Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
‘இலங்கையில் ரூ.27 ஆயிரம் கோடி முதலீடு?’ -ஜெகத்ரட்சகனை அலறவிடும் பா.ம.க!
அரக்கோணம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், இலங்கையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ. 27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகவும், அதை கணக்கில் காட்டாததால், அவரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பா.ம.க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன், அ.ம.மு.க வேட்பாளர் பார்த்திபன் உட்பட, 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில், தி.மு.க, பா.ம.க, மக்கள் நீதி மய்யம் உட்பட 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே, பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் மாற்று வேட்பாளர் சரவணன் தலைமையிலான பா.ம.க நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனை திடீரெனச் சந்தித்து, ஜெகத்ரட்சகன் மீது பரபரப்பு புகார் அளித்தனர்.
``ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவி பெயரில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இலங்கையில் ரூ.27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளது. இந்த சொத்துகளை ஜெகத்ரட்சகன் வேட்புமனுவில் மறைத்துள்ளார். இது, மிகப்பெரிய குற்றம். எனவே, ஜெகத்ரட்சகனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என்று பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தேர்தல் அதிகாரி, ‘‘இலங்கை நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்யவில்லை. அதிலிருந்து, விலகிக்கொண்டதாகக் கூறினார்.'' ‘‘முதலீடு செய்வதிலிருந்து ஜெகத்ரட்சகன் விலகிக்கொண்டதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா?’’ என்றுப் பா.ம.க-வினர் கேள்விகேட்டனர்.
‘இல்லை’ என்று சொன்ன தேர்தல் அதிகாரி, ‘‘ஜெகத்ரட்சகன் மனுவைப் பரிசீலனைசெய்து ஏற்றுக்கொண்டோம். நீங்கள் சொல்லும் தகவலை வைத்து அவரின் மனுவைத் தள்ளுபடிசெய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது’’ என்று விளக்கமளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், ஜெகத்ரட்சகன் மீது புகார் அளிக்கப் பா.ம.க நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் அதிரடி சோதனை!
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய நடத்திய சோதனை தொடர்ந்து வருகிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் இல்லத்துக்கு, நேற்றிரவு 11 மணியளவில் வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வீட்டை சோதனை செய்யவேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த திமுக வழக்கறிஞர் அணியினர், சோதனை நடத்துவதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
இதற்கு முறையான பதில் அளிக்கப்படாததால், வீட்டை சோதனையிடுவதற்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புறபட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 3 மணியளவில் மீண்டும் வந்த அதிகாரிகள், முறையான ஆவணங்களை காண்பித்து சோதனையைத் தொடங்கினர்.
விடிய விடிய சோதனை தொடர்ந்து வருகிறது. இதேபோல், வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியில், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் வீட்டிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவராஜ், தங்கள் வீட்டில் இருந்து எந்தவொரு ஆவணமோ அல்லது பணமோ கைப்பற்றப்படவில்லை என விளக்கமளித்தார்.
இதனிடையே, தேர்தல் பறக்கும் படை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, அதிகாலையில் வருமானவரித் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்கு விரைந்தனர். இதையடுத்து, 8 அதிகாரிகள் ஒன்று சேர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சரவணபவன் ராஜாகோபாலுக்கு ஆயுள் தண்டனை : "ஜெயலலிதாவுக்கு நன்றி" - பாதிக்கப்பட்ட பெண் ஜீவஜோதி
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஜீவஜோதி வரவேற்பு தெரிவித்துள்ளார். தண்டபாணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த ஜீவஜோதி தற்போது தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தந்தி டிவிக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த ஜீவஜோதி, காலம் தாழ்ந்து தீர்ப்பு வெளிவந்தாலும், நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தினை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம்; ப. சிதம்பரம்
விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது என பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கான தனது உரையின்போது பேசினார். இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.
செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது.
புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சூப்பர் ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் ‘த்ரில்’ வெற்றி: ஹீரோவானா ரபாடா, சதத்தை தவறவிட்ட பிரித்வி ஷா: கொல்கத்தாவின் போராட்டம் வீண்
மேட்ச்னா இப்படி இருக்கணும், கடைசி நேரத்தில் ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும் ரசிகர்களை இருக்கை நுனிவரை அமரவைத்து, நகரவிடாமல் கட்டிப்போட்டது கொல்கத்தா, டெல்லி இடையிலான ஆட்டம்.
