Romance ஓகே கண்மணி
#41
nice update
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Super update
Like Reply
#43
Arumaiyana kamam illa kadhal kathai
Like Reply
#44
Super
yourock
Like Reply
#45
Very nice. continue
Like Reply
#46
Story updated podyinga
Like Reply
#47
Sema love story... Pls bro continue
Like Reply
#48
காதல் இல்லாத காமமும்
காமம் இல்லாத காதலும்
உப்பு இல்லாத பண்டம் போல
கணவன் மனைவிக்கு உள்ள மன கஸ்டங்கள் கூட அன்பை இரட்டிப்பாக்கும் என்பதை தெளிவாக கொண்டு வந்து உள்ளீர்கள்
Like Reply
#49
Awesome update bro. Continue posting.
Like Reply
#50
Thanks for starting again. Wonderful story. I always waited for the updated. Please continue and finish it.
Like Reply
#51
Intha story rompa naala theditrunthen., Update pannunga bro
Like Reply
#52
மீண்டும் எழுத தொடங்கியதற்கு நன்றி. அருமையான கதை. தயவு செய்து தொடர்ந்து எழுதி நிறைவு செய்யுங்கள். இந்த தலத்தில் எதனை காம கதைகள் வந்தாலும். இது போன்ற காதல் கதைகள் தான் மனதை வருடி செல்கிறது.
Like Reply
#53
Good to see Karthik and Raji again. Please continue.
Like Reply
#54
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பிரெண்ட்ஸை பார்க்க சென்றான் கார்த்திக்.அப்படியாவது மனதுக்கு கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று.ஆனால் அங்கும் அவன் மனம் ராஜியையே சுற்றி வந்தது.

இதற்கு ஒரே வழி சரக்குதான் என்று முடிவெடுத்து கடைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டான்.

பின் வீட்டிற்கு சென்று ஓபன் செய்து வாயில் வைக்கும் முன் ஆரம்பிச்சிட்டியா.ஒருநாள் வீட்டில் இல்லனா குடிக்க ஆரம்பிச்சிடுவியா.குடிகாராகுடிகாரா என்று ராஜி சொன்னாள்.

டேபிளுக்கு அருகில் கைகளை கட்டிக்கொண்டு கோவமாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால் ராஜி.

இல்லை இல்லை.உன்னை விட்டுட்டு வந்ததுல இருந்து உன் நியாபகமாவே இருக்குது.எங்க பாத்தாலும் நீதான் தெரியுற.அதான் லைட்டா பீர் சாப்பிடலாம்னு.நீ வந்துட்டல்ல இப்பவே கீழ ஊத்திடுறேன்.

எனக்காக ஒன்னும் ஊத்த வேணாம்.குடிக்கணும்னா குடிச்சு தொலை.

இப்ப பாரு ஒன் sec.வேகமாக சென்று அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கை கழுவிக்கொண்டு எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டேன் போதுமா.ஹாப்பியா.என்று சொல்லிக்கொண்டே வர அங்கு யாரும் இல்லை.

அஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று தலையை பிடித்துக்கொண்டு சோபாபில் விழுந்தான் கார்த்திக்.

ராஜி அழுது முடிக்கும் வரை அவள் தலையை கோதி விட்டு அவளை சமாதானம் செய்தாள் ஷக்தி.

பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு தலையை நிமிர்த்திய ராஜியை பார்த்து அக்கா என்னக்கா ஆச்சு.ஏன் இப்படி அழகுற.

எனக்கு வாழவே பிடிக்கலடி.

அக்கா என்னக்கா சொல்ற.கார்த்திக் உன்ன சந்தோசமா தான வச்சிருக்கான்.

எனக்கு அவன்கூட இருக்கவே பிடிக்கல.ஏன் அவனையே பிடிக்கல

அக்கா என்ன சொல்ற நீ.

ஆமாம்.அவனை நான் எப்போதுமே ஹாஸ்பேன்டா நினைச்சு பாத்ததே இல்லடி.அவன்கூட இருக்கும் போதெல்லாம் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் நியாபகத்துக்கு வருது.

அக்கா என்ன சொல்ற.அவன் உனக்கு துரோகம் செஞ்சானா.

நான் ரமேஷை லவ் பண்ணும்போது எங்க ரெண்டு பேரையும் பிரிச்சது அவன்தான்.அக்கா கிட்ட எங்க ரெண்டு பேரையும் போட்டு கொடுத்தான்.அப்புறம் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு நான் அவன்கிட்ட சொல்லி அவன்கிட்ட கேட்டேன்.

அந்த நேரம் உனக்கு விருப்பம் இல்லனா இந்த கல்யாணம் நடக்காது.இதை நிறுத்த வேண்டியது என் பொறுப்புன்னு சொன்னான்.ஆனால் அப்பவும் என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான்

நீ கல்யாணம் பிடிக்கலைன்னா அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே.அத விட்டுட்டு ஏன் கார்த்திக் கிட்ட சொன்ன

எப்படிடி சொல்ல முடியும்.நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நா இன்னும் ரமேஷதான் மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு அம்மா என்ன நினைக்க மாட்டாங்க.அதான் கார்த்திக் கிட்ட கேட்டேன்.

எல்லாம் இருக்கட்டும் இதெல்லாம் கார்த்திக் தான் பண்ணினானு நீ எதவச்சி சொல்ற.

அவன்தானே நான் ரமேஷ லவ் பன்றேன்னு தெரிஞ்சும் என்ன லவ் பண்ணான்.நான் அவனுக்கு கிடைக்கணும்.அவன் ஆசை பட்டது நடக்கணும்.அதுக்கு தான இதெல்லாம் செஞ்சான்.

அப்படி நீ நினைச்சா அது உன்னோட முட்டாள்தனம்.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீயா ஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டு அதுதான் நிஜம்னும் நினைச்சுட்டு இப்ப உன் வாழ்க்கையே நாசமாகிட்டு இருக்க.

என்னடி சொல்ற.

ஆமா.என்னைக்காவது நீ அவனை புரிஞ்சிக்கிடனும்.அவனை பத்தி தெரிஞ்சுக்கிடணும்னு ட்ரை பண்ணிருக்கியா.

இப்ப எதுக்கு நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற.

இப்பவும் நீ லூசு மாதிரி பேசுற.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா. . . . . . . . . . . . . .
என்ன நடந்துச்சுன்னு சொன்னா உனக்கு புரியவா போகுது விடு.ஆரம்பத்துல எனக்கும் கோவமாத்தான் இருந்துச்சு.அவன் லவ் பண்ணறேன்னு சொன்னப்ப எல்லாம் பிரியவைதான் லவ் பண்ணிட்டு இருக்கான்னு நானும் அவளும் நினைச்சோம்.அப்பகூட அவன்மேல எனக்கு கோவம் இல்ல.உன்ன லவ் பண்ணறேன்னு சொன்னப்ப தான் எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு.அவன்கூட பேசாம கூட இருந்தேன்.ஆனா இப்ப உன்ன ரொம்ப லவ் பண்ரான்னு எனக்கு தோணுது.அவன்மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை.நீ புரிஞ்சிக்கோ அக்கா.

நான் யாரையும் புரிஞ்சிக்க வேண்டாம் சக்தி.நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனாவே இருக்கட்டும்.ஆனால் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம.அவ வேண்டாம்னு சொல்லியும் அவ கழுத்துல தாலி கட்டினவன என்ன செய்ய சொல்ற.

