Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
7 வங்கிகள் மீது ரூ.5.6 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ!
4 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 3 தனியார் வங்கிகள் மீது அபராதம் விதித்த ஆர்பிஐ

பொதுத் துறை வங்கிகளில் கார்ப்ரேஷன் வங்கி மீது 2 கோடி ரூபாயும், எஸ்பிஐ வங்கி மீது 1 கோடி ரூபாயும், பாங்க் ஆஃப் பரோடா மீது 1 கோடி ரூபாயும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா முது 1 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி நிறுவனங்களில் எச்டிஎப்சி வங்கி, ஐடிபிஐ வங்கி, மற்றும் கோடாக் மஹிந்தரா வங்கிகள் மீது தலா 20 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளனர்.


[Image: RBI-875.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
புல்வாமா தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
[Image: cfnjpg]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது தற்கொலைப்படை வீரர் நடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இக்கோரச் சம்பவத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், இந்திய ராணுவத்தினர் சென்ற பேருந்துமீது 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன அவை பின்வருமாறு
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம்: தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், அமைதி ஏற்படவும்  பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.
ரஷ்ய அதிபர் புதின்: இது கொடுமையான குற்றம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
சவுதி அரேபியா : இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு உறுதுணை இருப்போம்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன
Like Reply
முகாமில் அடைக்க விடை பெற்றது, சின்னத்தம்பி; வாழ்விடம் தேடிய யானைக்கு கிடைத்தது சிறை

[Image: Tamil_News_large_2214422.jpg]
உடுமலை: உடுமலை பகுதிகளில், 15 நாட்களாக முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

கோவை, சின்னத்தடாகம் பகுதிகளில், ஜன., 25ல், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானையான, சின்னத்தம்பி, 31ம் தேதி இரவு அங்கிருந்து கிளம்பி, பொள்ளாச்சி, உடுமலை என, 130 கி.மீ., பயணம் செய்தது. கண்ணாடிபுத்துாரில் ஒரு வாரமாக, கரும்புக்காட்டிற்குள் பதுங்கியிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், பத்திரமாக பிடித்து, முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 'சின்னதம்பி -2' ஆப்பரேஷனை வனத்துறையினர் துவக்கினர். காலை, 7:50க்கு, சின்னத்தம்பிக்கு, மூன்று திசைகளிலிருந்தும், துப்பாக்கி மூலம், மயக்க மருந்து செலுத்த முயற்சி நடந்தது. ஒன்று மட்டும் காலில் பட்டது; மற்றொரு கரும்பு காட்டிற்குள் புகுந்தது. அங்கிருந்தும் முடுக்க முயற்சித்த போது, வெளியில் வர மறுத்து, வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. காலை, 9:30க்கு, வலது கால் தொடையில், நான்காவது முயற்சியில் சரியாக மயக்க ஊசியை செலுத்தினர்.

பிளிறல் சத்தத்துடன், மீண்டும் கரும்புக்காட்டிற்குள் சென்று, ஒரு மணி நேரத்தில், அரை மயக்க நிலைக்கு சென்றது. அதன் பின் உள்ளே சென்று, கும்கிகள் உதவியுடன், சின்னத்தம்பியின் கழுத்து, கால்கள் கயிறு மூலம் கட்டப்பட்டது. பகல், 2:00 மணிக்கு, கும்கிகள் உதவியுடன், லாரியில் ஏற்றும் பணி துவங்கியது. கட்டப்பட்ட கயிறும், வாகனத்திலிருந்த இயந்திரம் மூலம், இழுக்கப்பட்டது.

இரு கும்கிகளும், சின்னத்தம்பியை உள்ளே தள்ளின. அரை மணி நேர போராட்டத்திற்குப்பின், லாரிக்குள் ஏற்றி, கட்டை போடப்பட்டது. தொடர்ந்து, இரு புறமும் லாரிகளில் இரு கும்கிகள் ஏற்றப்பட்டு, 3:30 மணிக்கு, சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, ஆயிரக்கணக்கான மக்களுக்கு, விடை கொடுத்து சின்னத்தம்பி கிளம்பியது.
Like Reply
மகளின் திருமண செலவு பணத்தை வீரர்கள் குடும்பத்துக்கு அளித்த தொழிலதிபர்

[Image: Tamil-image.jpg]

சூரத்தைச் சேர்ந்த என்ற தொழிலதிபர் புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ ரூ. 11 லட்சம் பணம்வழங்கியுள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 46 பேர் நேற்று கொல்லப்பட்டனர். இதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். 31 பேர் கொல்லப்பட்ட, ஜம்மு அருகே கலூசாக் ராணுவ தளம்மீது 2002இல் நடத்தப்பட்ட தாக்குதலே இந்தியப் பாதுகாப்பது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது. 

