Posts: 174
Threads: 1
Likes Received: 14 in 12 posts
Likes Given: 2
Joined: Jan 2019
Reputation:
3
Raji went to her self protective shell by distancing with others.
It takes long time for her to open up even Karthik wants too.
This Karthik needs to a lot more than "ok Kankani" Karthik
Excited for the future updates
Can anyone tell who is chandru's lover forgot it.
The comedy scene bewteen Karthik and Chandru is supee
•
Posts: 77
Threads: 2
Likes Received: 175 in 37 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
7
மறு நாள் கார்த்திக் ஆபிஸ் சென்று தனது கேபினில் அமர்ந்தான். எப்போது காபின் வந்த உடன் அனைவரும் உள்ளனரா, வேலைகள் எப்படி நடக்கிறது என்று பார்ப்பது வழக்கமாக வைத்து கொள்வான். ஆனால் இன்று வந்ததும் கண்கள் ராஜியை தேடியது.
ராஜியின் டேபிள் காலியாக இருந்தது. அவள் இன்னும் வரவில்லை என எண்ணிக்கொண்டான். அரவிந்திடம் அவளை பற்றி கேட்கலாமா என யோசித்தான்.
அவனிடம் கேட்டாள் எதாவது கோவமாக சொல்லுவான். கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என முடிவு செய்தான். அவள் பெர்மிஷன் எதாவது அப்ளை செய்திருக்கிராளா என பார்த்தான். ம்ஹூம் பண்ணவில்லை.
கார்த்திக் தன் நிலையில் இல்லாமல் நேரத்தை கடத்தி கொண்டிருந்தான். சீட்டில் இருந்து கொண்டே அவள் வருகிறாளா என பார்த்தான். இரண்டு மணி நேரமாக அவள் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
லீவ் அப்ளை செய்திருக்கிராளா என பார்த்தான். எந்த மெயிலும் வரவில்லை. அரவிந்தை அழைத்து கேட்பது தான் சரி என்று அரவிந்தை அழைத்தான்.
“ சொல்லு கார்த்திக். “
“ நம்ம டீம்ல எல்லாரும் வந்துட்டாங்களா. “
“ வந்துட்டாங்க கார்த்திக். ஆனா ராஜி மட்டும் வரலை. “
“ நீதான டீம் லீடர். உன்கிட்ட இன்பார்ம் பண்ண மாட்டாங்களா. இல்ல நீ கேட்க மாட்டியா. “
“ கட்டின புருஷன் நீயே கேட்கல. இதுல நான் எங்க கேட்குறது. பொண்டாட்டி ஏன் வரலன்னு கூட தெரியல. அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. “ வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.
“ என்ன சொன்ன. கேட்கல. “
“ இல்ல. ஏன் வரலன்னு என்கிட்டே எதுவும் சொல்லல. மெயில் பண்ணவும் இல்ல. “
“ நீ கால் பண்ணி கேட்கலையா. “
“ ராஜி வரல. லீவ் எடுத்ததுக்கு ரீசனும் சொல்லல. அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணு. “
“ இப்போ எதுக்கு கோவப்படுற. சரி நீ போ வேலைய பாரு. “
“ சரி நான் வரேன். “ சொல்லிவிட்டு அரவிந்த் அங்கிருந்து சென்றான்.
இவன்கிட்ட கூட சொல்லலையா. என்ன ஆச்சு. கோவத்துல இருக்காளோ. ஒரு வேலை நேத்து நான் திட்டினதுல எதாச்சும் தப்பான முடிவு எடுத்துட்டாளா. அய்யோ அப்படி இருக்காது. எல்லாம் என் தப்பு. என்னதான் இருந்தாலும் நான் அப்படி சொல்லிருக்கா கூடாது. இந்த மீரா சனியனும் லீவ் எடுத்துட்டு போயிட்டு. எல்லாத்துக்கும் அவதான் காரணம். இப்போ அவ வீட்ல தனியா தான் இருக்கணும். பேசாம வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துடலாமா. எஸ் அதன் சரி. மணியை பார்த்தான். லன்ச் முடித்து விட்டு கிளம்பிடலாம் என்ற முடிவுடன் வேலைகளை தொடர்ந்தான்.
மதிய உணவு இடைவேளையின் போது அரவிந்திடம் பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு ராஜி வீட்டை நோக்கி பைக்கை கிளப்பினான்.
ராஜியின் வெட்டின் அருகில் பைக்கை நிறுத்தி விட்டு டோர் அருகில் சென்றான். வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. காலிங் பெல்லை அலுத்தலாமா வேண்டாமா. தயக்கமாக இருந்தது.
ஐந்து நிமிடமாக யோசித்தான். சரி இவ்ளோ தூரம் வந்தாகிவிட்டது. அவளை பார்த்து சாரி ஆச்சும் கேட்டு விடலாம் என்று காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறக்கவில்லை.
