07-03-2020, 12:26 PM
Awesome update bro. Lovely story
Romance ஓகே கண்மணி
|
07-03-2020, 12:26 PM
Awesome update bro. Lovely story
07-03-2020, 01:23 PM
Super update
07-03-2020, 03:55 PM
Lovely updates. Awesome narration. Loved it so much
07-03-2020, 04:34 PM
semmmmaaaaaa
07-03-2020, 04:58 PM
Really beautiful narration of LOVE
07-03-2020, 05:04 PM
Cutie love story
07-03-2020, 05:41 PM
யாரோ இருவர் தலையின் இரண்டு பக்கமும் சுத்தியலால் அடிப்பது போன்று தலைவலி பயங்கரமாக இருந்தது.
என்ன கருமத்தடா குடிச்ச கார்த்தி.இப்படி தலைவலிக்குது.இவ சும்மாவே தையதக்கனு குதிப்பா.இதுல நைட் குடிச்சிட்டு வேற என்ன பன்னி தொலைச்சியோ.அப்ப்பா.என்று மைண்ட் வாய்சில் பேசினான். மெதுவாக எழுந்து பேஸ்ட்,பிரஷ் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று பிரெஷ்அப் ஆக சென்றான்.எல்லாம் முடித்துவிட்டு பேஸ் வாஷ் செய்ய கண்ணாடியை பார்க்கும் போது அங்கு சாரி.நேத்து நடந்ததுக்கு.ப்ளீஸ் மன்னிச்சுடு.என்றும் அதனுடன் அழுவதை போன்ற ஒரு ஸ்மைலியும் லிப்ஸ்டிக்கால் வரையபட்டிருந்தது. நேத்து நைட் குடிச்சிட்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ.அவளா சாரி கேக்குறா.ம்ம்ம்ம்ம் தெரியலையே.மறுபடியும் மைண்ட் வாய்ஸ். பின் துண்டை வைத்து துடைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து தயாராக வைக்கப்பட்டிருந்த டீ கப்பை எடுத்து ஒரு மடக்கு குடித்தபோது அது ஆறிபோய் இருந்தது.மறுபடியும் குடித்தபோது தான் தெரிந்தது அது தேங்காய் தண்ணீர் என்று. இவ என்ன லூசா.நானே தலைவலின்னு சொல்லி செத்துட்டு இருக்கேன்.தேங்காய் தண்ணியை வச்சிருக்கா.என்று எண்ணிக்கொண்டு டீகப்பை கீழே வைக்கும் முன் சாசர்க்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது. ஹேங்ஓவெருுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா உடனே கேட்கும்.அதான் வச்சேன்.ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.ப்ளீஸ் நேத்து பேசினதை மனசுல வச்சுக்காத.சாரி.மறுபடியும் அழுகையுடன் கூடிய ஸ்மைலி. நமக்கு ஹேங்ஒவெர்னு இவளுக்கு எப்படி தெரியும்.தெரிஞ்சிருக்கும்.கொஞ்சமாடா நேத்து குடிச்சிருக்க.அதுவும் இல்லாம மட்டமான சரக்கு வேற.என்ன வாடை அடிக்கும்.அதான் கண்டுபிடிச்சிட்டா.அவனுடைய மைண்ட் வாய்ஸ் சொன்னது.பின் அதை குடித்துவிட்டு அன்றைய நியூஸ் பேப்பரை படித்து முடிக்கும்போது தான் அவனுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது.இப்போது தலைவலி குறைந்திருந்தது. இவளுக்கு எப்படி தெரியும்.ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா சரி ஆகும்னு.ம்ம்ம்ம்ம்ம் அப்ப நேத்து நைட் கண்டிப்பா எதோ நடந்துருக்கு. ஒருவேளை அடங்கா பெண் ஆனாலும் ஒரு ஆண்மகனின் கை பட்டால் அடங்கித்தான் போகணும்னு வடிவேலு ஒரு படத்துல சொல்லிருப்பாரே.ஒருவேளை அப்படி எதாவது நடந்துருக்குமோ.இல்லையே அப்படினா உதட்டுக்கு கீழே அவளுக்கு ரத்தம் வந்துருக்கணும்,நமக்கும் முதுகுல,கன்னத்துல நகக்கீறல் இருக்கணும்.அப்படி எதுவும் இல்லையே. டேய் அடச்சீ.