இந்த நேரடி கேள்வியில் சற்று நிலை தடுமாறித்தான் போனாள் சக்தி.ஆனால் அவளுடைய கோவத்திற்கு காரணம் வெளிப்பட்டு விட்டது.

அது மட்டும் தான் அவன் செஞ்ச பெரிய தப்பு.அதுக்கு பதில் அவனுக்கு தான் தெரியும்.அவனுக்கு மட்டும் தான் தெரியும்.அதுக்கு நீ அவன்கிட்ட மனசு விட்டு பேசினாத்தான் பதில் கிடைக்கும்.இல்லனா இந்த விஷயத்தை நான் அம்மாகிட்ட சொல்றத தவிர எனக்கு வேறு வழி தெரியல.

ஹேய் லூசு மாதிரி பண்ணாத.அம்மாக்கும்,வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது.நீ யாருகிட்டயும் இதை பத்தி சொல்லாத.எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்.

நல்ல யோசி.நீ இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு நல்ல பதிலா சொல்லு.இல்ல அம்மாகிட்டதான் சொல்லுவேன்

சரி.நீ இப்ப கிளம்பு.எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.நான் கொஞ்சம் தூங்கணும்.

சரி அக்கா.நீ ரெஸ்ட் எடு அப்புறமா பேசலாம்.

ஹே ஹே ஒரு நிமிஷம் ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட போல.எனக்கே அட்வைஸ்லாம் பண்ற சக்தி.

ஹலோ அப்படிலாம் ஒன்னும் இல்ல.என் அத்தானுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப்.அவ்ளோதான்

அப்ப நீ அக்காவுக்காக பேசல.

அப்படில இல்ல.ரெண்டு பேருக்காகவும் தான்.தூங்குக்கா.அப்பறம் பேசலாம்.என்று ராஜியின் நெற்றியில் முத்தமிட்டு சென்றாள் சக்தி.

சக்தி சென்றவுடன் ராஜிக்கு திரும்ப திரும்ப அந்த வார்த்தை ஓளித்தது.அத்தானுக்காக அத்தானுக்காக.

பெட்டில் படுத்த ராஜிக்கு சிந்தனை மொத்தமும் கார்த்திக் பற்றியே இருந்தது.

இன்னைக்கு சக்தி பேசினதை வச்சி பார்க்கும் போது எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிருக்கு.கார்த்திக் தான் எல்லாத்தையும் அவகிட்ட சொல்லி என் மனச மாத்த ட்ரை பன்றானோ என்று தப்பு கணக்கு போட்டாள்.

பொதுவாக ஒரு மனுஷனுக்கு ரெண்டு மனசு இருக்கும்.ஒன்னு எப்போதும் நல்லதையே யோசிக்கிற,பாஸிட்டிவா பேசுற மனசு.அது எப்போதும் இதயத்துக்கு பக்கத்துல இடது பக்கம் இருக்கும்.

இன்னொன்னு இதயத்துக்கு எதிர் பக்கத்துல நுரையீரல் பக்கத்துல இருக்கும்.இதயத்தை விட்டு தள்ளி இருக்குறதால என்னவோ அது எப்போதும் தப்பாவே நினைக்கும்,நெகடிவ்ஆன விஷயங்களையே சொல்லும்.

ஆனா நம்ம புத்தி அந்த நெகட்டிவ்ஆன மனசையே நம்பும்.அது சொல்ற படி தான் நடக்கும்.ஏன்னா அது சொல்றது ரொம்ப ஈஸியா இருக்கும்.சுலபமாவும் இருக்கும்.

வலது பக்கம் இருக்க மனசு சொல்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.ஆனால் அது கண்டிப்பா நல்லதுல போய்த்தான் முடியும்.

உதாரணத்துக்கு நீங்க ட்ரிங்க்ஸ் பண்றிங்கன்னு வைங்க.அது ரொம்ப ஹெல்த்தை பாதிக்கும்னு நமக்கு தெரியும்.உங்க நல்ல மனசு வேண்டாம்.இனி குடிக்க கூடாது.இதை குடிக்கிறதுக்கு பதிலா இந்த காசை வேற எதுக்காவதுஸ் செலவழிக்கலாம்னு சொல்லும்.

ஆனா அந்த கெட்ட மனசு அதுக்கான அல்டெர்னட்டா யோசிக்கும்.இந்த ஒரு தடவை மட்டும்,இந்த வருஷத்தோட நிறுத்திக்கலாம்.இப்படியான சாதகமான பதிலை சொல்லும்.

ராஜியும் இப்படிதான் இரு மனதிடமும் போராடி கொண்டிருந்தாள்.இறுதியில் இது கார்த்திக்கின் வேலை தான் என்று உறுதியாக நம்பினாள்.

அன்று நல்லவநாட்டும் பேசிட்டு இன்னைக்கு என் தங்கச்சியவே தூது அனுப்பிரியா.உன்னை கடைசி வரைக்கும் நான் நம்ப மாட்டேன் என்று மனதிடம் சொன்னாள்.
[+] 4 users Like bsbala92's post
Like Reply
#55
இதற்கு ஒரேஒரேய வழி இப்போதைக்கு இதை சமாளிக்க கார்த்திக்கை புரிஞ்சிக்கிட்டதாகவும் இனிமேல் ரெண்டு பேருக்கு நடுவுல எந்த பிரச்சனையும் வராதுன்னும் சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.மீதியை அங்கு சென்று பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

ஆனால் இதை உடனே சொன்னால் அவளுக்கு சந்தேகம் வரும்.அதனால ரெண்டு நாள் ஆறப்போட்டு அவளிடம் இதை சொல்லலாம்.அதுவரைக்கும் அவளாக கேட்கும் வரை இதை பற்றி அவளிடம் பேசக்கூடாது என்று எண்ணிகொண்டே தூங்கியும் போனாள்.

இங்கு ராஜியின் நினைவுகளில் தூங்கி போன கார்த்திக் முழிப்பு வந்து எழுந்த போது இரவாகி போனது.மீண்டும் ராஜியின் நினைவுகள் வந்து பாடாய்படுத்த நீண்ட நாட்களுக்கு பின் டைரி எழுத வேண்டும் போல் தோன்றியது.

உடனே மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து தனது காதலை டைரியில் செதுக்க தொடங்கினான்.

எழுதி முடித்த பின் பசி வயிற்றை கிள்ள சாப்பிடலாம் என்று தம்பிக்கு போன் செய்து சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட்டான்.

மகேஷ்ஸ் சென்ற உடன் மீண்டும் தனிமை வாட்ட செல்லில் ஹெட் போனை கனெக்ட் செய்து ஹலோ எப்.ம் ஐ டியூன் செய்தான்.

டைரி ப்ரோக்ராம் அப்போது தான் ஆரம்பித்திருந்தது.ஆர்ஜே மணிகண்டனின் மயக்கும் குரலும் அதில் அவர் சொல்லும் முகம் தெரியா மனிதரின் கடிதமும் மனதை இலகுவாக்க ஒரு இளையராஜா பாடல் வந்தது.

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே….

அப்படியே அந்த பாடல் தந்த சுகத்திலையே தூங்கியும் போனான்.

வீட்டில் நன்றாகிய தூங்கிய ராஜி தங்கை வந்து எழுப்பிய போது தான் எழுந்தாள்.இரவு முழுவதும் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசிவிட்டு சாப்பிட செல்லும்போது தான் கார்த்திக் சாப்பிட்டாணா இல்லையா என்று குழம்பினாள்.

