Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
07-02-2019, 11:48 AM
(This post was last modified: 07-02-2019, 06:30 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
Thursday, 21 May 20094 Accused of Bombing Plot at Bronx Synagogues Four men were arrested Wednesday night in what the authorities said was a plot to bomb two synagogues in the Bronx and shoot down military planes at an Air National Guard base in Newburgh, N.Y. வியாழன்ம், மே 21 2009 நியூ யார்க் டைம்ஸ் தினசரியில் வெளிவந்த ஒரு செய்தியின் சாரம் ப்ராங்க்ஸ் பகுதியில் இருக்கும் யூத மத ஆலயத்தை குண்டு வைத்து தகற்கவும் நியூபர்க் பகுதியில் இருக்கும் ஏர் நேஷனல் கார்ட் விமானத் தளத்தின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் திட்டமிட்ட நான்கு நபர்களை நேற்று இரவு எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.The Last Meeting with Joshua Edwards Wednesday, 27 May 2009, 4:00 PM The Pearl Diner, Fletcher Street, Manhattan, New York, USA ஜாஷ்வா எட்வர்ட்ஸுடன் இறுதி சந்திப்பு புதன், மே 27 2009, மாலை 4 மணி நியூ நகரத்தின் மன்ஹாட்டன் பகுதியின் ஃப்ளெட்சர் வீதியில் இருக்கும் பர்ல் டைனர் என்னும் ரெஸ்டாரண்ட் காலையிலும் இரவிலும் உட்கார இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த உணவகம் அன்று அந்த இளமாலை வேளையில் பாதியளவே நிரம்பி இருந்தது. ஆள் நடமாட்டமற்ற ஒரு மூலையில் அருகருகே இருவரும் அவர்களுக்கு எதிரே ஒருவனுமாக அந்த மூன்று இளைஞர்கள் அமர்ந்து இருந்தனர். பார்ப்பவர் கண்களுக்கு அம்மூவரும் இருபத்து ஐந்து வயதிலிருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் என்பதை தவிர உருவ ஒற்றுமை மருந்துக்கும் இல்லை. அருகருகே அமர்ந்து இருந்தவர்கள் இருவரும் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் எதிரே இருந்தவன் ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் எனும் கருப்பர் இனத்தவன் என்றும் எளிதாக கணிக்கலாம். மூவரும் மென்பொருள் வித்தகர்கள். மூவரும் அவரவர் நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து பட்டம் பெற்றவர்கள். மூவருக்கும் மென்பொருள் எழுதுவதும் அல்காரிதங்களை ஆராய்வதும் சுவாசிக்கும் காற்றைப் போல உயிர் வாழ ஒரு முக்கிய தேவை. அவர்கள் காலை முதல் மாலை வரை சம்பளத்துக்கு செய்யும் மென்பொருள் வேலையை தவிர ஓய்வு நேரங்களிலும் தூங்காமல் பல இரவுகளிலும் செய்யும் வேறு ஒரு மென்பொருள் வேலையே அவர்களை இங்கு ஒன்று சேர்த்து இருக்கிறது. அருகருகே இருந்தவர்களில் ஜன்னலருகே அமர்ந்து வீதியில் போக வரும் பெண்களை அடிக்கடி நோட்டம் விட்டபடி இருந்தவன் நித்தின் தேஷ்பாண்டே. ஐந்து அடி பத்து அங்குல உயரம். கோதுமை நிறம். முழுவதும் மழிக்கப் பட்ட சிறிதே பெண்மை கலந்த பல பெண்களை கவரும் அழகான முகம். பிறந்தது மும்பை. பள்ளிப் படிப்பு பத்தாவது வரை மும்பையில்; ப்ளஸ் டூ படித்தது புனாவுக்கு அருகே பஞ்சகனி என்னும் இடத்தில் இருக்கும் ஒரு உயர்தர போர்டிங்க் ஸ்கூலில்; பிறகு ஐ.ஐ.டி மும்பையில் பி.டெக் முடித்து மூன்று வருட அனுபவத்திற்கு பிறகு இப்போது சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியர். கணிப்பொறியை தவிர காரோட்டுவதிலும் கில்லாடி.
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அடுத்து அமர்ந்து எதிரில் இருப்பவனை தீர்க்கமாக பார்த்தபடி உரையாடலில் உன்னிப்பாக கவனம் செலுத்தி இருந்தவன் சக்திவேல் முத்துசாமி. ஆறடி இரண்டு அங்குல உயரம். மேக்கப் இல்லாத ரஜனி காந்த் நிறம். மீசையை தவிர மழித்த முகம். அவன் உடலமைப்பு குறிப்பிடத்தக்கது. ரவி வர்மா தனது ஓவியங்களில் வெவ்வேறு தேவர்களையும் வீரர்களையும் சித்தரித்து இருக்கிறார். ஆனால் அவர் தனது ஓவியங்களில் ஆஞ்சனேயருக்கு கொடுத்து இருக்கும் உடலமைப்பு வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. உடலின் வலிமையையும் தேவையானால் வில்லாய் வளையும் தன்மையையும் கணத்தில் காற்று வேகத்தில் செயல்படும் திறனையும் பறைசாற்றும், ஆஜானுபாகு என்பதற்கு முழுமையான உதாரணமான உடலமைப்பு. சக்திவேலின் உடலமைப்பை எளிதில் அதற்கு ஒப்பிடலாம். பிறந்து பள்ளி படிப்பு முடியும் வரை ஈரோடு. பிறகு சென்னையின் பழைய பெயரை இன்னமும் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸில் பி.டெக். விளையாட்டு வீரர்கள் படிப்பில் மட்டம் என்ற பொதுவான கருத்தை பொய்யாக்கியவர்களில் ஒருவன். அவனும் இப்போது ஒரு சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியர். எதிரில் இருந்தவன் ஜாஷ்வா எட்வர்ட்ஸ். தலைமுடியும் ஓரளவு அவனது தோலின் நிறமும் மட்டுமே அவனை கருப்பர் இனமென்று காட்டின. அவனது வசீகரமான முகவடிவும் கருப்பர்களுக்கு இல்லாத மெலிந்த உதடுகளும் சிரித்தால் பளீரிடும் பல் வரிசையும் ஹாலிவுட் நடிகர் டென்ஸில் வாஷிங்க்டனை நினைவு படுத்தின. பிறந்தது நியூயார்க் நகரத்தின் Black Ghetto என்று அழைக்கப் படும் ஹார்லம் பகுதியில். போதை பொருளுக்கு அடிமையான தாயால் தந்தை பெயர் தெரியாத அவனை வளர்க்க இயலாது என்று அரசாங்கம் எடுத்த முடிவால் பல ஃபாஸ்டர் இல்லங்களில் (சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில்) வளர்ந்தும் உலகின் தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளின் ஒன்றான எம்.ஐ.டியில் கம்ப்யூட்டர் சைன்ஸில் இடம் பிடித்து படித்தபின் உலகெங்கும் வெவ்வேறு வாய்ப்புகள் இருந்தும் தன் பிறப்பிடமான ஹார்லத்திற்கே திரும்பி வந்து குடியேறியவன். அவனுக்கு அப்பகுதியில் அவன் வயதை ஒட்டிய அவனைப் போன்ற வரலாறு கொண்ட பல சகோதரர்கள் உண்டு. அமெரிக்க வங்கிகளில் ஒன்றில் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர். அவன் படிப்புக்கு அந்த வேலைதானா என்று கேட்பவருக்கு புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். வரும் சம்பளத்தை விட அவன் செய்யும் மற்றோர் வேலையும் அந்த வேலையில் கிடைக்கும் பண வரவுமே இவ்வேலையில் அவன் இது வரை இருப்பதற்கு முக்கிய காரணங்கள். இனி அவர்கள் உரையாடலில் கவனம் செலுத்துவோம். ஜாஷ்வா: "உங்க ரெண்டு பேரோட ஃப்ளாட்ஸ் சுத்தமா காலி பண்ணீட்டீங்களா?" நித்தின்: "எஸ். ஒரு துரும்பு கூட விடாம தொடைச்சு விட்டுட்டு வந்தோம்" ஜாஷ்வா: "இப்ப தங்கி இருக்கற ஹோட்டல் ரூம் எப்படி இருக்கு?" சக்திவேல்: "ரூம் ஓ.கே .. பட் இன்னும் ரெண்டு நாள்ல எப்படியும் இந்தியா திரும்பறோம். அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு?" ஜாஷ்வா: "ஒரு முன் ஜாக்கிரைதான். அப்பறம் அந்த கார் மேட்டர்?" நித்தின்: "ரெண்டையும் ரிடர்ன் பண்ணிட்டு வேற ஒரு ரெண்டல் கம்பெனில இருந்து ஒரு கார் எடுத்து இருக்கோம். ரெண்டு பேரும் ஒண்ணுலதான் போறோம். இப்ப எல்லாம் எங்க போனாலும் நான் முன்னாடி போயிட்டு மெதுவா ஒட்டிட்டு வர்ற இவனுக்காக வெய்ட் பண்ண வேண்டியது இல்லை. அதைத் தவிர ஒரு உபயோகமும் இல்லை. இந்த முன் ஜாக்கிரதை கொஞ்சம் ஓவரா இல்லை?" ஜாஷ்வா: "உனக்கு ஒரு கதை தெரியுமா? மார்கரேட் தாச்சர் பிரதமரா (PM) இருந்தப்ப ஐ.ஆர்.ஏ தீவிரவாத இயக்கம் அவரை குண்டு வெச்சு கொல்லப் பாத்துது. பிரிட்டிஷ் போலீஸாரோட முன் ஜாக்கிரதைனால மயிரிழையில தப்பிச்சாங்க. அப்ப ஒரு சீக்ரெட் ப்ரெஸ் ரிலீஸில் அந்த ஐ.ஆர்.ஏ சீஃப் என்ன சொன்னான் தெரியுமா? 'நாங்க அவரை கொல்ல நூறு முறை முயற்சி செய்து அதில் ஒரு முயற்சியில் வெற்றி அடைந்தால் எங்கள் குறிக்கோள் நிறைவேறிடும். ஆனால், போலீஸார் அவரை காப்பாத்துகின்ற நூறு முயற்சியிலும் வெற்றி அடைந்தால்தான் அவர்கள் குறிக்கோள் நிறைவேறும்'. டெரரிஸ்ட்டுங்க விஷயத்துல எப்பவுமே கொஞ்சம் அதிக முன் ஜாக்கிரதை தேவை" சக்திவேல்: "சரி, நம்மை எஃப்.பி.ஐ காரங்க சந்தேகப் பட வாய்ப்பு இருக்கா?" ஜாஷ்வா: "அந்த டெரரிஸ்ட்டுகளுக்கு பணம் எங்கே இருந்தோ கிடைச்சு இருக்குன்னு எஃப்.பி.ஐக்கு தெரியும். ஆனா அது அந்த ஷிப்பிங்க் கம்பெனி வழியா நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃப்ர மூலம்னு சந்தேக பட வாய்ப்பு இல்லை. Come On, have faith in our expertise! (நம் திறமை மேல கொஞ்சம் நம்பிக்கை வை). அப்படியே அந்த ட்ரான்ஸ்ஃபரை லொக்கேட் பண்ணினாலும் எப்படி அந்த ட்ரான்ஸ்ஃப்ர் நடந்துதுன்னு புரியறதுக்கு பல வருஷங்கள் ஆகும்" சக்திவேல்: "ஆனா நம்மை ஏமாத்தி அந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ண வெச்சதை இப்ப நினைச்சாலும் பத்திகிட்டு வருது" ஜாஷ்வா: "எனக்கு மட்டும் சந்தோஷமா இருக்கா? நடந்தது நடந்துடுச்சு விடு" நித்தின்: "அப்பறம் ஏன் எங்களை அவசரமா வரச்சொன்னே. எப்படியும் நாளைக்கு டின்னருக்கு மீட் பண்ணறதா இருந்தோமே?" சக்திவேல்: "ஆமா, மத்தியானம் கூட சஞ்சனா என்னை ஃபோன்ல கூப்பிட்டு எந்த மாதிரி சாப்பாடு வேணும்னு பேசிட்டு இருந்தாளே?" ஜாஷ்வா: "அதில ஒரு மாற்றம். நாளைக்கு ஆண்டர்ஸன் நம்மை மீட் பண்ண ஹாஃப்மன் மூலமா சொல்லி அனுப்பி இருக்கான். நைட்டு பத்து மணிக்கு. யூஷுவல் ஸ்பாட். இதை பத்தி சஞ்சனா கிட்ட நான் இன்னும் சொல்லலை" சக்திவேல்: "எதுக்கு மீட் பண்ணனுமாம்?" ஜாஷ்வா: "கடைசியா பண்ணின மூணு ட்ரான்ஸ்ஃபரும் டெரரிஸ்ட் கும்பலுக்குன்னு ஆண்டர்ஸனுக்கும் தெரியாதாம். கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்கதான் பண்ண சொன்னதா நம்பினானாம். இப்ப அவனும் எங்கே எஃப்.பி.ஐ காரங்க ட்ரேஸ் பண்ணிடுவாங்களோன்னு பயந்து இருக்கானாம். நாம் என்ன ப்ரிகாஷன் எடுத்துக்கறதுன்னு டிஸ்கஸ் பண்ண வர சொல்லி இருக்கான்" சக்திவேல்: "எப்படியும் நாங்க நாளன்னைக்கு இந்தியா திரும்பறோம். நீயும் அடுத்த வாரம் பஹாமாஸுக்கு போறே. அப்படி மாட்டினா அவங்க ரெண்டு பேரும்தான் மாட்டணும். இதுல நாம் என்ன ப்ரிகாஷன் எடுக்கறது?" ஜாஷ்வா: "அவன் அப்படி சொன்னதுனால எனக்கு கொஞ்சம் சந்தேகம். அதனால தான் உங்ககிட்ட நேரில் பேச வரச் சொன்னேன். இல்லைன்னா எப்பவும் போல தகவல் கொடுத்து இருப்பேன்" சக்திவேல்: "என்ன சந்தேகம்?" ஜாஷ்வா: "அவன் நம்மை சந்தேகப் படறானோ அப்படிங்கறது ஒரு சந்தேகம். இன்னோரு சந்தேகமும் இருக்கு அதை நான் கடைசியா சொல்றேன்" நித்தின்: "என்ன ரொம்ப புதிர் போடறே? சரி உன் முதல் சந்தேகத்துக்கு வருவோம். நம்மை எதுக்கு அவங்க சந்தேகப் படணும்? நாம் தான் சொன்ன ட்ரான்ஸ்ஃப்ர எல்லாம் முடிச்சு கொடுத்துட்டமே?" ஜாஷ்வா: "அந்த டெரரிஸ்ட் கும்பலுக்கு பண்ணின மூணு ட்ரான்ஸ்ஃபர்ல ரெண்டு தான் அவங்க கைக்கு போய் சேந்துது" சக்திவேல்: "என்ன சொல்றே? புரியலே" ஜாஷ்வா: "உங்ககிட்ட சொல்லாம நான் ஒரு சின்ன வேலை பண்ணினேன்" என்றவன் எதிரில் இருந்த இருவரும் கூர்ந்து பார்ப்பதைக் கண்டு சரணடைவது போல் கைகளை உயர்த்தி "டோன்ட் வொர்ரி, நம்ம நல்லதுக்குதான்" நித்தின்: "என்ன வேலை?" ஜாஷ்வா: "லாஸ்ட் லெக்ல அவங்க சொன்ன அக்கௌண்டுக்கு உங்களை நான் ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லலை. நம்ம அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொன்னேன்"
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சக்திவேல்: "நம்ம அக்கௌண்டா? என்னடா சொல்றே?" ஜாஷ்வா தன் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து டேபிளில் மேல் போட்ட பிறகு தொடர்ந்தான், "கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் பணத்தை எல்லாம் எப்படி நான் இங்க இருந்து பஹாமாஸுக்கு கொண்டு போறதுன்னு யோசிச்சப்ப என் கஸின் ஒருத்தன் பேர்ல ஒரு நம்பர் அக்கௌண்ட் ஓபன் பண்ணினேன். ஆனா அதுக்கு அப்பறம் அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஃப்ஸர் (ஹவாலா போன்ற பண மாற்றம்) முலம் கொண்டு போறதுன்னு முடிவு பண்ணினேன். அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஃப்ஸர் மூலம் பணம் அனுப்பறதுக்கு இந்த அக்கௌண்ட் தேவை இல்லை. இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டும்னு இதை க்ளோஸ் பண்ணலை. அக்கௌண்ட் ஓபன் பண்ணறதுக்காக ஆயிரம் டாலர் போட்டதோடு சரி. அதுக்கு அப்பறம் அக்கௌண்டை ஆபரேட் பண்ணலை. (அதிலிருந்து பணம் எடுக்கவோ போடவோ செய்ய வில்லை). அந்த டெரரிஸ்ட் கும்பல் பிடிபட்ட நியூஸ் வந்த உடனே அவங்களுக்கு நாம் பண்ணின முதல் ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் மூலம்தான் பணம் கிடைச்சு இருக்குன்னு எனக்கு தெரிய வந்துது. மூணாவுது பெரிய ட்ரான்ஸ்ஃபர். பத்து மில்லியன் (ஒரு கோடி). வேற எதோ பெரிய வேலைக்குன்னு நினைக்கிறேன். நம்மை ஏமாத்தினதுக்கு தண்டனையா அவனுக அக்கௌண்ட்டுக்கு பதிலா இந்த அக்கௌண்ட் நம்பரை உங்க கிட்ட கொடுத்தேன். எப்பவும் போல 10-30-30-30 ரேஷியோல (விகிதத்தில்) நாம் பங்கு போட்டுக்கலாம்னு இருந்தேன். உங்க ஷேரை செண்ட் ஆஃப் பண்ண வரும்போது ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டா கொடுக்கலாம்னு இருந்தேன்" என்று புன்முறுவலிட்டான்.நித்தின் முகம் வெளிறி அமர்ந்து இருந்தான். தான் எதற்கும் அதிர்ச்சி அடையாதவன் என்று நிரூபிப்பதைப் போல் சக்திவேல் உதட்டை சுழித்து சிரித்த படி, "உனக்குதான் இப்படி எல்லாம் தோணும் .. நாம்தான் இந்த ஒரு வருஷத்துல வேணுங்கற அளவு சம்பாதிச்சுட்டமே. எதுல விளையாடறதுன்னு இல்லையா?" ஜாஷ்வா: "நம்ம சம்பாதிச்சதுக்கு மேல இன்னும் ஆளுக்கு மூணு மில்லியன் டாலர்னா கசக்குதா?" நித்தின்: "கசக்கலைதான் .. டேய், சக்தி, நாமும் இந்தியா திரும்பி போறதுக்கு பதிலா இவன் கூட பஹாமாஸ் போய் செட்டில் ஆயிடலாமா?" சக்திவேல்: "சும்மா இருடா... ஏன் ஜாஷ்? இப்ப அவங்க கைக்கு பணம் போகலைன்னு தெரியாம இருக்குமா?" ஜாஷ்வா: "என்னோட லாஜிக்கை கொஞ்சம் கேளு. அந்த நாலு பேர் அரெஸ்ட் ஆனதுக்கு அப்பறம் டெரரிஸ்ட் கும்பலில் யாரும் பேங்க் பக்கம் கொஞ்ச நாள் போக மாட்டாங்க. ஏன்னா எஃப்.பி.ஐ யாரெல்லாம் கேஷ் (பணம்) எடுக்கறாங்கன்னு கண்காணிக்கும். சந்தேகப் படற மாதிரி யார் பணம் எடுத்தாலும் உடனே வந்து கொத்திட்டு போயிடுவாங்க. அவனுகளுக்கும் அது தெரியும். ஹாஃப்மன் பணம் போய் சேந்துச்சான்னு பாக்கணும்னா சிஸ்டத்துல லாக் இன் பண்ணி பணம் போய் சேர வேண்டிய அக்கௌண்ட் நம்பரை கொடுத்து கொயரி பண்ணனும். அதுக்கு அவனுக்கு ரைட்ஸ் (கணிணி அல்லது இணையத்தை உபயோகிப்போருக்கு வழங்கப் படும் தகுதி அல்லது உரிமை) இருக்கு. இருந்தாலும் சிஸ்டத்துல லாக் இன் (log in) பண்ணற ஒவ்வொருத்தரும் என்ன பண்ணினாங்கன்னு ஒரு ஆடிட் ட்ரெயில் (நடக்கும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதற்கு உதவ கணிணியில் பதிக்கப் படும் ஏடு) ரெக்கார்ட் ஆயிட்டு இருக்கு. அது அவனுக்கு தெரியும். அதை பாத்தா ஹாஃப்மன் எந்த அக்கௌண்டை கொயரி பண்ணினான்னு தெரிஞ்சு அவன் மேல சந்தேகம் வரும். அப்படி ஒரு தடயம் வரக் கூடாதுங்கற காரணத்தினால அவன் எப்பவும் பாக்க மாட்டான். ஆண்டர்ஸனுக்கு பணம் போய் சேந்துதான்னு பார்ட்டியோ இல்லை ஹாஃப்மனோ சொன்னாதான் உண்டு. அப்படி இருக்கும் போது இவங்க ரெண்டு பேருக்கும் நான் பண்ணின அக்கௌண்ட் மாறாட்டம் தெரிய போறதில்லைன்னு கான்ஃபிடெண்டா இருந்தேன். இப்ப கூட அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குமாங்கறது ஒரு சந்தேகம்தான்" நித்தின்: "சரி, இப்ப தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்குவோம். அவ்வளவு பணம் போனா சும்மா விடுவாங்களா?" சக்திவேல்: "பணம் எங்க போச்சு இன்னும் நம்ம கைல தான இருக்கு. எதாவுது சொல்லி அந்த அக்கௌண்டை அவங்க கிட்ட கொடுத்துடணும். எனிவே அவங்களுக்கு நம்ம கூட இனி எந்த பிஸினஸும் இல்லை. தே ஷுட் நாட் மைண்ட்" நித்தின்: "அவங்களை ஏமாத்த பாத்து இருக்கோம்னு தெரிஞ்சா? இதுக்கு முன்னாடி அப்படி பண்ணி இருப்போமோன்னு வீணா சந்தேகப் படுவாங்க" சக்திவேல்: "ஹலோ! இது வரைக்கும் நம்ம பண்ணின ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கு. அவனுக இந்த டெரரிஸ்ட்டுகளை விட ரொம்ப சாமர்த்திய சாலிங்க. ஒரு ட்ரான்ஸ்ஃபர் ஒழுங்கா போலைன்னாலும் உடனே அவங்களுக்கு தெரிஞ்சுடும். அது ஆண்டர்ஸனுக்கும் ஹாஃப்மனுக்கும் தெரியும். அதனால இதுவரைக்கும் அப்படி ஆகி இருக்கும்னு சந்தெகப் படறதுக்கு சான்ஸே இல்லை" நித்தின்: "சரி, இப்ப நீ அவங்க கிட்ட என்ன சொல்லி சமாளிக்க போறே ஜாஷ்வா?"