வர வர தமிழ் சினிமா பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கடா நீ.உன்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.அதுவும் இல்லாம ராஜீய போய் எப்படிடா.த்தூ.மூடிட்டு ஆபிஸ்க்கு கிளம்புற வேலைய பாரு என்று அவனுடைய மனசாட்சி அவன் முன்னாள் வந்து சொல்ல ஆமால்ல.சரி கிளம்புவோம் என்று குளிக்க சென்றான். ட்ரெஸ் செய்து சாப்பிட சென்றவன் அங்கு ராஜி இல்லாததை கண்டு சற்று வருத்தம் அடைந்தாலும் அவளுடைய மன்னிப்பு அவனுக்கு சற்று இதமாக இருந்தது. பிளேட்டை கவிழ்த்து சாப்பாடை வைத்தவன் பிளேட்டுக்கு கீழே இருந்த பேப்பரை எடுத்து படித்தான். திரும்பவும் தொந்தரவு பண்ணறேன்னு நினைக்காத ப்ளீஸ் நீ இங்க இருந்து போறதுக்குள்ள மன்னிச்சிட்டேன்னு ஒருவார்த்தை சொல்லிடேன்.என்னால உன் முகத்தை கூட பாக்க முடியல.ப்ளீஸ். படித்துவிட்டு மடித்து வைத்தவன் லன்ச் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினான். அவன் சென்ற உடன் கீழே வந்த ராஜி கார்த்திக் மன்னிக்கவில்லை என்று தெரிந்து அழுகையாக வந்தது.மன்னிக்கிற அளவுக்கு நான் அப்படி என்ன சொல்லிட்டேன்.இல்ல நான் அதுக்கு தகுதி இல்லாதவன்னு நினைக்கிறானோ.சரி இதுவெல்லாம் நேத்தே தெரிஞ்சதுதான அவன்கிட்ட சாரி கேட்டோம்.அவன் மன்னிக்கிற வரைக்கும் அவனை விடக்கூடாதுன்னு அவளுடைய மனசாட்சி அவளுக்கு சொல்லியது. பின் இயந்திரத்தனமாக சாப்பிட்டவள் கார்த்திக் வரும்வரை நேரம் போக்குவதற்காக மகேஷின் அம்மாவிடம் சென்று சமையலுக்கு உதவிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள். ஆபிசில் வேலை அதிகமாக இருந்ததால் ராஜியை மறந்து வேளையில் கவனத்தை செலுத்தினான். பின் லன்ச் டைம் வர டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றான்.அங்கு அவனுடைய மேலதிகாரி இருக்க என்னப்பா புதுமாப்பிள்ளை.கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு. ம்ம்ம்ம் சூப்பரா போகுது சார்.மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி,உள்ளங்கைல வச்சி தாங்குறா. பார்ரா.வீட்டம்மா வந்துட்டா போல. டிபன்பார்ரா.வீட்டம்மா வந்துட்டா போல. டிபன் பாக்ஸ் கொண்டுவந்துருக்க.சரி என்ன செஞ்சி கொடுத்துருக்கா இன்னைக்கு உன் பொண்டாட்டி. எப்போதும் நான் ரெண்டுவகையான கறி இல்லாம சாப்பிடமாட்டேன்னு அவளுக்கு நல்லா தெரியும்.டிபன் பாக்ஸ் இருக்க வெயிட்டை பார்த்தா இன்னைக்கு விருந்து சாப்பாடுதான்னு நினைக்கிறன். சரி ஓபன் பண்ணு.நானும் கலந்துக்கிடுறேன் விருந்துல. கண்டிப்பா சார்.உங்களுக்கு இல்லாமலா.என்று பாக்ஸை ஓபன் செய்ய முதல் பாக்சில் எம்ப்டியாக இருந்தது. தம்பி பாக்ஸை பாத்தாலே தெரியுது உனக்கு இன்னைக்கு விருந்துதான்னு.நான் வேணும்னா என்னோட சாப்பாட்டை தரவா. ஐயோ இல்ல வேண்டாம் சார்.அவளுக்கு எப்போதும் என்கூட விளையாடிட்டே இருக்கனும்.அதான் இப்படி பண்ணிருப்பா.இருங்க இன்னும் ரெண்டு பாக்ஸ் இருக்கு அதுல பாக்கலாம். நல்லா வருவ.நான் சும்மாதான் கேட்டேன்.டிரைவர் அனுப்பிருக்கேன்.சாப்பாடு வாங்க.நீ சாப்பிடு நான் அப்றமா வரேன்.உன் பொண்டாட்டி உங்கிட்ட எதோ கேக்க வரான்னு நினைக்கிறன்.சாம்பிராணி மாதிரி இருக்காத.