Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பன்றி ஆண்டில் யார் பிறந்தார்?
சியங் கய்-ஷெக்-லிருந்து (தைவானுக்கு தப்பிச் சென்ற முன்னாள் சீனத் தலைவர்) ஹில்லரி கிளின்டன், ஜெர்மன் எழுத்தாளர் தாமஸ் மன், எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற பலரும் இந்தாண்டில் பிறந்துள்ளனர்.
அதற்காக இவர்கள் எல்லாம் ஒரே ஆண்டில் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம் கிடையாது. பன்றி ஆண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். உதாரணமாக 2007, 1995, 1983 ஆகியவை பன்றி ஆண்டுகள் ஆகும்.
அதிகமானோர் பயணம் செய்யும் காலம்
[Image: _105463305_cny4.jpg]படத்தின் காப்புரிமைCGTN NEWS
இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின்போது 12 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள். சீன புத்தாண்டு இதனை விடவும் எண்ணிக்கை அளவில் மிகவும் பெரியதாகும்.
இந்த காலத்தின்போது கோடிக்கணக்கானவர்கள் பயணம் செய்வார்கள். பெரும்பாலானவர்கள் பெரும் நகரங்களில் படிப்பதால் அல்லது வேலை பார்ப்பதால், அவர்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை பார்க்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதால் கடும் போக்குவரத்து தேவைகள் நிலவும். பல சீனர்களுக்கு குடும்பத்துடன் ஒன்றாக சேரும் வாய்ப்பு இது மட்டுமாகவே இருக்கும்.
இந்த நெரிசலுக்கு சீனா எப்படி ஈடு கொடுக்கிறது?
சீன ரயில் சேவையின்படி, இந்தாண்டு புத்தாண்டு காலத்தில் 413 மில்லியன் முறை பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.3 சதவீதம் அதிகம்.
இதற்காக ரயில் கொள்ளளவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளனர். 17 பெட்டி கொண்ட அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தி புதிய பெய்ஜிங்-ஷாங்காய் சேவையினை மேம்படுத்தி உள்ளனர்.
[Image: _105463307_cny2.jpg]படத்தின் காப்புரிமைCGTN NEWS
அந்நாட்டின் ஏர் சீனா நிறுவனம், 423 விமானங்களை இயக்க இருக்கிறது. இது 2018ஆம் ஆண்டைவிட 4.4 சதவீதம் அதிகம்.
மொத்தத்தில், 73 மில்லியன் மக்கள் வீடு செல்ல உள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இது 12 சதவீதம் அதிகமாகும்.
பணம் இருப்பவர்கள் அனைவரும் பறக்கலாமா?
கூடாது என்கிறார்கள் அதிகாரிகள். விமர்சகர்கள் ஆரவெல்லியன் சமூக கடன் அமைப்பு என்று கூறும் முறையை அதிகாரிகள் சோதித்து பார்க்கிறார்கள். தேவையில்லாமல் விமானங்கள் மற்றும் தொடர்வண்டிகளில் செல்வோரை சீன புத்தாண்டு அன்று தடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
சீன உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு, 6.15 மில்லியன் சீன மக்களை விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்க தடை செய்தது.
விமானத்தில் தவறாக நடந்து கொண்டவர்கள், தொடர்வண்டிகளில் புகைப்படித்தவர்கள், பொருளாதார ரீதியாக தவறு செய்தவர்கள் ஆகியோர் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்க கடந்த ஆண்டு மே 1 முதல் தடைவிதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சின்னத்தம்பி யானை, கார்களுக்கு நடுவே சேதம் ஏற்படுத்தாமல் செல்லும் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
[Image: IMG-20190205-WA0027_00294.jpg]
கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை விளைநிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இடமாற்றம் செய்த சில நாள்களிலேயே, சின்னத்தம்பி தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, சின்னத்தம்பி அலைந்து வருகிறது. இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனைக்கட்டி பழங்குடிகள், தடாகம் பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து சின்னத்தம்பி பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, 'சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை' என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.


[Image: IMG-20190205-WA0134_00285.jpg]
இது ஒருபுறம் இருக்க, சின்னத்தம்பி தன்னைப் பிடிக்க வந்த கும்கி கலீமுடன் விளையாடிவருகிறான். சின்னத்தம்பியைப் பார்க்க, பல்வேறு இடங்களில் இருந்து மனிதர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கோவையில் இருப்பதைவிடச் சற்று பயத்துடன் காணப்பட்டாலும், சின்னத்தம்பி அமைதியாக, ஆரவாரமின்றி இருக்கிறான். இந்நிலையில், அங்கு இரண்டு கார்களுக்கு நடுவே எந்த சேதமும் இல்லாமல் சின்னத்தம்பி நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Like Reply
4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்! எந்தெந்த வங்கியில் தெரியுமா?

