Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
Jacto geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்ட பின்னணி இதுதான்! சென்னை: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பள்ளிகளில் கல்வி பாதிக்கப்பட்டது.


[Image: jacto-geo23334454-1548851360.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரில்லை
போராட்ட குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பு புறந்தள்ளி விட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாதவையாக உள்ளன என்பதால் இதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துவிட்டார்.


[Image: eps22212-1548851367.jpg]
  
[color][size][font]
அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகளும் அரசுத் தரப்பிலிருந்து பாய்ந்தன. இந்த நிலையில் போராட்டம் நடத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது.[/font][/size][/color]

[Image: jacto-geo232-1548851353.jpg]
  
[color][size][font]
பிசுபிசுத்த அரசு ஊழியர் போராட்டம்
நேற்றைய தினம் 95 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. சென்னையில் சுமார் 100 சதவீதம் ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.[/font][/size][/color]
Like Reply
டி.ஹெச்.எஃப்.எல் மீது ரூ. 31,000 கோடி கடன் மோசடி புகார்! ஏன், எதற்கு?

டிஹெச்எஃப்எல் நிறுவனம், மோசடி பணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகளாகவும், சொத்துகளாகவும் முதலீடு செய்துள்ளதோடு, இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளது. மேலும், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடையும் வாரி வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பிரபல வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான டிஹெச்எஃப்எல்,  ரூ.31,000  கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வாறு மோசடி மூலம் சுருட்டப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகள் மற்றும் சொத்துகளாக முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 'கோப்ரா போஸ்ட்' இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 
[Image: DHFL_16006.jpg]
[color][font]
`கோப்ரா போஸ்ட்' என்ற ஆங்கில இணையதளம், கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு புலனாய்வு தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த இணையதளம் தற்போது திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) என்ற வீட்டுக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனம்,  32 வங்கிகளில் கடன்பெற்று மேற்கூறிய நிதி மோசடியை செய்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. 


