Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
கதிர்வீச்சு அதிகம் கொண்ட டாப்-5 ஸ்மார்ட்ஃபோன்கள்!
அபாயகரமான கதிர்வீச்சு வெளியீட்டின் அளவு அதிகப்படியாக உள்ள டாப் 5 ஸ்மார்ட்ஃபோன்களின் பட்டியல்.
ஜியோமி Mi A1 ஸ்மார்ட்ஃபோன் அதிகப்படியாக 1.75 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது. ஜியோமி Mi A1 ஸ்மார்ட்ஃபோன் அதிகப்படியாக 1.75 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
12-02-2019, 05:30 PM
(This post was last modified: 12-02-2019, 05:31 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
கடந்த ஆண்டு வெளியான ஒன்ப்ளஸ் 5T ஸ்மார்ட்ஃபோன் 1.68 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியிடுகிறது
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
12-02-2019, 05:32 PM
(This post was last modified: 12-02-2019, 05:33 PM by johnypowas. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சமீபத்திய வரவான 6T ஸ்மார்ட்ஃபோனும் இதில் விதிவிலக்கு அல்ல. இதன் கதிர்வீச்சின் அளவு 1.55 w/kg![[Image: OnePlus-6T-3.png]](https://static.tamil.news18.com/tamil/uploads/2019/02/OnePlus-6T-3.png)
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
12-02-2019, 05:35 PM
(This post was last modified: 12-02-2019, 05:36 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
1.39 w/kg உடன் கூகுள் பிக்சல் வெளியிட்ட 3XL ஸ்மார்ட்ஃபோன் நான்காம் அபாய இடத்தில் உள்ளது![[Image: pixel-3xl.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/2019/02/pixel-3xl.jpg) ![[Image: pixel-3xl.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/2019/02/pixel-3xl.jpg)
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
1.39 w/kg உடன் மீண்டும் ஒரு ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் ஆக ஒன்ப்ளஸ் 5 உள்ளது![[Image: OnePlus-5-1.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/2019/02/OnePlus-5-1.jpg)
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம்
![[Image: 201902122141267162_The-free-ride-on-the-...SECVPF.gif]](https://img.dailythanthi.com/Articles/2019/Feb/201902122141267162_The-free-ride-on-the-4th-day-of-the-Metro_SECVPF.gif)
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஞாயிற்று கிழமை திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த வழித்தடத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட்டு, சென்டிரல் மெட்ரோ 2-வது தளம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு ஆகிய ரெயில் நிலையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக சென்னையின் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரெயிலில் நேற்று இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது. இதேபோன்று இன்றும் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் நாளை இரவு வரை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். இந்த சலுகையை மெட்ரோ ரெயில்வே அறிவித்துள்ளது.
எனினும், மின்கம்பம் பழுது காரணமாக நேற்று ரெயில்கள் சில வழித்தடங்களில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர். அதன்பின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரடைந்தது.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
`நான் போலீஸ், அப்படித்தான் ஓட்டுவேன்' - கால்டாக்ஸி டிரைவருடன் மல்லுக்கட்டிய காவலர்
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நள்ளிரவில் கால்டாக்ஸி டிரைவருக்கும் காவலர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், கால்டாக்ஸி டிரைவரை அடித்ததால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னைப் பழவந்தாங்கலிருந்து மேடவாக்கம் செல்வதற்காக வேளச்சேரி மேம்பாலம் அருகில் பைக்கில் ஒருவர் இரவு 11 மணியளவில் சென்றார். அப்போது, அவ்வழியாக கால்டாக்ஸி ஒன்று வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வளைவில் காரும் பைக்கும் திரும்பும்போது ஒன்றோடு ஒன்று மோதுவதுபோல சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் சென்றவர், கால்டாக்ஸியை வழிமறித்தார். பிறகு கால்டாக்ஸி டிரைவருடன் அந்த நபர் வாக்குவாதம் செய்தார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கால்டாக்ஸி டிரைவரை, பைக்கில் வந்தவர் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அவ்வழியாக வந்த இன்னொரு கால்டாக்ஸி டிரைவர், நடந்த சம்பவத்தைப் பார்த்து பைக்கில் வந்தவரை தட்டிக் கேட்டுள்ளார். அவரையும் பைக்கில் வந்தவர் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, `நான் போலீஸ், நீ எப்படி என்னுடைய பைக்கில் மோதுவதுபோல காரை ஓட்டலாம்' என்று கூறியுள்ளார். அதற்கு கால்டாக்ஸி டிரைவர் `நான் சரியாகத்தான் காரை ஓட்டினேன். நீங்கள்தான் போதையில் காருக்குள் விழுவதைப்போல வந்தீர்கள்' என்று பதிலளித்துள்ளார். அதற்கு பைக்கில் வந்தவர்,` நான் அப்படிதான் வண்டி ஓட்டுவேன்' என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் கால்டாக்ஸி டிரைவரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் கால்டாக்ஸி டிரைவர்கள் வாட்ஸ்அப்பில் பரவியது. இதனால் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட கால்டாக்ஸி டிரைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