hdfc atm : வங்கிக்கணக்கில் இருந்து 4 முறை இலவச பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன, நம்முடைய பணத்தை போடவோ, எடுக்கவோ கூட பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பணத்தை வங்கிகள் எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கியில் 4 முறை இலவசமாக பணம் எடுக்கவோ, டெபாசிட்டோ செய்யலாம். வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளைகளில் 2 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்யலாம், எடுக்கலாம். அதற்கு மேல் போனால் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த கட்டண வசூல் அனைத்து வகையான கணக்குகளுக்கும் பொருந்தும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. கணக்குகளில் பணத்தை சராசரி இருப்பாக தொடர்ச்சியாக வைத்துள்ளவர்களுக்கு விதி விலக்காக 6 வது முறையில் இருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகை கொண்ட சேமிப்பு கணக்குகள், மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் டெபாசிட் செய்யலாம்.
ஆச்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரை மாதத்துக்கு முதல் 4 ரொக்கப் பரிவர்த்தனைகள் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 அல்லது ரூ.150ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும். மற்றவரின் கணக்குக்கு பணம் அனுப்புவதற்கான உச்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூ.50,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Like Reply
[Image: _105497339_afp.jpg]படத்தின் காப்புரிமைAFP
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மொத்தமுள்ள 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து, 220 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று (புதன்கிழமை) வெலிங்டன் மைதானத்தில் நடந்தது.
ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடந்தது. இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி துவங்கியது.
[Image: _105496978_rohit1.jpg]படத்தின் காப்புரிமைHAGEN HOPKINS
இந்திய அணியை பொருத்தவரையில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா இந்திய அணியை நடத்தினார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனிக்கும் மீண்டும் இடம் கிடைத்தது.
நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டிம் சீஃபர்ட் களமிறங்கினார். கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். இந்திய அணியில் இன்றைய போட்டியில் ரிஷப் பந்த், தோனி, தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்களுமே விளையாடினர்
Like Reply
சென்னை: சென்னையில் கூவம் நதிக்கு அடியில் போடப்பட்டு இருக்கும் மெட்ரோ ரயில் பாதையை வரும் 10ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்.
சென்னையில் மெட்ரோவிற்காக போடப்பட்ட முதற்கட்ட திட்டப்பணிகள் எல்லாம் நிறைவுக்கு வந்துள்ளது. ஆம், முதல்முறையாக சென்னையில் எந்தெந்த வழி தடங்களில் எல்லாம் மெட்ரோ அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டதோ, அது முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது.
வரும் 10ம் தேதி சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடங்கப்பட இருக்கிறது. சென்னையில் இருக்கும் மற்ற மெட்ரோ சேவையை விட இது கொஞ்சம் வித்தியாசமானது.


[Image: hyderabadmetro3-1549534117.jpg]

மொத்தமாக முடிந்தது
சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை முதலில் மெட்ரோ போடப்பட்டது. அதன்பின் சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட்டது. இது மொத்தம் 35 கிமீ ஆகும். மேலேயும், சாலைக்கு கீழேயும் இந்த மெட்ரோ அமைக்கப்பட்டு இருக்கிறது.

[Image: metro334-1549534145.jpg]
  
[color][size][font]
புதிய பாதை
தற்போது புதிதாக சென்னை அண்ணாசாலை அருகே இருக்கும் டி.எம்.எஸ் முதல் வண்ணாரபேட்டை இடையே புதிய வழித்தட சேவை அமைக்கப்பட்டு இருக்கிறது. 10 கிமீ தூரத்திற்கு இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்பாட்டு அனுமதியை சில நாட்களுக்கு முன்புதான் ரயில்வே நிர்வாகம் அளித்தது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]

[Image: metro-chennai-07-1473249241-15-150807344...534189.jpg]
[/font][/size][/color]
  
[color][size][font]
என்ன சிறப்பு
இந்த மெட்ரோ சேவை கூவம் நதிக்கு அடியில் இயக்கப்பட உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை முதல் சென்ட்ரல் வரை கூவம் அடியில் ரயில் செல்லும். முதல்முறை சென்னையில் கூவம் நதிக்கு கீழ் இந்த ரயில் செல்கிறது. இதனால் இந்த வழித்தடம் இப்போதே வைரலாகி உள்ளது.

[Image: modi0234-1549534206.jpg]
[/font][/size][/color]
  
[color][size][font]

பிரதமர் மோடி
இந்த சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 10ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் வரும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த சேவையை திறந்து வைக்க உள்ளார். பொதுவாக தமிழகத்தில் மெட்ரோ சேவைகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் தொடங்கி வைத்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[/font][/size][/color]
Like Reply
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதத்தில் வைத்த மூன்று அதிசயங்கள் 

