Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலை  !


தமிழ்நாடு மின்சார வாரியம் 07/03/2019 அன்று கேங்மேன் பயிற்சி (Gangman Trainee) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியீட்டது. இதற்கான இணையதள விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி ( 22/03/2019 ) மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் (22/04/2019) ஆகும். மேலும் தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி நாள் (24/04/2019) . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 5000 காலி பணியிடங்களை வெளியீட்டுள்ளது.  இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரி : www.tangedco.gov.in ஆகும். 

 

[Image: WhatsApp%20Image%202019-03-24%20at%203.07.10%20PM.jpeg]


அதே போல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு ஆகும். தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் OBC , MBC , OC - Rs. 1000, SC/ST - Rs.500 , Differendly abled Persons - Rs. 500 ஆகும். இதற்கான தேர்வு கட்டணங்கள் இணைய வழி பணப்பரிமாற்றம் (Credit Card , Debit card , Net Banking) மூலம் செலுத்தலாம். கேங்மேன் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 18 - 40 க்குள் இருக்க வேண்டும். தமிழக மின்சார வாரியம் தேர்வுக்கான தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தனது அறிப்பாணையில் தெரிவித்துள்ளது. மேலும இந்த தேர்வு தொடர்பான முழு விவரங்களுக்கு : www.tangedco.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். 



இந்த தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்வில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 044-28522256 , இ-மெயில் முகவரி : [email protected] . இதே போல் தேர்வுக்கு தேவையான பாடத்திட்டமும் இந்த இணையதளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேற பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

[Image: Ashwin.jpg]

[Image: gayle6-1553538800.jpg]
  

கெயில், ராகுல் துவக்கம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில், ராகுல் துவக்கம் அளித்தனர். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.
[Image: gayle3556e436-1553538853.jpg]
  

கெயில் அதிரடி
அடுத்து கெயில், மாயங்க் அகர்வால் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். மாயங்க் 22 ரன்களில் வெளியேற, அடுத்து சர்ப்ராஸ் கான் களத்துக்கு வந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். கெயில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் சேர்த்தது.
[Image: buttler578-1553538793.jpg]
Like Reply
ராஜஸ்தான் பந்துவீச்சு
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறுதல் அளித்தார். ஸ்டோக்ஸ் 2, குல்கர்னி, கெளதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
[Image: buttler57845646-1553538780.jpg]
  

ரஹானே - பட்லர் துவக்கம்
அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தது. ரஹானே - பட்லர் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். பின் ரஹானே 27 ரன்களில் வெளியேறினார். அட்டகாசமாக ஆடி வந்த பட்லர் 69 ரன்கள் அடித்து இருந்த போது சர்ச்சைக்குரிய, முறையில் ஆட்டமிழந்தார்.
[Image: ashwin457-1553538831.jpg]
  

சர்ச்சை ரன் அவுட்
அஸ்வின் பந்து வீசிய போது, பேட்ஸ்மேனுக்கு எதிர்முனையில் இருந்த பட்லர், கிரீஸை விட்டு வெளியேறிய நேரத்தில், ரன் அவுட் செய்தார் அஸ்வின். இது பெரும் வாக்குவாதத்தை கிளப்பியது. அஸ்வின் வேண்டுமென்றே நின்று, பட்லர் கிரீஸை விட்டு வெளியேற விட்டுவிட்டு ரன் அவுட் செய்தார் என கூறப்பட்டது. எனினும், அம்பயர் முடிவால் பட்லர் வெளியேறினார்
Like Reply
சீட்டுக்கட்டாய் சரிந்தனர்
அடுத்து ஸ்மித் 20, சஞ்சு சாம்சன் 30, பென் ஸ்டோக்ஸ் 6, திரிபாதி 1, கௌதம் 3, ஆர்ச்சர் 2, ஜெயதேவ் 1 என சீட்டுக்கட்டாய் சரிந்தனர். 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்கள் இழந்து, போட்டியில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான்.
[Image: gayle3556e433244456456-1553538806.jpg]
  

பஞ்சாப் வெற்றி
பஞ்சாப் அணிக்கு அதன் கேப்டன் அஸ்வின் சர்ச்சை ரன் அவுட் மூலம் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி வெற்றி தேடிக் கொடுத்தார். பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. .
Like Reply
கடன் நெருக்கடி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், மனைவி ராஜினாமா

கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். #JetAirways







[Image: 201903251544233274_Jet-Airways-chairman-...SECVPF.gif]
Like Reply
ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. 

அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமாங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

இந்த அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தற்போது தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

[Image: 201903251544233274_1_Jet-2._L_styvpf.jpg]

மனைவியுடன் நரேஷ் கோயல்


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மும்பை பங்குச் சந்தையில் சமீபகாலமாக மிகப்பெரிய சரிவை சந்தித்துவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று சுமார் 4 சதவீதம் அளவுக்கு ஏறுமுகம் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #JetAirways
Like Reply
`6 பேரை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி' - காப்பாற்றப்போன மகன்களும் உயிரிழந்த சோகம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது எட்டிப்பார்த்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மயங்கிப் பலியானார். அவரைக் காப்பாற்றப் போன அவரின் மகன்கள் இருவர், அருகில் வசிப்பவர்கள், வேடிக்கை பார்க்க எட்டிப் பார்த்தவர்கள் என மொத்தம் ஆறு பேரை காவு வாங்கி இருக்கிறது அந்த செப்டிக் டேங்க். இந்தச் சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
[Image: IMG-20190326-WA0027_16282.jpg]

ஸ்ரீபெரும்புதூர் அருகே விநாயக நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டுக்கு பக்கத்தில் மூன்று குடியிருப்பு வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் கழிவறை நிரம்பியதால் அதே பகுதியைச் சேர்ந்த கழிவு நீர் அகற்றும் லாரி மூலம் கழிவு நீர் அகற்றினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி கழிவுநீர் தொட்டியில் எட்டிப்பார்த்துள்ளார்.


[Image: WhatsApp_Image_2019-03-26_at_2.52.32_PM_17082.jpeg]
அவரை விஷவாயு தாக்கியதால் மயங்கி தொட்டியின் உள்ளே விழுந்துள்ளார். இதைக் கண்ட அவரின் மகன் கார்த்திக் அவரைக் காப்பாற்ற முயன்று அந்த டேங்கில் இறங்க அவரும் உள்ளே மயக்கமடைந்து விழுந்தார். அருகே வாடகை வீட்டில் வசித்து வருபவர்களான பரமசிவம், சுரதா பிசி ஆகியோர் அவர்களைக் காப்பாற்ற அடுத்தடுத்து செப்டிக் டேங்கில் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானார்கள். அந்த வழியாகச் சென்ற ஆரணியைச் சேர்ந்த லட்சுமிகாந்த் (22) இந்தச் சம்பவங்களைப் பார்த்து அவரும் தொட்டியின் அருகே சென்று எட்டிப் பார்த்தார் அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
Like Reply
[Image: IMG-20190326-WA0026_(1)_16554.jpg]
வெகுநேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி லதா, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகன் கண்ணனை எழுப்பி அப்பாவைக் கூட்டி வரச் சொல்லி அனுப்பியுள்ளார். கழிவுநீர் தொட்டி அருகில் சென்ற அவரும் விஷவாயு தாக்கி அங்கேயே மயக்கமுற்று இறந்துவிட்டார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி ராஜேஷ் கண்ணா ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள்.
Like Reply
அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

[Image: 61014.jpg]

அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சைகளாக கருதி ஒரே பொதுச்சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாகவும் இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பிரமாண பத்திரத்தையும் தேர்தல் அணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

[Image: 120933_commission%20l.jpg]
இந்த நிலையில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒதுக்குப்படுமா..? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை தொடங்கி நடைபெற்றது. அப்போது, அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்தார். இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று உச்சநீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.
[Image: 123133_sc%20l.jpg]
பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரதிநிதித்துவ சட்டப்படி முரணானது; பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இன்றைக்கே அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம்; குக்கர் இல்லை என்றால் வேறு ஒரு பொதுச்சின்னம் தரவேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றமும் மறுப்பு தெரிவித்துவிட்டது.
[Image: 124633_ttv%20l.jpg]
அதேசமயம், ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் என தெரிவித்த நீதிபதிகள், ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என தெரிவித்தனர். அப்போது, குக்கரை போன்று பொதுவான சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாக கருதி ஒரே பொதுச்சின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் களம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பொதுச் சின்னத்தை ஒதுக்க நீதிபதிகள் உத்தரவிட்டதாக கூறினார்.
Like Reply
'அக்னி தேவி' பிரச்சினை: பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை

[Image: DSC6347jpg]

'அக்னி தேவி' பிரச்சினை தொடர்பாக பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தவுள்ளது.
ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அக்னி தேவி'. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக, "இதில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பண்ணவில்லை" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாபி சிம்ஹா. மேலும், படக்குழுவினர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எப்படியெல்லாம் பாபி சிம்ஹா தங்களை டார்ச்சர் செய்தார் என்றும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இப்பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று (மார்ச் 25) மாலை அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பாபி சிம்ஹா மற்றும் 'அக்னி தேவி' படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது, "படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மேலும், படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள். இதில் எதுக்குமே ஒத்துழைக்க இயலாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால், தயாரிப்பாளருக்கோ 10 கோடி வரை நஷ்டம். இயக்குநரே கஷ்டப்பட்டு படத்தைத் தயாரித்திருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார். எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் கேட்டார். ஆனால், யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய விஷயத்தில் இருந்து  பின்வாங்கவே இல்லை.
ஒரு இயக்குநரை தலைமறைவாக வைக்கும் அளவுக்கு அவர் என்ன தப்பு பண்ணிவிட்டார்? எஃப். ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் க்ரைம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.  இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
எதுக்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு மீட்டிங் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது பெரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார்.
Like Reply
தூத்துக்குடியில் வ.கவுதமனை வாபஸ் பெற வைத்த தமிழிசை..!

