இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிவதால் தேர்வுகளில் காப்பியடிக்க முடிகிறது. எனவே, பர்தாவைத் தடை செய்ய வேண்டும் என சர்ச்சைப் பேச்சு (ஜூன் 2015).
3. ஜே.என்.யு. போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவின் மகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற சர்ச்சைப் பேச்சு (அக்டோபர் 2017).
4. பிரதமர் மோடி குறித்துக் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை தேசத் துரோகி என விமர்சனம் செய்தது (மார்ச் 2017).
5. 'மெர்சல் படம்' வெளியானபோது நடிகர் விஜய்யை, `ஜோசப்' என்ற அடைமொழியில் அழைத்தது (அக்டோபர் 2017).
6. சாதி வெறியர் ஈ.வெ.ரா சிலை உடைக்கப்படும் எனச் சமூக வலைதளத்தில் பதிவிட்டது (மார்ச் 2018).
7. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் உயர் நீதிமன்றத்தையும் காவல்துறை அதிகாரிகளையும் தரக்குறைவாக விமர்சித்தது (செப்டம்பர் 2018).
8. தன்னுடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தினால், அதை நான் செய்யவில்லை, என்னுடைய குரல் எடிட் செய்யப்பட்டுவிட்டது எனக் கூறுவது. ஃபேஸ்புக்கில் அட்மின் போஸ்ட் செய்துவிட்டார் எனக் கூறுவது.
9. உயர் நீதிமன்றத்தை விமர்சித்துவிட்டு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது.
10. எம்.எல்.ஏ-வாக இருந்த காலகட்டத்தில் அரசு சார்பில் தனக்கு வழங்கிய உதவியாளர் பதவிக்கான இடத்தை மனைவிக்குக் கொடுத்துவிட்டு, அந்த சம்பளத்தை எடுத்துக்கொண்டது.
சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்:
தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்குப் ப்ளஸ். சொந்தக்கட்சியின் செல்வாக்கைவிட கூட்டணிக்கட்சிகளான தி.மு.க கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் வாக்குகளை நம்புவது பலம். அதேநேரம், அமலாக்கத்துறை வழக்குகள், ஐ.என்.எக்ஸ் வழக்குகள் என நீதிமன்றம் நெருக்கிக்கொண்டிருப்பது கார்த்தியின் மிகப் பெரிய மைனஸ்.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவது ஹெச்.ராஜாவுக்குப் ப்ளஸ்ஸாக இருந்தாலும், அ.தி.மு.க இந்த முறை போட்டியிடாததில் உள்ளூர் அ.தி.மு.க-வினர் சோர்வடைந்திருப்பது ராஜாவுக்கான மைனஸ். உள்கட்சி கோஷ்டி பூசல்களைத் தாண்டி, நம்பிக்கையாகத் தேர்தல் வேலை பார்த்து வருகிறார்.
அ.தி.மு.க வாக்குகள், ஹெச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் வாக்குகள் ஆகியவற்றை அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி பாண்டி பிரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கார்த்தி சிதம்பரமும் ராஜாவும் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சொந்த சமூகமான முக்குலத்தோர் வாக்குகளை நம்பிக் களமிறங்கியிருக்கிறார் தேர்போகி பாண்டி. இவர் பிரிக்கும் வாக்குகள் இரண்டு பிரதானக் கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும் என்பதே களநிலவரம். மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, சிறுபான்மையினர் மீதான ஹெச்.ராஜாவின் விமர்சனங்கள் போன்றவை கார்த்தி சிதம்பரத்தின் பலமாக இருக்கிறது. இருப்பினும், தாமரையை மலரவிடாமல் கை தடுக்குமா என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அலட்சிய அம்பயர்கள்... நேரக் கட்டுப்பாடு... கிரிக்கெட்டுக்கும் வேண்டும் கால்பந்து ரூல்ஸ்!
மும்பை - சென்னை ஐபிஎல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும், `மீண்டும் ஒருமுறை செகண்ட் இன்னிங்ஸ், இரவு 10 மணிக்கு மேல் தொடங்கியிருக்கிறது' என ட்வீட் செய்திருந்தார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. ஆம், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் போட்டி முடிய நள்ளிரவு 12 மணி ஆகிறது. வருமானத்துக்காக `பிராட்காஸ்டிங்’ நிறுவனங்கள் பேச்சைக் கேட்டு, இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய போட்டியை 8 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். அதை 12 மணிக்கு முடிக்கிறார்கள். ஒளிபரப்பு உரிமத்தில் சேனல்கள் எப்படியெல்லாம் கோலோச்சுகின்றன, அவர்களுக்காக பிசிசிஐ எப்படியெல்லாம் வளைந்துகொடுக்கிறது, 15 ஓவரில் சேஸ் செய்ய வேண்டிய ஸ்கோரை 20-வது ஓவரின் கடைசிப் பந்து வரை ஏன் இழுத்தடிக்கிறார்கள் என்பது தனிக்கதை. அதைப் பற்றி இன்னொருமுறை விவாதிப்போம்.
வேகம்தான் டி-20 போட்டியின் பியூட்டி. இரண்டு இன்னிங்ஸ், இடைவேளை உள்பட 3.20 மணி நேரத்தில் போட்டியே முடிந்துவிடும் என்பதால்தான், ஐபிஎல் உட்பட, டி-20 தொடர்களுக்கு அவ்வளவு வரவேற்பு. ஆனால், இன்று போட்டியை நான்கு மணி நேரம் வரை ஜவ்வாக இழுத்து, கொட்டாவி விடவைக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளில், டி-20 லீக் நடக்கிறது என்றாலும், ஐபிஎல் போட்டிகள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. இந்த சீசனில், இதுவரையிலான எல்லா போட்டிகளும் 4 மணி நேரத்துக்கும் குறையாமல் நடந்தது. ஆனால் மும்பை, ராஜஸ்தான் அணிகளின் கேப்டன்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை எனத் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Quote:
[/url]Ric Finlay@RicFinlay
Average time taken to bowl a T20 innings in 2017 and 2017-18:
IPL 106 mins
CPL 105 mins
T20I 98 mins
PSL 97 mins
NZ 93 mins
BBL 90 mins
RSA 88 mins
Ireland 87 mins
NatWest Blast 85 mins
291
5:43 AM - Apr 17, 2018
Twitter Ads info and privacy
170 people are talking about this
[url=https://twitter.com/RicFinlay/status/986034923935969280]
`ஆட்டம் தொடங்குவதற்குள், டீம் மீட்டிங் என்ற பெயரில் ஒரு மணி நேரம் விவாதிக்கிறோம். அப்போதே எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டு விடுகின்றன. அதன்பிறகும், எந்நேரமும் களத்தில் கூடிக்கூடி விவாதிக்கவேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற காரணங்களால்தான் இன்னிங்ஸ் முடிய ரொம்ப நேரமாகிறது. தவிர, ஒரு சில அணிகள் சுமாரான ஃபீல்டர்களுக்குப் பதிலாக, சிறந்த ஃபீல்டர்களை சப்ஸ்டிட்யூட்டாக இறக்குகிறார்கள். இதைப் பற்றி அம்பயர்களிடம் முறையிடுவோம்’ என்றார், டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைஃப். அவர் சொல்வது ஏற்கத் தக்கது. ஆட்டத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவேண்டிய பொறுப்பு அம்பயர்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்னிங்ஸ் நேரத்துக்கு முடியாமல்போவதற்கு அம்பயர்களும் ஒரு வகையில் காரணம்.
உதாரணத்துக்கு, பெங்களூரு – மும்பை போட்டியில் பார்த்திவ் படேல் மிட் விக்கெட்டில் அடித்த பந்தை அங்கிருந்த ரோஹித் ஷர்மா பிடித்து, `Direct hit’ அடித்துவிட்டார். மொயின் அலி ரன் அவுட் என்பது முதன்முறை பார்த்தபோதே எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. 2 மீட்டருக்கு அப்பால் மொயின் அலி பேட்டை தரையில் வைப்பதற்குள்ளேயே பந்து ஸ்டம்பை பதம் பார்த்து, லைட் எரிந்துவிட்டது. ஆனால், தேர்ட் அம்பயரிடம் கேட்ட பிறகே அவுட் தரப்பட்டது. வேடிக்கை என்னவெனில், அவுட் எனத் தெரிந்து மொயின் அலி `Dugout’ சென்று கிளவுஸைச் கழற்றி உட்கார்ந்துவிட்டார். அதற்குப் பிறகுதான் ஸ்கிரினில் `அவுட்’ என ஃபிளாஷ் அடிக்கிறது.. இப்படி, பலமுறை அநியாயத்துக்கு டபுள் செக் செய்கிறார்கள். இதுவும் போட்டி அதிக நேரம் நீளக் காரணம்.
ஆனால், உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயத்தில் அம்பயர்கள் கோட்டை விட்டுவிடுகிறார்கள். அதே பெங்களூரு – மும்பை போட்டியில், கடைசி பந்தில் மலிங்கா `நோ பால்’ வீசியதைக் களத்தில் இருந்த அம்பயர் சுந்தரம் ரவி கவனிக்கவில்லை. வீரர்கள் கைகுலுக்கி பெவிலியன் திரும்பிய பின்னர், ஸ்டேடியத்தில் இருந்த ஸ்கிரினில் ரீப்ளே ஒளிபரப்பான போதுதான் அது நோ பால் எனத் தெரியவந்தது. ஒரு பந்துக்கு 7 ரன்கள் தேவை என்ற சூழலில் நடந்த களேபரம் அது. ஒருவேளை பந்துவீசிய அடுத்த நொடியே அம்பயர் கவனித்திருந்தால், ஆர்.சி.பி-க்கு ஃப்ரி ஹிட் கிடைத்திருக்கும். ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது.
அம்பயரின் அந்த அலட்சியம் 'இது ஒன்றும் கிளப் கிரிக்கெட் அல்ல, ஐ.பி.எல். அம்பயர் கண்களைத் திறந்து வைத்து பார்க்க வேண்டும்' என கோலியை கொந்தளிக்க வைத்துவிட்டது. மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அன்று 'பும்ரா பந்தில் தவறுதலாக wide கொடுக்கப்பட்டது' என குற்றப் பத்திரிகை வாசித்தார். களத்தில் இருக்கும் அம்பயர் கேட்டால் மட்டுமே டிவி அம்பயர் தன் முடிவை அறிவிப்பார். ஆனால், அம்பயர் ரவி, மலிங்காவின் ஓவர் ஸ்டெப்பையும் கவனிக்கவில்லை, மூன்றாவது அம்பயரிடம் ஆலோசனையும் கேட்கவில்லை. மெத்தனமாக இருந்துவிட்டார். அவர் செய்தது பிளண்டர். இத்தனை களேபரங்களுக்குப் பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூன்று நாள்கள் கழித்து நடந்த பெங்களூரு – ஹைதராபாத் போட்டியிலும் ஜம்மென அவர் அம்பயரிங் செய்தார்.
போட்டியை தாமதப்படுத்தும் கேப்டன்களுக்கு அபராதம் விதிப்பது போல, அடுத்தடுத்து தவறு செய்யும் அம்பயர்களுக்கும் கடிவாளம் போட வேண்டியதும் அவசியம். இந்த விஷயத்தில் கால்பந்தைப் பின்பற்றுவது நல்லது. களத்தில் ரெஃப்ரி எடுக்கும் ஒரு தவறான முடிவு, ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் என்பதால், கால்பந்தில் ரெஃப்ரியின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்கென்றே ஒரு குழு இருக்கிறது. களத்தில் ரெஃப்ரி செய்த தவறுகளைக் கவனிப்பதுதான் அந்தக் குழுவின் வேலையே. அந்த வீரருக்கு ஏன் ரெட் கார்டு கொடுத்தார்; ஜெர்ஸியைப் பிடித்து இழுத்த அந்த வீரருக்கு ஏன் யெல்லோ கார்டு கொடுக்கவில்லை; இந்த இடத்தில் ஏன் விசில் அடித்து போட்டியை நிறுத்தவில்லை; பந்து இங்கு இருக்கும்போது இவர் (ரெஃப்ரி) ஏன் இங்கு நிற்கிறார் என, ரெஃப்ரியின் ஒவ்வொரு அசைவையும் முடிவையும் அங்குல அங்குலமாக அலசும் அந்தக் குழு. களத்தில் இருக்கும் மெயின் ரெஃப்ரி மட்டுமல்ல, லைன் ரெஃப்ரிகளும் இந்த ரேடாரில் இருந்து தப்ப முடியாது.
2014-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பிரேசில் – குரோஷியா மோதின. ஆக்ரோஷ பெளல் செய்த பிரேசில் வீரர் நெய்மருக்கு ரெட் கொர்டு கொடுப்பதற்குப் பதிலாக, யெல்லோ கார்டு மட்டும் கொடுத்து கருணை காட்டி விட்டார் என ரெஃப்ரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரெஃப்ரிகளுக்கான அந்த ஆய்வுக் குழு உஷாரானது. அந்தப் போட்டியில் ரெஃப்ரியாக இருந்த ஜப்பானைச் சேர்ந்த யுசி நிஷிமுரா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, அந்த உலகக் கோப்பை முடியும் வரை வேறு எந்தப் போட்டியிலும் அவர் ரெஃப்ரியாக பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இங்கு சுந்தரம் ரவி மூன்றாவது நாளே பணிக்குத் திரும்பிவிட்டார்.
நவீன விளையாட்டு உலகில் ஆட்டத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு தொழில்நுட்பமும் , களத்தில் இருக்கும் நடுவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தே வருகிறது. இப்போதே சமூக வலைதளங்களில், `வாங்குற சம்பளத்துக்கு சுத்தமா வேலையே பார்க்காம... ஆனா, பார்க்கிறமாதிரியே நடிக்கிறதுனா அது, லெக் அம்பயர்கள்தான் போல!’ என ட்வீட் செய்யத் தொடங்கிவிட்டனர்.
கால்பந்திலும் `கோல் லைன் டெக்னாலஜி’, `Video Assistant Referee’ என்பது போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கோல் லைன் டெக்னாலஜியின் மீதும் திருப்தி இல்லை; VAR தேவையில்லாத ஆணி என்ற குற்றச்சாட்டும் இருந்தது. ஆனால், இவை எதுவும் களத்தில் இருக்கும் ரெஃப்ரியின் முக்கியத்துவத்தை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. லைன் ரெஃப்ரி உன்னிப்பாகக் கவனித்து கொடியைத் தூக்கவில்லை எனில், ஆஃப் சைடில் அடித்தாலும் அது கோல்தான்! அந்த தருணத்தில் என்ன பார்க்கிறார்களோ அதை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். அதற்கேற்ப வினையாற்றுகிறார்கள். ஆட்டத்தின் `டெம்போ’ குறைவதில்லை. ஒவ்வொருமுறையும் ஆஃப் சைடா, இல்லையா என்பதை தொழில்நுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தால் ஆட்டத்தின் ஜீவன் கெட்டுவிடாதா?
அதேநேரத்தில், விதிமுறையை மீறாமல் இருக்கவும், டிவி ரெஃப்ரிகளின் உதவி தேவைப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 2006 உலகக் கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸ் வீரர் ஜினாடின் ஜிடேன், இத்தாலி வீரர் மடாரஸியை தலையால் முட்டினார். அப்போது பந்து எதிர்த்திசையில் இருந்தது. ரெஃப்ரியும் அந்தப் பக்கம்தான் இருந்தார். ஆனால், டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ரெஃப்ரி, உடனடியாக களத்தில் இருந்த ரெஃப்ரியை அலர்ட் செய்து, ஜிடானுக்கு ரெட் கார்டு கொடுக்க பரிந்துரைத்தார். அதன்பின்னரே, ரெஃப்ரி பாக்கெட்டில் இருந்து கார்டை வெளியே எடுத்தார். இப்படியான சூழலில் களத்தில் இல்லாத நடுவரின் (டிவி அம்பயர்) பங்கு அவசியமாகிறது.