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜாஷ்வா: "கவலையே படாதே. இந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் போது பாதியில் ஹாஃப்மன் எதாவுது வெரிஃபை பண்ணினான்னா என்ன பண்ணறதுன்னு நான் ஒரு சின்ன அலிபி (பொய்யான ஆதாரம்) க்ரியேட் பண்ணினேன். அதை இப்ப காரணமா காமிக்க போறேன்" சக்திவேல்: "என்ன அலிபி?" ஜாஷ்வா: "பாதில வந்து சொன்ன அக்கௌண்டுக்கு பதிலா ஏன் வேற அக்கௌண்டுக்கு பணம் போகுதுன்னு கேட்டான்னா? நீ சொன்ன அக்கௌண்ட்ல பிரச்சனை அதனால உபயோகிக்காம இருக்கற என்னோட அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணறேன். அவங்களுக்கு இந்த அக்கௌண்ட்டை கொடுத்துடுன்னு சொல்லலாம்னு இருந்தேன். அவங்க சொன்ன அக்கௌண்ட்டில நானே ஒரு ப்ராப்ளத்தையும் உண்டு பண்ணினேன்" நித்தின் (சிரித்தபடி): "என்ன அந்த அக்கௌண்ட்டை ப்ளாக் (block) பண்ண சொல்லி எஃப்.பி.ஐ அனுப்பின மாதிரி ஒரு மொட்டை கடுதாசி அனானிமஸ் மெயில் அனுப்பினயா?" ஜாஷ்வா: "எஸ். பரவால்லை நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை இன்னும் ஞாபகம் வெச்சுட்டு இருக்கே. என்.எஸ்.ஏ (National Security Agency) அனுப்பின மாதிரி ஒரு ஸ்பூஃப் மெயில் (ஏமாற்று மெயில்) ஃபினான்ஷியல் செக்யூரிடி செல்லுக்கு அனுப்பினேன். எதிர் பாத்த மாதிரி உடனே அவங்க ஒரு டெம்பரரி ப்ளாக் (temporary block) போட்டாங்க. அதை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுகிட்டேன். அதுக்கு அப்பறம் தான் என்னோட அக்கௌண்ட் நம்பரை உங்களுக்கு சொன்னேன். நாளைக்கு அவங்க சந்தேகப் பட்டு கேட்டா அதே காரணத்தை சொல்லி இந்த கவரை கொடுத்துடப் போறேன். பதட்டத்தில உனக்கு கொடுக்க மறந்துட்டேன்னு சொல்ல போறேன். நித்தின்:: "இப்ப அந்த டெரரிஸ்ட்டுகளோட அக்கௌண்ட் ப்ளாக் (block) ஆகி இருக்கா?" ஜாஷ்வா: "ம்ம்ஹூம் .. அரை மணி நேரத்துல ப்ளாக் (block) லிஃப்ட் பண்ணிட்டாங்க. என்னோட ஈமெயில் ஸ்பூஃப் மெயில்னு தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் அந்த அக்கௌண்டை அடுத்த ராண்டம் ஆடிட் சைக்கிளில் (Random Audit Cycle) ஆடிட் பண்ண சொல்லி ஃப்ளாக் (flag) பண்ணி வெச்சு இருப்பாங்க. அதனால ஹாஃப்மன் நிச்சயம் நான் பண்ணின காரியத்தை பாராட்டுவான். இல்லைன்னா, அவன் அந்த அக்கௌண்ட்டை அடுத்த சைக்கிள்ல ஆடிட் பண்ணும் போது நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் விஷயம் வெளில வரும். ஃப்ளாக் (flag) பண்ணின அக்கௌண்டை ஆடிட் பண்ணாம ஸ்கிப் பண்ணவும் முடியாது" சக்திவேல்: "சரி, நீ அக்கௌண்ட் நம்பர் சொல்ல மறந்துட்டேன்னா அதை அந்த டெரரிஸ்ட்டுகள் நம்புவானுகளா?"ஜாஷ்வா: "டெரரிஸ்ட்டுங்க நம்பறது சந்தேகம். ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் வேற அக்கௌண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணின காரணத்தை நிச்சயம் நம்புவாங்க. அதுக்கப்பறம் நான் மறந்துட்டேன்னு சொல்றதை நம்ப மாட்டாங்க. சான்ஸ் கிடைச்சுது சுருட்ட பாத்தேன். சுருட்ட முடியலை இப்ப திருப்பி கொடுக்கறேன்னு சொல்லிட்டு வரப் போறேன். அவனுக ஒண்ணும் பெரிய உத்தமனுக இல்லை. இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சு இருந்தா பணத்தை எடுத்துட்டு கண் காணத ஊருக்கு போயிருப்பானுக. சோ, பேசாம வாங்கிக்கு வாங்க" நித்தின்: "அவங்க பேசாம வாங்கிக்குவாங்க. ஆனா அந்த டெரரிஸ்ட் கும்பல் பேசாம வாங்கிக்குவாங்களா?" ஜாஷ்வா: "இந்த மாதிரி ஒரு வேலையை ட்ரக் கார்ட்டல்காரங்ககிட்ட பண்ணி இருந்தா சான்ஸே இல்லை. அவங்க கிட்ட யாரும் வாலாட்டாம இருக்க மத்தவங்களுக்கு ஒரு பாடமா நம்மை எல்லாரையும் I mean including Anderson and Hoffman தீத்துக் கட்டிடுவாங்க. ஏன்னா அவனுக இங்க இன்னும் தொடர்ந்து பிஸினஸ் பண்ணனும். ஆனா தீவிர வாத கும்பல் அப்படி இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எனி ஹவ், நாளைக்கு மீட்டிங்குக்கு தீவிர வாத கும்பல்காரங்க யாரும் வரமாட்டாங்க. அவனுக நேரடியா ஆண்டர்ஸனை காண்டாக்ட் பண்ணி இருக்க மாட்டாங்க. யாரோ ஒரு இண்டர்மீடியரி (இடையீட்டாளர் அல்லது பிரதிநிதி) மூலம்தான் காண்டாக்ட் பண்ணி இருப்பாங்க. பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகலைங்கற விஷயத்தை நம்ம கிட்ட விசாரிச்ச அப்பறம் தான் ஆண்டர்ஸன் அவங்க கிட்ட சொல்லுவான். அப்படியும் நான் சுருட்ட பாத்தேன்னு என்னை போட்டு கொடுக்க மாட்டான். அப்படி போட்டு கொடுத்தா அவங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகம் வரும். நாம் எப்பவும் சொல்ற மாதிரி ட்ரான்ஸ்ஃபருக்கு 100% உத்திரவாதம் இல்லை நடுவுல எதாவுது பிரச்சனை வந்தாலும் வரலாம்னு டெரரிஸ்ட்டுகள் கிட்டயும் ஆண்டர்ஸன் முதல்லயே சொல்லி இருப்பான். சோ, சமாளிச்சுடலாம்" நித்தின்: "என்ன கைக்கு வந்தது வாய்க்கு வரலையேன்னு இருக்கு .. " ஜாஷ்வா: "நம்ம பண்ற விஷயத்துல பேராசை கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லை?" சக்திவேல்: "சரி, நாளைக்கு அந்த மீட்டிங்குக்கு எப்பவும் போல நாம் ஒண்ணாதானே போறோம்? மீட்டிங்குக்கு முன்னால் எங்க மீட் பண்ணறது?" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு கருப்பர் இனத்தவன் அவர்களின் டேபிளுக்கு வந்து ஜாஷ்வாவின் அருகே "யோ ப்ரோ" என்றவாறு அமர்ந்தான். பிறகு "ஃபுல்லி லோடட். எக்ஸ்ட்ரா ரெண்டு கார்ட்ரிட்ஜ் மேகஸீன் வெச்சு இருக்கேன்" என்றபடி சிறிது கனமான ஒரு பழுப்பு நிற கவரை ஜாஷ்வாவிடம் கொடுத்து விட்டு விடை பெற்றான். எதிரில் இருந்த இருவரும் அந்த கவரைப் பார்த்தபடி இருந்தனர். ஜாஷ்வா: "முக்கியமா நாளைய மீட்டிங்க் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்களை அவசரமா வரச்சொன்னேன். நாம் கொஞ்சம் முன் ஜாக்கிரதையா இருப்பது நல்லது. நான் ஒரு ப்ளான் வெச்சு இருக்கேன்" சக்திவேல்: "என்ன ப்ளான் சொல்லு" ஜாஷ்வா: "நீங்க ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த அண்டர்க்ரௌண்ட் பார்க்கிங்க் லாட்டுக்கு வந்து கார்லயே ஒளிஞ்சுட்டு வெயிட் பண்ணுங்க. நான் பத்து மணிக்கு என் கஸின் ஒருத்தன் கூட கார்ல வருவேன். என்னை இறக்கி விட்டுட்டு அவன் பக்கத்திலயே ஒரு ஸ்லாட்ல காரை பார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணுவான். நான் ஆண்டர்ஸன்கிட்டயும் ஹாஃப்மன்கிட்டயும் பேச ஆரம்பிப்பேன். அனேகமா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் வருவாங்க. அவங்க ஒழுங்கா பேசினா உங்களுக்கு சிக்னல் கொடுக்கறேன். அதுக்கு அப்பறம் நீங்க கார்ல இருந்து இறங்கி வாங்க. அப்படி இல்லாம கூட வேற ஆளுங்க யாராவுது இருந்தா நீங்க கார்லயே இருங்க. வெளிய வராதீங்க. If I sense something fishy .. " என்றபடி அந்த பழுப்பு நிறக் கவரை லேசாக திறந்து காட்டினான். உள்ளே ஒரு பிஸ்டல் (கை துப்பாக்கி) இருந்தது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நித்தின்: "ஹேய், அவ்வளவு அபாயம் இருக்குன்னா எதுக்கு இந்த மீட்டிங்க். நீ சொல்ல வேண்டியதை ஒரு ஈமெயில்ல ஹாஃப்மனுக்கு அனுப்பிடு" ஜாஷ்வா: "ஈமெயில் எவ்வளவு ஸேஃப்னு உனக்கு தெரியும். என்.எஸ்.ஏ காரங்க போற வர்ற மெயில் எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு இருக்காங்க. ஹாஃப்மனோட பர்ஸனல் ஈமெயில் ஐடிக்கு அனுப்பினா அரசாங்கத்துகிட்ட போய் என்னை அரெஸ்ட் பண்ணுன்னு சொல்ற மாதிரி. இந்த ஒரு மெயிலுக்காக நாம் யூஸ் பண்ணற மாதிரி அவனுக்கு செக்யூர் மெயில் செட்-அப் பண்ணி கொடுக்க நான் விரும்பல. சில விஷயங்கள் நம் பாதுகாப்புக்கு மட்டும்தான். வெளியே யாருக்கும் தெரிய கூடாது" சக்திவேல்: "இல்லை, ஒரு லெட்டர் எழுதி அதை உன் கஸின் யார் மூலமாவுது அவங்க கிட்ட கொடுக்க சொல்லேன்?" ஜாஷ்வா: "ஹேய், அவங்களுக்கு தெரியுமாங்கறதே இன்னும் முடிவா நமக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது எதுக்கு வந்த பணத்தை அவங்க கேக்காமலே கொடுக்கணும்? யோசிச்சு பாரு. அந்த பணம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்குன்னா கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். அவங்க கூட வேற ஆள் யாராவுது இருந்து பேச்சு சுமுகமா போலைன்னா உடனே கன்னை எடுத்து ஆண்டர்ஸனை குறிவெச்சு பிடிச்ச படி இந்த கவரை அவங்க கிட்ட வீசுவேன். அதை பாத்து என் கஸின் காரை பக்கத்தில கொண்டு வருவான். கார்ல ஏறி வந்துடுவேன். இந்த பிஸ்டலை எடுத்துட்டு போறது ஒரு தற்காப்புக்காக தான். டோண்ட் வொர்ரி. ஐ கேன் ஹாண்டில் இட்" என்றபடி இருவரையும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தான். ஆர்வத்தில் நித்தின் அந்த கவரை ஜாஷ்வாவிடமிருந்து வாங்கி டேபிளுக்கு கீழே பிடித்த படி அந்த பிஸ்டலை கையில் எடுத்துப் பார்த்தான். ஜாஷ்வா: "ஜாக்கிரதை. காலுக்கு நடுவில எதையாவுது சுட்டுட போறே. உனக்கு இன்னும் கல்யாணம்கூட அகலை" சக்திவேல் சிறிது அதிர்ச்சியுடன், "ஏய் ஜாஷ்வா, சேஃப்டி லாக் ஆன்ல இல்லையா?" சிரித்த படி ஜாஷ்வா, "கவலை படாதே. சேஃப்டி லாக் ஆன்லதான் இருக்கும். இந்த பிஸ்டலை பத்தி தெரியாதவங்க இதுல சுடறது ஆல்மோஸ்ட் இம்பாசிபிள். அதோட சேஃப்டி லாக் எப்படி ஆபரேட் பண்ணறதுன்னு அவ்வளவு சுலபமா கண்டு பிடிக்க முடியாது" நித்தின்: "ரொம்ப லைட்டா இருக்கற மாதிரி இருக்கு?" ஜாஷ்வா: "ம்ம்ம் .. GLOCK-17" சக்திவேல்: "ஓ, அந்த பாலிமர் பாடி பிஸ்டலா. எங்க குடுடா நானும் பாக்கறேன்" அது GLOCK-17 எனப்படும் செமி-ஆடோமாடிக் பிஸ்டல். பொதுவாக பிஸ்டல்கள் முழுவதும் மிக கடினமான எஃகிரும்பில் (carbonised steel) அல்லது கன்-மெட்டல் என்ற உலோகத்தில் செய்யப் பட்டு இருக்கும். ஆனால் GLOCK-17 முக்கால் பாகத்திற்கு மேல் பாலிமர் எனப்படும் ஒரு கடினமான ப்ளாஸ்டிக்கில் செய்யப் பட்டது. ப்ளாஸ்டிக் என்றதும் வாசகர்களுக்கு குளியலறை பக்கெட் மற்றும் மக் நினைவுக்கு வரலாம். ஆனால் இந்த ப்ளாஸ்டிக் எஃகிரும்பை விட கடினமானது. இருநூறு செல்ஸியஸுக்கும் மேல் வெப்பம் தாங்கக் கூடியது. இருப்பினும் உலோகங்களை விட மிகவும் எடை குறைவானது. 9mm குறுக்களவும் 19mm நீளமும் உள்ள பதினேழு தோட்டாக்களை நிரப்பிய கார்ட்ரிட்ஜ் மேகஸீன் லோட் செய்த பிறகும் அந்த பிஸ்டலின் எடை ஒரு கிலோவுக்கும் குறைவே. GLOCK-17 பிஸ்டலை பற்றி குறிப்பிடத்தக்க இன்னொன்று அதன் மிகக் குறைவான ரிகாயில் (recoil). ஒரு பிஸ்டலை சுடும்போது தோட்டாவில் இருக்கும் வெடிமருந்து வெடித்து குண்டு முன்புறம் தள்ளப் படுகிறது. அதே சமயம் பிஸ்டல் நியூடனின் மூன்றாவது விதிப் படி (For every action there is an equal and opposite reaction) பின்னோக்கி அழுத்த மாக தள்ளப் படும். அந்த பின்னோக்கி தள்ளும் சக்திக்கு பெயர் ரிகாயில். சிலர் இதனை கிக்-பாக் என்றும் அழைப்பது வழக்கம். துப்பாக்கியின் எடை, தோட்டாவின் அளவு இவைகளைப் பொறுத்து ரிகாயிலின் அழுத்தம் வேறு படும். ரிகாயிலினால் துப்பாக்கி சுடுவதில் பழக்க மில்லாமல்லாதவர்களுக்கு கையிலோ முகவாயிலோ காயம் படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உலகத்தில் உள்ள பிஸ்டல்கள் அனைத்தையும் விட மிக குறைவான ரிகாயில் கொண்டது GLOCK-17. ஏனெனின் இந்த பிஸ்டல் ரிகாயில் சக்தியையே அடுத்த தோட்டாவை மேகஸீனிலிருன்து சேம்பர் எனப்படும் தோட்டா வெடிக்கும் பகுதிக்கு தள்ள உபயோகப் படுத்துகிறது. எஞ்சி இருக்கும் ரிகாயில் சக்தியால் ஏற்படும் அதிர்வை ஓரளவு அதன் பாலிமர் பாகங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. இக்காரணத்தால் பழக்க மில்லாதோரும் இந்த பிஸ்டலை எளிதில் உபயோகிக்கலாம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிஸ்டலை அவர்களிடமிருந்து வாங்கிய ஜாஷ்வா அதை தன் ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டபடி கூடுதல் தோட்டாக்கள் இருந்த கவரை தன் கைப்பைக்குள் வைத்தான். பிறகு அந்த பையில் இருந்து ஒரு பேஸ் பால் தொப்பியையும் கூலிங்க் க்ளாஸையும் எடுத்து நித்தினிடம் கொடுத்தான். 'என்ன ?' என்று புருவத்தை உயர்த்தியவனிடம், "இன்னோர் முன் எச்சரிக்கை கார்ல வரும்போது இதை போட்டுட்டு வா. ஓரளவுக்கு உன்னை அடையாளம் தெரியாம இருக்கணும். சக்தி, நீ பின் சீட்டுல உக்காந்துட்டு வா. பார்க்கிங்க் லாட்டுக்கு உள்ள நுழையும் போது கீழ குனிஞ்சுக்கோ. பாக்கறவங்களுக்கு ஒரே ஒரு ஆள் காரோட்டிட்டு வர்ற மாதிரி இருக்கணும்" சக்திவேல்: "எதுக்கு இந்த சீக்ரஸி?" ஜாஷ்வா: "என்னோட ரெண்டாவுது சந்தேகம் ... ஒருவேளை நம்மை மிரட்டி எப்படி இந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணறோம்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த மீட்டிங்குக்கு கூப்பிட்டு இருந்தா?