Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பாலியல் வன்கொடுமை - அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்
பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களுக்கு வலைவிரித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த வழக்கில் கைதான நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre
சென்னை:
பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பழகி சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் என தகவல் வெளியானது.
இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இன்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி
மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கடந்த ஆண்டில் ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த செயலி முதன்முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.தற்போது மக்களவைத் தேர்தலிலும் இந்த செயலி மூலம் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது, மிரட்டுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,பொய்யான செய்திகளைப் பரப்புவது, பணம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்கச் செய்வது போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை 4 மணிக்குள் தரையிறக்க விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவு
புதுடெல்லி,
எத்தியோப்பியாவில் கடந்த 10-ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர்.
இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது. எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இன்று மாலை 4 மணிக்கு பிறகு பறக்க அனுமதி கிடையாது என்று விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உரிய பாதுகாப்பு மாற்றங்கள் செய்யும் வரை தடை விதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மனிதஉரிமை பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டுகள் சிறை
தெஹ்ரான் : ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பெண்கள் உரிமைக்காகவும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சிஎன்என் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி 2010 ம் ஆண்டும் இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2013 ம் ஆண்டே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
14-03-2019, 10:01 AM
(This post was last modified: 14-03-2019, 10:03 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆஸி. தொடரில் இந்தியா படு தோல்வி அடைய இந்த இரண்டு பேர் செய்த கேலிக்கூத்து தான் காரணம்!
உலகக்கோப்பை
உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் துவங்க உள்ள நிலையில் இந்தியா தன் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடரில், பலவீனமான அணியிடம் தோல்வி அடைந்து உள்ளது. இதற்கு என்ன காரணம்? உலகக்கோப்பை தான் காரணம்!!
சிறந்த அணி தேர்வு!!
ஆம், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த அணியை தயார் செய்கிறோம் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கூத்து நடந்து வருகிறது. அந்த கூத்தை உலகக்கோப்பைக்கு முன் நடக்கவுள்ள கடைசி சர்வதேச போட்டி வரை தொடர்ந்துள்ளது கோலி, ரவி சாஸ்திரி கூட்டணி.
த்து தான் காரணம்!
டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடரில் இந்தியா 2-3 என தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி அனுபவ வீரர்கள் இன்றி தவித்து வந்தது. ஆனால், அந்த அணிக்கு நம்பிக்கை அளித்து, தன் நம்பிக்கையை தானே சிதறடித்து இந்தியா மோசமான தொடர் தோல்வியை பதிவு செய்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குழப்பம்
இந்திய அணிக்கு 11 வீரர்கள் தான் தேவை. கூடுதலாக 4-5 மாற்று வீரர்கள் தேவை. இப்படி தான் எல்லா அணியும் தயாராகி வருகின்றன. ஆனால், இந்திய அணி சுமார் 20+ வீரர்களை வைத்துக் கொண்டு கடந்த 4-5 மாதங்களாக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரிலும் இதே குழப்பம் நீடித்தது.
சுழற்சி முறை
இந்தியா 15 வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு, சில பரிசோதனை முயற்சிகள், அணியின் சம பலம் என பல முயற்சிகளை செய்யும் களமாக ஆஸ்திரேலிய தொடரை பயன்படுத்தினார்கள்.
தினேஷ் கார்த்திக் எங்கே?
தினேஷ் கார்த்திக் அணியில் இல்லை. அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட் என்றார்கள். அவர் விக்கெட் கீப்பிங்கில் அதிக அனுபவமற்றவர். அவரை ஏன் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார்கள்?அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்கிறார்கள். கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் எத்தனை போட்டிகளில் அவர் ரன் குவித்தார்? இதற்கு பதில் இல்லை. இவரை விட தினேஷ் எந்த வகையில் குறைந்தவர்?
