Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஐசிசி டெஸ்ட்: கோலியின் முதலிடத்துக்கு ஆபத்து: நெருங்கிவிட்ட வில்லியம்ஸன்

[Image: koli1and-williamjpg]கான் வில்லியம்ஸன், விராட் கோலி : கோப்புப்படம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டெஸ்ட் அணிகளுக்கு இன்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் தன் வாழ்நாளில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்  இருந்தாலும், 915 புள்ளிகள் பெற்று அவரை நெருங்கி இருக்கிறார் வில்லியம்ஸ.
 அதேபோல நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லேதம், நீல் வாக்னர் ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்தால், லேதம் சதம் அடித்தார். இதனால், இருவரும் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் பேட்ஸ்மேன் தரவரிசையில் 897 புள்ளிகளுடன் கேன் வில்லியம்ஸன் இருந்தார். ஆனால், இரட்டை சதம் அடித்தபின், தரவரிசையில் முன்னேற்றம் கண்டு 915 புள்ளிகள் பெற்றார். ஆனாலும், தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடிக்கிறார்.
வங்கதேசத்துடன் இன்னும் டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில், விராட் கோலியின் முதலிடத்தைப் பிடிக்க வில்லியம்ஸனுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கு முன் நியூசிலாந்து தரப்பில் முன்னாள் வேகப்பந்துவீ்ச்சாளர் ரிச்சார்ட் ஹேட்லி 909 புள்ளிகள் பெற்றிருந்ததே உயர்வானதாகும். அதையும் இப்போது வில்லியம்ஸன் முறியடித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதம், ஜீத் ராவல் ஆகியோரும் சதம் அடித்தனர். இதனால், லேதம் தரவரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ராவல் 5 இடங்கள் உயர்ந்து 33-வது இடத்துக்கு வந்துள்ளர்.

 நியூஸி. வேகப்பந்துவீச்சாளர் வாக்னர் : படம் உதவி கெட்டி இமேஜஸ்

 
பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடங்கள் முறையே விராட் கோலி, வில்லியம்ஸன், புஜாரா, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், வார்னர், நிகோலஸ், மார்க்ரம், டீ காக், டூபிளசிஸ் ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட்  போல்ட் 2 இடங்கள் சரிந்து, 769 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு பின்னடைந்துள்ளார், டிம் சவுதி 766 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். அதேசமயம், நீல் வாக்னர் 3 இடங்கள் முன்னேறி, 745 புள்ளிகளுடன் 11-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
வங்கதேசம் அணியில் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 11 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மகமதுல்லா 12 இடங்கள் முன்னேறி 40-வது இடத்திலும் சவுமியா சர்க்கார் 67-வது இடத்துக்கும் உயர்ந்தனர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: 530662184083317597644126630361960837808128njpg]
பிகானரில் பாகிஸ்தானின் ஆளில்லா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை
ராஜஸ்தான், பிகானரில் சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானத்தை இந்திய விமானப்படைச் சுட்டு வீழ்த்தியது.
இது குறித்து இந்தியப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
திங்கள் காலை 11.30 மணியளவில் விமான ஊடுருவலைக் கண்டுபிடித்தோம். உடனடியாக Su-30MKIs (போர்விமானம்) வானில் எழும்பியது இதனையடுத்து  பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா போர்விமானம் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.  ஆளில்லா விமானம் சர்வதேச எல்லையின் இன்னொரு புறத்தில் போய் விழுந்தது.
இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே ஆளில்லா விமானத்தை கண்காணிப்பு நோக்கங்களுக்காக எல்லைப்பகுதியில் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த செவ்வாயன்று பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பிறகே இந்திய விமானப்படை உச்சபட்ச எச்சரிக்கையில் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் நேற்று தரையில் உள்ள ராடார் சாதனம் பாகிஸ்தான் ஆளில்லா போர் விமானம் ஊடுருவியதைக் கண்டுபிடித்தது. பிறகு சுகாய்-30 ரக ஜெட் ஒன்று வான்வெளியில் கண்காணிப்புச் செய்து கொண்டிருந்த போது ஊடுருவல் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
கடந்த 6 நாட்களில் 2வது முறையாக இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானத்தை அனுப்ப முயன்று தோல்வி அடைந்தது பாகிஸ்தான். பிப்.27ம் தேதி கட்சில் இது போன்றதொரு முயற்சி முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Like Reply
ஒருநாள் கிரிக்கெட்டில் 500-வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