நான்கு முறை மாற்றி மாற்றி அடித்தான். எந்த ரெஸ்பான்சும் இல்லை. கதவு திறக்கத ஒவ்வொரு நொடியும் கார்த்திக்கிற்கு திக் திக்கென்று இருந்தது. ராஜி கதவை திற மனதுக்குள் சொல்லி கொண்டே கதவை தட்டினான். மீண்டும் வேகமா கதவை தட்ட கதவு திறந்தது.
கதவு திறக்கவும் ராஜி கசங்கிய பூவாக கதவை திறந்தாள். கலைந்த முடிகளுடன் கன்னம் வீங்கிய முகத்துடன், இரவெல்லாம் அழுததால் கண்கள் சிவந்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது கார்த்திக்கிற்கு.
அவனை பார்த்த ராஜி அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் திரும்பி கொண்டாள். ஒரு நொடி பார்த்திருந்தாலும் கார்த்திக்கிற்கு அவள் முகம் ஆழமாக பதிந்தது. இது ராஜி தானா என அவனால் நம்ப முடியவில்லை. எப்போதும் பிரகாசமாக சிரித்த முகத்துடன் அழகாக இருக்கும் ராஜியா இது.
“ நான் உன்கிட்ட. உன்கிட்ட. இன்னைக்கு. “ வார்த்தைகள் வராமல் திணறினான்.
ராஜி பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் மெல்ல மெல்ல நடந்து சேர் அருகில் செல்வதற்குள் சேரை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தாள்.
“ ராஜி.” சொல்லிக்கொண்டே அவன் ஓடி சென்று அவளை தாங்கி கொண்டான். அவளை தன் மடியில் கிடத்தி கொண்டு அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான்.
“ ராஜி எழுந்துரு. ராஜி. ராஜி. என்னாச்சு. “ அவள் நெற்றியை தொட்டு பார்க்க அனாலாக கொதித்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது.
“ ச்ச நல்ல ஜுரம் அடிக்குது. அய்யோ இந்த நேரம் பார்த்து யாரும் இல்லையே.” போனை எடுத்து கேப் புக் செய்தான். கேப் வருவதற்கு 10 நிமிடம் ஆகும் என மெசேஜ் வர அவளை கைத்தாங்கலாக தூக்கினான். தூக்கி சென்று பெட்டில் படுக்க வைத்து விட்டு தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான். அவள் அரை கண்ணில் முழித்து பார்க்க “ ராஜி நான் பேசுறது கேட்குதா. இங்க பாரு ராஜி. என்ன பாரு. “ என்றான்.
ராஜி அவன் கையை உதற முற்பட்டாள். ஆனால் அதற்கு கூட தெம்பு இல்லாமல் கிடந்தாள். தந்து கர்சீப் எடுத்து தண்ணீரில் நனைத்து அவள் நெற்றியில் வைத்தான்.
10 நிமிடத்தில் கேப் வந்து விட அவளை தூக்கி சென்று கேப்பில் வைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றான்.
ஹாஸ்பிட்டல் வந்த உடன் உடனடியாக அவளை அட்மிட் செய்து பெட்டில் அட்மிட் செய்தார்கள். அவளை செக்கப் செய்த டாக்டரிடம் கேட்டான்.
“ டாக்டர் என்னாச்சு அவளுக்கு. இப்போ எப்படி இருக்கா. “
“ ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல. நீங்க யாரு அவுங்களுக்கு. “
“ நான் நான். ப்ர. ப்ர. இல்ல நான். “ ( பிரண்டு இல்லடா. ஹச்பன்ட்னு சொல்லு )
“ சொல்லுங்க மிஸ்டர். நீங்க “
“ அவுங்க ஹஸ்பன்ட் டாக்டர். “
“ என்ன சார். ஒரு நாள் புல்லா அவுங்க சாப்டல. அவுங்கள வேற அடிச்சிருக்கீங்க. நைட் புல்லா அழுதுருக்காங்க. அதான் BP குறிஞ்சி மயக்கம் ஆகிருக்காங்க. பீவர் வேற இருக்கு. என்ன தான் ஹஸ்பன்ட் வொயிப் இடைல சண்டை நடந்தாலும் அவுங்க சாப்பிட்டங்களா இல்லையானு கூடவா தெரிஞ்சிக்காம இருப்பேங்க. “
“ சாரி டாக்டர். என் தப்பு தான். இப்போ அவளுக்கு எப்படி இருக்கு. “
“ ஒன்னும் பிரச்சனை இல்லை. ட்ரிப்ஸ் போட்ருக்கோம். ட்ரிப்ஸ் ஏறி முடிச்சதும் கூட்டிட்டு போகலாம். நல்லா ஹெல்த்தியா சாப்பிட கொடுங்க. டேப்லெட் அண்ட் டானிக் கொடுக்குறேன் அதை டைம்க்கு சாப்பிட கொடுங்க. “
“ ஓகே டாக்டர். “
“ ஒரு மணி நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும். நீங்க போய் பாருங்க. “
“ தேங்க்ஸ் டாக்டர். “
வெளியே வந்து ராஜியை அட்மிட் செய்திருந்த ரூமிற்கு வந்தான்.
