Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டாக்டர் சொல்வதை கேட்டுத்தானே ஆகவேண்டும். டாக்டர் சுப்பிரமணியன் சொன்னபடி தேவி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு வந்தார் குமாரசாமி.
மதியம் 3:30 மணியளவில், தலையில ஓங்கி அடித்துக்கொண்டு, “மகனே மகனே” என்று அழுதபடி ஓடிவந்தார் டாக்டர் சுப்பிரமணியன்.
“எதுக்குப்பா அழுவுறீங்க?” என்று பதட்டத்துடன் கேட்டார் குமாரசாமி.
குமாரசாமியின் தோள்மீது கையைப் போட்டவர், “நல்ல வேளை உனக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷன் பண்ணல. ஆபரேஷன் பன்றதுக்கு ஓப்பன் பண்ணியிருந்தா உன் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாதுடா மகனே… இந்நேரம் நீ டெட் ஆகியிருப்படா மகனே” என்று ஓ….வென்று அழுதவரை சமாதானப்படுத்தினார் குமாரசாமி.
டாக்டர் குமாரசாமியின் பக்கத்தில் இன்னொருவர் நின்றுகொண்டிருந்ததைப்பார்த்த குமாரசாமி,
‘யாருப்பா இது?’ என்று கேட்பதற்குள் டாக்டர் சுப்பிரமணியனே அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.
“என்னோட க்ளாஸ்மெட் இவன். 30 வருடத்துப்பிறகு இன்னைக்குத்தான் பார்த்தேன். ஆர்டிஃபிஷியல் கால் சேல்ஸ் பண்றவன். உனக்காக இவனை கையோட கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். இவன்கிட்ட ஒரு 10,000 ரூபாய் கொடு. காலிபர் ஷூ செஞ்சு கொடுப்பான். அதைவெச்சு நீ நடக்கலாம்” என்று சொல்ல… குமாரசாமியின் இதயத்தில் இடிவிழுந்ததுபோல் இருந்தது.
“இவ்ளோ பணம் செலவழிச்சும் இனிமே என்னால ஸ்டிக் இல்லாம நடக்கமுடியாதாப்பா? எனக்கு இனிமே வேற ஆபரேஷனே கிடையாதா? ஆர்டிஃபிஷியல் கால் மூலமாத்தான் நடக்கணுமா?” என்று டாக்டர் சுப்பிரமணியனிடம் பரிதாபக் கேட்ட குமாரசாமி டாக்டரின் நண்பர் பக்கம் திரும்பினார்.
“10,000 ரூபாய் பணம் வேணும்னா வெச்சுக்கோங்க. எனக்கு, எந்த காலும் வேணாம்… நான் கிளம்புறேன்”என்றார் வேதனையோடு.
“இப்போ, உன் கால் இருக்குற நிலைமைக்கு நீ எங்க போனாலும் ஆபத்துடா”
“பரவாயில்லப்பா… நான் ஏழுமலையானுக்குபோயி அங்கப்பிரதட்சணைப்பண்ணப்போறேன். எல்லாம் என் விதி” என்று சொல்லிட்டு கிளம்பினார்.
“இனிமே, இசபெல்லா வேணாம். வீட்டுக்கு வந்துடு” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
2012 ஆகஸ்டு -8 ந்தேதி மந்தவெளி…
பத்து வருடங்கள் ஓடிவிட்டாலும் கால் நடக்க முடியாத குமாரசாமி முடியாமல் பல்வேறு கொடுமைகளை வேதனைகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார். குடும்பத்திலும் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது.
மனைவியும் மகளும் வீட்டில் இல்லை. தூக்கமே இல்லை. ஒரு கட்டத்துக்குமேல் கால் யானைக்கால் சைஸுக்கு வீங்கிவிட்டது. முகமெல்லாம் கருத்துப்போனது. கண்ணாடியில் முகத்தை பார்க்கவே குமாரசாமிக்கு பயமாக இருந்தது. மனவலி ஒருபக்கம் இடுப்பெலும்பு பகுதிவலி இன்னொருபக்கம் என முடியாமல் சென்னை மந்தவெளியில் இருக்கும் டாக்டர் சுப்பிரமணியனின் வீட்டுக்கு கிளம்பினார் குமாரசாமி.
