04-10-2020, 03:18 PM
Superb update
Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
|
04-10-2020, 03:18 PM
Superb update
04-10-2020, 03:29 PM
Rahul read the pulse of kalai perfectly and trigger her to make more mistake and lose the love of her close onces. Interesting mind game. Lovely update.
04-10-2020, 03:55 PM
Nice update bro
04-10-2020, 07:15 PM
Super bro
04-10-2020, 07:26 PM
Thrilled to see what is going to happen next
04-10-2020, 07:55 PM
Super sago. Paavam kalai.
04-10-2020, 09:23 PM
Cool update
05-10-2020, 11:33 AM
Hello bro.. unga kadhai padithen arumai.. enakku oru kadhai personal ah eluthi tharanum.. mudiyuma..
Private message varavum ...
05-10-2020, 02:01 PM
06-10-2020, 03:53 PM
Waiting for Kishore and kalai marriage and what's going to happen thereafter. Very interesting story.
09-10-2020, 06:58 AM
Marvelous update. Please give small update of each of story once in two days.
10-10-2020, 11:18 AM
You are awesome writer. Please focus one story at a time. That can make you give more high quality output. Finish this story and move on to other.
10-10-2020, 06:54 PM
Bro waiting for the update
11-10-2020, 01:11 PM
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep31
நாகராஜன், கிஷோர் மற்றும் ராம் மூவரும் நிசப்தத்தை வீட்டில் பரவவிட்டு அமைதியாக ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர.. கடந்த முப்பது நிமிடமாக பேசவேண்டிய அனைத்தையும் பேசி முடித்துவிட்டு முகத்தில் கவலையை அப்பிக்கொண்டு இருந்தனர். கிஷோரின் அறைக்குள் அவனின் அம்மா புவனேஸ்வரி முகத்தில் சோகத்தை அப்பியபடி மெத்தையில் உட்கார்ந்து இருந்தாள்.. அவளது மடியில் கலை தலை வைத்து குழந்தை போல படுத்திருந்தாள்.. கடந்த ஐந்து நிமிடமாக புவனேஷ்வரியின் அன்பு வார்த்தைகள் கலையின் செவியை ஊடுருவி அவள் மனதை தடவ, வெல்வெட்டால் ஆன கரமோ என்று வியப்பு கொள்ளும் மென்மை கொண்ட புவனேஷ்வரியின் உள்ளங்கை கலையின் தலையை தடவிக் கொடுக்க கலை இமைகளை மூடி நித்திரைக்கு சென்றாள்.. தாயின் கரமும், தந்தையின் கரமும் தனது கன்னத்தை பதம் பார்த்த பின்பு இரண்டு நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல், அறைக்குள்ளேயே முடங்கி கிடந்து அழுது அழுது சோர்ந்து போனவளுக்கு புவனேஸ்வரியின் அரவணைப்பும் அவள் மடியில் ஆழ்ந்த உறக்கமும் மிக தேவையான ஒன்றாக இருந்தது.. கலை நித்திரையில் வீழ்ந்த பின்னரும் புவனேஷ்வரி அவள் முகத்தை ஏக்கமாக பார்த்து தடவிய வண்ணம் இருந்தாள்.. கலையின் கன்னங்களை மறைத்திருந்த முடியை விளக்கிப் பார்த்தாள், ஒரு பிளாஸ்திரி ஒட்டி இருந்தது.. அதை கண்டதும் புவனேஷ்வரிக்கு கண்களில் தேங்கிய நீரை புறங்கையால் துடைத்து விட்டு, கலையின் தலையை மெதுவாக தன் மடியில் இருந்து தூக்கி தலைகாணியில் வைத்து விட்டு அங்கிருந்து வீட்டின் கூடத்துக்கு வந்து அங்கு நிலவி கொண்டிருந்த நிசப்தத்தை கலைத்தாள்.. புவனேஷ்வரி: ஒரு காட்டு மிராண்டி குடும்பத்துக்குள்ள பூ ஒரு மாதிரி அப்பாவி பொண்ணு.. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துரணும்.. கிஷோர்: ம்மா காட்டு மிராண்டி லாம் ஒன்னும் இல்ல.. எதோ கோவத்துல அடிச்சுட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் என் மேல வச்சிருக்கிற பாசத்தை விட அவங்க அப்பா அவ மேல அதிகம் பாசம் வச்சிருக்கார்.. புவனேஷ்வரி: பொல்லாத பாசம், பாசம் இருந்த அளவுல பாதியாச்சும் நிதானம் இருக்கணும் டா.. அது இல்லாம தான் தங்க பிள்ளைய இப்படி கன்னத்துல ரத்தம் வர்ற மாதிரி அடிச்சுருக்காங்க.. கிஷோர்: ம்மா.. அவர் கைல ஒரு ஏதோ ஒரு சின்ன கண்ணாடித்துண்டு இருந்தது கவனிக்காம அப்படியே அடிச்சிட்டார்.. அதான் ரத்தம் வந்துருச்சு.. புவனேஷ்வரி: டேய் நீ என்னடா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க.. கிஷோர்: சப்போர்ட் லாம் ஒன்னும் பண்ணல ம்மா.. அவ்ளோ கம்பீரமான ஆளு இன்னைக்கு அழுகாத குறையா என்கிட்டே வருத்தப்பட்டு பேசுனாரு.. நீங்க பக்கத்திலிருந்து பாத்தா இப்படிலாம் பேச மாட்டீங்க.. புவனேஷ்வரி: நான் அங்க இருந்தா அங்க வச்சே அந்தாள நாக்கை புடுங்கிற கேட்ருப்பேன்.. நாகராஜன்: ஏய் விடுடி.. தப்பு உணராமலயா அவரே இவனுக்கு போன் போட்டு கலையை கூப்பிட்டு போக சொல்லிருக்காரு.. ரொம்ப வேதனை பட்ருப்பாரு போல தான் தெரியுது.. ராம்: அண்ணே!! அவங்க அம்மா தான இது எல்லாத்துக்கும் காரணம்.. அவங்க இப்போ என்ன சொல்றாங்க.. கிஷோரின் மனம்: ஹையோ இவன் வேற கலையோட அம்மா பத்தி பேசும் போதெல்லாம் எனக்கு ஈர கொலையெல்லாம் நடுங்குது.. கலையோட அம்மா கூட தான் இவன் தப்பு பண்ணான் ன்னு அவனுக்கு தெரிஞ்சா??? இவன் தான் என்னோட தம்பி ன்னு கலையோட அம்மா க்கு தெரிஞ்சா?? ச்சா எல்லாத்தையும் விட இது தான் எனக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.. அன்னைக்கு அவன்கிட்ட பேசலாம் ன்னு ஆரம்பிக்கும் போது அம்மாவும் அப்பாவும் வந்து பேச முடியாம கெடுத்துட்டாங்க.. கடவுளே இதுல இருந்து என்னை எப்படியாச்சும் காப்பாத்திடு.. கிஷோர்: எனக்கு தெரில டா.. ரொம்ப அழுதாங்க ன்னு அவர் சொன்னாரு.. நான் போனப்போ ரூமுக்குள்ளயே தான் இருந்தாங்க.. நான் பாக்கல.. புவனேஷ்வரி: அப்படி அடிக்கிற அளவுக்கு என்னடா பிரச்னை.. அவளும் சொல்ல மாட்டிங்கிறா.. நீயும் சொல்ல மாட்டிங்கிற.. கிஷோர் திருதிருவென முழித்து விட்டு “ஒன்னும் இல்லமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி வீட்டின் வெளியே காற்று வாங்க வர.. வனிதாவின் ஸ்கூட்டி வந்து நின்றது.. கிஷோர்: (முகத்தில் புன்னகையுடன்) வா வனிதா.. ஆனால் அவளோ முகத்தில் வருத்தம் மட்டுமே காட்டியபடி “என்ன அத்தான்.. அக்கா வீட்டுல ஏதோ பிரச்சனையா? ராம் இப்போ தான் சொன்னான்.. அக்கா இருக்காங்களா?” என்றாள்.. கிஷோர்: உள்ள தூங்கிட்டு இருக்கா வனிதா.. நீ உள்ள போ.. எல்லாரும் உள்ள தான் இருக்காங்க.. தனக்குள் இருந்த ஆதங்கத்தை தன் குடும்பத்தின் முன்பு வெளிக்காட்டாமல் அடக்கி கொண்டிருந்த கிஷோர் அதற்கு மேலும் முடியாமல் வெளியே வந்தான்.. அழகாக சென்று கொண்டிருந்த கலையின் வாழ்வில் நான் செல்லாமல் இருந்திருந்தால் அவள் எப்பொழுதும் போல பொழுதை கழித்துக் கொண்டிருப்பாள்.. நான் சென்றதால் பாவம் அவளுக்கு எவ்வளவு இன்னல்கள் முதலில் ராகுலை இழுத்து விட்டேன், இப்பொழுது அவர்கள் குடும்பத்தில் பெரிய மனக்கசப்பு ஏற்பட காரணமாகி விட்டேன்.. என்றெல்லாம் அவன் யோசிக்க அவன் விழிகளில் நீர் உடைத்து வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது.. கண்களை மிக இறுக்கமாக மூடினான்.. உலகமே கும்மிருட்டாக மாறியது.. உள்ளுக்குள் எழும் மனக்குமுறலை அடக்க அடக்க அவன் சுவாசத்தின் வேகம் அதிகரித்து சீரற்ற நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது.. ராகுலின் மேல் கோபத்துடன் கண்களை திறந்தான்.. கண்களை திறந்து பார்த்தவன் தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்து போனான்.. சில வினாடிகள் சுவாசிக்க மறந்தான்.. வீட்டின் வாசலில் நின்ற அவனுக்கு எதிரே இருக்க வேண்டிய வீட்டின் வெளிக்கதவு காணவில்லை.. சுற்றிலும் இருந்த வீடுகள், வெளிக்கதவை தாண்டியதும் இருக்கும் தார்சாலை, சாலையில் ஆங்காங்கே இருக்கும் மின் கம்பங்கள், அந்த நகரில் எங்கிருந்து பார்த்தாலும் கம்பீரமாய் காட்சி அளிக்கும் ஐந்தாறு தெருக்களுக்கு அப்பால் இருந்த கோயிலின் கோபுரம்.. என்று எதுவுமே காணவில்லை.. கண நேரத்தில் அனைத்தும் காற்றில் கரைந்தது போலிருந்தது.. எல்லாம் மறைந்து போயிருக்க அவனுக்கு முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சை பசேலென்று சமமான பரந்த நிலப்பரப்பு.. அண்ணாந்து மேலே வானத்தை பார்த்தால் அப்படி தெளிவான வானம்.. வாகனங்கள் விடும் புகை, தொழிற்சாலைகள் கொப்பளிக்கும் ரசாயன காற்று எதுவும் இல்லாமல் தூய்மையான வானம்.. அந்த சூழலுக்கே உகந்த பரிசுத்தமான குளிர்ந்த காற்று அவன் நாசிக்குள் செல்ல அவன் உடலை உள்ளுக்குள் இருந்து குளிப்பாட்டியது போன்ற ஒரு உணர்வு.. “என்ன இது உணர்ச்சி பொங்கலில் மூர்ச்சையாகி உயிரை இழந்து சொர்கத்திற்கு வந்து விட்டேனா?” என்று எண்ணம் வந்தது.. ஆனால் அந்த எண்ணத்தால் அவனுக்கு அச்சம் வராமல் முகத்தால் எதிரே நிகழும் வினோதத்தை பருகிய வண்ணம் இருந்தான்.. அந்த பச்சையான பரந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே அழகிய மரங்களும் தொலை தூரத்தில் மலைக்குன்றுகளும் தென்பட்டது.. “ம்ம்ம்.. தான் செல்ல வேண்டிய இடம் அதுவே” என்று மனம் சொல்ல, அந்த திசையை நோக்கி நட என்று அவன் மூளை கட்டளையிட்டது.. ஆனால் அவன் கால்கள் கட்டளையை ஏற்க மறுத்து ஒரு அணு கூட அசையாமல் அப்படியே இருந்தது.. “தன் கால்களும் செயலிழந்து