உடனே சாப்பிட்டுவிட்டு மகேஷின் அம்மாவிற்கு போன் செய்து தான் அம்மா வீட்டிற்கு வந்ததையும் இன்னும் சில நாட்களுக்கு கார்த்திக்குக்கும் சேர்த்து சாப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டாள்.

இதை பார்த்து கொண்டிருந்த சக்திக்கு அக்காவின் இந்த மாற்றம் சிறிது சந்தோசத்தை கொடுத்தது.

என்ன அக்கா.வர வர பாசம் ரொம்ப பொங்குது.போகுற போக்க பார்த்தால் இன்னும் 10 மாசத்துல என்ன சித்தி ஆகிடுவ போல.

அவள் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரிய சில நேரம் ஆனதும் யேய் உன்ன என்று அடிக்க கை ஒங்க சக்தி வயிறை பிடித்துக்கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.

பின் சிறிது நேரம் கழித்து சக்தி தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு தூங்க சென்றாள்.அம்மாவும் மகளும் இருந்து டிவி பார்த்து கொண்டிருக்க தாய் தன் மகளிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

உன்னை கேக்காம கார்த்திக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைச்சதுல என்மேல வருத்தம் ஒன்னும் இல்லையேமா.நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாகதான இருக்கீங்க.

தாயின் இந்த வார்த்தை வயிற்றில் புளியை கரைக்க ஒருவேளை சக்தி அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிட்டாலோ என்று எண்ணிக்கொண்டு சரி எதுவா இருந்தாலும் நாமளா வார்த்தையை விட்டுட கூடாது என்று முடிந்த வரை முகத்தை இயல்பாக்கி கொண்டு

அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா.கார்த்தி என்ன நல்ல பார்த்துகிடுரான்மா.நாங்க நல்லாத்தான் இருக்கோம்.

இல்லடி.உங்க அத்தையும் மாமாவும் நீங்க சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருப்பிங்கனு தான் அவுங்க கோவில் குளம்னு போயிருக்காங்க.நீங்க என்னடான்னு இப்படி இருக்கீங்கலே அதான் கேட்டேன்.

அப்பாடா அம்மாக்கு எந்த விஷயமும் தெரியாது என்று அம்மாவின் பேச்சில் இருந்து புரிந்துகொண்ட ராஜி வராத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டு அதெல்லாம் நைட் சந்தோசமாதான்ம இருக்கோம்.

மகளின் முகத்தை பார்த்து சந்தோஷமான தாய் சரிம்மா ரொம்ப நேரமா டிவி பார்க்காம சீக்கிரம் படுத்து தூங்குமா.

அப்பறம் உனக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு.இனிமேல் கார்த்தியை நீங்க.போங்கன்னு மரியாதையா பேசு.இல்லனா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க.

ம்ம்ம்ம் சரிம்மா.நீண்டதாக ஒரு பெரு மூச்சை விட்ட ராஜி இங்கு ரொம்ப நாள் இருந்தோம்னா கண்டிப்பாஎ அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க.அதனாலஸ் சீக்கிரமா இங்க இருந்து கிளம்பிடனும் என்று நினைத்து கொண்டாள்.

இப்படியாக சில நாட்கள் செல்ல ராஜி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.இடையில டைம் கிடைக்கும் போதெல்லாம்ர்

இப்படியாக சில நாட்கள் செல்ல ராஜி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.இடையில டைம் கிடைக்கும் போதெல்லாம்ர்
ராஜிக்கும்ஸ்
சக்திக்கும் போன் செய்து பேசிக்கொண்டான்.
கார்த்திக்கிற்கு ராஜி இல்லாத குறையை டைரியின் மூலம் தீர்த்து கொண்டான்.

அன்று ராஜி தனது ஸ்கூல் பிரென்ட் கஸ்தூரியை பார்க்க செல்வதாக சொன்னாள்.ராஜி வந்திருப்பதை அறிந்த கஸ்தூரி அவளை தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள்.சரி போயிட்டு வாம்மா என்று அம்மா சொல்ல இருவரும் கஸ்தூரியின் ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார்கள்.

அங்கு சென்ற உடன் இருவரும் தங்களது பள்ளி காலத்து கதைகளை பேசிவிட்டு இருவரின் குடும்பவ விஷயங்களில் வந்து முடிந்தது.

ராஜி தனது கதையை சொல்லி அவளிடம் அழ கஸ்தூரிக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ராஜியும் ரமேஷும் லவ் பண்ணும்போது கூட இருந்தவள் ஆச்சே.ஆனால் கார்த்திக் பற்றியும் அவளுக்கு நன்றாக தெரியும்.ஒருமுறை அவனுடன் போனில் பேசியிருக்கிறாள்.

ராஜியை சமாதான படுத்திய கஸ்தூரி அழாத ராஜிம்மா.ப்ளீஸ்.எல்லாம் நல்லதுக்குதான்.கார்த்திக்கை பார்த்தால் நல்லவராதான் தெரியுது.நீ கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு.அவர்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு நீ பேசினா எல்லாம் சரி ஆகிடும்.சரியா என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு டீ போட சென்றாள்.

பின் இருவரும் கஸ்தூரியின் குழந்தையிடம் கொஞ்சிவிட்டு ராஜி தனது வீட்டிற்கு வந்தாள்.ஏனோ இப்போது ராஜியின் மனம் தெளிவான நீரோடை போல இருந்தது.

முதல் வேலையாக சக்தியிடம் சென்று நான் கார்த்திக்கை பத்தி புரிஞ்சிக்கிட்டேன்.கண்டிப்பா நான் கார்த்திக் கிட்ட பேசி சமாதானம் ஆகிடுவேன்.நான் வர சண்டே ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.

அய்யா அக்கா ரொம்ப சந்தோஷம் அக்கா.என்று அவளைஅவளை கட்டிப்பிடித்தாள் சக்தி.

ஏய் விடுடி.கூச்சமா இருக்கு

ஆமா.சன் டே போய் புருஷன கட்டிப்பிடிப்பாங்க நாங்க கட்டிபிடிச்சா கூச்சமா இருக்குமாம்.

வர வர உனக்கு வாய் ரொம்ப நீழுதிடி.உனக்கு இருக்கு ஒருநாள்.

சரி ட்ரீட் எங்க.எனக்கு டிரஸ்வ வேணும்.

ம்ம்ம் சரி வாங்கலாம்.ஈவினிங் போகலாம் சரியா.

ஓகே.

பின் இருவரும் டிரஸ் எடுக்க சென்றனர்.அங்கு சக்திக்கு சுடியும் அம்மாவுக்கு சேலையும் எடுத்துவிட்டு பில் கொடுக்க கார்டை எடுக்கும்போது ராஜி என்று ஒரு குரல் கேட்டது.குரல வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப அங்கு ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.........

பின் இருவரும் டிரஸ் எடுக்க சென்றனர்.அங்கு சக்திக்கு சுடியும் அம்மாவுக்கு சேலையும் எடுத்துவிட்டு பில் கொடுக்க கார்டை எடுக்கும்போது ராஜி என்று ஒரு குரல் கேட்டது.குரல வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப அங்கு ரமேஷ் நின்று கொண்டிருந்தான்..

ரமேஷை பார்த்த ராஜிக்கு ஏனோ வார்த்தைகள் வரவில்லை.கண்ணீர் மட்டும் தான் வந்தது.முடிந்தவரை உதட்டை கடித்து கண்ணீரை அடக்கி கொண்டாள்.சூழ்நிலையை இயல்பாக்க முடிந்தவரை போராடினாள்.