[Image: 201903060803438972_India-records-500th-O...SECVPF.gif]

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சா்ர்பில் கேப்டன் விராட் கோலி சதம் 116(120) ரன்களும், விஜய் சங்கர் 46(41) ரன்களும் எடுத்தனர்.

251 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி தனது 500-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 558 ஒரு நாள் போட்டி வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி இதுவரை 963 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 500 வெற்றியும், 414 தோல்வியும், 9 டையும் கண்டுள்ளது. 40 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. #500thODIwin #INDvAUS #India
Like Reply
காலையில் பேச்சுவார்த்தைக்கு ஸ்டாலினை அணுகிய தேமுதிக நிர்வாகிகள்:

தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுகவுடன் தொடங்குவதற்கு முன்னரே காலையில் ஸ்டாலினை தொடர்புகொண்ட தேமுதிக நிர்வாகிகள் பேசியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரைமுருகனுடன் செல்போனில் பேசவில்லை என சுதீஷ் மறுப்பு தெரிவித்தாலும் திமுக தரப்பில் அவர் பேசினார் என தெரிவிக்கின்றன
[Image: download-8jpg]
தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே இன்று காலையில் திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக சார்பில் அணுகியதாக திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது வந்த தகவல், விருதுநகர் கிளம்பும் அவசரத்தில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலினை காலையில் தொடர்புகொண்டு தேமுதிகவின் நிர்வாகிகள் பேசினார்கள், நான் ஊருக்குச் செல்கிறேன் எதுவாக இருந்தாலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேசுங்கள் என  ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஸ்டாலின், பேச்சுவார்த்தைக்குழு தலைவர் துரைமுருகனை தொடர்புகொண்டு தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன நிலையில் இருக்கிறார்கள் என கேட்டு வையுங்கள் நான் ஊரிலிருந்து திரும்பியவுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து துரைமுருகன் பேச்சுவார்த்தைக்குழு உறுப்பினர்களை அழைத்து வீட்டில் காத்திருந்துள்ளார். அவரை அதன்பின்னரே தேமுதிக நிர்வாகிகள் 3 பேர் சந்தித்துள்ளனர். அவர்களிடம் ஸ்டாலின் கூறியபடி முதலில் உங்கள் முடிவுதான் என்ன?, உங்கள் நிலைப்பாடு என்ன? உறுதியாக ஒருபக்கம் நில்லுங்கள்.
நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது உங்கள் தலைவர் விஜயகாந்துக்கு தெரியுமா? என அடுக்கடுக்காக துரைமுருகன் கேள்வி எழுப்பியதாக அவரே பேட்டியில் தெரிவித்தார். அவர்கள் தடுமாற்றத்தை கண்ட துரைமுருகன் உங்கள் கவுரவத்துக்கு ஏற்றப்படி கொடுக்க எங்களிடம் தொகுதி இல்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து ஸ்டாலினிடம் பேசி, அவர் துரைமுருகனை கைகாட்ட அதன்பின்னர் துரைமுருகனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இடமில்லை என தெரிந்ததும் சுதீஷ் மீண்டும் பின்வாங்கி அதிமுகவுடன்தான் கூட்டணிப்பற்றி பேசி வருகிறோம் என கூறியதாக திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இன்று நடைபெற்ற சம்பவம் திமுகவைப் பயன்படுத்தப்பார்த்ததில், திமுக கொடுத்த பதிலால் தேமுதிகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Like Reply
`சகல வசதிகளுடன் ஏ.சி பேருந்து!’- வேலூர் டு சென்னைக்கு ரூ.160 மட்டுமே கட்டணம்