[Image: image_710x400xt.jpg]
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.[Image: image.jpg]
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் அண்மையில் புதிதாக தமிழ் பேரரசு கட்சி என்ற அரசியல் அமைப்பை தொடங்கிய இயக்குநர் கவுதமனும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். நேற்று முன் தினத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வது ஓய்வடைந்தது. இந்த நிலையில் திடீரென தான் தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் திடீரென இன்று வாபஸ் பெற்றார்.[Image: Tamilisai.jpg]
இதுகுறித்து அவர் கூறுகையில்., ‘’ஏப்ரல் 18-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல. ஜனநாயக படுகொலை. அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார் தமிழிசை. ஆனால் இதை மறைத்து தமிழிசை தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுள்ளனர். எனவே எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன் என்றார் கவுதமன்.
Like Reply
முடிந்தது தினகரன் யுத்தம்

[Image: Tamil_News_large_2242711.jpg]

அ.தி.மு.க., எனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடி வந்த தினகரன், இனி அப்படி பேச முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால், அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்து விட்டால், அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி வழக்கு நடத்த முடியாது என்பது தான் காரணம். ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் கேட்டு, வழக்கு தொடர்ந்தார். கோர்ட், மறுத்து விட்டது. குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இரட்டை இலைக்கு பதில் குக்கரை சின்னமாக்கி விட முடிவெடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி ஆனது. அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.'நாங்கள், அ.ம.மு.க., என தனிக் குழுவாக இயங்குகிறோம். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு பொதுச் சின்னம் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.


[Image: gallerye_185906227_2242711.jpg]



'அ.ம.மு.க. பதிவு செய்யப்படாத அமைப்பு. பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான், பொதுச் சின்னம் ஒதுக்க முடியும். குக்கர் கேட்கின்றனர். அதை தர முடியாது. மேகாலயாவில், ஒரு கட்சி குக்கர் சின்னம் கேட்டுள்ளது. அது பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் அதற்குத் தான், குக்கர் தர முடியும்' என, தேர்தல் ஆணையம் கோர்ட்டில் தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ஆனாலும், சின்னம் என்பது தேர்தல் வெற்றிக்கு முக்கியமானது.

அதனால், அ.ம.மு.க.,வேட்பாளர்களுக்கு ஒரு பொது சின்னம் வழங்க பரிசீலனை செய்யுங்கள்' என, ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய அடுத்த கேள்வி சிக்கலானது. 'பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான், பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என விதிகள் தெளிவாக இருக்கும் போது, அ.ம.மு.க.,வை கட்சியாக பதிவு செய்யாதது ஏன்?' என்பது அந்த கேள்வி. 'கோர்ட் உத்தரவிட்டால், இன்று மாலைக்குள் ஆணையத்தில் பதிவு செய்து விடுகிறோம்' என்றார், தினகரன் வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி.உடனே குறுக்கிட்டார் ஆணைய வழக்கறிஞர். 'இன்று கட்சியை பதிவு செய்து, நாளையே சின்னம் கொடுக்க முடியாது. பதிவு செய்த, 30 நாட்களுக்கு பின்தான் சின்னம் குறித்து முடிவெடுக்க முடியும்' என்றார்.
அதற்குமேல் செல்ல விரும்பாத நீதிபதிகள், 'சீக்கிரம் பதிவு செய்து விடுங்கள்' எனக் கூற, 'செய்து விடுகிறோம்' என, தினகரன் வழக்கறிஞர் உறுதிமொழி கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ஆறு மாதத்துக்குள், அ.ம.மு.க.,வை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர். பொது சின்னம் கிடைக்கும் என்பதில், அ.மமு.க.,வுக்கு சந்தோஷம். ஆனால், 'நாங்கள் தான், அ.தி.மு.க.,' என, உரிமை கொண்டாட முடியாது என்பதில் வருத்தம். கட்சி நிர்வாகிகளிடம் பேசிய தினகரன், 'இதைத் தான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.
அ.தி.மு.க.,வை நாம் ஏன் வெட்டியாக துாக்கி சுமக்க வேண்டும்? இனிமேல் அந்த பிரச்னை இல்லாமல், நமக்கான கட்சியை முழுமையான கட்சியாக்கி சிறப்பாக நடத்தலாம்' என்றார். 'இரு கட்சிகளையும் இணைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.,வுக்கு அப்படி ஒரு பரிதாபம் உருவாகும். நம்மிடம் தான் வரவேண்டும். இணைந்தபின், பொதுக் குழுவை கூட்டி விவாதித்து, பெரும்பாலான உறுப்பினர்கள், அ.தி.மு.க., என்ற பெயரில் இயங்க முடிவெடுத்தால், அதற்கேற்ப செய்து கொள்ளலாம்' என்றும் சொல்லி விட்டார். அவர் நினைப்பது நடக்குமா என்பதை தேர்தல் முடிவு சொல்லும். இப்போதைக்கு, 'தினகரன் தொல்லை இனி இல்லை' என, அ.தி.மு.க.,வினர் கொண்டாடுகின்றனர்.
Like Reply
அஷ்வின்... இதுவும் ரூல் புக்லதான் இருக்கு!’ - பஞ்சாப் தோற்ற கதை #KKRvKXIP
மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கும் பொழுது ரஸல் அந்த பஞ்சாப் வீரர் யாரு, எவருன்னு தெரியல, ஆனா நன்றி என்றார். ரஸல் அதிகம் சிரித்திருப்பார்., அஷ்வின் இன்னும், அதிகமாய்க் கடுப்பாகி இருப்பார். ஆனால், எல்லாமே ரூல் புக்கில் இருக்கே அஷ்வின் என்ன செய்வது!
[Image: 153577_thumb.jpg]
கொல்கத்தாவுக்கும், பஞ்சாபுக்குமான போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இரு அணிகளுமே வென்று இருப்பதால், இன்று ஜெய்க்கும் அணி, இரண்டாம் வெற்றியைப் பதிவு செய்து முதலிடம் நோக்கி முன்னேறலாம் என்பதால், ஆர்வமாக இருக்குமா என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. காட்டடி மன்னர்கள் கெயில் ஓர் அணி, இன்னோர் அணியில் ரஸல். இருவரும் முதல் போட்டியிலேயே அடி வெளுத்து இருக்கிறார்கள் என்பதால், சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இருக்காது எனப் பலர் டிவி முன் ஆஜரானார்கள்.