ரமேஷை கண்ட சக்திக்கு எரிச்சலாக வந்தது.இந்த சனியன் எதுக்கு இப்ப என்ட்ரி ஆகுது என்று அக்காவிடம் வாய்விட்டு சொல்லிவிட்டாள்.

ரமேஷ் ராஜியிடம் வந்து எப்படி இருக்க ராஜி.கண்டிப்பா நல்லா இருப்ப என்றான்.

அதான் நீயே சொல்லிட்டியே.நல்லா இருப்பன்னு.நீ எப்படி இருக்க ரமேஷ்.

ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன்.ஹாஸ்பேண்ட் எங்க ராஜி.

அவள் அருகில் இருந்த சக்தியை பார்க்க சக்தி ரௌத்திரமாக முறைத்து கொண்டிருந்தாள்.
[+] 4 users Like bsbala92's post
Like Reply
#56
ஓ சாரி.எப்படி இருக்க சக்தி.

நல்லா இருக்கேன் என்று வேண்டா வெறுப்பாக பதில் சொல்லிவிட்டு அக்கா டைம் ஆகிடுச்சு.அம்மா வேற கால் பண்ணிட்டு இருக்காங்க.போகலாமா

ஹே ஹே ரிலாக்ஸ்.நான் பேசினது சக்திக்கு பிடிக்கலன்னு நினைக்கிறன்.ஓகே நான் கிளம்புறேன்.ஒன் செக்.இது என்னோட கார்டு.உனக்கு எப்ப எந்த ஹெல்ப் வேணுனாலும் எனக்கு கால் பண்ணலாம்.ஒரு பிரெண்டா.பாய்.

பின் இருவரும் பில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது அக்கா நீ ஏன் அவன்கிட்ட பேசுற.அவனும் அவன் பிரெஞ்சும்.இதுல கார்டு வேற.கொடு அதை என்று அதை கிழித்து குப்பையில் எறிந்தாள்.

சக்தியின் இந்த செய்கை ராஜிக்கு சிரிப்பை வரவைத்தாலும் அவள் பேசாமல் அவலுடன் நடந்து சென்றாள்.

ராஜியை பொறுத்தவரை ரமேஷ் என்ற ஒருகதை அவளுடைய வாழ்க்கையில் முடிந்துவிட்டது.அது மீண்டும் எந்த சலனத்தையும் அவளிடம் ஏற்படுத்த போவதில்லை.

அவளின் மனதை அறிந்தவளாக அக்கா உனக்கும் அவன் மேல கோவம்தானே.அதான் நான் கார்டை கிழிச்சி எரியும் போது நீ பேசாம இருந்த.

பதிலுக்கு சிரித்துவிட்டு ஆமா என்று மட்டும் கூறினாள்.அதற்குமேல் ராஜியிடம் ரமேஷை பற்றி பேசி அக்காவை கஷ்டப்படுத்தாமல் அமைதியாக இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
[11/21, 9:00 PM] ��karthi��: வீட்டிற்கு வந்த ராஜிக்கு ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது.எந்த காரணத்தை கொண்டும் சக்தி சொன்னது போல் கார்த்திக்கிடம் நடந்துவிடக்கூடாது என்று.அவள் மனதில் கார்த்திக் நம்பவச்சி ஏமாத்திட்டான்.அதுமட்டுமே அவளுக்கு அசரீரி போல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இங்கோ கார்த்திக் தினமும் காலை சித்தி தரும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வேளைக்கு சென்றால் ஈவினிங் வரைக்கும் வேளையிலே கவனத்தை திருப்பினான்.ராஜியின்ன் நினைவுகள் வராதவாறு பார்த்துக்கொண்டான்.

வீட்டில் தனிமையில் டைரியின் உதவியுடன் ராஜியை காதலித்தான்.

இதோ சன்டே யும் வந்துவிட்டது.முந்தின நாளே அம்மாவிடம் கார்த்திக்கை விட்டுட்டு என்னால இங்க இருக்க முடியல.அதனால நாளைக்கு நான் ஊருக்கு போறேன் என்று அம்மாவிடம் சம்மதம் வாங்கினாள் ராஜி.

கார்த்திக்கை வரச்சொல்லி அவன்கூட போக சொன்னாள் தாய்.ஆனால் சஸ்பென்சாக இருக்கணும் என்று சொல்லி மறுத்துவிட்டாள்.

சக்தியிடமும் அதையே சொல்லி அவளையும் நம்ப வைத்தாள்.பின் பஸ்சில் சென்றால் புகுந்த வீட்டை நோக்கி.

வீட்டில் இருந்த கார்த்திக் சைட் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இன்று வீட்டில் சமைக்கலாம்.ரிலாக்ஸா இருக்கும்.என்று என்னி மகேஷையும்டீ துணைக்கு அழைத்தான்.

பிரியாணி செய்யலாம் என்று முடிவு செய்து அதற்கான வேளைகளில் இறங்கினர்.

சரியாக எல்லாம் செய்து முடித்து கேஸை ஆப் செய்யும் நேரம் காலிங் பெல் அடித்தது.யாரென்று பார்க்க கார்த்திக் செல்லும் முன் இருன்னே நான் பார்க்குறேன் என்று மகேஷ் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அங்கு ராஜி நிற்பதை பார்த்த மகேஷ்.மைனி நீங்களா என்றான்.

ஷ்ஷ்ஷ்ஷ் என்று உதட்டின் மேல் கைவைத்து சஸ்பென்ஸ் என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
[11/21, 9:40 PM] ��karthi��: ம்ம் சரி மைனி.நடத்துங்க.நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அண்ணா நான் கிளம்புறேன் என்றான்.

யாருடா வெளில.

ஒன்னும் இல்லனா சின்னப்பசங்க.போய்ட்டாங்க.நான் குளிச்சிட்டு வரேன்.

ம்ம்ம் சீக்கிரம் வா.பசிக்குது.என்று சொல்லிவிட்டு பேசினில் கைகழுவ சென்றான்.அப்போது உள்ளே வந்த ராஜி உள்ளே கார்த்திக்கை பார்த்ததும் சிரிப்பாக வந்தது அவளுக்கு.

வெறும் பனியன் மற்றும் பெர்முடாஸ் போட்டுகொண்டு தலையில் துண்டை கட்டிக்கொண்டு சமையல்ல உன்னை அடிச்சிக்க ஆளே இல்லடா.தெருவையே மணக்க விடுற.உன் பொண்டாட்டிக்குதான் அந்த கொடுப்பினை இல்லை.

இதை கேட்ட ராஜிக்கு நிஜமாலுமே சிரிப்பு கைகளை கட்டிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.ஆனாலும் அவள் உதடு சத்தமில்லாமல் புன்னகைத்து. கைகளை கட்டிக்கொண்டுஎ அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்த ராஜியை கார்த்திக் பார்த்துவிட்டான்.

ஆனால் கார்த்திக்குக்கு எந்தவித அதிர்ச்சியும் இல்லை.அவளை பார்த்ததும் ம்ம்ம் வந்துட்டியா.என்னடா கொஞ்ச நாலா ஆளையே காணோம்னு பார்த்தேன்.