குழந்தையை போல இருந்த அவள் முகத்தை பார்த்தான்.
Posts: 77
Threads: 2
Likes Received: 175 in 37 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
7
சாரி ராஜி என்ன மன்னிச்சிடு. நான் அப்படி பேசிருக்க கூடாது. என்ன மன்னிச்சிடு. அவள் அருகில் அமர்ந்து கொடு சொன்னான். பேன் காற்றில் அவள் கலைந்த முடி நெற்றியில் பறந்து கொண்டிருக்க அதை எடுத்து அவள் காதோரம் போட்டு விட்டான். அவள் முகத்தை ஆசையாக தடவி விட்டான்.
அந்நேரம் சார் என்று நர்ஸ் வர அவளை விட்டு விலகி கொண்டு வாங்க என்றான்.
“ சார் உங்க பில் . இதை கவுண்டர்ல கட்டிடுங்க. மெடிசின்ஸ் இதுல இருக்கு இதை மெடிக்கல்ல வாங்கிக்கோங்க. “ கொடுத்து விட்டு நர்ஸ் சென்று விட்டாள்.
கார்த்திக் அனைத்தையும் வாங்கி கொண்டு அவளுக்கு குடிப்பதற்கு ஜூஸ் வாங்கி வந்தான். அந்நேரம் ராஜி மயக்கம் தெளிந்து எழுத்து அமர்ந்தாள்.
தான் இருந்த இடத்தை பார்த்து விட்டு, கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு சிரிஜ் இருப்பதை பார்த்தாள். அங்கு இருந்த நர்சை பார்த்து சிஸ்டர் என்றாள்.
“ சொல்லுங்க மேடம். “
“ எனக்கு என்ன ஆச்சு. என்ன கூட்டிட்டு வந்தது யாரு “
“ உங்க ஹஸ்பன்ட் தான் கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணினாங்க. உங்களுக்காக மெடிசின்ஸ் வாங்க போயிருக்காங்க. இப்போ வந்துடுவாங்க. “
“ சரிங்க சிஸ்டர். “ அவளுக்கு பதில் சொல்லி விட்டு நர்ஸ் வெளியேறி விட ராஜி எழுந்து உட்கார்ந்தாள்.
இவன் எதுக்கு இதெல்லாம் செய்யுறான். இவன் முகத்துலையே முழிக்க கூடாதுன்னு நினைச்சா இப்போ என்ன தேடி வரான். என்ன திடீர் அக்கறை என்மேல. ஒரு வேலை அத்தை சொல்லிருப்பாங்களோ. இவனுக்கா இதெல்லாம் தோணாதே. இல்லனா அரவிந்த் அண்ணா சொல்லிருப்பாங்க. ராஜி நீ எடுத்த முடிவு தான் சரி. அந்த வார்த்தை கேட்ட அப்புறமும் இவன்கிட்ட பேசுறது அசிங்கம். இவன் மேல இருந்த காதல் எல்லாம் நேத்தே செத்து போய்டுச்சு. பொண்ணுக்கு சுய மரியாதை ரொம்ப முக்கியம். இனி என் லைப்ல இவன் வேண்டாம். தீர்க்கமாக முடிவெடுத்து விட்டு அவனுக்காக காத்திருந்தாள்.
5 நிமிடத்தில் கார்த்திக் கையில் மெடிசின் கவர் மற்றும் ஜூஸ் உடன் வந்தான்.
சிரித்த முகமாக அவளிடம் வந்து “ ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. லைட்ட பீவர் தான். டேப்லெட் மெடிசின் சாப்பிட்டா சரி ஆகிடுமாம். நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடல. இந்தா இந்த ஜூசை குடி என்றான்.
ராஜி அவனை பார்க்காமல் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள். அவனை விட்டு தள்ளி சென்று பேட்டின் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
கார்த்திக் அவளை பார்க்க அவன் நிழல் அவள் மீது விழாமல் பெட்டில் விழுந்தது.
“ ஒஹ் நேத்து சொன்னத பாலோ பண்றியா. சரி இருக்கட்டும். முதல்ல இந்த ஜூசை குடி. “
அவளை நோக்கி ஜூசை நீட்ட அவள் வாங்காமல் சுவரை பார்த்து கொண்டிருந்தாள்.