விட்டதா?” என்று கீழே பார்த்தான்.. கால்கள் முழுவதும் முற்கள் குத்தி இருந்தது.. மேலும் அவன் ஒரு ஒற்றை காலடி பாதையில் நின்று கொண்டிருந்தான்.. அந்த பாதையின் தொடர்ச்சி மலைக்குன்றுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது.. பாதை முழுதும் முற்கள் இருந்தது.. கால்களும் அசைய மறுக்க, எங்கே இருக்கிறோம்? என்ன செய்கிறோம்? என்ன நடக்கிறது? என்று எதுவும் புரியாமல் கிஷோர் தவித்துக் கொண்டிருந்தான்.. மனமானது எப்பொழுதெல்லாம் சங்கடத்தில் தவித்து திக்கற்று இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அது தனக்கு விருப்பப்பட்டவர்களை நாடிச்செல்லும்.. கிஷோரின் மனம் தானாக கலையை நாடியது.. கடிவாளம் போடாத குதிரை போல சிந்தனைகள் கலையை தாண்டி பலதிக்கமும் ஓடி ராகுலிடம் வந்து நின்றது.. அவன் தரும் இன்னல்கள் அதில் இருந்து தப்பிக்கும் வழி என்றெல்லாம் சிந்தித்தான்.. “ராகுலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எங்கள் வாழ்க்கையில் இருந்து சென்று விடு” என்று கேட்டு விடலாமா என்று அவன் மனதில் எண்ணம் உதித்த அதே நொடியில் அவனுடைய வலது கால் தானாக ஒரு அடி முன்னே எடுத்து வைத்தது.. பாதையில் இருந்த முள் பாதத்தில் தைக்க, ராகுலின் பிம்பம் கண் முன் தோன்றி ஏளனமாக சிரித்து “என் காலை நக்கு டா நாயே.. அதுக்கு அப்புறம் வேணும்னா உன்னை மன்னிக்கலாமா? வேணாமா? ன்னு யோசிக்குறேன்” என்று கூறி மறைந்தது.. பாதத்தில் தைத்த முள் அவனுக்கு உடலில் வலி ஏற்படுத்தாமல், மனதில் வலி கொடுத்தது.. கிஷோருக்கு தான் பைத்தியம் ஆகியது போல உணர்ந்தான்.. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று புரியவில்லை.. சூழ்நிலையை ஆராய்வதை கைவிட்டு “கலையை ராகுலிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அவன் சொல்லியபடி செய்வதில் தவறில்லை.. கலைக்காக அவனிடம் கெஞ்சுவதில் எனக்கொன்றும் இழுக்கில்லை” என்று அவன் மனதில் மற்றொரு எண்ணம் உதிக்க, அவனுடைய இடது கால் தானாக ஒரு அடி எடுத்து வைத்தது.. மற்றொரு முள் பாதத்தில் தைக்க சுவிட்ச் போட்டது போல சிவந்த முகத்தோடு ராகுலின் பிம்பம் தோன்றி “உன்னையும் அந்த தேவடியா முண்டையையும் சந்தி சிரிக்க வைக்கிறேன் டா” என்று கூறி மறைந்தது.. ராகுலிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுவது போல கிஷோரின் மனதில் எண்ணங்கள் உதிக்க உதிக்க அவனுடைய கால்கள் ஒரு அடி முன்னே எடுத்து வைத்துக் கொண்டே இருந்தது.. பாதத்தை முற்கள் குத்தி கிழிக்க ராகுலின் பிம்பம் மனதில் வலியை கொடுத்த வண்ணம் இருந்தது.. கிஷோர் ஏதோ புரிந்தது போல மேற்கொண்டு மனதில் எதுவும் எண்ணங்களை எழுப்பாமல் அவன் நிற்கும் அதே பாதையை திரும்பி பார்த்தான்.. முற்களும் கற்களும் குழிகளுமாய் நீண்ட பாதையாய் இருந்தது.. அவனுடைய எண்ணங்கள் தான் அவன் கால்கள் என்று புரிந்து கொண்டான், தன் வாழ்வில் தான் கடந்து வந்த பாதையை கூர்ந்து கவனித்தான்.. சிறுவயதில் இருந்தே