Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
விடை தெரியாத 5 கேள்விகள்;பதில் அளிக்காத கோலி: உலகக் கோப்பை, ஆஸி. தொடர் ஒரு பார்வை

[Image: virat-kohli-reutersjpg]கேப்டன் விராட் கோலி : படம் ராய்டர்ஸ்

ஏப்ரல் 20-ம் தேதிதான் கடைசி நாள். ஆம், மே 30ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் விளையாடும்,  இறுதி 15 பேர் கொண்ட அணியை இந்திய அணி நிர்வாகம் ஐசிசிக்கு அதற்குள் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், ஆஸ்திரேலியுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடைந்த படுமோசமான தோல்விக்குப் பின், இந்திய அணியில்  யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள், யாரை நீக்கப் போகிறார்கள் உள்ளிட்ட  5 முக்கிய கேள்விகள் எழுகிறது.

ஆனால், இந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் கேப்டன் கோலி, 'பிளான் ஏ' தயாராக இருக்கிறது என்று அதீத நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் பல்வேறு சோதனைகளை முயற்சிகளை அணியில் செய்தும் இன்னும் எந்த இடத்தில்,  எந்த வீரர் களமிறங்குவார் என்ற தெளிவான திட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியத் தொடரில் ஒரு கட்டத்தில் 2-0 என்று முன்னிலையில் இருந்த இந்திய அணி, அதன்பின் தனது மோசமான ஆட்டத்தால், 2-3 என்று ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்திருக்கிறது.
இந்த தொடரின் முடிவில் 5 முக்கிய கேள்விகள் எழுகின்றன.
 1. அணியில் 4-வது இடத்தில் களமிறங்கும் வீரரைக் கண்டுபிடித்துவிட்டார்களா?
2. ஷிகர் தவண் தொடர்ந்து சொதப்பினால், 3-வது தொடக்க வீரர் யாரைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்
3. 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் 4-வது ஸ்பெலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளராக யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள்.
4. 2-வது விக்கெட் கீப்பராக யாரைத் தேர்வு செய்துள்ளார்.
5. ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா மனநிறைவு தரும் அளவுக்கு விளையாடினாரா
இந்த கேள்விகளை விராட் கோலி தலைமையிலான அணி விடை கானாமல், கடந்து சென்று உலகக் கோப்பைப் போட்டியை எதிர்கொள்ள முடியாது. அவ்வாறு எதிர் கொண்டால், நிச்சயம் லீக் ஆட்டங்களோடு இந்திய அணி நடையைக் கட்டி விட வேண்டும்.
[Image: Ambati-Rayudujpg]அம்பதி ராயுடு : படம் உதவி ட்விட்டர்
 
ஏனென்றால், கடந்த உலகக் கோப்பைப் போட்டி போன்று இந்த முறை குரூப் முறையில் அமைக்கப்படாமல் 'ரவுண்ட் ராபின்' முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 9 அணிகளுடன் இந்திய அணி மோத வேண்டும். அதில் குறைந்தபட்சம் 6 ஆட்டங்களில் வென்றால்தான் அடுத்த சுற்றுக்கு இந்திய அணி செல்ல முடியும்.
ஆனால், இந்த 5 கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்காமல் இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியை எதிர்கொள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி 2 சதங்கள் உள்பட 310 ரன்கள் குவித்தார், துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 2 அரைசதங்கள் உள்பட 202 ரன்கள் சேர்த்தார். ஆனால், இருவரின் ஆட்டமும் நிலைத்தன்மையுடையதாக் அமையவில்லை.
ஷிகர் தவண், கேதார் ஜாதவ் அல்லது விஜய் சங்கர் ஆகியோருக்கு சீரான வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், அவர்கள் நிலைத்தன்மையற்ற பேட்டிங்கைத்தான்  வெளிப்படுத்தினார்கள்.
தோனியைப் பொறுத்தவரை, தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியில் எந்தவிதமான குறைபாடும் இன்றி 3 போட்டிகளிலும் அருமையாகச் செய்தார், பேட்டிங்கில் அவரின் இயல்பான ஆட்டம் உலகக் கோப்பைப் போட்டிக்குள் திரும்பினால் சிறப்பாக இருக்கும். மற்ற வகையில், தோனி அணியில் இடம் பெறுவது கேப்டன் கோலிக்கு தார்மீக பலத்தை அதிகரிக்கும், இக்கட்டான நேரத்தில் தோனியின் ஆலோசனைகள் அணியைச் சரிவிலிருந்து மீட்கும்.
தோனியின் அந்த அனுபவ அறிவு இன்மை காரணமாகவே, கடைசி இரு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தமைக்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தோனி இல்லாத நிலையில், அவருக்கு பதிலாக வாய்ப்பு அளிக்கப்பட்ட ரிஷப் பந்த் மனநிறைவு அளிக்கும் வகையில், பேட்டிங்கையும், விக்கெட் கீப்பிங்கையும் செய்யவில்லை என்பதே நிதர்சனம். இவரை வைத்துக்கொண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி எதிர்கொள்வது ஆபத்தான பரிட்சய முயற்சியாகும்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியபோதிலும் ஒவ்வொரு போட்டியிலும் அவர் வாரிக்கொடுத்த ரன்கள் மிக அதிகமாகும். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்காது என்றபோதிலும், மணிக்கட்டில் பந்துவீசும் குல்தீப் ரன்கள்அதிகம் கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் வீசுவது அவசியமாகும். பும்ரா இந்த தொடரில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி, தனக்குரிய பணியை கச்சிதமாக செய்துள்ளார்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: jadegajpg]ரவிந்திர ஜடேஜா : கோப்புப்படம்
 