சிறகுகள் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் சபரிநாதன், போலீஸ் எனக்கூறியவரிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ``கால்டாக்ஸி டிரைவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. சமீபத்தில்தான் கால்டாக்ஸி டிரைவர் ராஜேஸை அண்ணாநகர் பகுதியில் போலீஸார் அசிங்கமாகப் பேசியதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார். அதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்குள் வேளச்சேரி மேம்பாலம் பகுதியில் கால்டாக்ஸி டிரைவர் ரஞ்சித் குமாரை மஹாவீர் என்ற காவலர் தாக்கியுள்ளார். மஹாவீர், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது காவலர் மஹாவீர், போதையில் இருந்தார். அவரை பள்ளிக்கரணை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். காவல்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
சம்பவம் நடந்தவுடன் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்தோம். ஆனால் முக்கால் மணி நேரம் கடந்தபிறகுதான் போலீஸார் அங்கு வந்தனர். கால்டாக்ஸி டிரைவர்கள் குவிந்ததால் காவலர் மஹாவீர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவரை நாங்கள் விடவில்லை. பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனடியாக சம்பவ இடத்திலேயே போலீஸார் கருவி மூலம் கண்டறிவார்கள். ஆனால், மஹாவீர், குடிபோதையில் தள்ளாடியபோதும் அவருக்கு எந்தவித பரிசோதனையும் போலீஸார் நடத்தவில்லை" என்றார்.
![[Image: CALL_TAXI_1_12414.jpg]](https://image.vikatan.com/news/2019/02/13/images/CALL_TAXI_1_12414.jpg)
இதுகுறித்து கால்டாக்ஸி டிரைவர் ரஞ்சித்குமார் போலீஸாரிடம் கொடுத்த புகாரில், ``நான், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பெரிய செவலை போஸ்ட், துளங்கம்பட்டு, பிள்ளையார்கோயில் தெருவில் குடியிருந்துவருகிறேன். சம்பவத்தன்று நான், வாடிக்கையாரை ஏற்ற பழவந்தாங்கல் யு டர்ன் அருகே காரில் வந்தபோது பைக்கில் சென்ற நபர், காரின் மீது மோதுவதுபோல வந்தார். பிறகு அந்த நபர் காரின் முன்னால் பைக்கை நிறுத்திவிட்டு என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். காரின் கதவைத் திறந்து என்னைத் தாக்கினார். குடிபோதையில் இருந்த அந்தநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கால்டாக்ஸி டிரைவரை காவலர் மஹாவீர் தாக்கியதாகக் கூறி கால்டாக்ஸி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிரைவர் ரஞ்சித்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
ஜாக்டோ ஜியோ போராட்டம்; 1,111 பேரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது பள்ளி கல்வி துறை
சென்னை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி 22ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
அவர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை எனில் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், 1,111 ஆசிரியர்களின் பணியிடை நீக்க உத்தரவை பள்ளி கல்வி துறை ரத்து செய்துள்ளது.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்
துச்சேரி,
நாடாளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாரதீய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி விட்டது.
தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளார்.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - கட்டுப்பாடுகள் என்ன?
சின்னத்தம்பி யானையினை பிடித்து கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தடாகம் பகுதிகளில் ஊருக்குள் வருவதாக புகார் அளிக்கப்பட்டு , டாப் ஸ்லிப் வனப்பகுதிகளில் கொண்டுவிடப்பட்ட யானை அங்கிருந்து நடந்து உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கண்ணாடிப் புத்தூர் கிராமத்தின் விவசாய விளை நிலங்களில் தங்கி இருக்கிறது.
வனத்துறை, சின்னத்தம்பி யானையை முகாம் யானையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக இருந்த பொழுது விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர், சின்னத்தம்பி யானையினை கும்கியாக மாற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
யானையை ஏன் முகாம் யானையாக மாற்ற வேண்டும் என விரிவான அறிக்கையினை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்ததின் பேரில் இன்று , யானை ஆய்வாளர் அஜய் தேசாய் தயாரித்த ஆய்வறிக்கை தமிழ அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், தற்போது சின்னத்தம்பி யானை காட்டு யானையைப் போல் நடந்து கொள்வதில்லை.