பன்னாட்டு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பினாமி பெயர்களிலும், தொழில் முறை பங்குதாரர்கள் பெயரிலும் கடனாக பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை, டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர்களான கபில் வதாவன், அருணா வதாவன் மற்றும் தீரஜ் வதாவன் ஆகிய 3 பேருக்குச் சொந்தமான ஆர்.கே.டபுள்யோ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரிலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டுள்ளது. இந்த 3 நிறுவனங்களுமே, ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் போலி கம்பெனிகள் எனக் கூறப்படுகிறது. ஷெல் நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும். 
இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகளாகவும், சொத்துகளாகவும் முதலீடு செய்துள்ளது டிஹெச்எஃப்எல். இந்த மோசடி பணத்தில் இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியதும் அடக்கம்.   இதில் இன்னொரு திருப்பமாக, மோசடி செய்து சுருட்டிய பணத்தில்,  பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு டிஹெச்எஃப்எல்  குழுமம் சார்பில் நன்கொடை வாரி வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 19.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. [/font][/color]
Like Reply
இந்த நன்கொடை, ஆர்.கே.டபுள்யோ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரிலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 2014-15 மற்றும் 2016 -17-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதன் நிகர லாபத்தில் 7.5% வரை நன்கொடை வழங்கச் சட்ட விதிகள் அனுமதிக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவோ அல்லது வழங்கும் நன்கொடையை விட குறைந்த லாபம் ஈட்டியதாகவோ இருக்கக்கூடாது. 
[Image: donation_16435.jpg]
ஆனால், டிஹெச்எஃப்எல் நிறுவனம், கடந்த பல மாதங்களாகவே கடும் நிதி சிக்கலைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், அதன் நிதி நெருக்கடிக்குக்  காரணம் என்ன என்பதும், வங்கிகளிடம் கடனாக வாங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் எங்கே மடைமாற்றி விடப்பட்டது என்பதும் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. 
பல்வேறு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம்  டிஹெச்எஃப்எல் குழுமம் வாங்கியுள்ள கடன் சுமார் 97,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும், இதில் வங்கிகளிடம் வாங்கிய கடன் மட்டுமே 50,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள கோப்ரா போஸ்ட், நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யிடமிருந்து 11,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. 
 எந்த ஒரு நிறுவனத்துக்குக் கடன் வழங்கும்போதும் சொத்து உத்தரவாதம் மட்டுமின்றி, கடன் பெறும் நிறுவனங்களின் தனிப்பட்ட உத்தரவாதமும் பெறப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த நிறுவனம் வாங்கிய கடன் தொகை, போலி நிறுவனங்களுக்கும், குடிசை மாற்று திட்டங்களுக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் திருப்பி விடப்பட்டதால், அந்தக் கடனைத் திரும்ப வாங்குவது என்பது அத்தனை சாத்தியமானது அல்ல. மக்களின் பணம் ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய், சூறையாடப்பட்டுவிட்டதாகவே கருத வேண்டும். 
Like Reply
டிஹெச்எஃப்எல்  நிறுவனத்தின் புரோமோட்டர்களாக செயல்பட்ட வதாவன்கள், மோசடியாக வந்த பணத்தை திருப்பி விடுவதற்காக 45 நிறுவனங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த நிறுவனங்கள் 14,282 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளன. இதில் 34 நிறுவனங்கள் பெற்ற சுமார் 10,500 கோடி ரூபாய் கடன் எவ்வித உத்தரவாதமும் இல்லாத பாதுகாப்பற்ற கடன்கள். இதில் 34 நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் ஷகானா குழுமத்துக்குச் சொந்தமானவை என்பதோடு, அவை 3,800 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளதும் புலனாய்வில் தெரியவந்துள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த ஷாகானா குழுமத்தின் பிரதான பங்குதாரர் முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ-வான தால்வி ஷிவ்ராம் கோபால் ஆவார். அதேபோன்று இந்தக் குழும கம்பெனிகளின் இயக்குநர்களில் ஒருவரான ஜிதேந்திரா ஜெயின், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதோடு, நீதிமன்றக் காவலிலும் இருந்தவர். 
[Image: currency_16568.jpg]
மேற்கூறிய 34 நிறுவனங்களுக்கும் எவ்வித தொழிலோ அல்லது வருமானமோ கிடையாது. வெறும் 1 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டதாகவே காண்பிக்கப்பட்டுள்ளன. அதேசமயம்,  பெரிய அளவில் வரவு செலவு நடைபெற்றது போன்ற கணக்கு அறிக்கையை, ஆடிட்டரால் தணிக்கை செய்யப்பட்டது போன்று, அதற்கென்றே இருக்கும் ஏஜென்சிகள் மூலம் பெற்று தாக்கல் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஒரே முகவரியே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களும் அதே பாணியில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.  
இது ஒருபுறம் இருக்க, டிஹெச்எஃப்எல் நிறுவனமும் தனது நிதி நிலை அறிக்கையில், தான் வழங்கும் கடன்கள் மற்றும் அதைத் திருப்ப செலுத்துவதற்கான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டது.  மேலும், இந்தக் கடன் மோசடியில் அரசியல் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி உள்ளது. டிஹெச்எஃப்எல் நிறுவனம் வழங்கிய கடனில் சுமார் 1,160 கோடி ரூபாய் குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு, அவை மேற்கொண்ட புராஜக்ட்டுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது. 
Like Reply
குற்றச்சாட்டுக்கு மறுப்பு

இந்த நிலையில், மேற்கூறிய நிதி மோசடி குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் டிஹெச்எஃப்எல் பங்கின் விலை செவ்வாய்க்கிழமை 11 சதவிகிதம் சரிந்து, 164.50 ரூபாய் என்ற நிலைக்குச் சரிந்து, வர்த்தக முடிவில் 170.05 ரூபாயில் நிலைகொண்டது.

இதனிடையே தங்கள் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டை மறுத்துள்ள டிஹெச்எஃப்எல் நிறுவனம், இவை அடிப்படை ஆதாரமற்றது என்றும், தீய நோக்கமுடையது என்றும் தெரிவித்துள்ளது.
Like Reply
மிரட்டிய போல்ட்.. கைகொடுத்த இந்திய சுழல் கூட்டணி -நியூஸிலாந்து வெற்றிபெற 93 ரன்கள் இலக்கு! #4thODI

இந்திய அணிக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணியின் போல்ட் சிறப்பாகப் பந்துவீசி இந்திய வீரர்களின் விக்கெட்டுக்ளை காலி செய்தார். இந்திய அணி 92  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
[Image: iccv_09390.jpg]
Photo Credit: Twitter/ICC


ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் 4 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றநியூஸிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக ட்ரெண்ட் போல்டின் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர்.  
 