`90 நிமிடங்களுக்குள்...’ என்பதே கால்பந்தின் சுவாரஸ்யம். அதிலும் கூட, ஒவ்வொரு போட்டியிலும் இஞ்சுரி டைம் ஏன் 5 நிமிடங்கள் வரை நீள்கிறது என ஆய்வு செய்து, அதை எப்படி குறைக்கலாம் என யோசித்து வருகிறார்கள். கோல் கீப்பர்கள் கிக் அடிக்க தாமதிப்பதாலும், சப்ஸ்டிட்யூட்டின்போது களத்தில் இருந்து வெளியேறும் வீரர் அன்னநடை நடந்து வருவதாலும், காயம் உள்ளிட்ட சில விஷயங்களாலும், இஞ்சுரி டைமின் நீளம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் கோல் கீப்பர் டி கே சிறந்த கோல் கீப்பர். ஆனால், அவர் பந்தை ரிலீஸ் செய்யாமல் தாமதிப்பவர்களில் நம்பர் -1 இடத்தில் இருக்கிறார். 30 விநாடிகளுக்குள் பந்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதையும் மீறி இப்படி நேரத்தைக் கடத்துகிறார்கள் எனில், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள். முடிந்தவரை, ஆட்டத்தின் ஜீவன் கெடாதவாறு இஞ்சுரி டைமை இன்னும் எப்படி குறைக்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. அதற்கேற்ப விதிகளை மாற்றுகிறார்கள். விரைவில் அந்த விதியும் அமலுக்கு வரும்.
அதேபோல, 200 நிமிடங்கள்தான் லிமிட் எனில், அதற்குள் ஐ.பி.எல் போட்டிகளை முடிக்கப் பார்க்க வேண்டும். அம்பயர்களின் பணி ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். கால்பந்து பாணியில் கிரிக்கெட்டிலும் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், ஐ.பி.எல் என்பதே பிரிமியர் லீக்கின் நகல்தானே!
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பவர் பிளேவில் 10 டாட் பால்… கோலியை இம்சிக்கும் கூக்ளி! #RRvRCB
பிட்ச் ஒத்துழைக்க மறுக்கும்போது, பந்து பேட்டுக்கு வருவது சிரமமாக இருக்கும்போது, ரன் எடுக்க தடுமாறும்போது அழகாக சிங்கிள் தட்டிவிட்டு Non striker முனையில் நிற்கும் கலை ஏனோ கோலிக்கு இன்னும் வசப்படேவே இல்லை."
ஐ.பி.எல் பார்க்கும் பலரும், `எப்படியும் ஆர்.சி.பி தோற்றுவிடும். எப்படித் தோற்கிறார்கள் என்று பார்ப்போம்’ என்ற மைண்ட்செட்டுக்கு வந்துவிட்டார்கள். ஆம், இந்த சீஸனில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ராஜஸ்தானுக்கு முதல் வெற்றி. #RRvRCB
`இன்னும் ஏன் இவன் இந்த மொக்க டீம்ல இருக்கான்… சென்னை, மும்பைனு வேற டீம்ல ஆடியிருந்தா இந்நேரம் ரெண்டு மூணு கப் அடிச்சிருப்பான். இன்டர்நேஷனல் லெவல்ல ராஜா மாதிரி ஆடிட்டிருந்தவன, வருஷா வருஷம் ஒண்ணுமில்லாம சீரழிக்கிறதுக்குத்தான் இந்த ஐ.பி.எல் வருதுபோல. வேர்ல்ட் கப் வருது… சிவனேன்னு இஞ்சுரினு சொல்லி ரெஸ்ட் எடுக்கலாம்ல!’ - இது கோலி ரசிகர்களின் புலம்பல். ஸ்டார் பிளேயர்கள் இருந்தும் 11 ஆண்டுகளாகக் கோப்பை வெல்லவில்லை என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல்.
ஆர்.சி.பி கோப்பை வெல்ல முடியாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக வெற்றிபெற முடியாமல் போனதற்கு, கோலிதான் முழுமுதற் காரணம். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் செய்த முதல் தவறு ஓப்பனிங் இறங்கியது. கோலியின் ஆட்ட இயல்புக்கு அவருக்கு ஒன்டவுன்தான் செட்டாகும். முதலில் பேட்செய்த ஆர்.சி.பி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்தது. ரன்ரேட் 8. டீசன்ட்டான ஸ்கோர்போல தெரியும். ஆனால், ரன்ரேட்டை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.
[color][font]
6 ஓவர் முடிவில் கோலி 23 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார். அந்த 23 ரன்களும் 13 பந்துகளில் அடிக்கப்பட்டவை. அதாவது 10 டாட் பால்கள். மூன்றே மூன்று பவுண்டரி. அதில் ஒன்று எட்ஜ். அதற்காகக் கோலிக்கு ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடத் தெரியாது என்பதல்ல அர்த்தம். இதே கோலிதான், மும்பைக்கு எதிரான போட்டியில் வந்ததும் வராததுமாக பும்ரா ஓவரில் மூன்று பவுண்டரிகள் விரட்டினார். எவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கும் சறுக்கல் இருக்கும். கோலியும் அதற்கு விதிவிலக்கல்ல. பிட்ச் ஒத்துழைக்க மறுக்கும்போது, பந்து பேட்டுக்கு வருவது சிரமமாக இருக்கும்போது, ரன் எடுக்கத் தடுமாறும்போது அழகாக சிங்கிள் தட்டிவிட்டு Non striker முனையில் நிற்கும் கலை ஏனோ கோலிக்கு இன்னும் வசப்படேவே இல்லை.
கிருஷ்ணப்பா கெளதம் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் தட்டிவிட்டு அடுத்த நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல், கடைசிப் பந்தில் 1 ரன் எடுத்தார் கோலி. ஒரு பந்து டாட் பால் ஆனதுமே சுதாரித்து சிங்கிள் தட்டி, எதிர்முனையில் இருக்கும் பார்த்திவ் படேலை ஆட விட்டிருக்கலாம். குல்கர்னி வீசிய அடுத்த ஓவரிலும் முதல் பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு அடுத்த மூன்று பந்துகளை வீணடித்தார் விராட்.
[/font][/color]
[color][font]
டி-20-யின் முடிவுகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்றாலும், குறிப்பிட்ட வீரரின் பலம், பலவீனத்தை ஆய்வுசெய்து ஹோம்வொர்க் செய்ய வேண்டியதும் அவசியம். முதல் போட்டியில் கொல்கத்தாவின் ரசல் வெளுத்து வாங்கிய போதிலும், யார்க்கரில் அவர் தடுமாறுவதைப் புரிந்துவைத்து, அதற்கேற்ப ரசலுக்கு யார்க்கர்களை இறக்கினார் முகமது ஷமி. ரசல் அதில் தடுமாறவும் செய்தார். ஆர்.சி.பி-க்கு எதிராக ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் பிரமாதமான ரெக்கார்டு வைத்திருக்கிறார் (2 போட்டிகளில் 6 விக்கெட்... டி வில்லியர்ஸை இருமுறை அவுட் செய்திருக்கிறார்) என்பதால், அவரை டிரம்ப் கார்டாகப் பயன்படுத்தினார் ரஹானே. `விராட், ஏபிடிக்கு எதிரான ஷ்ரேயாஸ் கோபாலின் ரெக்கார்டு நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே’ என போட்டி முடிந்த பின் ரஹானேவே பட்டவர்த்தனமாக இதை வெளிப்படுத்தினார்.
கோலி கூக்ளியில் வீக்’ என ராஜஸ்தான் ராயல்ஸ் டெக்னிக்கல் டீம் ஆய்வு செய்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் கோலிக்கு வீசிய முதல் பந்தே கூக்ளி. இன்சைட் எட்ஜ் இருக்கும் என்பதால் ரிவ்யூ போகவில்லை. ஆனால், அடுத்த பந்திலேயே மேஜிக்கை நிகழ்த்திவிட்டார் ஷ்ரேயாஸ். எது கோலியின் டிரேட்மார்க் ஷாட்டோ அதையே ஆடத் தூண்டி, அதை வைத்தே சோலியை முடித்துவிட்டார். எது பலமோ அதுவே சில நேரங்களில் பலவீனமும்கூட. ஆம், கோலியின் பலம் கவர் டிரைவ். நேற்று அதுவே பலவீனமும்கூட.