வேலூரிலிருந்து சென்னைக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பல வசதிகளுடன்கூடிய ஏ.சி பேருந்து இயக்கப்படுவதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
[Image: vellore_ac_bus_16564.jpg]

சென்னையிலிருந்து, பல்வேறு வழித்தடங்களுக்கு போக்குவரத்து வசதிக்காகப் புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இவற்றில், சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு, பல வசதிகளுடன்கூடிய ஏ.சி பேருந்துகளை முதல்வர் தொடங்கிவைத்திருக்கிறார். வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்த ஏ.சி பேருந்தை, பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் பேருந்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் ஏ.சி ப்ளோயர்கள் உள்ளன. இருக்கையின் பின்னால் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் பேருந்தின் மேற்புறத்தில் அவசர வழி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின்போதும், எந்த நிறுத்தம் என்பது குறித்த தகவலைப் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில், 6 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியாகும். பேருந்தில் குளிர்ந்த காற்று குறையாமல் இருக்க, மேற்கூரை மற்றும் பக்கவாட்டுகளில் பி.வி.சி பேனல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 


[Image: vellore_AC_bus_new_16215.jpg]
முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் உள்ள கதவுகள் ரிமோட்டினால் இயங்கும். ‘ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி’ போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. இத்தனை வசதிகள் நிறைந்த இந்த ஏ.சி பேருந்தில், வேலூரிலிருந்து சென்னை செல்ல கட்டணம் வெறும் ரூ.160 மட்டும்தான். இது, சாதாரண பேருந்துக் கட்டணத்தைவிட 30 ரூபாய்தான் அதிகம். அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கட்டணத்திலிருந்து 10 ரூபாய் மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். வேலூரிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணி மற்றும் பகல் 2 மணிக்கு இந்த ஏ.சி பேருந்து இயக்கப்படும். அதேபோல, சென்னையிலிருந்து காலை 10 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு வேலூருக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சுட்டெரிக்கும் வெயிலில், சுகமான பயணம் மேற்கொள்ளலாம். இதேபோன்று கூடுதலாக மேலும் சில பேருந்துகளை இயக்க வேண்டுமெனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். 
Like Reply
"தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து வாக்களிப்போம்" - ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகி அறிவிப்பு

[Image: 201903080509114970_do-not-support-dmk-ca...SECVPF.gif]

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றிய,  நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன்,  கிருஷ்ணகிரி மாவட்ட  ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்த மதியழகன், பதவி ஆசைக்காக திமுகவில் இணைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 20 ஆயிரம் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை திமுகவில் இணைப்பதாக கூறி, போலி இணைப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் சீனிவாசன் கூறினார். மேலும்,  திமுக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மதியழகன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ரஜினி மக்கள் மன்றத்தினர் வாக்களிப்பார்கள் என்றும் சீனிவாசன் தெரிவித்தார். 
Like Reply
அமெரிக்காவில் சலுகை தொடரவேண்டும்[Image: 201903071945238264_The-concession-in-the...SECVPF.gif]
ஐக்கியநாடு சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு ஆதரவாக அந்த நாடுகளின் நடவடிக்கைகள் பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு வலிமையைக்கூட்டும். இதுபோல, வெளிநாடுகளோடு வைத்திருக்கும் வர்த்தக உறவு நாட்டின் உற்பத்தியை பெருக்கும். வர்த்தகத்தை தழைக்கச்செய்யும். அன்னிய செலாவணியை பெருக்க உதவும். வெளிநாடுகளுக்கு நாம் மேற்கொள்ளும் ஏற்றுமதியின் அளவு இறக்குமதியைவிட அதிகமாக இருந்தால், அன்னிய செலாவணி கையிருப்பு அதிக அளவில் உயரும். அந்த அளவில் இந்தியா–அமெரிக்கா இடையே இருக்கும் வர்த்தகத்தை எடுத்துக்கொண்டால், நாம் அமெரிக்காவில் இருந்து செய்யும் இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்க ஏற்றுமதி மட்டும் 15.8 சதவீதமாகும்.