அவனை பார்த்து கைகளில் போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்த ராஜி என்ன இது நம்மள பார்த்து ஷாக் ஆகாம இப்படி பேசுறான்.ஒருவேளை சக்தி உளறிட்டாலோ.இல்லையே நம்மகிட்ட சொல்லமாட்டேன்னு பிராமிஸ் பண்ணினாலே.இல்ல மெண்டல் கிண்டல் ஆகிட்டானோ.சரி என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று அதே சிரிப்பு மாறாமல் அப்படியே நின்றிருந்தாள்.

ப்ப்ப்ப்ப்பா அப்படி மட்டும் பார்க்காத.என்னோட ரெத்த ஓட்டம் எல்லாம் நொடிக்கு நூறுமுறை தலைக்கும் காலுக்கும் போகுது.

ராஜியிடம் எந்த மாற்றமும் இல்லை.

சரி இப்ப உன்ன எப்படி போகவைக்கிறதுனு எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டே சட்டென்று அவளது தலையை பிடித்து அவளது உதடுகளை சிறை பிடித்தான்.

இந்த திடீர் தாக்குதலில் ராஜி நிலைகுலைந்து தான் போனாள்.

கார்த்திக் தன் பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்து வைத்ததில் அவளால் விடுபட முடியவில்லை.

சட்டென்று தன் கையில் இருந்த போனை எடுத்து தரையில் உடைத்துவிட்டு தன் இரு கைகளாலும் அவன் மார்பை பிடித்து தள்ளினாள்.

விலகிய கார்த்திக்கிற்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது.இது கணவில்லை நிஜம்.

ஐ ம் சோ சாரி.ஐ ம் சோ சாரி.நான் வேணும்னே பண்ணல.சாத்தியமா.ஐயோ.ச்ச என்று வேகமா கையை அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தினான்.

அவனது இந்த செய்கை ராஜியை ரொம்ப மிரட்சி அடைய செய்தது.ஒரு நிமிடம் அவனை பார்த்து பயந்தே போய்விட்டாள்.

அவனது முதல் முத்தம் ஒரு மிரட்சி என்றால் இரண்டாவது செய்கை மேலும் மிரட்சி.

சட்டென்று அவன் கைகளை பற்றியவள் தன் கர்சீப்பை எடுத்து அவன் கைகைளை இழுத்து வா ஹாஸ்பிடலுக்கு போகலாம்.வா என்று அழுதாள்.

இல்ல நீ மன்னிச்சிட்டேன்னு சொல்லு.ப்ளீஸ்.நான் வேணும்னே பண்ணல.நம்பு ராஜி.சாத்தியமா.

அதை பத்தி அப்றமா பேசிக்கலாம்.ப்ளீஸ் வா என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள்.

பின் இருவரும் ஹாஸ்பிடல் சென்று கண்ணாடி சில்லுகளை அகற்றி காயத்திற்கு மருந்து போட்டு வெளியே வந்தனர்.

வீட்டிற்கு வந்த ராஜி பர்ஸை வீசி விட்டு என்னடா ஓவரா சீன் போடுறியா.நல்லா இழுத்து வச்சி கிஸ் பண்ணிட்டு.ஒன்னும் தெரியாத நல்லவநாட்டும் கண்ணாடியை உடைக்கிற.சாரி கேக்குற.என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.நீ கிஸ் பண்ணும்போது எனக்கு அப்படியே செத்திடலாம் போல இருக்கு.என்று வாயை பொத்திக்கொண்டு அழுகையை அடக்க முடியாமல் தரையில் கைகளால் அடித்தாள்.

ராஜி ப்ளீஸ் ராஜி புரிஞ்சிக்கோ.நான் எதுவும் பிளான் பண்ணி செய்யலை.நீ போனதுக்கு அப்றம் இதே மாதிரி நீ இருக்க மாதிரி கனவா வந்துச்சு.அதே மாதிரிதான் இதுவும்னு நினைச்சுத்தான் அப்படி நடந்துட்டு.சாரி ப்ளீஸ்.

ஒன்னும் பேசாத அன்னைக்கு எவலோ பேசுனா என் நிழல் கூட உன்மேல படாதுன்னு.உனக்கு உடம்பு சுகம்தான் வேணும்னா அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல.இனி உன்கூட ஒரே ரூம்ல உன்ன நம்பிஏ எப்படி என்ன படுக்க சொல்ற.

இந்த வார்த்தையை கேட்ட கார்த்திக் will u stop that nonsense. என்று கத்திவிட்டு அவன் கைகளுக்கும் ராஜியின் கன்னத்திற்கும் ஒரு இன்ச் இடைவெளியே இருந்தது.

ராஜி முகத்தை திருப்பிவிட்டு அப்படியே சிலையாக முட்டிகால் இட்டு இருந்தாள்.

அங்கு ஒரு முடி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.

இப்ப சொல்றேன் கேட்டுக்கடி.இந்த நிமிஷத்துல இருந்து உன்ன நான் லவ் பன்னலடி.சத்தியமா சொல்றேண்டி உனக்கு நான் கொடுத்த எதிர்பாராத அந்த முதல் முத்தம் போதும்டி.என் வாழ்நாள் முழுக்க.என்ன போது.இதை சொல்லும்போது அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

நான் இனி நம்ம ரூம்க்கு பக்கத்துல இருக்க ரூம்ல படுத்துகிடு்றேன்.நம்ம ரூம்ல இருக்க பாத்ரூம் கூட இனி நான் யூஸ் பண்ணமாட்டேன்.இனிமேல் நீ இருக்க திசைப்பாக்கம் கூட நா தலைவச்சி படுக்க மாட்டேன்.அப்புறம் ஏதோ சொன்னியே உடம்பு சுகம்னு.மனசுல ஒருத்திய நினைச்சுகிட்டு இன்னொருத்தி கூட படுத்துட்டு அந்த ஒருத்திய கற்பனை பண்ணிட்டு செய்றது பேருதான் தான் உடம்பு சுகம்.அப்படி உன்ன மனசுல நினைச்சிட்டு இன்னொருத்தியை தேடி போயிருந்தா நா உன்கிட்ட நின்னு இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்.இந்நேரம் அவளோட ஒருபிள்ளையே பிறந்திருக்கும்.என்காதல டீசெண்டா சொல்லணும்னு ஆசைப்பட்டேன்டி.இவ்ளோ கேவலமா சொல்ல வச்சிட்டியேடி.ச்சி.
[+] 4 users Like bsbala92's post
Like Reply
#57
நெருப்பை உமிழ்ந்தவன் போல் பேசிவிட்டு மாடிக்கு சென்று தனது ட்ரெஸ்,திங்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பக்கத்து ரூமிற்கு சென்றான்.சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளிறினான்.
சடாரென்று கதவை சாத்திவிட்டு வெளியேறிய கார்த்திக் ஆபீஸ் சாவியை மகேஷிடம் வாங்கி கொண்டு ஆஃபீசிற்கு பின் பக்கம் இருக்கும் கோடௌன்க்கு சென்றான்.

கதவை லாக் செய்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்தான்.மனம் இரும்புக்கலனை போல் கொதித்து கொண்டிருந்தது.

என்ன வார்த்தை சொல்லிட்டா.உடம்பு சுகத்துக்கு அளிர்வான
அலையிறவனா நான்.ச்ச.நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்கு.இந்த ஒரு மாசத்துல என்ன பத்தி கொஞ்சம் கூடவா புரிஞ்சிக்கல.

நேரம் ஆக ஆக அவனுக்கு கோவம் அதிகமாக ஏறியது.ஆனால் அவன் மனம் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லியது.அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கோவத்தில் சொல்லியது என்றும் மனதில் இருந்து வந்தது அல்ல என்று.