[Image: 4977348121228296744436342334107321405276160njpgjpg]வைகோ

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை திகைப்பூட்டும் வகையில் 40 நிமிடம் வைகோ வாதம் செய்தார். அவர் சொன்ன 3 அதிசயங்களை நீதிபதிகள் ஆர்வத்துடன் கவனித்தனர். 
பரபரப்பாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோவுக்கு 40 நிமிடம் வாதாட நேரம் ஒதுக்குவதாக நாரிமன் தெரிவித்தார், இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த
Like Reply
இந்த வழக்கில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நாற்பது நிமிடங்கள் எனக்கு வாதாட வாய்ப்புத் தரவேண்டும் என்று வைகோ கேட்டபோது, நீதிபதி நாரிமன் ஏற்றுக்கொண்டார். அதன்படி இன்று பகல் 12 மணி முதல் 12.40 வரை வைகோ நீண்ட வாதத்தை வைத்தார் அது பின்வருமாறு:
வைகோ: கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் வன்முறைக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில் பலமுறை அறவழியில் போராடி கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
ஸ்டெர்லைட் வழக்கறிஞர் நண்பர் அரிமா சுந்தரம் அவர்கள், அரசியலுக்காக நடைபெற்ற போராட்டம் என்றும், 2 இலட்சம் பேரை திரட்டுகிறவர்களால் மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றிபெற முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நான் அரசியல்வாதி. நீதிபதிகளிடம் கேட்கிறேன், அரசியலில் இருப்பது பாவமா? மீண்டும் கேட்கிறேன், அது பாவச் செயலா? அல்லது குற்றச் செயலா?
நீதிபதி நாரிமன்:  இல்லை.
வைகோ: என்னிடம் நிறைய ஆவணங்கள் இருப்பதாலும், நேரம் குறைவாக இருப்பதாலும் நான் பதட்டமாக இருக்கிறேன்.
நீதிபதி நாரிமன்: நீங்கள் எங்களை அல்லவா பதட்டப்பட வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? (நீதிமன்றத்தில் சிரிப்பு)
வைகோ: எடுத்த எடுப்பில் மே 22 துப்பாக்கிச் சூட்டைப் பற்றிக் கூற விரும்புகிறேன். 2018 பிப்ரவரி 12-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி வட்டார மக்கள் உண்ணாவிரத அறப்போர் தொடங்கினர். இந்தப் போராட்டம் நூறு நாட்கள் அமைதியாக நடைபெற்றது. நூறாவது நாளான மே 22 இல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மக்கள் திரண்டு போய் கோரிக்கை மனு கொடுப்பது என்று அறிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. குறிப்பிட்ட நாளில் தாய்மார்கள், மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என ஒரு இலட்சம் பேர் திரண்டு அமைதியாக முழக்கம் எழுப்பியவாறு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுக்கச் சென்றனர்.
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை தூத்துக்குடியைவிட்டு வெளியேறி கோயில்பட்டி நகரத்துக்குப் போகச்சொல்லிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய கிராமம் உள்ளடக்கிய நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதிதான் தூத்துக்குடியாகும்.
22-ம் தேதி நடைபெற்ற கோரப் படுகொலையான துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை கண்டறியும் குழுவினை மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் அமைத்தார். அந்தக் குழுவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், நீதிபதி கோட்கே பாட்டீல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான தேவசகாயம், கிறிஸ்துதாஸ் காந்தி, ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகளான ஜேக்கப் குன்னோஸ், கமல்குமார், ஸ்ரீகுமார், தடயவியல் நிபுணர் டாக்டர் சேவியர் செல்வா சுரேஷ், வழக்கறிஞர் மாயா சர்வாலா, தடயவியல் அறிஞர் டாக்டர் மதிகரன், சட்ட நிபுணர் டாக்டர் உஷா இராமநாதன், சமூகவியலாளரும் வழக்கறிஞருமான டாக்டர் கல்பனா கண்ணபிரான் ஆகியோர் உள்ளடங்கியதாக இருந்தது.
அந்தக்குழு தூத்துக்குடிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள், அதில் பலியாகி உயிரிழந்தோர், காயப்பட்டோர் வீடுகள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து ஆய்வு செய்து, சாட்சியங்களைப் பதிவு செய்து 2400 பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.
உண்மை கண்டறிந்த குழு குறிப்பிடும் அதிர்ச்சி தரத்தக்க உண்மை என்னவென்றால், அறப்போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே காவல்துறையினர் அங்கிருந்த வாகனங்களுக்கு அவர்களே தீ வைத்தனர். இனி எதிர்காலத்தில் எவரும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கக் கூடாது என்று அச்சுறுத்தி மிரட்டுவதற்காக முன்கூட்டி திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதுதான் இந்தக் கோரப் படுகொலையாகும்.
சுனோலின் என்கின்ற பள்ளி மாணவியின் வாய் வழியாகப் பாய்ந்தத் துப்பாக்கிக் குண்டு, தலையைச் சிதறடித்ததில் மாணவி துடி துடித்து மாண்டாள். அதே போல ஒரு மீனவ சகோதரி திரேஸ்புரம் என்ற இடத்தில் குழந்தைகளுக்கு உணவு கொண்டுபோன போது பத்தடி தூரத்திலிருந்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு மூளை சிதறி மண்ணில் விழுந்தார். நடைபெற்ற படுகொலை மிகவும் கொடூரமானது ஆகும்.
இந்த நீதிமன்றத்தில் நீரி ஆய்வு மையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. 1998-ல் புகழ்பெற்ற நீரி நிறுவனத்தின் தலைவர் - தலைசிறந்த சுற்றுச் சூழல் விஞ்ஞானி புருஷோத்தம் கண்ணா அவர்கள் ஸ்டெர்லைட்டைப் பார்வையிட்டுவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி லிபரான், நீதிபதி பத்மநாபன் அமர்வில் சாட்சிக் கூண்டில் ஏறி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை நாசமாக்குகிறது. இந்த ஆலை நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றார்.
