Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#1
">http://[video=youtube]http://<iframe width="1280" height="720" src="https://www.youtube.com/embed/hh5S3PIDvUU" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>[/video]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[color=var(--ytd-video-primary-info-renderer-title-color, var(--yt-spec-text-primary))]26years of Thala -107 Actors about thala Aith - Every ajith fans should watch - Trollcasm[/color]
[color=var(--ytd-video-primary-info-renderer-title-color, var(--yt-spec-text-primary))][video=youtube]http://https://youtu.be/5DL6zm566WA[/video][/color]
Like Reply
#3
http://www.dailymotion.com/filmibeattamil
விஸ்வாசம் அஜித் கதாபாத்திரம் - சுவாரஸ்யமான தகவல்கள்- வீடியோ
சென்னை: விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது திரைப்படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி, இதுவரை உலா வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது 
[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811833.jpg]
விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதில் தந்தை கதாபாத்திரத்தின் பெயர் தூக்கு துரை என்றும், அவருக்கு ஜோடி காலா படப் புகழ் ஈஸ்வரி ராவ் என்றும் தகவல்கள் வெளியானது. இதேபோல், மகன் அஜித்தின் பெயர் சர்ப்பிரைஸ் என்றும், அவருக்கு ஜோடி தான் நயன்தாரா என்றும் கூறப்பட்டது.


Read more at: https://tamil.filmibeat.com/news/vishwas...57168.html
[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811818.jpg]
தூக்கு துரை: ஆனால், பட ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்தத் தகவல் தவறானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடம் இல்லையாம். தூக்கு துரை என்ற ஒரே கதாபாத்திரம் தானாம்.

[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811840.jpg]
நிரஞ்சனா: ஆனால் படத்தில் அவர் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். முரட்டுத்தனமான கிராமத்து இளைஞராக ஒரு பாதியிலும், மற்றொரு பாதியில் நகரத்து இளைஞர் போன்றும் அவர் தோன்ற இருக்கிறாராம். இதனால் படத்தில் ஒரே ஒரு நாயகி நயன் மட்டும் தானாம். படத்தில் அவரது பெயர் நிரஞ்சனா.
[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811826.jpg]
ஆர்வம்: விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்களையும் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஸ்வாசம் ரிலீசை அவர்கள் திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply
#4
நீ இல்லாத இடமேது சுடர்மிகு வடிவேலா- இணையத்தை கலக்கும் ‘மரணமாஸ் வடிவேலு வெர்ஷன்’!

‘பார்க்கத் தானே போற இந்த காளியோட ஆட்டத்தை’ என்ற ரஜினியின் குரலோடு தொடங்குகிறது பாடல்
[Image: hascstkg_vadivelu,-marana-mass_625x300_0...ormat=webp]
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என்று சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் வைரலாகி கொண்டே இருக்கின்றன. அரசியல்வாதிகள் என்ன பேசினாலும் அடுத்த சில மணி நேரத்தில் மீம்மாக போட்டு கலாய்த்து தள்ளி விடுகிறார்கள் நெட்டிசன்ஸ்.

இன்று சமூக வலைதளவாசிகளுக்கு விருந்தாக அமைந்தது ‘பேட்ட' படத்தின் மரண மாஸ் பாடலின் வடிவேலு வெர்ஷன். வடிவேலு இல்லாத மீம்களே இல்லை என்று இருக்கும் நிலையில் எந்தவொரு புதுப் படத்தின் பாடல் வெளியானாலும் சில மணி நேரங்களில் அந்தப் பாடலுக்கு வடிவேலு வெர்ஷன் உருவாகி விடுகிறது. தமிழ் மண்ணின் கலைஞனான வடிவேலுவின் உடல் மொழி அனைத்து சூழலுக்கும் குறிப்பாக அரசியல் பகடிக்கும், கேலி, கிண்டலுக்கும் இன்றும் அட்சர சுத்தமாய் பத்து பொருத்தத்துடன் பொருந்தி விடுகிறது.
‘பார்க்கத் தானே போற இந்த காளியோட ஆட்டத்தை' என்ற ரஜினியின் குரலோடு தொடங்குகிறது பாடல். இசை தொடங்கியதும் தவசி பட வேலைக்காரன் வடிவேலுவின் அட்டகாச ஆட்டமும் தொடங்குகிறது.
Like Reply
#5
‘கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் திறந்து வர்றான்' என்ற வரிகளுக்கு வடிவேலு கார் கதவையும் வீட்டின் கதவையும் திறந்து வருகிறார்.