அணியில் ஆல்ரவுண்டர் தேவை என்று ரவிந்திர ஜடேஜாவை எடுத்தார்கள், ஆனால், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும்  பேட்டிங்கில் மிகமோசமாக செயல்பட்டார். ரவிந்திர ஜடேஜா மீது எந்த நம்பிக்கையில் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், விஜய் சங்கரைக் காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பானவர்.
ஆனால், விராட் கோலியைப் பொருத்தவரை, " உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் 11பேர் கொண்ட அணி ஏறக்குறைய உறுதிசெய்துவிட்டோம், இன்னும் ஒன்று அல்லது 2 வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் அது விரைவில் முடிவு செய்யப்படும்" தொடர்ந்து அழுத்தமாக கூறி வருகிறார்.
Like Reply
[Image: KL-Rahul-1jpg]கே.எல்.ராகுல் : கோப்புப்படம்
 
அதிலும் குறிப்பாக 4-வது இடத்துக்கான வீரர் இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. அம்பதி ராயுடு, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மயங்க் அகர்வால் ஆகியோரில் யாரை 4-வது இடத்துக்கு தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்த 5 கேள்விகளுக்கு விடை தெரியாமல் தேர்வு செய்யப்படும் அணி ஜொலிக்குமா என்பது சந்தேகமே
Like Reply
விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி - டிடிவி தினகரன் பேட்டி

[Image: 201903151904150550_Coalition-with-smalle...SECVPF.gif]
சென்னை,

அமமுகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பொள்ளாச்சி விவகாரத்தில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை அரசியலாக்க விரும்பவில்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையை பெறவேண்டும். 

விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். குக்கர் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். மார்ச் 26ம் தேதி குக்கர் சின்னம் வரும், அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Like Reply
``ஸ்விக்கி, உபர்ல லன்ச் புக் பண்ணி அனுப்பாதீங்க'' - அதிர வைத்த சென்னை பள்ளியின் இமெயில்

[Image: family-1459588_960_720_15046.png]

வீட்டு வாசலில் வேன் வந்து நிற்க, லன்ச் பாக்ஸில் சாப்பாட்டை அவசரம் அவசரமாக திணிக்கும் பெற்றோரைப் பார்க்க முடியும். வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி என்றால், அம்மாவே நேரில் சென்று, பிள்ளைகளுக்கு ஊட்டி விடும் அம்மாக்களையும் பார்க்க முடியும். இப்போது புதிய முறையில் பிள்ளைகளுக்கு லன்ச் அனுப்பும் வழக்கம் தொடங்கியுள்ளது. ஸ்விக்கி, உபர் போன்ற ஆன் லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பெற்றோர் ஆர்டர் செய்ய, அவர்கள் பள்ளிகளில் டெலிவரி செய்யும் பழக்கம் உருவாகியுள்ளது.  இதனால், சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு உணவு அனுப்பக் கூடாது என்று தெரிவித்துள்ளது. 
[Image: Fotor_15526441365582_15291.jpg]