தவான் 13 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து அறிமுக வீரர் கில் களமிறங்கினார். நிதானமாக ஆடிவந்த ரோகித், போல்ட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக, இந்திய அணி திணறியது. 

[Image: bolt_09483.jpg]

Photo Credit: Twitter/ICC

அதன்பின்னர், சுப்மான் கில்லும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர்  9 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜாதவ், 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பாண்ட்யா அதிரடியில் இறங்கினார். போல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். அதன் பின்னர், பாண்ட்யாவும் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்குவந்தது. போல்ட் 10 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில்  4 மெய்டன் ஓவர்களும் அடக்கம். 

[url=https://www.vikatan.com/news/sports/148447-new-zealand-dominated-indian-batsmans.html#collapseOne][/url]

Like Reply
[Image: polt_09573.jpg]
இறுதியில் இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சஹால் 18 ரன்கள் எடுத்தார். குல்தீப் 15 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இருந்த இந்தியா, குல்தீப் மற்றும் சஹாலின் ஆட்டத்தினால் 92 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது
Like Reply
இளைஞர்களின் செல்போன்களை ஆக்கிரமிக்கும் க்யூட் ஸ்மிருதி மந்தனா!
கிரிக்கெட் உலகை அதிரடி பேட்டிங்கால் மிரட்டும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் புகைப்படங்கள் இளைஞர்களின் செல்போன் முகப்பை ஆக்கிரமித்து வருகின்றன. #SmrithiMandhana
[Image: Smriti-Mandhana-and-Jemimah-Twitter-1.jpg]
Like Reply
BREAKING NEWS: ``தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு” # Budget2019 #LiveUpdates

[Image: push_10150.jpg]
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்!
  • ரு ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும். தவிர மத்திய நிதியமைச்சகம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புகழ்வாய்ந்த நதிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறது. இது குறிப்பிட்ட காலக்கெடுக்குவுக்குள் நடைபெறும் என நம்புகிறேன் - நிதின் கட்கரி

    [Image: nithin_13527.jpg]
     


  • த்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிஃப்டி 130 புள்ளிகளும் உயர்வு.
     


  • ``மீனவர் நலனுக்காக மீன்வளத்துறை ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கக்கூடியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மீனவர்களின் வாழ்நாளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. மத்திய பாஜக அரசுக்கு இது இறுதி பட்ஜெட்டா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், எதிர் கட்சிகள் அல்ல” -தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.


    [Image: jayakumar_13389.jpg]
     


  • டைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
     


  • னிநபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தர கழிவு, 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிப்பு. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் கூட, வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
     


  • னிநபர் ஆண்டு வருமானம் 6.5 லட்சமாக இருந்தால், 1.5 லட்சம் ரூபாயை பிபிஎஃப் போன்ற சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்கும்.
     


  • டெபாசிட்டில் கிடைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை
  • வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை, இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்.
     

  • வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு, ரூ. 1.8 லட்சத்திலிருந்து ரூ. 2.4 லட்சமாக உயர்வு.
     

  • ங்கி, அஞ்சலங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரிக்கழிவு 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு.  2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும்.
     

  • டுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே, வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருமான வரிச்சலுகை அளிக்கப்படுவது மரபு இல்லை.
Like Reply
நியூசிலாந்து 15 ஓவரில் வென்றது எப்படி? இந்தியா 92 ரன்னில் சுருண்டது ஏன்?