[/font][/color]
[color][font]
`ஷ்ரேயாஸ் மட்டுமில்லை, ரஷித் கான், அடில் ரஷித், சோதி, ஆடம் ஜம்பா எனக் கடந்த ஓராண்டாக இவர்களது கூக்ளியில், கோலியின் அரண் நொறுங்கிக்கொண்டிருக்கிறது’ என ட்விட்டரில் ஒருவர் கமென்ட் அடித்திருந்தார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனிடம் விக்கெட்டை பறிகொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து ஜெயித்த கோலி, உலகக் கோப்பைக்கு முன் உடனடியாக இந்த கூக்ளி பலவீனத்தையும் சரிசெய்ய வேண்டியது அவசியம். கோலி மட்டுமல்ல, ஏபி டிவில்லியர்ஸ், ஹெட்மயர் என ஆர்.சி.பி-யின் டாப் ஆர்டரை காலி செய்தது ஷ்ரேயாஸின் கூக்ளி. ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவை பெவிலியனுக்கு அனுப்ப ஆர்.சி.பி பெளலர் சாஹல் கையில் எடுத்த ஆயுதமும் கூக்ளி. நேற்று ஒரே கூக்ளி மயம்.
அடுத்தவன் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். கோலிக்கு இன்னமும் அது கைகூடவில்லை. சேப்பாக்கம் பிட்ச்சை கணித்து அதற்கேற்ப ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கும்படி பிளேயிங் லெவனை தேர்வு செய்தார் தோனி. கோலி அப்படியே உல்டா. நேற்று ரஹானே பிட்ச் எப்படி இருக்கும் என்பதை மூன்றாவது ஓவரிலேயே கணித்துவிட்டார். ஸ்லோ பிட்ச், ஸ்பின் எடுபடும் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால்தான், கிருஷ்ணப்பா கெளதமை பவர்பிளே முடிவதற்குள் மூன்று ஓவர்களை வீசச் செய்து, பவர்பிளே முடிந்தபின் ஷ்ரேயாஸ் கோபாலை விட்டு ஆட்டம் காட்டினார். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கோலி, சாஹலிடம் எட்டாவது ஓவரில்தான் பந்தைக் கொடுத்தார். மொயின் அலி பந்துவீச வந்தது 12-வது ஓவரில்..!
சாஹல் வீசிய நான்காவது பந்திலேயே ரஹானே அவுட். இருப்பினும், இங்கு ஸ்கெட்ச் ரஹானேவுக்கு அல்ல பட்லருக்கு. ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக பட்லர் தடுமாறுவார் என்பதைப் புரிந்து, முந்தைய மேட்ச்சில் ரஷித் கானிடம் பந்தைக் கொடுத்தார் கேன் வில்லியம்சன். இரண்டே பந்துகளில் பட்லர் விக்கெட்டை எடுத்து, கொடுத்த அசைன்மென்ட்டை பக்கவாக நிறைவேற்றினார் ரஷித் கான். அதுவும் பவர்பிளே முடிவதற்குள். வில்லியம்சனுக்குத் தெரியும் பட்லர் நின்றால் ரன்ரேட் எப்படி இருக்கும் என்று. பஞ்சாபுக்கு எதிராக பட்லர் அடித்ததை வில்லியம்சன் பார்த்திருப்பார். இந்த இடத்தில் கோலி மட்டுமல்ல, எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேன்களின் பலவீனத்தைக் கண்டறிந்து, டீம் மீட்டிங்கில் பேச வேண்டியது ஆர்.சி.பி வீடியோ அனலிஸ்ட் டீமின் கடமை.
[/font][/color]
[color][font]
பிளேயிங் லெவனை மாற்றுகிறார், பேட்டிங் ஆர்டரை மாற்றுகிறார்… ஆனால், அணித் தேர்வில் இன்னும் கோலி ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. வின்னிங் லெவனை அவரால் தேர்வு செய்யமுடியவில்லை. உதாரணத்துக்கு நேற்று வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு செய்திருந்தால், முதல் 10 ஓவருக்குள் சாஹல், வாஷிங்டன் சுந்தர் இருவரையும் அடுத்தடுத்து வீசச் செய்து வித்தைக் காட்டியிருக்கலாம். வாஷிங்டன் ஓப்பனிங் இறங்குவதற்கும் நல்ல சாய்ஸ். பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்தக்கூடிய, எந்த இடத்திலும் பேட் செய்ய தயாராக (குறிப்பாக ஓப்பனிங்) இருக்கும் ஒருவரை ஏன் பெஞ்சிலேயே வைத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை. கடந்த சீஸனிலும் இதேபோலத்தான், காலம் கடந்து களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த ஆல்ரவுண்டருக்குப் பதிலாக நேற்று பேக்அப் விக்கெட் கீப்பர் ஆக்ஷ்தீப் நாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.
இவ்வளவு நடந்தும் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் கோலி. இன்னும் 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்கிறார். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் எனச் சமாளிக்கிறார். இங்கே வாய்ப்புகள் என்று கோலி சொல்வது ரஹானே கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் அவர் மிஸ் செய்ததையும் சேர்த்துதான். இன்னொரு விஷயம்... `ஸ்லிப்பில் நாம் பிடிப்பதைவிட அதிக கேட்ச்களை மிஸ் செய்கிறோம்’ என்பதையும் கோலி புரிந்துகொள்ள வேண்டும்.
[/font][/color]
[color][font]
ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த பின், `கன்ஸிஸ்டன்ட் லெவன் அல்லது வெற்றிக்கான அணியைக் கண்டறியும் வரை மாற்றங்களை நிகழ்த்துவது... இதில் எது உங்கள் இலக்கு’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, `வெற்றி பெறுவதற்கேற்ப மாற்றங்கள் தொடரும்’ எனப் பூதாகரமாகப் பதில் அளித்தார் கோலி. நல்ல பேட்ஸ்மேன்கள் இல்லை. திறமையான பெளலர்கள் இல்லை, மேட்ச் வின்னர்கள் இல்லை என்று சொல்வதைவிட, இருப்பவர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றுவதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு![/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தாய்லாந்து: விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை
தாய்லாந்து: விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும் இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானம் பறக்கத் துவங்கும்போது செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக மாய் காவோ விமானநிலையம் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டது.இதனை மீறுபவர்களுக்கு மிக அதிக அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் சின்னம் காணவில்லை- கொதிக்கும் ஆதரவாளர்கள்
கன்னியாகுமரி மக்களவத் தொகுதியில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் தமிழரின் சின்னம் சரியாக தெரியவில்லை என அக்கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.
[/url]
மங்கலாக தெரியும் நாம் தமிழர் கட்சி சின்னம்- நெட்டிசன்கள் சாடல்
ஹைலைட்ஸ்
-
- வாக்குப் பதிவு இயந்திரத்தில் தெளிவில்லாமல் தெரியும் கரும்பு விவசாயிகள் சின்னம்.
-
- தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி கூறும் நாம் தமிழர் கட்சி.
[color][size][font]
வாக்குப் பதிவு இயந்திரத்தில் சீமானின் நாம் தமிழரின் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D] கரும்பு விவசாயி சின்னம் தெளிவில்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வரும் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர்கள் பலரும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுயேட்சை வேட்பாளருக்கு பொய்யான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சின்னம் வழங்கியது, சின்னம் வழங்குவதில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டியது என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
புதியதாக நாம் தமிழரின் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு வந்த வாக்கு இயந்திரத்தில் நாம் தமிழரின் கரும்பு விவசாயி சின்னம் தெளிவில்லாமல் அச்சிடப்பட்டுள்ளது.
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐடி துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்... பெங்களூரைத் தொடர்ந்து சென்னை 2வது இடம்!
ஐடி துறையில் நடப்பாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் மட்டும் புதிதாக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி துறையில் நடப்பாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் மட்டும் புதிதாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
[color][font]
2018 மார்ச் மாதத்திலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில், புதிய பணியாளர் சேர்க்கை 38% அதிகரித்துள்ளது. ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய இத்துறையில் நடந்த புதிய பணியாளர் சேர்க்கையில், 18 சதவிகிதத்துடன் பெங்களூரு முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 13 சதவிகிதத்துடன் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளதாக வேலைவாய்ப்பு இணையதளமான நவ்கிரி டாட் காம் தெரிவித்துள்ளது.