ரபாடாவின் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சு, பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய பிரித்வி ஷா ஆகியோரால் 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
பிரித்வி ஷாவின் அட்டகாசமான பேட்டிங், ஷாட்கள், உடல்அசைவுகள் ஏறக்குறைய சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தியது. அபாரமாக ஆடி டெல்லி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துவந்தும், கடைசிநேரத்தில் அவசரப்பட்டு பிரித்வி ஷா அடித்த ஷாட்டால் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 55 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு வாய்ப்புகள் இருந்த போதும் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால், போட்டி டையில் முடிந்தது.
வெற்றியாளரை அறிய நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் உலகத் தரம்வாய்ந்த ரபாடாவின் பந்துவீச்சு டெல்லிக்கு வெற்றியை எளிதாக்கியது. ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி யார்கர் வீச ேவண்டும் என்பதை ரபாடா நேற்று சூப்பர் ஓவரில் பாடமாகவே எடுத்துவிட்டார்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சு நேற்று எதிர்பார்த்த வகையில் இல்லாத நிலையிலும் கூட அணியை கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறப்பாக வழிநடத்தினார். ஒருகட்டத்தில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிைலயில் இருந்த அணியை ரஸலுடன் இணைந்து மீட்டு கவுரமான ஸ்கோருக்க கொண்டு வந்தார்.
கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கார்த்திக் திட்டமிட்டு செய்தார். குல்தீப் யாதவுக்கு கடைசி ஓவரை கொடுத்து, தனது கேப்டன்ஷிப் அனுபவத்தை வெளிப்படுத்தினார். அதற்கு நல்லபலனும் கிடைத்தது. ஆனால், துரத்திய துரதிர்ஷ்டம் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியை பரிதாபமாக தோல்வி அடைய வைத்தது. இந்த சீசனில் கொல்லக்தா நைட் ரைடர்ஸ் அணி அடைந்த முதல் தோல்வியாகும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்
போட்டி டை
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் ேசர்த்ததால், ஆட்டம் டையில் முடிந்தது.
சூப்பர் ஓவர்
இதையடுத்து, சூப்பர் ஓவரில் ஒரு ஓவர் வீசப்பட்டது. இதில் டெல்லி ேகபிடல்ஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 10 ரன்கள் சேர்த்தது. 11 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற பரபரப்புடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
நாயக் வேஸ்ட்
டாஸ்வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கத் தேர்வு செய்தது. சுனில் நரேன் காயத்தால் சேர்க்கப்படாததால், அவருக்கு பதிலாக நாயக், கிறிஸ் லின்னுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
ரபாடாவின் முதல் ஓவரிலையே லின் இரு பவுண்டரிகளை விளாசி அதிரடியாகத் தொடங்கினார். இளம் லெக்ஸ்பின்னர் லாமிசானே ஓவரை சமாளிக்க முடியாமல் நாயக் திணறினார். லாமிசானே வீசிய 4-வது ஓவரில் நாயக் 7 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் சரிவு
உத்தப்பா(11), லின்(20), கில்(4) என விரைவாக விக்கெட்டுகளை நேற்று பறிகொடுத்தனர். இதனால், 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ரஸல், தினேஷ் கார்த்திக் இணைந்து அணியை சரிவில் இருந்து தங்களின் அதிரடியால மீட்டனர். பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை மட்டுமே கொல்கத்தா சேர்க்க முடிந்தது.
லாமிசானே முதல் 3 ஓவர்களை நன்றாக வீசிய நிலையில், 12-வது ஓவரை வீச வந்தபோது கார்த்திக்கும், ரஸலும் நொறுக்கிவிட்டனர். ரபாடா வீசிய 17-வது ஓவரில் பவுண்டரி அடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரஸல்.
மோரிஸ் வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்த ரஸல், 62ரன்கள்(28பந்துகள், 4பவுண்டரி,6சிக்ஸர்) சேர்த்த நிலையில், பைன்-லெக் திசையில் திவேசியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். பியூஸ் சாவ்லா களமிறங்கினார்.