[Image: _105410349_nz.jpg]படத்தின் காப்புரிமைMICHAEL BRADLEY
இந்தியா நியூசிலாந்து இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஸ்விங்குக்கு சாதகமான மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தட்டு தடுமாறி ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து.
இந்திய அணி சார்பில் மொத்த இன்னிங்ஸிலும் ஒரே ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.
93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து ஆட்டத்தை துவக்கியது. முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 14 ரன்கள் குவித்த மார்ட்டின் கப்டில் புவனேஷ்வர் குமாரின் நான்காவது பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 18 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிக்கோலஸ் 42 பந்துகளில் 4 பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 30 ரன்கள் எடுத்தா
Like Reply
ராஸ் டெய்லர் 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 2 பௌண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹலின் 2.4 ஓவர்களில் 32 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 212 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே வெற்றியை சுவைத்தது நியூசிலாந்து. இதற்கு முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை அணி 209 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை சுவைத்தது.
அந்த வகையில் இந்திய அணி வரலாறு காணாத வகையில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
[Image: _105409800_gettyimages-1125584174.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்.
நியூசிலாந்தின் ஹேமில்டன் நகரில் நடக்கும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 92 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நான்காவது போட்டியில் தற்போது விளையாடியது. இந்தப் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்தப் போட்டியில் விளையாடினார். கோலிக்குப் பதிலாக பேட்டிங் வரிசையில் அவரது இடத்தில் 19 வயது இளம் வீரர் ஷுப்மன் கில் புதிய பேட்ஸ்மேன் ஆக அறிமுகம் செய்யப்பட்டார்.
தோனிக்கு உடல் நிலை இன்னும் போதிய அளவு முன்னேறாததால் அவரும் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதில் கலீல் அகமது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியத் தரப்பில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
Like Reply
20 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவன் அவுட்டானது இந்திய அணிக்கு அதிர்சித் தொடக்கமாக இருந்தது. அடுத்தடுத்து ரோஹித் ஷர்மா, ஷுப்மன் ஹில், அம்பதி ராயுடு, கார்த்திக், ஜாதவ், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.
ஏற்கெனவே, தொடரில் வெற்றி பெற்றிருந்தாலும், மூத்த வீரர்கள் விளையாடாமல் இருந்தாலும்கூட உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில், 100க்கும் குறைவான ரன் எடுத்திருப்பது இந்திய அணிக்கு உளவியல் அடியாக இருக்கும்.
[Image: _105410351_nz2.jpg]படத்தின் காப்புரிமைMICHAEL BRADLEY
விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியக் காரணம் என்ன?
1. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து சரியாக முடிவெடுத்து ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. மைதானத்தில் இருந்த அதிகாலைப் பனி நியூசிலாந்துக்கு உதவியது.
2. மூத்த வீரர்கள் தோனி, கோலி ஆகியோர் அணியில் இல்லாதது.
3. ஸ்விங் பந்துகளை சந்திக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது.
4. ஷுப்மன் கில் 9 ரன் எடுத்த நிலையில், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் மூலம் கிடைத்தது வெறும் 1 ரன்தான். இவர்களில் இருவர் டக் அவுட்.
Like Reply
வாழிடத்தை தேடி 3 நாட்களில் 100 கி.மீ தூரம் கடந்த சின்னதம்பி..!

[Image: 58050.jpg]


[Image: 103734_c1.jpg]

[Image: 105034_c2.jpg]

[Image: 100235_c3.jpg]
Like Reply
தன்னைப் பிடிக்க வந்த கும்கி யானையுடன் விளையாடும் சின்னத்தம்பி!

சின்னத்தம்பி யானை, தன்னைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமுடன் விளையாடி வருகிறது.
[Image: IMG-20190203-WA0137_22178.jpg]
கோவையில் காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த மாதம் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டான். ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே சின்னத்தம்பி யானை, மீண்டும் தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து சுமார் 80 கி.மீக்கு மேல் சின்னத்தம்பி நடந்து சென்று கொண்டிருக்கிறான். தற்போது, உடுமலையில் இருக்கும் சின்னத்தம்பி, எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், தன் வாழ்விடத்தைத் தேடி அமைதியாக செல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சின்னத்தம்பி யானையைப் பிடிப்பதற்காக, டாப்ஸ்லிப்பில் இருந்து கலீம் மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன. நேற்று இரவு முதலே கும்கிகளுடன் சின்னத்தம்பி விளையாடி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது கலீம் யானையுடன், சின்னத்தம்பி யானை இன்று இரவு விளையாடி வருகிறது. பொதுவாக, காட்டு யானைகள் முரட்டுத்தனமாக இருக்கும் என்று பரவலாக கூறப்படும் நிலையில், தன்னைப் பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்டுள்ள கும்கி யானையுடன் சின்னத்தம்பி யானை விளையாடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