‘ஸ்லீவ் சுருட்டி வர்றான்' என்றது கைச்சட்டையை சுருட்டியபடி வருகிறார் வின்னர் பட கைப்புள்ள.

‘காலை இழுத்து உயர நினைச்சா' என்று வரிக்கு கைபுள்ள வடிவேலு காலைத் தூக்கி கதவில் உறங்கத் தொடங்குகிறார். ‘இடியாய் இடிக்கும்' என்ற வரியில் கைபுள்ளைக்கு எசகுபிசகாக அடிபடுகிறது. முரப்போடு நிற்பேன் என்பதற்கு முரப்புடன் போலீஸ் வடிவேலு வந்து நிற்கிறார். இப்படியாக பாடல் வரிக்கு ஏற்ற விதமாக மரண மாஸ் பாடலுக்கான வடிவேலு வெர்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடலில் கரகமாடும் வடிவேலு, கண்ணீர் சிந்தும் வடிவேலு, ஆட்டத்தை ரசிக்கு வடிவேலு என அனைத்துமாய் வருகிறார் வடிவேலு.

தமிழ் திரைப்பட எடிட்டர்கள் டீசர், ட்ரெயிலர் எடிட்டிக்கு நெட்டிசன்களை தேடி அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும். இந்த வடிவேலு வெர்சனில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நுணுக்கமாக எடிட் செய்திருக்கிறார்கள்.

மரண மாஸ் பாடலின் இறுதி வரிகளில் மற்றொருவன் வாசிக்கும் ஃபுளூட் இசைக்கு நடுத்தெருவில் ஆடி வசூல் அள்ளிச் செல்லும் அலெர்ட் ஆறுமுகத்தோடு பாடலும் முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான இசையில் வசூலை அள்ளிச்சென்றது என்னவோ நம் சுடர்மிகு வடிவேலுதான்.
Like Reply
#6
ஆஸ்திரேலியா பந்து வீச்சில் திணறிய இந்தியா, காப்பாற்றிய புஜாரா
அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா ஆஸ்திரேலியாவில் தன் முதல் சதத்தை அடித்தார். முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியில் புஜாரா தவிர எந்த வீரரும் சரியாக ரன் குவிக்கவில்லை. புஜாரா சதம் அடித்து சில மைல்கற்களை கடந்தார். அதில் முக்கியமாக கங்குலி மற்றும் டிராவிட்டின் சில மைல்கற்களை எட்டினார் புஜாரா.

புஜாரா 123 ரன்கள் எடுத்தார் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 250 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. ஷமி மற்றும் பும்ரா மட்டுமே மீதமிருக்கும் வீரர்கள். புஜாரா 123 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.[Image: pujara25sf456s-1544093712.jpg]
Like Reply
#7
நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.
[Image: 201812080839335457_Australia-all-out-for...SECVPF.gif]
Like Reply
#8
5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஸ்டார்க் அவுட் ஆனதும், சிறிதுநேரம் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை விட்டதும் நிதானமாக ஆடிய ஹெட் சதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 72 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். அடுத்த பந்தில் ஹேசில்வுட் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாதன் லயன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Like Reply
#9
[Image: 201812080839335457_1_cricketindialead2._L_styvpf.jpg]
இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா இருவரும் தலா 3  விக்கெட்டுகள் எடுத்தனர். இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்
Like Reply
#10
This section is for movies bro.
You can Share the other Info & news in the News, reviews & Gossip section.

Regards

Vikatakavi02

గర్ల్స్ హైస్కూ'ల్ > INDEX 
నా పుస్తకాల సొరుగు > My (e)BOOK SHELF
చిట్టి పొట్టి కథలు - పెద్దల కోసం > LINK
Like Reply
#11
(08-12-2018, 01:36 PM)Vikatakavi02 Wrote: This section is for movies bro.
You can Share the other Info & news in the News, reviews & Gossip section.

Regards

Vikatakavi02

sorry bro.wrongly posted in this thread instead of my other thread. :D :D :D
Like Reply
#12
பேட்ட vs விஸ்வாசம் 
பேட்ட ரிலீசால் கோரிக்கை வைத்த சன் பிக்சர்ஸ் – பதிலடி கொடுத்த விஸ்வாசம் டீம்
[Image: Petta-Vs-Viswasam-e1544695440613.jpg?res...C392&ssl=1]

