Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஒவ்வொரு முறையும் ஆணை பிறப்பிக்க வேண்டுமா ? உயர்நீதிமன்றம் காட்டம்..
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் சென்னை நகரத்தில் ஆங்காங்கே அத்துமீறி வைக்கப்படுகின்ற பேனர்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறுகையில், தேவையின்றி அத்துமீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற எட்டு ஆண்டுகளுக்கு முன்னே ஆணை பிறப்பித்துவிட்டதாகவும், மீண்டும் ஒவ்வொரு முறையும் ஆணை பிறப்பிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள், அவர்கள் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை கவனிக்காமல் ஹெலிகாப்டரிலே செல்கிறார்கள் என்றும் வினைவியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிவசேனா - பா.ஜ., கூட்டணி தொடருமா?
மும்பை : முதல்வர் பதவி குறித்து தாங்கள் விதித்த நிபந்தனைக்கு ஒத்துவரவில்லை என்றால் பா.ஜ., உடனான கூட்டணி முறித்துக்கொள்ளப்படும் என சிவசேனா கூறியுள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசை சிவசேனா விமர்சித்து வந்தது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி தொடர பா.ஜ., முயற்சித்து வந்தது. இது தொடர்பாக பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், வரும் லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக, பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் அறிவித்தன. மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், பா.ஜ., 25 தொகுதிகளிலும், சிவசேனா, 23 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. 'சட்டசபை தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்' என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டணி முடிவான இரண்டு நாட்களாக பா.ஜ., - சிவசேனா தலைவர்கள் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது. சட்டசபை தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கிறதோ அந்த கட்சி, முதல்வர் பதவியை எடுக்கும் என பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாடில் கூறியுள்ளார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா தலைவர் ராம்தாஸ் கடாம் கூறுகையில், பா.ஜ., - சிவசேனா இடையிலான ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. கொன்கான் பகுதியில் உள்ள நானார் சுத்திகரிப்பு திட்டத்தை அகற்றுவது மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் பதவியை பா.ஜ., - சிவசேனா தலா இரண்டரை ஆண்டுகள் என பிரித்துக் கொள்வது. இந்த நிபந்தனைக்கு பா.ஜ., இணங்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் எனக் கூறினா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அப்ப பாக். எதிர்ப்பு என்ன ஆச்சு.. சவுதி சல்மானுக்கு பெரும் வரவேற்பு அளித்த மோடி..
டெல்லி: இந்தியா வந்த சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி விமானம் நிலையம் வரை சென்று வரவேற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று இரவுதான் இவர் டெல்லி விமான நிலையம் வந்தார்.
பாகிஸ்தான் சென்று இருந்த சல்மான், அங்கிருந்து சவுதி தலைநகர் ரியாத் சென்றுவிட்டு பின் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை சல்மான் இந்தியாவில் செய்ய இருக்கிறார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இவ்வளவு கோடியா
பாகிஸ்தான் சென்ற சவுதி முடி இளவரசர் மிகவும் சிறப்பாக அந்நாட்டில் நடத்தப்பட்டார். அங்கு அவர் மொத்தம் 1.40 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக அவர் இந்த ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். அதே சமயம் மிக முக்கியமான ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் அவர் அங்கு செய்தார்.
[color][font]
என்ன பிரச்சனை
இதனால் பிரதமர் மோடிக்கு என்ன பிரச்சனை என்று கேட்கலாம். பாகிஸ்தான் சென்ற சல்மான் உதிர்த்த சில முத்துக்கள்தான் தற்போது பிரச்சனைக்கு காரணம் ஆகியுள்ளது.
1. நான் சவுதியின் முடி இளவரசர் போல செயல்பட மாட்டேன், சவுதிக்கான பாகிஸ்தான் தூதர் போல செயல்படுவேன்.
2. என்னால் பாகிஸ்தானுக்கு எந்த நொடியும் ''நோ'' என்று சொல்ல முடியாது.
3. எனக்கு மிக மிக நெருக்கமான நாடு பாகிஸ்தான்.