[Image: IMG-20190203-WA0147_22525.jpg]
இதுகுறித்து தடாகம் பகுதி மக்கள், ``எப்பேர்பட்ட பெரிய யானையாக இருந்தாலும், அதனுடன் சின்னத்தம்பி எளிதில் நெருங்கி பழகிவிடுவான். யாருடனும் சேராமல் தனியாக சுற்றும் விநாயகன் யானையே, சின்னத்தம்பியுடன் மட்டும் விளையாடும். அதுதான் சின்னத்தம்பியின் குணம்" என்றனர். 
Like Reply
மேற்கு வங்க அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ முடிவு! #mamatavscbi
சாரதா நிதி நிறுவனம் தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

[Image: mamata-dharna-21-1.jpg]


இந்த வழக்குத் தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அப்போது, சி.பி.ஐ அதிகாரிகளை மாநில காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் பேரணியில் ஈடுபடுவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இன்று, சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்வதற்கு அனுமதி மறுத்த மேற்கு வங்க அரசின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சியையும் எதிர் கொள்ளத் தயார் என்று மம்தா பானர்ஜி சவால் விடுத்திருந்திருந்தார். இருப்பினும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவில் மத்திய அரசு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்தப் பிரச்னையை மத்திய அரசு இந்தப் பிரச்னையை கையாளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Like Reply
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது


[Image: 201902040520218074_India-win-in-last-one...SECVPF.gif]

வெலிங்டன், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், கலீல் அகமது நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டோனி, விஜய் சங்கர், முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் முதுகுவலியால் அவதிப்படும் மார்ட்டின் கப்திலுக்கு பதிலாக காலின் முன்ரோ இடம் பிடித்தார். 

‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா, ஈரப்பதமான ஆடுகளத்தில் தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்று தெரிந்திருந்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடினமான சூழலில் இந்திய பேட்டிங் பலத்தை சோதித்து பார்ப்பதற்காக அணி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

எதிர்பார்த்தது போலவே நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட்டும், மேட் ஹென்றியும் ஸ்விங் தாக்குதலில் இந்தியாவுக்கு ‘கிலி’ ஏற்படுத்தினர். இந்திய தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா (2 ரன், 16 பந்து), ஹென்றி வீசிய ‘அவுட்ஸ்விங்’கரில் கிளன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (6 ரன்), பவுல்ட்டின் ஓவரில் எழும்பி வந்த பந்தை ‘அப்பர் கட்’ ஷாட் அடித்த போது ‘தேர்டுமேன்’ பகுதியில் நின்ற ஹென்றியிடம் சிக்கினார். இந்த தொடரில் தவான், பவுல்ட்டின் பந்து வீச்சில் ஆட்டம் இழப்பது இது 4-வது முறையாகும். அடுத்து வந்த சுப்மான் கில் (7 ரன்), விக்கெட் கீப்பர் டோனி (1 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. டோனிக்கு, பவுல்ட் வீசிய பந்து ஆப்-ஸ்டம்பை பதம் பார்த்தது.

அப்போது இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை (9.3 ஓவர்) இழந்து ஊசலாடியது. 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி முதல் 10 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை தாரை வார்ப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

முந்தைய ஆட்டத்தில் 92 ரன்னில் சுருண்டது போன்ற நிலைமை வந்துவிடுமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் உதிக்காமல் இல்லை. இந்த நெருக்கடியான கட்டத்தில் 5-வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடும், ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் இணைந்து அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டெடுத்தனர். நியூசிலாந்தின் பவுலிங்கை சிரமமின்றி எதிர்கொண்ட சங்கர் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன் எடுத்தார். இதனால் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்தது. இந்திய அணி 18.1 ஓவர்களில் 50 ரன்களை தொட்டது. அதன் பிறகு இருவரும் ரன் சேகரிப்பில் கொஞ்சம் வேகம் காட்டினர்.

அணியின் ஸ்கோர் 116 ரன்களாக உயர்ந்த போது (31.5 ஓவர்) துரதிர்ஷ்டவசமாக விஜய் சங்கர் (45 ரன், 64 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அதுவும் சில அடி தூரம் ஓடி விட்டு வேண்டாம் என்று விஜய் சங்கர் கூறிய போதிலும், எதிர்முனையில் நின்ற அம்பத்தி ராயுடு ஓடி வந்து விட்டதால் அவருக்காக சங்கர் தனது விக்கெட்டை தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது. இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்தது சிறப்பம்சமாகும்.