புரிஞ்சுக்கோ.ன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்த பாக்ஸ்சும் எம்ப்டியாக இருந்தது.ஆனால் அதில் ஏதோ எழுதி இருப்பது போல் தெரிய அதை தடவினான்.ஆனால் அழியவில்லை.முந்தைய பாக்சின் கீழ் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டு இருந்தது.அதில் நான் நேத்து பேசினது எல்லாம் கோவத்துல பேசினது.எதுவுமே என் மனசுல இருந்து வந்தது இல்லை.உன்ன ஹர்ட் பண்ணினதுக்கு சாரி.இல்லை மன்னிக்கிற அளவுக்கு நான் தகுதியற்றவன்னு நினைக்கிறியா.கொஞ்சம் என் நிலைமையில் இருந்து யோசிச்சி பாரேன்.சாரி சாரி சாரி.1000 டைம்ஸ் சாரி. படித்த கார்த்திக் உதட்டோரம் லேசாக சிரிப்பு வந்தது.இப்பவாச்சும் மனசு இறங்கி வந்தாலே.ஓவெரா பிகு பண்ணாதடா.அப்பறம் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட போகுது.மனசாட்சி சொல்லியது. உடனே போனை எடுத்து ராஜிக்கு கால் செய்தான்.ஆனால் not reachable என்று வந்தது. டேய் அவ சொல்ற மாதிரி நீ சரியான லூசுதாண்டா.அவ போனை நேத்து உடைச்சிட்டால்ல.அப்ப எப்படி பேசுவா.அவன் மனசாட்சி திட்டியது. ஆமா.இதை ஏன் நான் யோசிக்காம போனேன்.சரி ஈவினிங் போகும் போது அவளுக்கு ஒரு போன் வாங்கிட்டு போகணும்.அவன் மனசாட்சியிடம் சொன்னான். அதை செய் முதல்ல.என்றது மனசாட்சி. அதன் பிறகு அடுத்த பாக்ஸை எடுத்தவன் அதில் தயிர் சாதமும்,உருளைக்கிளங்கு பொரியலும் இருந்தது.சாப்பிட்டுவிட்டு சைட் விசிட் சென்றவன் வழக்கத்தைவிட சீக்கிரமாக வீட்டிற்கு கிளம்பினான். வரும்வழியில் பூர்விகா மொபைல் ஸ்டோர் சென்று ஆப்பிள் ஐபோன் 6 ஆர்டர் செய்தான். பின் சிம் போட்டு கால் செய்து பேசுவதற்கு ஏற்றார் போல் அதனை தயார் செய்ய சொன்னான்.அதற்கு ஒரு அரைமணி நேரம் ஆகும் என்று சொன்னதால் பில் போட்டு கார்டை ஸ்விப் செய்தான். போனை ரெடி பண்ணுமாறு சொல்லிவிட்டு கிப்ட் கவரும் ரிப்பனும் வாங்க சென்றான்.பின்ஓ ஒரு பேப்பரில் dont feel guilty.தப்பு என்னோடதுதான்.நான்தான் கொஞ்சம் carefull ஆ இருந்துருக்கணும்.சாரி எல்லாத்துக்கும்.இனி நான் உன்னை எந்த வகையிழும் தொந்தரவு பண்ண மாட்டேன்.அப்புறம் இது கிஸ் பண்ணினத்துக்கு கூலியா தரேன்னு தப்பா நினைச்சிடாத.என்னால உடைஞ்ச உன் போனுக்கு பதிலா என்னால முடிஞ்சது.என் மன்னிப்பை ஏத்துக்கிட்டன்னா இதையும் ஏத்துக்கோன்னு எழுதினான். அரைமணி நேரம் கழித்து போனை வாங்கி கொண்டு எழுதிய பேப்பரை அதனுள் வைத்து அதன் மேல் ஸ்டிக்கரை ஒட்டி ரிப்பனை சுற்றினான். ஸ்டிக்கரில் ப்ளீஸ் ஓபன் இட் என்று எழுதி சிரிப்பது போன்ற ஒரு ஸ்மைலி வரைந்தான்.பின் வீட்டை நோக்கி பைக்கை விரட்டினான். வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.உடனே கதவை திறந்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் ராஜி. ரூமிற்கு சென்று பிரெஷ்அப் செய்துவிட்டு கிப்ட் பாக்ஸை எடுத்து கிட்சேன் ஸ்லாபில் வைத்துவிட்டு ஹால்லிற்கு வந்து டிவியை ஆன் செய்தான்.
07-03-2020, 05:43 PM
காபி தயாரித்து கொண்டிருந்த ராஜி கிப்ட் பாக்ஸை எடுத்தவள் அதில் ஓபன் இட் என்று எழுதியிருக்க அதை பிரித்தவள் ஐபோனை பார்த்து அதிர்ந்து போனாள்.