2018 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 மார்ச் மாதத்தில் ஐடி சாஃப்ட்வேர், ஐடி ஹார்டுவேர், பிபிஓ/ஐடிஇஎஸ் (தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள்) மற்றும் எஃப்எம்சிஜி (நுகர்வோர் பொருள்கள்) துறை ஆகிய துறைகளில் புதிய பணியாளர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தவிர்த்து, மார்ச் வரையிலான கடந்த ஓராண்டில், ஐடி துறையில் 32% முதல் 38% வரை வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது.
அதேபோன்று கட்டுமானம் மற்றும் பொறியியல் துறைகளில் 13%, பிபிஓ/ஐடிஇஎஸ் துறைகளில் 9%, எஃப்எம்சிஜி துறையில் 5%, கல்வித் துறையில் 7%, இன்ஷூரன்ஸ் துறையில் 6% மற்றும் ஐடி ஹார்டுவேர் துறையில் 3% என வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
``இது ஆண்டு தொடக்கம் என்பதால் ஐடி மென்பொருள் துறையில் புதிய பணியாளர்கள் சேர்க்கை, தீவிரமாக நடைபெறுகிறது. எங்களது சமீபத்திய சர்வேயின்படி 89% பணியாளர்கள் சேர்க்கை ஐடி துறையில்தான் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் வேலையை விட்டுச் செல்வோருக்குப் பதிலான நியமனங்கள் போன்றவை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என ஐடி துறையினர் கூறுகின்றனர்" என்கிறார் நவ்கிரி டாட் காம் செய்தித் தொடர்பாளர்.
[/font][/color]
[color][font]
எஃப்எம்சிஜி துறையைப் பொறுத்தமட்டில், 38 சதவிகித பங்களிப்புடன் ஹைதராபாத் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு 29 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே சமயம், புதிய பணியாளர்கள் சேர்க்கை அனைத்துத் துறைகளிலும் நடைபெறவில்லை. வாகன தயாரிப்புத் துறை மற்றும் அதன் சார்பு துறைகளிலும், வங்கி மற்றும் நிதிச் சேவை துறைகளிலும் பணியாளர்கள் சேர்க்கை முறையே 8% மற்றும் 15% குறைந்துள்ளதாக நவ்கிரி டாட் காம் மேலும் தெரிவிக்கிறது[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி!
காரைக்குடியில் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாதரக்குடியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குஞ்சுமுகம்மதிடம் குடிமராமத்து வேலை எடுத்துத் தருவதாக 3.5 லட்சம் பணம் வாங்கினார். தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்தார். நேற்று காலை குஞ்சு முகம்மது காரைக்குடி ஆவுடைபொய்கை வந்து நின்றுகொண்டு முருகானந்தத்துக்கு போன் செய்திருக்கிறார். அவர் வந்ததும் அவருடை பைக்கில் காரைக்குடி நோக்கி வந்திருக்கிறார்கள். வரும் வழியில் இருவருக்கும் பணம் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குஞ்சு முகம்மது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முருகானந்தம் மீது ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பித்துவிட்டார்.
மேலும், முருகானந்தம் ஓட்டி வந்த பைக் எரிந்தது. அவரது தலை, கை, கழுத்து முழுவதும் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தெரிந்து காரைக்குடி போலீஸார் குற்றவாளியான குஞ்சுமுகம்மதுவை கைது செய்தனர். இந்த நிலையில், முருகானந்தம் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முருகானந்தம், ஆட்சிக்கு ஏற்ப தன்னை அந்தக் கட்சிகளில் இணைத்துக்கொள்வார். குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கவலையளிக்கும் சேப்பாக்கம் பிட்ச்: தோனியின் களவியூகத்தில் சரிந்த தினேஷ் கார்த்திக் அணி: வெற்றிநடையில் சிஎஸ்கே
தீபக் சாஹரின் துல்லியமான வேகப்பந்துவீச்சு, ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, தாஹிர் ஆகியோரின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது. 109 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று சிஎஸ்கே அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளம் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த முதல் ஆட்டத்தைப் போன்று நேற்று மாறியது. இதனால், மீண்டும் சொத்தையான ஆடுகளத்தை அமைத்து ஆட்டத்தின் சுவாரயஸ்த்தை குலைத்துவிட்டார்கள் என்று கூறுவதைத் தவிர ஒன்றுமில்லை.
இதே கருத்தைத்தான் சிஎஸ்கே கேப்டன் தோனியும் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற விக்கெட்டுகளில் விளையாடுவதில் விருப்பமில்லை, மீண்டும் முதல்போட்டி போன்ற ஆடுகளத்தை அமைத்துவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அதிலும் 13-வது ஓவரில் ரஸல் அடித்த பந்தை ஹர்பஜன் கேட்ைச நழுவவிட்டதால், ரஸல் கிடைத்த வாய்ப்பில் அரைசதம் அடித்தார். ஒருவேளை ரஸலுக்கு கேட்ச்ை ஹர்பஜன் பிடித்திருந்தால், நேற்றை கொல்கத்தா ஆட்டம் 80 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.
ஐபிஎல் போட்டி என்பது முற்றிலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் நோக்கில் அதிக ஸ்கோர் செய்யும் ஆடுகளமாக இருத்தல் அவசியம். ஆனால், ஒரு தரப்பு அணிக்காக மட்டும் ஆடுகளத்தை திட்டமிட்டே அமைத்துவிட்டு, வெற்றிக்குப் பின் கேப்டன் ஆடுகளத்தை சாடுவது (உஷ் கண்டுகாதீங்க) வேடிக்கை.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைக்கும் போது, பேட்ஸ்மேன்கள் ரன்களை ஸ்கோர் செய்ய முடியாது, எதிரணி விக்கெட்டுகளையும் விரைவாக இழக்க நேரிட்டு ஆட்டம் ஒருதரப்பாக அமைந்துவிடும். இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 2 போட்டிகள், அதாவது ஆர்சிபி அணிக்கு எதிராகவும், கொல்கத்தா அணிக்கு எதிராகவும் ஆடுகளத்தை மந்தமாக வைத்து போட்டியின் முடிவு ஒருதரப்பாக மாறியுள்ளது.
அதிலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு நேற்று ஏமாற்றமே காத்திருந்தது.
கொல்கத்தா அணி குறைந்த ரன்களே ஸ்கோர் செய்தாலும், அதை சேஸிங் செய்வதற்கு சிஎஸ்கே அணிக்கும் ஏறக்குறை 18 ஓவர்கள் வரை தேவைப்பட்டது. இரு தரப்பிலும் திறமையான பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற வாதத்தை முன்வைப்பதா அல்லது ஆடுகளம் மோசம் என்ற வாதத்தை ஏற்பதா. நிச்சயமாக பேட்ஸ்மேன்களை குறைத்துமதிப்பிட முடியாது, மாறாக ஆடுகளம்தான் தொடர்ந்து மோசமாகி வருகிறது
சேப்பாக்கம் ஆடுகளம் தொடர்ந்து இதுபோன்று போட்டி நடத்தும் அணிக்கு சாதகமாகவும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாகவும் இருந்தால், ஆட்டத்தை காண்பதிலும் சுவாரஸ்யம் இருக்காது, ரசிகர்களும் ஆட்டம் இப்படித்தானே இருக்கும் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுவார்கள். தொடர்ந்து இதே போன்று ஆடுகளம் சேப்பாக்கம் மைதானத்தில் அமையும் பட்சத்தில் அதில் பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் தலையிடுவது அவசியம்.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக தீபக் சாஹரின் துல்லியமான வேகப்பந்துவீ்ச்சு முதல் 5 ஓவர்களில் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்தது. அதன்பின் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு நெருக்கடியை அளித்து கொல்கத்தா அணியை கட்டிப்போட்டது.
சேப்பாக்கம் போன்ற பந்துவீ்ச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிஎஸ்கே பந்துவீ்ச்சாளர்கள் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்திவிட்டார்கள். ஆனால், மும்பை, கொல்கத்தா போன்ற அதிகமான ஸ்கோர் செய்யும் ஆடுகளங்களில் இவர்களின் பந்துவீச்சு நொறுக்கி அள்ளப்படுவது ஏனோ தெரியவில்லை.