அதே போல அவன் காதல் செத்துப்போச்சு என்று சொன்னதும் கோவத்தில்தான் ஒழிய மனதில் ராஜியின் மீதான காதல் ஒருபோதும் அழியாது.

இவ்வாறு பலவிதமான சிந்தனைகளில் எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.மீண்டும் எழுந்து பார்க்கையில் மணி ஏழாகியிருந்தது.இப்போது அவனது கோவம் தணிந்திருந்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

இனிமேல் முடியாது சரக்குதான் இதுக்கு ஒரே வழி என்று முடிவு செய்து போனை எடுத்து மஹேஷிற்கு கால் செய்து ஆஃபீஸ் குடவ்னிற்கு வர சொன்னான்.

10 நிமிடத்தில் அவன் வந்துவிட அவனை உட்கார சொன்னான்.

உட்கார்ந்த மகேஷ் அண்ணா எதாவது பிரச்சனையா.வீட்ல கண்ணாடி உடைஞ்சிருக்கு,உன் கையில வேற காயமா இருக்கு,அண்ணி வேற ட்ரெஸ்க்கூட மாத்தாம டைனிங் டேபிள்ள உக்கார்ந்துருக்காங்க.என்ன ஆச்சு.

டேய் ஒரு மண்ணும் ஆகலை.ஒரு சின்ன சண்டை அவ்ளோதான்.பெரிய இவரு மாதிரி கேள்வி கேக்காம மட்டமான சரக்கா ஒரு புல் வாங்கிட்டுவா.

அண்ணா.நீதான் விட்டுட்டியே.இப்ப போய்.

டேய் மூடிட்டு போய் வாங்கிட்டு வா.தேவை இல்லாம எனக்கு அட்வைஸ் பண்ணாத.போ.

சரிண்ணே என்று மகேஷ் சென்றுவிட்டான்.மஹேஷிற்கு தெரியும் கார்த்திக்கை பற்றி.அவன் சில நேரங்களில் டென்ஷனாக இருக்கும் நேரங்களில் பயங்கர கோவமாக பேசுவான் ஆனால் அந்த கோவம் மறைந்த அடுத்த சில இவனா அப்படி கோவப்பட்டான் என்று யோசிக்கும் அளவுக்கு ஜாலியாக மாறிவிடுவான்.

அவனை பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு புரியாத புதிர்.அவன் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று மகேஷ் நம்புவான்.அதனாலயே கார்த்திக் மேல் பாசம் உண்டு.

வீட்டில் ராஜி கார்த்திக் சென்ற உடன் டைனிங் டேபிளில் இருந்து அழ ஆரம்பித்தாள்.அவன் கொடுத்த முத்தம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் தான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கேவலமானது என்று அவளுக்கு தோன்றியது.எனக்கே அதை தாங்க முடியலையே அவணுக்கு எப்படி இருந்திருக்கும்.

முதன் முதலாக கார்த்திக் மேல் அவளுக்கு பரிவு வந்தது.நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஏதோ கோவத்தில் சொன்னது கார்த்திக்.என்ன மன்னிச்சுடு என்று அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.மனசு இலகுவாகும் வரை அழுதாள்.

இரண்டு கட்டிங் உள்ளே சென்றவுடன் போதை அப்போது ஏற தொடங்க அடுத்த கட்டிங்கை எடுத்து குடித்தான்.

எதிரே இருந்த மஹேஷிற்கு கார்த்திக்கை எப்படி வீட்டிற்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற கவலையாக இருந்தது. இப்போது கார்த்திக் பேச தொடங்கினான்.சாரிடா மகேஷ்.ஏதோ கோவம்.அதான் உன்னை அப்படி திட்டிட்டேன்.நீ எதுவும் மனசுல வச்சிக்காதடா தம்பி.

இல்லனா அப்படிலா ஒன்னும் இல்லனா.வீட்டுக்கு போகலாம்ன்னு.டைம் ஆகிடுச்சு.மைனி வேற தனியா இருக்கும்.

டேய் இருடா.அவள்ளா அழகா இருபபாடா.அப்ப எனக்கு கம்பெனி கொடுக்க மாட்டியா.என்று போதையில் குளறலாக கூறினான்.

ம்ம்ம்ம் இருக்கேன்.இருக்கேண்ணே.

ம்ம்ம்ம்.அப்ப ஊத்து.

அண்ணா போதும்ன்னா.

டேய் நீதானா எனக்கு கம்பெனி கொடுக்குறேன்னு சொன்ன.இப்ப மாத்தி பேசுறியா.குடிச்சிருக்கியா குடிச்சிருக்கியாடா.

இல்லனா.இல்லனா.இந்தா ஊத்துறேன்.ஊத்துறேன்.

ம்ம்ம் அது.இன்னொரு க்ளாஸ்ல ஊத்து.

ஐயோ வேண்டாம்ன்னு எனக்கு பழக்கம் இல்லை.வேணாம்.

டாய் என்ன அண்ணன் முன்னாடியே குடிக்க ஆசைப்படுறியா.பிச்சிபுடுவேன் ராஸ்கல்.இது எனக்கு நீ கம்பெனி கொடுக்கிறியா.கம்பெனி கொடுக்குறதுன்னா நீயும் அடிக்கணும்.ஆனால் நீதான் குடிக்கமாட்டியே.அதனால உன் க்ளாஸ்ல இருக்குறதும் எனக்குத்தான்.ஊத்து.

போதும்ன்னா.வான்னா.போகலாம்.பயமா இருக்குன்னா.

டேய் அண்ணன் இருக்கேன்டாஇருக்கேண்டய.பயப்படாத.இதோ லாஸ்ட் ரவுண்டு.முடிஞ்சுது என்று கடைசி கிளாசை வாயில் கவுத்திவிட்டு போலாமா என்று குளறலாக சொல்லிவிட்டு எழுந்த கார்த்திக்குக்கு முற்றிலும் சுய நினைவு இல்லை.கால்கள் இரண்டும் தடுமாற எழுந்தவனை மகேஷ் தோளில் கைபோட்டு சாய்த்துக்கொண்டு கதவை லாக் செய்து கொண்டான்.

ஒருவழியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு வீட்டு காலிங் பெல்லை அடிக்க போக டேய் அதெல்லாம் வேணாம்.ஐ ம் ஸ்டேடி.நான் போய்க்கிடுறேன்.நீ போ
இல்லன்னா வீட்டுல மைனி கிட்ட சொல்லிட்டு போய்டுறேன்னா.

ப்ச்.அதெல்லாம் நான் சொல்லிக்கிடுறேன்.நீ போய் சாப்பிட்டு தூங்குதூங்குற.போ.

இப்போதைக்கு வீட்ல விட்டாச்சு.வீட்டுக்கு போய் மைனிக்கு போன் போட்டு சொல்லிக்கலாம் என்ற முடிவுடன் சாரின்னா.நா போறேன்.பாத்து போன்னே.சொல்லிவிட்டு கிளம்பினான் மகேஷ்.

வீட்டிற்குள் சென்ற கார்த்திக் தள்ளாடியபடி சென்று டைனிங் டேபிளை அடைந்தான்.

அங்கு கைகளை மடக்கிவைத்து அதன் மேல் முகத்தை வைத்து தலை கவிழ்ந்திருந்தாள் ராஜி.

இவன் தள்ளிடியபடி டேபிளில் இடித்துக்கொண்டதில் எழுந்த ராஜிக்கு அவன் குடித்திருக்கிறான் என்று அவன் முகமும்,சரக்கு வாடையும் சொன்னது.