கிஸ் பண்ணினதுக்கு இவ்ளோ காஸ்டலி போன்னா.அவன்கூட படுத்து எல்லாம் நடந்துருந்துதுன்னா அப்ப நிறைய காச வச்சிருப்பான்ல.என்ன பிராஸ் ரேஞ்சுக்கு நினைச்ட்டான்ல.நேத்து என்ன சொன்னான்.அந்த ஒரு முத்தம் போதும் வாழ்நாள் முழுக்கண்ணு சொன்னானே.அதை நம்பித்தான அவன்கூட பழகனும்னு முடிவு பண்ணேன்.ச்சி.அசிங்கம்.அழ வேண்டும் போல இருந்தது.அழவில்லை.கைகளால் வாயை பொத்திக்கொண்டு போன் பாக்ஸை எடுத்துக்கொண்டு பெட் ரூமிற்கு ஓடினாள். பாக்ஸை பார்த்து ராஜி தன்னிடம் பேச வருவாள்.என்ன சொல்லுவாளோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த கார்த்திக்குக்கு அவள் எதுவும் பேசாமல் ரூமிற்கு சென்றது ஏமாற்றமாக இருந்தது. அவளாகத்தானே சாரி கேட்டாள்.அவளாகத்தானே பேசணும்னு சொன்னாள்.இப்போ வாயை பொத்திக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள்.சரி எதுவா இருந்தாலும் அவள் போக்கிலே விட்டுட வேண்டியது தான் என்ற முடிவுடன் வெளியே சென்றான். ரூமில் தான் வைத்திருந்த பாக்ஸை மெத்தையில் வீசியவள் கண்ணாடியை பார்த்து கதறி அழுதாள்.நான் ப்ராஸ்ஸா.நான் ப்ராஸ்ஸா. என்று கேட்டுக்கொண்டே அழுதாள். அப்போதுதான் மெத்தையில் கிடந்த பாக்ஸ் கண்ணாடியில் தெரிந்தது.போனை தவிர மேலும் இரண்டு இருப்பது தெரிந்தது. கண்ணீரை துடைத்துவிட்டு அதை எடுத்து பார்த்தவள் ஒன்று அவளுக்கு பிடித்த டைரி மில்க் ப்ரூட் நட்ஸ் சாக்கலேட்டும் இன்னொரு லெட்டரும் இருந்தது. அதை எடுத்து படித்தவள் அதை தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதாள். அவளையும் அறியாமல் அவள் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்தது.சாரி கார்த்திக்.என்ன மன்னிச்சிடுடா.எப்போதுமே உன்னை தப்பா பார்த்த மனசு இப்பவும் அப்படி நினைச்சிட்டுடா. போனை எடுத்து தனது சிம்மை போட்டு முதல் முதலாக கார்த்திக்கு கால் செய்தாள். ஒரே ரிங்கில் அட்டென்ட் செய்தவன் ஹலோ என்றான். இவள் பேசவில்லை.ஹ ஹலோ இருக்கியா.என்ன விஷயம் ராஜி.ஹலோ. அவளுக்கு பேச தைரியம் இல்லை.பெருமூச்சு விட்டு விட்டு கார்த்திக் தனியா இருக்ககே எரிச்சலா இருக்கு.கொஞ்சம் வீட்டுக்கு வரியா.ப்ளீஸ் என்றாள். ம்ம்ம்.இதோ வரேன்.ஒரு கப் காபி போட்டு வையென்.5 நிமிஷத்துல வீட்டுல இருப்பேன். ம்ம்ம் சரி.வைக்கிறேன். ம்ம்ம்.சரி. சிட்டாக கிச்சன் சென்றவள் காபி கலந்தவள் சீனி கலக்கும் போது எல்லா விஷயத்துலையும் நம்ம மனசை கரெக்டா ரீட் பன்றானே.ஆனால் இப்ப நம்ம தப்பா நினைச்சதை அவன்கிட்ட சொன்னா வெறுத்து ஒதுக்கிடுவான்.அதனால அவன்கிட்ட இதை காட்டிக்காம சமாளிக்கணும் என்று நினைத்துக்கொண்டு எக்ஸ்ட்ரா இரண்டு ஸ்பூன் கலந்துவிட்டாள். வீட்டிற்கு வந்த கார்த்திக் ராஜியை தேட கிச்சனில் இருந்து ம்ம்ம்ம்க்க்கும் என்று இருமினாள். காபி என்று அவனிடம் நீட்டினாள். தாங்ஸ் என்று வாங்கிக்கொண்டு காபியை வாங்கியவன் ஒரு மிடறு குடித்தவன் இனிப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து உடனே கப்பை எடுத்துகொண்டான். என்ன காபி நல்லா இல்லையா. இல்ல சுகர் ஜாஸ்தியா இருக்கு.அதான்.பரவா இல்லை.அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுறேன். தெரியும் தம்பி.