தேவைக்காக மட்டுமே தன்னை பயன்படுத்திக் கொண்ட நண்பன் என்ற தோல் போர்த்திய சந்தர்ப்பவாதிகள், தோழமையுடன் நம்பி ஆரம்பித்த தொழிலை அபகரித்து கொண்டே துரோகிகள்.. என்று அவன் வாழ்க்கையில் கடந்த வந்த பாதை முழுதும் ஏமாற்றம், துரோகம், வஞ்சகம் நிறைந்து இருந்தது.. தன் வாழ்க்கையில் சந்தித்த வலிகள் அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல இப்பொழுது ராகுல் இருக்கிறான்.. என் வாழ்வில் நான் செல்லும் பாதை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று நொந்து உள்ளுக்குள் புழுங்கினான்.. யாருக்கும் எந்த தீங்கும் இழைப்பதற்கு நினைத்து கூட பார்த்தது இல்லையே எனக்கு ஏன் இவ்வளவு மோசமான பாதை.. வஞ்சங்கள் நிறைந்த இந்த பாதையில் என்னுடைய வாழ்க்கையின் பயணத்தை தொடர்ந்தால் இலக்கின் பாதி தூரத்தை கடக்கும் முன்னரே வஞ்சத்தால் குத்தி கிழிக்கப்பட்டு மரணித்து விடுவேனே.. நான் செல்வதற்கு வேற பாதையே இல்லையா? என்று காது ஜவ்வு கிழியும் வண்ணம் ஓலமிட்டான்.. வாழ்க்கை முழுதும் கள்ளம் கபடம் அறிந்திராமல் தூய்மையாக இருந்த கிஷோரின் மனது ராகுலின் வஞ்சகத்தால் அடிவாங்கி, அவன் மனம் இவ்வளவு நாள் கடந்து வந்த பாதையில் இருந்து விலகி மாற்று பாதையை தேடியது.. தன்னுடைய பாதையை ஒட்டியது போலவே ஒரு புதிய பாதை பச்சை புற்களை கிழித்துக்கொண்டு தோன்றியது.. சிறிய கற்கள் கூட இல்லாமல் நடப்பதற்கே சுகமாக இருக்கும் ஆற்று மணல் போல மென்மையான பாதை.. கிஷோர் தாமதிக்காமல் அந்த பாதைக்கு தாவினான்.. தன் வாழ்க்கையின் புது அத்தியாயம் இங்கே இருந்து தொடங்க போகிறது என்பது போல உணர்ந்தான்.. முன்பு போலவே ‘நடந்து செல்’ என்று அவன் மூளை இட்ட கட்டளையை அவன் கால்கள் மறுத்தது.. இந்த புதிய பாதையில் இருந்து ராகுலிடம் மன்னிப்பு கேட்டால் அவன் மன்னித்து விடுவான் என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் மன்னிப்பு கேட்க எண்ணினான்.. ஆனாலும் அவன் கால்கள் அசையவில்லை.. மீண்டும் மீண்டும் ராகுலிடம் மன்னிப்பு கேட்க கால்கள் அசையாமல் அப்படியே இருந்தது.. தன்னுடைய எண்ணங்கள் தானே கால்கள் இப்பொழுது என்னாயிற்று என்று விளங்காமல் தவித்தான்.. அவன் நின்று கொண்டிருந்த பாதை அதனுடைய வேலையை கிஷோரின் மேல் காட்ட தொடங்கியது.. கிஷோரின் மனதை வேறு விதமாக சிந்திக்க தூண்டியது.. மன்னிப்பு கேட்டு கேட்டு நொந்து போன கிஷோர், தவறு இழைத்தவன் அவன் ஆனால் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினான்.. அந்த எண்ணம் அவன் மனதில் தோன்றியதும், மறத்து போயிருந்த அவன் கால்களில் ரத்தம் பாய்ந்தது போலிருந்தது.. “மன்னிப்பு கேட்க வேண்டியது அவன்” என்று அடுத்த எண்ணம் உதிக்க கால் கட்டை விரல் துடித்தது.. “கலைக்கு அவன் கொடுக்குற தொல்லைக்கு அவனை பதில் சொல்ல வைக்கணும்” என்ற எண்ணத்தால் பத்து கால் விரல்களும் துடித்து ஆட்டம் போட்டது.. உடல் முழுதும் புது ரத்தம் பாய்ந்தது போன்று ஒரு அற்புத