1989-இல் 10 தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவே கார் மூலம் நிகழ்த்தப்படும் இரண்டாவது தாக்குதல் ஆகும். இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கிய 1989க்கு பிறகு, இந்தியப் படைகள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல் இதுவாகும். 

டேவாஷி மனேக் என்பவர், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபரம் செய்யும் பெரிய தொழிலதிபர். இவரது மகள் ஏமியின் திருமண பார்டிக்கு வைத்திருந்த 11 லட்ச ரூபாய் பணத்தை புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ வழங்கியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. ஏமிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதுபோல அனைவரும் இதுபோல வீரர்களின் குடும்பங்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Like Reply
சென்னை நீர்நிலைகளை ஏன் பராமரிக்கல… ரூ.100 கோடி அபராதம்.. தமிழக அரசு அதிர்ச்சி


டெல்லி:பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு நீர்நிலைகளை பராமரிக்க தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசிற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து, அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2014-15ம் ஆண்டு... அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னையில் ஓடும் நீர்வழித் தடங்களான கூவத்தை முழுவதுமாக சீரமைக்க பெரும் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவித்திருந்தார். 1,646 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 604 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

[Image: chembarambakkam-lake-1550314855.jpg]
Like Reply
சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டாலும், பணிகள் சரிவர நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்பட்டு நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக கழிவுநீர் பூமிக்குள்ளும், நீர்வழித் தடங்களிலும் விடப்பட்டு, நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் மாசடைந்து வருகிறது.
இது தொடர்பாக திருவான்மியூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் வழக்கறிஞர் கூட இல்லாமல் மனுதாரராக இருந்து மட்டுமே வாதாடினார்.வழக்கில், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை அகலப் படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்வெளியேற்று நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால்... அறிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:சுற்றுச்சூழலை குடிமக்களுக்கு அளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது.
ஆனால் அதில் இருந்து தமிழக அரசு தவறி விட்டது என்பதை அடையாறு, கூவம், பங்கிங்ஹாம் கால்வாய் விவகாரங்கள் தெளிவாக காட்டுகிறது. இது தொடர்பாக கால வரையறைக்குட்பட்ட செயல் திட்டத்தை பொதுப்பணித்துறை வகுக்க வேண்டும்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
அந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறப்பு குழுவை நியமித்து தேசிய என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Like Reply
இந்தியாவுக்கு 48 உலக நாடுகள் ஆதரவு: பொறுத்தது போதும்... பதிலடி கொடுக்க அறிவுரை!

[Image: Tamil-image.jpg]

Highlights
  • இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. பொறுத்தது போதும். இதற்கு எதிராக இந்தியா எடுக்ககும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.


புதுடில்லி : புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி உள்ப்ட 48 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில், 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி உள்ப்ட 48 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தவிர, இந்தியாவுக்கு துணையாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளன. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்போம் என மெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தினாலும் அதற்கும் உதவ தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் உடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்ளும்படி பலோசிஸ்தான் தேசிய காங்., இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் கூறியதாவது:




[Image: Master.jpg]Pulwama

இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. பொறுத்தது போதும். இதற்கு எதிராக இந்தியா எடுக்ககும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். 
இவ்வாறு அவர் கூறினார்.
Like Reply
200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள் குழு!

ல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்திய ஹேக்கர்கள் குழு முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
[Image: hack_22498.jpg]

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ -முகமது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த அனுசரணையான நாடு (MFN) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதேபோல், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான இறக்குமதி வரியையும் இந்தியா 200 சதவிகிதமாக அதிகரித்தது. `இது கோழைத்தனமான தாக்குதல்’ என்று கூறி பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 


[Image: pak_22117.jpg]

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்திய ஹேக்கர்கள் குழு முடக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த இணையதளங்களில் `14/02/2019-ஐ மறக்க மாட்டோம்’, `உயிரிழந்த வீரர்களின் தியாகத்துக்குச் சமர்ப்பிக்கிறோம்’ உள்ளிட்ட வாசகங்களுடன் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. முடக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பெரும்பாலானாவை பாகிஸ்தான் அரசின் இணையதளங்களாகும். 

[Image: jawans_3_08259_22373.jpg]
இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் முகமது பாஸில், ``பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளம் சரியாக இயங்கவில்லை என பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Like Reply
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat

15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.
[Image: 09-Jaswant-Singh-Rawat_12219.jpg]
Like Reply
ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள். 


சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.
[Image: jaswant-garh_13184.jpg]
இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராம
Like Reply
கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார். 
முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார்.  ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார்.  நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.
[Image: thumb_img_3425_1024_1448972414_725x725_13247.jpg]
சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது.  இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.
ஜெய்ஹிந்த்...!
Like Reply
ஈரானில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 27 ராணுவ வீரர்கள் பலி - ஈரான் கடும் கண்டனம்

[Image: 201902172254064096_Pakistani-terrorist-a...SECVPF.gif]
தெக்ரான், 

ஈரானில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் ஆதரவு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈரான் ராணுவம் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவையாக கருதப்படுகிறது.

ஈரானில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாப்ரி , “ ஈரானிய புரட்சிகர அரசுக்கு எதிரானவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தந்துள்ளது. அவர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். அதேநேரத்தில் அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரித்து வருகின்றன. 

ஜெய்ஷ்-அல் -அடில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு தண்டிக்கவில்லையெனில், அத்தகைய ஈரானிய எதிர்ப்பு புரட்சிகரப் படைகளுக்கு பதிலடி கொடுப்போம். தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் துணை நிற்பதோடு, தீவிரவாதத்தைத் துாண்டி வருமானால் அதற்கான எதிர்விளைவுகளையும் விரைவில் அவர்கள் சந்திக்க வேண்டும். இந்த தாக்குதலில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறினார்.
Like Reply
அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ!

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பலரும் ஆதரவு அளித்து இருக்கின்றனர்.
இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மட்டுமில்லாமல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வைகோ இந்த வழக்கில் தீவிரமாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


[Image: sterlite23323-1544863035-1550472204.jpg]
Like Reply
மூடல்
தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக வைகோ தரப்பும் வாதம் செய்தது. பல முக்கிய ஆதாரங்களை வைகோ தரப்பு இதில் அளித்தது.


[Image: law-1-600-1550472224.jpg]
  
[color][font]

ஆனால் தீர்ப்பு
ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வைகோவும் இன்னொரு மனுதாரராக மனுதாக்கல் செய்தார்.[/font][/color]

[Image: supreme-court-2-1550472261.jpg]
  
[color][font]

மிக சுவாரசியம்
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக வைகோ சேர்த்துக் கொள்ளப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும். உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன், வைகோவை இதில் மனுதாரராக சேர்ந்து கொண்டது ஒரு சுவாரசியமான நிகழ்வாகும். வைகோவின் மனுவை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன் வைகோவை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார். அதில்,[/font][/color]
Like Reply
நீதிபதி ரோஹிங்க்டன்: நீங்கள் யார்?
வைகோ: நான் வைகோ.
நீதிபதி ரோஹிங்க்டன்: நான் அதை கேட்கவில்லை, இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
வைகோ: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளேன்.
நீதிபதி ரோஹிங்க்டன்: சரி, உங்களுக்காக யார் வாதிட போவது.
வைகோ: நான்தான் இதில் மனுதாரர், எனக்காக நானே வாதாட போகிறேன், என்று வைகோ கூறினார். அதன்பின் வைகோவின் மனுவும் நேரடியாக, உடனடியாக இதில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.


[Image: vaiko-143-1550472185.jpg]
Like Reply
என்ன நடக்க இருந்தது
இந்த வழக்கின் விசாரணையின் போது, வைகோ வாதம் வருவதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் கடைசியில் தீர்ப்பும் கூட ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.


[Image: vaiko-0-1550472327.jpg]
  
[color][font]

வைகோ கோபம்
ஆனால் நீதிமன்றத்தில் அப்போதே வைகோ கோபமாக எழுந்து பேசினார், இது தவறான முடிவு. இதை ஏற்க முடியாது. நான் இன்னும் என்னுடைய தரப்பு வாதங்களை வைக்கவில்லை. நான் பேசிய பின் இந்த முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு 45 நிமிடம் பேச அனுமதி வேண்டும் என்றார். இதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, வைகோ பேச இன்னொரு நாள் அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டிற்கு மின் இணைப்பு அளிக்கும் உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டது.[/font][/color]

[Image: sterlite-factory1-1550472210.jpg]
  
Like Reply
வைகோ 45 நிமிடம்
அதன்பின் வைகோ செய்த வாதம்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையில் சரியாக அவர் சொன்னது போலவே 45 நிமிடங்கள் பேசினார். அதில் அவர் பேசிய சில விஷயங்கள்,
  • திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு, நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
  • நீர்நிலைகள் மாசாவதை ஆதாரங்களுடன் சமர்பித்தார்.
  • மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை பட்டியலிட்டார்.
  • விசாரணை கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது, என்றார்.
  • தமிழக அரசு இதில் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.
[color][font]
இப்படி 20க்கும் மேற்பட்ட புகார்களை அந்த 45 நிமிடம் வைகோ பட்டியலிட்டார்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img][/font][/color]