ஹர்பஜன் சிங் சேப்பாக்கம் போன்ற தரமான பிட்ச்சில் தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார் என்றால், ஏன் இந்திய அணிக்குள் அவரால் பிரகாசிக்க முடியவில்லை, இந்திய அணியில் நிலையான இடத்தைப் ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜாவால் பெற முடியவில்லை.
சேப்பாக்கம் போன்ற மந்தமான ஆடுகளத்தில் மட்டுமே இதுபோன்ற பந்துவீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியுமே தவிர நல்ல ஸ்கோர் செய்யக்கூடிய ஆடுகளத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது சிரமம். அதனால்தான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஹர்பஜன், ஜடேஜா ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
தோனியின் பளிச்சிடும் கேப்டன்ஷிப்
இந்த ஆட்டத்தில் தோனியின் கேப்டன்ஷிப் திறமையை பாராட்டியே ஆக வேண்டும். தொடக்கத்திலேயே பந்துவீச்சுக்கு கொல்கத்தா அணி திணறுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அடுத்தடுத்து ஆடுகளத்துக்கு ஏற்ற பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது சிறப்பு.
குறிப்பாக பியூஷ் சாவ்லா களமிறங்கியது, ஹர்பஜன் சிங்குடன் பேசிவைத்து பந்தை வைடாக வீசச் செய்து ஸ்டெம்பிங் செய்ததது தோனிக்கே உரிய கேப்டன்ஷிப் அழகு. இதுபோன்ற சின்ன, சின்ன விஷயங்களில் தோனியின் கேப்டன்ஷிப் திறமை பளிச்சிடுகிறது.
விக்கெட் சரிவு
109 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. பியூஸ் சாவ்லா வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார் வாட்ஸன். ஆனால், நரேன் வீசிய 3-வது ஓவரில் சாவ்லாவிடம் ஸ்குயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வாட்ஸன் வெளியேறினார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் அதிரடியாகத் தொடங்கினாலும், நிலைக்கவில்லை. நரேன் வீசிய 5-வது ஓவரில் பியூஷ் சாவ்லாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு 14 ரன்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ராயுடு, டூப்பிளசிஸ் இணைந்தனர். பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களைச் சேர்த்தது.
சாவ்லா, ராயுடு இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ஆடுகளத்தின் தன்மையால் பவுண்டரி அடிப்பதும், சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், சிஎஸ்கே அணி ஸ்கோர் செய்யும் வேகம் மந்தமானது.
சாவ்லா வீசிய 15-வது ஓவரில் ராயுடு அடித்த பந்தை சாவ்லா கேட்ச் பிடிக்க தவறவிட்டார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாத ராயுடு, அதே ஓவரின் 4-வது பந்தில் ராணாவிடம் கேட்ச் கொடுத்த 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 46 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த ஜாதவ், முதல்பந்திலேயே பவுண்டரி அடித்தார். குர்னே வீசிய 16-வது ஓவரில் டூப்பிளசிஸ் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். நரேன் வீசிய 17-வது ஓவரின் 3-வது பந்து வைடாக சென்று தினேஷ் கார்த்திக்கிடம் தப்பித்து பவுண்டரியை அடைந்து 5 ரன்களைப் பெற்றது. எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சிஎஸ்கே வென்றது.
17.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் நரேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..
முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது.
சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், முதல் 5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது. சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் லின் எல்பிடபில்யு முறையி்ல் ஆட்டமிழந்தார்.
ஹர்பஜன் சிங் வீசிய2-வது ஓவரில் நரேன் 6 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து சாஹர் வீசிய 3-வது ஓவரில் ராணாவும் , 5-வது ஓவரில் உத்தப்பாவும் வி்க்கெட்டை பறிகொடுத்தனர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக், கில் சேர்ந்தனர். இம்ரான் தாஹிர் வீசிய 9-வது ஓவரில் நிலைக்காத தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரஸல் களமிறங்கினார். தாஹிர் வீசிய 11-வது ஓவரில் கில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் தோனியிட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தபோதிலும், ரஸல் சளைக்காமல் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். ஹர்பஜன் வீசிய 16-வது ஓவரில் பியூஷ் சாவ்லா தோனியால் ஸ்டெம்பிங் ெசய்யப்பட, அடுத்து வந்த குல்தீப் யாதவ் ரன் அவுட் முறையில் வெளியேறினார். ஒரு ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்தது கேகேஆர்.
மோசமான ஆடுகளத்தால், நேற்றைய ஆட்டத்தில் பல ஷாட்களை ரஸால் அடிக்க முடியவில்லை. இருப்பினும் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 44 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரஸல். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரஸல் 50 ரன்களிலும், குர்னே ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தாஹிர், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரபேல் வழக்கில் திருப்பம்.. கசிந்த ஆதாரங்களை விசாரிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நாளிதழ்களில் ரபேல் தொடர்பாக கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் முடிவிற்கு வந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வழங்கப்பட்டு இருக்கும் தீர்ப்பு ரபேல் வழக்கில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் இது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் கோரிக்கை. இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்து வருகிறது.
ரபேல் வழக்கு
இந்த ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். சென்ற வருடம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
[color][font]
சீராய்வு மனு
இதில் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.[/font][/color]
[color][font]
தி இந்து ஆதாரம்
இந்த வழக்கு பெரிய அளவில் முன்னுக்கு நகராமல் இருந்த சமயத்தில் தி இந்து பத்திரிக்கையில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் எழுதிய கட்டுரைகள் வந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த கட்டுரையில் நிறைய ஆதாரங்கள் இருந்தது. பாதுகாப்பு துறையில் இருந்து கசிந்த ஆதாரங்களை இவர் வெளியிட்டு இருந்தார்.[/font][/color]
[color][font]
நீதிமன்றம்
இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆதாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு கூறியது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கருத்து
இதுவரை இதில் கருத்து தெரிவித்த மூன்று நீதிபதிகளும், திருடப்பட்ட, கசிந்த ஆவணமாக இருந்தாலும் கூட, ராணுவ ரகசியமாக இருந்தாலும் கூட அதை கருத்தில் கொள்ளலாம், என்று தெரிவித்தனர். ஏற்கனவே இதுபோன்ற ஆதாரங்களை போபர்ஸ், 2ஜி வழக்கில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். இதில் நீதிபதிகள் மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்கள்.
இன்று தீர்ப்பு
ரபேலில் கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் முடிவிற்கு வந்துள்ளது. ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நரேந்திர மோடி பயோபிக்கிற்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்!
தேர்தல் களத்தில் சர்ச்சையை உண்டாக்கிய 'பி.எம் நரேந்திர மோடி’ படம் வெளியிடத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவருகிறது. படத்துக்கு, `பி.எம் நரேந்திர மோடி’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில், நரேந்திர மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த `மேரி கோம்' படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மக்களவைக்கு, முதல்கட்ட தேர்தல் நாளை ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தப் படம் வெளியிடுவதில் அரசியல் உள்நோக்கம் இருக்கு, இந்தப் படத்துக்கு தடைவிதிக்கவேண்டி காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், `பி.எம் நரேந்திர மோடி’ படத்துக்குத் தடை கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி வெளிவருவதாக இருந்த இப்படம் ஏப்ரல் 12, அதாவது நாளை மறுநாள் வெளிவருவதாக இருந்தது. இந்நிலை பிரதமர் மோடியின் திரைப்படத்தை வெளியிடுவது, தேர்தல் விதிமுறை மீறலாக இருக்கும் எனக் கூறி தேர்தல் ஆணையம் இப்படத்துக்கு தடை விதித்துள்ளது. மேலும், மோடி மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளின் பயோபிக் படங்கள் எந்தவிதமான டிஜிட்டல் ஊடகத்திலும் வெளியிடத் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`100 ஆண்டுகள் நிறைவு!' - ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்த பிரிட்டன்
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறாண்டுகள் கடந்த நிலையில், இந்தக் கோர சம்பவத்துக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
1919-ம் ஆண்டு ரௌலட் சட்டம் என்ற மோசமான சட்டம் இயற்றப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் பிரிட்டிஷ் அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஒன்று கூடினர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த ஜெனரல் டயர் தன் படையுடன், சீக்கியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார். 1600-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியானது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிகமோசமான நடவடிக்கையாக ஜாலியன் வாலாபாக் படுகொலை விமர்சிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்து வரும் 13-ம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்வதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே அறிவித்தார். அதேபோல நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொள்ளையனிடமிருந்து 100 சவரன் நகைகள் பறிமுதல்.. விடுப்பில் சென்று நகைகளை பங்கு போட்ட காவலர்கள்
சென்னை: சென்னையில் நகை கொள்ளையனிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை காவலர்களே பங்கு போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இந்த கொள்ளையர்களை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
சென்னை அசோக் நகர் காவல் நிலைய போலீஸார் ஆரி பிலிப் என்ற கொள்ளையனைபோலீஸார் பிடித்தனர். அவர் கொள்ளையடித்த 100 சவரன் நகைகளை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
திருடிய நகைகள்
இந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீஸாருக்கு பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஆரி பிலிப் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.