வெளிநாடுகளில் உயர்ந்த ஊதியத்தில் அவரைப் பணியாற்ற அழைத்தபோதும் இந்தியாவை விட்டு வெளியேற மறுத்த அந்த நிபுணருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. காரணங்களை நான் சொல்ல விரும்பவில்லை. அடுத்த ஆண்டில் 1999-ல் அதே நீரி ஆய்வுக் குழு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அறிக்கை தந்தது. 2005-ம், 2011-ம் நீரி நிறுவனம் முரண்பட்ட அறிக்கைகளைத் தந்தது.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், தூத்துக்குடி மாநகர், சுற்றுவட்டார மக்கள் நலனைக் காக்கவும் சுயநலமின்றி சமரசத்திற்கு இடமின்றி போராடி வருகிறேன். அதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற அன்றைய தலைமை நீதிபதி லிபரான் அவர்கள் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது “வைகோ அவர்களே உங்கள் நேர்மைக்கும், நாணயத்துக்கும் எவரும் நற்சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. அனைவரும் அறிவார்கள்” என்று பாராட்டிய தகுதியைப் பெற்றேன்.
நீதிபதி நாரிமன்: எங்களுக்கும் தெரியும். அறிவோம்.
வைகோ: ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் அமைந்துள்ள புகைக் குழாய் (சிம்னி) எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என 1986-ல் மத்திய அரசு வரையரை செய்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகள் வகுத்துள்ள விதிமுறையை விவரிக்கிறேன். இதன்படி ஸ்டெர்லைட் ஆலை ஒரு நாளைக்கு 391 டன் பயன்படுத்த 60 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
நீதிபதி அவர்களே இது சம்பந்தமாக சுற்றுச் சூழல் நிபுணர்கள் பலரிடம் கேட்டறிந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தாமிர ஆலைகளை புகை போக்கி உயரங்களின் பட்டியலை இதோ தருகிறேன்.
அனைத்து இடங்களிலும் 100, 105, 150 மீட்டர் உயரம் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை தற்போது ஒரு நாளைக்கு 1200 டன் பயன்படுத்துகிறது. அதன்படி சிம்னியின் உயரம் 91.5 மீட்டராக இருக்க வேண்டும். இப்படி உயரத்தை அதிகப்படுத்தாததால், அதில் வெளியாகும் நச்சுப் புகை மக்கள் உயிருக்கும், உடல்நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இங்கே வாதாடிய ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம் மிகத் தந்திரமாக அங்கு ஸ்டெர்லைட்டின் பல புகைக் குழாய்கள் உள்ளன என்று சொன்னார். அவை சல்பூரிக் அமிலம், பாஸ்பேரிக் அமிலம் தயாராகும் இடத்தில் உள்ள புகைக் குழாய்கள் ஆகும். தாமிரம் உற்பத்தி செய்யும் இடத்தில் ஒரே ஒரு புகைக் குழாய்தான் இருக்கிறது.
பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த நீதிபதி தருண் அகர்வால் குழு விசாரணையில் நான் ஸ்டெர்லைட் தரப்பைப் பார்த்து சவால் விட்டேன். சுற்றுச் சூழல் நிபுணர் எவரை வேண்டுமானாலும் இந்தக் குழு ஸ்டெர்லைட்டுக்கு அனுப்பட்டும். ஒரே ஒரு புகைக் குழாய்தான் இருக்கிறது என்ற உண்மையைச் சொல்வார்கள். இந்த புகைக் குழாயிலிருந்து வெளியேறுகிற நச்சுப் புகையில் என்னென்ன உலோகங்கள் எந்த அளவில் உள்ளன என்பதை வேதாந்தா குழுமத்தின் இணையதளத்திலிருந்தே எடுத்திருக்கிறேன். அதனை இதோ சமர்ப்பிக்கிறேன்.
Like Reply
இதில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆர்சனிக், கார்டுமியம், குரோமியம், நிக்கல் ஆகியவை கலந்துள்ளன. தங்கமும் வெள்ளியும் கலந்திருக்கிறது. அதை மட்டும் பணத்துக்காக பிரித்து எடுத்து விடுவார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிற தாமிர அடர்த்தி மிக மிகத் தரம் குறைந்ததாகும். விலையோ மிகவும் மலிவு. லத்தீன் அமெரிக்க நாடுகளில் தரம் உயர்ந்த தாமிர அடர்த்தி கிடைக்கிறது. ஆனால் விலை அதிகம். அதனால் ஸ்டெர்லைட் ஆலை வாங்காது.
நீதிபதி தருண் அகர்வால் குழு ஸ்டெர்லைட் புகைக் குழாய் குறித்து நான் எடுத்து வைத்த வாதங்களை நான்கு பாராக்களில் குறிப்பிட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளை மீறி ஸ்டெர்லைட் இயங்குகிறது. புகைக் குழாய் உயரத்துக்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதினார்.
புகைக் குழாயை உயர்த்த முடியாது. அதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகும். தாமிர உற்பத்தியையும் குறைக்க மாட்டார்கள். எனவே இத்தனை ஆண்டுகளும் நச்சுப் புகையை வெளியிட்டு மக்களுக்குக் கேடு செய்த குற்றத்துக்காக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.
பசுமை அடர்த்தி (Green Belt)
1994 தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தபோது, ஆலைக்குள் 250 மீட்டர் அகலம் பசுமைச் சுற்று (Green Belt) இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அந்த அகலத்தைக் குறைக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை 1994 ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது.
அலாவுதீன் அற்புத விளக்கு போல் அதிசயம் நேர்ந்தது. ஏழே நாட்களில் 1994 ஆகஸ்டு 18-ம் தேதி 250 மீட்டரை 25 மீட்டராக தமிழக அரசு குறைத்தது. இதன் மர்மம் என்ன?
உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக், நீதிபதி கோகலே அமர்வு 2011 பிப்ரவரியில் ஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய நீரி குழு செல்வதுடன், அதில் என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது. நானும் நீரி குழுவுடன் ஸ்டெர்லைட்டுக்குச் சென்றேன்.
இரண்டாவது அதிசயத்தைக் கண்டேன். ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமை அடர்த்தியே கிடையாது. வெளியிடங்களிலிருந்து மரங்களையும், செடிகளையும் வேரரோடு பெயர்த்துக் கொண்டுவந்து ஸ்டெர்லைட் ஆலைக்குள் மண்ணில் வேர்களைப் புதைத்து காட்சிப் பொருள் ஆக்கினர்.
நீதிபதி நாரிமன்: அப்படியானால் மூன்றாவது அதிசயம் என்ன?