அவன் குடித்ததற்கான காரணம் அவளுக்கு தெரிந்திருந்தாலும் எதுவும் பேசாமல் சாப்பாடை எடுத்து வைத்தாள்.

அப்போது கார்த்திக் கை கழுவ பேசின் அருகே செல்ல அப்போது கார்த்திக்கின் போன் ஒலித்தது.

போதையில் இருந்த கார்த்திக் பேசினில் இருந்த சோப்பை எடுத்து காதில் வைத்து கொண்டு ஹலோ நீங்கள் பேச நினைக்கும் சப்ஸ்கிறைபர் கை கழுவிக்கொண்டிருக்கிறார்.சிறிது நேரத்திற்கு பிறகு தொடர்பு கொள்ளவும்னு சொல்லிட்டு சோப்பில் டச் செய்து பேசினில் வைத்துவிட்டான்.

இதை பார்த்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.எருமை சோப்புக்கும்,போனுக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு குடிச்சிட்டு வந்துருக்கு பாரு என்று டேபிளில் இருந்த போனை எடுத்தாள்.

மகேஷ் கால் செய்திருக்க அட்டென்ட் செய்து சொல்லு மகேஷ் என்றாள்.

அண்ணி உங்க நம்பர் என்ன ஆச்சு.கால் பண்ணேன்.ரீச் ஆகவே இல்ல.

ஒன்னும் இல்லை.ஊருக்கு போயிருக்கும்போது கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு.

அதான் அண்ணன் நம்பருக்கு கால் பண்ணேன்.அண்ணி அண்ணன் ரொம்ப குடிச்சிட்டான்.என்ன பிரச்சனைன்னு தெரியல ரொம்ப கோவமா இருந்தான்.இப்போ குடிச்சிட்டு ரொம்ப போதைஎ ஆகிட்டான்.என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு குடிச்சிருக்கான்.கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணி.வச்சிடுறேன்.

ம்ம்ம் சரிடா.நான் பாத்துக்கிடுறேன்.என்று சொல்லிவிட்டு போனை டிவி அருகில் வைத்துவிட்டு கிட்சேன் சென்றால் ராஜி.

அங்கு கார்த்திக் தண்ணீரை குடித்து கொண்டிருந்தான்.

வா சாப்பிடலாம்.என்றாள் ராஜி.

ம்ம்ஹூம்.எனக்கு வேண்டாம்.நீ போட்டு சாப்பிட்டுக்கோ.

அப்படியா சரி எனக்கும் வேண்டாம்.போலாம்.

ம்ம்ம்ஸ் சரி.

இதை ராஜி எதிர் பார்க்கவில்லை தான்.அவளும் இன்னும் சாப்பிடவில்லை.காலையில் அம்மா வீட்டில் சாப்பிட்டது.இப்போது வரை துளி தண்ணீர் நாக்கில் படவில்லை.இப்போது கார்த்திக்கை பார்த்த பின்பு தான் அவளுக்கு பசியின் ஞாபகம் வந்தது.

பிரியாணி,சிக்கன் என அவன் மதியம் டேபிளில் வைக்கும்போது இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டணும்னு முடிவுசெய்திருந்தாள்.ஆனால் வீம்பாக பேசி வடை போச்செ கதையில் இருந்தாள்.

இருவரும் எதிரெதிர் டேபிளில் அமர்ந்திருக்க ஒவ்வொரு நிமிடமும் மௌனமாக சென்றது.

ஆனால் ராஜியோ மனதுக்குள் கார்த்திக்கை வசை பாடிக்கொண்டிருந்தால்.சீக்கிரமா சொல்லுடா.எனக்காக யாரும் பட்டினியா இருக்க வேண்டாம்.நான் சாப்பிடுறேன்னு சொல்லுனு மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தால்.

10 நிமிடத்திற்கு பிறகுர்
ராஜி இனியும்ல் லேட் பண்ணின உசுருக்கு உத்திரவாதம்இ இல்லை.நல்லா யோசி.சோரா,சொரணையா.கடைசியில் மைன்ட்வாய்ஸ் சொன்னது.சோறுதான் முக்கியம்.சனியன் எப்படியும் போகுது நீ சாப்பிட போ என்று அவள் எழும்ப அதே நேரம்


கார்த்திக் எதுவும் பேசவில்லை.திடீரென்று எனக்கு பசிக்குது நான் சாப்பிடப்போறேன் என்றான்.

அப்பாடா இப்பவாவது இதுக்கு பசிச்சுதே.சரி என்று பிளேட்டை வைத்து சாப்பாடு வைத்தாள்.

கார்த்திக்கு சாப்பாடு வைத்துவிட்டு தனக்கும் போட்டுகொண்டு இரண்டு லெக் பீஸ்களை ஆளுக்கு ஒன்றாக சாப்பிட தொடங்கினர்.

கார்த்திக்கும் இருந்த போதையில் வேகமாக சாப்பிட,ஏதோ யோசனை வந்தவனாக எதிரே பார்க்க அங்கு ராஜி வேகவேகமாக சாப்பாடை முழுங்கிக்கொண்டிருந்தால்.கார்த்திக் சாப்பிடாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்க ராஜிக்கு விக்கல் வந்தது.

உடனே தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்ட அதை வேகமாக வாங்கி மடக்மடக்கென குடித்தாள்.அப்போதும் அவளுக்கு தொடர்ந்து விக்கல் நிற்காமல் இருக்க உடனே கார்த்திக் தள்ளாடியபடி எழுந்து அவள் தலையில் தட்ட போக ராஜி அவனை பார்த்து சற்று விலகினால்.

உடனே மறுபடியும் அமர்ந்த கார்த்திக் ஓஓஓஓஓ.ஸ்ஸ்ஸ்ஸ்.தொட கூடாது.தொடகூடாது.தொடக்கூடாதுல.சாரி.சாப்பிடு.நீ சாப்பிடு.

மறுபடியும் வேகவேகமாக அள்ளி சாப்பிடகே தொடங்கினாள்.சாப்பாடும் ருசியாக இருக்க காலையில் கார்த்திக் தன்னைத்தானே மெச்சிக்கொள்ள சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது.

அவளையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் வர சாப்பாடை முழுங்கி கொண்டே கண்ணீரை துடைத்தாள்.

எதேச்சையாக திரும்பியவள் எதிரே கார்த்திக் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
ப்ச்ப்ச் ஒன்னும் இல்ல எனக்கும் சாப்பாடும் வேணாம்னு வீம்பா சொல்லிட்டு இப்ப ரெண்டாவதுபி பிளேட் பிரியாணியை வச்சு வெளுத்துகட்டுறியே அதான் பார்த்தான்.

ஹலோ நான் சாப்பிடுறத பார்த்து யாரும் கண்ணு வைக்க வேண்டாம்.உனக்கு பசிக்கல.சாப்பிட வேண்டியது தான.

இல்ல எனக்கு போதை ஓவெரா ஆகிடுச்சா.பசி இல்ல நீ சாப்பிடு.

பின் இருவரும் கைகழுவி கொண்டு டேபிளில் இருந்தனர்.அப்போது கார்த்திக் ஆரம்பித்தான்.

நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.

இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுற.

இல்ல சம்பந்தம் இருக்கு.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா

பிறந்த உடனே அழுத்திருப்ப.

ஐயோ.செம ஜோக்.பட் சிரிப்புதான் தான் வரல.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.