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தோனிக்கு ஓய்வு
முதல் மூன்று போட்டிகளில் ஆடிய தோனிக்கு கடைசி இரு போட்டிகளில் ஓய்வு கொடுத்தார்கள். அதற்கு காரணம், ரிஷப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு வழங்கிப் பார்க்க வேண்டும் என்பதே! ஆனால், அது தான் நான்காவது போட்டியில் இந்திய அணியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்
பந்து வீச்சிலும் சிறந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோரைக் குறிப்பிடும் கோலி - ரவி சாஸ்திரி, அவர்கள் மூவரையும் முதல் நான்கு போட்டிகளில் பிரித்து வைத்தது. கடைசி போட்டியில் மட்டும் தான் அவர்கள் மூவரும் பங்கேற்றார்கள். அதுவும் பெரிய அளவில் வேலை செய்யவில்லை. அப்புறம் ஏன் இவர்களுக்கு பயங்கர பில்டப்?
மிடில் ஆர்டர் குழப்பம்
விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், தோனி, ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்யும் இடங்கள் இந்த தொடரில் மாற்றப்பட்டது. இதில் விஜய் சங்கர், ரிஷப் பண்ட் எந்த இடத்திற்கு பேட்டிங் செய்ய வைக்கலாம் என்பது கடைசி வரை குழப்பமாகவே இருந்து வந்தது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
அம்பதி ராயுடு - தவான்
அம்பதி ராயுடு மூன்று போட்டிகளில் சொதப்பியதால், அடுத்த 2 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அதே முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத தவான் நான்காவது போட்டியில் பங்கேற்று சதம் அடித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலகக்கோப்பை வெல்லும்?!
இப்படி, கோலி - ரவி சாஸ்திரி குழுவினர் செய்த கந்தரகோலம் ஏராளம். இவர்கள் இருவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என்ற கனவை மறந்து விடுவதே நல்லது!
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
செயின் பறிப்பு: ஆசிரியர் உயிரிழப்பு
சென்னை: சென்னை பொன்னேரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியையின் செயினை சிலர் பறிக்க முயன்ற போது நிலைதடுமாறி விழுந்தார். பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
பொன்னேரியில் ஆசிரியை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கழுத்தில் இருந்த செயினை மர்ம கும்பல் திடீரென பறித்துக் கொண்டு ஓட முயற்சி செய்தது. நிலை தடுமாறி ஆசிரியயை கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மசூத் அசார் விவகாரம்: 4-வது முறையாக சீனா முட்டுக்கட்டை
ஜெனீவா: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாக்.கில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து நெருக்கடி கொடுக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. இது தொடர்பாக மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இந்நிலையில் மீண்டும் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இந்தியா எடுக்கும் முயற்சிக்கு நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த வடமாநில இளைஞர்கள்!
சென்னை உழைப்பாளர் சிலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் போதையில், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுது.
மெரினா கடற்கரை பகுதியில் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை, அப்பகுதி வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் என்பவர் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற வடமாநில இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடமிருந்து ஆட்டோ ஓட்டுநரை மீட்டு, அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வடமாநில போதை நபர்களை காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்
இந்நிலையில் சீனாவில் ஒரு திருடனின் செயல் அனைத்து தரப்பு மக்களாலும் இணையத்தளத்தில் பாராட்டப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்ததை போல ஒருவன் பின்னே வந்து நின்றான். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார்.
பின்னர் இயந்திரத்தில் இருந்து வந்த பணத்தை எடுத்து அந்த திருடனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய திருடன், ஏடிஎம் இயந்திரத்தில் அப்பெண்ணின் பேலன்ஸை பார்த்துள்ளான். அதில் ஜீரோ பேலன்ஸ் காட்டவே, அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பெண்ணை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான். இந்த காட்சி ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் அவரது செயலை பாராட்டியபோதும், அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வீடியோவிற்கு மீம்ஸ்களும், திருடனின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதில் குறிப்பாக ஒருவர் தனது பதிவில், “என் வங்கிக் கணக்கைப் பார்த்தால் திருடன் அவனுடைய சொந்த பணத்தை மட்டுமல்லாமல், கத்தி மற்றும் அணிந்திருந்த சட்டையையும் கொடுத்து சென்றுவிடுவான்” என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChinaRobberMercy
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்!
சென்னை: நல்லவேளை.. ஜெயலலிதா உயிருடன் இல்லை என்று நேற்றுதான் நினைக்க தோன்றியது. இருந்திருந்தால் இதற்கெல்லாம் 0% அளவுக்குக் கூட வாய்ப்பே இல்லை என்பது வேறு விஷயம்.