மதியம் 1 மணி இருக்கும். கிளினிக்குற்குள் நுழைந்த குமாரசாமியை அதிர்ச்சியுடன் பார்த்தார் டாக்டர் சுப்பிரமணியின் மகன் டாக்டர் மாணிக்கவேலாயுதம்.
“என்னண்ணா, இவ்ளோ டேஞ்சராகி வந்திருக்கீங்க?” டாக்டர் சுப்பிரமணியன் அப்பா என்றால் அவரது மகனுக்கு குமாரசாமி அண்ணன் என்ற அர்த்தத்தில் அப்படிக்கேட்டார் டாக்டர் மாணிக்கவேலாயுதம்.
“அத நம்ப டாடிக்கிட்டதான் கேட்கணும் தம்பி. டாடியை கூப்பிடுங்க” என்றார் கெஞ்சலாக.
”அவர் யூ.எஸ். ஏ. போயிருக்காருண்ணா”
“என்னோட பிரச்சனை அப்பாவுக்குத்தான் தெரியும். அப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்க தம்பி”
அப்பாவிடம் பேசிவிட்டு வந்த டாக்டர் மாணிக்கவேலாயுதம், “டாடிக்கிட்ட பேசிட்டேன். டோண்ட் ஒர்ரி… சில டேப்ளட்ஸ் கொடுக்க சொல்லியிருக்காங்க. கோவ்ச்சுக்காதீங்கண்ணே. உங்களை டச் பண்ணி ட்ரீட்மெண்ட் பண்ணமுடியாத அளவுக்கு ஹை டேஞ்சர்ல இருக்கீங்க. மேல போயி ரெஸ்ட் எடுங்க” என்றவர் மாத்திரைகளைக்கொடுத்து சாப்பிடச்சொன்னார். மறுத்த, குமாரசாமி மாத்திரைகளை மட்டும் வாங்கிக்கொண்டு மரண வேதனையுடன் மதுரைக்கு திரும்பினார்.
2016 ஜனவரி- 1 காலை 5:30 மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம்…
.
தங்குவதற்கு வீடுகூட இல்லாமல் பேருந்துநிலையத்தில் படுத்துக்கிடந்த குமாரசாமிக்கு ஒன் பாத்ரூம் வருவதுபோல் இருந்தது. ஓரமாக ஒதுங்கியபோது திடீரென்று சிறுநீர் வருவதற்குபதில் ஏதோ ஒரு ‘ப்ளாஸ்டி நாப்’ வெளியில் வர ஆரம்பித்ததைப்பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார். ஒருநிமிடம் அவருக்கு ஒன்றுமே புரியாமல் நிலைகுலைந்துபோனார்.
அதை பிடிச்சு லேசா இழுத்ததும் தலையில் ஆணி அடித்ததுபோன்று சுர்ர்ர்ரீரீர் என மூளைவரைக்கும் அப்படியே இறங்கியது. உடம்பெல்லாம் சிலிர்த்துப்போனது. சாதாரண வலி அல்ல… மரண வலி. ரோஸ் கலர் ட்யூப் வெளியில் வந்து நின்றது. வலி பொறுக்கமுடியாமல் மதுரை மீனாட்சி மிஷனுக்கு ஓடினார். அங்கு, குமாரசாமியின் ஸ்கூல்மெட் நண்பர் டாக்டர் கண்ணன் கடவுளைப்போல் நின்றுகொண்டிருந்தார். குமாரசாமியைப் பார்த்துவிட்டு ஓடிவந்த டாக்டர் கண்ணன்,
“என்னடா ஆச்சு?” என்று கேட்க, குமாரசாமி அதைக் காண்பிக்க அதிர்ந்துபோய் யூராலஜி டாக்டர் நாகராஜனிடம் (ஆரப்பாளையம் கிராஸ் ரோடு) அனுப்பிவைத்தார். அப்போதான், தெரிந்தது குமாரசாமியின் உடம்பில் யூரினரி ட்யூப் இருந்தது என்கிற அதிர்ச்சிக்குரிய விஷயம்.