[color][size][font]
காவலர்கள்
பின்னர் தங்களுக்குள்ளாகவே பங்குப் போட்டுக் கொண்டனர் என ஆரி பிலிப் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் ஆரி பிலிப் மீது அந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
[/font][/size][/color]
[color][size][font]
வழக்கு விசாரணை
இதையடுத்து அசோக் நகர் போலீஸார் இந்த விவகாரத்தை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.[/font][/size][/color]
[color][size][font]
பெரும் பரபரப்பு[/font][/size][/color]
வேலியே பயிரை மேய்ந்த கதையாக கொள்ளையனிடமிருந்து நகைகளை பிடுங்கி போலீஸாரே பங்கு போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வரும் நிலையில் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படும் நிலையில் இந்த சம்பவம் உள்ளது.
திருடிய நகைகள்
இந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீஸாருக்கு பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஆரி பிலிப் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.
[color][font]
காவலர்கள்
பின்னர் தங்களுக்குள்ளாகவே பங்குப் போட்டுக் கொண்டனர் என ஆரி பிலிப் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் ஆரி பிலிப் மீது அந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
[/font][/color]
[color][font]
வழக்கு விசாரணை
இதையடுத்து அசோக் நகர் போலீஸார் இந்த விவகாரத்தை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.[/font][/color]
[color][font]
பெரும் பரபரப்பு
வேலியே பயிரை மேய்ந்த கதையாக கொள்ளையனிடமிருந்து நகைகளை பிடுங்கி போலீஸாரே பங்கு போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வரும் நிலையில் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படும் நிலையில் இந்த சம்பவம் உள்ளது.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மும்பை இந்தியன்ஸ் - 31 பந்துகளில் 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் - அதிரடி காட்டிய பொல்லார்டு
படத்தின் காப்புரிமைTY IMAGESImage captionகிரோன் பொல்லார்டு
ஐபிஎல் போன்ற 20 ஓவர் ஆட்டங்களில், ஒருவரின் இன்னிங்க்ஸ் மொத்த விளையாட்டையும் மாற்றக்கூடும். அதுவும் 198 ரன்கள் இலக்கு இருக்க, 12 ஓவர்களுக்கு பிறகும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தால், அந்த அணி தோற்றது போலதான்.
ஆனால், இந்த நிலையில் ஒருவர் 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், பத்து சிக்ஸர்கள் அடித்து தன் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு போனால், இதனை அதிசயம் என்றுதான் கூற வேண்டும்.
அப்படி ஒரு ஆட்டத்தைதான் வான்கடே மைதானத்தில் புதன்கிழமை போட்டியில் மும்பை அணியின் கிரோன் பொல்லார்டு ஆடினார். 83 ரன்கள் விளாசி, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி, ஆட்டத்தின் கடைசி பந்து வரை விளையாடி வெற்றியை கைப்பற்றியது.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரண்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல், 64 பந்துகளில், ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை குவித்தார்.
ராகுலுடன் ஆடிய கிறிஸ் கெயில், 36 பந்துகளில், மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடித்து, 63 ரன்களை எடுத்தார்.
படத்தின் காப்புரிமைKLRAHUL 11Image 57 ரன்களை விட்டுக் கொடுத்த ஹார்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்
வெற்றி வாய்ப்பு பஞ்சாப் அணிக்கு அதிகமாக இருந்த நிலையில், போலர்டின் பேட்டிங், ஆட்டத்தை மாற்றப்போகிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவால் விளையாட முடியவில்லை. அந்தப் பொறுப்பை போலர்ட் சுமக்க வேண்டியிருந்தது.
198 ரன்களை இலக்காக கொண்டு மும்பை அணி ஆடத் தொடங்கியது. முதல் 12 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்களை மட்டுமே மும்பை எடுக்க, தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையிலேயே பஞ்சாப் அணி இருந்தது.
குவின்டன் டி காக் 24 ரன்கள், ரோகித் ஷர்மா இடத்தில் விளையாடிய சித்தார்தா லாட் 15 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் மற்றும் இஷன் கிஷன் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
படத்தின் காப்புரிமைREUTERS
பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி சின்தா முகம் முழுக்க மகிழ்ச்சி மலர்ந்திருந்தது.
ஹார்திக் பாண்டியா 19 ரன்களும் மற்றும் க்ருணல் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.
மைதானத்தில் பெரும் அமைதி நிலவியது. ஆனால், பொல்லார்டின் ஆட்டம் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும் கூட, பஞ்சாப் அணி தாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே இருந்தது.
19வது ஓவரின் முதல் பந்தை சாம் கரண் வீச, அதனை பவுண்டரியாக்கினார் போலார்ட். அந்த ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் சிக்ஸ்ர்களை விளாசினார்.
படத்தின் காப்புரிமAGES
அப்போது பஞ்சாப் அணி வீரர்களின் முகத்தில் பதற்றத்தை பார்க்க முடிந்தது. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார் கரண்.
கடைசி ஓவரில் 15 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி இருந்தது.
இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அங்கித் ராஜ்புத் வீசிய பந்து நோ பால் ஆனது. அதில் சிக்ஸர் அடித்தார் பொல்லார்டு. அடுத்த பந்து பவுண்டரி.
ஒரு பந்தை தூக்கி அடிக்க முயற்சித்து, டேவிட் மில்லரால் பொல்லார்டு அவுட் ஆனார். எனினும், அப்போதே ஆட்டம் மும்பை அணியில் பக்கம்தன் இருந்தது.
பின்னர் அதே வெஸ்ட் இன்டீஸின் அல்சாரி ஜோசஃப், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தார்.
பஞ்சாப் அணியின் பக்கம் இருந்த வெற்றியை மும்பை அணி கைப்பற்றியது.
ஐபிஎல் போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் அணி வீரர்கள் விளையாடுவதை பார்க்கும் போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில் அந்த அணி ஆபத்தான அணியாக இருக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றன
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்திய பொதுத் தேர்தல் 2019: 17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
படத்தின் காப்புரிமைDIPTENDU DUTTAImage captionமேற்கு வங்க மாநிலம் கூச் பெகாரில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்.
ஏழு கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 11ம் தேதி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது.
18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
இன்று நடக்கும் வாக்குப்பதிவில் நாடெங்கும் உள்ள 7764 மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
படத்தின் காப்புரிமைELECTION COMMISSION OF INDIAImage captionசிக்கிம் மாநிலத்தில் 13,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நதாங் மசோங் எனும் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் வாக்களிக்க 3.93 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை இன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் பெறுகிறது.
ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜன சேனா ஆகியவை போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 45,920 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடக்கும் இங்கு 7,233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலங்கானாவின் 17 தொகுதிகளில் 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியன இங்கு பிரதான கட்சிகளாக உள்ளன. இங்கு 34,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
படத்தின் காப்புரிமைAFP
பிஹாரில் 4 மக்களவைத் தொகுதிகளுக்காக 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, காங்கிரஸ் ராஸ்டிரிய ஜனதாதளம் கூட்டணியும் போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இன்றைய வாக்குப்பதிவுக்காக 7,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்காரில் நடைபெறும் ஒரு மக்களவைத் தொகுதிக்காக 7 வேட்பாளர்கள் ோட்டியிடுகின்றனர், பாஜக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 1,878 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் 2 மக்களவைத் தொகுதிகளுக்காக 33 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சி , காங்கிரஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கூட்டணி மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகியன இங்கு போட்டியிடும் முக்கியக் கட்சிகளாகும். ஏப்ரல் 11ம் இங்கு 3,489 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகாராஸ்டிராவில் 7 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், பிற சில முக்கிய கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன. முதல் கட்ட தேர்தலுக்காக 14,731 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேகலாயாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்காக ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தின் ஒரு தொகுதிக்கு நடக்கும் தேர்தலில் எட்டு வேட்பாளர்களும், மிசோராமில் ஒரு தொகுதிக்கு நடக்கும் தேர்தலில் ஆறு வேட்பாளர்களும் இன்று களத்தில் உள்ளனர்.