19-வது ஓவரை மிஸ்ரா வீசினார். முதல் பந்தில் சாவ்லா ஒரு சிக்ஸரும், தினேஷ் கார்த்திக் ஒரு சிஸ்கரும் அடித்தனர். கார்த்திக் 35 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ரிஷப்பந்திடம் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் சேர்க்க ஆசைப்பட்டு 12 ரன்கள் சேர்த்தநிலையில் சாவ்லா ரன்அவுட் ஆகினார். குல்தீப் யாதவ் 10 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணித் தரப்பில் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
186 ரன்கள் இலக்கு
186 ரன்களை சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர்.
பியூஷ்சாவ்லா வீசிய 4-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய தவண் 3-வது பந்தில் மிட் ஆப் திசையில் தூக்கி அடித்தபோது ரஸிலிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார்.. ரஸல் வீசிய 6-வது ஓவரில் பிரித்வி ஷா ஒரு பவுண்டரி, சிக்ஸர் , குல்தீப் வீசிய 8-வது ஓவரில் அய்யர் ஒருபவுண்டரியும், பிரித்வி ஒரு சிக்ஸரும் விளாசி ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றனர்.
89 ரன்கள் கூட்டணி
குல்தீப் வீசிய 11-வது ஓவரில் அய்யர் சிக்ஸர் அடிக்க, அதைத் தொடர்ந்து பிரித்வி ஷா சிக்ஸர், பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரஸல் வீசிய 12-வது ஓவரின் கடைசிப்பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் அய்யர் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்ய, பிரித்வி ஷா கிடைக்கும் பந்துகளில் சிக்ஸரையும், பவுண்டிகளையும் விளாசினார். பெர்குஷன் வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, பிரசித் கிருஷ்ணா வீசிய 16-வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து பிரித்விஷா பட்டையக் கிளப்பினார்.
2 ஓவர்கள் 15ரன்கள்
கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இப்போது ஆட்டம் டெல்லி அணி பக்கமே செல்ல அதிகமாக வாய்ப்பிருந்தது. குல்தீப் வீசிய 18-வது ஓவரை வீசினார். சிக்ஸர் அடிக்க முயற்சித்து பந்த் 11ரன்களில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே குல்தீ்ப் விட்டுக்கொடுத்தார். அடுத்து இங்ராம் களமிறங்கினார்.
சதத்தை தவறவிட்ட பிரித்வி
19-வது ஓவரை பெர்குஷன் வீசினார். பிரித்வி ஷா 99 ரன்களில் களத்தில் இருந்தார். 4-வது பந்தை தூக்கி அடிக்க பிரித்வி ஷா முயற்சித்தார். ஆனால், பேட்டின் நுனியில் பட்டு தேர்ட் மேன் திசையில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்சாக மாறியது. 55 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து பிரித்வி ஷா(12பவுண்டரி, 3 சிக்ஸர்) ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு வெளியேறினார்.
6-க்கு 6
அடுத்து விஹாரி களமிறங்கினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணிநிச்சயம் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரை குல்தீப் வீசினார்.
தனது அனுபவமான பந்துவீச்சால் குல்தீப் விஹாரியையும், இங்ராமையும் திணறச் செய்தார். முதல் பந்தில் வாஹாரி ஒரு ரன்னும், 2-வது பந்தில் இங்ராம் 2 ரன்னும் சேர்த்தனர். அடுத்த ஒரு பந்தில் இங்ராம் ரன் சேர்க்கவில்லை, 4-வது பந்தில் இங்ராம் ஒரு ரன் சேர்த்தார். 5-வது பந்தை விஹாரி எதிர்கொண்டா். பந்தை தூக்கி அடிக்க அது மிட்விக்கெட்டில் சாவ்லாவிடம் கேட்சாக மாறியது. விஹாரி 2 ரன்னில் வெளிேயறினார்.
போட்டி “டை”
கடைசிப்பந்தில் 2 ரன்கள் டெல்லி அணியி்ன் வெற்றிக்கு தேவைப்பட்டது. இங்ராம் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடி 2-வது ரன்னுக்கு முயற்சித்தபோது, ரன்அவுட் செய்யப்பட்டார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185ரன்கள் டெல்லி அணி சேர்த்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட் செயத்து. ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் பேட் செய்தனர். கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினார். முதல் பந்தில் ரிஷப் பந்த் ஒரு ரன் சேர்த்தார். 2-வது பந்தில் அய்யர் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தை தூக்கி அடித்தபோது சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து அய்யர் ஆட்டமிழந்தார். அடுத்து பிரித்வி ஷா களமிறங்கினார். ரிஷப்பந்த் அடுத்த 3 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார். இதனால், டெல்லி அணி சூப்பர் ஓவரில் 10 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.