2001-ல் இசபெல்லா மருத்துவமனையில் ‘மகனே மகனே’ என்று சொல்லிக்கொண்டு அன்பையும் பாசத்தையும் பொழிந்த பிரபல டாக்டர் சுப்பிரமணியன் ஆபரேஷன் செய்தாரே அப்போது உடலுக்குள் வைத்து தைக்கப்பட்ட ட்யூப்தான் அது. முதல்முறை ஆபரேஷன் செய்தபோது ‘யூரினரி ட்யூபை எங்க வெச்சேன்னு தெரியலையே?’என்று தேடியது குமாரசாமியின் நினைவுக்கு மின்னல் வேகத்தில் வந்துபோனது.
‘அப்படின்னா, இவ்ளோநாளும் மகனே மகனேன்னு பேசினதெல்லாம் இந்த தப்பை மறைக்கத்தானா?’என்று அதிர்ச்சிமேல் அதிர்ச்சிடைந்தார் குமாரசாமி.
2016 சிலமாதங்கள் கழித்து….
சென்னைக்கு வந்தார். டீ வாங்கிக்குடிக்கக்கூட கையில் காசு இல்லை. பசி ஒருபக்கம்… மனைவி, பிள்ளைகள் எல்லாம் விட்டுப்போன மனவலி இன்னொரு பக்கம். இதையெல்லாம், தாண்டி கால் நடக்கமுடியாத வலி. எல்லா, வலிகளையும் தாங்கிக்கொண்டு அலைந்தார் குமாரசாமி.
ஒருகட்டத்தில் இராயப்பேட்டை ஜி.ஹெச்சுக்கே சிகிச்சைக்கு வந்தார். மூன்று நாட்கள் கட்டுப்போட்டவர்கள், ‘உண்மைய சொல்லுங்க… இது, சாதாரணமா அடிபட்ட காயமெல்லாம் இல்ல. என்ன ஆச்சு?” என்று கேட்டார் இராயப்பேட்டை ஜி.ஹெச் டாக்டர்.
அப்போதான், வேற வழியில்லாமல் டாக்டர் பாலசுப்பிரமணியனிடம் ட்ரீட்மெண்டுக்குப்போய் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.
“அந்த ஆளா? இங்கதான், டாக்டரா இருந்தாரு. சரியான லஞ்சப்பேர்வழியாச்சே” என்று சொல்ல குமாரசாமியின் மனவலி இன்னும் ரணவலியானது. மற்றவர்களும் அவரைப்பற்றி சொன்னதும் ஆபரேஷன் செய்த இசபெல்லா மருத்துவமனைக்குச் சென்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“உங்களுக்கு மெடிக்கல் நெக்லிஜென்ஸ் நடந்தது உண்மைதான். ஆனா, எங்க மருத்துவமனையில் நீங்க அட்மிட் ஆகல. டாக்டர் சுப்பிரமணியன் தன்னோட கெஸ்ட்டுன்னு சொல்லி அட்மிட் பண்ணி அவரேதான் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்காரு. சோ… நீங்க அவர்மேல சட்டரீதியா என்ன கம்ப்ளைண்ட் பண்ணணுமோ பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பினார்கள். அதுமட்டுமல்ல, ஜெர்மனியிலிருந்து இரண்டு டாக்டர்களை ஸ்பெஷலாக வரவழைப்பதாக 2 ½ லட்சரூபாய் ஃப்ளைட் டிக்கெட்டிற்கான பணத்தை வாங்கியது சீட்டிங் என்பது தெரியவந்தது. காரணம், வழக்கம்போல் அந்த மருத்துவமனை நிர்வாகத்தால் கெஸ்டாக அழைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
கோபம் கொப்பளிக்க மந்தைவெளியில் இருக்கும் டாக்டர் சுப்பிரமணியனின் வீட்டுக்குப்போனார் குமாரசாமி.