4. பாகிஸ்தானும், சவுதியும் மற்ற எல்லா நாடுகளையும் விட, மிக நெருக்கமான நட்பு நாடுகள், என்று சல்மான் கூறினார்.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வரவேற்பு
இந்த நிலையில்தான் இந்தியா வந்த சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி விமானம் நிலையம் வரை சென்று வரவேற்றார். டெல்லி விமான நிலையத்திற்கே விதிகளை மீறி பிரதமர் மோடி நேரடியாக சென்றார். அங்கு சல்மானை கட்டிப்பிடித்து, கை குலுக்கி மிக இணக்கமான வரவேற்பை கொடுத்தார் மோடி.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கடும் எதிர்ப்பு
மோடி இப்படி வரவேற்றதுதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் சல்மானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். காலிஸ்தான் போராளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை இந்தியா வந்த போது, மோடி மிக மோசமான நடத்தினார். வரவேற்பு கூட ஜஸ்டினுக்கு மோடி கொடுக்கவில்லை. இந்த நிலையில் சல்மானுக்கு மட்டும் ஏன் இந்த வரவேற்பு என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
[color][font]
மிக மோசம்
அதேபோல், பாகிஸ்தானுடன் பல லட்சம் கோடிக்கும் ஒப்பந்தம் செய்துவிட்டு சல்மான் வந்திருக்கிறார். இப்போதுதான் புல்வாமா சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி சிரித்தபடி ஏன் இவ்வளவு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும், என்று சமூக வலைத்தளங்களில் பல கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.[/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தான்: முஷாரப் ஒப்புதல்
துடில்லி: காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தான், என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கொடூரமானது தான். இதில் சந்தேகம் இல்லை. ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மீது எனக்கு கருணை இல்லை. அவன் என்னை கொல்ல திட்டம் தீட்டினான். ஆனால், காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் இல்லை. ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கருணை இருக்காது. தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருக்கும் என நான் நம்பவில்லை.
அனைத்து விவகாரத்திலும், பாகிஸ்தான் மீது இந்தியா தவறாக குற்றம்சாட்டுகிறது. இதனை இந்தியா நிறுத்த வேண்டும். பிரான்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் இணைக்க, இந்தியா முயற்சி செய்கிறது. இதனை நிறுத்த வேண்டும்.
சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததாக இந்தியா சொல்கிறது. இது தவறு. சர்ஜிக்கல் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு முஷாரப் கூறினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
26-02-2019, 05:48 PM
(This post was last modified: 26-02-2019, 05:48 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்திய விமானப்படையின் அதிரடியில் அழிந்த பயங்கரவாத முகாமின் முக்கிய தகவல்...!
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அழித்த பயங்கரவாத முகாம்களில் முக்கிய முகாமான பால்கோட் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பால்கோட்டில் ஜெய்ஷ் முகாம் தகர்க்கப்பட்டதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
முகாமில் அதிகளவு வெடிப்பொருட்கள் இருந்தது. 200-க்கும் அதிகமான ஏ.கே. 47 துப்பாக்கிகள் இருந்தது. கணக்கில் அடங்காத கையெறி குண்டுகள், வெடிப்பொருட்கள் இருந்தது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது. இப்போது இவை அழிக்கப்பட்டுள்ளது. பால்கோட் பகுதியில் ஏராளமான பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தேசியக் கொடிகள் வரையப்பட்டு இருந்தது எனவும் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் மவுலானா அம்மார், மலானா தல்ஹா சாயிப் உள்ளிட்டோர் குறி வைக்கப்பட்டதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முகிலன் காணாமல் போன விவகாரம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்ட அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து லயோலா மணி என்பவர் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர்கள் குழுவினர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர், காஞ்சிபுரம் எஸ். பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் முகிலன் காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதல் டி-20: தோனி செய்த மோசமான சாதனை... ரசிகர்கள் அதிருப்தி...!
#MSDhoni scripts an unwanted record first T20I v Australia | உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தோனியின் மந்தமான ஆட்டம் இந்திய அணிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. #INDvAUS
இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று (பிப்.24) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி. (ICC)
இந்தியா சார்பில் அதிகபட்சமாக, தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக, தோனி 37 பந்துகளைச் சந்தித்து 29 ரன்கள் எடுத்திருந்தார். அதில், ஒரே ஒரு சிக்சர் அடித்திருந்தார். அவர் ஸ்ட்ரைக் ரேட் 78.38.
தோனியின் மந்தமான ஆட்டத்தால் ரன்களை அதிக அளவு குவிக்க முடியவில்லை. விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆடுகளம் மோசமாக இருந்தாலும் அவர் பந்துகளை அடித்து ஆடாமல் விட்டது அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டி-20 போட்டியில் குறைந்த பட்ச ஸ்ட்ரைக் ரேட் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை தோனி படைத்தார்.