ஷாரூக்கும், உஷா உதுப் சகிதம் தன் டீமோடு ஆஜராகிவிடப் போட்டி இனிதே ஆரம்பித்தது. டாஸ் வென்ற அஷ்வின் பௌவுலிங் தேர்வு செய்தார். தோற்ற அணியைக்கூட மாற்றாமல் விளையாடும் அணிகளுக்கு மத்தியில், முதல் போட்டியில் வென்ற அணியையே `கோலி'த்தனமாய் மாற்றங்கள் செய்து வைத்தார் அஷ்வின். பஞ்சாப் சார்பாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரது ஆரம்பத் தொகையான 20 லட்சத்திலிருந்து, அணிகள் வருணுக்குப் போட்டி போட அவரை இறுதியாக 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது பஞ்சாப். இந்த மிஸ்டரி ஸ்பின்னருக்கு பஞ்சாப் கொடுத்த விலை இவ்வளவா என்றால், 2015 கொல்கத்தா இன்னொரு மிஸ்ட்டரி ஸ்பின்னரான கரியப்பாவுக்கு அவரது ஆரம்ப விலையை விட 24 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டார். இருவரின் சாதனைகளையும் வேறொரு நாள் விமர்சிப்போம். ஆட்டத்துக்கு வருவோம்.

[Image: AP19086552320532_11409.jpg]
Like Reply
8.40 கோடி ரூபாய்க்கு 7 விதமாகப் பந்தை ஸ்பின் செய்யும் மிஸ்ட்டரி புகழ் வருண் சக்ரவர்த்தி தன் முதல் ஓவரை வீச வந்தார். நீ படிச்ச மிஸ்ட்டரி ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்பது போல், சீனியர் மிஸ்ட்டரி ஸ்பின்னரான சுனில் நரைன் அந்த ஓவரில் மூன்று சிக்ஸ் விளாசினார். நாங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சு என்பது போல், லின்னும் நரைனும் ஆட்டமிழக்க ராபின் உத்தப்பாவுடன், ஜோடி சேர்ந்தார் ரானா. `ஐ ஜாலி அஷ்வின் அண்ணா ஓவர்' என்பது போல் ஜாலி மோடுக்குச் சென்றார் ரானா. அவர் வீசும் எல்லா ஓவரிலும் சிக்ஸ். அதுவும் அஷ்வினின் நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸ். அஷ்வின் 3 ரன்களில் அரைசதம் வாங்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 4-0-47-0

11 பேர் தான் ஒரு போட்டிக்கு என்றாலும், ஒரு கேப்டன் அணியை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், டி20 போட்டிகளில் ஆறாவது பௌவுலர் ஆப்சன் இல்லாமல் கூட அணியைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அஷ்வின், கோலி போன்றவர்கள் உணர்வதே இல்லை. எல்லா பௌவுலர்களையும், ரானாவும் ராபியும் அடித்து வெளுக்க, ஆட்கள் பற்றாக்குறையால் பார்ட் டைமரான மந்தீப் சிங்கை பந்து வீச அழைத்தார் அஷ்வின். வாய் மேல் பலன். அந்த ஓவரிலும் 18 ரன்கள். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரானா, இறுதியாக 63 ரன்களுக்கு வருண் பந்தில் ஆட்டமிழந்தார். 63 (34b 2x4 7x6) SR: 185.29 . அடுத்து வர இருப்பது ரஸல் என்பதால், ரசிகர்கள் அவுட்டுக்கு சோக ஸ்மைலிக்கள் கூட போடவில்லை.