“என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே?”என்று கேட்டார்.
”என்னாச்சு?” என்று கேஷுவலாக கேட்டார் டாக்டர் சுப்பிரமணியன்.
“முதல் முதலில் ஆபரேஷன் பண்ணிட்டு யூரினரி ட்யூப்பை காணோம்னு தேடிக்கிட்டிருந்தீங்களே ஒண்ணுல்ல… அந்த டியூப் 17 வருஷம் என் வயித்துக்குள்ளதான் இருந்தது. இதனால, என் காலும் வெளங்காம போச்சு. என் வாழ்க்கையும் வெளங்காம போச்சு. என்னைய காப்பாத்துங்கப்பா… தப்பு செஞ்சது நீங்க” என்று கதறினார் குமாரசாமி.
எந்தவித எதிர்ப்பும் கோபமும் காண்பிக்காமல்,
“பெட்டுல ஏறி படு” என்றார் டாக்டர் சுப்பிரமணியன்.
படுத்ததும் டிஞ்சர் ஊற்றி க்ளீன் பண்ணி ஆயின்மெண்ட் தடவி கட்டுப்போட்டார்.
மூன்று நாட்கள் கட்டுப்போட்டு முடிந்ததும், தம்பிக்கிட்ட போ என்று தனது மகன் டாக்டர் மாணிக்கவேலாயுதத்திடம் அனுப்பிவைத்தார். ஐந்து நாட்கள் ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுப்பிரமணியனின் மகன் டாக்டர் மாணிக்கவேலாயுதம்,
“அண்ணே… வேஸ்டா அலைய வேணாம். நீங்களே தண்ணிய ஊத்தி கழுவிட்டு துணிய ஊற்றி சுத்திடுங்க” என்று அனுப்பிவைக்க… புண்ணும் ஆறவில்லை. இவ்வளவையும் செய்துவிட்டு எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று தீப்பிழம்பாய் மாறினார் குமாரசாமி.
2016 ஜூன் – 17….
டாக்டர் சுப்பிரமணியனின் அறைக்கதவு ஓரமாக காத்திருந்தார் குமாரசாமி. உள்ளிருந்து, நோயாளி ஒருவர் கன்சல்டிங் முடித்துவிட்டு வெளியே வந்ததும் வாக்கிங் ஸ்டிக்கை வைத்து தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்.
“டேய் சுப்பிரமணியா.. இப்படியாடா ஏமாத்துவ? இத்தன வருஷமா அப்பா அப்பான்னு கூப்ட்டுக்கிட்டு இருந்தேன். என்னை இப்படி பண்ணிட்டியேடா. ட்ரீட்மெண்டுக்கு பையனப்பாருன்னு சொல்லி அனுப்பின. அவனும் என்னை அனுப்பிவிட்டுட்டான். என் வாழ்க்கையே போச்சு. நாளைக்கு நான் வரும்போது சரி பண்ணலைன்னா. நீ இல்ல சுப்பிரமணி… ஜாக்கிரத சுப்பிரமணி…. உண்மை தோற்காது” என்று சொல்லிட்டு வந்துவிட்டார்.
மறுநாள்…
மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்ஸிடம் முறையிட்டார் குமாரசாமி. ஏற்கனவே, மதுரையில் தனது மனைவி மற்றும் சொத்து பிரச்சனைக்காக புகார் கொடுக்கும்போது துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அறிமுகம் என்பதால் ‘புகாருடன் வாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று அனுப்பிவைத்தார் துணை ஆணையர்.
ஆனால், முதல்முதலில் டாக்டர் சுப்பிரமணியனை அறிமுகப்படுத்திவைத்த நண்பன் ஸ்ரீராமின் அண்ணனோ, “நீங்க இருக்கிற நிலைமைக்கு போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுன்னு அலைஞ்சி என்ன பண்ணமுடியும்? இன்னும் ஒரு தடவ டாக்டர் சுப்பிரமணியனை நேர்ல போயி பாருங்க. உங்களுக்கு அவர் ஏதாவது உதவி செய்ய சான்ஸ் இருக்கு”என்றார்.