இந்த ஆபரேஷன்ல எனக்கு தெரிஞ்ச சில விஷயம் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. அதே மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாது. சோ, மூணு பேரும் ஒண்ணா அவங்க கைல சிக்க கூடாது அதனால எனக்கு எந்த விதமான டவுட்டும் இல்லைன்னு தோணறவரைக்கும் நான் உங்களுக்கு சிக்னல் கொடுக்க மாட்டேன்" நித்தின்: "ஹேய், இது என்ன புது ட்விஸ்ட்?" சக்திவேல்: "ஜஷ்வா சொல்றது சரி தான். நம்மளோட பாட்நெட்டை காப்சர் பண்ண எவ்வளவு சைபர் அட்டாக் வந்துதுன்னு மறந்துடுச்சா?" (BotNet என்று அழைக்கப் படும் ஒரு ஸைபர் சூழ்ச்சி முறையை அடுத்த அப்டேட்டில் ஆராயலாம்) நித்தின்: "அதெல்லாம் வலை உலகத்தில. நிஜத்தில பண்ணுவாங்களா?" ஜாஷ்வா: "உன் பாங்க் பாலன்ஸை பாரு உனக்கே தெரியும் உன் பாட்நெட்டுக்காக நீ டிவலப் பண்ணினதை வெச்சுட்டு எவ்வளவு சம்பாதிக்க முடிஞ்சுதுன்னு. மத்தவங்க கைக்கு அது போய் இருந்தா அந்த மாதிரி பத்து மடங்கு சம்பாதிச்சு இருப்பாங்க. இன்னும் சம்பாதிக்க முடியும்" சக்திவேல்: "என்ன ஜாஷ்வா? இன்னும் சம்பாதிக்கணும்னு உனக்கு இருக்கா?" ஜாஷ்வா: "நோ வே! ஐ ஹாவ் இனஃப் .. " நித்தின்: "இந்த மாதிரி சொல்றதுக்கு ஒரு மெச்சூரிட்டி வேணும் .. அது உங்கிட்ட இருக்கு" சக்திவேல்: "எங்க ஊர்ல ஒரு பழமொழி இருக்கு" என்றவன் தமிழில் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்றபின் அதற்கு விளக்கத்தை ஆங்கிலத்தில் தொடர்ந்தான், "போதும் என்று சொல்லும் மனம் இருந்தா அதை வெச்சுட்டு தங்கம் செய்யலாம்" ஜாஷ்வா: "You mean like Philosopher's Stone? நல்லா இருக்கு!" நித்தின்: "ம்ம்ஹூம் ... தங்கத்தை செயற்கையா செய்ய முடியாதுங்கறதுக்கு ஒரு விளக்கம் மாதிரி இருக்கு" சக்திவேல்: "எல்லாத்தையும் இப்படி ஏண்டா விதண்டா வாதமா யோசிக்கறே? சரி ஜாஷ்வா, எப்படி சிக்னல் கொடுக்க போறே" ஜாஷ்வா: "அவங்களை பாக்கறதுக்கு முன்னாடி என் செல்லுல இருந்து உன் நம்பரை கூப்பிடறேன். காலை கட் பண்ணாம ஃபோனை பாக்கெட்ல வெச்சுக்கறேன். நாங்க என்ன பேசறோம்னு உங்களுக்கு கேக்கும். நிலமை சரியா இருந்தா பேச்சு வாக்கில நான் 'தே ஷுட் பீ ஹியர் இன் தெ நெக்ஸ்ட் த்ரீ மினிட்ஸ்' அப்படின்னு சொல்வேன். எக்ஸாக்டா அப்படி சொன்னால் மட்டும் இறங்கி வாங்க" சக்திவேல்: "எனக்கு என்னமோ இன்னமும் இந்த மீட்டிங்க் தேவையான்னு படுது ... " நித்தின்: "டோண்ட் வொர்ரி டா, ஜாஷ் சமாளிப்பாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு"ஜாஷ்வா: "தட்ஸ் தெ ஸ்பிரிட். அப்பறம் இன்னொரு விஷயம்." என்றபடி கை பையில் இருந்து இன்னோரு கவரை எடுத்து சக்திவேலிடம் கொடுத்து, "இதுல ரெண்டு ஷீட்ஸ் இருக்கு, ஒண்ணுல இந்த நம்பர் அக்கௌண்ட் டீடெயில்ஸ் அப்பறம் நெட் பாங்கிங்க் லாகின் ஐடியும் பாஸ்வர்டும் இருக்கு. " சக்திவேல்: "அதை எதுக்கு எங்கிட்ட கொடுக்கற?" ஜாஷ்வா: "நாம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணலைன்னு அவங்களுக்கு சந்தேகம் இல்லைன்னா உடனே அதுல இருக்கற பணம் எல்லாத்தையும் நம் அக்கௌண்டுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடனும். நான் என் கஸின் கிட்ட சொல்லி அதை க்ளோஸ் பண்ண சொல்லுடுவேன். நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு மூணு மில்லியன் எடுத்துக்குங்க. ஒரு மில்லியனை சாரிட்டிக்குன்னு நாம் வெச்சு இருக்கற அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. அதுக்கு அப்பறம, அந்த சாரிட்டி அக்கௌண்ட்ல மொத்தம் ஒன்றரை மில்லியன் டாலருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும். இதுவரைக்கும் நாம் சாரிட்டிக்குன்னு ஏழரை லட்சம் (முக்கால் மில்லியன்) தான் செலவழிச்சு இருக்கோம். பாக்கியை நீங்க இந்தியாவிலயும் நான் பஹமாஸ்லயும் செலவு செய்யறதா இருந்தோம். கூடிய சீக்கிரம் அந்த அக்கௌண்ட்ல இருக்கறது முழுக்க செலவு செஞ்சுடணும். மனசுல வெச்சுக்குங்க." நித்தின்: "இந்தியா போன உடனே முதல் வேலை என்னோடது அது தான். ஏற்கனவே நாங்க சில அனாதை விடுதி அப்பறம் ஓல்ட் ஏஜ் ஹோம் எல்லாம் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சு இருக்கோம்" சக்திவேல்: "அது சரி, ரெண்டு ஷீட்ஸ் இருக்குன்னு சொன்னே?" ஜாஷ்வா: "சொல்றேன். இன்னோரு ஷீட்ல நான் இங்க இருந்து அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதை பத்தி டீடெயில்ஸ் இருக்கு" சக்திவேல்: "உன்னோட பணத்தை இங்க இருந்து எடுத்துட்டு போறதை பத்தி ... என் கிட்ட ஏன் குடுக்கறே?" ஜாஷ்வா: "நான் அதை பிரிச்சு கூட பாக்கலை. பாக்க வேண்டாம்னு சொல்லி சஞ்சனா சொன்னா. அப்படியே உன் கிட்ட கொடுக்கறேன்" சக்திவேல்: "அதான் ஏன்?.. " ஜாஷ்வா: "இந்த அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் எப்படி வொர்க் பண்ணும் தெரியுமா? ஒரு பாங்க் மாதிரி தான். ஆனா கொஞ்சம் வித்தியாசமா .. நான் என் பணத்தை எல்லாம் அவங்க கிட்ட கொடுத்துட்டேன். அதுக்கு பதிலா அவங்க எங்கிட்ட அந்த ஷீட்ல ஒரு ஃபோன் நம்பர், ஒரு அக்கௌண்ட் நம்பர் அப்பறம் ஒரு சாலஞ்ச் ரெஸ்பான்ஸ் லிஸ்ட் (challenge-response list) கொடுத்து இருக்காங்க. அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி அக்கௌண்ட் நம்பரை சொன்னதும் அந்த லிஸ்ட்ல இருக்கற ஒண்ணு ரெண்டு சாலஞ்ச் கேள்விகளை கேப்பாங்க. அதுக்கு நீ அந்த கேள்விக்கு அதுக்கு நேரா இருக்கற ரெஸ்பான்ஸை பதிலா சொல்லணும். அதுக்கப்பறம் நீ எவ்வளவு பணத்தை எந்த நாட்டில எந்த ஊர்ல யார் கிட்ட கொடுக்கணும் இல்லை எந்த பேங்க்ல எந்த அக்கௌண்ட்ல டெபாசிட் பண்ணனும் அப்படின்னு சொல்லலாம்." நித்தின்: "ஹே, நம்பகமான பார்டிங்க தானே?" ஜாஷ்வா: "இந்த அண்டர்க்ரௌண்ட் நெட் வொர்க் ஓடறதே நம்பிக்கைலதான். கமிஷன் கொஞ்சம் அதிகம். மூணரை பர்சன்ட். நாம் சார்ஜ் பண்ணின மாதிரி ஒன்றரை பர்ஸன்ட்னா கொலம்பியா ட்ரக் கார்டல் காரங்க நம்ம கிட்ட வந்து இருக்க மாட்டாங்க"
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சக்திவேல்: "இன்னும் இதை என் கிட்ட ஏன் கொடுக்கறேன்னு சொல்லலை .. " ஜாஷ்வா: "சொல்றேன் .. நாங்க ரெண்டு பேரும் லாங்க் டர்ம் விசா எடுத்துட்டு போறோம். பஹாமாஸ் மாதிரி இடங்களுக்கு இந்த மாதிரி நிறைய பேர் போறாங்க. இட் சீம்ஸ், இப்படி வர்றவங்களை சில கும்பல்கள் கண்காணிச்சு அவங்களை தள்ளிட்டு போய் ட்ரக் பண்ணி ட்ரான்ஸ்ஃபர் விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கறாங்களாம். நாங்க என் கஸின்ஸ் மூலம் முன் ஏற்பாடுகள் செஞ்சுட்டுதான் போறோம். இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்கு இதை நான் உன் கிட்ட கொடுக்கறேன். நான் அங்க போனதுக்கு அப்பறம் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சுட்டு அந்த அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் எங்க எல்லாம் பண்ணனும்னு சொல்றேன். நீ ஃபோன்ல கூப்பிட்டு அதை முடிக்கணும். இது உன் தங்கச்சியோட கட்டளை. நாளன்னைக்கு பாக்கும் போது அவளும் சொல்லுவா" சஞ்சனாவை பற்றி சொன்னதும சக்திவேல் முகம் மலர்ந்தான். நித்தின்: "ஐ சப்போஸ் இதை தவிர நார்மல் ட்ரான்ஸ்ஃபர்லையும் கொஞ்சம் பணம் எடுத்துட்டு போறே தானே?" ஜாஷ்வா: "என் சம்பளப் பணம் முழுக்க என் அக்கௌண்ட்ல இருக்கு. நான் அதை அங்க இருந்தும் எடுத்துக்கலாம். மத்த பணம் தான் அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃப்ர்ல போகுது" சக்திவேல்: "இஃப் யூ டோண்ட் மைண்ட் ... எவ்வளவு அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பறே? " ஜாஷ்வா: "நாட் அட் ஆல். உனக்கு எப்படியும் தெரிஞ்சுதானே ஆகணும். மொத்தம் நாலரை மில்லியன். இதை தவிர இந்த அக்கௌண்ட்ல இருந்து என்னோட ஷேரான மூணு மில்லியனுக்கு ஒரு செக்கும் அவங்ககிட்ட இன்னைக்கு கொடுத்து இருக்கேன். நாளன்னைக்கு வரைக்கும் நான் அவங்ககிட்ட எதுவும் சொல்லலைன்னா அவங்க அதை நாளன்னைக்கு டெபாசிட் பண்ணுவாங்க" நித்தின்: "ஹே தாட் இஸ் ஃபன்னி... சொன்னா டெபாசிட் பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். சொல்லலைன்னா டெபாசிட் பண்ணுவாங்க அப்படிங்கறே?" ஜாஷ்வா: "அவங்களை பொறுத்த வரைக்கும் காண்டாக்ட் ரொம்ப கம்மியா இருக்கணும். எனக்கும் நல்லதுதானே. நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சரி, நான் கிளம்பறேன். என் டெரரிஸ்ட் மனைவி இன்னும் நாளைக்கு டின்னர்னு நினைச்சுட்டு இருப்பா. இப்ப போய் சொன்னா கொஞ்சம் ஒதை விழுந்தாலும் விழும் .. " சக்திவேல்: "ஏண்டா அவளை இன்னும் டெரரிஸ்ட்டுன்னு சொல்றே. அவ மனசு கஷ்டப் படும் இல்லையா?" ஜாஷ்வா: "ஜஸ்ட் கிட்டிங்க் .. அவ எனக்கு பர்ஸனல் டெரரிஸ்ட் .. அதாவுது அவளோட விக்டிம் நான் மட்டும்தான்!" என்றதும் மூவரும் வாய்விட்டு சிரித்த படி விடை பெற்றனர்.Joshua's Flat, Harlem, N.Y 7:30 PM ஜாஷ்வாவின் ஃப்ளாட், ஹார்லம் பகுதி, நியூ யார்க் நகரம், மாலை மணி 7:30 இந்திய சமையலின் மணம் ஃப்ளாட்டிற்கு அருகே வரும்போதே அவன் நாசியை துளைக்க கதவை தட்டாமல் தன்னிடமிருந்த சாவியால் திறந்து நுழைந்தான். வாசல் தெரியும்படி இருந்த சமையல் அறையிலிருந்து சஞ்சனா ஓரக்கண்ணில் பார்ப்பதை அறியாமல் தன் ஜாக்கெட்டை சுவற்றில் இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு பூனை போல் நடந்து சமையலறைக்குள் சென்றான். குளித்து முடித்து அடர்ந்த கூந்தலை ஒரு டர்கி டவலால் சுற்றி கொண்டையாக போட்டு வெற்றுடலை ஒரு டர்கி பாத் ரோப் தழுவ நின்று கொண்டிருந்தவளின் இடையை பற்றி காது மடல்களை கடித்தான். எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் ஃபில்டர் காப்பி நிறத்தில் இருந்த அவனது முகத்தருகே அவளது மாநிறம் விளக்கொளியில் தங்கம் போல் ஜொலித்தது. ஜாஷ்வா: "ஹேய் ஹனி! டெஸ்ட் ரிஸல்ட் வந்துதா? டிட் யூ மீட் த கைனிக்?" சஞ்சனா: "ம்ம்ம்ம் ... ஜாஷ்வா ஜூனியர் கன்ஃபர்ம்ட்" ஜாஷ்வா: "அதுக்குள்ள ஜாஷ்வா ஜூனியரா இல்லை சஞ்சனா ஜூனியரான்னு தெரியுமா என்ன?" திரும்பி நின்று அவன் கழுத்தில் கரங்களை மாலையாக போட்டவள். அவன் தலையை குனியவைத்து நுனிக்காலில் நின்று அவன் இதழ்களை தன் இதழால் கவ்வினாள். சில நிமிடங்கள் நீடித்த முத்தத்திலிருந்து மனமில்லாமல் விடுபட்டு தமிழில், "மண்டு!" என்று தொடர்ந்து ஆங்கிலத்தில், "என் ஸ்வீட் ஹஸ்பண்ட் பெரிய விஸ் கிட் சில சமயத்துல டம்போ. அதுக்குள்ள தெரியாது. நாலு மாசத்துக்கு அப்பறம் தான் டாக்டர்ஸ் கன்ஃபர்ம்டா சொல்லுவாங்க" ஜாஷ்வா: "எனக்கும் அது தெரியும் மை லவ். நீ ஜாஷ்வா ஜூனியர்னு சொன்னதுனால அப்படி கேட்டேன்" சஞ்சனா: "ஆனா .. ஜாஷ்வா ஜூனியர்தான்னு நான் 100% ஷ்யூர்" ஜாஷ்வா: "எப்படி சொல்றே?" சஞ்சனா: "கணவன் மனைவிமேல் வெச்சு இருக்கற காதலை விட அதிகமா மனைவி கணவன் மேல் வெச்சு இருந்தா நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும் அப்படின்னு எங்க ஊர்ல பாட்டிங்க சொல்லுவாங்க. அதனால தான்!" ஜாஷ்வா: "அப்ப நான் உன்னை லவ் பண்ணலைங்கறயா?" சஞ்சனா: "நான் அப்படி சொல்லலை. நீ என்னை லவ் பண்றதை விட அதிகமா நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்" ஜாஷ்வா: "உன்னை தவிர வேற யாரையும் நான் லவ் பண்ணலை. பண்ணினதும் இல்லைன்னு உனக்கு தெரியும்தானே?" சஞ்சனா: "உயிருள்ள ஜீவராசியில நீ என்னை மட்டும்தான் லவ் பண்ணறேன்னு தெரியும். ஆனா என்னை லவ் பண்ணற அளவுக்கு உன் கம்ப்யூடர், அல்காரிதம் இதை எல்லாத்தையும் லவ் பண்றே. எனக்கு அந்த மாதிரி டிஸ்ட்ராக்ஷன் எதுவும் இல்லை. சோ, உன்னை விட நான் தான் அதிகமா லவ் பண்றேன்" ஜாஷ்வா: "உன் லாஜிக் பிடிச்சு இருக்கு. ஆனா இன்னும் ரெண்டு மாசம் பொறுத்துக்கோ. அப்பறம் பஹாமாஸ்ல எனக்கு ஒரு வேலையும் இருக்காது. இதுக்கு அடுத்தது சஞ்சனா ஜூனியர் ஒன், டூ, த்ரீன்னு சிக்ஸ் வரைக்கு அரை டஜன் பேபி டால்ஸ் வரும்" சஞ்சனா: "உன்னை மாதிரி ஒரு அப்பாவுக்கு நான் ஒரு டஜன் பிள்ளைங்ககூட பெத்து கொடுக்க தயார்" ஜாஷ்வா: "என்னை மாதிரி ஒரு அப்பாவா?" சஞ்சனா: "நீ எப்படிப் பட்ட ஒரு அப்பாவா இருப்பேன்னு உன்னை பாத்த முதல் மூணு மாசத்துல தெரிஞ்சுகிட்டேன்" என்றாள் ஜாஷ்வா:
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"ம்ம்ம்... அப்பறம் நான் கேட்டதை டாக்டர்கிட்ட கேட்டியா?" சஞ்சனா: "நான் சொன்னதையேதான் டாக்டரும் சொன்னாங்க. எனக்கு ப்ளீடிங்க் மாதிரி ஒரு காம்ப்ளிகேஷனும் இல்லை. அதனால் கடைசி மாசம் வரைக்கும் ஓ.கே அப்படின்னாங்க" ஜாஷ்வா அவள் சொல்ல சொல்ல அவளை இன்னும் இறுக்கினான். அவனது ஆண்மை அவளது வயிற்றில் முட்டியது. ஜாஷ்வா: "எனக்கு இப்ப வேணும் .. " சஞ்சனா: "ம்ம்ஹூம் ... என்னை நம்பாம பத்து நாளா காயப் போட்டே இல்லை?" ஜாஷ்வா: "உன்னை எங்க பட்டினி போட்டேன். இந்த பத்து நாள்ல என் நாக்கு தமிழ் பேசற அளவுக்கு ஃப்ளெக்ஸிபிள் ஆகி நல்லா ஸ்ட்ராங்கா ஆகி இருக்கு!" சஞ்சனா: "சீ .. " என்றவாறு முகம் சிவந்தாள் பிறகு, "நான் ஒண்ணு கேட்டா நீ வேற கொடுத்தே இல்லை?" என்றவாறு வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள். ஜாஷ்வா: "சரி, பெட் ரூம் போலாம் வா" சஞ்சனா: " நான் எப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கேன்? அந்த மாதிரி நீயும் போய் குளிச்சுட்டு வா. அதுக்கு அப்பறம்தான்" ஜாஷ்வா: "அப்பறமா போய் குளிக்கறேனே?" சஞ்சனா: "அப்பறமா பசி பசின்னு பறப்பே. வத்தக் குழம்பு வெச்சு இருக்கேன். கூட அப்பளம் இல்லைன்னா குதிப்பே. அப்ப ஒரு வேலைக்கும் எனக்கு மூடு வராது. நான் இப்பவே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்துடறேன்... ப்ளீஸ் டியர்" தொடர்ந்து தமிழில் "என் செல்ல ஜாஷ் குட்டி இல்ல?" என்றபடி அவன் கன்னத்தை தடவினாள். ஜாஷ்வா: "நீ பேசறது எல்லாம் புரியுது .. ஆனா பேசத்தான் வரமாட்டேங்குது"
சஞ்சனா: "யோவ் .. நான் உனக்கு சொல்லி கொடுத்ததை நாளைக்கு டின்னரப்ப சக்திகிட்ட சொல்லணும் .. மறந்துடாதே" ஜாஷ்வா: "ஹே, சொல்ல மறந்துட்டேன் ... நாளைக்கு டின்னர் இல்லை .. " சஞ்சனா: "ஏன்? " ஜாஷ்வா: "நாளைக்கு ஆண்டர்ஸனும் ஹாஃப்மனும் மீட்டிங்க்குக்கு கூப்பிட்டு இருக்காங்க. அது பத்து மணிக்கு; அது முடிஞ்சதுக்கு அப்பறம் ரொம்ப லேட்டாயிடும். அதனால நாளன்னைக்கு டின்னர் வெச்சுக்கலாம். டின்னர் முடிஞ்சதுக்கு அப்பறம் நாம் போய் அவங்களை செண்ட் ஆஃப் பண்ணிட்டு வரலாம்" சஞ்சனாவின் முகத்தில் சிறு ஏமாற்றம் தோன்றி மறைந்தது. பிறகு, "ஏன் இப்படி கடைசி நேரத்துல? போன வாரம்தான் நீங்க எல்லாம் அல்ரெடி குட் பை சொல்லி ஆபரேஷனை முழுசா வைண்ட் அப் பண்ணிட்டீங்கன்னு சொன்னே?" ஜாஷ்வா: "ஒண்ணுமில்லை சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண மறந்துட்டோம். அதான்" ஜாஷ்வாவை தீர்க்கமாக பார்த்த படி, "என்ன எங்கிட்ட இருந்து மறைக்கறே?" ஜாஷ்வா: "நோ ஹனி நான் எதையும் உங்கிட்ட மறைக்கலே" சஞ்சனா: "பின்னே எதுக்கு உன் ஜாக்கெட் பாக்கெட்ல கன் இருக்கு?" ஜாஸ்வா: "கன்னா? .." என்று மழுப்பப் பார்த்தவன் சஞ்சனாவின் கண்களை சில கணங்களுக்கு மேல் பார்க்க முடியாமல் திரும்பினான்.சஞ்சனா: "ரெண்டு வருஷம் நான் பிஸ்டல், ரைஃபிள், ஹாண்ட் க்ரனேட் எல்லாத்தையும் உடம்பில மாட்டிட்டு திரிஞ்சு இருக்கேன். எதிரியை பாத்த உடன் உடம்பில் எங்கே என்ன வெப்பன் ஒளிச்சு வெச்சு இருக்கான்னு என்னால் சொல்ல முடியும். உன் ஜாக்கெட் சுவற்றில் தொங்கற விதத்தில இருந்து அதோட ரைட் சைட் பாக்கெட்ல ஒரு பிஸ்டல் இருக்குன்னு தெரியுது. அனேகமா லோட் பண்ணாத பரேட்டா இல்லைன்னா லோட் பண்ணின க்ளாக். எதுக்கு உனக்கு? என்ன நடக்குது? ஒண்ணு விடாம எங்கிட்ட சொல்லு" பெரு மூச்செறிந்த ஜாஷ்வா அவளிடம் நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தான். சஞ்சனா: "சோ, நீ பிஸ்டலோட அவங்களை மீட் பண்ண போறே? மீட்டிங்க்குக்கு முன்னாடி அவங்க ஆளுங்க உன்னை ஃப்ரிஸ்க் (சோதனை) பண்ண மாட்டாங்களா?" ஜாஷ்வா: "அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் எப்பவும் வருவாங்க. அதெல்லாம் இது வரைக்கும் பண்ணினது இல்லை" சஞ்சனா: "நாளைக்கு கூட ஆள் கூட்டிட்டு வந்து இருந்தாங்கன்னா?" ஜாஷ்வா: "நான் என் கஸின் கார்ல இருந்து இறங்கவே போறது இல்லை" சஞ்சனா: "யார் காரோட்டிட்டு வரப் போறது" ஜாஷ்வா: "க்ரிஸ் ..." கடந்த இரண்டரை வருடங்களில் சஞ்சனாவுக்கு ஜாஷ்வாவின் ஒவ்வொரு உடன் பிறவா சகோதரன் சகோதரியுடனும் அறிமுகமாகி இருந்தாள். க்ரிஸ் டேனியல் போதை பொருள் வினியோகத்தில் ஈடு பட்டவன். அவன் காரோட்டும் திறமையை சஞ்சனா நன்கு அறிந்து இருந்தாள். சஞ்சனா: "சரி, உன் ப்ளான்ல ஒரு சின்ன சேஞ்ச். ..." ஜாஷ்வா: "என்ன சேஞ்ச்? ... " சஞ்சனா: "நானும் வரேன். முடிஞ்சா இன்னோரு கன் எனக்கு ஏற்பாடு பண்ணு; இல்லைன்னா, இந்த கன்னை உன் கீழ் முதுகுல பெல்ட்ல சொருகிட்டு வா அவசரத்துக்கு நம்ம ரெண்டு பேரும் எடுக்க வசதியா இருக்கும்" ஜாஷ்வா: "நோ ஹனி. என்னால ஹாண்டில் பண்ண முடியும்" சஞ்சனா: "நீ மத்த கீக்ஸ் (geeks) மாதிரி நோஞ்சான் இல்லைன்னு தெரியும். ஹார்லம்ல பொறந்து வளந்ததனால உனக்கு கன்ஸ் புதுசு இல்லைன்னும் தெரியும். பட், ஒரு வேளை அந்த கன்னை உபயோகப் படுத்தணும்னு வந்துன்னா. என்னால அங்க இருக்கற எல்லாரையும் விட நல்லா உபயோகிக்க முடியும். என்னோட ஸேஃப்டியை பத்தி கவலைப் படாதே. நான் உன் ஸேஃப்டியை பத்தி கவலைப் பட்டு சொன்னேன். நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ்". ஜாஷ்வா முகம் சுளித்தபடி, "ஹே, இந்த ப்ரிகாஷன் எல்லாம் தேவையே இருக்காது தெரியுமா?" சஞ்சனா: "எனக்கு புரியுது. நானும் அப்படிதான் நினைக்கறேன். அதுக்காக ப்ரிகாஷன் தேவை இல்லைன்னு சொல்லாதே. ஒரு பிரச்சனையும் வரலைன்னா என்ன? நான் உன் கூட ஜாலியா ஒரு ரைட் வரப்போறேன். பொண்டாட்டியை ரைட் கூட்டிட்டு போறதுக்கு அதுக்குள்ள அலுத்துருச்சா?. இப்ப சும்மா பேசிட்டு இருக்காதே. போய் குளிச்சுட்டு வா. வந்ததும் எனக்கு மூடை கிளப்பி விட்டுட்டே. எனக்கு நீ நைட்டு முழுக்க வேணும்" என்றவாறு அவனை குளியலறை பக்கம் தள்ளினாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
.anjana Edwards - An Introduction Jan 2004 to May 2009Baticoloa, Sri Lanka to Harlem, N.Y, U.S.Aசஞ்சனா எட்வர்ட்ஸ் - ஒரு அறிமுகம் 26 டிசம்பர் 2004 முதல் மே 2009 வரை மட்டக்கிளப்பு, இலங்கையில் தொடங்கி ஹார்லம் பகுதி, நியூ யார்க் நகரம் வரை இலங்கையில் மீன் பாடும் தேன் நாடு என்று பெருமையுடன் அழைக்கப் படும் மட்டக்களப்பில் பார்த்திபன் வேதநாயகி தம்பதியர் இருவரும் அரசாங்க வேலையில் இருந்தனர். அதிக பணக்காரர்கள் இல்லை என்றபோதும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. 'பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும் அவர்கள் நல்லதொரு நிலைமைக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் குறிக்கோள். அப்போது அவர்களின் இருபத்து மூன்று வயதான மகன் சந்தோஷ் முது நிலை பட்ட படிப்பில் சேர்ந்து இருந்தான். அழகுப் பெட்டகமான இருபத்தோரு வயதான மகள் சஞ்சனா இள நிலை பட்ட படிப்பில் இருந்தாள். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு சிறிதும் ஏமாற்றம் அளிக்காமல் இருவரும் படித்து வந்தனர். இருவரும் பட்ட படிப்புடன் தனியாக கம்ப்யூட்ர் டிப்ளமாவும் படித்து வந்தனர். சந்தோஷ் படிப்பை முடித்தவுடன் பார்த்திபன் அமெரிக்காவில் அவருக்கு தெரிந்தவரிடம் ஒரு வேலைக்கும் சொல்லி வைத்து இருந்தார். சந்தோஷ் தன் தங்கையை மேல் படிப்புக்கு அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தான். அன்று பார்த்திபன்-வேதநாயகி தம்பதியினரின் திருமண நாள். வேலைக்கு போகுமுன் கல்லடியில் இருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு செல்லவிருந்தனர். சந்தோஷும் சஞ்சனாவும் கல்லூரிக்கு போகுமுன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக் கூறி மாலை எல்லோரும் டின்னருக்கு போக திட்டமிட்டு விடைபெற்று சென்றனர். அன்று அவர்கள் கோவிலுக்கு சென்ற போது வந்த சுனாமி அக்கோவிலின் கர்ப்பகிரகம் இருக்கும் கோபுரத்தை பைசா நகரத்து கோபுரம் போல் சாய்த்தது. சந்தோஷுக்கும் சஞ்சனாவுக்கும் அவர்கள் உடல்களை தேடி அவைகளை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆகின. பெற்றோரை இழந்த இருவரும் போக இடமின்றி படிப்பை தொடர வழியின்றி வேலை தேடி அலைந்தனர். சுதந்திர இயக்கத்தை சேர்ந்த சிலர் தங்களை போராளிகள் என்று காட்டிக் கொள்ளாமல் பொது நல சேவையில் ஈடு பட்டு இருந்தனர். சந்தோஷ் அவர்களுடன் பழக்கமாக, போக்கிடமின்றி தங்கையுடன் அவ்வியக்கத்தில் சேர்ந்தான். மேலும் படிக்கவும் இயலும் என்ற வாக்குறுதி கிடைத்ததால் சஞ்சனாவும் சம்மதித்தாள். ஆனால் வடக்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு முகாமில் அவர்கள் முதலில் படித்தது யுத்தக் கலை. சுதந்திரப் பற்று இருப்பினும் சஞ்சனா துப்பாக்கி கலாசாரத்தை அறவே வெறுத்தாள். இருப்பினும் சந்தோஷும் அவளும் கை தேர்ந்த போராளிகளாகினர். பல ஆபரேஷன்களை வெற்றிகரமாக முடித்து பாராட்டு பெற்றனர். அடுத்த இரண்டு வருடங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனதுக்குள் வெறுத்தாள். சஞ்சனாவின் மன நிலையை அறிந்த சந்தோஷ் எப்படியும் அவளை அங்கு இருந்து வெளியே அனுப்பி விட முடிவெடுத்தான். அமெரிக்காவில் இருந்த தந்தைக்கு தெரிந்தவரை அணுக அவர் சிறிது பண உதவி செய்வதாகவும் அந்நாட்டுக்குள் வந்தபின் அடைக்கலம் தருவதாகவும் வாக்களித்தார். ஆனால் விசாவுக்கு தன்னால் ஸ்பான்ஸர் செய்ய இயலாது என்றார். வேறு ஒருவரை ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அணுகினார். அவர் அமெரிக்காவில் தன் முதலாளி கொடுப்பார்; ஆனால், அவரிடம் ஒரு வருடமாவது மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கூற அதற்கு ஒப்புதல் கொடுத்தான். கிடைத்த பண உதவியையும் சேர்த்து கையில் இருந்த பணத்தில் சஞ்சனாவுக்கு மட்டும் விமான டிக்கட் எடுக்க முடிந்தது. அந்த இயக்கத்தில் சேர்வது சுலபம் ஆனால் விடுபட்டுப் போவது கடினம். தன் உயிரை பணயம் வைத்து சஞ்சனாவை வெளியில் கொண்டு வர முடிவெடுத்தான். அவனை விட்டு செல்ல மறுப்பாள் என்று அறிந்த சந்தோஷ் தானும் உடன் வருவதாக கூறி இருந்தான். ரகசியமாக இருவரும் வெளியேறுகையில் மற்ற இயக்கத்தினரால் கண்டு பிடிக்கப் பட குண்டடி பட்டான். குற்றுயிரும் குலையுயிருமாக பிரயாணம் செய்து வந்தவன் கொழும்பு நகரத்தை அடையுமுன் உயிர் விட்டான். கொழும்பு நகரத்தில் தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்கள் செய்வது அறியாது திகைத்து இருந்தவள் தன் அமெரிக்க பயணத்தை தொடர முடிவெடுத்தாள். அண்ணன் ஏற்பாடு செய்து இருந்த ஸ்பான்ஸர்ஷிப் கடிதம், பாஸ்போர்ட் மற்றும் அவன் தன் சேமிப்பனைத்தையும் போட்டு எடுத்து இருந்த ஓபன் டிக்கட்டுடனும் அமெரிக்க தூதரகத்தில் க்யூவில் நின்று விசா பெற்றாள். ஸ்பான்ஸர்ஷிப் கொடுத்தவருடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா வருவதை அறிவித்தாள். ஒரு வருடம் குறைந்த சம்பள வேலையில் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவள் அமெரிக்கா வந்தடைந்த பிறகே அவளுக்கு ஸ்பான்ஸர்ஷிப் கொடுத்தது ஒரு போதை மருந்து கடத்தும் கும்பல் என்று அறிந்தாள். அவர்களுக்கு அவள் செய்ய வேண்டி இருந்த வேலை அவர்களுடன் போகுமிடமெல்லாம் செல்லுவதும் வேண்டுமென்ற போது தன் உடலை பரிமாறுவதும் என்று அறிந்தவள் அதற்கு மறுத்தாள். ஒரு தனி அறையில் சிறைவைக்கப் பட்டாள்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