“ இப்படியே எவ்ளோ நேரம் இருப்ப. சரி இங்க வைக்கிறேன். எடுத்து குடி. “
டேபிளில் ஜூசை வைத்து விட்டு அவளை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டான்.
ஆனால் ராஜி அதை எடுக்காமல் வெறுப்பாக சுவரை பார்த்து கொண்டிருந்தாள்.
கார்த்திக் அவள் ஜூசை குடிக்கிராளா என பார்த்து கொண்டிருந்தான். அனால் ராஜியிடம் எந்த அசைவும் தெரியவில்லை. சிரித்து கொண்டே போனை எடுத்து தனது அம்மாவிற்கு கால் செய்தான்.
ராஜி அவன் போன் செய்வதை பார்த்த உடன் அவன் போன் பேசிக்கொண்டே வெளிய சென்று விடுவான் என நிம்மதி அடைந்தாள். ஆனால் அவன் எதிர் முனையில் போனை எடுத்ததும் அம்மா என்று அவன் சொன்னதும் உடனடியாக ஜூசை எடுத்தாள்.
“ அம்மா நல்லா இருக்கேன். உன் மருமக தான் நல்லா இல்லை. “
“............”
“ இல்லமா சின்னதா காய்ச்சல் தான். “
“.........”
“ ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கோம். “
“...........”
“ சாப்பிட மாட்டேங்குரா. ஜூஸ் கொடுத்தேன். குடிக்கல. “
“...........”
“ இதோ கொடுக்குறேன். “ போனை கொண்டு வந்து அவன் அருகில் வைத்தான்.
ராஜி அதை எடுக்கவா வேண்டாமா என யோசித்தாள். பேசாமல் இருந்தாள் அத்தை தவறாக நினைக்க கூடும் என யோசித்து விட்டு போனை எடுத்து பேசினாள்.
“ அத்தை நான் நல்லா தான் இருக்கேன். ஜூஸ் குடிச்சிட்டேன் அத்தை. அவுங்கதான் தேவை இல்லாம உங்களுக்கு போன் பண்ணிட்டாங்க. “
“..........”
“ நான் பார்த்துகிடுறேன் அத்தை நீங்க கவலை படாம இருங்க. “
“..........”
“ சரிங்க அத்தை.. “
சில பல சம்பிராதய நலம் விசாரிப்புகளுடன் போன் இணைப்பு துண்டிக்கப்பட ராஜி கோவமாக கார்த்திக்கை பார்த்தாள்.
“ நானும் நீ குடிப்பனு பார்த்தேன். ஆனா நீ குடிக்கிற மாதிரி தெரியலை. அதான் அம்மாக்கு கால் பண்ணேன். “
“ எதுக்கு தேவை இல்லாம இப்படி செய்யுறீங்க. நான் உங்க கிட்ட வந்து கேட்டேனா. எனக்கு உடம்பு சரி இல்ல. வந்து ஹெல்ப் பண்ணுங்கன்னு. “
“ முதல்ல உன்கிட்ட சாரி சொல்லிக்கிடுறேன். நேத்து நான் பேசினது தப்பு தான். “
“ எனக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்கணும்னு தேவை இல்லை. நேத்து நீங்க சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா. நான் ஒரு ப்ப்ப்பப்ப்ப். சொல்லவே அசிங்கமா இருக்கு. “ அழுத முகத்துடன் அவள் கூற
“ ராஜி நான் . “ அவன் எழுந்து அவள் அருகில் செல்ல
“ இல்ல நிறுத்துங்க. கிட்ட வராதீங்க. நீங்க நீங்களாவே இருங்க. உங்கள கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு சாரி. இப்போ எனக்காக ஒரு ஹெல்ப் பண்றீங்களா. “
“ சொல்லு ராஜி நான் எதுவேனாலும் பண்றேன். “
“ உங்க கிட்ட இதை கேட்கவே அசிங்கமா இருக்கு. என் வாழ்க்கைளையே மனசே இல்லாம கேட்குற உதவி இதுவாக தான் இருக்கும். என்ன ரூம்ல விட்டுட்டு நீங்க திரும்பி பார்க்காம போய்டுங்க. ஆபிஸ் வந்தா கூட நீங்க எனக்கு பாஸ்ங்கற முறைல மட்டும் நம்ம ரிலேஷன் இருக்கட்டும். “
கார்த்திக் ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியேறினான். ராஜி கண்ணீரை துடைத்து விட்டு அவன் போவதையே பார்த்தாள்.
ராஜியை ரூமில் கொண்டு போய் சேர்த்து விட்டு அவள் கூறியதை போல திரும்பி பார்க்காமல் அங்கிருந்து தனது பிளாட்டிற்கு வந்து விட்டான்.
ரூமிற்கு வந்தவன் சாக்ஸை கூட கழட்டாமல் சோபாவில் அமர்ந்தான்.
அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை அலட்சியமாக கடந்து வந்திருக்கிறான். ஆனால் ராஜியை அவனால் அலட்சிய படுத்த முடியவில்லை. அவளுடன் இருந்த பழைய காலங்களை நினைத்து பார்த்தான்.
அவளுடன் முதல் முதலாக பஸ்ஸில் நெருக்கமாக அமர்ந்து வந்தது, வீட்டில் அவள் செய்த குறும்புகள், அவளது சிரித்த முகம், அவன் வீட்டிற்கு வந்து அவன் வாமிட் செய்ததை கைகளில் அவள் ஏந்தியது, கல்யானத்தன்று அவள் கழுத்தில் தாலி கட்டியது, முதல் இரவு அறையில் அவள் செய்த ரகளை முதல் இறுதியாக நேற்று நடந்தது வரை நினைவலைகளில் அசை போட்டான்.
இது தான் காதலா. இது சுகமா வலியா. இது என்னவிதமான அவஸ்தை. அவன் பார்க்கும் இடமெல்லாம் இப்போது ராஜி நின்று கொண்டிருந்தாள். ராஜியுடன் பைக்கில் சென்றது நினைவிற்கு வர வேகமாக பெட் ரூம் சென்று அன்று அவள் அவனை கட்டி கொண்டு பைக்கில் செல்லும் போது அவன் அணிந்திருந்த சட்டையை, துணிகளை கலைத்து தேடி எடுத்தான். அதை கண்டதும் சந்தோசத்தில் அதை எடுத்து தான் மார்போடு அனைத்து அந்த சட்டை வாசத்தை முகத்தில் வைத்து ஆழமாக சுவாசித்தான்.
அப்படியே பெட்டில் சரிந்து விழுந்து அதை தன்னோடு அணைத்து கொண்டான். ராஜி சாரி ராஜி. இனி நீயே என்னை விட்டு விலகி போனாலும் உன்ன விட்டு நான் போக மாட்டேன். ஐ லவ் யூ ராஜி. பொண்ணுங்கன்னா ஏமாத்திட்டு போய்டுவாலுக. அவங்க லவ்வெல்லாம் உடல் சார்ந்ததுன்னு தான் நான் இவ்ளோ நாட்களா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ வேற ராஜி. நீ எனக்காக பண்ணின ஒவ்வொரு விஷயத்துலயும் அவ்ளோ லவ் இருக்குன்னு இப்போ தான் எனக்கு புரியுது. இப்போ தான் நிராகரிப்பின் வலி என்னனு எனக்கு புரியுது. நீ ஆசைப்பட்ட கார்த்திக்கா, உன்னோட கார்த்திக்கா நான் வரேன் ராஜி.
அந்த சட்டையை எடுத்து வைத்து விட்டு இளையராஜா பாடல்களை கேட்க தொடங்கினான். இளையராஜா இசையை மீட்டி அதில் லயிக்க தொடங்கினான். இது வரை குத்து பாடல்களாக கேட்டு கொண்டிருந்த கார்த்திக் முதல் முதலாக இளையராஜாவிற்கு அடிமை ஆனான். நா முத்துகுமாரின் அதி தீவிர ரசிகன் முதல் முறையாக அவர் எழுதிய காதல் பாடல்களை தேடி கொண்டிருந்தான். முத்துக்குமார் சாதாரண பாடல்களை கூட மெய் சிலிரிக்க வைக்கும் கலைஞன் காதல் பாடல் என்றாள் கேட்கவா வேண்டும். அதிலும் ஸ்ரேயா கோஷலின் குரலில் உச்சத்தில் சென்று
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
இசையுடன் இந்த வரிகளை கேட்கும் போது ஏனோ அவன் சொர்க்கத்தில் மிதந்து ராஜியுடன் கைபிடித்து செல்வது போல உணர்ந்தான்
( நீங்களும் இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டிருங்கள். சிறிய இடைவேளைக்கு பின் கார்த்திக்கின் காதலை ரசிக்கலாம். )
Posts: 77
Threads: 2
Likes Received: 175 in 37 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
7
(14-05-2020, 09:45 AM)KevinSkywalker Wrote: Raji went to her self protective shell by distancing with others.
It takes long time for her to open up even Karthik wants too.
This Karthik needs to a lot more than "ok Kankani" Karthik
Excited for the future updates
Can anyone tell who is chandru's lover forgot it.
The comedy scene bewteen Karthik and Chandru is supee
ரொம்ப நன்றி நண்பா. இந்த மாதிரி கமெண்ட்டை படிக்கும் போது தான் உற்ச்சாகமாக உள்ளது. Super continue, semma update, adutha updateku waittingnu கமென்ட் படிக்கும் போது எழுதிய அப்டேட் நல்லா இல்லையோனு தோணும். சில சமயம் உங்கள் எழுத்து நடை பிரமாதம்னு சொல்லுவாங்க. அப்போ கூட எனக்கு சந்தோஷமா இருக்காது. கதையை பற்றி தெளிவாக உங்களை போன்றோர் சொல்வது தான் மேலும் மேலும் எழுத ஊக்கபடுத்துகிறது.