வேணும்னு தான போட்டேன்.பொண்ணுக எப்போதுமே சந்தோஷத்தையும்,துக்கத்தையும் சாப்பாட்டுலதான் காமிப்போம்.பாக்கலாம் புரிஞ்சிடுறியா இல்லையான்னு.மனதுக்குள் நினைத்து கொண்டு உதட்டை சுளித்துக்கொண்டு சிரித்தாள். சாரி அண்ட் தாங்ஸ் ராஜி. எதுக்கு. இல்ல சாரி நேத்து நடந்துகிடத்துக்கு.தாங்ஸ் வந்து பிரெண்ட்ஸ் என்று அவள் கை நீட்ட. புரியல. பிரெண்ட்ஸ் என்று மீண்டும் ராஜி கை நீட்ட ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து தலை ஆட்டிக்கொண்டே தயக்கத்துடனே கைநீட்டி குலுக்கினான். கார்த்திக் ப்ளீஸ் நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் மறந்துடுவோம்.இனிமேல் நாம ரெண்டுபேரும் பிரெண்ட்ஸ்.அதுக்கு அப்றம் நடக்குறதெல்லாம் நடக்கட்டும். ம்ம்ம் சரி. உனக்கு எதாவது வேலை இருக்கா. இல்லை.அப்ப ஏன் இன்னும் கைய பிடிச்சிட்டு இருக்க.பார்மாலிட்டிக்கு கை குலுக்கினா இப்படி 10 நிமிஷமா பிடிச்சி வைக்க கூடாதுப்பா. ஓஹ் சாரி சாரி. ம்ம்ம் முதல்ல இந்த சாரி சொல்றத நிறுத்து.உனக்கு செட்டே ஆகலை. ம்ம்ம் சரி. பின் ராஜி கப்பை வாங்கிக்கொண்டு கிச்சனுக்குள் செல்ல ராஜி ஒரு நிமிஷம். என்ன என்பது போல அவனை பார்க்க. இல்ல.அதுவந்து நேத்து.நேத்து.நைட்டுடுடுடு.இல்ல ஒன்னும் இல்ல.நீ போ.நீ போ. இல்ல.ஏதோ கேக்க வந்த.சொல்லு.வாய் வரைக்கும் வந்துடுச்சு.சும்மா கேளு. நேத்து நைட்.எனக்கு நல்ல போதை.என்ன நடந்துச்சுன்னு தெரியல.அதான் என்ன நடந்துச்சுன்னு கேட்கலாம்னு ஒன்னும் நடக்கல.நல்லா யோசிச்சி பாரு.புரியும். ஐயோ ராஜி சத்தியமா எனக்கு எதுவுமே நியாபகத்துல இல்லை.அட்லீஸ்ட் என்ன சொன்னன்னு ஆச்சும் சொல்லேன். உண்மைய சொன்ன என்று தலைவர் ஸ்டைலில் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் ராஜி. ராஜி அப்புறம்.. மறுபடியும் என்ன. ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா சரி ஆகும்னு உனக்கு எப்படி தெரியும்.அதுவும் இல்லாம எனக்கு ஹாங்ஓவர்னு உனக்கு எப்படி தெரியும். அதான் முன்னாடி குடிச்சிட்டு தலைவலின்னு சொல்லுவியே.அதை வச்சுத்தான் தெரியும்.ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணிகுடிச்சா நல்லதுன்னு ரமணாமகரிஷி சொல்லிருக்காரு.அதான் கொடுத்தேன்.இப்போ எதுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம்.போ.எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.டின்னெர் ரெடி பண்ணனும்.சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் ராஜி. ரமணமஹரிஷியா. ம்ம்ம் அவரு இதுக்கெல்லாமா தீர்வு சொல்லிருக்காரு. டேய் முட்டாள் அவள் உன்னைய கிண்டல் பண்ணிட்டு போராடா மரமண்டை.அவனுடைய மனசாட்சி பேசியது. ஐய் ராஜி என்ன கிண்டல் பன்னிட்டா ஜாலிய்ய்ய் என்று குதித்தான் கார்த்திக். ஹலோ அங்க என்ன சத்தம்.இன்னும் கிளம்பலையா. சும்மா பேசிக்கிட்டிருந்தேன்.இதோ போயிடுறேன். சொல்லிவிட்டு கிச்சன் சென்றவன். ராஜி போன் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை. ஆரம்பிச்சிட்டியா.எனக்கு நிறைய வேலை இருக்கு அப்புறம் பேசலாமே. ம்ம்ம்ம்ம்ஹூம்.நீ வேலை செஞ்சிட்டே பேசு. சரி அப்ப ஒரு டீல்.நீ டின்னெர் ரெடி பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணுவியாம்.