எப்படியாவது வெளியில் எதாவது வேலை செய்து ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அவர்கள் செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக மன்றாடினாள். முதலில் அன்பாக பேசியவர்கள் அவள் மறுக்க பலாத்காரத்தில் ஈடு பட்டனர். போராளியாக இருந்தவளை எளிதில் அவர்களால் தங்கள் இச்சைக்கு பணியவைக்க முடியவில்லை. பலாத்காரமாக அவளுக்கு போதை மருந்து ஏற்றியபின் அவர்களின் தாக்குதலுக்கு பலியாகி பல முறை கற்பழிக்கப் பட்டாள். அரை மயக்க நிலை மாறாமல் அவளை வைத்து பகல் நேரத்தில் அக்கூட்டத்தினருக்கு சிற்றுண்டி போலவும் இரவில் பேருண்டியாகவும் பரிமாறப் பட்டாள். தனக்கு என்ன நடக்கிறது என்று அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் இருந்தாள். சிறிது சிறிதாக தான் போதை மருந்துக்கு அடிமையாவதை உணர்ந்தாள். முழுவதும் அடிமையாவதற்குள் அங்கு இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று தக்க சமயத்திற்காக காத்து இருந்தாள். ஒரு நாள் விடியலுக்கு முன் அவர்கள் கண்ணயர்ந்த சமயம் தப்பி ஓடினாள். துரத்தியவர்களிடமிருந்து தப்பிக்க சாலையின் குறுக்கே ஓட ஜாஷ்வா தன் இரவு நேர வேலை முடித்து வீடு திரும்புகையில் அவன் காரில் அடிபட்டாள். அடி பட்டு விழுந்தவளை துரத்தியவர்கள் புறக்கணித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். ஜாஷ்வா அவளை மருத்துவமனையில் சேர்த்தான். இரண்டு வாரங்களில் அவள் உடலில் பட்ட காயங்கள் ஆறி உடல் நிலை சற்று தேறியதும் அவளுக்கு ஏற்படுத்தப் பட்ட போதை மருந்து பழக்கத்தை திடீரென நிறுத்தியதால் தோன்றும் வித்ட்ராயல் சின்ட்ரோம் (withdrawal syndrome or discontinuation syndrome) அவளை வதைக்க தொடங்கியது. அதுவரை அதை அறியாமல் இருந்த மருத்துவர்கள் அவளை வேறு ஒரு மருத்துவத்திற்கு அழைத்து செல்லுமாறு ஜாஷ்வாவிடம் கூறினர். அவளை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தவன் இரண்டொரு நாட்கள் அவள் பட்ட அவஸ்தையை பொறுக்க முடியாமல் சிறிதளவு போதை மருந்தை அவளுக்கு ஏற்றுவதற்கு தன் உடன் பிறவா சகோதரர்கள் மூலம் ஏற்பாடு செய்தான். பிறகு அவளை ஃபீனிக்ஸ் ஹௌஸ் (Pheonix House) என்ற பெயரில் இயங்கும் போதை பொருளுக்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் ஒரு மையத்திற்கு அழைத்து சென்றான். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவம் பெற்றபின் மறுபடி அவளை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தான்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மேற் கொண்டு அவள் மன நிலையை திடப் படுத்தும் பயிற்சிகளுக்காக அடுத்த இரண்டு மாதங்கள் தினமும் காலையில் அலுவலகத்திற்கு செல்லுமும் அவளை அம்மையத்தில் விடுத்து அவளை மதியம் அழைத்து வந்து தன் ஃப்ளாட்டில் உறங்க வைத்த பின் திரும்ப அலுவலகம் சென்றான். சுருக்கமாக சொன்னால் அவளை ஒரு தாயை போல பார்த்துக் கொண்டான். மூன்று மாதங்களும் அவள் சுய நினைவோடு அவனுடம் இருக்கும் போது அவளிடமிருந்து அவளுக்கு நடந்தவைகளை அறிந்து கொண்டான். பார்த்த முதல் நாளே அவள் இருந்த நிலையிலும் வெளிப்பட்ட அழகில் மயங்கியவன் அவளது வரலாற்றை அறிந்தபின் தீவிரமாக காதலிக்க தொடங்கினான். மனதுக்குள் இவளை தன்னவளாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். அவன் அன்பிலும் பண்பிலும் லயித்து மனதுக்குள் இவனைப் போல் ஒருவனைத்தானே என் பெற்றோரோ அண்ணனோ எனக்கு மணமுடித்து வைத்து இருப்பார்கள் என்று நினைத்தாலும் தன்னை அவனுக்கு தகுதியற்றவளாக கருதினாள். பல நாள் வாக்கு வாதங்களுக்கு பிறகு அவன் காதலுக்கு ஒப்புதல் அளித்தாள். சர்ச்சில் நண்பர்கள் புடை சூழ சஞ்சனா பார்த்திபனாக இருந்தவளை சஞ்சனா எட்வர்ட்ஸாக ஆக்கி பிறகு பிள்ளையார் கோவிலில் தாலியும் கட்டினான். அடுத்த மூன்று வருடங்களில் தாம்பத்தியத்துடன் அவளை மேலும் படிக்க வைத்தான். பிறந்தது முதல் தாயின் அன்புக்கு ஏங்கியவனை தாயாகவும் படுக்கையில் தாரமாகவும் சஞ்சனா தன் அன்பினால் குளிப்பாட்டினாள். படித்து முடிக்கும் வரை மகப்பேறு வேண்டாமென்று இருந்தவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே குடும்பத்தை பெரிது படுத்த முடிவெடுத்து இருந்தனர்.Creation of Monks BotNet Sep-2003 to May-2008 IIT-Mumbai, IIT-Madras till New York மாங்க்ஸ் பாட் நெட் உருவாக்கம் செப்டம்பர்-2003ல் இருந்து மே-2008 வரை ஐஐடி-மும்பை மற்றும் ஐஐடி-மெட்ராஸ், சென்னையில் தொடங்கி நியூ யார்க் நகரம் வரை நித்தினும் சக்திவேலும் பி.டெக் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போது முதலில் மும்பை ஐ.ஐ.டி நடத்தும் டெக்ஃபெஸ்ட் (TechFest) வருடாந்திர தொழில்நுட்ப விழாவில் நடந்த மென்பொருள் எழுதும் போட்டியின் போது சந்தித்தனர். இருவரின் சிந்தனைகளிலும் கருத்துக்களிலும் இருந்த ஒற்றுமையால் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். முதன் முதலில் அவர்கள் சட்ட விரோத ஹாக்கிங்க் செய்தது இன்னொரு ஹாக்கிங்க் போட்டியில். தென் கொரியாவில் இருக்கும் ஒரு கணிணி பாதுகாப்பு நிறுவனம் ஒரு ஹாக்கிங்க் போட்டி அறிவித்து இருந்தது. இணையத்தில் இணைக்கப் பட்டு இருக்கும் அந்நிறுவனத்தினுடைய ஒரு கணிணிக்குள் நுழைந்து அதில் ஒரு தகவலை பதிப்பதே அப்போட்டியின் குறிக்கோள். ஆனால் அந்த கணிணி மிகுந்த பாதுகாப்பான ஒரு அமைப்புக்குள் இருந்து இணைக்கப் பட்டு இருந்தது. நித்தின், சக்தி உட்பட அப்போட்டியில் கலந்து கொண்டோரில் சிலரும் அதனை கண்ட பிறகு அப்போட்டி ஒரு கண் துடைப்பு என்று அறிந்தனர். வெறுப்படைந்த நித்தினும் சக்தியும் சேர்ந்து அந்நிறுவனம் போட்டியில் கலந்து கொண்டோரின் பட்டியலை சேமித்து வைத்து இருந்த கணிணிக்குள் நுழைந்து தங்களின் பெயர்களை முதலாக வந்ததாக மாற்றி பதித்து அது பற்றி மற்ற போட்டியாளருக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஒரு அறிக்கை விட்டனர். இதனால் kill9 (நித்தின்) மற்றும் m0rla (சக்தி) என்ற பெயரால் அவர்களை அறிந்த ஹாக்கர் உலகத்தில் மிக பிரபலம் அடைந்தனர். மூன்றாம் வருட கடைசியில் இருவரும் சேர்ந்து ஒரு பாட் நெட் (Bot Net) அமைக்க திட்ட மிட்டனர். பாட் நெட் என்பது ஒரு வைரஸ் மூலம் உடமையாளருக்கு தெரியாமல், ஏவி விட்டவரின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் கணிணிகளின் குழுமம் (group or network). ஆக்கிரமிக்கப் பட்ட கணிணிகளில் இருக்கும் தகவல்களை சேகரிக்கவும், அந்த கணிணிகளில் இருந்து ஈமெயில் அல்லது சாட் மூலம் தகவல் அனுப்பவும், குறிப்பிட்ட வலை தளங்களை தாக்கவும் பாட்நெட்கள் பயன் படுத்த படுகின்றன. சில சமயம் பாட்நெட்டை உருவாக்கியவர்கள் (அதாவது அதன் வைரஸை ஏவி விட்டவர்கள்) அதில் உட்பட்ட கணிணிகளை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் வேறு ஒரு கணிணியில் புகுத்தப் பட்ட ஒரு சர்வர் (வழங்கி) எனப்படும் ஒரு மென்பொருள் மூலம் தொடர்பு கொள்வார்கள். பாட்நெட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அவைகள் இருப்பதை வெளியுலகம் அறிவது இல்லை. அதில் உட்பட்ட கணிணிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஹாக்கர்கள் (hackers) மத்தியில் ஒரு பாட்நெட் பிரபலம் அடைகிறது. உண்மையில் ஸ்டார்ம் வர்ம் (storm worm) எனப்படும் வைரஸால் கைப்பற்றப் படும் கணிணிகளை கொண்டு ஸ்டார்ம் பாட் நெட் (Storm Bot Net) என்ற பெயரில் அழைக்கப் படும் ஒரு பாட் நெட் பல சட்ட விரோத செயல்களில் இன்று வரை ஈடு பட்டு வருகிறது. அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ (FBI) அந்த பாட் நெட்டை கைப் பற்றும் முயற்சியில் இதுவரை வெற்றி காணவில்லை. மற்ற பாட் நெட்களை போல் அடிமையாக்கப் பட்ட கணிணிகளில் இருக்கும் தகவல்களை திருட நித்தினுக்கும் சக்திக்கும் விருப்பம் இல்லை.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாறாக, அந்த பாட் நெட்டை அதில் உட்பட்ட கணிகளின் மூலம் ஸ்பாம் (spam) எனப்படும் விளம்பர ஈமெயில்கள் அனுப்பவதற்கு மட்டும் பயன் படுத்த முடிவெடுத்தனர். அவர்கள் திட்ட மிட்ட பாட் நெட்டை உருவாக்க தேவையான வைரஸ் (அதுவும் ஒரு மென்பொருள்தான்) எழுதும் போது ஆங்கிலத்தில் ப்ரேக் த்ரூ (break through) என்று அழைப்பது போல அவர்களின் ஒரு சிறிய, ஆனால் மிக நுட்பமான கண்டுபிடிப்பால் அவர்கள் எழுதிய வைரஸ் பொதுவான பாட் நெட் உருவாக்கும் வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்ததாய் அமைந்தது. அதன் மூலம் இணையத்தில் எந்த விதமான தகவல் பறிமாற்றமும் செய்ய முடிந்தது. அந்த வைரஸ் பாதித்த கணிணியில் இருந்து அந்த கணிணியின் உரிமையாளர் உபயோகித்தது போல் எந்த காரியமும் செய்யலாம். உதாரணமாக, அந்த வைரஸ் பாதிக்கப் பட்ட கணிணி மூலம் அதன் உரிமையாளர் செய்தது போல ரயில் டிக்கட் புக் செய்யவோ, ஒரு வலைதளத்திற்கு சென்று அதில் விற்பனை செய்யப் படும் பொருளை வாங்கவோ முடியும். கணிணித் துறையில் இதை Secured HTTP Protocol communication என்று அழைப்பர். அது மட்டும் அல்ல. அந்த வைரஸ் மூலம் அதை மற்ற கணிணிகளுக்கு பரவ வைக்கவும் முடியும். வைரஸ் எழுதி முடித்து இணையத்தில் பரவ விட்ட ஆறு மாதங்களில் அவர்களது பாட் நெட்டில் உலகில் பல மூலைகளில் இருந்த ஐம்பதாயிரம் கணிணிகளுக்கு மேல் சேர்ந்து இருந்தன. தங்களது பாட் நெட் அந்த அளவுக்கு வந்த பிறகே அதன் மூலம் பணம் சம்பாதிப்பதைப் பற்றி திட்டமிட்டனர். ஹாக்கர்கள் மத்தியில் தங்கள் பாட் நெட் இருப்பதை அறிவித்து, ஈமெயில் அனுப்புவதை தவிர தங்களின் வைரஸ் மூலம் செய்யக் கூடிய மற்றவைகளை பற்றி பறைசாற்றிக் கொண்டனர். இருப்பினும் பெரிய அளவில் விளம்பர ஈமெயில் அனுப்புவதை மட்டுமே அவர்களது பாட் நெட் மூலம் அமுல் படுத்த இருப்பதாக அறிவித்தனர். தேவை இருப்பவர்கள் அவர்களை தொடர்பு கொள்ள மாங்க்ஸ (monks) என்ற பெயரில் ஒரு ஜீமெயில் (GMAIL) ஐடியும் தொடங்கினர். அதிலிருந்து அவர்களது பாட் நெட் மாங்க்ஸ் பாட் நெட் (Monks Bot Net) என்ற பெயரில் பிரபலமானது. இதற்கிடையே இருவரும் பி.டெக் முடித்து ஒரே மென்பொருள் நிறுவனத்தில் அதன் பெங்களூர் மையத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில அவர்களது மாங்க்ஸ் பாட் நெட் (Monks Bot Net) மிகப் பிரபலமானது. அதில் உட்பட்ட கணிணிகள் தினமும் பல லட்ச விளம்பர ஈமெயில்களை அனுப்பிய படி இருந்தன. அமெரிக்காவில் இருக்கும் ஒரு வங்கியில் தங்களது நண்பன் ஒருவன் மூலம் சேமிப்பு கணக்கு (savings account) ஒன்று தொடங்கினர். வாடிக்கையாளரிடம் தங்களது பாட் நெட் மூலம் பலருக்கும் விளம்பர ஈமெயில் அனுப்புவதற்கான அவர்கள் வசூலித்த கட்டணத்தை அந்த சேமிப்பு கணக்கில் இட (deposit செய்ய) பணித்தனர். பிறகு அதில் இருந்து இன்டர்நெட் பாங்கிங்க் (Internet Banking) மூலம் பணத்தை மற்றவர் பேரில் தொடங்கி இருந்த இந்திய வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தி (transfer செய்து) அவைகளில் இருந்து அந்த பணத்தை உபயோகித்தனர். இருவரும் அவரவர் வேலைகளிலும் நல்ல பெயர் வாங்கினர். இரண்டு வருடம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு வருட காலம் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் பணி புரிய ஆன்-சைட் அசைன்மெண்டில் (on-site assignment) அனுப்பப் பட்டனர். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி வியாழன் காலை வேளையில் நியூ யார்க் நகரை அடைந்த இருவரும், முதல் வேலையாக இருவரும் சேர்ந்து தங்க ஒரு அப்பார்ட்மென்டை வாடகைக்கு எடுத்தனர். அடுத்து வரும் திங்கள் வரை அவர்களுக்கு ஓய்வு நேரம் இருந்தது. அடுத்த நாள் தங்களது பாட் நெட்டை பராமரிக்க தேவையான கணிணிகளை தயார் செய்ய முடிவெடுத்தனர். அந்த கணிணின் பாகங்களை தனி தனியே வாங்கி அவற்றை எல்லாம் இணைத்து ஆற்றல் மிகு இரு கணிணிகளை உருவாக்கினர்(assemble செய்தனர்). அன்றே அடுத்த வேலையாக இரு வெவ்வேறு கம்பெனிகளிடம் இருந்து இரு ப்ராட்பேண்ட் இணைப்புகளுக்கு விண்ணப்பம் கொடுத்து அன்று மாலையே அந்த இணைப்புகள் வந்ததை கண்டு வியந்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