டேய் லூசு நீ முதல் முதல்ல எப்ப அழுதன்னு எனக்கு எப்படி தெரியும்.

இல்ல.அட்லீஸ்ட் எப்ப அழுதன்னு ஆச்சும் கேக்கலாம்ல.

கேக்கலைன்னா சொல்லாம விடப்போறியா.சொல்லி தொலை

நான் முதல் முதல்ல எப்ப என்று ஹ பிட்சில் கார்த்திக் கேக்கும் முன் கடுப்பான ராஜி டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து ஏ எருமை,சனியன்,மெண்டல்,லூசு.மாடு இனிமேல் இந்த டைலாக்க சொன்ன மவனே கழுத்தை அறுத்து கண்ணு ரெண்டையும் தோண்டி எடுத்துடுவேன்.இவரு பெரிய ராஜா ராணி சந்தானம்.குடிச்சிட்டு வந்து பிளாஷ்பாக் சொல்லறாரு.மூடிட்டு போய் தூங்கு.

உஸுஷுஷ்.ஓகே ஓகே.டோன்ட் டச்.தொட கூடாது.தொட கூடாது.நான் முதல் முதல்ல...

ஒய்.

ஓஹ் சாரி.என்று வாயை பொத்திவிட்டு முதல் முதல்ல நீ ரமேஷ லவ் பன்றேன்னு சொன்னப்ப டெய்லி நைட் தூக்கம் இல்லாம எவ்ளோ நாள் அழுத்திருக்கேன் தெரியுமா.அதுவும் இல்லாம நாம மெஸேஜ் பண்ணிக்கும் போதெல்லாம் நீ கேவலமா இதோ இப்ப வச்சிருக்கியே இதே மாதிரிதான் வச்சிட்டு என் லவர் மெசேஜ் பன்றான்.நா அப்புறமா பேசுறேன்னு சொல்லுவ பாத்தியா அப்ப அழுதேன்.ம்ம்ம் என்று நெற்றியில் தன் புருவத்தில் கார்த்திக் கை வைத்து காட்ட

என்ன என்பதுபோல தன் நெற்றியை தடவ அங்கு அவள் வைத்திருந்த நெற்றி பொட்டு விலகி இருந்தது.அதை எடுத்து கரெக்டாக வைத்தாள் ராஜி.

ம்ம்ம் சரியா இருக்கா என்பதுபோல தலை ஆட்ட சூப்பர் என்பது போல கைகாட்டி அசைத்தான்.

இப்போது தான் கார்த்திக் மனசை திறந்து பேசுறான்.போதை தெளிஞ்சா கண்டிப்பா நாளைக்கு பேசமாட்டான்.அதனால அவன் என்ன பேசினாலும்,என்ன செஞ்சாலும் ஒன்னும் சொல்ல கூடாது.அவனோடு தானும் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

நம்ம ஆச்சினா எனக்கு உசுரு.அவ்ளோ பிடிக்கும்.நான் என்ன செஞ்சாலும் என்ன விட்டுகொடுக்க மாட்டாங்க.என்மேல அவ்ளோ பாசம்.நான் அவங்களுக்கு பேரன் கிடையாது.மகன் மாதிரி.அவுங்க செத்தப்ப கூட நான் அழவில்லை.கல்லு மாதிரி இருந்தேன்.

ஓஹோ பார்ட்டிக்கு ஆச்சி மேல அவ்ளோ பாசமா.ம்ம்ம் சரி அப்புறம்.

நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.

தெரியாது சொல்லு.

அதெப்படி உனக்கு தெரியும்.ஏன்னா அது எனக்கு மட்டும் தான தெரியும்.உங்கிட்ட கேட்டா உனக்கு எப்படி தெரியும்.

டேய் லூசு.சத்தியமா என்னால முடியலடா.கொள்ளாத.

நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.

டாய்.நீ இன்னைக்கு செத்தடா.என்று அவன்கிட்ட ராஜி நெருங்க

ஓஓஓஓ.சொல்ல கூடாதுல்ல.உஷ் உஷ் உஷ்.என்று வாயை பொத்திக்கொண்டு டோன்ட் டச்.டோன்ட் டச்.உட்காரு உட்காரு.

நான் ரெண்டாவது தடவ அழுதது இன்னைக்குத்தான்.நீ சொன்ன வார்த்தை.அது எந்த போதையிலும் மறக்க மாட்டேங்குதே.

ராஜிக்கு திடுக்கிறது.தான் சொன்ன அந்த ஒருவார்த்தை அவனை இந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஐயோ சாரி கார்த்திக்.நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் ப்ளீஸ் கார்த்திக் என்னை மன்னிச்சுடு கார்த்திக்.என்று அவன் கைகளை பிடித்துக்கொள்ள.

ஹேய் ஹேய் தொடக்கூடாது.தொட கூடாது.டோஒஒஒஒஒஒஒண்ட் டச்.எனக்கு தெரியும் ராஜி.நீ கோவத்துல தான் சொல்லிருப்பன்னு.ஆனா அதை நினைச்சாலேலேலேலேலே ன்னு சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் சாய்ந்தான்.

அவன் சுயநினைவு இல்லாத நேரத்திலும் தான் கூறிய வார்த்தை அவனுக்கு நினைவிருப்பதை எண்ணி அதன் கொடூரம் புரிந்தது.

சில நிமிடம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ராஜி கார்த்திக்கின் முகத்தில் சில மாற்றங்களை கவனித்தாள்.

எப்போதும் அழகாக ட்ரிம் செய்து காணப்படும் முகம் அடர்த்தியான தாடியுடன் காணப்பட்டது.கண்களுக்கு கீழே தூங்காமல் கருவளையம் தெரிந்தது.

தம்பி நம்மள காணாம ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கான்.தாடியும் இவனுக்கு க்யூட்டா தான் இருக்கு.இவனை எப்படி பெட்ல கொண்டு போய் படுக்க வைக்க.ம்ம்ம்ம் ஆபத்துக்கு பாவம் இல்லை.தோள்ல கைத்தாங்களா கூட்டிட்டு போய் சோபாவில் படுக்க வைக்கலாம் என்று தோன்றிய உடன் அதையே செயல் படுத்தினாள்.

அவனை சோபாவில் படுக்க வைத்துவிட்டு பெட்ஷீட்டை எடுத்து போர்த்திவிட்டு அவனுடைய போனை எடுத்து அவனுக்கு பக்கத்தில் எடுத்து வைத்துவிட்டு படுக்க சென்றாள்.
மறுநாள் காலை எழுந்தபோது வழக்கம் போல் ராஜி குளித்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் பத்தி கொளுத்தி சாமிகும்பிட்டாள்.

பின் கார்த்திக்கிற்கு காலை உணவும்,மதியத்திற்கான சாப்பாடை கிச்சனில் தயார் செய்து கொண்டிருந்தாள்.

தூக்கம் கலைந்து எழுந்த கார்த்திக் கண்களை கசக்கி கொண்டு முழித்து பார்த்தான்.

அவனுக்கு நேத்து நைட் நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.எப்படி ஹால்ல சோபாவில் வந்து படுத்தோம்னு யோசித்து பார்த்தும் சுத்தமாக நினைவிற்கு வரவில்லை.
[+] 4 users Like bsbala92's post
Like Reply
#58
Excellent updates.
Like Reply
#59
Thank you for the long updates. Wonderful story. keep writing.
Like Reply
#60
சூப்பர் சகோ. அருமையான பதிவு
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)