20…ந்தேதி டாக்டர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்றார் குமாரசாமி. சில நிமிடங்களிலேயே டாக்டரின் அறைக்கு அழைத்துசென்றார்கள். டாக்டர் சுப்பிரமணியன் தலையை குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தார். அப்போதுதான், தெரிந்தது அபிராமிபுரம் காவல்நிலையத்திலிருந்து வந்த எஸ்.ஐயும் கான்ஸ்டபிளும் வந்து குமாரசாமியை மிரட்ட ஆரம்பித்தார்கள்.
“இஸ் நாட் ஏ ரைட் சொலியூஷன் சார். என் உடம்புக்குள்ள யூரினரி ட்யூபை வெச்சு ஆபரேஷன் பண்ணினது ஒருபக்கம் இருக்கட்டும். அது, அவர் வேணும்னே பண்ணியிருக்கமாட்டார். ஆனா, ஹிப் போர்ன் ரீப்ளேஸ்மெண்ட் பன்றதா 1 ½ லட்ச ரூபாய் வாங்கிக்கிட்டு ரீப்ளேஸ்மெண்ட் பண்ணல. அப்புறம், எனக்காக ஜெர்மன் டாக்டரை வரவழைக்கிறேன்னு சொல்லி ஃப்ளைட் டிக்கெட்டுக்காக 2 ½ லட்ச ரூபாய் வாங்கின லஞ்சப்பணத்தை மட்டும் திருப்பிக்கொடுக்க சொல்லுங்க சாப்பாட்டுக்கூட என்கிட்ட காசு இல்ல” என்று அபிராமிபுரம் போலிஸாரிடம் கதறிப்பார்த்தார் குமாரசாமி.
எதுவுமே கிடைக்காமல் விரட்டப்பட்டு அழுதுகொண்டே வெளியில் வந்தவரை அபிராமிபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துசென்று போலிஸார் மிரட்டுகிறார்கள். டாக்டரின் தவறை குறிப்பிட்டு எழுதிய குமாரசாமி, காவல்துறையை வைத்து மிரட்டுகிறார் டாக்டர் சுப்பிரமணியன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார்.
பிறகு, தற்கொலைக்கு முயன்று படகு ஓட்டுநர்களால் காப்பாற்றப்படுகிறார். பிறகு, சென்னையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர் நக்கீரன் புத்தகத்தை வாங்கி அலுவலகத்தை தொடர்புகொண்டு டாக்டர் சுப்பிரமணியன் குறித்து புகார் கொடுக்க… நாம் விசாரித்தபோது அவர் கொடுத்த வாக்குமூலம்தான் இது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குற்றச்சாட்டு குறித்து, சென்னை மந்தவெளியைச்சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “அவருக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், அதில் சிக்கல் இருக்கிறது என்று வெளிநாட்டு டாக்டர்கள் சொன்னதால் ஆபரேஷனை தவிர்த்துவிட்டோம்” என்றவரிடம், 2001- முதல் முதலில் ஆபரேஷன் செய்தீர்கள் அல்லவா? அப்போது, யூரினரி ட்யூபை வைத்து தைத்துவிட்டீர்களா? என்று நாம் கேட்டபோது, “நான், ஆர்த்தோ டாக்டர் எனக்கும் யூரினரி ட்யூபுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதனால், நான் அப்படிப்பட்ட ஒரு ஆபரேஷனை செய்யவில்லை. இதற்குமுன் விபத்து ஏற்பட்டபோது அப்படி வைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல், வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஃப்ளைட் டிக்கெட் பணமெல்லாம் அவர் அனுப்பவில்லை. அவரும் நானும் அப்பா-மகன் என்று பழகவில்லை. அவர் என்னை டாக்டரைய்யா என்றுதான் அழைப்பார். குடும்பச்சூழ்நிலை மற்றும் பிசினஸ் காரணமாக அவர் இப்படியாகிவிட்டார். அதனால், இப்படி என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார் தனது தரப்பு விளக்கமாக.