இது குறித்து கேட்க, அந்தப் பள்ளியைத் தொடர்புகொண்டபோது, ``எங்கள் பள்ளிக்கு யாரும் இதுவரை ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து குழந்தைகளுக்கு அனுப்பவில்லை. ஆனால், பெற்றோர்கள் பலரும் அதுபோல ஆர்டர் பண்ணலாமா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி உணவு அனுப்புவதை நாங்கள் ஏற்பதில்லை. அதனால்தான் எல்லாப் பெற்றோர்களுக்கும் இமெயில் அனுப்பியுள்ளோம்" என்றனர். 
குழந்தையின் வளர்ச்சியில் உணவே பிரதானம். அதைப் பெற்றோர் சமைத்துக் கொடுக்கும்போது முழு ஆரோக்கியமாகக் கிடைக்கும். அதே உணவகங்களில் ஆர்டர் செய்வது வீட்டில் தயாரிக்கும் அளவு இருக்குமா என்பது சந்தேகமே! அதனால், குழந்தையின் உடல் ஆரோக்கியம் சீர் கெடவும் வாய்ப்பிருக்கிறது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் தொடராதிருக்கட்டும்.
Like Reply
சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது


[Image: 201903170506089854_Will-be-held-on-23rd-...SECVPF.gif]
Like Reply
சென்னை, 

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னையில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான இரண்டு வார காலத்துக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் முழு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி இரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டோனி தலைமையிலான சென்னை அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதும் தொடக்க ஆட்டத்தை காண ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது.

போட்டியை நேரில் பார்க்க ஆர்வம் கொண்ட ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரள தொடங்கினார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வந்து இருந்த ரசிகர்களும் ஸ்டேடியத்துக்கு வெளியில் இரவையும் பொருட்படுத்தாமல் காத்து கிடந்தனர். மேலும் நேற்று அதிகாலை முதல் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

பின்னர் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் நீண்ட வரிசையில் பொறுமையாக காத்து நின்று டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இந்த போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ரூ.1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 ஆகும். ரூ.2,500, ரூ.5 ஆயிரம் விலையிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டன. இதேநேரத்தில் ஆன்-லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.1,300 விலை கொண்ட டிக்கெட் முதலில் விற்று தீர்த்தது. இதனை அடுத்து மாலையில் எல்லா விலையிலான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் டிக்கெட் வாங்க காத்து நின்ற சிலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
Like Reply
எங்கள் உயிரை காப்பாற்றிய 30 செகண்ட்’: பங்களா. வீரர் தமிம் இக்பால் அதிர்ச்சி பேட்டி!

[Image: 60495.jpg]

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் 2 மசூதிகளில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் நிலைமை சீரியஸ் ஆக இருக்கிறது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 4 பேரும், இந்திய வம்சாவளியின் 3 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தெலங்கானாவைச் சேர்ந்த 2 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாகவும் தகவல். குஜராத்தைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி ஒருவரை கைது செய்திருக்கிறது போலீஸ்!
[Image: 095106_Newzealand.jpg]