2017–18–ம்ஆண்டை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் இருந்து 4 ஆயிரத்து 788 கோடி டாலர் (நேற்று ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ.70.03 ஆகும்) மதிப்பிலான பொருட்களின் ஏற்றுமதி நடந்து இருக்கிறது. அதே ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு 2 ஆயிரத்து 661 கோடி டாலர்தான். இந்தநிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, எந்தெந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவகையில் நடவடிக்கை எடுக்க முனைப்புடன் செயல்படுகிறார். இதற்காக இறக்குமதி வரிகளையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமை மேரிலேண்ட் நகரில் ஒரு மாநாட்டில் பேசும்போது, ‘அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஹார்லே–டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தியாவில் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. நான் 2 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இது 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதேநேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யும்போது 2.4 சதவீதம் வரிதான் விதிக்கப்பட்டு வந்தது. இதை நான் 25 சதவீதமாக உயர்த்தப்போகிறேன்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,784 பொருட்களுக்கு இதுவரை வரியில்லாமல் அமெரிக்காவில் இந்திய வர்த்தகர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அளிக்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி. என்று கூறப்படும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சலுகையின்கீழ் கடந்த 2017–18–ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 560 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் 19 கோடி டாலர் ஏற்றுமதியாளர்களுக்கு பலனாக கிடைத்தது.

மொத்தம் 120 நாடுகளுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டு வரும்நிலையில், இந்தியாவுக்கு ரத்து செய்யப்படுவது நிச்சயமாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். 1,784 பொருட்களின் விலை உயர்வால் ஏற்றுமதி நிச்சயம் வெகுவாக குறையும். எனவே, மத்திய அரசாங்கம் உடனடியாக அமெரிக்கா அரசுடன் பேசி, நாம் குறைக்கவேண்டிய இறக்குமதி வரிகளை நமக்கு முடிந்த அளவு குறைத்து, இந்த வர்த்தக முன்னுரிமை சலுகையை தொடர்ந்து பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். நமது ஏற்றுமதியில் ஒரு கணிசமான அளவு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் மேற்கொள்கிறது என்றநிலையில், அந்த தொழில்களும் நசுங்கிவிடாமல் இருக்க இதை உடனடியாக செய்ய அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
Like Reply
முற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி!
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organization) முறையிட முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. ஜிஎஸ்பியில் இருந்து இந்தியாவை நீக்குவது நடைமுறைக்கு எதிரானது. இது இந்தியாவுடன் அமெரிக்கா செய்த ஒப்பந்தத்திற்கு எதிரானது. அமெரிக்கா விதிகளை மீறுகிறது என்று இந்தியா புகார் அளிக்க போகிறது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]


[Image: container-ship-1551850919.jpg]
Like Reply
அதேபோல் இன்னொரு வகையில் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரியை விதிக்க போகிறது. அமெரிக்கா உணவு பொருட்கள், மாமிசங்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. 74 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவின் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

[Image: modi-trump-15-1551851065.jpg]
  
[color][size][font]
மோதல் உடனே
ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யவும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் 1ம் தேதிக்குள் இந்த பிரச்னையை சரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். இல்லையென்றால், இந்தியா அமெரிக்கா மீது ஏப்ரலில் இருந்து புதிய வரி கொள்கையை அமல்படுத்தும். சமயங்களில் இதற்கு இடையில் கூட இந்தியா இந்த வரிக்கொள்கையை அறிமுகப்படுத்தும். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையே வெளிப்படையான பொருளாதார மோதல் ஏற்பட்டு உள்ளது.[/font][/size][/color]
Like Reply
அயோத்தி வழக்கில் தீர்வு காண சமரச குழுவில் இடம்பெற்ற 3 பேருமே தமிழர்கள்