பாஜக மீது ஜெயலலிதாவுக்கு மனஸ்தாபம் 10 வருடத்திற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை தவிர வேறு எந்த பாஜக தலைவர்களையும் ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. கூட்டணி வைக்கவும் விரும்பவில்லை. பாஜகவை தூர ஒதுக்கி மூலையில் முடக்கியிருந்தார்.
இதற்காக 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அத்வானி எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அது ஜெ. முன்பு ஒன்றும் வேலைக்காகவில்லை. 2014 தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணி சேருமோ என்ற ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கும் ஜெ. அசைந்து கொடுக்கவில்லை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
37 எம்பிக்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி என்னமோ அன்றைக்கு முன்வரத்தான் செய்தார். ஆனால் ஜெ.தான் அதை பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்த பிடிவாதம் அவரது மறைவு வரை உறுதியாக நீடித்தது. அதாவது கடைசி வரை அவர் பாஜகவே அதிமுக பக்கமே அண்ட விடாமல் கட்சியைக் காப்பாற்றி வந்தார். ஆனால் நேற்று நடந்த காட்சி இது அத்தனையையும் பொடிப்பொடியாக்கி விட்டது.
[color][font]
தலைமை அலுவலகம்
அதிமுகவின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் அது ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்தான் நடக்கும். ஜெ. வருவதற்கு முன்பே தொண்டர்கள் குவிந்து கிடந்து காத்து கிடப்பார்கள். ஆனால் நேற்று கூட்டணி தொகுதிகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பியூஷ்கோயலும் வந்திருந்தார். ஆனால் எந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தொண்டர்கள் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மிஸ்ஸிங்![/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடுவில் பியூஷ்கோயல்
அதை விட முக்கியமானது.. கூட்டணிக் கட்சிகளின் தலைவர் யார் என்ற குழப்பம் நேற்று வெட்ட வெளிச்சமாகியது. வழக்கமாக நடு நாயகமாக ஜெயலலிதா அமர்ந்திருப்பார். நேற்று அவரது இடத்தில் பியூஷ் கோயல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வலதிலும், இடதிலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் அமர்ந்திருந்தனர். அவர் தான் பேசினார். அதை தமிழிசை மொழிபெயர்க்க வேறு செய்தார். மற்றவர்கள், அதிமுக தலைவர்கள் உள்பட, அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். அதிமுக தலைவர்கள் பேசினார்களா என்று தெரியவில்லை. ஆனால் பியூஷ் கோயல் பேசுவது போன்ற விஷூவல் மட்டுமே வெளியே வந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தொண்டர்கள் ஷாக்
இதனை பார்த்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடையவே செய்தனர். கூட்டணியின் தலைவர் அப்படியானால் பாஜகவா, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் பியூஷ் கோயல் நடு நாயகமாக உட்கார்ந்து பேசியதை எப்படி அதிமுக மேல் மட்டத் தலைவர்கள் அனுமதித்தனர். அம்மா உட்கார்ந்த இடத்தில் பாஜகவா, ஜீரணிக்க முடியலையே என்று அதிமுகவினர் புலம்புகின்றனராம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலகளவில் சாதித்து ரூ.7 கோடி பரிசு வென்ற சென்னை சிறுவன்
அமெரிக்காவில் நடந்த பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். புகழ்பெற்ற பல இசை மேதைகள் நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வேகமாக பியானோ வாசித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஏற்கனவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பலகட்ட போட்டிக்கு பின்னர் இறுதிப்போட்டிக்கு லிடியனும் தேர்வானார். இறுதிப்போட்டியில், லிடியன் இரண்டு கைகளால் பியானோ வாசித்து அசத்தி, வெற்றி பெற்றார். அவருக்கு, தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டமும், 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ7. கோடி) பரிசு தொகையையும் வழங்கப்பட்டது.
இதுப்பற்றி லிடியன் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மீது உலகப்பார்வை விழ தொடங்கி இருக்கிறது, சாதனைகள் தொடரும் என்றார்.
கவுரவித்த ரஹ்மான்
இதனிடையே லிடியனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை வரவழைத்து கவுரவித்தார். லிடியன், ரஹ்மானின் கேஎம்., இசைப்பள்ளியில் பயின்றவர். அதோடு இந்தப்பள்ளியின் தூதராகவும் லியடினை நியமித்திருக்கிறார் ரஹ்மான்.