கமென்ட் செய்தவர்களை இங்கு நான் குறை சொல்லவில்லை. நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் என்னை எழுத தூண்டும். எவ்வளவு பெரிய அப்டேட் கொடுத்தாலும் அது சிறியதாக தான் தோன்றும். ஆனால் உங்களுக்காக நான் மணிகணக்கில் செலவு செய்யும் போது எனக்காக நீங்க சில நிமிடங்கள் செலவழித்து கதையை பற்றி கருத்திடுவது தவறு இல்லையே.
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
Arumai. Thadarattum avarkal kannamoochi aattam.
•
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
nice update
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
•
Posts: 2,024
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 328 in 301 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Really a nice update. Now Karthik understand his love towards raji. Now raji against Karthik eagerly waiting to know how Karthik is going to produced further?
•
Posts: 514
Threads: 0
Likes Received: 203 in 173 posts
Likes Given: 313
Joined: Aug 2019
Reputation:
2
Sorry bro, i am not good at giving long reviews about the updates. That is the reason why i say in simple words. If you are not happy with that, i will just click like button and be a silent reader.
•
Posts: 176
Threads: 0
Likes Received: 63 in 57 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
1
Raji loved karthik
But now
Karthik loves Raji
•
Posts: 339
Threads: 0
Likes Received: 144 in 128 posts
Likes Given: 825
Joined: May 2019
Reputation:
1
Super bro.. Eagerly waiting to know how Karthik is going to convince Raji and express his love for her...
•
Posts: 10
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Apr 2020
Reputation:
0
Super nanba...... waiting for nxt update
•
Posts: 335
Threads: 2
Likes Received: 134 in 78 posts
Likes Given: 11
Joined: Dec 2019
Reputation:
0
ithu varai raajiyoda luvaium karthik kovathaium paatha naanga ini karthikoda luvr boy avatharathai paaka poroma......
intha raji kovapaduvala illa karthick luvla karanji poiruvala.....
•
Posts: 506
Threads: 3
Likes Received: 206 in 169 posts
Likes Given: 254
Joined: Jun 2019
Reputation:
2
•
Posts: 209
Threads: 0
Likes Received: 67 in 63 posts
Likes Given: 3
Joined: May 2019
Reputation:
3
Neenga eluthunathula ellam avlo love feel irukuthe epdi?
And unga rendu story layum Karthik and Raji ah apdiye vechurukeengale why, any personal reasons? Sorry ethanum thappa ketruntha
•
Posts: 77
Threads: 2
Likes Received: 175 in 37 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
7
(15-05-2020, 11:05 AM)dotx93 Wrote: Neenga eluthunathula ellam avlo love feel irukuthe epdi?
And unga rendu story layum Karthik and Raji ah apdiye vechurukeengale why, any personal reasons? Sorry ethanum thappa ketruntha
Ellarum vaalkaila kadhalai kadandhu than vandhurupanga. adhuku nan mattum vidhi vilakka enna. enakum oru kadhal irundhuchu. one side love. success aagala. oru vela success aagirundha epadi irukumnu yosichadhula vara thakkam than indha storyla.
Yen eppodhum karthik rajinnu ketta, enaku andha peyar pudikum. Neengale yosichu paarunga murugan mariammal nu vacha nalla irukumannu. Ennoda ella kadhailaiyum karthik iruppano illaiyo theriyadhu. Aana raji kandippa iruppa.
Posts: 176
Threads: 0
Likes Received: 63 in 57 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
1
•
Posts: 209
Threads: 0
Likes Received: 67 in 63 posts
Likes Given: 3
Joined: May 2019
Reputation:
3
(15-05-2020, 12:20 PM)bsbala92 Wrote: Ellarum vaalkaila kadhalai kadandhu than vandhurupanga. adhuku nan mattum vidhi vilakka enna. enakum oru kadhal irundhuchu. one side love. success aagala. oru vela success aagirundha epadi irukumnu yosichadhula vara thakkam than indha storyla.
Yen eppodhum karthik rajinnu ketta, enaku andha peyar pudikum. Neengale yosichu paarunga murugan mariammal nu vacha nalla irukumannu. Ennoda ella kadhailaiyum karthik iruppano illaiyo theriyadhu. Aana raji kandippa iruppa.
Unga sense of sarcasm is good. Apo I expect that name to be closest to your heart. Everything will lead to our betterment don't worry my friend....