கொலகத்தா அணி தரப்பில் ரஸல், கார்த்திக் களமிறங்கினர், ரபாடா பந்துவீசினார். முதல் பந்தில் ரஸல் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை 3-வது பந்து யார்கராக உள்ளேவர ரஸல் க்ளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா ஒருரன்எடுத்தார். இரு பந்துகளையும் கட்டுக்கோப்பாக ரபாடா வீசியதால், கார்த்திக்கால் ரன் அடிக்கமுடியவில்லை. கொல்கத்தா அணி 7ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கோவை சிறுமி கொலை - "பாட்டி இறப்பை வைத்து நடித்த குற்றவாளி கைது"
படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionசித்தரிக்கும் படம்
கோவை துடியலூர் பகுதியில், விளையாடச் சென்ற ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 15 பேரிடம் விசாரணை செய்து சந்தோஷ்குமார் எனும் 34 வயதாகும் நபர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு.
சந்தோஷ் குமாரின் தாத்தா ஐந்து மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதால், அவர் தனது பாட்டியுடன் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார்.
அதே பகுதியில் இருந்த சிறுமியிடம் சந்தோஷ் குமார் நன்றாகப் பழக்கம் உண்டாக்கிக்கொண்டார்
சிறுமி காணாமல் போன மார்ச் 25 அன்று விளையாடும்போது கீழே விழுந்த சிறுமியை காப்பாற்றுவதுபோல தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியுள்ளார் சந்தோஷ்குமார். பின்னர் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
அதே இரவு சந்தோஷ் குமாரின் பாட்டி மரணமடைந்தார். பாட்டி இறந்ததால் சோகமாக இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு, சிறுமியின் உடலை வீட்டில் உள் அறை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார்.
படத்தின் காப்புரிமைAFP
அடுத்த நாள் அதிகாலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில், தனது டீ-ஷர்ட் மூலம் மறைத்து சிறுமியின் சடலத்தை எடுத்துச் சென்று, சிறுமியின் வீடு இருந்த பகுதியில் வெளியில் வீசிவிட்டார்.
அந்த டீ-ஷர்ட் யாருடையது எனும் கோணத்தில் காவல்துறை விசாரித்தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தோஷ்குமார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மனதை குளிர்வித்த தோனி.. பயங்காட்டிய ராஜஸ்தான் கூட்டணி.. கடைசி ஓவரில் பிராவோ.. சென்னை தொடர் வெற்றி!!
சரியான தேர்வு
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அவர்கள் தேர்வு செய்தது சரிதான் என்பது போல, சென்னை அணியின் அம்பதி ராயுடு 1, ஷேன் வாட்சன் 13, கேதார் ஜாதவ் 8 வெளியேறினர்.
நல்ல ஸ்கோரை எட்டுமா?
சென்னை அணி 4.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது, அப்போது தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இருவரும் ரன் ரேட் ஆறுக்கும் கீழ் போகாதபடி பார்த்துக் கொண்டனர். இவர்கள் இப்படி ஆடியதால், சென்னை அணி 130-140 ரன்களை எட்டினால் பெரிது என்ற நிலை இருந்தது.
தோனி அதிரடி
ரெய்னா 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து பிராவோ 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி 3 ஓவர்களில் ரன் ரேட்டை சிறிது ஏற்றினார். இதே நேரம், தோனியும் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் ஜடேஜா கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அணிக்கு உதவினார்.
தோனி சிக்ஸர்கள்
கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளை சந்தித்த தோனி, ஒரு வைடு தவிர்த்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 175 ரன்கள் குவித்து அசத்தியது. தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைத்தது.
ராஜஸ்தான் பந்துவீச்சு
ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் ஓவருக்கு 4.25, கோபால் ஓவருக்கு 7.66, கெளதம் ஓவருக்கு 6.50 என குறைந்த அளவு ரன் கொடுத்தனர். ஜெயதேவ் 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து பரிதாபமாக காட்சி அளித்தார். ஆர்ச்சர் 2, குல்கர்னி, ஸ்டோக்ஸ், ஜெயதேவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் சரிவு
ராஜஸ்தான் அணி 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய 2வது பந்திலேயே கேப்டன் ரஹானேவை இழந்தது. அடுத்து பட்லர் 6, சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 14 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
கிலி காட்டிய கூட்டணி
பின்னர் ராகுல் திரிபாதி 39, ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினர். கெளதம் 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 17, 18, 19வது ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் - ஆர்ச்சர் கூட்டணி ரன் குவிப்பில் ஈடுபட்டு சென்னை அணிக்கு கிலி காட்டியது.