First Meeting with Joshua Edwards Saturday, May 3, 2008 8:30 PM ஜாஷ்வா எட்வர்ட்ஸுடன் முதல் சந்திப்பு 2008 மே 3 சனிக்கிழமை இரவு 8:30 அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்த மூன்றே நாட்களில் அவர்களுக்கு தேவையானவை எல்லாவற்றையும் அமைத்து விட்ட திருப்தியில் திளைத்தனர். அன்று, மே மூன்றாம் தேதி சனியன்று இருவரும் வெளியில் இரவு உணவை முடித்து திரும்பும் போது அவர்களது அப்பார்ட்மென்ட் வாசலில் பார்பதற்கு டென்ஸில் வாஷிங்க்டனைப் போன்ற ஒரு ஆப்ரிக்கன்-அமெரிக்க இளைஞன் நின்று கொண்டு இருந்தான். இவர்கள் அவனை நெருங்கியதும், அவசரமாக அவன் அவர்களை அணுகி பதட்டமான முகத்துடன், "kill9 and m0rla? I have something very urgent to tell you. Please open the door to your appartment. (கில்9, மோர்லா? உங்களிடம் அவசரமாக நான் ஒன்று கூற வேண்டும். சீக்கிரம் உங்கள் வீட்டு கதவை திறவுங்கள்) என்றான். முதலில் தங்களது ஹாக்கர் உலக சங்கேத பெயரில் அவன் அவர்களை அழைத்ததை கண்டு பிரமித்து நின்றனர். சக்திவேல் முதலில் சுதாரித்துக் கொண்டு சிறிது கடினமான முகத்துடன், "என்ன சொல்றே? உனக்கு யார் வேணும்?" என்று வினவ, எதிரில் இருந்தவன், "எனக்கு உங்க ரெண்டு பேரைப் பத்தி ரொம்ப நல்லா தெரியும். இப்ப பேசிட்டு இருக்க நேரம் இல்லை. உடனே கதவை திற" என்றதும் சக்திவேல் கதவை திறந்தான். இவர்களுக்கு முன் வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் நேராக அவர்கள் புதிதாக உருவாக்கி இணையத்தில் இணைத்து இருந்த கணிணிகளின் இணைப்பை பிடுங்கி எறிந்தான். நித்தின் சக்திவேல் இருவரும் அவன் செயலை பார்த்து பெரும் கோபத்துடன் நின்று இருக்க அந்த ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞன் தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி அவர்களிடம் , "ஹாய், நான் ஜாஷ்வா எட்வர்ட்ஸ், ஹார்ஷ்7 (harsh7) என்னோட ஜீமெயில் ஐடி" என்ற படி கை குலுக்க கை நீட்டினான். அந்த ஜீமெயில் ஐடி அவர்கள் இருவரும் மிக நன்றாக அறிந்த ஒன்று. கடந்த ஐந்து வருட காலமாக இந்த ஜீமெயில் ஐடி ஹாக்கர் உலகத்தில் மிக பிரபலமான ஒரு ஐடி. அந்த ஐடியில் இருந்து பல ஹாக்கிங்க் முறைகளும் அல்காரிதங்களும் வெளியிடப் பட்டு இருந்தன. உண்மையில் இருவரும் அந்த ஐடியின் உரிமையாளனுடன் தொடர்பு கொள்ள முயன்று இருந்தனர். ஒரு பதிலும் வராததில் மற்ற ஹாக்கர்களிடம் விசாரிக்க அந்த ஐடியின் உரிமையாளன் வெளி உலகில் எவருடனும் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்று அறிந்தனர். அந்த சங்கேத பெயரைக் கேட்ட சக்திவேல் முதலில், "நீதான் ஹார்ஷ்7 அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்?" ஜாஷ்வா, "நான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். உங்க ரெண்டு பேர் லாப்டாப்புலையும் உங்க பாட் நெட் பத்தி எதுவும் இருக்காதுன்னு நம்பறேன. நெட்டுல கனெக்ட் பண்ணி மெயில் ஓபன் பண்ணி பாருங்க" சட்டென்று நித்தின் தன் லாப்டாப்பை இணையத்தில் இணைத்து ஜீமெயிலை திறக்க அதில் ஹார்ஷ்7இடமிருந்து "ஹாய் கில்9, உங்களுடைய சர்வரின் இணைய முகவரி (Server's IP Address) எளிதில் கண்டு பிடிக்க கூடிய ஒரு நிஜ முகவரியை குறிக்கிறது. உடனே அதன் இணைப்பை துண்டிக்கவும்" என்று ஒரே ஒரு வரி ஈமெயில் வந்து இருந்தது. அதைப் பார்த்து விட்டு நித்தின், "எப்படி எங்க வைரஸ் சர்வர் (வழங்கி மென்பொருள்) இங்க இருக்குன்னு கண்டு பிடிச்சே?" ஜாஷ்வா, "ஒரு இணைய முகவரி (IP Address) இருந்தா அதோட நிஜ முகவரியை கண்டு பிடிக்கறது இங்க இண்டியா மாதிரியோ ஸ்ரீலங்கா மாதிரியோ அவ்வளவு கஷ்டம் இல்லை. அதுவும் நீங்க எடுத்து இருக்கற இண்டர்நெட் கனக்ஷனுக்கு ஃபிக்ஸ்ட் ஐ.பி அட்ரெஸ் (fixed IP Address) கொடுத்து இருக்காங்க. அதுல இருந்து நேரடியா ஃபோன் கம்பெனி காரங்களோட சர்வருக்கு கனெக்ட் ஆகி இருக்கு. நடுவுல ஒரு ப்ராக்ஸி சர்வரோ DHCP சர்வரோ இல்லை. எஃப்.பி.ஐயும் (FBI), என்.எஸ்.ஏ (NSA)வும் போற வர்ற எல்லா இண்டர்னெட் மெஸ்ஸேஜையும் மோப்பம் பிடுச்சுட்டு இருப்பாங்க. அதே மாதிரி ஒரு சில பாட் நெட்டை நானும் மோப்பம் பிடிச்சுட்டு இருந்தேன். அதுல உங்களோடதும் ஒண்ணு. நான் எஃப்.பி.ஐ(FBI), என்.எஸ்.ஏ(NSA) பத்தி கவலைப் படலே. ஏன்னா உங்களோடது விளம்பர ஈமெயில் அனுப்பறதை தவிற யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத ஒரு பாட் நெட். ஸைபர் கள்ளச் சந்தையில இருக்கற மத்தவங்களைப் பத்திதான் கவலை பட்டேன். அவங்க கைக்கு உங்க பாட் நெட்டோட கண்ட்ரோல் சிக்குச்சுன்னா அதை வெச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாம். இதுவரைக்கும் உங்க பாட் நெட்டுக்கு நிறைய ஸைபர் தாக்குதல் வந்து இருக்கும். ஆனா இப்படி உங்க நிஜ விலாசம் தெரிஞ்சா நிஜத் தாக்குதல் வரும்"
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சில விளக்கங்கள்: நாம் ஒரு ப்ராட் பாண்ட் இணைப்பை BSNLலிடமிருந்து பெறுகையில் நமது இணைப்பிற்கு என்று ஒரு தனி இணைய விலாசம் கொடுக்கப் படுவது இல்லை. நமது கணிணி நமக்கு அருகே இருக்கும் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் (telephone exchange) இருக்கும் ஒரு கணிணியை தொடர்பு கொள்ளுகிறது. ஒவ்வொரு முறை நாம் இணையத்தில் இணைக்கும் போதும் அந்த கணிணிக்கு என்று ஒதுக்கி வைத்து இருக்கும் விலாசங்களில் அச்சமயம் உபயோகத்தில் இல்லாத ஒரு விலாசத்தை உங்கள் கணிணிக்கு இடுகிறது. அதன் பிறகு உங்களது தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் அந்த விலாசத்தில் இருந்து தொடங்கி இணையத்தில் இருக்கும் மற்ற விலாசங்களுடன் நடக்கின்றன. ஆகவே யாராவது ஒரு தகவல் பரிமாற்றத்தை மோப்பம் பிடித்து (உண்மையில் இச்செயல் ஆங்கிலத்தில் sniffing என்றே அழைக்கப் படுகிறது!) எங்கிருந்து வருகிறது என்று கண்டு பிடிக்க முயன்றால் அவர்களின் தேடல் BSNL எக்ஸ்சேஞ்சில் முடியும். BSNL எக்ஸ்சேஞ்சில் இருக்கும் கணிணியை DHCP சர்வர் (Dynamic Host Configuration Protocol Server) என்று பெயர். ப்ராக்ஸி சர்வர் எனப்படுவதும் ஒரு வித கணிணியே. அதன் வழியாக இணையத்தை தொடர்பு கொண்டால் நமது இணைய விலாசத்தை அது மறைத்து வைக்கும். பல இணைய தளங்களில் இத்தகைய கணிணிகள் இருக்கின்றன நாம் அவை மூலம் இணையத்தை தொடர்பு கொண்டால் நமது இணைய விலாசம் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கப் படும். சக்திவேல் சிரித்த முகத்துடன், "ரொம்ப நன்றி மிஸ்டர் எட்வர்ட்ஸ். நான் உங்களோட அல்காரிதம் நிறைய பாத்து இருக்கேன். ஒரு தடவை உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சேன். பதில் வரலே அதனால அதுக்கு அப்பறம் தொடர்பு கொள்ளவில்லை" ஜாஷ்வா, "நீங்க என்கூட தொடர்பு கொள்ள பாத்தீங்களா? எந்த ஐடில இருந்து மோர்லா(m0rla) விலிருந்தா?" சக்திவேல், "இல்லை, வேற ஒரு ஐடில இருந்து" ஜாஷ்வா, "நானே உங்களை இன்னும் சில நாட்களில் தொடர்பு கொள்ளனும்னு இருந்தேன்" நித்தின், "எதுக்கு? ஏன் எங்க பாட் நெட்டை மோப்பம் பிடுச்சுட்டு இருந்தீங்க மிஸ்டர் எட்வர்ட்ஸ்?" ஜாஷ்வா, "முதல்ல இந்த மிஸ்டர் எட்வர்ட்ஸ் வேண்டாம். நான் உங்களை விட ரெண்டு மூணு வயசுதான் பெரியவனா இருப்பேன். ஜாஷ்வா இல்லைன்னா ஜாஷ்ன்னு கூப்பிடுங்க. சரி, நான் உங்க நிஜப் பெயரை தெரிஞ்சுக்கலாமா?" சக்திவேலும் நித்தினும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஜாஷ்வா, "சோ, நீங்க ரெண்டு பேரும் இண்டியாவா?" என்ற பிறகு சக்திவேலை காண்பித்து "உன்னைப் பாத்து ஒரு வேளை ஸ்ரீலங்காவோன்னு நினைச்சேன்" நித்தின், "ஸ்ரீலங்காவுக்கு ரொம்ப பக்கத்தில! தமிழ் நாடுன்னு ஒரு மாகாணம் அதுல இருந்து வந்து இருக்கான்" ஜாஷ்வா, "ஓ, நீ தமிழ் பேசுவையா?" என்றபடி உடைந்த தமிழில், "நல்லா இருக்கீங்களா?" சக்திவேல், "அமேஸிங்க்! உனக்கு எப்படி் தமிழ் தெரியும்?" ஜாஷ்வா, "ஏன்னா, என் மனைவி தமிழ் பேசுவா. அவ ஸ்ரீலங்கால இருந்து வந்தவ" நித்தின், "வாவ், எப்படி? அவங்க இங்க வந்தாங்களா? இல்லை நீ அங்க போனப்ப பழக்கமா?" ஜாஷ்வா, "அவ இங்க வந்தா" சக்திவேல், "சரி, இப்ப சொல்லு எதுக்கு எங்க பாட் நெட்டை மோப்பம் பிடிச்சே" ஜாஷ்வா, "அது எந்த தாக்குதலுக்கும் விழாம ஓடிட்டு இருக்கான்னு பாக்கத்தான். ரியலி இம்ப்ரெஸிவ்! அருமையான வேலை செஞ்சு இருக்கீங்க" சக்திவேல், "உன் பாராட்டுக்கு நன்றி. ஆனா அது மட்டும் தான் காரணம்ன்னு எனக்கு தோணலை. ப்ளீஸ் உண்மையை சொல்லு" நித்தின், "நீயே எங்களுடன் தொடர்பு கொள்ளனும்னு இருந்தேன்னு சொன்னியே. அது எதுக்கு? அதுவும் எங்களை பாராட்டவா?" ஜாஷ்வா, "நீங்க ரெண்டு பேரும் நான் நினைச்சதை விட புத்தி சாலிங்க. சொல்றேன். வெளியில எதாவுது ஒரு பப்புக்கு (pub) போய் உக்காந்து பேசலாமா?" அடுத்து அவர்களது உரையாடல் பப்பில் தொடர்ந்தது. ஜாஷ்வா, "உங்க பாட் நெட்டில இருந்து உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருது?" நித்தின், "லுக் ஜாஷ்வா, எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்களில் நாட்டம் இல்லை. சோ, வேற எதைப் பத்தியாவுது பேசு" சக்திவேல், "இரு நித்தின், அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு முடிவு பண்ணலாம்" நித்தின், "என்ன சொல்லப் போறான்? பாட் நெட்டுல இருக்கற க்ரெடிட் கார்ட் விபரங்களை ஒரு சர்வருக்கு அனுப்பிச்சா ஒரு கார்டுக்கு பத்து டாலர் அப்படீம்பான். இது நமக்கு ஏற்கனவே வந்த ஆஃபர் தானே?" ஜாஷ்வா, "நீ என்னை ரொம்பவும் கம்மியா எடை போட்டு இருக்கே. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்பறம் சொல்லு" சக்திவேல், "சரி, ஜாஷ்வா. சொல்லு" ஜாஷ்வா, "உங்களுக்கு கொலம்பியன் ட்ரக் கார்டல் (Columbian Drug Cartel) அப்படின்னா என்னன்னு தெரியுமா?" நித்தின், "கொலம்பியன் ட்ரக் லார்ட்ஸ் (Columbian Drug Lords) அப்படின்னு ஒரு டாம் க்ளான்ஸி (Tom Clancy) எழுதின புக்ல படிச்சு இருக்கேன். அவங்களை தானே சொல்றே?" ஜாஷ்வா, "அவங்க தான். நீ அந்த புக்ல படிச்சதும் ஓரளவு உண்மைதான். அப்படி பட்ட போதைப் பொருள் முதலாளிகள் நிறைய பேர் இருந்தாங்க. ஸீ.ஐ.ஏ (CIA)வும் அமெரிக்க ராணுவமும் கொலம்பியன் போலீஸ்கூட சேர்ந்து நிறைய ட்ரக் தயாரிக்கறவங்களை தீத்து கட்டிட்டாங்க. இப்ப அரசாங்கம் மாறினதுக்கு பிறகு மிச்சம் இருக்கறவங்க க்ரூப் க்ரூப்பா சேந்து கோக்கேயின் (Cocaine) உற்பத்தி செஞ்சு வினியோகம் செய்யறாங்க. கொலம்பியாவுக்கு உள்ள யாரும் அவங்களை அசைச்சுக்க முடியாது" சக்திவேல், "சரி, அவங்களுக்கு என்ன இப்ப?" ஜாஷ்வா, "சொல்றேன். ஒரு காலத்துல அந்த கொலம்பியன் ட்ரக் லார்ட்ஸ் (Columbian Drug Lords - போதைப் பொருள் முதலாளிகள்) கொலம்பியாவில் கோக்கேயின் உற்பத்தி செஞ்சு அமெரிக்காவில இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் வந்து வாங்கிட்டு போற வாடிக்கையாளர்களுக்கு வித்துட்டு இருந்தாங்க. அப்படி அங்க இருந்து வாங்கிட்டு வர்றவங்களை இறக்குமதியாளர்கள்ன்னு சொல்லுவாங்க. அங்க இருந்து வாங்கிட்டு வர்றவங்க அதை கடத்திட்டு அமெரிக்காவுக்குள்ள கொண்டு வந்து இங்க இருக்கற மொத்த விலையில் விற்கும் வினியோகஸ்தர்களுக்கு விப்பாங்க. வினியோகிஸ்தர்கள் தெருவில் விற்கும் டீலர்களுக்கு விப்பாங்க. டீலர்கள் கோக்கேயின் உபயோகிக்கறவங்களுக்கு விப்பாங்க. இப்படித்தான் ரொம்ப வருஷமா கோக்கேயின் வியாபாரம் நடந்துட்டு இருந்தது. ஒவ்வொருத்தரும் வாங்கின விலைக்கு மேல லாபம் வெச்சு அடுத்தவங்களுக்கு விப்பாங்க. இந்த ட்ரக் கார்டல் வந்தப்பறம் இறக்குமதியாளர்களை முழுக்க நீக்கிட்டாங்க. அவங்களே அமெரிக்காவுக்குள்ள கொண்டு வந்து வினியோகஸ்தர்களுக்கு விக்க ஆரம்பிச்சாங்க"நித்தின், "அந்த ஊர்ல இருந்து அவங்க ஏன் அப்படி ரிஸ்க் எடுத்துக்கணும்?" ஜாஷ்வா, "ஏன்னா அங்க வாங்கி இங்க வினியோகஸ்தர்களுக்கு விக்கறவங்கதான் அதிக பட்சம் லாபம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்க" சக்திவேல், "எவ்வளவு லாபம்?" ஜாஷ்வா, "கோக்கேயின் உற்பத்தி செய்யறவங்க கார்டல்காரங்களுக்கு ஒரு கிலோ இருநூற்று ஐம்பது டாலருக்கு (USD 250) விக்கறாங்க. அதை கார்டல்காரங்க இறக்குமதியாளர்களுக்கு ஆயிரத்து பத்து (USD 1,010) டாலருக்கு வித்துட்டு இருந்தாங்க.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆனா வினியோகஸ்தர்கள் அவங்க கிட்ட இருந்து வாங்கற விலை என்ன தெரியுமா? கிலோ பதினைந்து ஆயிரம் (USD 15,000) டாலர்! வினியோகஸ்தர்கள், அவங்களுக்கு ரிஸ்க் கம்மி, அவங்க டீலர்களுக்கு இருபத்து ஒரு ஆயிரத்துக்கு (USD 21,000) விக்கறாங்க. கஸ்டமர்கள் தெருவில கோக்கேயின் வாங்கற விலை கிலோவுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்துக்கு (USD 1,07,000) . டீலர்களுக்கு இடையேயும் நிறைய கை மாறி கஸ்டமர்கள் கைக்கு போகுது. இந்த சங்கிலியில பாத்தா இறக்குமதியாளர்கள் வாங்கின விலையை விட பதினைந்து (15) மடங்கு விலை வெச்சு விக்கறாங்க. அதனால அவங்க பண்ணற வேலையை கார்டல்காரங்களே பண்ணினா அவங்க லாபம் இன்னும் அதிகரிக்கும்ன்னு முடிவெடுத்து இறக்குமதியாளர்களை ஒழிச்சு கட்டிட்டாங்க" நித்தின், "ஒரு வருஷத்துக்கு எத்தனை கிலோ அமெரிக்காவுக்கு கடத்திட்டு வர்றாங்க?" ஜாஷ்வா, "என்னோட தகவல் படி சுமார் எட்டு லட்சம் கிலோ (8,00,000 Kg) அமெரிக்காவுக்கு உள்ள வருது. நியூ யார்க்கில இருக்கற வினியோகஸ்தர் வாங்கறது சுமார் அறுபத்து ஆறாயிரம் கிலோ (66,000 Kg). அவன் கொடுக்கற பணம் சுமார் ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலர். இப்ப அதுல மட்டும் நம்ம கவனம் செலுத்தலாம்" சக்திவேல், "இதெல்லாம் எதுக்கு சொல்றே. புரியலை" ஜாஷ்வா, "வெயிட் வெயிட் சொல்றேன் ..