நான் பதில் சொல்லிட்டே வேலைய பார்ப்பேனாம்.ஓகேவா. ம்ம்.டபுள் ஓகே. ஹே என்னப்பா உடனே ஓகே சொல்லிட்ட.கொஞ்சமாவது பிகு பன்னி ஒத்துக்கணும்ப்பா. என் பொண்டாட்ட்ட்.ம்ம்ம்ம்ம்க்கும் ம்ம்ம்ம்ம்க்கும் என்னது.என்ன சொன்னம்.திரும்ப சொல்லு. இல்ல.என் பிரெண்டுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.அதுக்கு எதுக்கு நான் பிகு பண்ணனும்னு சொல்ல வந்தேன். இல்லையே பொண்டாட்டி னு ஏதோ சொல்ல வந்தமாதிரி இருந்தது. இல்லையே நான் அப்படி ஒன்னும் சொல்லலியே.ஐ திங்க் உனக்கு ஏதோ ஹியரிங் ப்ராப்லம் இருக்கும்னு நினைக்குறேன். ஹலோ எங்களுக்கு எல்லாம் சரியா இருக்கு.உனக்குத்தான் வாய்ல வாஸ்து சரி இல்லனு நினைக்கிறன். சரி சரி விடு விடு. நல்லா சமாளிக்கிற.வடியுது.தொடைச்சிக்கோ. சரி கிப்ட்டை பத்தி சொல்லவே இல்ல.புடிச்சிருக்கா. ஏன் இவ்ளோ காஸ்டலி போன். ஒரு எஞ்சினீரோட ஒயிப்.இல்ல இல்ல பிரென்ட். பரவா சொல்லு. ஒரு பேசிக் போன் யூஸ் பண்ணலாமா.அதான் வாங்குனேன்.பிடிச்சிருக்குத்தானே. ரொம்ப பிடிச்சிருக்கு.போனை. அப்ப போன் வாங்கித்தந்த ஆள பிடிக்காதா. முன்னாடி பிடிக்காது.இப்போ ஒரு பிரெண்டா பிடிக்கும்.உடனே மூஞ்சை தூக்கி வச்சுக்காத. நான் ஒன்னும் பீல் பண்ணலை.மேல சொல்லு. கார்த்திக் இப்போ உன்மேல எனக்கு எந்த லவ் பீலிங்கும் வரலை.பியூட்டர்ல வருமான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.ஆனால் உன்மேல சின்னதா ஒரு நம்பிக்கை.ஆனால் கல்யாண விசயத்துல நீ பண்ணினதை என்னால மன்னிக்கவே முடியலை. ராஜி அது வந்து. நான் பேசிக்கிடுறேன்.அதை நினைச்சாலே நான் பழைய மாதிரி ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு.சோ நாம பிரெண்ட்ஸா இருக்கவே ட்ரை பண்ணுவோம்.ஆனா இந்தஇந்த பிரெண்ட்ஷிப் வச்சு நெருங்க நினைக்காத.ரொமான்டிக்கா பேசுறதா நினைச்சு உன் மனச புண்ணாக்கிகாத.நான் எதாவது தப்பா பேசிருந்தா சாரி கார்த்திக். ஓகே ராஜி.உன் மனசு எனக்கு புரியுது.ஆனா அப்பா அம்மா வந்தா நடிச்சுதான் ஆகணும்.அப்ப என்ன பண்ண. அதான் நீயே சொல்லிடியே நடிக்கணும்னு.நடிச்சுதான் ஆகணும்னு.நடிப்போம். ம்ம்ம் சரி.தாங்ஸ் ராஜி. எதுக்கு. இல்ல இப்பவாச்சும் சொன்னியே.இதுதான் நான்னு.அதுவரைக்கும் சந்தோசம்.ஆனால் நீதான் இப்படியா இல்லை உங்க மொத்த குடும்பமே இப்படித்தானா. ஹே என்ன ரொம்ப ஒவேரா பேசுற. அப்புறம் என்னடி.இவுங்க ஒரே வீட்ல இருப்பாங்களாம்.புருஷன் பொண்டாட்டியா நடிப்பாங்களாம்.ஆனால் பிரெண்ட்ஸா மட்டும் இருப்பங்களாம்.எங்கடி நடக்கும். கார்த்திக் நீ ரொம்ப பேசுற. அப்படிதாண்டி பேசுவேன்.என்னடி பண்ணுவ. ச்சி போடா.உன்கிட்ட போய் பேசினேன் பாரு என்ன சொல்லணும். பின் இருவரும் பேசாமல் இருந்தனர். சரி. இன்னைக்கு சொல்றேன் ராஜி.வர டிசம்பர் 17 உனக்கு பர்த் டே.அன்னைக்குள்ள நீயா வந்து கார்த்திக் நான் உன்னை லவ் பன்றேன்னு சொல்ல வைக்கலை.என் பேரு கார்த்திக் இல்லடி. என்ன சவாலா. ம்ம்ம்ம்ம்ம் சவால்னே வச்சிக்கையேன். வேண்டாம் கார்த்திக்.தோத்து போய்டுவ.6 வருஷமா உன்மேல வராத காதல் இந்த 6 மாசத்துல வந்துடும்னு நினைக்கிறியா. இன்னும் ஆறே மாசத்துல வரும்.இன்னைக்கு தேதி ஜூலை 17.