லிடியனின் வெற்றி, இந்தியாவின் வெற்றி என ரஹ்மான் புகழாரம் சூட்டியிருக்கிறார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`பதில் முழுமையா இருக்கணும்; இல்லையென்றால்... - தேர்தல் ஆணையத்தை எச்சரித்த நீதிபதிகள்
'மதுரையில், தேர்தல் தேதியை மாற்றியமைப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முழுமையாகப் பதில் அளிக்கத் தவறும்பட்சத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடப்படும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
மதுரையில், உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதில், தென் மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். இதனால், சித்திரைத் திருவிழாவில் மக்கள் கூட்டம் வெள்ளம்போல திரண்டிருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி வருவதால், மக்கள் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதா, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்வதா என்று தெரியாமல், கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ``திருவிழா சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் கண்டிப்பாகக் குறையும். மேலும், முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது'' என்று அவர்கள் கூறினர்.
இந்நிலையில், திருவிழா தேதியை மாற்றியமைக்கவில்லை என்றால், வாக்குப்பதிவு நடக்கும் பூத்துகளுக்கு இடையூறாக அமைய வாய்ப்பு உள்ளதாகவும், பாதுகாப்பு வசதிகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் எனவும் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு அளித்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ``தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடத்தலாம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படும். தமிழகத்தில் தேர்தலை நிறுத்தினால், பிறமாநிலங்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், தேர்தலை நடத்தினாலும் வாக்குப்பதிவு அதிகபட்சமாக இருக்குமா என்று கருத்தில்கொள்ள வேண்டும். இது குறித்து முழுமையாகப் பதில் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் எனக்கூறி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தன
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விஜயகாந்த்-டாக்டர் ராமதாஸ் சந்திப்பின் பின்னணி என்ன?பரபரப்பு தகவல்கள்
சென்னை,
தமிழக அரசியலில் எப்படி அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எலியும் பூனையுமான இருந்து வருகிறதோ, அதேபோலத் தான் அதிகாரத்தில் இல்லை என்றாலும் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றன. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் இரு கட்சிகளையும் இணைத்துவிட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணியில் முதலிலேயே இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டும் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த கூட்டணியில் கடைசியில் இணைந்த தே.மு.தி.க.வும் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகள் கேட்டு முதலில் அடம்பிடித்து, பின்னர் இறங்கி வந்து 4 தொகுதிகளை பெற்றுக்கொண்டது.
சந்திப்பின் பின்னணி?
தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று திடீரென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லம் சென்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அவருடன் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் வந்திருந்தார்.
ஆனால், இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ், “விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். பா.ம.க. - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை” என்று கூறிச்சென்றார். ஆனால், விஜயகாந்தை டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசியதில் அரசியல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க.வின் ஓட்டு தேவை
நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. எனவே, தே.மு.தி.க.வின் வாக்குகளை பெற வேண்டும் என்றால், அக்கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சாந்தப்படுத்துவது அவசியம். அந்த வகையிலேயே, டாக்டர் ராமதாஸ் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் 4-ல் வெற்றி பெற்றால், ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். எனவே, தே.மு.தி.க.வின் ஓட்டு எப்படியும் தேவை என்ற நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் தொகுதிகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு வடசென்னை தொகுதியும், பா.ம.க.வுக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விரும்புகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததற்கு முக்கிய காரணமே இவர் தான் என்று கூறப்படுவதால், அவரது ஆசையை நிறைவேற்ற பா.ம.க. முடிவு செய்துள்ளது.
மத்திய சென்னையை அ.தி.மு.க.வுக்கு கொடுத்துவிட்டு தே.மு.தி.க.விடம் உள்ள வடசென்னையை பெற்றுக்கொள்ள பா.ம.க. விரும்புகிறது. வடசென்னை தொகுதிக்கு பதிலாக தே.மு.தி.க.வுக்கு விழுப்புரம் தொகுதியை விட்டுக்கொடுக்கவும் பா.ம.க. முடிவு செய்திருக்கிறது. தொகுதி பங்கீட்டு பின்னணியிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
•
|