Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: vlcsnap-1598-04-24-07h32m45s188_12132.png]

போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனிடம் பேசினோம். ``அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பார்க்கும்போது கோபமும் ஆத்திரமும் தான் வருகிறது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் போதவில்லை என்று போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.

                                                [Image: vlcsnap-4711-09-19-01h28m08s929_12451.png]
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு ஆசிரியராவது, எங்கள் பள்ளியில் இந்த வசதிகள் போதவில்லை; அரசு உடனே செய்துகொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதுண்டா. தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு சிறப்பாகப் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் கொடுமைதான் உங்களுக்கு நன்றாகவே தெரியுமே. இந்த நிலையை மனதில் வைத்துக்கொண்டுதான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீக்கிவிட்டு ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகிறோம்’’ என்று முடித்தார்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
NZ vs IND : மந்தனாவின் மரண மாஸ் சதத்தால், நியூசிலாந்தை துவம்சமாக்கிய இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
[Image: Tamil-image.jpg]

Highlights
  • நியூசிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
  • மந்தனா 104 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி 105 ரன்கள் குவித்தார்.


நேப்பியர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணத்தை இந்திய ஆண்கள் அணி மேற்கொண்டுள்ள நிலையில், பெண்கள் அணியும் நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக விளையாடி வருகின்றது. 
3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் நியூசிலாந்து, இந்திய பெண்கள் அணிகள் மோதுகின்றன. 

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது
சுருண்ட நியூசிலாந்து:
நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் ஏக்தா பிஸ்ட், பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 2, சிகா பாண்டே 1 விக்கெட் வீழ்த்தினர். 

மந்தனா அபார சதம்:
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மந்தனா, ஜமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் மிக சிறப்பாக விளையாடினர். 

மந்தனா 104 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி 105 ரன்கள் குவித்து அவுட்டானார். 
மற்றொரு புறம் ரோட்ரிக்ஸ் 81*, ரன்கள் அடித்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். 33 ஓவரில் ஒரே ஒரு விக்கெட் அதுவும் கடைசி நேரத்தில் இழந்த இந்தியா 193 ரன்களை எடுத்து வென்றி பெற்றது.
Like Reply
சென்னை
போலி கிரெடிட், டெபிட் கார்டு மூலம்.. சென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்களின் லட்சக்கணக்கான பணம் திருட்டு
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர்களின் கணக்கிலிருந்து பீகாரைச் சேர்ந்த கும்பல் ஒன்று போலி கார்டு மூலம் லட்சக்ணக்கில் பணத்தைத் திருடியுள்ளது.
இந்த ஊழியர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸில் அவர்கள் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து குற்றப் பிரிவு போலீசார் நடத்திய விசாரனையில், பழச்சாறு கடை, உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் ஐ.டி.ஊழியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கு என்றே தயாரிக்கப்பட்ட கருவிகள் மூலம் பணம் திருடப்பட்டதை போலீசார் கண்டு பிடித்தனர்.

[Image: hacking-675-04-1501821552-1548322958.jpg]
Like Reply
பீகாரைச் சேர்ந்த 9 பெர் கொண்ட மோசடி கும்பல், சிறப்புக் கருவிகள் மூலம் கார்டு விவரங்களைத் திருடி கொல்கத்தாவில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் போலிக் கார்டுகள் தயாரித்து, பணத்தைத் திருடி உள்ளதை கண்டு பிடித்து உள்ளனர். இதையடுத்து அந்த 9 பேரையும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து அவர்களைத் தனித் தனியாக விசாரனை நடத்தியதாகவும் தெரிகிறது.
விசாரனையில், கொல்கத்தாவில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் போலியாக கார்டுகள் தயாரித்து, சென்னை ஐ.டி.ஊழியர்களிடம் இருந்து சுமார் 20 லட்சம் வரை பணம் எடுத்துள்ளனர். இந்த பணத்தை வைத்து பீகாரில் வீடு, நிலம் என சொகுசு வாழ்க்கைக்கு தயாராகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி திருடப்பட்ட வங்கி விவரங்களை வங்கி மோசடி கும்பலுக்கு, ஒரு கார்டுக்கு தலா பத்தாயிரம் என்று விற்பனை செய்துள்ள அதிர்ச்சி விவரமும் தெரிய வந்துள்ளது. இந்த வங்கி மோசடி கும்பல் டெல்லியில் இருப்பதாகவும் தெரிய வந்த நிலையில் இந்தியா முழுக்க பெரும் மோசடி வலையை விரிக்க உள்ள அந்த கும்பலை மாநில போலீசார் உதவியுடன் பிடிக்கவும் மத்திய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
பெருங்குடி மென்பொறியாளர்கள் சுமார் 200 பேரின் பணத்தை இவ்வாறு திருடியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டதை அடுத்து, வங்கிக் குறியீட்டு ரகசிய எண்களை மாற்றிக்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளதோடு, கொள்ளையடித்த் பணதை மீட்டுத் தரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

வங்கிக் கார்டுகளைப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் உஷார் படுத்தி வருகின்றனர்.
Like Reply
[Image: dho_-nz_11075.jpg]

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்தியாவின் இன்னிங்ஸை ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அரை சதங்களைக் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர்.