இந்த 6 மாசத்துல ஒருதடவையாச்சும் உன் கண்ணுல அந்த காதலை பாத்துடுவேன்னு நான் நம்புறேன்.என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா. நீ சொல்றதை பார்த்தாள் சிரிப்புதான் வருது.என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.வீனா சவால் விட்டு உன்காதல் தான் தோத்து போக போகுது. ம்ம்ம் அதையும் பாக்கலாம்.பட் ஒன் கண்டிஷன். என்ன . நாம இதே மாதிரி இந்த ஆறு மாசமும் பிரெண்ட்ஸாதான் இருக்கணும்.எப்போதும் போல பேசிக்கணும்சரியா. இதைத்தானே நான் முதல்லயே சொன்னேன். சரி ரெண்டாவது தடவையும் சொல்லு. சரி பிரெண்ட்ஸாவே இருப்போம்.ஆனால் சவாள்னு வந்துட்டா யாராவது ஒருத்தர்தான் ஜெயிப்பாங்க.ஒருத்தர் தோத்துடுவாங்க.இதனால ஜெயிக்கிறவங்களுக்கு என்ன லாபம். அதையும் நீயே சொல்லிடு. சரி அப்படி நீ ஜெயிச்சா நீ என்ன சொன்னாலும் நான் முழுமனசோடு ஏத்துக்கிடுறேன்.நான் ஜெயிச்சா. ஹ்ம்ம் சொல்லு.ஏதோ முடிவு பண்ணிட்ட. நான் ஜெயிச்சா நாம ரெண்டு பேரும் டைவோர்ஸ் பண்ணிக்கணும்.இதுக்கு உங்க வீட்டுல எங்க வீட்டுல எல்லாருகிட்டயும் பேச சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு.அதனால எந்த பிரச்சனை வந்தாலும் உன் பொறுப்பு.யாரு என்ன கேட்டாலும் நீதான் எல்லாத்துக்கும் காரணம்னு நான் சொல்லுவேன்.என் பேரு கெடாத அளவுக்கு எனக்கு டிவோர்ஸ் வாங்கித்தரனும்.சம்மதிக்கிறியா. கண்டிப்பா.நீ இதைத்தான் சொல்லுவான்னு எனக்கு நல்லா தெரியும்.அதுவும் இல்லாம உனக்கு ஒன்னும் இது புதிது இல்லையே. அப்புறம் நீ ஒரு கண்டிஷன் போட்டல்ல.நானும் ஒரு கண்டிஷன் போடுறேன்நமக்குள்ள இருக்க இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.வெளி உலகத்துக்கு பொறுத்தவரைக்கும் நாம சந்தோசமாதான் இருக்கோம்னு தெரியணும்.சரியாய். தெளிவாத்தான் இருக்க.இந்த செகண்ட்ல இருந்து ஆரம்பிச்சிக்கலாம்.. ம்ம்ம் ஓகே.அவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.ஆல் த பெஸ்ட் ராஜி. உனக்கும்தான். கைகொடுக்க மாட்டியா ராஜி. மாட்டேன்.கண்டிப்பா.என்னைக்காவது ஒருநாள் விடத்தான போறேன். பாக்கலாம். சரி இன்னைக்கு என்ன டின்னெர். பூரியும் கிழங்கும் செய்யணும்.கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன். சரி பண்ணிடலாம். பின் இருவரும் சாப்பாடு தயார் செய்துவிட்டு வெளியேவ வந்தனர். அப்புறம் கார்த்திக்.உன் விரதத்தை இன்னையோட முடிச்சுக்கோ. என்ன விரதம். ஆம்.முனிவர் விரதம்.கேக்குறத பாரு.எப்படியும் 6 மாசம்தான் ஒண்ணா இருக்க போறோம்.சோ நம்ம ரூம்லையே இருக்கலாம்.உன் திங்க்ஸ் எல்லாத்தையும் நம்ம ரூம்லையே எடுத்து வச்சுட்டேன்.அண்ட் நீயும் நைட் அங்கையே தூங்கு. இல்ல அது வந்து. என்னப்பா உன்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா. ஹஹஹஹா யாரு நானா.விசுவாமித்திரன் வம்சம்டி.எங்ககிட்டையேவா. ப்ளீஸ் கார்த்திக் தயவு செஞ்சு இதே மாதிரி சிரிக்காம காமெடி பண்ணாத.ஐயோ அப்பா சிரிக்க முடியலையே. என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் ராஜி. ஓகே ஓகே ரிலாக்ஸ்னு சொல்லிக்கொன்டு கண்ணீர் வரும்வரை சிரித்தவள் பின் நேத்து இழுத்துவச்சு கிஸ் அடிக்கும்போது பாத்தேனே விசுவாமித்திரனை. ஹலோ அது போன மாசம்.