அவருக்கு பிறகு இறங்கிய கேதர் ஜாதவும், அம்பத்தி ராயுடுக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். அபாரமாக ஆடி 10-வது அரைசதத்தை எட்டிய அம்பத்தி ராயுடு, காலின் முன்ரோவின் ஓவரில் இரண்டு சிக்சர்களை விரட்டியடித்து அசத்தினார். ஆபத்பாந்தவனாக அணிக்கு கைகொடுத்த அம்பத்தி ராயுடு 90 ரன்களில் (113 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.

Like Reply
அடுத்து வந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இறுதி கட்டத்தில் பட்டைய கிளப்பியதோடு அணி சவாலான ஸ்கோர் எட்டுவதற்கும் உதவி புரிந்தார். சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லேவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை பறக்க விட்டு குதூகலப்படுத்திய பாண்ட்யா, ஜேம்ஸ் நீஷத்தின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். தொடர்ந்து அதே ஓவரில் பாண்ட்யா 45 ரன்களில் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். இதற்கிடையே கேதர் ஜாதவ் 34 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

முடிவில் இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 7 ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் 66 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி 7 பவுலர்களை பயன்படுத்திய போதிலும், இந்திய மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் பிரமாதப்படுத்தி விட்டனர். மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 253 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆரம்பத்திலேயே இரட்டை செக் வைத்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹென்றி நிகோல்ஸ் (8 ரன்), காலின் முன்ரோ (24 ரன்) இருவரும் வெளியேற்றப்பட்டனர். அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராஸ் டெய்லரை (1 ரன்) ஹர்திக் பாண்ட்யா காலி செய்தார். அந்த சமயம் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் திணறியது. கேப்டன் கேன் வில்லியம்சனும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் 4-வது விக்கெட்டுக்கு இணைந்து ஓரளவு சமாளித்தனர். இவர்கள் 24-வது ஓவரில் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு கொண்டு வந்தனர். இந்த கூட்டணியை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் உடைத்தார். அவரது பந்து வீச்சில் வில்லியம்சன் (39 ரன், 73 பந்து, 3 பவுண்டரி) பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நியூலாந்து பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார். அவரது பவுலிங்கில் டாம் லாதம் (37 ரன்) வீழ்ந்தார்.

இதற்கு மத்தியில் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சிறிது நேரம் அச்சுறுத்தினார். அதிரடி காட்டிய அவரை விக்கெட் கீப்பர் டோனி சாமர்த்தியமாக செயல்பட்டு சாய்த்தார். அதாவது கேதர் ஜாதவின் பந்து வீச்சில் நீஷம் முட்டி போட்டு அடிக்க முயற்சித்த போது பந்து பேட்டில் படவில்லை. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். நடுவர் அவுட் வழங்கவில்லை. அப்போது நீஷம், கிரீசை விட்டு சில அடி தூரம் வெளியே நின்றார். அவர் பந்து விக்கெட் கீப்பர் டோனியின் பக்கம் சென்றதை கவனிக்கவில்லை. டோனி பந்தை ஸ்டம்ப் மீது தூக்கி எறிந்து அவரை ரன்-அவுட் செய்தார். நீஷம் 44 ரன்களில் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆனதும், ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

அந்த அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருதையும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (4 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முதல் 3 ஆட்டங்களில் இந்தியாவும், 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருந்தன.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 6-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.

நியூசிலாந்து மண்ணில் சிறந்த செயல்பாடு

* இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் 11, 87, 62, 7, 2 ரன்கள் வீதம் எடுத்துள்ளார். தொடர்ச்சியாக 10 தொடர்களுக்கு பிறகு அவர் இந்த தொடரில் தான் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அது மட்டுமின்றி அவர் நியூசிலாந்து மண்ணில் இதுவரை சதம் கண்டதில்லை.

* இந்திய அணி 1967-ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. அங்கு ஒரு தொடரில் இந்திய அணி 4 ஆட்டங்களில் வெற்றி காண்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1967-68-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 2009-ம் ஆண்டு ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா வென்றதே அங்கு சிறந்த செயல்பாடாக இருந்தது.

* நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு நாள் தொடர் ஒன்றில் 4 ஆட்டங்களில் தோற்பது இது 4-வது நிகழ்வாகும். கடைசியாக 2005-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்திருந்தது.
Like Reply
கரும்பு தோட்டத்தில் புகுந்த சின்னத்தம்பி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர்.

[Image: Tamil-image.jpg]


Highlights
  • கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானை வெளியே அழைத்து வரப்பட்டது
  • கும்கி யானைகளும் அங்கு தயார் நிலையில் உள்ளன


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர். 

கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் அட்டகாசம் செய்ததாக கூறி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என பெயரிடப்பட்டுள்ள காட்டு யானை பொள்ளாச்சி அருகே வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. சின்னத்தம்பி யானையின் கழுத்து பகுதியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. அதன் உதவியுடன் வனத்துறையினர் சின்னத்தம்பியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர். 

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு டாப்சிலிப் பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை, உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் இரு நாட்களாக முகாமிட்டுள்ளது. 

தண்ணீர் குடித்த யானை தொடர்ந்து கரும்புத் தோட்டத்திற்கு வெளியே உலவித் திரிகிறது. பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளும் அங்கு தயார் நிலையில் உள்ளன. சின்னத்தம்பியை அமராவதி வனப்பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதனிடையே சின்னத்தம்பி யானையை மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே சேர்க்க வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வன ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்
Like Reply
சீனாவின் "பன்றி ஆண்டு" குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

[Image: _105477349_gettyimages-1093270018.jpg]படத்தின் காப்புரிமைSOPA IMAGES
மில்லியன் கணக்கான சீன மக்கள், பன்றி ஆண்டு தொடங்க சீனப் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். சீன கலாசாரத்தில் இந்த பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) அவர்களின் புத்தாண்டு தொடங்குகிறது.
சீன காலண்டரில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று.
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது பணி, உடல்நிலை, காதல் மற்றும் பல விஷயங்கள் குறித்த அதிர்ஷ்டத்தை கணிக்க இந்த ராசிபலன்கள் அவசியமாகிறது என்று சிலர் நம்புகின்றனர். ஒருவரின் பிறந்த ஆண்டுடன், பன்றி ஆண்டு ஒப்பிடப்படும்.
சீனப் புத்தாண்டு என்பது அவர்களுக்கு, ஒரு பெரிய விழா போன்றதாகும். குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்வது, குழந்தைகளுக்கு பெரியவர்கள் பணம் அன்பளிப்பாக அளிப்பது என்று நாடே கோலாகலமாக இருக்கும்.
[Image: _105477347_gettyimages-1093313388.jpg]படத்தின் காப்புரிமைANADOLU AGENCY
சீன காலண்டர் அமைப்பு என்பது என்ன?
வழமையாக சீன புத்தாண்டானது சீன நாட்காட்டியின் இறுதிநாளன்று தொடங்கும் (பிப்ரவரி 5, 2019). சீன புத்தாண்டின் பதினைந்தாவது நாள் விளக்கு திருவிழாவானது நடக்கும்.
சீனாவின் வசந்த திருவிழா வியாட்நாம், கொரியா மற்றும் திபெத் போல சந்திர நாட்காட்டியின்படிதான் நடக்கும்.
சந்திர நாட்காட்டியின் முதல் அமாவாசை அன்று தொடங்கி, பெளர்ணமி அன்று முடியும்.
[Image: _105477504_gettyimages-1093269972.jpg]படத்தின் காப்புரிமைSOPA IMAGES
விலங்கு ராசிகள் என்பது என்ன?
சீன ராசியில் மொத்தம் 12 விலங்குகள் இருக்கின்றன. அவை எலி, காளை, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, செம்மரி, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகும். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குண இயல்புகள் உள்ளன.
சீனர்களின் கூற்றுப்படி, புத்தர் பூமியில் இருந்து செல்வதற்கு முன்பாக அனைத்து விலங்குகளையும் அழைத்திருக்கிறார். இந்த 12 விலங்குகள் மட்டுமே அவர் அழைப்பை ஏற்று வந்ததினால், அதற்கு பரிசாக ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்த விலங்குகளின் பெயரை வைத்தார்.
Like Reply




Users browsing this thread: 167 Guest(s)