கடைசி ஓவரில் பிராவோ
கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு எடுத்து வந்தது இந்த கூட்டணி. கடைசி ஓவரை பிராவோ வீச, முதல் பந்தில் ஸ்டோக்ஸ், ஐந்தாம் பந்தில் கோபால் ஆட்டமிழந்தனர். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த பிராவோ சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[img=0x0]https://xossipy.com/data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
தாஹிர் - சாஹர் அசத்தல்
இந்தப் போட்டியில் சென்னை அணியின் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தீபக் சாஹர் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். பிராவோ 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
முதல் இடம்
2019 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளில் வென்று வெற்றிநடை போட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். புள்ளிகள் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`இதுவரை 30 கோடி ரூபாய் பறிமுதல்!’ - துரைமுருகன் மகன் போட்டியிடுவதில் சிக்கல்
ரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், இதுவரை ரூ.30 கோடிக்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளன. இந்த விவகாரத்தால் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நிர்வகிக்கும் கிங்க்ஸ்டன் கல்லூரியில் கடந்த 29-ம் தேதி இரவு முதல் 30-ம் இரவு வரை வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் கைப்பற்றினர். இந்த நிலையில், 1-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர். காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன.
இதேபோல், சீனிவாசனின் அக்காள் விஜயா வீடு, தி.மு.க பிரமுகர்களான வஞ்சூர் பகுதி பெருமாள், கல்புதூரைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீடுகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இவற்றில், மொத்தம் ரூ.30 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன. பணத்தைக் கணக்கிடும் பணியில் வருமானவரித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். துரைமுருகனின் வீடு, கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இரவு 9 மணிக்குப்பிறகு துரைமுருகன் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.
அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``தி.மு.க-வின் வெற்றியைத் தடுப்பதற்காக முட்டாள்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். வாக்கு கேட்பதை தடுத்துள்ளார்கள். வருமானவரித் துறையில் முழுக்க முழுக்க அரசியல் கலந்திருக்கிறது. மத்திய-மாநில அரசுகளும், அவர்களுக்குத் துணை நிற்கின்ற அரசியல் கட்சிகளும் செய்யும் வேலைதான். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. வருமானவரித் துறையினர் வந்தார்கள், என்னிடம் எதுவும் இல்லையென்றேன், அவர்களும் சென்றுவிட்டார்கள். வருமானவரித் துறை சோதனையால் மக்கள் மனநிலை எப்படியிருக்கும் என்ற அரசியல் அரிச்சுவடி இல்லாதவர்கள் செய்யும் வேலைதான் இது’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
இதனிடையே, ‘‘பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். அதன்பிறகு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதுபற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவுசெய்யும்’’ என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். கைப்பற்றப்பட்ட பணம் துரைமுருகனுக்கு சொந்தமானது என்று உறுதிசெய்யப்பட்டால், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அவரின் மகன் கதிர்ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படலாம் அல்லது இந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்துசெய்யப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையில் பறக்கும் படை சோதனை
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டினை தொடர்ந்து திமுக பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியின் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது. ஏற்கனவே துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியிருந்த வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். காலை முதலே காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கீழ்மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டில் சோதனை நடந்தது. அதேபோல, காட்பாடி வஞ்சூர் பகுதியிலுள்ள திமுக ஒன்றியச் செயலாளர் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும், திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. இதனிடையே சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
துரைமுருகன் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தண்டபத்திலுள்ள அவரது பண்ணையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் சோதனையை தொடர முடியாமல் பறக்கும் படையினர் திரும்பிச்சென்றனர். நாளை காலை மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி போட்டியிடுகின்றார். அவருக்கு பக்கபலமாக இருந்து எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்தான் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இத்தகைய சூழ்நிலையில், அவரது பண்ணையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேச்சு; ராஜஸ்தான் கவர்னர் மீது தேர்தல் கமிஷன் புகார்
ஜெய்ப்பூர்: பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் மீது தேர்தல் கமிஷன் புகார் அளித்துள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமான உ .பி.,யில் கல்யாண்சிங் கவர்னராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில், பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும். அவரே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருந்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் ஒரு அரசு உயர் அந்தஸ்து பதவி வகிக்கும் கவர்னர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறை மீறலாகும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அத்துடன் கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கும் புகார் கடிதம் எழுதியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாநில முதல்வர் யோகி , பிரதமர் மோடி இந்த நாட்டை காப்பதில் ராணுவவீரர் போல் செயல்படுகிறார் என கூறியிருந்தார். இந்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை மாவட்ட எஸ்பி, பொள்ளாச்சி டிஎஸ்பி, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சிக்கு புதிய டிஎஸ்பியாக சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த டிஎஸ்பி ஜெயராமன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய புதிய ஆய்வாளராக நடேசனுக்கு பதில் ஆர்.வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பியாக சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட எஸ்பி பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பாண்டியராஜன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட எஸ்.பி.பாண்டியராஜன் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
8 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி, பரிதாப தோல்வி!
ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் தொடரிl, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் சாம் ** ஆகியோர் 15 (11) மற்றும் 20 (10) ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த மயங்க் அகவர்வாலும் 6 (9) ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சர்ஃபராஸ் கானும் டேவிட் மில்லரும் ரன்களை உயர்த்தினர். 39 (29) ரன்கள் எடுத்த நிலையில் கான் அவுட் ஆனார். பின்னர் மில்லரும் 43 (30) ரன்னில் பெவிலியன் திரும்ப, அவர்களுக்கு பின்னர் வந்தவர்களில் மன்தீப் சிங் 29 (21) ரன்கள் எடுத்தார். மற்ற வர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும், ரபாடா, லமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் தவான் 30 (25), ஸ்ரேயாஸ் ஐயர் 28 (22), ரிஷாப் பன்ட் 39 (26), இங்ரம் 38 (29) ரன் எடுத்தனர். 8 ரன்னுக்குள் கடைசி 7 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. சாம் குர்ரன், ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். சாம் குர்ரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரஃபேல் குறித்த புத்தகம்: பறிமுதல் செய்த புத்தகங்களை திருப்பித் தர உத்தரவு
ரஃபேல் ஊழல் தொடர்பாக சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிடப்பட்டிருந்த புத்தகம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அப்படி பறிமுதல் செய்யும்படி கூறப்படவில்லை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை கோரியிருப்பதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய புத்தக நிறுவனமான பாரதி புத்தகாலயம், நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் ரஃபேல் விமானங்களை வாங்குவதில் நடந்த முறைகேடு குறித்து ஒரு நூலை வெளியிடுவதாக இருந்தது. இதனை எஸ். விஜயன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த புத்தகத்தின் வெளியீடு சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் நடப்பதாக இருந்தது. இந்து குழுமத்தின் தலைவர் என். ராம் வெளியிட்டுள்ளார்.
ஆனால், அங்கு புத்தக வெளியீட்டு விழா நடக்க காவல்துறை அனுமதியளிக்கவில்லையெனக் கூறி, பாரதி புத்தகாலயத்திலேயே இந்த விழா நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் பாரதி புத்தகாலயத்திற்கு காவல் துறையினருடன் வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசனும் இ 3 காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷும் இந்த புத்தக வெளியீடு விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தக்கூடாது என்று கூறி கடிதம் அளித்துவிட்டு, புத்தகத்தை பறிமுதல் செய்வதாகக் கூறினர்.
"புத்தகத்தில் 146 பிரதிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அதனால் வெளியீட்டு விழாவை ரத்து செய்திருக்கிறோம்" என பிபிசியிடம் பேசிய பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹுவிடம் கேட்டபோது, "இந்தியத் தேர்தல் ஆணையமோ தலைமைத் தேர்தல் அதிகாரியோ அம்மாதிரி எந்த உத்தரவையும் அளிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறினார்.