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அந்த நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்த பங்களா தேஷ் கிரிக்கெட் வீரர்கள், நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள். இதையடுத்து நேற்று அங்கு நடைபெறுவதாக இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், நேற்று மாலை டாக்கா திரும்பினர். துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. 
[Image: 091807_Newzealand%2012.jpg]
 ‘’ நாங்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும். உங்கள் பிரார்த்தனையால் நாடு திரும்பியிருக்கிறோம். அங்கு என்ன நடந்தது என்பதையும் நாங்கள் பார்த்ததையும் என்னால் விளக்க இயலாது. அணியில் யாரும் நிம்மதியாக தூங்கவில்லை. உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு நன்றி’’ என்கிறார் பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் மகமத்துல்லா.
[Image: 094208_mahamadulla.jpg]
(மகமத்துல்லா)
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால், இன்னும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.‘’உயிர் தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீள்வது எளிதானதல்ல. இதற்கு கொஞ்சம் நாட்களாகும்’’ என்கிறார், சோகமாக!
அங்கு தான் நேரில் கண்டதை விவரித்தார் அவர்.
’’நான், முஷ்பிகும் ரஹீம், மகமத்துல்லா மூவரும் மைதானத்தில் இருந்து அப்படியே மசூதிக்கு செல்ல முடிவு செய்திருந்தோம். பஸ் 1.30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், மகமத்துல்லா பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சென்றுவிட்டார். முடிந்து வரும்வரை காத்திருந்தோம். இதனால் தாமதமானது. அவர் வந்ததும் டிரெஸ்சிங் ரூமில் தைஜுல் இஸ்லாமுடன் கால்பந்து விளையாடினோம். இதில் சில நிமிடங்கள் கழிந்தது. இதற்கு பின், அணி ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரனையும் சவும்யா சர்காரையும் (இருவரும் இந்துக்கள்) ஓட்டலில் விட்டுவிட்டு மசூதி செல்ல முடிவு செய்தோம்.
[Image: 094009_Newzealand%20334.JPG]
அணியில் இருந்த மேலும் சில வீரர்களும் எங்களுடன் இணைந்துகொண்டனர். பேருந்து மசூதி அருகே சென்றபோது, ஜன்னல் வழியாக பார்த்தால், சிலர் கீழே சரிந்து விழுந்து கொண்டிருந்தனர். குடித்துவிட்டோ, அல்லது மயக்கத்திலோ, விழுகிறார்களோ என நினைக்கும்போதே, மற்றொருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவர்கள் அனைவரும் தொழுகைக்கான தொப்பி அணிந்திருந்தனர். உடனடியாக மசூதி முன் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் அவர் விசாரித்தார். ’யாரோ, உள்ளிருந்து துப்பாக்கியால் சுடுகிறார்கள், உள்ளே செல்லாதீர்கள், ஓடிவிடுங்கள்’ என்று அழுதபடியும் நடுங்கியபடியும் சொன்னார். 
இதைக் கண்டதும் எங்களுக்கு பீதி. பேருந்தை பின்னால் எடுக்கச் சொன்னோம். எடுக்கவில்லை. மசூதிக்குள் இன்னும் சிலர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கொண்டிருந்ததை கண்முன் பார்த்தோம். பின் கத்தத் தொடங்கினோம். அதுவரை அங்கு போலீஸ் யாரும் இல்லை. பிறகுதான் கமாண்டோ படையினர் வந்தனர். நாங்கள் ஏழு எட்டு நிமிடம் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேருந்துக்குள் இருந்தோம். பிறகு கதவை எட்டி உதைத்தோம். 
[Image: 093707_tamim%20iqbal.jpg]
(தமிம் இக்பால்)
டிரைவர் அதைத் திறந்தார். இறங்கி பூங்கா வழியாக ஓடத் தொடங்கினோம். அப்போது இன்னொரு பயமும் ஏற்பட்டது. நாங்கள் பெரிய பேக்கை வைத்துக்கொண்டு இப்படி ஓடுவதைக் கண்டால், போலீஸ்காரர்கள் என்ன நினைப்பார்கள் என்று. சிறிது தூரத்துக்குப் பின் ஓடுவதை நிறுத்தி விட்டு நடந்து சென்றோம். நேராக மகமத்துல்லா அறைக்குச் சென்று டிவியை பார்த்தால், துப்பாக்கிச் சூடு சம்பவம் நேரலையாக ஓடிக்கொண்டி ருந்தது. ஆடிப் போய்விட்டோம். 
நாடு திரும்புவதற்காக கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் போகும்போது ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டோம். முப்பது செகண்ட் நிலைமை மாறியிருந்தால், நமது உடல்தான் விமானம் ஏறியிருக்கும் என்று! கண்ணுக்கு முன் மரணத்தைச் சந்தித்தோம். இதை ஒரு போதும் மறக்க முடியாது’’ என்றார். 
Like Reply
அரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் குவிப்பு

புதுடில்லி: பாக். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையாலும், பாக், போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும், வடக்கு அரபிக்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 60க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை இந்திய கடற்படை குவித்து வருகிறது.

[Image: Tamil_News_large_223595720190318063228.jpg]


புல்வாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.எப்., வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடியாக பாலகோட்டில் இந்திய விமானப்படை மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தொடரந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.



[Image: gallerye_063403647_2235957.jpg]



இந்நிலையில் இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா உள்ளிட்ட 60 போர்க்கப்பல்கள், இந்திய கடலோர காவல் படையின் 12 போர்க்கப்பல்கள் வடக்கு அரபிக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களான ஐ.என்.எஸ் அரிஹந்த், ஐ.என்.எஸ் சக்ரா ஆகியவையும் பாக்., நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. 
Like Reply
திமுகவில் 6... அதிமுகவில் 4... வாரிசுகளுக்கு வாரி வழங்கிய தொகுதிகள்..!