 பேட்ட ரிலீசால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது, ஆனால் அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் மோதி கொள்ள உள்ளன.இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் மோதிக் கொள்வதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஸ்வாசம் பட ரிலீஸை தள்ளி வைத்து கொள்ள முடியுமா? என சாத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் இதனை விஸ்வாசம் டீம் முடியாது என மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீசாகும், பேட்டையுடன் மோதும் எனவும் கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.இதனால் இந்த இரண்டு படங்களும் பொங்கல் ரேஸில் மோதி கொள்ள போவது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
Like Reply
#13
[Image: Marana-Mass-Vs-Adchi-Thooku-e15446808752...C288&ssl=1]

Marana Mass Vs Adchi Thooku : ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிங்கிள் டிராக் பேட்ட பாடலா? அல்லது விஸ்வாசம் பாடலா? என நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் பற்றிய பதிவு தான் இது.
Like Reply
#14
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட பத்மாவும் அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ரேஸில் மோதி கொள்ள உள்ளன.பேட்ட படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியானது, அதே போல் விஸ்வாசம் படத்தில் இருந்து அடிச்சு தூக்கு என்ற பாடலும் வெளியானது.இதனால் பேட்ட படத்தில் இருந்து முதலில் வெளியான மரண மாஸ் மற்றும் விசுவாசத்தின் அடிச்சு தூக்கு பாடல் ஆகியவற்றில் உங்களது அதிகம் கவர்ந்தது எது? என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.ட்விட்டரில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 59% ஓட்டுகளுடன் அடிச்சி தூக்கு பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. பேட்ட பாடல் 35 % மாரி படத்தின் பாடல் 6% ஓட்டுகளும் பெற்றுள்ளன.ஆனால் பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் மரண மாஸ் பாடல் 54% ஓட்டுகளையும் அடிச்சு தூக்கு பாடல் 46 % ஓட்டுகளையும் பெற்றுள்ளது

[Image: 47247675_2336211106390481_24033239749655...e=5CAD7AAE]
Like Reply
#15
[video=youtube]http://https://youtu.be/bbMLUadeMnA[/video]
Like Reply
#16
[video=youtube]http:https://youtu.be/jKWPfMBm2l0//[/video]
Like Reply
#17
நிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்? #Aquaman

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் ட்ரைலாஜிக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல (MCU) DC காமிக்ஸும் தன் மற்ற சூப்பர்ஹீரோக்களை வைத்து DC Extended Universe (DCEU) என்று படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான படங்கள் காமிக்ஸ் ரசிகர்களைத் திருப்திபடுத்தினாலும், அந்தப் படங்கள் அனைத்தும் மார்வெல் படங்களைப் போல வெகுஜன சினிமாவாக ஏற்கப்படவில்லை. `வொண்டர்வுமன்' மற்றும் `மேன் ஆஃப் ஸ்டீல்' படங்கள் மட்டும் அனைவரையும் ஈர்த்தது. தற்போது கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் `அக்வாமேன்' படத்தைக் களமிறக்கி இருக்கிறது DC. சமுத்திரப் புத்திரனான #Aquaman DC காமிக்ஸ் யுனிவர்ஸை கரை சேர்க்கிறானா?
[Image: 144689_thumb.jpg]
Like Reply
#18
[Image: AP18345005092892_20339.jpg]

கடலுக்குள் இருக்கும் அண்டர்வாட்டர் உலகின் முக்கிய நாடான அட்லான்டிஸின் ராணி அட்லானா. நிலத்தில் வாழும் சாதாரண லைட்ஹவுஸ் கீப்பர் ஒருவருடன் காதல் வயப்பட்ட அவளுக்கு ஆர்தர் கரி எனும் மகன் பிறக்கிறான். நிலப்பரப்பின் மனிதர்களும், கடலின் உள்ளே வாழும் மனிதர்களும் அமைதியுடன் ஒற்றுமையாக வாழலாம் என்பதற்குச் சாட்சியமாக தங்களின் மகன் இருப்பான் என்று பெற்றோர்கள் நினைக்கையில் அட்லானா தன் கணவனையும் மகனையும் பிரிய நேர்கிறது. இதனிடையே வளர்ந்து இளைஞனாக, அக்வாமேனாக சாகசங்கள் செய்யும் ஆர்தரை தேடி வருகிறாள் மெரா என்ற மற்றொரு கடல் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி. அட்லான்டிஸின் அரியணையை கொடுங்கோல் அரசன் ஆர்ம் இடமிருந்து மீட்டு அரசனாக ஆர்தர் அமரவேண்டும் என்று கூறுகிறாள். ஆர்ம் வேறு யாருமல்ல, அட்லானாவின் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த மகன். ஆர்தர் என்ன செய்யப் போகிறான்? அரியணையை மீட்கிறானா? அரசனாக அமர்கிறானா?