மெடிக்கல் நெக்லிஜென்ஸ் என்பது மருத்துவ அலட்சியம். எவ்வளவு சிறந்த மருத்துவர்களுக்கும் மருத்துவ அலட்சியத்தின் மூலம் நோயாளிக்கு ஆபத்து ஏற்படலாம். அது, நிரூபிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை மருத்துவர் கொடுக்கவேண்டும். ஆனால், குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் வெறும் மெடிக்கல் நெக்லிஜென்ஸ் மட்டுமல்ல, நம்பி வந்த நோயாளியிடம் பணமோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதுதான். இதனால், தன்னுடைய வாழ்க்கையையே இழந்து கோடீஸ்வரனாக இருந்தவர் பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதுகுறித்து, சுகாதாரத்துறையும் மருத்துவக்கவுன்சிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் மட்டுமல்ல… பணத்தையும் இழந்து பல குமாரசாமிகள் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...? சூப்பர்ப்பு.. !!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. தொடரின் பைனல் போட்டி சென்னையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல்லில் இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் முடிந்துவிட்டது. சென்னை அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.
[color][size][font]
அட்டவணை வெளியீடு
வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எஞ்சிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
நாக் அவுட் அட்டவணை
பிசிசிஐ, நிர்வாகிகள் கூட்டத்தில், லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிட்டது. மே 5ம் தேதி வரையிலான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாக் அவுட் சுற்றுப் போட்டிக்கான அட்டவணையை இன்னும் வெளியிட வில்லை.[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மே 12ம் தேதி இறுதிப்போட்டி
இந்நிலையில் சென்னையில் வரும் மே 12ல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பைனல் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதேபோல நாக் அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி மே 7ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
[img=512x288]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெளியேற்றுதல் சுற்று
எலிமினேட்டர் போட்டி மே 8ம் தேதியும் நடைபெறும் என்று தெரிகிறது.மே 10ம் தேதி 2வது குவாலிபயர் போட்டியும் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாகப்பட்டினம் தயார்
தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டிகள் வேறு இடத்தில் நடத்த முடியாத நிலை உருவானால், விசாகப்பட்டினத்தை தயாராக வைத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் ஐபிஎல் ஜூரம் இப்போதே தொடங்கிவிட்டது என்று கூறலாம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
20-03-2019, 11:14 AM
(This post was last modified: 20-03-2019, 11:14 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி போட்ட புதிய கட்சி !! கமல்ஹாசன் அதிரடி !!
மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இதில் ஒரு மக்களவைத் தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் மூன்றிலும் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுவதற்கு மக்கள் நீதி மையம் வாய்ப்பளித்துள்ளதாக செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என்றும், .இந்தக் கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமாக பேட்டரி டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுக் கட்சி செ.கு,தமிழரசன் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை அவர் சொல்வதெல்லாம் கேட்டுக் கொண்டு அவருக்கு முழு ஆதரவு அளித்து வந்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிஎஸ்என்எல் முறைகேடு.. மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கை நான்கு மாதங்களுக்குள் சிபிஐ நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்றும் ஹைகோர்ட் காட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பெறப்பட்டதாகவும், இதனால், மத்திய அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகவும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இதுதொடர்பாக, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலர் கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
இந்தக் குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவை புதிதாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கிய ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்னும் 4 மாதங்களுக்குள் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் மாறன் சகோதரர்களை கைது செய்து விசாரிக்கலாம் என்றும் கூறினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
``விஜய் சேதுபதி கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கேன்'' - பச்சையம்மாள்!
`எங்கயாவது, மக்கள் கொத்தடிமையா இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்களைக் கூட்டிட்டு வர வண்டி புடிக்க ரொம்ப சிரமப்படுவோம். அந்த நேரம் பார்த்து கையில காசும் இருக்காது. இனிமே அந்தக் கவலை இல்லை. எல்லாம் விஜய் சேதுபதி சாரால தான். இப்பக்கூட சார் கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கோம் '' உற்சாகமாகப் பேசுகிறார், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பச்சையம்மாள்.