வைகோ: 2013 மார்ச் 23 அதிகாலையில் ஸ்டெர்லைட் ஆலை நச்சுப் புகையால் நடைபாதைகளில் மக்கள் மயங்கி விழுந்தனர். பூக்களின் நிறம் மாறியது. பூச்செடிகள் கருகின. மரங்களில் இலைகளின் நிறம் மாறியது. அந்தப் புகைப்படங்கள் அடங்கிய ஆவணத்தை இதோ நீதிபதிகளிடம் தருகிறேன்.
தூத்துக்குடி மக்கள் கொதித்து எழுந்தனர். நானும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். 2013 ஏப்ரல் 2-ம் தேதி ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆலையை மூடும் தீர்ப்பு வரும் என்று கருதி தமிழக அரசு மார்ச் 30-ம் தேதி ஆலையை மூடியது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆலை இயங்குவதற்கு தீர்ப்பளித்தது.
தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கக்கூடாது என்று தமிழக அரசு முறையீடு செய்தது. நானும் மேல்முறையீடு செய்தேன். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். ஒன்றரை மணி நேரம் நான் வாதங்களை எடுத்து வைத்தேன். ஏப்ரல் 29 ஆம் தேதி தீர்ப்பாயம் கூடியது.
நீதிபதி சொக்கலிங்கம் மிகுந்த வருத்தத்துடன், இந்த வழக்கு டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு திடீரென்று மாற்றப்பட்டுவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். நீதிபதி அவர்களே, நான் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பசுமைத் தீர்ப்பாய தலைமை அமர்வின் தலைவர் தந்த தீர்ப்பில் இதில் சம்பந்தப்பட்டப் பகுதியை வாசிக்கிறேன்.
“தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் வழக்கை விசாரிப்பதிலிருந்து தானாக விலக்கிகொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பிரப்பிரச்சினையில் இதுதான் மூன்றாவது அதிசயம்.
2018 இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தலைவர், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்றபோது, ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிதிமன்ற நீதிபதி எவரையும் அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டார்.
அப்படியானால் நான் கேட்கிறேன், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிப்பார்களா? நீதி தவறுவார்களா? தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உலகப் புகழ்பெற்ற நீதிபதிகள் ஆவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அத்தகைய புகழ் குவித்தவர். அவரால் வார்ப்பிக்கப்பட்ட அவரது ஜூனியர் வழக்கறிஞர் நான்.
இங்கே ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மூடியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கே வீழ்ச்சி என்றும், பல கோடி நட்டம் என்றும் அங்கலாய்த்தனர். பொருளாதாரத்தைவிட, பணப் புழக்கத்தைவிட மனித உயிர்கள் உன்னதமானவை; பாதுகாக்கப்பட வேண்டியவை.
அதனால்தான் இந்திய அரசியல் சட்டத்தை அமைத்தபோது முகப்புரையில் (Preamble) இந்திய நாட்டு மக்களுக்கு நீதியும், சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும் வழங்குவதற்கு இறையாண்மை உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக் குடியரசாக 1948 நவம்பர் 26 ஆம் நாள் இந்திய மக்களுக்கு அரசியல் சட்டத்தை அமைக்கிறோம்.
அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவு மனித உயிர்களுக்கு உத்தரவாதம் தருகிறது. அரசியல் சட்டத்தின் 48A பிரிவு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறது. மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்திற்காக மக்கள் அல்ல.
ஆலை மூடியதால் நஷ்டம் ஏற்பட்டது என்று இங்கே கூறினார்களே, மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் அரசு அனுமதி வாங்கி அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை இரத்தினகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டிகளோடும், கடப்பாறைகளோடும் வந்து அடித்து நொறுக்கினார்களே, மறுநாள் மராட்டிய மாநில அரசு லைசென்சை இரத்து செய்ததே. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏன் மும்பை உயர்நீதிமன்றத்திலோ, டெல்லி உச்சநீதிமன்றத்திலே மராட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை?
2013 முதல் 2018 மே 22 வரை தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்கள் எதனையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஆலைக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டது. ஆலை புகை போக்கியின் உயரம் குறித்த பிரச்சினையை நான் தான் முதன் முதலில் ஆய்வுக் குழுவில் கொண்டு வந்தேன்.
2013-ல் ஆலையைத் திறக்க வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீடு வழக்குத் தொடுத்தேன். தமிழ்நாடு அரசும் கண்துடைப்புக்காக ஒரு மேல்முறையீடு செய்தது.
நீதிபதி அவர்களே, இத்தனை அமர்வுகள் நடந்ததே, ஒரு அமர்விலாவது 2013 மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று தமிழக அரசு வழக்கறிஞரோ, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்களோ குறிப்பிட்டாரா? என்றால் கிடையாது. ஜனவரி 8-ம் தேதி அமர்வில் நான்தான் உங்களிடம் குறிப்பிட்டேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த எனது மேல்முறையீட்டு வழக்குகளும், தமிழ்நாடு அரசின் மேல் முறையீடும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை கனிவோடு ஏற்றுக்கொண்டு இந்த வழக்கில் சேர்த்தீர்கள் மிக்க நன்றி.
தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் எங்கள் தலையில் எமனாக வந்து உட்கார்ந்துகொண்டது. பத்து இலட்சம் மக்களும் ஆலையை எதிர்க்கிறார்கள். ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இந்த உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்.”
இவ்வாறு வைகோ வாதம் செய்தார்.
Like Reply
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