மேலும், விளைநிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிட்டு நன்றாக பழகிவிட்டது. அதனை வனப்பகுதிகளுக்கு விரட்டினாலும், மீண்டும் விளை நிலங்களை நோக்கி வந்து விடும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் முகாமுக்கு கொண்டு செல்வதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
சின்னத்தம்பி யானை இருந்த பகுதிகளில் விவசாயிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். யானை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறுவதால் விபத்திலோ, மின்சாரம் தாக்கப்பட்டோ உயிர் இழப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதே பகுதிகளில் சுற்றி வந்த பெரிய தம்பி என்ற யானை மின்வேலியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதை விடவும், மின்கசிவினாலும், விபத்தினாலும் அதிக யானைகள் இறந்துள்ளன. எனவே, இந்தச் சூழல் யானைக்கும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே, யானையால் பயிர் சேதம் ஆகியிருப்பது, மனிதர்களின் உயிருக்கு நேரடியாகவோ அல்லது இந்த யானையினைப் பின் தொடரும் யானைகளாலோ ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பது, பிற யானைகளும் இதனைப் பின் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் வந்து விட வாய்ப்பிருப்பது, கும்கியாலோ, யானை விரட்டும் குழுவினராலோ சின்னத்தம்பியினை வனத்திற்குள் விரட்ட முடியாதது, மனிதர்களால் யானையின் உயிருக்கு ஆபத்து இருப்பது ஆகிய கருத்துகளை எல்லாம் கவனத்தில் கொண்டு யானையினை முகாமில் வைத்து பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
14-02-2019, 09:41 AM
(This post was last modified: 14-02-2019, 09:41 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சின்னத்தம்பியினை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. மேலும் , முகாமில் யானை எந்த வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக இருக்கும் என்று தமிழக வனத்துறை உறுதி அளித்தது.
இதன் அடிப்படையில். விவசாயிகள் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு யானையினை பிடிக்க உத்தரவு அளிக்கப்படுகிறது. அதே சமயம் யானைக்கும் எந்த பாதிப்பும், காயங்களும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவினை பிறப்பித்தனர்
சென்ற முறை சின்னத்தம்பியை பிடிக்கும் பொழுது அதன் தந்தம் உடைந்து, பின்புறம் காயங்கள் ஆகின. யானையினை பராமரிப்பது குறித்த முடிவுகளை தலைமை வனப் பாதுகாவலர் எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது.
வனத்துறையினரிடம் விசாரித்த பொழுது , யானையினை பிடிப்பதற்கான குழு தயாராக உள்ளது, உத்தரவு நகல் வந்தவுடன் பணிகளை ஆரம்பிப்போம். நீதிமன்றம் அளித்திருக்கும் விதிகளையும் கவனத்தில் கொண்டு இந்தப் பணிகள் நடக்கும் என்று தெரிவித்தனர்.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
மிழக அரசின் ரூ.2,000 சிறப்பு நிதி - தமிழக வருவாய்த்துறை விளக்கம்
![[Image: 201902131437092480_Rs-2000-Special-Fund-...SECVPF.gif]](https://img.dailythanthi.com/Articles/2019/Feb/201902131437092480_Rs-2000-Special-Fund-to-the-Government-of-Tamil-Nadu_SECVPF.gif)
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு தகுதியானவர்களை எப்படி கண்டறிய முடியும் என குழப்பம் நிலவி வந்தது.
இதனை தெளிவுப்படுத்திய வருவாய்த்துறை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே உள்ளாட்சி துறையில் தயாராக இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து அந்த பட்டியலை பெற்று, நிதி ஒதுக்கியதும் 60 லட்சம் குடும்பங்களின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது.
•
Posts: 12,835
Threads: 146
Likes Received: 1,356 in 1,176 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
ஈரானைத் தொடர்ந்து வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு; இந்தியா என்ன செய்யும்?
அமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ள து
ரானிலிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் செய்துவருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் சற்றுக் குறைந்தது.
பின்னர் ரூபாய் அல்லது பண்ட மாற்ற முறையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம் என்று அமெரிக்கக் கூறியது. இதனால் மீண்டும் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது
இதே போன்று வெனிசுலா மீதும் சில மாதங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்துவந்தது.
தற்போது வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைச் சரி செய்ய முடிவு செய்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தியாவிடமிருந்து ரூபாய் மதிப்பு மற்றும் பண்ட மாற்ற முறையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர் தேவை என்ற நிலை மாறி இந்திய ரூபாய் மதிப்பில் செய்யும் நிலை உருவாகியுள்ளது இந்திய அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளது. மறுபக்கம் வெனிசுலாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் வர உள்ளது.
அமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.
•
|