உணர்வு.. அந்த உணர்வை மேலும் பருக உடல் தூண்ட அவனுடைய எண்ணங்கள் தீவிரம் அடைந்தது.. “அவுசாரி மகன் அவனை பழி தீக்கணும், கலைக்கு என்னவெல்லாம் தொல்லை கொடுத்தானோ, இன்னும் என்னவெல்லாம் கொடுக்க நினைக்கிறானோ அதுல பத்து மடங்கு அதிகமா அவனுக்கு நான் தொல்லை கொடுக்கணும்” என்ற எண்ணம் உதித்த அதே நொடியில் அவனுடைய வலது கால் முன்னே ஒரு அடி எடுத்து வைத்தது.. வஞ்சகத்தால் காயம் பட்ட அவனுடைய கால்கள் அந்த புது மண்ணை தீண்டியதும் அவனுடைய உடலின் நரம்பு மண்டலம் மொத்தத்தையும் மென்மையாய் சுண்டி விட்டது போன்ற உணர்வில் அவன் உடல் சிலிர்த்தது.. உடலின் உள்ளுறுப்புகள் அனைத்திலும் பனி படர்ந்து சில்லிட்டது போன்ற அற்புத உணர்வு.. அவனுடைய வாழ்க்கையின் மீதியை கடப்பதற்கு உதவும் இந்த புதிய பாதைக்கும், அதன் தரும் சுகத்துக்கும் முழுதும் அடிமையாக மாறிய கிஷோர், ராகுலை வஞ்சிப்பதற்கு மனதில் எண்ணங்களை பிறப்பிக்க கால்கள் அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்தது.. அந்த பாதை அளித்த சுகத்தில் மீண்டும் கண்களை இருக்க மூடி பின் திறந்தான்.. அவனுடைய செவிகளில் மீண்டும் வாகங்களின் இரைச்சல், நாசிக்குள் மீண்டும் அழுக்கடைந்த காற்று சென்றது, விழிகளில் வீட்டின் வெளிக்கதவுமாய் நிகழ் காலத்துக்கு வந்து வீட்டிற்குள் சென்றான்.. ஒரு நிமிஷம்…….. ஒரு நிமிஷம் இருங்க………… ஐயோ………… கதையை மேல சொல்றது க்கு என் பேணா எழுத மாட்டிங்குது.. குண்டி ஃபுல்லா மை வச்சிக்கிட்டு அதை வாய் வழியா கக்க மாட்டேன் அடம் பிடிக்குதே!!!!!!!! பேணா: என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு.. அப்புறம் நான் எழுதுறேன்.. நான்: சீக்கிரம் கேளு.. வாசகர்களை காக்க வைக்காத.. பேணா: கிஷோர் இப்போ தான் முத தடவை இந்த பாதைல கால் வைக்கிறான்.. ஆனா ராகுல் இந்த பாதையிலேயே பொறந்து வளந்து கொட்டை போட்டவன்.. அவன் முன்னாடி கிஷோர் கத்துக்குட்டி தான.. இப்படி இருக்கும் போது கிஷோரால ராகுலை பழி வாங்க முடியுமா? நான்: Let’s wait and see.. Shall we? My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.
11-10-2020, 01:23 PM
Wowwww, simply rocking update. Loved the way you are going forward. Masterpiece narration. Hats off to you.
11-10-2020, 01:57 PM
சூப்பர் கதை
11-10-2020, 03:11 PM
Semma thala. Kishore valkai muzhukka karpanaiyileye poyidum Polave.
11-10-2020, 06:16 PM
Beautiful update
11-10-2020, 09:39 PM
(This post was last modified: 11-10-2020, 09:43 PM by Arul Pragasam. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super sago. Lked the path you are taking this forward.
11-10-2020, 10:34 PM
தலை இது காமக் கதை படிப்பது போல இல்லை...
அப்படியே ஒரு நாவல் படிப்பது போல் உள்ளது... எனிவே கதை அருமையாக போகிறது... கிஷோர் அந்த ராகுலை வெல்ல வேண்டும் |
« Next Oldest | Next Newest »
|