பழங்குடிப் பெண்ணான பச்சையம்மாள், பல வருடங்களாகக் கொத்தடிமையாக இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த 2012-ம் ஆண்டு மீட்கப்பட்டவர். தான் மீண்டதைப்போல இந்த அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களையும் மீட்க வேண்டும் என ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி களப்பணி செய்துவருகிறார். தன் அபார முயற்சியால், இதுவரை கொத்தடிமையாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு, ரேஷன் கார்டு வாங்கித்தருவது, ஆதார் கார்டு பெற்றுத் தருவது போன்ற சமூகப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இந்த ஆண்டில், அவள் விகடன் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தமிழகத்தின் தலைசிறந்த 10 பெண்களில் பச்சையம்மாளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பச்சையம்மாள். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியிடம், கொத்தடிமையாக இருக்கும் மக்களை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், தன் தேவைகளைப் பற்றியும் உரையாடியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று திடீரென நடிகர் விஜய் சேதுபதியிடமிருந்து ஒரு காரும், ஐந்து லட்சம் பணமும் வந்து சேர்ந்திருக்கிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மகிழ்வின் எல்லையில் இருந்த பச்சையம்மாளிடம் இதுகுறித்துப் பேசினோம்,
``டிவி நிகழ்ச்சியில பேசும்போது உன்னோட கனவு என்னம்மான்னு விஜய் சேதுபதி சார் கேட்டாரு. சொந்தமா ஒரு ஆபீஸ் கட்டணும்; அதுல எங்க துரை சார், சம்பத் சார், சின்னா சார் மூணு பேருக்கும், சேர், டேபிள், கம்ப்யூட்டர் போடணும். அந்த கம்ப்யூட்டர்ல நாங்க மீட்டெடுத்துட்டு வர்ற மக்களப் பத்தி தகவல்களை வச்சுக்கணும். அதேபோல, கொத்தடிமையா மக்கள் எங்கயாவது இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்கள கூட்டிட்டு வர வாடகைக்குத்தான் கார் புடிப்போம். பெட்ரோல் போடறது, டிரைவருக்குப் பேட்டாண்ணு ரொம்ப செலவாகும். சொந்தமா ஒரு கார் இருந்தா நல்லாயிருக்கும். இது ரெண்டும்தான் சார் என் கனவுன்னு விஜய் சேதுபதி சார்கிட்ட சொன்னேன்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நேத்து, விஜய் சேதுபதி சார் ரசிகர் மன்றத்துல இருந்து நாலஞ்சு பேர் வந்தாங்க. அவங்ககிட்ட சார் கார் கொடுத்து அனுப்பியிருக்காரு. கூட, அஞ்சு லட்சம் பணமும் கொடுத்தாங்க. சங்கத்து அக்கவுன்ட்ல பணத்த போட்டுட்டேன். ஆபீஸ் கட்டுறதுக்கான வேலைகள ஆரம்பிக்கணும்.
இனிமேல், கொத்தடிமையா மக்கள் எங்க கஷ்டப்பட்டாலும் ஈசியா மீட்டு வந்துடுவோம். இப்பகூட சார் கொடுத்த கார்லதான் மக்கள மீட்க போய்ட்டு இருக்கோம். இந்த கார்ல என் மக்களைகூட்டிட்டு வர ரொம்ப ஆசையா இருக்கு'' வெகு உற்சாகமாகப் பேசுகிறார் பச்சையம்மாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கிரிக்கெட்
புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
இந்த நிலையில் ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.பி.எல். தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு அதற்கு செலவாகும் தொகை ரூ.20 கோடி, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆஸ்திரேலியாவிடம் தோற்றது உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம்: ராகுல் டிராவிட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #WorldCup2019
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை இந்தியா எளிதாக வெல்லும் என்று கருதப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தோல்வி இந்திய அணிக்கு இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாம் இங்கிலாந்து சென்று உலகக்கோப்பையை எளிதாக வென்று விடுவோம் என்ற கருத்து நிலவியதாக நினைக்கிறேன். ஆகவே, தற்போது நடந்தது நல்ல விஷயம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி நமக்கு எதை ஞாபகம் படுத்துகிறது என்றால், நாம் மிகமிக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. நாம் நம்பர் ஒன் அணியாக இருந்ததால், இங்கிலாந்து சென்று எளிதாக இந்தியா கோப்பையை வென்றுவிடும் என்ற பேச்சு இருந்து கொண்டே வந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆனால் இந்தத் தொடரை பார்த்தவரைக்கும், விசித்திரமாக ஏதாவது நடந்து என்று நான் பார்க்கவில்லை. தற்போது வரைக்கும் நாம் கோப்பையை வெல்லும் ஒரு அணியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இலக்கு மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும்.