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிசாமியிடம் கேட்டபோது, "இது தொடர்பாக அறிக்கை கேட்டிருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்தப் புத்தகங்களைத் திரும்பத் தர தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புத்தக வெளியீட்டு விழாவை மாலையில் நடத்த அந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெரம்பூர் வேட்பாளர் மோகன்ராஜ்: உலக வங்கியில் தமக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாக பிரமான பத்திரம் தாக்கல்
படத்தின் காப்புரிமைJEBAMANI MOHANRAJ
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தமக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், தம் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோல தேர்தல் நடக்கும் சென்னை பெரம்பூர் தொகுதியில் ஜே. மோகன் ராஜ் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கென வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவுடன் இணைத்து தாக்கல் செய்யும் படிவம் - 26ல், தன்னுடைய சொத்து விவரங்களைக் குறிப்பிட்டிருக்கும் மோகன் ராஜ், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் உலக வங்கியில் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அவரது இந்த வேட்புமனு ஏற்கப்பட்டு, அவருக்கு பச்சை மிளகாய் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதற்காக இப்படி ஒரு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தீர்கள் என மோகன் ராஜிடம் கேட்டபோது, "வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன். இதற்கு முன்பாக வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்தால் அது கிரிமினல் குற்றமாக இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு அதனை சிவில் குற்றமாக மாற்றிவிட்டனர். அதனால், யார் வேண்டுமெனாலும் தவறான தகவலை அளிக்க முடிகிறது. அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் அப்படிச் செய்தேன். என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது" என்கிறார்.
மேலும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோல வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டும் மோகன் ராஜ், அதற்குப் பிறகும்கூட யாரும் கண்டுகொள்ளவில்லை, தன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்.
மோகன் ராஜின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போவதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. "அவர் வேண்டுமென்றேதான் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக வேட்புமனுக்களைக் கையாளுகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று" என்கிறார் அந்த இயக்கத்தைச் சேர்ந்த சந்திரமோகன்.
"அதேநேரம், ஆளுங்கட்சிக்கு வேண்டாத ஒரு நபரின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்வதென்றால் அது உடனடியாக நடக்கிறது. அப்போது வேட்புமனுவில் உள்ள அம்சங்களைச் சரிபார்த்து குறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். மற்ற தருணங்களில் ஏன் அப்படிச் செய்வதில்லை" என்கிறார் சந்திரமோகன்.
இம்மாதிரி தவறான தகவல்களை அளித்தால், வேட்பு மனுக்களை ஏன் நிராகரிப்பதில்லை என தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "தேர்தல் அதிகாரிகளைப் பொறுத்தவரை வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் மிகக் குறைவாகவே இருக்கிறது. படிவத்தில் எல்லா இடங்களையும் பூர்த்தி செய்திருந்தால் அந்த மனுவை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால் பிறகுதான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்" என்கிறார் அவர்.
இந்த வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியது: வானிலை ஆய்வு மையம்
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. பருவமழை முடிவடைவதற்குள் பனிக்காலம் தொடங்கியது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழக்கத்தைவிட பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மலைப்பகுதிகளில் உறைபனி வாட்டி வதைத்தது. தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் கொடுமை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சேலம், கரூர், பரமத்தியில் தலா 104 டிகிரி , திருச்சி, தருமபுரியில் தலா 102 டிகிரி, வேலூர், மதுரை தலா 101 டிகிரி , நாமக்கல், பாளையங்கோட்டையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
MI vs CSK : யானைக்கும் அடி சறுக்கும்.. சென்னை படுதோல்வி.. தொடர் வெற்றிக்கு மும்பை முற்றுப்புள்ளி
சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி
மும்பை:நடப்பு சாம்பியன் சென்னை அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை ஐபிஎல் தொடரின் அசத்தல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியிருக்கிறது.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் பெகண்ட்ராஃப் , ராகுல் சஹார் சேர்க்கப் பட்டுள்ளனர். சென்னையில் சாண்ட்னருக்கு பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.
170 ரன்கள் குவிப்பு
க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது. சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அம்பத்தி ராயுடு டக்
இதையடுத்து, சென்னை அணி பெருத்த எதிர்பார்ப்புடன் களம் கண்டது. தொடக்கத்திலே அந்த அணிக்கு அதிர்ச்சி. அம்பத்தி ராயுடு டக் அவுட்டாகி வெளியேறினார்.