[Image: AP19086590217198_11125.jpg]
மூன்றாவது ஓவரில் ஷமியின் யார்க்கர் லைன் பந்துகளில் அத்தனை துல்லியம். உத்தப்பா, ரஸல் இருவருமே திணறினர். அந்த ஓவரின் ஐந்தாவது பால், மற்றுமோர் அட்டகாசமான யார்க்கர். ஒட்டுமொத்த பஞ்சாபும் துள்ளிக்குதிக்க, ரஸல் அவுட். ஆனால், அங்குதான் கர்மா என்பது மன்கட் விதி ரூபத்தில் வந்தது. போன மேட்ச் ரூல்ஸ்த்தான நான் ஃபாலோ பண்ணினேன் என தம்ஸ் அப் காட்டிய அஷ்வினுக்கு கிரிக்கெட்டின் மற்றுமொரு முக்கியமான விதி போட்டுத்தாக்கியது. இன்சைட் தி சர்க்கிளில் மூன்று வீரர்களை மட்டுமே அஷ்வின் நிறுத்தியிருந்தார், குறைந்தது நான்கு வீரர்களாவது இருக்க வேண்டும். (சொல்லவேயில்ல!) நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப வேண்டிய ரஸலுக்கு அடித்தது ஜாக்பாட். 17 ஓவரில் 163/3 என இருந்த ஸ்கோர் முற்றிலுமாக மாறியது இதற்குப் பிறகு தான். ரஸல்லின் ஸ்டிரைக் ரேட் ஸ்பின்னர்களிடம் 138, அதே பேஸ் பௌலர்களிடம் 180. ஆனால், அஷ்வின் பேஸர்களை மட்டுமே தொடர்ந்து இறக்கினார்.

2- 0- 7 -0 என இருந்த ஆண்டிரூயூ டையின் அடுத்த ஓவரில் 22 ரன்கள். ஷமியின் கடைசி ஓவரில் 25 ரன்கள். அதில் ஹாட்ரிக் சிக்ஸும் அடங்கும். மூன்றாவது ஓவரை அவ்வளவு ஃபெர்பெக்ட்டாக வீசிய ஷமி, இதில் வீசியதெல்லாம் ,மரண லெவல் ஓபிக்கள். எதற்கு அத்தனை புல் டாஸ்!. யார்க்கர் மிஸ்ஸாகிறது என்றாலும், அவன்தான் அடிக்கிறது தெரியுதுல்ல அப்புறம் மறுக்கா மறுக்கா ஃபுல் டாஸ் போடுவதெல்லாம்...

 ரஸல் அடித்த சில சிக்ஸ் எல்லாம் இது ஈடன் கார்டன் தானா என்பதை கேள்விக்குள்ளாக்கியது. இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான ஈடன் கார்டனில் அப்படிச் சின்ன சிக்ஸ் எல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் மயாங்க் அகர்வால் அடித்த லாங் லெக் 61 மீட்டர் என்பது வேறு கதை. அரைசதம் அடிக்கக்கூடாது என ஏதேனும் சபதம் எடுத்திருக்கிறாரோ என்னவோ, இதிலும் முதல் போட்டியை  (49* 19 பந்துகள் 4x4 4x6 ) போலவே 48 ரன்களுக்கு அவுட். 48 (17b 3x4 5x6) SR: 282.35 . இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் அடித்தது. கடைசி 19 பந்துகளில் 56 ரன்களை வாரி வழங்கியிருந்தது பஞ்சாப்.
[Image: SHAMI_11495.PNG]
ஷமி டூ ரஸல்
கெயில், அதிரடி சரவெடி ராகுல், சர்பராஸ், மயாங்க் அகர்வால் என ராயல் சேலஞ்சர்ஸின் பேட்டிங் ஆர்டர் அப்படியே பஞ்சாபுக்கு இறங்கியது. அங்கே அவர்கள் என்ன செய்வார்களோ அதையேதான் இங்கு செய்தார்கள். நம்மள வேற ரொம்ப நம்பறாய்ங்களோ என்னும் அதீத பொறுப்புணர்வுடன் இறங்கினார் கெய்ல். பஞ்சாபில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னுக்கு வெளியேற, ஒன் டவுனில் இறங்கினார் மயாங்க் அகர்வால். 
Like Reply
200 ரன்களை சேஸ் செய்யும் பொழுது கெயிலின் ரெக்கார்டு வேற கண் முன்னர் வந்துபோனது.