[Image: adh_11478.jpg]


இந்தக் கூட்டணியை டிரென்ட் பவுல்ட் உடைத்தார். இவரது பந்துவீச்சில் தவான் (66 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் ஷர்மா சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தவான் வெளியேறிய சிறிது நேரத்தில் ரோகித் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ரோகித் ஷர்மா 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார்.
Like Reply
[Image: ro_-nz_11113.jpg]

பின்னர் இணைந்த விராட் கோலி - அம்பத்தி ராயுடு இணை ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் சென்றது. விராட்கோலி 43, ரன்களில் வெளியேற அடுத்து தோனி களமிறங்கினார். சிறிதுநேரத்தில் அம்பத்தி ராயுடுவும் அவுட்டானார். முதலில் நிதானமாக ஆடிய தோனி சிறிது நேரத்தில் அதிரடியில் களமிறங்கினார். அவருக்கு கேதர் ஜாதவ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இறுதியில் அதிரடியாக ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய 4 விக்கெட் இழப்பு 324 ரன்கள் எடுத்தது. தோனி 48 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 22 ரன்களுடனும் விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

[Image: nz_11251.jpg]
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 87 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் தலா விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நியூசிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.
Like Reply
Ind vs NZ: நியூசிலாந்தை கும்மியெடுத்த குல்தீப்: குடியரசுத் தினத்தில் இந்தியாவுக்கு 2 ஆவது வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[Image: Tamil-image.jpg]

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இத்தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. 

டாஸ் வென்ற இந்தியா: 

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, மவுண்ட் மாங்கனுயில் தொடங்கியது. இதில் ‘டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய டான் சர்மா, தவான் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 154 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

தவான்: 27 ஆவது அரைசதம்: 

27 ஆவது அரை சதம் அடித்த தவான் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் கோலி களமிறாங்கினார். கோலி, சர்மா இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 

ரோகித் சர்மா: 38 ஆவது அரை சதம்: 

38 ஆவது அரைசதம் கடந்த டான் சர்மா 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு, கோலியுடன் இணைந்தார். எனினும், இருவரும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பு கோட்டைவிட்டனர். கோலி 43 ரன்னிலும், ராயுடு 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தல தோனி, கேதர் ஜாதவ் சும்மா அதிரடி காட்டினர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் சேர்த்துள்ளது. தோனி 48 ரன்னுடனும், ஜாதவ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

பந்துவீச்சு தரப்பில் நியூசிலாந்தி அணியில், டிரெண்ட் போல்ட் மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 
Like Reply
325 ரன்கள் இலக்கு: 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கவீரர் மார்டின் குப்தில் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் கனே வில்லியம்சன் 20 ரன்னில் வெளியேறினார். கொலின் முன்ரோவும் 31 ரன்களில் ஆட்டமிழ்ந்து வெளியேறினார். இதையடுத்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

ஆட்டம் காட்டிய பிரேஸ்வெல்: 

இறுதியில், நிக்கோலஸ் மற்றும் பிரேஸ்வெல் ஜோடி இந்திய அணியை கொஞ்சம் ஆட்டம் காட்டியது. எனினும் நிக்கோலஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், பிரேஸ்வெல் மட்டும் வரிசையாக பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசினார். இறுதியில் பிரேஸ்வெல் 46 பந்துகளில் 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து புவனேஸ்வர் குமார் ஓவரில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
இறுதியில், 40.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 
பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும், புவனேஸ்வர் குமார் மற்றும் சகால் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷமி மற்றும் ஜாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது ஒரு நாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் வரும் 28ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
Like Reply
தோனி இடத்தை பிடித்த தினேஷ் கார்த்திக்.. விஜய் ஷங்கரை வழியனுப்பிய பண்டியா!! #IndVNz
மவுன்ட் மௌங்கனி : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விஜய் ஷங்கர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஹர்திக் பண்டியா அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. பண்டியா அணியில் சேர்ந்துள்ளதால், அணி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



[Image: dhoni23-1548644334.jpg]