[Image: image_710x400xt.jpg]
Like Reply
[Image: Kanimozhi-vs-alagiri.jpg]
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 20 திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர்  மு.க. ஸ்டாலின் அறிவித்தார். எதிர்பார்த்ததுபோலவே திமுகவில் 6 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி தூத்துக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.[Image: Dayanidi-Maran.jpg]
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் வழக்கம்போல மத்திய சென்னை தொகுதியிலும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் தென் சென்னையிலும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன்  டாக்டர் கலாநிதி வட சென்னையில் போட்டியிடுகிறார். இவர்கள் அல்லாமல் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

[Image: Jayavardhan.jpg]
 திமுகவில் 6 வாரிசுகளுக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவிலும் 4 வாரிசுகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும் தற்போதைய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர்.ராஜ் சத்யனுக்கு மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Like Reply
[Image: ops.jpg]
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கினைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்ப்ய் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியனுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

[Image: image.jpg]
கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு கட்சிகளிலும் வாரிசுகள் வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. திமுகவில் 35 சதவீத இடங்களும் அதிமுகவில் 25 சதவீத இடங்களும் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் அதிமுகவை திமுக ஓவர் டேக் செய்துவிட்டது. குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுகவில் வாரிசுகளே களமிறக்கப்பட்டுள்ளனர். வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது சமூக ஊடங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது
Like Reply
உடல்நலக்குறைவால் மனோகர் பாரிக்கர் மரணம்!

[Image: 1018_20513.jpg]
Like Reply
கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை  எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்து வந்தது. இருப்பினும் சிகிச்சை எடுத்துக்கொண்டே அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கலந்துகொண்டிருந்தார். 


[Image: 1020_20143.jpg]
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாள்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரம் முன்பு உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து பா.ஜ.க தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். 
[Image: 1019_20345.jpg]
மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ``பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ``கோவா மக்களுக்குப் பிடித்தவர்களில் ஒருவராக பாரிக்கர் இருந்தார். அவர் இறப்புச் செய்தி வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Like Reply
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை நாளை அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்


[Image: 201903181208359608_Delhi-high-court-acce...SECVPF.gif]
Like Reply
புதுடெல்லி,


அ.தி.மு.க.வின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆனால், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக  டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
Like Reply
கிரிக்கெட்
நஷ்டஈடு வழக்கில் தோல்வி: ‘இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம்’ - இஷான் மணி தகவல்

[Image: 201903190042008908_The-failure-of-the-co...SECVPF.gif]
கராச்சி, 

இந்திய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான போட்டி தொடரில் விளையாடவில்லை. எனவே இந்த போட்டி தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.481 கோடி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பிரச்சினை தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனை விசாரித்த ஐ.சி.சி. தீர்ப்பாய கமிட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் தோல்வியை சந்தித்ததால் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.
Like Reply
[Image: goa-cm.jpg]பாரிக்கர் மறைவிற்கு பின், நள்ளிரவில் பதவியேற்ற கோவா மாநிலத்தின் புதிய முதல்வர்!

கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று முன் தினம் காலமானார். நேற்று மாலை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசு மரியாதை உடன் பாரிக்கர் உடல் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. 

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜக 12, காங்கிரஸ் 15 உறுப்பினர்கள் இருக்கின்றனர். கோவா பார்வர்டு கட்சி 3, எம்.ஜி.பி 3, சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர். மேற்கூறிய சிறிய கட்சிகளின் 9 உறுப்பினர்கள் உடன் கூட்டணி சேர்ந்து, மொத்தம் 21 உறுப்பினர்கள் உடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 

பாஜக முதல்வர் மறைவு; ஆட்சியமைக்க உரிமை கோரும் காங்கிரஸ் - கோவா அரசியலில் பரபரப்பு! 
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற 19 இடங்களில், 2 உறுப்பினர்கள் மறைவால் காலியானது. மேலும் 2 உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தனர். 





இதற்கிடையில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் கோவா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியது. புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வந்தன. 

இதையடுத்து அமித்ஷா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கோவா சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த்தை புதிய முதல்வராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்டவை சம்மதம் தெரிவித்தன. 

இதையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் பிரமோத் சாவந்த்(45), கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவர் இளங்கலை ஆயுர்வேத மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். இதையடுத்து சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

இவரது மனைவி சுலக்‌ஷனா, கோவா மாநில பாஜக மகிளா மோர்ச்சா பிரிவின் தலைவராக இருக்கிறார். புதிய முதல்வருக்கான தேர்வில், கடந்த சில மாதங்களாகவே பிரமோத் சாவந்த் பெயர் பரிசீலனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 
Like Reply
கோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கினாரா பிரபல டாக்டர்? -அதிரவைக்கும் மெடிக்கல் க்ரைம் குற்றச்சாட்டு!

ராகவேந்திரா புக் ஸ்டால், எஸ்.டி.டி. பூத், ஜானு ட்ராவல்ஸ், மகாசக்தி ஃபைனான்ஸ்… 14 விலையுயர்ந்த கார்கள்… பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு… என மதுரையில் கோடீஸ்வரனாக கொடிக்கட்டிப்பறந்த குமாரசாமி தற்போது சென்னையிலுள்ள பிரபல கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்குக்காரணமாக, அவர் குற்றஞ்சாட்டுவது பிரபல டாக்டரைத்தான்.
 
என்ன நடந்தது? என்று நாம், விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் டாக்டர்களிடம் செல்லும்போது ஒவ்வொருவரும் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது குமாரசாமியின் ஃப்ளாஷ்பேக்….
 
1999 செப்டம்பர்-29 இரவு 11:30…
 
நண்பர்களுடன் மதுரையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்  ‘கோடீஸ்வரன்’ குமாரசாமி. அதிவேகத்தில், ராசிபுரம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரியில் மோதியது கார். அதிகாலை… விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்த காவல்துறை, காருக்குள்ளிருந்த ஐந்துபேரும் விபத்தில் இறந்துவிட்டார்கள் என முடிவுசெய்து அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தது. ஆனால், காருக்குள்ளிருந்து உயிருக்குப்போராடும் முனகல் சத்தம் வெளியில் கேட்க… பொதுமக்களில் ஒருவர் பதறியடித்துக்கொண்டு போலிஸிடம் சொன்னபோதுதான் குமாரசாமி உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்கள். கோமாவில் இருந்த குமாரசாமிக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. கண்விழித்தபோதுதான் தெரிந்தது இடதுபக்கம் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல்.
 
 
இரண்டுவருடங்களுக்குப்பிறகு….

 
2001 ஆம் ஆண்டு சென்னை நண்பர் ஸ்ரீராம் மூலம் குமாரசாமிக்கு அறிமுகமாகிறார் மெடிக்கல் எக்யூப்மெண்ட்களை விற்கும் மேனேஜர் சண்முகவேல். அவர்கள், இருவரும் சென்னை மந்தைவெளியிலுள்ள பிரபல  டாக்டரிடம் குமாரசாமியை இடுப்பு எலும்புமாற்று அறுவைசிகிச்சைக்கு அழைத்துசென்றார்கள். அதற்குப்பிறகு, என்ன நடந்தது?

 
[Image: subramanian%2001.jpg]
                                                         டாக்டர் சுப்பிரமணியனின் க்ளினிக்


“அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில ஆர்த்தோ டிபார்ட்மெண்ட் சீஃப் டாக்டரா இருக்காரு. தனியா க்ளினிக்கும் வெச்சிருக்காரு. அவரோட, அப்பாயின்மெண்ட் வாங்கணும்னா 15 நாட்களுக்கு முன்பே 5,000 ரூபாய் முன்பணம் கட்டணும். அப்போதான், தேதி கிடைக்கும். 15 நிமிடத்துக்குமேல அவர் யார்க்கிட்டேயும் பேசமாட்டார்” என்ற பில்ட்-அப்புகளோடு அழைத்து செல்லப்பட்டார் குமாரசாமி.
 
 ‘இவர்தான் நாங்க சொன்ன டாக்டர். இவர், பேரு சுப்பிரமணியன்’ என்று நண்பர்கள் அறிமுகப்படுத்திவைத்ததும், “ராயப்பேட்டை ஹாஸ்பிட்டலில் எப்போ வந்து அட்மிட் ஆகலாம் டாக்டர்?” என்று கேட்டார் குமாரசாமி.
 