0 - Lost
0 - Lost
10 - Lost
76 - Lost
32 - Lost
21 - Lost

[Image: AP19086615059925_11365.jpg]
ரஸல் பந்துவீச்சில் கெயில் 20 ரன்களுக்கு, சர்பராஸ் கான் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, தேவைப்படும் ரன் ரேட் 13ஐ கடந்திருந்தது. மில்லரும், அகர்வாலும் எவ்வளவு அடித்தாலும் அது ரன்ரேட்டுக்குப் போதுமானதாக இல்லை. 2015 க்குப் பிறகு மயாங்க் அரைசதம் ஒன்றைப் பதிவு செய்தார்,. பஞ்சாபின் விஸ்வாச வீரரான டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் அடித்திருந்தார். மான்கட் பற்றி இவ்வளவு நடந்தும் ரஸல் பந்துவீசும் பொழுது, மயாங்க் அகர்வால் க்ரீஸைவிட்டு பல இஞ்சுகள் தள்ளித்தான் நின்று இருந்தார். கிரிக்கெட் என்பது ஒரு பேட்ஸ்மேன் ஆதிக்க விளையாட்டு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறோம்.
[Image: f540e35f-a724-4aba-b200-452d79a93edc_13333.jpg]
அரைசதம் எடுத்தபோதும்கூட, அவர் எந்தவித செலிப்ரேசனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபின் மற்றுமொரு விஸ்வாச மீட்பர் ஷான் மார்ஷ் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ்க்கு வில்லியர்ஸ் எப்படியோ, அப்படித்தான் பஞ்சாபுக்கு மில்லரும். Right man in the wrong team! 
[Image: AP19086571405374_11537.jpg]
உத்தப்பா, ரானா, மில்லர், அகர்வால் என நால்வர் அரைசதம் எடுத்திருந்தாலும் , ரஸலின் 48 ரன்கள்தாம் இந்தப் போட்டிக்கான வின்னிங் மொமன்ட். அதுவும் மூன்று ரன்களில் அவுட்டான ஒரு நபருக்கு இந்தப் போட்டியில் நடந்தது எல்லாம். மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கும் பொழுது ரஸல் அந்த பஞ்சாப் வீரர் யாரு, எவருன்னு தெரியல, ஆனா நன்றி என்றார். ரஸல் அதிகம் சிரித்திருப்பார்., அஷ்வின் இன்னும், அதிகமாய்க் கடுப்பாகி இருப்பார். ஆனால், எல்லாமே ரூல் புக்கில் இருக்கே அஷ்வின் என்ன செய்வது!
மேன் ஆஃப் தி மேட்ச் : ரஸல் 
ஆரஞ்சு கேப் : ரானா (131 ரன்கள் )
அதிக சிக்ஸ் : ரானா 10 (2 இன்னிங்ஸ்)
Like Reply
நோ-பால் அறிவிக்காததால் பரிதாபமாக தோற்ற ஆர்சிபி: “அம்பயரும் விளையாடியதால்” மும்பைக்கு முதல் வெற்றி: கோலி புதிய சாதனை
[Image: 5549811322518330783890834438849336071159808njpg]

பும்ராவி்ன் கடைசி 3 ஓவர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்காவின் கடைசி ஓவர் கடைசி பந்தில் நடுவர் தராத நோபால் ஆகியவற்றால் பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
பெங்களூருவில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி அணி சேஸிங் செய்யும்போது டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்த எந்த ஒரு போட்டியிலும் இதற்குமுன் அந்த அணி தோற்றது இல்லை. ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக டிவில்லியர்ஸ் 70 ரன்கள் நாட்அவுட் என்று இருந்தும் ஆர்சிபி அணி இப்போதுதான் தோற்றுள்ளது.
நோ-பால் சர்ச்சை
கடைசி ஓவரின் கடைசிப்பந்து, மலிங்கா கிரீஸைவிட்டு கடந்து வீசியவுடன் அது நோ-பால் என டிவி ரீப்ளேயில் தெரிந்தது. அதற்கு நோ-பால் வழங்காததால், ஆர்சிபி அணி பரிதாபமாக தோற்றது.
[Image: 556418307242011313077733946693521863344128npng]
 
உண்மையில் இந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட வேண்டியது, நடுவரின் தீ்ர்ப்பால் ஆட்டத்தின் முடிவே மாறிப்போனது. ஏறக்குறைய நடுவரும் மும்பை இந்தியன்ஸ் வீரராக கடைசிநேரத்தில் நடந்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது
Like Reply
பும்ரா ஆட்டநாயகன்
பும்ரா தன்னை மீண்டும் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக நிரூபித்துவி்ட்டார். தான் வீசிய கடைசி 3 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து , கோலி, ஹெட்மயர், கிராண்ட்ஹோம் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை நெருக்கடிக்கு தள்ளினார். டிவில்லியர்ஸை நிற்கவைத்து படம் காட்டினார் பும்ரா. கடைசி நேரத்தில் பும்ரா வீசிய கட்டுக்கோப்பான பந்துவீச்சு வெற்றியை ஆர்சிபி அணிக்கு மேலும் சிக்கலாக்கியது. ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
கோலி சாதனை
விராட் கோலி இந்த போட்டியில் 46 ரன்கள் சேர்த்தபோது, ஐபிஎல் வராலாற்றில் 5 ஆயிரம் ரன்கள் சேர்த்த 2-வது வீரர் எனும் பெருமையைப் ெபற்றார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை எட்டியநிலையில் கோலி 157 இன்னி்ங்ஸ்களில் எட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், டிவில்லியர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம்  4  ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார்.
[Image: 555564293203126519613452973641008480256000njpg]
 