[Image: 201903090701539564_Ayodhya-Dispute-in-SC...SECVPF.gif]
சமரச குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இப்ராகிம் கலிபுல்லா, சிவங்கங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர். 1951-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி பிறந்த இவருடைய இயற்பெயர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா. இவர் 1975-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்தார். நீண்டகாலமாக வக்கீலாக பணியாற்றி அனுபவம் வாய்ந்த இவர் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு உள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கலிபுல்லா நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் காஷ்மீர் மாநில பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி ஆனார். 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்ற கலிபுல்லா, 2016-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அதை தொடர்ந்து பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமரச குழுவில் இடம்பெற்றுள்ள ஆன்மிக குரு ஸ்ரீரவிசங்கர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு பிறந்தார். 1981-ம் ஆண்டு வாழும் கலை அமைப்பை நிறுவினார். அதை தொடர்ந்து 1987-ம் ஆண்டு ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு சர்வதேச மனித மதிப்புக்கான அமைப்பை தொடங்கினார்.

நீண்டகாலமாகவே அயோத்தி வழக்கில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வக்பு வாரியங்கள் மற்றும் ராமஜென்ம பூமி அமைப்பினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய ஆலோசனைகள் பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சமரச குழுவில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளதால் இந்த பிரச்சினையை தீர்க்க மேலும் முனைப்போடு அவர் செயல்பட வாய்ப்பு உள்ளது.

மூத்த வக்கீலான ஸ்ரீராம் பஞ்சு சென்னையை சேர்ந்தவர். மும்பை சட்டக்கல்லூரியில் பயின்ற இவர் 1976-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக தன் பணியை தொடங்கினார். 2005-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் முதன் முதலாக சமரச மையத்தை தொடங்கினார். பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு உதவிடும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட அனுபவம் கொண்டவர். மூத்த வக்கீலான அவர் சட்ட நுணுக்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தையை அணுகுவதில் திறமை படைத்தவர். சமரச மையம் நடத்தி வரும் இவர் அது தொடர்பாக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.
Like Reply
இந்திய சமரச பேச்சாளர்கள் கழகத்தின் தலைவராகவும், சர்வதேச சமரச பேச்சாளர்கள் கழக நிர்வாக குழு இயக்குனராகவும் இவர் உள்ளார். சிங்கப்பூர் சர்வதேச சமரச மையம் இவரை தங்கள் குழுவில் ஒருவராக நியமித்து உள்ளது. அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையே உள்ள நிலப்பரப்பை பங்கிட்டு கொள்வதில் நீண்ட காலமாக இருந்த சட்டப்பிரச்சினையை தீர்க்க இவரை தான் சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. மேலும் மும்பையில் பார்சி சமூகத்தினரின் பொது பிரச்சினையை தீர்க்க இவருடைய உதவியை சுப்ரீம் கோர்ட்டு நாடியது.

சமரச குழுவில் இடம் பெற்றது குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கூறுகையில், “அயோத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்றார்.

[Image: 201903090701539564_1_9xcmkmpn._L_styvpf.jpg]



ஆன்மிக குரு ஸ்ரீரவிசங்கர் டுவிட்டரில், “ஒவ்வொருவரின் உணர்வுகளையும் தான் மதிப்பதாகவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.

மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு வெளியிட்ட அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டு மிகப்பெரிய பொறுப்பை வழங்கி உள்ளது. இந்த பணியை நான் சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.#AyodhyaCase
Like Reply
மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 47 மாதம் சிறை


[Image: 201903090122059193_Donald-Trumps-Former-...SECVPF.gif]
[Image: fb-icon-art.png] Facebook [Image: twt-icon-art.png] Twitter [Image: google-icon-art.png] Google+ [Image: mail-icon.png] Mail[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பதிவு: மார்ச் 09,  2019 04:30 AM
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் பிரசார குழு மேலாளர் பால் மானபோர்ட் (வயது 69).

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறவும், ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது. இதையொட்டி ராபர்ட் முல்லர் குழு சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை வளையத்தில் பால் மானபோர்ட்டும் சிக்கி உள்ளார். 