வாட்சன், ரெய்னா காலி
அவரை தொடர்ந்து வாட்சனும் 5 ரன்களில் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ரெய்னாவும், ஜாதவும் கைகோர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சின்ன தல ரெய்னா, பொல்லார்டின் அற்புத கேட்சால் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தோனி ஆட்டமிழப்பு
அவரையடுத்து, பலத்த ஆரவாரங்களுடன் களத்துக்கு வந்தார் தல தோனி. ஜாதவும், அவரும் அணிக்கு ஓரளவு நம்பிக்கை அளித்தனர். ஆனால், அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஸ்கோர் 87 ஆக இருந்த போது தோனி வெளியேற சென்னை ரசிகர்கள் ஷாக்.
58 ரன்கள்
அதற்கு பிறகு... வந்த ஜடேஜா ஒரே ரன்னில் நடையை கட்ட.. கிட்டத்தட்ட சென்னை அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். மறு முனையில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஜாதவ் 58 ரன்களில் மலிங்கா பந்தில் வீழ்ந்தார்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
- பிராவோவும் வீழ்ந்தார்
இறுதிக்கட்ட ஓவர்களில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற கோணத்தில் சென்னை அணி வீரர்கள் அடித்து ஆட முற்பட்டனர். வந்த வேகத்தில் சிக்சர் அடித்த பிராவோ.. அடுத்த பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்தார். இந்த முறை அவரது விக்கெட்டை சாய்த்தது மலிங்கா.
- மும்பை வெற்றி
ஒரு வழியாக... 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை சாய்த்து, அதன் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
போலி அறிக்கை! - சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகர் கைது
உதவி ஆய்வாளர் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் விரல் ரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியானது. இதில் தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றும் அருணாச்சலம் என்பவர் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் சரியாக பதிலளித்தும் இவருக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவில்லை. ``சரியான பதிலளித்தும் எனக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவில்லை. எனக்குத் தகுந்த மதிப்பெண்கள் வழங்கத் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐஐடி பேராசிரியர்களிடம் அறிக்கைப் பெற்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மனுதாரர் அளித்த விடை தவறு என அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உடனே அருணாச்சலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் பெற்ற ஒரு தகவலின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் டி.மூர்த்தி என்பவர் சென்னை ஐஐடியின் கணிதப்பிரிவில் பணியாற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் அளித்த கடிதத்தை சமர்ப்பித்தார். அதில் ‘இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தை ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எதற்காகப் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜி.வி.குமார், டி.மூர்த்தி இவர்கள் யார். இதுதொடர்பாக ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான பதிலளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.
இதுதொடர்பாக ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர்தான் டி.மூர்த்தி ஐஐடி கணிதப் பேராசிரியர் என அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரிடம் இருந்துதான் அறிக்கைப் பெற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் முறைகேடு செய்தது தெரியவந்ததையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ள ஜி.வி.குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். டி.மூர்த்தி கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எனத் தெரிகிறது. ஐஐடி பேராசிரியரிடம் அறிக்கைப் பெறாமல் பள்ளி ஆசிரியரிடம் அறிக்கை பெற்று சமர்ப்பித்துள்ளனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை வழக்கின் விசாரணையின்போது டி.மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குமார் தன்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பேசினார். கணித ஆசிரியரான தன்னை ஐஐடி பேராசிரியர் போல் ஜோடித்து இந்த வழக்கில் சேர்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குமார் மோசடி செய்த நிலையில், விடை சரிபார்த்த காரணத்துக்காகக் காவல்துறையினர் மூர்த்தியை துன்புறுத்தக்கூடாது என நீதிபதி தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிறுவனின் மனிதாபிமானம். வைரலாகும் புகைப்படம் !
மிசோரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் வளர்ந்து வந்த ஒரு கோழிக்குஞ்சின் மீது அவனது சைக்கிளை ஏற்றினான்.
செய்வதறியாத சிறுவன், உடனடியாக தனது சேமிப்பில் இருந்த 10 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளான்.
அந்த கோழிக்குஞ்சு இறந்தது அறியாமல் ஒரு கையில் பணமும் மறுகையில் கோழியுடன் இருந்த அவனை கண்ட ஊழியர் ஒருவர் அவனை புகைப்படம் எடுத்து நடந்ததை விவரித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். பதிவேற்றிய சில மணி நேரங்களில் அந்த விஷயம் 1 லட்சத்திற்கும் அதிகமான பகிர்வை அடைந்துள்ளது.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற வாக்கியத்தை நிரூபித்த அந்த சிறுவனின் செயலை பலரும் வெகுவாக பாராட்டினார்.
•
|