`அக்வாமேன்' எனும் சூப்பர்ஹீரோவின் கதை `தோர்', `வொண்டர்வுமன்' போன்ற படங்களைப் போல இரண்டு உலகங்களில் நடக்கும் கதை. நிலப்பரப்பில் சிறிது நேரம், ஆழ்கடல் ஆழத்தில் பல நேரம் எனக் கதை நீள்கிறது. இதனாலேயே படம் 3D-க்கென எழுதப்பட்ட படமாகிறது. ஐமேக்ஸ் திரையில் இன்னும் அழகாக இருக்கிறது. ஆழ்கடலில் நாம் பார்த்திராத உயிரினங்கள், பிரமிப்பூட்டும் வாழிடங்கள் என வேறு ஓர் உலகத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது படம்.
Like Reply
#19
[Image: AP18345007824603_20121.jpg]

இதுவரை எடுக்கப்பட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களும் சரி, மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட சோனி, ஃபாக்ஸ் படங்களும் சரி, மூலக்கதையை மட்டுமே... அவ்வளவு ஏன், சில சமயம் கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு திரைக்கதையில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்து சினிமாவாகக் கொடுப்பார்கள். இந்த DCEU மட்டும் இதற்கு நேர் எதிர். காமிக்ஸுக்கு நியாயம் செய்வதாக அதன் படங்கள் அமைந்திருக்கும் (`ஜஸ்டிஸ் லீக்' தவிர). இந்த காமிக்ஸ் அல்லது நாவலுக்கு நியாயம் சேர்க்கும் படங்கள் பாராட்டப்பட வேண்டியவைதாம். ஆனால் பிரச்னை என்னவென்றால், அது இன்று படம் பார்க்கும் அனைவருக்கும், முக்கியமாக காமிக்ஸ் விரும்பிகளுக்கு அது பார்த்துப் பழகிய கதையாகவே இருக்கும். எனவே, அதில் வேறு ஒரு கோணம் அல்லது புதிய அணுகுமுறை இருந்தால் மட்டுமே அது அனைவருக்குமான ஜனரஞ்சகப் படமாக அமையும். அக்வாமேன் காமிக்ஸுக்கு நியாயம் சேர்க்கும் வகை என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் சுலபமாகக் கணித்து விடலாம். அதுவும் எந்தவித சுவாரஸ்யமுமின்றி படம், பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் Somewhere in, Somewhere in என டேக்லைன் வேறு. கதையைத் தவிர எல்லாமே வேகமாக நகர்கிறது. 
Like Reply
#20
[Image: AP18345036594205_20324.jpg]
இப்படியான கணிக்கக்கூடிய காட்சி அமைப்பு இருக்கும் படங்களில் வசனங்கள்தாம் அதைக் காப்பாற்றும். ஆனால், இங்கே அதிலும் சறுக்கல். ஒரு 10 வருடத்துக்கு முன்பு வரவேண்டிய ரகங்களில் இருக்கின்றன மெலொடிரெமெட்டிக் காட்சிகள். ஒரு பக்கம் மெலோடிரெமெட்டிக் காட்சிகளும் த்ராபையான வசனங்களும் வெறுப்பேற்றுகிறது என்றால், இன்னொருபுறம் மார்வெல் படங்கள் போல நாங்களும் காமெடி செய்கிறோம் என நாயகன் ஜேசன் மொமொவை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள். `இந்த இடம் மிகவும் வறண்டு இருக்கிறது, நீர் தேவை' என்றால் நாயகன் `சூ சூ' போயிருப்பேனே என்கிறார். கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க டிசி.

பின்னணி இசை, பிரமாண்ட விஷுவல் எஃபக்ட்ஸ் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அக்வாமேனாக ஜேசன் மொமொவா நல்ல சாய்ஸ். அவரைத் தவிர இந்தக் கதாபாத்திரத்துகு வேறு யாரையும் நினைத்துவிட முடியாது. டாட்டூ உடம்போடு கேம் ஆஃப் த்ரோன்ஸின் கால் த்ரோகோ அப்படியே அக்வாமேனாக இருக்கிறார். மெராவாக ஆம்பர் ஹெர்ட் மற்றும் அட்லானாவாக நிக்கோல் கிட்மேன். ஆம்பர் ஹெர்ட் தான் படத்தின் கதையையே நகரச் செய்கிறார். அதேபோல் ஸ்டன்ட் காட்சிகளிலும் ஒதுங்கி நிற்காமல் புகுந்து விளையாடி இருக்கிறார். வாவ் ஆம்பர்!
Like Reply




Users browsing this thread: 61 Guest(s)