மேலும் இவர் உக்ரைனில் பிரசாரகராக செயல்பட்டு, அதன் மூலம் பெருமளவு பணம் கிடைத்தும், அந்த வருமானத்தை மறைத்து தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாகவும், வெளிநாட்டு வங்கி கணக்கு குறித்து குறிப்பிடாமல் மறைத்ததாகவும், வங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக பால் மானபோர்ட் மீது அலெக்சாண்டிரியா நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் அவரது தண்டனை விவரம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து அவர் மிகுந்த வேதனை வெளியிட்டுள்ளா
Like Reply
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி விராட் கோலியின் சதம் வீண்


[Image: 201903090337430915_One-Day-Against-Austr...SECVPF.gif]
[Image: fb-icon-art.png] Facebook [Image: twt-icon-art.png] Twitter [Image: google-icon-art.png] Google+ [Image: mail-icon.png] Mail[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விராட் கோலி சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது.
Like Reply
ஒருவேளை ரபேல் ஆவணங்களை திருடன் மீண்டும் ஒப்படைத்திருக்கலாம்!’ - கலாய்த்த ப.சிதம்பரம்

[Image: P.Chidambaram_16074_11204_18598.jpg]
ரபேல் போர்விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ்கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி, `இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், `ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை வழங்கி வருகிறது. எனவே இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


[Image: Rafale_-_RIAT_2009_3751416421-696x464_10590_18328.jpg]
இந்த மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், `ரபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுவிட்டது’ என தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனங்கள்; விமர்சனங்கள் எழுந்தன. இந்த திருட்டு ஆவணங்களை ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டது, அரசாங்க ரகசியங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்டன, என கூறிய அட்டர்னி ஜெனரல், `அப்படி எதுவும் நடக்கவில்லை!’ என்று திடீர் பல்டி அடித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், `ரஃபேல் ஆவணங்கள் திருடுபோகவில்லை. ரஃபேல் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்தது போட்டோ காப்பிகள் மட்டுமே. எதிர்கட்சிகள்  ஆவணங்களை திருடி போட்டோ எடுத்தவிட்டன என்று தான் கூறினேன். ஆவணங்கள் திருடுபோய்விட்டன என்பது பொய்” என்றார். அட்டர்னி ஜெனரல் விளக்கத்துக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.`புதன்கிழமை திருடப்பட்ட ஆவணங்கள் வெள்ளிக்கிழமை நகலெடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை திருடிச்சென்ற திருடன் மறுநாள் அதை நகலெடுத்து ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றார். 
Like Reply
வர்த்தக யுத்தம்... இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்..!

சீன அதிபரான ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவருக்குமிடையே இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டின் போது நேருக்குநேர் சந்திக்கவிருக்கிறார்கள்.  கடந்த எட்டு மாதங்களாக உலகையே அச்சுறுத்திவந்த அமெரிக்க-சீன வர்த்தகப் போர் இந்தச் சந்திப்பின்மூலம் முடிவுக்கு வரும் வகையில், புதிய வணிக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருப்பதாகச் செய்திகள் வெளியாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உள்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர். 
[Image: p70a_1552095425.jpg]
இந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், இந்தியா விற்கு வழங்கிவந்த சிறப்புச் சலுகைகளைப் பறிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது, நமது ஏற்றுமதியாளர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.    

பறிபோகும் நாற்பதாண்டு சலுகை

கடந்த 1976-ம் ஆண்டில், இந்தியா உள்பட 129 வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் வர்த்தக முன்னுரிமைத் திட்டம் (Generalized System of Preferences) ஒன்று அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப் பட்டது. வளரும் நாடுகளின் போட்டித் திறன் அதிகரிக்க வேண்டும், அவற்றின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, வளரும் நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் ஆயிரக்கணக்கான பொருள் களுக்கு அமெரிக்காவில் சுங்கவரி விதிக்கப்படாது.  