[Image: 201902081520111154_2nd-ODI-against-New-Z...SECVPF.gif]
ஆக்லாந்து,

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ (12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய  கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஒவர்களில் 7 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. ரிஷப் பாண்ட் 40 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், எம்.எஸ் டோனி 20 ரன்களும் எடுத்தனர்.
Like Reply
நியூசிலாந்தின் மிக பெரிய டாஸ்மன் கிளேசியர் பனி மலை உடைந்தது எதனால்?

[Image: _105580169_cca88a7e-4bb7-45e3-85d4-7fab189eb1e4.jpg]படத்தின் காப்புரிமைRICHARD BOTTOMLEY
நியூசிலாந்தின் மிக பெரிய பனி மலையான டாஸ்மன் கிளேசியரில் பெரிய பனி பாளங்கள் உடைந்துள்ளன.
இந்த பனி மலையின் பனி உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் பகுதியை நிரப்பியுள்ளது.
பனி விரைவாக உருகி தேங்குகின்ற நீரால், 1970ஆம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இது நடைபெறுவதாக கருதப்பட்டது.
இந்த பனிப்பாளங்கள் வானை தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
[Image: _105580167_c71e424d-b9ef-4903-98c3-afa660f20608.jpg]படத்தின் காப்புரிமைRICHARD BOTTOMLEY
வானை தொடும் அளவு உயரமான பனிப்பாளங்கள் இந்த ஏரியில் மிதக்கின்றன என்று இந்த கயாகிங் கிளேசியரின் உரிமையாளர் சார்லி ஹோப்ஸ் நியூசிலாந்து வானெலியிடம் கூறியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மனில் நிகழ்கின்ற மிக முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது
Like Reply
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி - தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

[Image: 201902110458108942_India-defeated-in-the...SECVPF.gif]

ஹாமில்டன், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும், நியூசிலாந்து அணியில் லோக்கி பெர்குசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அறிமுக வீரராக பிளைர் டிக்னெரும் சேர்க்கப்பட்டனர்.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் எதிர்பார்த்தது போலவே பேட்ஸ்மேன்கள் கோலோச்சினர். முன்ரோவும், செய்பெர்ட்டும் அதிரடியில் பின்னியெடுத்தனர். பேட்டில் சரியாக பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி தெறித்து ஓடின. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 66 ரன்களை திரட்டினர். ரன்ரேட்டை 10 ரன்களுக்கு குறையாமல் பார்த்துக் கொண்ட இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் (7.4 ஓவர்) சேர்த்தனர். செய்பெர்ட் 43 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் விக்கெட் கீப்பர் டோனி யால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் இறங்கினார்.

முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யாவின் பவுலிங்கை, இந்த முறை நியூசிலாந்து வீரர்கள் நொறுக்கித்தள்ளினர். மிடில் ஓவர்களில் அவரது பந்து வீச்சில் மொத்தம் 4 சிக்சர்கள் பறந்தன.

உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த காலின் முன்ரோ 72 ரன்கள் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த வீரர்களும் அதே உத்வேகத்துடன் பேட்டை சுழட்டியதால் நியூசிலாந்து அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 202 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (4 ஓவரில் 26 ரன் கொடுத்து 2 விக்கெட்) தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (5 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தாலும் கேப்டன் ரோகித் சர்மாவும், தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். விஜய் சங்கரின் சில நேர்த்தியான ஷாட்டுகள் ரசிகர்களை பரவசப்படுத்தின.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் (46 பந்து) சேகரித்து பிரிந்தது. விஜய் சங்கர் 43 ரன்னிலும் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த ரிஷாப் பான்ட் 28 ரன்னிலும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 38 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி) தேவையில்லாமல் வைடாக சென்ற பந்தை அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பர் செய்பெர்ட்டிடம் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் (21 ரன்), விக்கெட் கீப்பர் டோனியும் (2 ரன்) அடுத்தடுத்து வெளியேற, இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் (15.2 ஓவர்) எடுத்திருந்தது.
Like Reply
இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்கும், குருணல் பாண்ட்யாவும் இணைந்து அணியை கரைசேர்க்க போராடினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு துரத்திய இவர்கள் 22 பந்துகளில் 50 ரன்கள் கொண்டு வந்தனர். இதனால் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த தினேஷ் கார்த்திக் 2-வது பந்தை அடிக்கவில்லை. 3-வது பந்தில் எளிதில் ரன் எடுத்திருக்கலாம். எஞ்சிய 3 பந்துகளில் 14 ரன்களை தானே எடுத்து விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ, 3-வது பந்தில் பாதி தூரம் ஓடி வந்த குருணல் பாண்ட்யாவை திரும்பி போகும்படி சைகை காட்டி விட்டார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும், 5-வது பந்தில் குருணலும் தலா ஒரு ரன் எடுத்தனர். 6-வது பந்து வைடாக வீசப்பட்டதால் மறுபடியும் வீசப்பட்ட 6-வது பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்தார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்திய அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. தினேஷ் கார்த்திக் 33 ரன்களுடனும் (16 பந்து, 4 சிக்சர்), குருணல் பாண்ட்யா 26 ரன்களுடனும் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். 2-வது பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றும் இந்திய அணி தோற்பது இதுவே முதல்முறையாகும். நியூசிலாந்து வீரர்கள் காலின் முன்ரோ ஆட்டநாயகன் விருதையும், கீப்பர் டிம் செய்பெர்ட் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன.