1. 2009 - ஜடேஜா 25 (35), ஸ்ட்ரைக் ரேட் - 71.42
2. 2019 - தோனி 29 (37), ஸ்ட்ரைக் ரேட் - 78.38
3. 2006, தினேஷ் மோங்கியா 38 (45), ஸ்ட்ரைக் ரேட் - 84.44
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தோனியின் மந்தமான ஆட்டம் இந்திய அணிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எல்லையில் 12 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில், கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி, 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில், நேற்று அதிகாலை, பாக்.,கின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது, இந்திய விமானப்படை விமானங்கள், குண்டுமழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தின.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தியாவின் தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாக்., நடத்தி வருகிறது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாக்., ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தோல்விக்கு தோனியே காரணம். மறைமுகமாக சாடும் – பும்ரா மற்றும் கோலி
ந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.
இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியே காரணம் என்று சில ரசிகர்கள் கூறினாலும் பும்ரா, கோலி ஆகியோர் மறைமுகமாக தோனியை சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஏனெனில், பும்ரா பேசும்போது இன்னும் பத்து முதல் 15 ரன்கள் வரை அடித்திருந்தால் இந்தியாவெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார். தோனி கடைசி நேரத்தில் அதிக சிங்கிள் ஓடுவதை தவிர்த்தார்.
மேலும், இதுகுறித்து கோலி பேசுகையில் இந்திய அணிக்கு 15 ஓவர்கள் வரை ஆட்டம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதன் பிறகு இந்திய அணியின் ரன் உயரவில்லை என்று தெரிவித்தார். 15 ஓவர்களுக்கு மேல் தோனி ஒருவர் மட்டுமே களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
27-02-2019, 04:46 PM
(This post was last modified: 27-02-2019, 04:47 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
`இந்திய விமானியை சிறைபிடித்துள்ளோம்!’ - பாகிஸ்தான் தகவல்
ல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை முதலில் மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியா போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது'' என்றது.
இந்த நிலையில், இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளாயின. இந்தியா தரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில், `இந்திய விமானங்களை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். ஒரு வீரரை பிடித்துவைத்துள்ளோம்'' என்றனர். இதற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்ததாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பாகிஸ்தான் தாக்குதல்: "பதிலடி தர முடியும் என்பதை காட்டவே இந்த நடவடிக்கை" - இம்ரான் கான்| LIVE
படத்தின் காப்புரிமைHTTP://INDIANAIRFORCE.NIC.IN
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
14:00 PM "நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், எந்த வித பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படவில்லை. எங்கள் மீது அத்துமீறல் திணிக்கப்பட்டால் எங்களால் பதில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை இந்தியாவுக்கு காட்டவே இந்த நடவடிக்கை" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
"இறையாண்மையுள்ள எந்த நாடும் மற்றொரு நாடு நீதிபதியாகவும், தண்டனை அளிப்போராகவும் மாறுவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான், அத்துமீறல் நடந்தால் பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியாவிடம் வலியுறுத்தினோம்." என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்
3:30 PM: நேற்று பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மிக் 21 விமானத்தை இந்தியா இழந்ததாகவும், விமானத்தின் விமானியை காணவில்லை என்றும், பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கோருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2:30 PM: இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வடக்கே உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்திய ஆளுகையில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் ஆகிய இடங்களிலும், அமிர்தசரசு, சண்டிகர் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
2:00 PM: பிடிக்கப்பட்ட விமானியின் வீடியோ என்று பாகிஸ்தானால் பகிரப்பட்ட, வீடியோவில் விமானியின் பெயர் அபிநந்தன் என்று அவர் தெரிவிக்கிறார்.
அந்த வீடியோ பாகிஸ்தானால் பகிரப்பட்டுள்ளது. இந்திய அரசு இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.அதன் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் உறுதி செய்ய இயலவில்லை
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்து தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானம்: சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
பிரதிநிதித்துவப்படம் - படம்: ஏபி
பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்துள்ள நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானம் இன்று இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றது. பாகிஸ்தான் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. தாக்குதல் நடத்தும் திட்டத்துக்குள் அந்த விமானங்கள் இந்திய பகுதிக்குள் வந்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி தாக்குதலை நடத்தினர். இதையடுத்து அந்த விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. எனினும், அவற்றில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
மற்றொரு விமானம் அங்கிருந்து தப்பிச் சென்றது. சுட்டு வீழ்த்தப்பட்ட எப் 16 விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு எல்லை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
•
Posts: 115
Threads: 2
Likes Received: 3 in 2 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
1
ஆறாவது நாளாக எல்லைப்பகுதியில் பாக்.படைகள் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி
ஜம்மு:
நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட பூஞ்ச் மாவட்டம், மெண்டோர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று இரவு 7 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.
•
|