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டீகாக் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்த்து சைனி, உமேஷ், சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். பவர்-ப்ளேயில் 52 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
7-வது ஓவரை சாஹல் வீசியபோது முதல் விக்கெட்டை இழந்தது மும்பை அணி. க்ளீன் போல்டாகிய டீகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யாதவ், ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை கூட்டினர்.
ரோஹித் ஆட்டமிழப்பு
உமேஷ்யாதவ் வீசிய 11-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் (8பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்து வெளியேறினார். அடுத்து யுவராஜ் சிங் களமிறங்கினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது
Like Reply
யுவராஜ் சிக்ஸர் மழை
மொயின் அலி வீசிய 13-வது ஓவரில் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தார். சாஹல் வீசிய 14-வது ஓவரில் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதனால், மீண்டும் 6 சிக்ஸர்களை அடிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸருக்கு யுவராஜ் சிங் முயற்சித்த நிலையில் சிராஜிடம் பவுண்டரியில் கேட்சானது. யுவராஜ் சிங் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பொலார்ட் களமிறங்கினார்.
[Image: 557192194514878855923246399214345749790720njpg]
 
நிதானமாக பேட் செய்து வந்த யாதவ் 38 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹலின் 16—வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குர்னல் பாண்டியா முதல் பந்தை நேராக சாஹலிடம் அடிக்க அதை அவர் தவறவிட்டார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் பொலார்ட் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அதை ஹெட்மயர் லாவகமகப் பிடித்தார். பொலார்ட் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்
உமேஷ் யாதவ் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸருக்கு முயற்சித்த குர்னல் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் சைனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.
மார்கண்டே வந்து ஹர்திக்குடன் இணைந்தார். கடைசி 2 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்து சிக்ஸர், பவும்டரி விளாச மீண்டும் ரன்ரேட் உயரத் தொடங்கியது. சிராஜ் வீசிய கடைசி ஓவரில் மார்கண்டே 6 ரன்களில் விக்கெட் கீப்பர் பர்தீப் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகள் அடங்கும்.
 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 187  ரன்கள் சேர்த்தது. பெங்களூரு தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், உமேஷ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
188ரன்கள் இலக்கு
188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பர்தீவ் படேல், மொயின் அலி களமிறங்கினர். மெக்லனஹன் வீசிய முதல் ஓவரில் படேலின் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தனர். மல்லி்ங்கா தனது முதல் ஓவலிலே யார்கரையும், பவுன்ஸரையும் வீசி திணறடித்து 3 ரன்கள் மட்டுேம விட்டுக்கொடுத்தார். மெக்லஹன் வீசிய 3-வது ஓவரில் படேல் ஒரு பவுண்டரி விளாச, மொயின் அலி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து சிதறடித்தார்.
ரன்வேகத்தை கட்டுப்படுத்த பும்ரா வரவழைக்கப்பட்டார். 2-வது பந்தில் மொயின் அலி 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த விராட் கோலி, வந்தவேகத்தில் பும்ரா ஓவரில் “ஹாட்ரிக் பவுண்டரி” விளாசி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
ஹர்திக் பாண்டியா வீசிய 5-வது ஓவரி்ல் கோலி இரு பவுண்டரிகளை தள்ளினார். குர்னல் பாண்டயிா வீசிய 6-வது ஓவரில் பர்தீவ் படேல் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.
மார்கண்டே வீசிய 7-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்தீவ் கடைசி பந்தில் போல்டாகி 31 ரன்களில்(ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
அடுத்து டிவில்லியர்ஸ் வந்து கோலியுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர். மார்கண்டே வீசிய 11-வது ஓவரில் கோலி பவுண்டரியும், டிவில்லியர்ஸ் சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தனர். ஓவருக்கு 10 ரன்கள் என்ற நிலையில்  சென்றது.
14-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இருந்துதான் திருப்புமுன் ஏற்பட்டது.
கோலி 46 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்விக்கெட் திசையில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் 49 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஹெட்மயர் களமிறங்கி, டிவில்லியர்ஸுடன் இணைந்தார். அதன்பின் டிவில்லியர்ஸ் அதிரடியில் இறங்கினார்.
ஹர்திக் பாண்டியா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரிகளும்,மல்லிங்கா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள்,ஒருபவுண்டரியும் விளாசி டிவில்லியர்ஸ் வானவேடிக்கை நிகழ்த்தினார்.
மீண்டும் பும்ரா வந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 5 ரன்களில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து கிராண்ட்ஹோம் களமிறங்கினார். இந்த ஓவரிலும் ரன்களை வழங்காமல் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச, டிவில்லியர்ஸ் அதை நொறுக்கி எடுத்தார். மீண்டும் ஒருபவுண்டரி, 2 சிக்ஸர்களை டிவில்லியர்ஸ் விளாசினார்.
18-வது ஓவரை பும்ரா வீச வந்தபோது, கிராண்ட் ஹோம் விக்கெட்டை வீழ்த்தினார். துபே களமிறங்கினார். இந்த ஓவரில் ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியாக பும்ரா பந்துவீசினார். டிவில்லியர்ஸும் ரன் சேர்்க்க திணறினார். பும்ரா கடைசியாக வீசிய 3 ஓவரிலும் தலா ஒரு விக்கெட்டையும், 8 ரன்களையும் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
சர்ச்சை கடைசி ஓவர்
கடைசி ஓவரை மல்லிங்கா வீசினார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட துபே சிக்ஸர் அடித்து ரசிகர்களை  உற்சாகப்படுத்தினார். 2-வது பந்து முதல் 5-வது பந்துவரை சிங்கல் ரன்கள் எடுக்க 10 ரன்கள் கிடைத்தது. மல்லிங்கா தனது அனுபவமான பந்துவீ்ச்சில் ஷாட்களை அடிக்கவிடாமல் ஸ்விங்குகளையும், யார்கர்களைும் வீசி திணறடித்தார்.
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டிரா, அல்லது தோல்வி என்ற நிலையில் இருந்தது.
நோ-பால்
மல்லிங்கா வீசிய கடைசி பந்தில் ரன்ஏதும் அடிக்கமுடியாததால், பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆனால், மல்லிங்கா தனது கடைசி பந்தை கரீஸை விட்டு வெளியே சென்று வீசி நோபாலாக வீசி இருந்தார். இதை நடுவர் பார்த்தும் இதற்கு மூன்றாவது நடுவருக்கு கேட்கவில்லை. நோபால் என்பது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தும் அதை நடுவர் அறிவிக்காததால், பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
ஒருவேளை நோபால் அறிவிக்கப்பட்டு, ப்ரீஹிட் வழங்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். இதை கவனித்த கேப்டன் கோலி கோபத்துடன் வந்து மைதானத்தில் வாதிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ரோஹித் சர்மா தனக்கு இது தெரியாது என்று வாதிட அங்கு ஒரு நாடகம் அரங்கேறியது.
20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணி 6 ரன்களில் தோல்வி அடைந்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்களுடனும்(41பந்துகள், 6 சிக்ஸர், 4பவுண்டரி) துபே 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Like Reply
கோவை 7 வயது சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம்; அதிர்ச்சி தகவல்
[Image: 201903281912345596_Coimbatore-7-year-old...SECVPF.gif]