[Image: vaiko843-1550472397.jpg]
  
[color][font]

பெரிய டிவிஸ்ட்
வைகோவின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். அதன்பின்தான் வழக்கில் திருப்பம் வந்ததே. அதன்பின் நீதிபதிகள் ஸ்டெர்லைட் தரப்பிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். தற்போது அந்த 45 நிமிட வாதத்தின் விளைவாக மொத்த தீர்ப்பே ஸ்டெர்லைட்டிற்கு எதிராக வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.[/font][/color]
Like Reply
பாகிஸ்தான் மருமகளை நீக்க வேண்டும்! பாஜக எம்.எல்.ஏ.!!

[Image: sania-mirza-2.jpg]
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இதை சமூகவலைத் தளங்களில் சிலர் விமர்சித்தனர். இதனையடுத்து, டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அம்மாநில பாஜக எம்எல்ஏ ராஜா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறும்போது,
“புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து மாநில அரசு உடனடியாக நீக்க வேண்டும்” என்றார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Like Reply
பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தாரா ப்ரியங்கா? – அம்பலமாகிய உண்மைகள்

[Image: priyanka-gandhi.jpg]

காங்கிரஸும், ப்ரியங்கா காந்தியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக கூறி வலதுசாரிகள் பரப்பிய செய்தி பொய்யென தெரியவந்துள்ளது.
இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவில் திங்கட்கிழமை நான்கு இந்திய பாதுகாப்பு வீரர்கள் மரணித்த பின்பு #PakistanAndCongress என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரண்டாகியது.
பாகிஸ்தானிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாக பல வலதுசாரி சமூக ஊடக குழுக்கள் காங்கிரஸை குற்றஞ்சாட்டின.
சமூக ஊடகங்களான டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் ஷேர் சேட்டில் #PakistanAndCongress என்ற ஹாஷ்டாகுடன் கருத்துகள் பகிரப்பட்டன.
பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால், எங்களது விசாராணையில் இந்த ஹாஷ்டேகில் பகிரப்பட்ட பல கருத்துகள் பொய் என தெரியவந்துள்ளது.
Like Reply
பிரியங்கா காந்தி சந்திப்பு
பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜாவேத் பஜ்வாவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி துபாயில் பிப்ரவரி 7ஆம் தேதி சந்தித்ததாக கூறி வலதுசாரி குழுக்கள் #PakistanAndCongress என்ற ஹாஷ்டாகுடன் பகிர்ந்தனர்.
இந்த செய்தி ஆயிரக்கணக்கான முறை டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.
ஆனால், ஒரு தனியார் செய்தி ஊடகம் நடத்திய விசாரணையில் இது பொய்யென தெரியவந்துள்ளது.
அதிகாரபூர்வமாக காங்கிரஸில் பொறுப்பேற்றவுடன் பிப்ரவரி 7ஆம் தேதி காங்கிரஸ் தலைமையகத்திற்கு பிரியங்கா காந்தி வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தியின் டிவீட்
ராகுல் காந்தியின் பழைய டிவீட், அதாவது 24 அக்டோபர் 2018 அன்று பகிரப்பட்ட டிவீட் மீண்டும் சமூக ஊடகத்தில் பரவலாக இப்போது பகிரப்படுகிறது.
அந்த டிவீட்டில் பிரதமர் நரேந்திர மோதியை குறி வைத்து குற்றஞ்சாட்டி இருந்தார். அதில், “பிரதமர் சிபிஐ இயக்குநரை நீக்கிவிட்டார். அதனால் விசாரணை நின்றுவிடும்” என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
வைரலான இந்த டிவீட் 12 ஆயிரம் பேரால் மீண்டும் பகிரப்பட்டது.
இதை பகிர்ந்தவர்கள், இதனுடன் “பாகிஸ்தான் பாதுகப்பு படை”யும் ராகுலின் டிவீட்டை பகிர்ந்துள்ளர். மோதியை பதவியிலிருந்து நீக்க அவர்கள் காங்கிரஸுக்கு உதவுகிறார்கள் என குறிப்பிட்டு இருந்தனர்.
ஆனால், இதுவும் பொய், பாகிஸ்தான் பாதுகாப்பு படைக்கு ‘Pakistan Defence’ என அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு இல்லவே இல்லை.
பாகிஸ்தான் தனது நாட்டு ராணுவம் தொடர்பான விஷயங்களை பகிர “Inter Service Public Relations” (ISPR) என்ற டிவிட்டர் கணக்கையே பயன்படுத்துகிறது.
Like Reply




Users browsing this thread: 75 Guest(s)