•
Posts: 174
Threads: 1
Likes Received: 14 in 12 posts
Likes Given: 2
Joined: Jan 2019
Reputation:
3
17-05-2020, 01:10 PM
(This post was last modified: 17-05-2020, 01:28 PM by KevinSkywalker. Edited 3 times in total. Edited 3 times in total.)
What will be his colleagues reaction if they see Karthik in that dress?
Chandru and Aravind will be the most happiest persons to know Karthik loves raji . As now onwards Karthik wouldn't spoil their love life
Initially raji achieved her things using Karthik's mother, now Karthik using the same method
Karthik's mother: appa neeyum neanya adichi famous agalamunu mudivu panita
Posts: 77
Threads: 2
Likes Received: 175 in 37 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
7
காலை எழுந்ததும் கார்த்திக் குளித்து முடித்து விட்டு நேற்று எடுத்து வைத்த சட்டையை அணிந்து கொண்டு ராஜி வீட்டிற்கு கிளம்பினான். போகும் வழியில் அவளுக்கு காலை உணவு வாங்கி கொண்டு சென்றான்.
வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்த இம்முறை திறக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் அழுத்த இம்முறை உள்ளே இருந்து வரேன் என்ற சத்தம் கேட்டது.
கார்த்திக் ராஜியை காணும் ஆவலில் காத்திருக்க ராஜி கதவை திறந்தாள். கார்த்திக்கை பார்த்ததும் அவள் வேண்டா வெறுப்பாக திரும்பி கொள்ள கார்த்திக் சிரித்து கொண்டே அவளை பார்த்து உள்ளே வரலாமா என்றான்.
ராஜி ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல கார்த்திக் அவளை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்.
“ இந்தா உனக்கு மார்னிங் சாப்பாடு இதுல இருக்கு. “
“ ஒன்னும் வேண்டாம். நான் சாப்பிட்டேன். இப்போ எதுக்கு இங்க வரீங்க. “
“ ஏன் வரக்கூடாதா. நம்ம ரெண்டு பேர்க்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அது உனக்கு நியாபகம் இருக்கா. “
“ இப்போ எதுக்கு தேவை இல்லாம பேசிகிட்டு. எதுக்கு வந்தீங்க. அதை மட்டும் சொல்லுங்க சார். “
“ நான் எதுக்கு வந்தேன்னா. “ சொல்லி கொண்டே அவள் பெட்ரூம் நோக்கி சென்றான்.
“ அங்க எதுக்கு போறீங்க. நில்லுங்க. “
கார்த்திக் அவள் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் ரூமினுள் சென்று அவளுடைய துணிகளை எல்லாம் எடுத்து பெட்டில் எடுத்து வைத்தான்.
“ என்ன பண்றீங்க. உங்களுக்கு வேணும். என்னாச்சு உங்களுக்கு. “
“ எனக்கு இந்த துணி எல்லாம் எடுத்து வைக்கணும். அதுக்கு ஒரு பேக் வேணும். பெரிய சைஸ் சூட்கேஸ் இருந்தாலும் நல்லது. கிடைக்குமா. “
“ உங்களுக்கு எதுக்கு என்னோட டிரஸ். முதல்ல வெளிய போங்க. இல்லனா நான் கத்தி கூச்சல் போட்டுடுவேன். “
“ அப்படியா. “ அவன் அவளை பார்த்து சிறிது விட்டு “ சூட் கேஸ் எங்க இருக்கு. “ சொல்லிக்கொண்டே தேடினான்.
“ ஆங். இந்த இருக்கு. “
ராஜிக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. லூசு மாதிரி இவன் செய்வதை எல்லாம் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தாள்.
துணிகளை எல்லாம் சூட் கேசில் வைத்து விட்டு ஊரில் இருந்து அவள் கொண்டு வந்த துணிகள் எல்லாம் ஒரு சூட்கேசில் அப்படியே வைத்து இருந்ததால் அதையும் எடுத்து கொண்டு ஜிப் இலுத்து மூடினான்.
“ ம்ம்ம்ம் முடிஞ்சுது. போகலாமா. “
“ எங்க போகணும். நான் எதுக்கு உங்க கூட வரணும். இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க. “
“ பார்த்தா தெரியல. உன் டிரஸ் எல்லாம் பேக் பன்னி வச்சிட்டேன். என்னோட பிளாட்டுக்கு போக போறோம். “
“ என்னது உங்க கூடவா. என்னபத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்க கூப்டா வரணும். பிடிக்கலன்னா போகனுமா. இல்ல நேத்து நீங்க சொன்ன மாதிரி அரிப்பெடுத்தவ எப்போ கூப்பிட்டாலும் வருவான்னு நினைச்சீங்களா. “
“ அய்யோ ராஜி சாரி ராஜி. அன்னைக்கு நான் ஏதோ கோவத்துல அப்படி சொல்லிட்டேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நான் இப்போ பழைய மாதிரி இல்ல. “
“ நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. “
“ சரி ராஜி நான் போறேன். போறதுக்கு முன்னாடி அம்மாகிட்ட போன் பண்ணி நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டு நான் போறேன். அவுங்க சொல்லட்டும் நான் என்ன பண்ணணு.”