பொறுமையா கேளு. அந்த கார்டல்காரங்க ஒரு கிலோ கோக்கேயினை விக்கற விலை பதினைந்து ஆயிரம் டாலர். பணத்தை கேஷா மட்டும்தான் வாங்கிப்பாங்க. பதினைந்து ஆயிரம் டாலரோட எடை என்ன தெரியுமா? சுமார் நூற்றி ஐம்பது கிராம். அதுவும் புது நோட்டா இருந்தா!!. ஆனா இவங்க புழங்கறது பழைய நோட்டுதான். பழைய நோட்டுன்னா இன்னும் ஏறக்குறைய ரெண்டு மடங்கு வெயிட் அதிகமாகும். சோ அவங்க ஒரு கிலோ கோக்கேயினை உள்ள கடத்திட்டு வந்தா குறைஞ்சது கால் கிலோ பணத்தை வெளியே கடத்திட்டு போக வேண்டி இருக்கு. நியூ யார்க்குக்கு ஒரு வருஷத்தில அஞ்சு அல்லது ஆறு லோட் கோக்கெயின் கொண்டு வந்து விக்கறாங்க. ஒவ்வொரு லோடும் பத்தாயிரம் கிலோவில் இருந்து பதினஞ்சு ஆயிரம் கிலோ வரைக்கும் இருக்கும். ஒரு லோட் கோக்கெயின் வித்தா வர்ற பணத்தோட எடை மூவாயிரம் கிலோவுக்கும் அதிகம்!"நித்தின், "ஏன் எதாவுது பாங்க் மூலம் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதா?" ஜாஷ்வா, "பண்ணறாங்க ஆனா இப்ப எல்லாம் டீ.ஈ.ஏ (DEA என்பது Drug Enforcement Administration என்ற அமெரிக்க அரசாங்கத்தின் போதைப் போருள் தடுப்பு படை) பணப் பரிமாற்றத்தையும் ரொம்ப க்ளோஸா கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் கொலம்பியாவுக்கு ஏற்றுமதி ஆகும் அமெரிக்க பொருள்கள் கூட பணத்தையும் பாக் பண்ணி அனுப்பறாங்க. வழில அடிக்கடி பிடி படறாங்க" சக்திவேல் முகத்தில் ஒரு பிரகாசத்துடன் கவனித்து கொண்டிருந்தான். நித்தின், "சரி, இதெல்லாம் நமக்கு எதுக்கு?" ஜாஷ்வா, "நீயே கேட்டியே பாங்க் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதான்னு? அவங்க மாட்டிக்காத மாதிரி நம்ம மூணு பேரும் ஒண்ணு சேந்தா பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். அதுக்கு நாம் அவங்க கிட்ட ஒரு சதவிகிதம் (percent) கமிஷனா வசூலிக்கலாம். அவங்க எடுத்துட்டு போற பத்து பில்லியன் டாலரையும் நம்மால நிச்சயம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியாது. ஆனா ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலரை சுலபமா ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். நமக்கு லாபம் ஒரு கோடி டாலர். நாம் மூணு பேரும் அதை சரி சமமா பகிர்ந்துக்கலாம்." நித்தின், "சாரி ஜாஷ்வா, நாங்க எங்க பாட் நெட்டை சட்ட விரோதமான செயலுக்கு உபயோகிக்கறது இல்லைன்னு முடிவு செஞ்சு இருக்கோம்" ஜாஷ்வா, "சட்ட விரோதமா இருக்கலாம். ஆனா சரியா இல்லையான்னு நீ பாக்கற விதத்தில இருக்கு. உங்க ஊர்ல நீ லஞ்சமே கொடுக்கறது இல்லையா? இல்லை, வ்ருமான வரி கட்டாம இருக்கறது இல்லையா?" சக்திவேல், "இல்லை ஜாஷ்வா, இது திருடனுக்கு துணை போற மாதிரி இல்லையா?" ஜாஷ்வா, "நிச்சயம் இல்லை. நான் பாத்த வரைக்கும் அவங்க வியாபாரிங்க. இதே அமெரிக்கா அவங்களை சட்ட பூர்வமா விக்க அனுமதிச்சா சந்தோஷமா வருமான வரி கட்டி வித்துட்டு போவாங்க. அமெரிக்கா தடுக்க வேண்டியது அவங்க கொண்டு வர்றதை. அவங்க கொண்டு வந்து வித்ததுக்கு அப்பறம் அந்த பணத்தை பாங்கில போட விடலைன்னா அமெரிக்காவுக்குதான் நஷ்டம். ஒரு அமெரிக்க வங்கில போட வேண்டிய பணம் வெளி நாட்டுக்கு போய் சேருது. இங்க அவங்களை போட விட்டா யாரும் அதை அவ்வளவு சீக்கரம் எடுக்க மாட்டாங்க. ஸ்விஸர்லாந்துக்கு அப்பறம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி இந்த மாதிரி நாடுகளில் பணம் போடறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு அவங்களுக்கும் தெரியும்" நித்தின், "சரி, நாம் இங்க இருக்கற அவங்களோட அக்கௌண்டில் பணம் போட்டதும் அதை வெளி நாட்டில் இருக்கற ஒர் அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும் அப்படித்தானே? நம்மால எப்படி அப்படி ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். " ஜாஷ்வா, "யெஸ், முடியும். நான் விளக்கமா சொல்றேன்" சக்திவேல், "வெயிட். அவங்களா பண்ணிக்கறதுக்கு பதிலா நாம் பண்ணினா அதையும் டீ.ஈ.ஏ (DEA) பிடிப்பாங்கதானே?" ஜாஷ்வா, "அவங்க டெபாசிட் பண்ணற அக்கௌண்டில் இருந்து நேரடியா கொலம்பியாவில் இருக்கற ஒரு அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா நிச்சயம் பிடிப்பாங்க. ஆனா, அவங்க போட்ட பணத்தை இங்க இருக்கற ஒரு கம்பெனிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி அந்த கம்பெனி அதை கொலம்பியாவில் இருக்கும் அவங்க அக்கௌண்டுக்கு டரான்ஸ்ஃபர் பண்ணினா ஒரு சந்தேகமும் வராது. அதிக பணப் புழக்கம் இருக்கற அடிக்கடி வெளி நாடுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணற ஒரு கம்பெனியோட அக்கௌண்டில இந்த ட்ரான்ஸ்ஃபர் நடந்துச்சுன்னா. நிச்சயம் பிடிக்கவே போறது இல்லை. அதுவும் கொலம்பியாவில் இருக்கற வங்கிக்கே பணம் போய் சேரணும்னு அவங்க எதிர் பார்க்கறது இல்லை. ப்ரேசில், ஆர்ஜெண்டினா, வேனிஸுவேலா இந்த மாதிரி ஒரு நாட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா போதும்" நித்தின், "அவங்களே அந்த மாதிரி கம்பெனிகளை அணுகலாம் இல்லையா?" ஜாஷ்வா, "ஒரு கம்பெனியும் சட்ட பூர்வமா அதை பண்ண ஒத்துக்க மாட்டாங்க" சக்திவேல், "நாம் எப்படி பண்ண முடியும்?" ஜாஷ்வா, "அந்த கம்பெனிக்கு தெரியாமல்" நித்தின், சக்தி இருவரும் வாயடைத்துப் போய் அவனை சில கணங்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஜாஷ்வா, "உங்க ரெண்டு பேரோட முகத்தையும் பாத்தா உங்களுக்கு அது சரி இல்லைன்னு படுது. இல்லையா?" சக்திவேல், "நான் முதல்லயே சொன்னேனே ஜாஷ்வா. மத்தவங்களுக்கு எந்த கெடுதலும் நாங்க பண்ண விரும்பலை"
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜாஷ்வா, "சரி, இதை சொல்லுங்க ரெண்டு பேரும். நீங்க இந்த வைரஸ் அப்பறம் பாட் நெட் விஷயத்தில் எதுக்கு புகுந்தீங்கன்னு எனக்கு தெரியாது. நான் இதுக்குள்ள வந்ததுக்கு காரணம் யாரை பழி வாங்கணும்னு தெரியாம மனசுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்கற ஒரு வெறி. அந்த வெறினால யாரையாவுது ஏமாத்தும்போது வர்ற ஒரு த்ரில். உங்களுக்கும் நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரணம் இருக்கும். அதே சமயம் நம்மால நல்லவங்க நஷ்டப் படக்கூடாதுன்னு நினைக்கறீங்க இல்லையா? அதனால தானே உங்க பாட் நெட்டை வேற எந்த விதத்திலும் இதுவரைக்கும் உபயோகப் படுத்தலை?" சக்திவேல், "நடுவில் இருக்கற கம்பெனியை ஏமாத்தி அவங்க அக்கௌண்ட் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா அவங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஒத்துக்கறேன். ஆனா, ஒரு வேளை டீ.ஈ.ஏ (DEA) அவங்களை கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவாங்க. மாட்டிக்குவாங்கதானே?" ஜாஷ்வா, "நான் சொல்ல போற ப்ளான்ல யாரும் மாட்ட மாட்டாங்க. ஒவ்வொருத்தரும் மத்தவங்க மேல பழியை போடுவாங்க. யாருக்கும் ஒண்ணும் புரியாது" நித்தின், "சரி உன் ப்ளான் என்னன்னு சொல்லு. அதுக்கு அப்பறம் நாங்க யோசிச்சு முடிவு பண்ணறோம். என்ன சொல்றே சக்தி?" சக்திவேல், "நீ சொல்றது சரி. முழு விவரம் தெரிஞ்சதுக்கு அப்பறம் யோசிச்சு முடிவு பண்ணலாம்" ஜாஷ்வா, "பரவால்லை. இந்த அளவுக்கு உங்களோட நம்பிக்கையை முதல் சந்திப்பிலயே சம்பாதிப்பேன்னு நான் நினைக்கலை. ஏற்கனவே மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. நாளைக்கு என் வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டிட்டு போறேன். அப்ப உங்களுக்கு விளக்கமா சொல்றேன்" சக்திவேல், "உன் மனைவி முன்னால இந்த மாதிரி விஷயத்தைப் பத்தி பேசலாமா?" ஜாஷ்வா, "நாம் அவ முன்னாடி பேசப் போறது இல்லை. அப்படி பேசினாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. என் மனைவிக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் ஜுஜுபி (உண்மையில் அவன் சொன்னது chicken shit!)" அடுத்த நாள் சந்திப்பதாகக் கூறி ஜாஷ்வா அவர்களிடமிருந்து விடை பெற்றான். இருவரும் திரும்ப மௌனமாக வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தனர். ஜாஷ்வா சொன்ன வாக்கியங்களில் ஒன்று இருவர் மனதிலும் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருந்தது.. "யாரை பழி வாங்கணும்னு தெரியாம மனசுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்கற ஒரு வெறி. அந்த வெறினால யாரையாவுது ஏமாத்தும்போது வர்ற ஒரு த்ரில். உங்களுக்கும் நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரணம் இருக்கும்"Shakthivel Muthusamy - An Introduction சக்திவேல் முத்துசாமி -
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Saturday, December 1, 2001 சனிக் கிழமை, டிசம்பர் 1, 2008 "அடுத்த மாணவர் நமது பள்ளிக்கே பெருமை சேர்த்து இருக்கும் ஒரு சர்வதேச பரிசைப் பெற்றவர். சர்வதேச மேதமாடிக்ஸ் ஒலிம்பியாட் (Mathematics Olympiad) எனும் கணிதப் போட்டியில் முதல் பரிசை பெற்ற சக்திவேல் முத்துசாமியை மேடைக்கு அழைக்கிறேன்" கரகோஷத்துக்கு இடையே அந்த உயரமான மாணவன் மேடைக்கு வந்தான். மற்றவர் கைதட்டல்கள் முடிந்த பின்னரும் நடந்து வந்து கொண்டிருந்த மாணவனைப் போன்ற முகத்தோற்றத்துடன் மூன்றாம் வரிசையில் வெள்ளை வேட்டியும் சட்டையுமாக அமர்ந்து இருந்த ஒருவரின் கைகள் ஓயவில்லை. அவரருகே முகத்தில் பெருமிதம் பொங்க அமர்ந்து இருந்த பெண்ணின் முகம் தன் கணவரின் செய்கையில் சற்றே வெட்கமடைந்து சிவந்தது. அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த அறிவிப்பாளர் யாவருக்கும் கேட்கும்படி மைக்கில், "ப்ரொஃபெஸர், சாரை கொஞ்சம் நேரம் கை தட்டாம இருக்க சொல்லுங்க. சக்திக்கு சீக்கிரமா எங்க பாராட்டு பத்திரத்தை கொடுத்திடறோம் அப்பறம் வீட்டுக்கு போய் பாக்கி கைதட்டல் கொடுக்கட்டும்" என்ற பிறகு கல்லூரி கணித ப்ரோஃபெசர் மனோகரி முத்துசாமி தலை குனிந்து அருகில் இருந்த கணவரின் கையை கிள்ளிய பிறகே தன் கைதட்டலை முத்துசாமி நிறுத்தினார். அறிவிப்பாளர் மைக்கில் தொடர்ந்து, "சக்திவேலை தெரியாதவர் இந்த பள்ளியில் இல்லை. இருப்பினும் வெளியில் இருந்து வந்திருப்போருக்காகவும் மற்ற மாணவர்களின் பெற்றோருக்காகவும் அவனைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இப்போது பதினோறாம் வகுப்பில் இருக்கும் சக்திவேல் படிப்பில் முதல் வகுப்பில் இருந்து முதல் இடத்தில் இருந்து இருக்கிறான். அதுமட்டும் அல்லாது பத்தாம் வகுப்பு வரை பல விளையாட்டுக்களிலும் முதல் இடத்தை பிடித்து இருந்தான். பதினோறாம் வகுப்புக்கு வந்த பிறகே தன் விளையாட்டிற்கு நேரம் செலவிடுவதை குறைத்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு இந்த பாராட்டு பத்திரத்தை கொடுக்குமாறு நமது பள்ளி முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" பாராட்டு பத்திரத்தைப் பெற்று திரும்பிய சக்திவேலின் நெற்றியில் முத்தமிட்ட முத்துசாமி அவனை ஆரத்தழுவினார். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இரவு கணவன் மனைவி இருவரும் படுக்கைக்கு போகு முன்னர் அன்று மாலை நடந்த விழாவை திரும்ப அசை போட்டுக் கொண்டு இருந்தனர். "ஐ.ஐ.டி என்டரன்ஸ் எக்ஸாம்லயும் அவன் இந்த மாதிரி நல்லா பண்ணணும்மா" "நிச்சயம் பண்ணுவான்" "எனக்கு இன்னைக்கு எவ்வளவு பெருமையா இருந்துது தெரியுமா?" "ம்ம் ..." படுக்கை அறைக்குள் நுழைந்த மனோகரி ஒன்றும் பேசாமல் அங்கு இருந்த அலமாரி அருகே சென்று தன் கூந்தலில் இருந்த ஹேர் பின்களை நீக்கியபடி தலையை வாரத் தொடங்கினாள். அவள் அருகே சென்று நின்றவர் அவள் முகத்தை ஏந்தி, "என்ன மேடத்துக்கு என்னவோ கோவம் போல இருக்கு?" "ம்ம்ம் ... ஒண்ணும் இல்லை. மேதமாடிக்ஸ் ஒலிம்பியாட்ல ப்ரைஸ் வாங்கின பையனை இவ்வளவு பாராட்டறவருகிட்ட இருந்து அவனை கோச் பண்ணின எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லைன்னு நினைச்சேன்" "ஏய், பெத்த பையன் கிட்ட பொறாமை படற ஒரே அம்மா நீதான்" "பொறாமை என் பையன் மேல இல்லை. ரெண்டு வாரமா வெளியூர் போயிட்டு வந்த நிமிஷத்துல இருந்து பையன் புராணமா இருந்தா கோவம் வராதாக்கும்?" "சாரி, சாரிம்மா. " என்றபடி அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டார். முப்பத்து ஒன்பது வயதிலும் கட்டுக் குலையாத அவளது அழகு அவரது கைகளுக்குள் மெழுகாக உருகத் தொடங்கியது.. தூரத்து உறவான மனோகரியை ஒரு திருமணத்தில் பார்த்த முத்துசாமி அக்கணமே அவள்தான் தன் வாழ்க்கை துணைவி என்று முடிவெடுத்தார். அவளிடம் தன் காதலை தெரிவித்தார். பி.எஸ்ஸி. கணிதம் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டு இருந்த மனோகரிக்கு மேல் மேலும் பி.ஹெச்.டி (டாக்டர் பட்டம்) வரை படிக்க வேண்டும் என்ற ஆர்வம். அவள் தான் மேலும் படிக்க வேண்டும் அதுவரை திருமணத்தில் விருப்பமில்லை என்றதற்கு 'நீ படிச்சு முடிக்கற வரைக்கும் காத்திருக்க தயார்' என்று வாக்களித்து இருந்தார். தனது பெற்றோரிடமும் தன் விருப்பத்தைக் கூறி அவர்கள் சம்மதமும் பெற்றார். வசதி குறைந்த அவளது தந்தை ஊரில் இருந்த பெரியவர் ஒருவரிடம் கடன் பட்டு இருந்தார். அந்த பெரிய மனிதர் கடனுக்கு பதிலாக மகளை சகல கெட்ட பழக்கங்களும் கொண்ட தன் மகனுக்கு தாரமாக கேட்டார். வேறு வழியின்றி ஒப்புதல் அளித்திருந்த தந்தையின் வார்த்தைக்கு கட்டுப் பட்டாலும் அவரிடம் மன்றாடி முத்துசாமியின் தந்தையை பார்க்க சொன்னாள். அவர் முத்துசாமியின் பெற்றோரை சென்று பார்க்க முத்துசாமி மனோகரிக்கு வரதட்சிணை கொடுத்து (அவள் தந்தையின் கடனை அடைத்து) மணம் புரிந்தார். திருமணமானாலும் அவளது பி.எஸ்ஸி முடியும் வரை காத்து இருந்து உறவு கொண்டார். அந்த முதலிரவு வரை மணவாழ்க்கையை முழுவதும் அறியாமல் இருந்த மனோகரி அந்நாளில் இருந்து தன் கணவனின் அன்பைத் தவிர காமத்திற்கும் அடிமையானாள். மற்ற மாணவ மாணவியர் மத்தியில் தான் திருமணமானவள் என்று பெருமையுடன் காட்டிக் கொண்டு தொடர்ந்து எம்.எஸ்ஸி கணிதத்தில் சேர்ந்தாள். எம்.