கோவை,



கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளாள்.


கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கிவரச்சொல்லி கடைக்கு அனுப்பிவைத்தார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.
அந்த சிறுமியை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின் தாய் தடாகம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். அவர்களும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நள்ளிரவு 1 மணி வரை குழந்தையை தேடிப்பார்த்தனர். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் தோழிகளின் வீடுகளுக்கு சென்று இருக்கலாம். நேரமாகிவிட்டதால் அங்கேயே தூங்கியிருக்கலாம். எனவே காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றவாறு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், சிறுமியின் வீடு அருகே இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சந்து பகுதியில் மறுநாள் காலை 5.30 மணியளவில் சிறுமியின் உடல் காயங்களுடன் டி-சர்ட் மூலம் சுற்றிவைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சிறுமியின் தாய்க்கு தகவல் கிடைத்தது. பதறிப்போய் அலறியடித்து அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

பின்னர் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அந்த சிறுமியின் உடலில் உதடு மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இதனால் அந்த சிறுமி கடத்தப்பட்டு, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும், சிறுமியின் சாவுக்கு நீதிகிடைக்க வேண்டும், என்று கூறி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  குழந்தையின் வாய், மூக்கில் துணி வைத்து இறுக்கமாக மூடப்பட்ட தகவலும் எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Like Reply
விபத்தில் 157 பேர் பலி எதிரொலி: போயிங் விமான நிறுவனம் மீது வழக்கு - அமெரிக்காவில் தாக்கல்



[Image: 201903300147096135_157-killed-in-crash-C...SECVPF.gif]

வாஷிங்டன், 

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 6 நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 157 பேர் பரிதாபமாக இறந்தனர்.



இந்த விபத்து உலகை உலுக்கியது. அதைத் தொடர்ந்து இந்த விமானங்கள் பறக்க உலக நாடுகள் தடை விதித்தன.

இந்த விமான விபத்து தொடர்பாக அமெரிக்காவில் சிகாகோ நகர மத்திய கோர்ட்டில் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த ஜேக்சன் முசோனி என்பவர், போயிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், விபத்துக்குள்ளான விமானத்தில் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தாக்கலாகி உள்ள முதல் வழக்கு இதுதான். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Like Reply




Users browsing this thread: 133 Guest(s)