20 ஓவர் தொடரை பறிகொடுத்தாலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற திருப்தியுடன் இந்திய அணி தாயகம் திரும்புகிறது.

இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

ரோகித் சர்மா கருத்து

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘கடைசி வரை போராடியும் இலக்கை தொட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. 210 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடிப்பது எப்போதுமே கடினம் தான். இருப்பினும் கடைசி பந்து வரை முயற்சித்தோம். பதற்றமான தருணத்தில் நியூசிலாந்து நன்றாக ஆடி வெற்றியை வசப்படுத்தி விட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த பயணத்தில் இருந்து நிறைய சாதகமான விஷயங்களை எடுத்துக் கொள்ள முடியும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்று விட வேண்டும். அடுத்து சொந்த ஊரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த தொடரை வென்று கோப்பையுடன் தாயகம் திரும்பியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என்றார்.
Like Reply
டோனி ‘300’

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு ஒட்டுமொத்தத்தில் இது 300-வது 20 ஓவர் போட்டியாகும். இதில் சர்வதேச மற்றும் உள்ளூர், லீக் 20 ஓவர் ஆட்டங்களும் அடங்கும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர், உலக அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை டோனி பெற்றார்.

வெற்றிப்பயணம் முடிவு

* சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 தொடர்களை (8-ல் வெற்றி, 2 சமன்) இழக்காமல் இருந்தது. அந்த கம்பீர பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி இழப்பது இதுவே முதல்முறையாகும்.

* இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா மொத்தம் 131 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக ரன்களை வழங்கிய இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை பெற்று இருக்கிறார்.

அதிசய ஒற்றுமை

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நமது வீரர்களால் இலக்கை வெற்றிகரமாக எட்ட முடியவில்லை. முன்னதாக இதே மைதானத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 16 ரன்களே தேவையாக இருந்தது. அதுவும் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.

அது மட்டுமின்றி இந்திய ஆண்கள் அணியும் சரி, பெண்கள் அணியும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்தமாக்கி விட்டு, 20 ஓவர் தொடரை பறிகொடுத்திருக்கிறது.
Like Reply
கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்விடும் போர்ட்நைட்! பின்வாங்காத சுந்தர்பிச்சை...

கூகுள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோர் தொடர்பான பொருளாதார கொள்கைகளில் ஏற்கனவே உள்ள வழியை பின்தொடரவுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஆப் சேல்ஸ் மற்றும் ஆப் பர்சேஸ் வருவாயில் டெவலப்பர்களுடன் தற்போதுள்ள 30% வருமான பகிர்வில் எந்தவொரு மாற்றமும் இல்லை என கூகுள் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


[Image: sundar-ttj-1549615126.jpg]
Like Reply
வருவாய் பகிர்வு

வருவாய் பகிர்வு
குறிப்பாக ஆண்ராய்டில், ஆப் ஸ்டோர்கள் மற்றும் வருவாய் பகிர்வு போன்றவற்றை தவிர்ப்பதற்காக டெவலப்பர்கள் பல்வேறு மாற்று வழிகளை கண்டுபிடித்துவருவதை எவ்வாறு கூகுள் நிறுவனம் கையாளப்போகிறது என்ற வால்ஸ்ட்ரீட் ஆய்வாளர்களின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார் சுந்தர் பிச்சை.

டெவலப்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறவில்லை

டெவலப்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறவில்லை
அந்த ஆய்வாளர்கள் டெவலப்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறவில்லை எனினும், அவற்றில் முக்கிய நிறுவனமான 'எபிக் கேம்ஸ்', கடந்த ஆண்டு தனது போர்ட்நைட் கேமை ஆண்ராய்டில் வெளியிடும்போது கூகுள் ப்ளே ஸ்டோரை தவிர்த்துள்ளது. அதற்கு பதிலாக கேமை நேரிடையாக பயனர்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் , அந்நிறுவனம் கூகுளுக்கு 30% வருவாய் பகிர்வை வழங்க தேவையில்லை.
Like Reply
50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு
'போர்ட்நைட்' கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத காரணத்தால், கூகுள் நிறுவனத்திற்கு 50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பீடு செய்துள்ள ஆய்வாளர்கள், எபிக்ஸ் நிறுவனத்தை அனைத்து டெவலப்பர்களும் பின்தொடர்ந்தால் கூகுள் நிறுவனத்தின் நிலை மோசமடையும் என கூறியுள்ளனர்.
[Image: dtkk-dkk-1549614904.jpg]
  

"30% ஸ்டோர் வரி
"30% ஸ்டோர் வரி என்பது உலகிலேயே மிகவும் அதிகமான ஒன்று. அதேநேரம் கேம் டெவலப்பர்கள் கேமை உருவாக்க, செயல்படுத்த மற்றும் அதை தொடர்த்து பராமரிக்க ஏற்படும் செலவுகளை அந்த 70%ல் அடக்க வேண்டியுள்ளது" என்கிறார் எபிக் கேம்ஸ் சிஈஓ மற்றும் நிறுவனருமான டிம் ஸ்வீனி.
[Image: djd-dj-1549614876.jpg]
  