எல்லோரும் வேலைப்பளு குறித்து பேசுகிறார்கள். ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களுடைய உடலை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வீரர்கள் அந்த நிலைக்குச் செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் வேகபந்து வீச்சாளரான பேட்ரிக் கம்மின்ஸ் ‘‘ஓய்வு எடுத்துக் கொண்டு அதற்குப்பின் அணிக்கு திரும்பி பந்து வீசுவதைவிட, தொடர்ந்து பந்து வீசினால்தான் சிறப்பாக பந்து வீசுவதாக உணர்கிறேன்’’ என்று கூறியதாக படித்துள்ளேன்’’ என்றா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு
சென்னை,
போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன.
அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.
அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார்
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், இன்று 21.3.19 காலையில் மாரடைப்பால் காலமானார்.
கோவை அருகே உள்ள சூலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், இன்று காலை எழுந்து, 7 மணி அளவில் செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருந்தார்.
தவறவிடாதீர்
தேசிய விவகாரங்களை மாநிலக் கட்சிகள் பேசக் கூடாதா?
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அப்படியே மயங்கிவிழுந்தார் கனகராஜ். இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் செயல்பட்டு வந்தவர் கனகராஜ். சூலூர் தொகுதியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார்.
அதிமுகவில், எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என்று பிரிந்திருந்த வேளையில் கூட, இவர் எந்த அணியிலும் சேராமல் இருந்தார். இப்போது அவரின் மரணம், அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜின் திடீர் மரணத்தையொட்டி 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது போல், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஓட்டு வாங்க... காட்டை அழிக்கலாமா? - ஊட்டி மூன்றாம் சாலை சர்ச்சை.
தேர்தல் வரும் பின்னே, வாக்குறுதிகள் புதுப்பிக்கப்படும் முன்னே. இப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் ஒரு வாக்குறுதிதான், நீலகிரிக்கான மூன்றாவது மாற்றுப்பாதை. கோவையிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை என இரு மலைப்பாதைகள் உள்ளன. இவற்றில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடக்கிறது. நிலச்சரிவு போன்ற இயற்கைப்பேரிடர் காலங்களில், இரு வழிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
இந்த இரு பாதைகளையும் தவிர்த்து, கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு, கெத்தை வழியாக 46 கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட கெத்தை மலைப்பாதை, மூன்றாவது பாதையாக உள்ளது. ஆனால், முறையான பாதை அல்ல இது. வனச்சோதனைச் சாவடியைக் கடந்து, அடர் வனப்பகுதிகளின் ஊடாகச் செல்லும் இந்தப் பாதை, குறுகலானது; ஆபத்துகள் நிறைந்தது. இந்த வழியில், அரசுப் பேருந்தும், சொற்ப வாகனங்களும் சென்றுவருகின்றன. இந்த வழியில்தான் ‘மூன்றாவது மாற்றுப்பாதையை அமைப்போம்’ என்று கடந்த கால்நூற்றாண்டாகத் தேர்தல்களில் வாக்குறுதியை வழங்கிவருகின்றனர் அரசியல் கட்சியினர்.
•
|