எஸ்ஸி கடைசி வருடம் பரிட்சைக்கு போகும் போது அவள் நிறைமாத கர்ப்பிணி. முத்துசாமி ஈரோட்டை சுற்றி சிறிய அளவில் விசைத்தறி (Power loom) வைத்து தொழில் செய்து கொண்டு இருந்த பலரிடம் கொள்முதல் செய்த துணியை நியாயமான அளவு லாபம் வைத்து ஏற்றுமதி செய்து வந்தார். சிறிய அளவில் தொடங்கி இருந்த அந்த டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் (textile export) வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி இருந்தது. விவசாய நிலத்தை விற்று தொழிலில் முதலீடு செய்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெண்களுக்கு கடைசி முப்பதுகளிலும் ஆண்களுக்கு நாற்பதுகளிலும் காமம் ஒரு புது அனுபவம். அதை முழுவதுமாக அனுபவித்த இன்பக் களைப்பில் திளைத்த இருவரும் வாய் திறக்காமல் படுத்து இருந்தனர். அவர் தோளில் தலை வைத்து படுத்து இருந்த மனோகரி முகத்தை உயர்த்தி, "போன வேலை என்னாச்சு?" "ஓ, நல்ல படியா முடிஞ்சுது. இந்த கன்ஸைன்மென்ட் நான் நினைச்சதுக்கும் பெருசா இருக்கு. அந்த பையர் (BUYER) கிட்ட இருந்து பணத்தை சீக்கரம் வசூல பண்ணனும். இல்லைன்னா டேஞ்சர்"onday, December 17, 2001 6:30 PM திங்கள், டிசம்பர் 17, 2001 மாலை 6:30 சக்திவேல் படித்துக் கொண்டு இருந்த போது அவன் தந்தை வெகு நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்ததை கவனித்தான். அவர் பேசியதில் இருந்து ஒரு பெரிய வாக்கு வாதம் என்று அவனுக்கு தோன்றியது. பேசி முடித்து சில நிமிடங்களுக்கு பிறகு அவனது அறைக்கு முத்துசாமி வந்தார். அவன் படித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, "படிச்சுட்டு இருக்கியா? சரி, நான் அப்பறம் வர்றேன்" என்ற வாறு திரும்பி செல்ல எத்தனித்தார். அதற்குள் சக்திவேல், "என்ன சொல்லுங்கப்பா. நான் சும்மா ரிவைஸ்தான் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை" என்ற பிறகு அவனது கட்டிலுக்கு வந்து அமர்ந்தார். "உனக்கு இந்த ஏஸோ (AZO) அப்படின்னா என்னன்னு தெரியுமா?" "வெறும் ஏஸோ அப்படின்னா என்னன்னு தெரியலப்பா. ஆனா ஏஸோ காம்பௌண்ட்ஸ் (Azo Compounds) அப்படின்னா என்னன்னு தெரியும். ஒரு வித கெமிக்கல்ப்பா அது. வெவ்வேற காம்பௌண்ட்ஸ் இருக்கு. அதுல சில காம்பௌண்ட்ஸை மஞ்சள் , ஆரஞ்ச், சிவப்பு மாதிரி கலருக்கு சாயமா உபயோகிக்கலாம். நம்ம ஊர்ல அப்பறம் குமாரபாளயத்தில இருக்கற சாயப் பட்டறைங்களில உபயோகிக்கறாங்கப்பா" "பரவால்லை இவ்வளவு தெரிஞ்சு வெச்சு இருக்கே?" "எனக்கு பாடத்துல வந்துது. அப்பறம் ஸ்கூலுக்கு போற வழியில இருக்கற சாயப் பட்டறைக்கு போய் அவங்க ஆரஞ்ச் கலர் சாயம் வாங்கின பழைய டப்பா ஒண்ணை அவங்க கிட்ட கேட்டு வாங்கி அதுல என்ன எழுதி இருக்குன்னு பாத்தேன். என்ன காம்பௌண்ட் உபயோகிச்சு இருக்காங்கன்னு அதுல போட்டு இருந்துச்சு. அப்பறம் அந்த டப்பாவில அந்த சாயத்தை இன்னர் கார்மெண்ட்ஸுக்கு உபயோகப் படுத்த கூடாதுன்னு போட்டு இருந்துச்சுப்பா" "அப்படியா? " என்று அவர் கேட்டுக் கொண்டு இருந்த போது உள்ளே நுழைந்த மனோகரி, "அட, அவன் பாடத்தைப் பத்தி கேட்டுட்டு இருக்கற மாதிரி இருக்கு?" "ஒண்ணுமில்லைம்மா," என்ற வாறு அவர் அவசரமாக புறப்பட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார். மனோகரி சக்திவேலிடம், "உன் கிட்ட அப்பா என்னடா கேட்டாரு?" "ஏஸோ காம்பௌண்ட்ஸ் (Azo Compounds) அப்படின்னு நான் ஆர்கானிக் கெமிஸ்ட்ரில படிக்கறதை பத்தி எனக்கு தெரியுமான்னு கேட்டாரரும்மா" என்றவன் தொடர்ந்து தன் தந்தையிடம் சொன்ன விளக்கங்களை சொன்னான். மனோகரி முகத்தில் குழப்ப ரேகைகள் படர, "அப்படியா?" என்றாள் சக்திவேல், "ஏம்மா அப்பாவோட பிஸினஸ்ல எதாவுது பிரச்சனையாம்மா?" மனோகரி, "எனக்கு தெரிஞ்சு ஒண்ணும் இல்லைடா கண்ணா. ஏன் கேக்கறே?" "இன்னைக்கு ரொம்ப நேரம் ஃபோன்ல பேசிட்டு இருந்தாரும்மா. எனக்கு அவரு யார் கூடவோ சண்டை போட்டுட்டு இருந்த மாதிரி தோணுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு எங்கிட்ட வந்து ஏஸோ (Azo) அப்படீன்னா என்னன்னு தெரியுமான்னு கேட்டார்" அருகில் வந்து அவன் உச்சி முகர்ந்து தலையை வருடியாவாறு "ஒரு பிரச்சனையும் இருக்காது. நீ உன் படிப்பில கவனமா இரு" என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள். அன்று இரவு படுக்கையில் மனோகரி, "என்னங்க எதாவுது பிரச்சனையா?" முத்துசாமி, "இல்லைம்மா. எதுக்கு கேக்கறே?" "நீங்க சக்திகிட்ட எதோ கெமிகலைப் பத்தி கேட்டீங்களாமா?" "ம்ம்ம் ... அவனுக்கு தெரிஞ்சு இருக்கற அளவு எனக்கு தெரியலை" "ஆமா! அவனுக்கு பரிட்சைக்கு படிக்கற பாடம். உங்களுக்கு என்ன தலை விதியா அதை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு" "படிச்சதோட இல்லம்மா. பக்கத்துல இருக்கற சாயப் பட்டறைக்கு போய் அவங்க கிட்ட ஒரு காலி டப்பா வாங்கி அதுல என்ன போட்டு இருக்காங்கன்னும் பாத்து இருக்கான்" என்றபடி அதில் போட்டு இருந்த எச்சரிக்கையை பற்றி சொன்னார். "நம்ம கன்ஸைன்மெண்ட் எதுலயாவுது உபயோகிச்சு இருக்கமா?" "எதுலயாவுது இல்லை. எல்லாத்துலையும் உபயோகிச்சு இருக்கோம். அதான் அவசரமா ஆஃபீஸுக்கு போய் அங்க இருந்த லாப் ரிப்போர்ட்டை எல்லாம் பாத்துட்டு வந்தேன். ஆனா கவலை படறதுக்கு ஒண்ணும் இல்லை. நாம பெட்ஷீட் மாதிரி துணியைதான எக்ஸ்போர்ட் பண்ணறோம்? அந்த சாயத்தை உபயோகிச்சு திருப்பூர்காரங்க மாதிரி இன்னர் கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட் பண்ணி இருந்தாதான் பிரச்சனை" "அப்பறம் ஏன் சாங்காலம் ஃபோன்ல அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்களாமா?" "அனுப்பின கன்ஸைன்மென்ட் இன்னும் கஸ்டம்ஸ் க்ளியர் ஆகாம இருக்கு. இன்னும் பையர் (BUYER) கைக்கு போய் சேருல. அதை நாம் அனுப்பின க்ளியரிங்க் அண்ட் ஃபார்வர்டிங்க் (Clearing and Forwarding) ஏஜண்டு கிட்ட ஏண்டா க்ளியர் ஆகுலேன்னு கேட்டா மண்டையை சொறியறான். அதான் புடிச்சு திட்டிட்டு இருந்தேன்" "இந்த கன்ஸைன்மென்ட் எவ்வளவு மதிப்பு?" "அது இருக்கும். பத்து கோடிக்கு பக்கம். நாம் கொள்முதல் செஞ்சதே ஆறு ஏழு கோடிக்கு மேல ஆச்சு" "எதாவுது பிரச்சனையின்னா நாம் கொள்முதல் பண்ணினதை திருப்பி எடுத்துக்கு வாங்க இல்லை?" "அங்க இருந்து கை காசு போட்டு திருப்பி கொண்டு வந்து கொடுத்தா திருப்பி எடுத்துக்குவாங்க. ஆனா அங்க இருந்து திருப்பி எடுத்துட்டு வர்றதுக்கு எக்கச் சக்கமா செலவாகும். அதுக்கு திருப்பி எடுத்துட்டு வராமயே விட்டறலாம்" "அப்ப போட்ட பணம்?" "கோவிந்தோ, கோவிந்தா!" "என்ன இப்படி சாதாரணமா சொல்லறீங்க?" "இந்த தொழில் அப்படித்தாம்மா" "அப்பறம் எப்படி சமாளிப்பீங்க?" "இந்த கன்ஸைன்மென்ட்டுக்கு அப்படி ஆச்சுன்னா சமாளிக்க ஒரு வழியும் இல்லை. சப்ளையருங்களுக்கு ஏற்கனவே பாதி பணத்துக்கு மேல கொடுத்தாச்சு. ஆனா கவலை படாதே. ஒரு பிரச்சனையும் வராது" என்று அவளுக்கு ஆறுதலளித்தார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Wednesday, December 19, 2001 9:30 PM புதன், டிசம்பர் 19, 2001 இரவு 9:30 சக்திவேல் மாலையிலிருந்து படித்துக் கொண்டு இருந்தான். அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அவன் எழுவதற்கு முன் மனோகரி, "இருப்பா நான் பாக்கறேன்" என்றவாறு அடுத்த அறையில் இருந்த தொலைபேசியை எடுக்க சென்றாள். தொலைபேசியை எடுத்தவள் எதிர்முனையில் பேசிய அவர்களது கொடவுன் வாட்ச்மேனிடம், "சொல்லுங்க சிங்காரம் .. என்ன இந்த நேரத்துல. அய்யா வீட்டுக்கு இன்னும் வரலே" அடுத்த சில நிமிடங்கள் மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்தவள் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள். தங்கை சாந்தி அதை பார்த்து அலற அவனும் சென்று தாயை வாரி எடுத்து மடியில் போட்டு தங்கையிடம் தண்ணீர் கொடுக்கும் படி பணித்து தொங்கிக் கொண்டு இருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து காதில் பொருத்தினான். "மேனேஜர் அய்யாவுக்கும் ஃபோன் பண்ணி இருக்கேனுங்கம்மா. அவுரு இது போலீஸ் கேசு போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னாருங்க. " என்று தழுதழுத்த குரலில் அவர்கள் கோடவுன் வாட்ச்மேன் சிங்காரம் சொல்லி முடித்தான். பதைபதைத்த மனத்துடன் சக்திவேல் தன் தங்கை கொண்டு வந்த தண்ணீரை மனோகரியின் முகத்தில் தெளிக்க நினைவுக்கு வந்தவள் "உங்க அப்பா நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டாருடா" என்றவாறு அருகில் இருந்த மகன் மகள் இருவரையும் கட்டிக் கொண்டு கதறினாள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Saturday, December 22, 2001 சனிக்கிழமை, டிசம்பர் 22, 2001 மூன்றாம் நாள் பவானி சங்கமத்தில் தன் தந்தையின் அஸ்தியை கரைத்த பின் பூஜை முடிந்து தாய் தங்கையுடன் அமர்ந்து இருந்த போது முத்துசாமியின் நண்பரும் எக்ஸ்போர்ட் விவரங்களில் ஆலோசகருமான ரத்தினவேல் வந்தார். "இப்படி பண்ணிக்குவான்னு தெரியாம போச்சும்மா. அன்னைக்கு சாயங்காலம் ஆஃபீஸுக்கு வந்தான். இப்படி கன்ஸைன்மென்ட் ஜெர்மன் கஸ்டம்ஸ்ல (German Customs) இருந்து ரிலீஸ் ஆகாம இருக்குன்னு சொன்னான். சரக்கை வாங்கற பையர் (Buyer) ஒரு கண்டிஷனும் போடலைன்னாலும் கவர்மென்ட் அந்த சரக்கு சரி இல்லைன்னு உளளே எடுத்துட்டு போக விடாம பிடிச்சு வெச்சு இருக்காங்க. மூணு மாசத்துக்கு முன்னாடி ஜெர்மன் அரசாங்கம் ஏஸோ டைஸ் (Azo Dyes) உபயோகிக்க கூடாதுன்னு German Ordinance on Consumer Products என்கிற பேர்ல ஒரு சட்டம் கொண்டு வந்து இருக்கு. அவங்க நாட்டில இருக்கற பையர்ஸே இன்னும் அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருக்காங்க. இந்த மூணு மாசத்தில இப்படி நிறைய பேருக்கு ஆயிருக்கு. சாயங்காலம் ஆஃபீஸ்ல இதைப் பத்தி பேசப் பேச மனசொடிஞ்சு போயிட்டான். வீட்டுக்கு போ மேற்கொண்டு என்ன பண்ணறதுன்னு பாக்கலாம்னு சொல்லி அனுப்பிச்சேன். ஆனா மேற்கொண்டு ஒண்ணும் பண்ண முடியாதுன்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும்" தன் தந்தைக்கு நடந்தவை, அவர் பிரிவினால் அவர்கள் மூவரின் மனத்தில் ஏற்பட்ட காயம், பார்க்க இன்னும் இளம்பெண் போலிருக்கும் தாய் பொட்டில்லாமல் வெள்ளைப் புடவையில் இருக்கும் காட்சி இவை அனைத்தினால் சக்திவேலின் மனதில் ஒரு இனம் புரியாத, அடங்காத வெறி கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருந்தது. பின் குறிப்பு: உண்மையில் 1994ல் ஜெர்மனி நாடு அமுலுக்கு கொண்டு வந்த German Ordinance on Consumer Products சட்டத்தினால் ஏஸோ டை (Azo Dye) என்கிற சாயம் உபயோகித்தனால் பல ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப் பட்டன. பிறகு 2002ல் ஐரோப்பிய யூனியன் (Europian Union) ஒரு சட்டம் கொண்டு வந்து எது போன்ற பொருட்களுக்கு அந்த சட்டம் என்று விளக்கியது. இந்த கதையில் தேதிகளை மாற்றிக் கூறி இருக்கிறேன்.Saturday, December 21, 2002 till Saturday, January 4, 2003 சனி, டிசம்பர் 21, 2002 முதல் சனி, ஜனவரி 4, 2003 வரை கடந்த ஒரு வருடத்தை மனதில் அசை போட்ட படி சேரன் எக்ஸ்பிரஸ்ஸில் மேல் பர்த் ஒன்றில் அமர்ந்து ஈரோட் ரயில் நிலையத்தை அடைய காத்து இருந்தான். அவன் தந்தையின் கனவை நினைவாக்க ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் (IIT Entrance Exam) நூற்றுப் பதினாறாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தான். கம்ப்யூடர் சைன்ஸஸ் பிரிவில் சேர்ந்தான். அவன் கணித அறிவு எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது. உடன் இரண்டு வருடங்களாக மூட்டை கட்டி வைத்து இருந்த விளையாட்டுகளில் மறுபடி நுழைந்து கல்லூரியின் கால் பந்து (Football) மற்றும் கூடைப் பந்து (Basket Ball) அணிகளில் தேர்ந்து எடுக்கப் பட்டு இருந்தான். இரவில் பல மணி நேரங்களை தன் தாய் அவனுக்கு ஆசையாக அமெரிக்காவில் இருந்த தன் தோழி மூலம் வாங்கி கொடுத்த லாப்டாப்பிலும் இணையத்திலும் செலவிடத் தொடங்கி இருந்தான். அன்று அவனது தந்தையின் வருடாந்திரம். முந்தைய தினம் செமஸ்டர் கடைசி தேர்வை முடித்தபின் ரயில் ஏறி இருந்தான்.
•
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
(14-02-2019, 06:55 PM)johnypowas Wrote: Wednesday, December 19, 2001 9:30 PM புதன், டிசம்பர் 19, 2001 இரவு 9:30 சக்திவேல் மாலையிலிருந்து படித்துக் கொண்டு இருந்தான். அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அவன் எழுவதற்கு முன் மனோகரி, "இருப்பா நான் பாக்கறேன்" என்றவாறு அடுத்த அறையில் இருந்த தொலைபேசியை எடுக்க சென்றாள். தொலைபேசியை எடுத்தவள் எதிர்முனையில் பேசிய அவர்களது கொடவுன் வாட்ச்மேனிடம், "சொல்லுங்க சிங்காரம் .. என்ன இந்த நேரத்துல. அய்யா வீட்டுக்கு இன்னும் வரலே" அடுத்த சில நிமிடங்கள் மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்தவள் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள். தங்கை சாந்தி அதை பார்த்து அலற அவனும் சென்று தாயை வாரி எடுத்து மடியில் போட்டு தங்கையிடம் தண்ணீர் கொடுக்கும் படி பணித்து தொங்கிக் கொண்டு இருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து காதில் பொருத்தினான். "மேனேஜர் அய்யாவுக்கும் ஃபோன் பண்ணி இருக்கேனுங்கம்மா. அவுரு இது போலீஸ் கேசு போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னாருங்க. " என்று தழுதழுத்த குரலில் அவர்கள் கோடவுன் வாட்ச்மேன் சிங்காரம் சொல்லி முடித்தான். பதைபதைத்த மனத்துடன் சக்திவேல் தன் தங்கை கொண்டு வந்த தண்ணீரை மனோகரியின் முகத்தில் தெளிக்க நினைவுக்கு வந்தவள் "உங்க அப்பா நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டாருடா" என்றவாறு அருகில் இருந்த மகன் மகள் இருவரையும் கட்டிக் கொண்டு கதறினாள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Saturday, December 22, 2001 சனிக்கிழமை, டிசம்பர் 22, 2001 மூன்றாம் நாள் பவானி சங்கமத்தில் தன் தந்தையின் அஸ்தியை கரைத்த பின் பூஜை முடிந்து தாய் தங்கையுடன் அமர்ந்து இருந்த போது முத்துசாமியின் நண்பரும் எக்ஸ்போர்ட் விவரங்களில் ஆலோசகருமான ரத்தினவேல் வந்தார். "இப்படி பண்ணிக்குவான்னு தெரியாம போச்சும்மா. அன்னைக்கு சாயங்காலம் ஆஃபீஸுக்கு வந்தான். இப்படி கன்ஸைன்மென்ட் ஜெர்மன் கஸ்டம்ஸ்ல (German Customs) இருந்து ரிலீஸ் ஆகாம இருக்குன்னு சொன்னான். சரக்கை வாங்கற பையர் (Buyer) ஒரு கண்டிஷனும் போடலைன்னாலும் கவர்மென்ட் அந்த சரக்கு சரி இல்லைன்னு உளளே எடுத்துட்டு போக விடாம பிடிச்சு வெச்சு இருக்காங்க. மூணு மாசத்துக்கு முன்னாடி ஜெர்மன் அரசாங்கம் ஏஸோ டைஸ் (Azo Dyes) உபயோகிக்க கூடாதுன்னு German Ordinance on Consumer Products என்கிற பேர்ல ஒரு சட்டம் கொண்டு வந்து இருக்கு. அவங்க நாட்டில இருக்கற பையர்ஸே இன்னும் அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருக்காங்க. இந்த மூணு மாசத்தில இப்படி நிறைய பேருக்கு ஆயிருக்கு. சாயங்காலம் ஆஃபீஸ்ல இதைப் பத்தி பேசப் பேச மனசொடிஞ்சு போயிட்டான். வீட்டுக்கு போ மேற்கொண்டு என்ன பண்ணறதுன்னு பாக்கலாம்னு சொல்லி அனுப்பிச்சேன். ஆனா மேற்கொண்டு ஒண்ணும் பண்ண முடியாதுன்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியும்" தன் தந்தைக்கு நடந்தவை, அவர் பிரிவினால் அவர்கள் மூவரின் மனத்தில் ஏற்பட்ட காயம், பார்க்க இன்னும் இளம்பெண் போலிருக்கும் தாய் பொட்டில்லாமல் வெள்ளைப் புடவையில் இருக்கும் காட்சி இவை அனைத்தினால் சக்திவேலின் மனதில் ஒரு இனம் புரியாத, அடங்காத வெறி கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருந்தது. பின் குறிப்பு: உண்மையில் 1994ல் ஜெர்மனி நாடு அமுலுக்கு கொண்டு வந்த German Ordinance on Consumer Products சட்டத்தினால் ஏஸோ டை (Azo Dye) என்கிற சாயம் உபயோகித்தனால் பல ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப் பட்டன. பிறகு 2002ல் ஐரோப்பிய யூனியன் (Europian Union) ஒரு சட்டம் கொண்டு வந்து எது போன்ற பொருட்களுக்கு அந்த சட்டம் என்று விளக்கியது. இந்த கதையில் தேதிகளை மாற்றிக் கூறி இருக்கிறேன்.Saturday, December 21, 2002 till Saturday, January 4, 2003 சனி, டிசம்பர் 21, 2002 முதல் சனி, ஜனவரி 4, 2003 வரை கடந்த ஒரு வருடத்தை மனதில் அசை போட்ட படி சேரன் எக்ஸ்பிரஸ்ஸில் மேல் பர்த் ஒன்றில் அமர்ந்து ஈரோட் ரயில் நிலையத்தை அடைய காத்து இருந்தான். அவன் தந்தையின் கனவை நினைவாக்க ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் (IIT Entrance Exam) நூற்றுப் பதினாறாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தான். கம்ப்யூடர் சைன்ஸஸ் பிரிவில் சேர்ந்தான். அவன் கணித அறிவு எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது. உடன் இரண்டு வருடங்களாக மூட்டை கட்டி வைத்து இருந்த விளையாட்டுகளில் மறுபடி நுழைந்து கல்லூரியின் கால் பந்து (Football) மற்றும் கூடைப் பந்து (Basket Ball) அணிகளில் தேர்ந்து எடுக்கப் பட்டு இருந்தான். இரவில் பல மணி நேரங்களை தன் தாய் அவனுக்கு ஆசையாக அமெரிக்காவில் இருந்த தன் தோழி மூலம் வாங்கி கொடுத்த லாப்டாப்பிலும் இணையத்திலும் செலவிடத் தொடங்கி இருந்தான். அன்று அவனது தந்தையின் வருடாந்திரம். முந்தைய தினம் செமஸ்டர் கடைசி தேர்வை முடித்தபின் ரயில் ஏறி இருந்தான்.
ஜானி பவாஷ் நண்பா
வணக்கம்
சூப்பர் கதை நண்பா
சக்திவேல் மனோகரி ஷாந்தி கதாபாத்திரங்கள் எல்லாம் சூப்பர் நண்பா
மனோகரி என்ற பெயரை கேட்டதும் எனக்கு சின்ன வயதில் எங்க தெரு வில் வாசித்த மனோ அம்மா என்ற ஒரு சூப்பர் ஆண்ட்டி நியாபகம் வந்து விட்டது நண்பா
அவங்க பெயரும் மனோகரி தான்
ஆனால் அவங்களை எல்லாம் மனோஹரம்மா என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்
காரணம் அவங்க மகன் பெயர் மனோகர்
ஆண்ட்டி பார்க்க ஆச்சு அசல் அப்படியே பழைய டிவி சீரியல் நடிகை ரேணுகா மாதிரி இருப்பாங்க
எல்லா கே பாலசந்தர் நாடகங்களிலும் திரை படங்களிலும் வருபவர் தான் ரேணுகா
ரேணுகா அயன் படத்தில் சூர்யாவின் அம்மாவாக செம ஹாட்டாக நடித்து இருப்பார்கள்
அவர்களை மாதிரி தான் மனோஹரம்மா இருப்பார்கள்
கிரிக்கெட் விளையாடும் போது பந்து அவர்கள் வீட்டில் விழுந்து அதை எடுக்க சென்ற எனக்கு மனோஹரம்மாவின் பந்துக்களோடு விளையாட சந்தர்ப்பம் கிடைத்த நினைவுகள் எனக்கு நியாபகத்துக்கு வந்து விட்டது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி
•
|