நாகலந்தின் ஒரு தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடக்கும் இங்கு 7,233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
படத்தின் காப்புரிமைELECTION COMMISSION OF INDIAImage captionமேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அடர்ந்த வனங்கள் வழியாகக் கொண்டு செல்லும் அதிகாரிகள்.
உத்தரப்பிரதேசத்தில் இன்று தேர்தல் நடக்கும் எட்டுத் தொகுதிகளில் 96 வேட்பாளர்கள் மோதுகின்றன.பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய இங்கு முக்கியக் கட்சிகள். இங்கு 16,633 வாக்குப்பதிவு மையங்கள் இன்றைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு 52 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இங்கு 11,235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலிச் சந்திக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி இங்கு பிரதானமாக உள்ளன. இங்கு 3,844 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று வாக்குப்பதிவு நடக்கும் அந்தமான் நிகோபார் தீவின் ஒரே மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களும்,லட்சத்தீவில் ஆறு வேட்பாளர்களும் களத்தில் உள்ளார்கள்.
படத்தின் காப்புரிமைBJP
ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தராகண்ட், ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா ஹவேலி, டாமன் டையூ ஆகிய ஒன்றியப் பிரதேசங்களிலும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும்.
கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அஸ்ஸாம் மற்றும் சத்தீஸ்கரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேலும், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
ஐந்து கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், ஏழு கட்டங்களாக பிகார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.
தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.
பிற செய்திகள்:
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அரசு நட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது
இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டும், திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் பல கட்டப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஆதரவாளர்கள் மீது தடியடி தாக்குதல், கைது நடவடிக்கையும் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில் எட்டுவழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது. இதன்படி பசுமைவழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரம் ,பூலாவரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் பொது மக்கள் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கேக் வெட்டி, இனிப்புகள் ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும் போது, பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கள் நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்றம் மூலம் தங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என்றும் இனியாவது அரசு இயற்கையையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் எந்த ஒரு காலத்திலும் எட்டு வழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறினர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசின் தீர்ப்பு குறித்து கவிதா என்னும் விவசாயி கூறும் போது, தங்களின் போராட்டத்திற்கு நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக, தங்களின் குடும்பத்தினரின் சார்பில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ஆயிரக்கணக்கில் காவல்துறையை கொண்டு தங்களை கட்டுப்படுத்த முயன்றது தங்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் தீர்ப்பு தங்களை மகிழ்ச்சியுற வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் எட்டு வழிச்சாலைக்காக போடப்பட்ட எல்லைக் கற்களை பொதுமக்கள் ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தங்களை வேதனையுற செய்த, எல்லைக்கற்கள் தங்கள் நிலத்தில் இருக்கக்கூடாது என தூக்கி வீசினர் .
ஆனால், இந்த அரசாணையை குறித்து எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து தீர்ப்பு மகிழ்ச்சியை தந்தாலும், முழு மனநிறைவை அளிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினை ரத்து செய்வதாக அரசு அறிவிக்காமல் அரசாணை ரத்து என தெரிவித்துள்ளது தங்களின் மனநிலையை வருத்தமடைய செய்துள்ளதாக கூறினார். தற்போதைய தீர்ப்பின் படி பார்க்கும்போது மீண்டும் அரசு புது அரசாணையை கொண்டு வரவாய்ப்பு உள்ளது என்றும், அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் தங்களின் எதிர்ப்பு மிக அதிகமாக வலுக்கும் என தெரிவித்தார்.
சேலம் முதல் காஞ்சிபுரம் வரையில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பம் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கிறது. தாங்களும் தங்களின் உறவுகளும் சேர்த்து நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் தங்களின் கைகளில் உள்ளது என்றும் எட்டுவழி சாலை திட்டம் கொண்டுவராத, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே தங்களின் வாக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒருவேளை புதிய அரசாணைக்காக மேல் முறையீட்டுக்கு அரசு முறையிட்டால் தாங்கள் போராட்டம் மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.
புதிய சாலை தங்களுக்கு தேவையில்லை என்றவர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில் மேப்பாலங்கள் கட்ட அரசு முன்வரவேண்டும், அதேபோல் அரூர் வழியாக மாநில நெடுஞ்சாலை போல் இருவழியாக உள்ள அரூர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழியாக மாற்ற அரசு முயற்சியெடுக்காமல், இயற்கையை அழிக்க முற்படும் அரசுக்கு தங்களின் ஆதரவு கண்டிப்பாய் இருக்காது என்றும் ஒற்றுமையாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம் என தெரிவித்தார்.
நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டது எட்டுவழிச் சாலை திட்டம்: மாபா பாண்டியராஜன்
சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, தேர்தல் முடிந்த பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதா அல்லது திட்டத்திற்கு மாற்றுவழி அமைப்பதா என தமிழக அரசு முடிவு செய்யும் என தெரியவந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசியபோது தமிழக அரசு இந்த வழக்கை எவ்வாறு கையாள்வது என்று இரண்டு வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யும் என்று கூறினார்.
''நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம் இது. சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கான பயண தூரத்தை குறைக்கும். செங்கம் போன்ற இடங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கும். சேலத்தின் வளர்ச்சிக்கு ஒர் உந்துசக்தியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம்,'' என்றார்.
இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது மிகவும் வெளிப்படையாக நடந்தது என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், ''இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது என தற்போது உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்துவதை நிறுத்திவைக்குமாறு கூறியுள்ளது.தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதால் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தற்போது கூறமுடியாது.தேர்தலுக்கு பின், மேல்முறையீடு செய்யலாமா அல்லது இதில் மாற்றுவழி அமைக்கமுடியுமா என்று முடிவு செய்யமுடியும்,''என்று கூறினார்.
தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு அதிமுக மீது விழுந்த அடியா என கேட்டபோது, ''இந்த தீர்ப்பைக் கொண்டு எங்கள் கட்சி மீது விழுந்த அடியா, மக்கள் மீது விழுந்த அடியா அல்லது வளர்ச்சி மீது விழுந்த அடியா என யூகிக்க நான் விரும்பவில்லை. இது நல்ல எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம். எதிர்க்கட்சிகள் சொல்வது போல பெரிய திட்டம் கொண்டுவந்தால், ஊழலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் இதை செய்தோம் என்பது கிடையாது. நாங்கள் மனவருத்தம் அடையவில்லை,''என்று கூறினார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
12-04-2019, 09:53 AM
(This post was last modified: 12-04-2019, 09:55 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
தமிழ் நாகரீகம் உறுதியாகிவிட்டதே.. சமஸ்கிருதம் எதற்கு? அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தின் 25 பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, உத்தரவிட கோரி, காமராஜ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று இந்த அதிரடி உத்தரவை, நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
ஆராய்ச்சி
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கைகளை தயார் செய்ய மேலும் 8 மாதங்கள் அவகாசம் தேவை என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசு
ஆனால், ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு ஆய்வு நடத்தவில்லை எனில் மாநில அரசு ஆய்வு நடத்த அனுமதி வழங்குவீர்களா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
பிரமாண பத்திரம்
இதையடுத்து, அகழாய்வு நடத்த மாநில அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கும் என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, ஏப்ரல் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை
முன்னதாக, தொல்லியல் துறை பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொல்லியல் துறை பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் இவ்வாறு ஒரு நிபந்தனை இடம்பெற்றிருந்த நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. "தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ் பிராமி எழுத்துக்களை இருப்பதால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது, என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இன்று இந்த அதிரடி இந்த வழக்கில் இன்று இந்த அதிரடி உத்தரவை, நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். உத்தரவை, நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்
•
|