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து 5.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40,000 கோடி) மதிப்பாலான சுமார் 2000 விதமான பொருள்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. இவற்றில் கரிம ரசாயனங்கள், வாகனங்கள், இரும்பிலான பொருள்கள், மின் இயந்திரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ட்ரம்பின் அதிரடி

அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது அடுத்த நடவடிக்கையாக, முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைத் திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் இந்திய அரசு நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டும் ட்ரம்ப் அரசு, குறிப்பாக அந்த நாட்டின் மருத்துவ இயந்திரங்கள் மற்றும் பால்பொருள் ஏற்றுமதியில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்தியாவுடன் சேர்த்து துருக்கியின் சிறப்புச் சலுகைகளும் பறிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்பு இல்லை

இந்தச் சலுகை பறிப்பு நடவடிக்கை, அமெரிக்கா விற்கான இந்தியாவின் ஏற்றுமதியைப் பெரிய அளவில் பாதிக்காது என்று இந்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வாத்வான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

[Image: p70b_1552095451.jpg]
முன்னுரிமை சலுகைத் திட்டத்தின்கீழ் ஏற்றுமதி செய்வதினால், இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன் சுமார் 190 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,400 கோடி) மட்டுமே. எனவே, ஏற்றுமதியாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட மாட்டார்கள் என அனுப் வாத்வான் கூறியுள்ளார்.  சலுகைத் திட்டத்தை அமெரிக்கா ரத்து செய்ததை எதிர்த்து இந்தியா போராடும் என்றும் அறிவித்துள்ளார் அவர். 
Like Reply
அமெரிக்காவின் முக்கியத்துவம்

பொதுவாக, இறக்குமதி சார்ந்த ஒரு நாடாக இந்தியா இருந்தபோதும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய இறக்குமதியாளராகத் திகழும் அமெரிக்காவிற்கு, வருடந்தோறும் சுமார் 48 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3,36,000 கோடி) மதிப்பிலான பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப் படுவதால், இந்தியாவிற்கு 22 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி அமெரிக்க வர்த்தகத்தின் மூலம் கிடைக்கிறது. 

தற்போது ‘முன்னுரிமை சலுகை ‘நீக்கப்படுவதின் மூலம் மொத்த ஏற்றுமதியில் 10  சதவிகிதத்திற்குமேல் குறைந்துபோவதுடன், அந்நியச் செலாவணி வரவும் பெருமளவு குறைந்துபோக வாய்ப்புள்ளது. மேலும், இந்தச் சலுகை நீக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்படப்போவது, சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தாம். பணமதிப்பு நீக்கம் மற்றும்   ஜி.எஸ்.டி அறிமுகத்தினால் ஏற்கெனவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களின் தற்போதைய கடினமான சூழ்நிலையில், ‘ஏற்றுமதிப் போட்டித்திறன் பாதிப்பு’ இன்னும் அதிக எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கக்கூடும். 

குப்புறத் தள்ளிவிட்டு குழியும் பறிக்கும் ட்ரம்ப்

சிறப்பு முன்னுரிமைத் திட்டத்தை நீக்கப்போவதாக அறிவித்ததுடன் மட்டும் ட்ரம்ப் அரசு ஓய்ந்துவிடவில்லை. ஏழை, பணக்கார நாடுகள் என்ற வாதங்கள் எல்லாம் தற்போதைய காலகட்டத்திற்குப் பொருந்தாதவை என்று வாதிடும் ட்ரம்ப் அரசு, ‘சிறப்பு மற்றும் மாறுபட்ட நடைமுறைத் திட்டத்தின் (Special & Differential Treatment)’ கீழ் இந்தியச் சந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organization) முறையிட்டு வருகிறது. 

[Image: p70d_1552095483.jpg]
இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்குச் சாதகமான தீர்ப்பு வரும்பட்சத்தில் இந்தியா, தனது விவசாயப் பொருள்களுக்கான மானியத்தை  மேலும் குறைக்க வேண்டிய வாய்ப்பு உருவாகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 

இந்தியர்களின் வருடாந்திர வருவாய் 1000 டாலர்களுக்கும் மேல் உயர்ந்துவிட்டதால், ஏற்றுமதி சலுகைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில், ட்ரம்ப் அரசின் முயற்சிகள் வெற்றி பெற்றால், இந்திய சிறு ஏற்றுமதியாளர்களின் பாடு படுதிண்டாட்டமாகிப் போய்விடும். 