“ராயப்பேட்டை வேணாம்… இசபெல்லா ஹாஸ்பிட்டல் வா… அங்க, வெச்சு ரீ ப்ளேஸ்மெண்ட் பன்றேன். 15 நாள்ல நடக்க வெச்சிடுறேன்” என்றதும் மற்றவர்கள்போல் நாமும் நல்லபடியாக நடக்கலாம். தான் வைத்திருக்கும் விதவிதமான கார்களை ஓட்டுவதிலும் இனி பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கையுடன் டாக்டரை ஏறெடுத்துப் பார்த்தார் குமாரசாமி.
 
“புதிய ஹிப் ஜாயின் போர்ன் (இடுப்பு மூட்டு எலும்பு) இம்ப்ளேண்ட் பண்ண 1 லட்சத்து 25,000 ரூபாய், என்னோட ஃபீஸ் 50,000 ரூபாய், ஹாஸ்பிட்டல் ஃபீஸ் தனி”என்று மருத்துவச்செல்வை பட்டியலிட்டார் டாக்டர் சுப்பிரமணியன்.
 
“எவ்வளவு, செலவானாலும் பரவாயில்ல… எழுந்து நடந்தாப்போதும்” டாக்டர்களிடம் எதைச்சொல்லக்கூடாதோ அந்த வார்த்தையைச் சொல்லிவிட்டார் குமாரசாமி.
 
[Image: subramanian%2002.jpg]
                                                   விருதுபெறும் டாக்டர் எம்.சுப்பிரமணியன்


2001 ஜூலை-23 சென்னை இசபெல்லா மருத்துவமனை…
 
ஆபரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு வந்ததும் திடீரென்று டாக்டர் சுப்பிரமணியன் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார்.
 
“மகனே மன்னிச்சுக்கோ” என்ற அலறல் சப்தம் குமாரசாமியின் காதுகளில் ஒலித்தது.
 
எவ்வளவு பெரிய டாக்டர். தன்னைப்பார்த்து மகனே என்று ஓடிவந்து அழுதது குமாரசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒன்றும் புரியாமல்,
 
“என்னாச்சுப்பா?” மகனே என்று டாக்டர் அழைத்ததால் இப்படிக்கேட்டார் குமாரசாமி.  
 
“15 நாள்ல உன்னை நல்லா நடக்கவைக்கணும்ங்குற கனவு கெட்டுப்போச்சு” என்றதுமே குமாரசாமியின் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. ஆனாலும், டாக்டர் சுப்பிரமணியன் அதற்கு என்னக் காரணம் சொல்லப்போகிறார்? என்றபடி பதைபதைப்போடு பார்த்தார்.
Like Reply
“அரைமணிநேரம்தான் உனக்கு ஆபரேஷன் பண்ணனும்னு முடிவுபண்ணியிருந்தேன். ஆனா, தொடையில எக்ஸ்ட்ரா எலும்பு வளர்ந்து மசில்ஸுக்குள்ள பிண்ணிக்கிட்டிருக்கு. அதை, க்ளீன் பண்ணவே 5 ½ மணிநேரம் ஆகிடுச்சு. போராடி காப்பாத்தியிருக்கேன். அனெஸ்தடிக் (மயக்கவியல் நிபுணர்) கிட்ட இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் கேட்டேன். இன்னும் டூ மினிஸ்ட்ஸ் போனாலே ஜீரோவாகிடும்னு சிக்னல் காண்பிச்சுட்டார். அதனால, அர்ஜண்டா ஸ்டிச்சிங் பண்ணிட்டேன். இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகட்டும். உனக்கு ஹிப் போர்ன் ரீப்ளேஸ்மெண்ட் பண்ணி நடக்கவைக்கிறேன்” என்று டாக்டர் சுப்பிரமணியன் சொல்ல, வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார் குமாரசாமி.
 
அதிலிருந்து, குமாரசாமியும் சுப்பிரமணியனும் டாக்டர்-நோயாளி என்றில்லாமல் அப்பா-மகனாய் பழக ஆரம்பித்தார்கள். 15 நாட்களுக்கு முன்பே பணம் கட்டி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டிய டாக்டர் சுப்பிரமணியனிடம் சிகிச்சைக்கு எந்தவிதமான அப்பாயின்மெண்டும் இல்லாமல் அடிக்கடி, மதுரையிலிருந்து சென்னை மந்தவெளிக்கு வந்துசென்றார் குமாரசாமி.        
 