“ அய்யோ ஏன் இப்படி என்ன கொள்ளுறீங்க. உங்களை லவ் பண்ணின பாவத்துக்கு நான் இன்னும் என்னலா அனுபவிக்க வேண்டி இருக்குதோ. “
“ சரி ராஜி இப்படி பண்ணிக்கலாம். நீ என்கூட எப்போதும் இருக்க வேண்டாம். அந்த சனியன் வந்ததும் நீ இங்க திரும்பி வந்துடு, உனக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் நீ என்கூட இரு. அப்புறம் நான் உன்ன திந்தரவு பண்ண மாட்டேன். ப்ளீஸ். “
“ ம்ஹூம் முடியாது. “
“ ஒரு தடவை ராஜி. கடைசியா நான் சொறதை கேளு.”
ராஜி அமைதியாக யோசிக்க தொடங்கினாள். அவனும் அவள் யோசிக்கட்டும் என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“ இல்ல இது சரி வராது. நாம ரெண்டு பேருக்கும் செட்டே ஆகாது. இதுவும் உங்களோட நடிப்பா இருக்கும். நான் வர மாட்டேன். “
“ சரி ராஜி அப்போ எனக்கும் வேற வழியே தெரியல. நான் எங்க பேசணுமோ அங்க பேசிக்கிடுறேன். “
“ எப்போதும் நான் உங்களுக்கு கீழ தான் இருக்கணும்னு நினைக்கிரீங்கல்ல. சரி வரேன். இபவும் என் மனசார நான் உங்க கூட வரல. நம்ம ரெண்டு பேரால பெரியவங்க கஷ்ட பட கூடாதுன்னு தான் நான் வர சம்மதிக்கிறேன். ஆனால் அங்க வந்தா நம்ம ரெண்டு பேருக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்க கூடாது. நீங்க யாரோ நான் யாரோ. எனக்காக நீங்க எதுவும் பண்ண கூடாது. உங்களுக்காக நான் எதுவும் பண்ண மாட்டேன். எந்த வகைளையும் நீங்க என்ன தொந்தரவு பண்ண கூடாது. “
“ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் ராஜி. நீ வரேன்னு சொன்னதே எனக்கு சந்தோஷம். “
“ நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. நான் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன். “
“ ஏன் நான் இங்க இருந்தா என்ன. நான் பாட்டுக்கு ஹால்ல ஒரு ஓரமா இருக்குரேனே. “ அவளை பார்த்து சிரித்தான்.
“ நான் மனசு மாறுரதுக்குள்ள வெளிய போங்க. “
“ ம்ம்ம்ம் ஓகே “ தலையை சிலிப்பி கொண்டு வெளியே சென்றான்.
கார்த்திக் வீட்டிற்கு வெளியே காத்து கொண்டிருக்க ராஜி குளித்து முடித்து விட்டு சிம்பிள்ளாக ஒரு சுடிதார் அணிந்து வெளியே வந்தாள்.
“ போகலாமா “
“ ம்ம்ம் போகலாம். “
“ ராஜி உன்னோட திங்க்ஸ் எங்க. “
“ வெளிய எடுத்து வச்சீங்கள்ள. தூக்கிட்டு வாங்க. “
“ எது. நானா. “
“ என்ன. புரியல. நீங்க தான எடுத்து வச்சீங்க. அப்போ நீங்க தான் தூக்கிட்டு வரணும். “
“ ஆமா நான் தான எடுத்து வச்சேன். நானே எடுத்துட்டு வரேன். “ கேப் டிரைவரை அவன் துணைக்கு கூப்பிட ராஜி அண்ணா நீங்க இருங்க. அவுங்க எடுத்து வைப்பாங்க. என்று சொல்லி விட்டு காரில் ஏறி கொண்டாள்.
கார்த்திக் அவளையே பார்த்து கொண்டிருக்க ராஜி கார் கண்ணாடி வழியாக கையை காட்டி டைம் ஆகுது போல சைகை செய்தாள்.
கார்த்திக் வெறுப்பாக சூட்கேசை தூக்கி கார் டிக்கியில் வைத்து விட்டு காரின் பின் சீட்டில் ராஜி அருகில் அமர்ந்தான்.
“ ஒரு நிமிஷம். நீங்க முன்னாடி போய் இருங்க. “
“ இல்ல ராஜி. நான். “
“ போங்கன்னு சொன்னேன். “ சொல்லி விட்டு அவனை முறைத்தாள்.
“ சரி போறேன். “ ஒன்றும் சொல்லாமல் முன் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டான்.
கார் கிளம்ப இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
|