30% கட்டணம்
"ஓபன் ப்ளாட்பார்ம்களில், இந்த ஸ்டோர்ஸ் வழங்கும் பண பரிமாற்றம், டவுன்லோட் பேண்ட்வித் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் போன்ற சேவைகளுக்கு 30% கட்டணம் என்பது முற்றிலும் பொறுத்தமற்றது" என்கிறார் டிம்.
ஆனால் சுந்தர் பிச்சையின் கருத்து இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஆண்ராய்டு ஆப் டெவலப்பர்களுக்கு கூகுள் ப்ளே வழங்கும் சேவைகளுக்கு 30% கட்டணம் என்பது மிகவும் சரியானது என கூகுள் நிறுவனம் கருதுகிறது.
[Image: jjdej-jjdej-1549614910.png]
Like Reply
MS Dhoni: தேசத்தையும் தேசிய கொடியை எவ்வளவு மதிக்கிறார் தோனி - அவரின் செய்கையால் பரபரப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது ரசிகர் ஒருவர், தேசிய கொடியுடன் தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தோனி செய்த செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

[Image: Tamil-image.jpg]


Highlights

  • 3வது டி20 போட்டியின் போது ரசிகர் ஒருவர், தேசிய கொடியுடன் தோனியின் காலில் விழுந்து வணங்கினார்.
  • அப்போது தோனி செய்த செயல் அவரை பாராட்டும் படி செய்துள்ளது..


நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது ரசிகர் ஒருவர், தேசிய கொடியுடன் தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தோனி செய்த செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. 

ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் தொடரை 4-1 என வென்றது, தொடர்ந்து நடந்த 3 டி20 தொடரில் இந்தியா 2-1 என தோல்வியடைந்தது. 

கொடிக்கு முதல் மரியாதை: 
இன்று நடந்த 3வது டி20 போட்டியின் போது, நியூசிலாந்து பேட்டிங் செய்த போது, விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டிருந்த தோனியிடம் ஆசி வாங்க ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்தில் வந்து தோனியின் காலில் விழுந்தார். 
Like Reply
அப்போது ரசிகரின் கையில் வைத்திருந்த கொடியை மைதானத்தின் கீழே படுவதற்குள் அவரிடமிருந்து கொடியை தோனி தன் கையில் எடுத்துக் கொண்டார். 

தொடரை இழந்ததோடு இரண்டரை ஆண்டு சாதனையை தொலைத்தது இந்தியா!

அதன் பின்னர் தான் தோனியின் காலில் விழுந்த ரசிகரை எழுந்து போக சென்னார். 
Like Reply
35,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பிஎஸ்என்எல்; என்ன காரணம்?
பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்ற நன்மைகளைக் குறைத்துள்ளது

பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் செலவுகளைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகப் பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்ற நன்மைகளைக் குறைத்துள்ளது


35,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பிஎஸ்என்எல்; என்ன காரணம்?
பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்ற நன்மைகளைக் குறைத்துள்ளது.



[Image: BSNL-875.jpg]
பிஎஸ்என்எல
பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் செலவுகளைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகப் பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்ற நன்மைகளைக் குறைத்துள்ளது.



அது மட்டும் இல்லாமல் 35,000 ஊழியர்களை விருப்பு ஓய்வு அளித்து அனுப்ப மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

சென்ற ஆண்டுப் பிஎஸ்என்எல் எடுத்த செலவு குறைப்பு நடவடிக்கையால் நிறுவனத்திற்கு 2,500 கோடி ரூபாய் சேமிப்பு கிடைத்துள்ளது. இதுவே பிஎஸ்என்எல் ஊழியர்கள் குறைப்பை மேற்கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வணிக ரீதியான சேவை வந்த பிறகு தனியார் டெலிகாம் நிறுவனங்களே திணறிய நிலையில் கடனில் இருந்து வந்த பிஎஸ்என்எல் லாபத்தையும் பதிவு செய்தது.

டிராய் வெளியிட்ட தரவுகளின் படி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் பிஎஸ்என்எல் 1,284.12 கோடி ரூபாயும், ஜியோ 8,271 கோடி ரூபாயும், வோடாஃபோன் ஐடியா 7,528 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் 6,720 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியிருந்தன.
Like Reply
ஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம்

[Image: Tamil_News_large_2210720.jpg]
சென்னை: சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பெரிய நிலையமாகவும், இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நிலையமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது. நிலைய பிளாட்பார ஏரியா, 32 மீட்டர் அகலத்திலும், பயணியர் நடமாடும் முகப்பு பகுதிகளில், 40 மீட்டர் அகலத்திலும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில், முதல் தளத்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அடுத்த இரண்டு தளங்களில், எட்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1, 2, 3 மற்றும் 4வது நடைமேடைகளில் இருந்து, பரங்கிமலைக்கும், 5வது நடை மேடையில் இருந்து, விமான நிலையத்துக்கும், 6 மற்றும் 8வது நடைமேடைகளில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

7வது நடைமேடை, அவசரத்துக்கு ரயில் நிறத்தி வைக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சென்ட்ரலும், ஆலந்துார் நிலையமும், ரயில்கள் இருவழிகளில் கடந்து செல்லும் நிலையங்களாக உள்ளன. இந்நிலையங்களில், பயணியருக்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுவதற்கு, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்
Like Reply




Users browsing this thread: 176 Guest(s)