வணிகத் தந்திரங்களில் கைதேர்ந்த ட்ரம்ப்

ட்ரம்ப், மற்ற நாடுகளுடனான வணிக உறவின் மீதான தனது நிலையை அடிக்கடி அதிரடியாக மாற்றிக்கொள்வது, வெளிப் பார்வைக்குக் கேலிப்பொருளாகத் தெரிந்தாலும், அவற்றின் பின்னே பல்வேறு திரைமறைவு காய்நகர்த்தல்கள் உள்ளன. 

உதாரணமாக, உலகத்தின் தொழிற்சாலையாக கருதப்படும் சீனாவில் உற்பத்தியாகும் பொருள்கள், அமெரிக்காவில் அதிகளவில் இறக்குமதி செய்யப் படுவது, அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் முக்கியக் காரணமாகக் கருதிய ட்ரம்ப், சீன இறக்குமதியின்மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். 200 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,40,000 கோடி) மதிப்பிலான சீன இறக்குமதி பொருள்களின்மீது 10% அதிகப்படியான சுங்க வரியை விதிக்கப் போவதாகவும் அறிவித்தார். [Image: p70c_1552095499.jpg]

இதனைக் கடுமையாக எதிர்த்த சீனா,  அமெரிக்கப் பொருள்களின்மீது அதிகக் கட்டுப்பாடுகளை சுமத்தி தன்னுடைய பழியினைத் தீர்த்துக்கொண்டது. என்றாலும், தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்துள்ள சீனாவின் ‘வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம்’ என்ற அந்தஸ்த்தை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது கவலைதரும் விஷயமே!  

மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையின்போது, அமெரிக்காவிடமிருந்து மிக அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொள்ளும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால், இந்தியா மீதான கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் போல தோன்றினாலும், இந்திய இணையதள சில்லறை வர்த்தகத் துறை மீதான சமீபத்திய கட்டுப்பாடுகள், இந்தத் துறையில் பெரிய அளவில் கால்பதிக்க விரும்பும் அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க ஜாம்பவான் களுக்கு எதிராக அமைந்துள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. 

தற்போதுள்ள நிலையில், முக்கியமான இரு ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவையாக மாறிவிட்டன. நம் நாட்டில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு ஆன்லைன்மீது பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது மத்திய அரசாங்கம். இந்த விஷயத்தில் இந்திய அரசினை வழிக்குக் கொண்டு வரவே, இந்த அதிரடி அறிவிப்பை ட்ரம்ப் எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

அமெரிக்கா - இந்தியா இடையிலான இந்த வர்த்தக யுத்தத்தில் சிறு குறு ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோமாக! 

குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!
Like Reply
21 அல்ல... 18  சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் குறித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னையில் அறிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அதன் பிறகே அங்கு தேர்தல் நடைபெறும்.
மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
Like Reply
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது: வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி

[Image: sunil-arorajpegjpg]தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாள்தோறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.
இதனால், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர்களை படிப்படியாக அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் தெரிவித்ததாவது:
Like Reply
முதல்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ம் தேதி - 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது
2-ம் கட்ட வாக்குபதிவு:  ஏப்ரல் 18-ம் தேதி - 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது
3ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 23-ம் தேதி  14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
4-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29-ம் தேதி  9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
5-ம் கட்ட வாக்குப்பதிவு:  மே 6-ம் தேதி  7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
6-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 12-ம் தேதி  7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு
7-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 19-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு
இறுதியாக வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
Like Reply
[Image: 0?ui=2&ik=43f0e90c13&attid=0.1&permmsgid...w1904-h927]
Like Reply




Users browsing this thread: 168 Guest(s)