2002 பிப்ரவரி- 02 ந்தேதி…
 
மந்தவெளியிலிருந்து டாக்டர் சுப்பிரமணியனின் மகள் செல்ஃபோன் நம்பரிலிருந்து ஃபோன் வந்தது.
 
“அப்பா உங்கக்கிட்ட பேசணும்ங்கிறார்”
 
“அப்பாக்கிட்ட ஃபோனை கொடும்மா” என்றார் குமாரசாமி.  “மகனே, எப்படியிருக்க?” என்று வழக்கப்போல் நலம்  விசாரித்துவிட்டு,
 
“ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷனுக்கு ரெடியா?” என்று கேட்டார் டாக்டர் சுப்பிரமணி.
 
 “இப்போ, கூப்பிடுங்க… நாளைக்கு மார்னிங் வந்து  நிற்குறேன் டேடி” உணர்ச்சிவசப்பட்டார் குமாரசாமி.  
 
“ஜெர்மன்லேர்ந்து ஸ்பெஷலா உனக்காக ரெண்டு டாக்டர்களை இன்வெட் பண்ணியிருக்கேன். ஃப்ளைட் டிக்கெட்  புக் பண்ணிக்கொடுக்கமுடியுமா?”
 
“என்ன டேடி இப்படி கேட்குறீங்க… ஆல்வேஸ் ஐ ஆம் கெட் ரெடி டாடி…”
 
 “ஒரு டிக்கெட் 1.5 லட்ச ரூபாய். ரெண்டு டிக்கெட் ரெண்டரை லட்ச ரூபாய். எனக்கு 50,000 ரூபாய் அனுப்பிடு மகனே”
 
 “வித் இன் ஆஃப் அண்ட் ஹவர் டேடி… யுவர் அக்கவுண்ட் பர்ட்டிகுலர்லி மென்ஷன் அமவுண்ட் ஃப்ளைட் டிக்கெட் 2 1/2 லேக்ஸ்+ 50,000 டோட்டல் த்ரி லேக்ஸ் அக்கவுண்ட் ட்ரான்ன்ஸ்ஃபர் ஃபெடரல் பேங்க் ஆஃப் இண்டியா. போதுமா டாடி?”


 
[Image: kumarasamy%2061.jpg]
                                                                 பாதிக்கப்பட்ட குமாரசாமி



 “போதும்டா” என்று சிரித்தபடி ஃபோனை துண்டித்தார் டாக்டர் சுப்பிரமணியன்.
 
ஆகமொத்தம், மூன்று லட்ச ரூபாயை அன்று மாலை  மதுரை ஈஸ்ட்வேலி எதிரில் (சிந்தாமனி தியேட்டர் இருந்த இடத்தில்) இருந்த  ஃபெடரல் பேங் ஆஃப் இண்டியா அக்கவுண்ட் மூலம் அவருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தார் குமாரசாமி. பணம் வந்துவிட்டது என்று டாக்டர் சுப்பிரமணியிடமிருந்து மீண்டும் மகிழ்ச்சியுடன் ஃபோன் வந்தது.
 
சென்னை இசபெல்லா…
 
மறுநாள் சனிக்கிழமை மருத்துவமனையில் அட்மிட் ஆனார் குமாரசாமி. செவ்வாய்க்கிழமை ஆபரேஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்கிறார்கள். அப்போது, டாக்டர் சுப்பிரமணியின் காதில் ஜெர்மன் டாக்டர் ஏதோ சொல்கிறார். உடனே, குமாரசாமியின் ஸ்ட்ரெக்சரை நிறுத்திவனார் டாக்டர் சுப்பிரமணியன்.
 
 “மகனே… நீ உடனே தேவி ஹாஸ்பிட்டலுக்கு போயி சி.டி.ஸ்கேன் எடுத்துவிட்டு வா’ என்றதும் குழப்பமானார் குமாரசாமி.
 
“என்னாச்சுப்பா… எனக்கு நீங்க ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷன் பன்றதா சொல்லித்தானே  கூப்ட்டீங்க. இப்போ, திடீர்ன்னு தேவி ஹாஸ்பிட்டல் போயி ஸ்கேன் எடுக்கச் சொல்றீங்க? ஆபரேஷன் பண்ணலையா?”
 
 “அப்பா, சொல்றதை செய். நீ போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கு  ரிப்போர்ட் வந்துடும் உடனே போயி எடு” என்று அவசரப்படுத்தினார்.  
Like Reply




Users browsing this thread: 44 Guest(s)