இது இந்த மாசம். போடா.போ.மொக்கை போடாத. நீ இங்க வந்து இன்னைக்குத்தான் ராஜி கண்ணீர் வர அளவுக்கு சிரிச்சிருக்க. அதைக்கேட்டு மௌனமாக இருந்தவள் சரி டிவி பார்க்கலாமா. ம்ம் பாக்கலாம்.நீ தெய்வமகள் சீரியல் பாப்பியா ராஜி. ஹ்ம்ம் பாப்பேன்.ஏன் நீயும் பார்ப்பியா. ஆமா.நம்ம காயு டார்லிங் காகவே அந்த சீரியல் பார்ப்பேன். ம்ம்.நான் பிரகாஷ்காக பார்ப்பேன். பின் இருவரும் அந்த சீரியலை பார்த்துவிட்டு விஜய் டீவியை மாற்றினாள் ராஜி. ஹே ராஜி அது மட்டும் வைக்காத.மொக்க சீரியல்.அது. ஏன் நீ சரவணன் மீனாட்சி பாக்க மாட்டியா.எனக்கு ரியோன்னா ரொம்ப பிடிக்கும்.அவனுக்காகவே பார்ப்பேன். எனக்கு பிடிக்கவே பிடிக்காது.ஒரு பொண்ணு மூணு பேரு காதலிப்பாங்க.சீரியல் மாறும்.பொண்ணு மட்டும் மாறாது.எப்படித்தான் மூணு பேர லவ் பன்றாளோ. ஹலோ பொண்ணு அப்படியேதான் இருக்கு பசங்கதான் மாறிட்டு இருக்காங்க. ஹாஹாஹா இப்போ அந்த பிரச்சனையே வேண்டாம்.ஆண் பொண்ணுன்னு பேச வேண்டாம்.வேற சேனல் மாத்துப்பா. மாட்டேன்.ஆமா உனக்கு லவ் சீரியலே பிடிக்காதா. பிடிக்கும்.ஆனா இந்த சீரியல் பிடிக்காது. எனக்கு இதுல எனக்கு பிடிச்ச ஜோடியே சரவணனும் மீனாட்சியும் தான்.உனக்கு நமக்கு எப்போதுமே கார்த்திக்,ராஜிதான். என்னது. இல்லப்பா ஆபிஸ் சீரியல்ல வருவாங்களே அந்த கார்த்திக்,ராஜீய சொன்னேன். அதான பாத்தேன்.நீ இன்னைக்கு வாங்கி கட்டிக்கத்தான் போற. பாக்கலாம் பாக்கலாம். ஹே மாத்துப்பா. முடியாது. இப்ப நீ மாத்தலை ரிமோட்டை பிடிங்கி மாத்துவேன். எங்க மாத்தித்தான் பாரேன். சட்டென்று அவளிடம் பிடிங்கி சண்மியுசிக் வைத்தான். பின் கார்த்திக்கிடம் சண்டை போட்டு ரிமோட்டை பிடிங்கி விஜய் டிவி மாற்றினாள். உன்னை என்று சொல்லிவிட்டு டிவிக்கு பக்கத்தில் சென்று டிவியில் சேனல் மாற்றினான். அவன் மாற்றியதும் டிவியில் மீண்டும் ராஜி மாற்றினாள். பின் கார்த்திக் டிவியில் சேனல் மாற்றிவிட்டு சென்சாரை கைகளால் மறைத்துக்கொண்டான். ராஜி ரிமோட்டில் மாற்ற சேனல் மாறாததால் தள்ளிப்போ கார்த்திக். முடியாது.முடிஞ்சா மாத்திக்கோ. அவன் அருகில் சென்ற ராஜி அவனை தள்ளிவிட்டு சேனலை மாற்றினால். பின் கார்த்திக் பிடுங்க பதிலுக்கு ராஜியும் பிடுங்க என்றுஇப்படியாக யார் பெரிய புடுங்கி என்று அவர்களின் ரிமோட் பிடுங்கல் சண்டை முடிந்தது. பின் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.
07-03-2020, 06:57 PM
nice update
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
07-03-2020, 10:22 PM
Awesome update
07-03-2020, 10:57 PM
Semma super bro...
07-03-2020, 11:22 PM
Wow. This is just wonderful updates. Keep posting.
07-03-2020, 11:39 PM
Semma ji. Manasa Alludhu.
07-03-2020, 11:43 PM
Superb episodes.
07-03-2020, 11:47 PM
Nice love story bro
07-03-2020, 11:52 PM
Super love bro. Hooked to the story
08-03-2020, 12:07 AM
Highly romantic story
08-03-2020, 12:50 AM
Awesome updates. Simply super.
08-03-2020, 06:29 AM
This story is lovely.
08-03-2020, 06:35 AM
Cool love story
|
« Next Oldest | Next Newest »
|