  
[color][size][font]
தோனிக்கு பதில் விக்கெட் கீப்பர் யார்?
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தோனி தசைப் பிடிப்பு காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை.
[Image: hardik3434-1548644347.jpg][/font][/size][/color]
Like Reply
பண்டியா உள்ளே
அதே போல முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்ற விஜய் ஷங்கருக்கு மூன்றாவது போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக இடை நீக்கத்தில் இருந்து மீண்டு அணியில் சேர்ந்த பண்டியா களம் காண்கிறார்.
[Image: dinesh-karthik122121-1548644387.jpg]
  


மாற்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்
உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக நியூசிலாந்து தொடரில் இந்தியா அணித் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இருக்கும் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பைக்கு முன் தன் விக்கெட் கீப்பிங் திறமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
[Image: vijay-shankar1111-1548644507.jpg]
  

விஜய் ஷங்கர் வாய்ப்பு
விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியிலும், நியூசிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் இடம் பிடித்தாலும், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
Like Reply
[Image: vijay-shankar111-1548644514.jpg]
பேட்டிங் வாய்ப்பு இல்லை
விஜய் ஷங்கர் தனக்கு கிடைத்த பந்து வீசும் வாய்ப்புகளிலும், விக்கெட்கள் வீழ்த்தவில்லை. அவர் ஆல்-ரவுண்டர் என்றாலும் பேட்டிங் தான் அவரது முதன்மையான பணி. ஆனால், பேட்டிங் வாய்ப்பு கிடைக்காததால் உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் இடம் பெறுவது கடினமே.
[Image: hardikpandya-5-1548644565.jpg]
பண்டியா சோர்ந்து விட்டாரா?

பண்டியா இடை நீக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதனால், மனதளவில் அவர் சோர்ந்து போகாமல் இருக்கிறாரா என பார்ப்பது மிகவும் முக்கியம். அதே போல, தோனிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து அவர் விரைவில் மீண்டு வருவாரா என்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.
Like Reply
இன்றைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்- பள்ளி கல்வி துறை

 சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

[Image: jacto-geo232-1548642423.jpg]


7-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் கல்வியும் அரசு பணிகளும் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றுக்குள் திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும்.

அந்த இடத்தில் அவர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். அவ்வாறு பணியில் சேர வரும் ஆசிரியர்களை யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Like Reply
9 மணிக்குள் வேலைக்கு திரும்பா விட்டால்.. அரசு கெடு.. ஆசிரியர்கள் முடிவு என்ன?

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தகவலை தெரிவித்துவிட்டு உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியை தொடரலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நேரிலோ, குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தகவலை தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த ஜாக்டோ ஜியோ தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது பெரிதாகி உள்ளது.

[Image: jacto-geo23232-1548727873.jpg]
Like Reply
பேச்சுவார்த்தை இல்லை
அரசு இவர்களின் போராட்டத்திற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. இதனால்தான் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். 6 நாட்களாக போராட்டம் நடக்கிறது.


[Image: jacto-geo2323-1548727886.jpg]
  
[color][size][font]
போராட்டம் தொடரும்
தொடரும் என்று கூறுகிறார்கள் இதனால் பல பள்ளிகளில் பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு இன்னும் ஏற்கவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.[/font][/size][/color]

[Image: jacto-geo232-1548727902.jpg]
  
[color][size][font]
ஆசிரியர்கள் கைது
இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்றிரவு, தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img][/font][/size][/color]

[Image: jacto-geo23334454-1548727912.jpg]
Like Reply
கெடு முடிகிறது
இந்த போராட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு பணிக்கு திரும்ப வேண்டும். இன்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இன்று வரவில்லை என்றால் அவர்களின் இடம் காலியிடமாக கருதப்படும் என்று கூறியுள்ளார்.


[Image: jacto-geo233344554-1548727919.jpg]
  
[color][size][font]
பணியிடங்கள் நிரப்பப்படும்
ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களிடம் இடம் காலிப்பணி இடங்களாக கருதப்படும். காலிப்பணி இடத்தை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.[/font][/size][/color]
Like Reply
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க முடியாது - வைகோ நம்பிக்கை

சென்னை: ஸ்டெர்லைட் வழக்கு சரியான திசையில் செல்கிறது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வாதிட்டு வருகிறார்.


[Image: vaiko873-1548761225.jpg]
Like Reply
வைகோ 45 நிமிடம்
சென்ற முறை வைகோ செய்த வாதம்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற முறை வைகோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 45 நிமிடங்கள் பேச அவகாசம் கேட்டார். இந்த நிலையில் இன்றைய விசாரணையில் அவர் 45 நிமிடங்கள் பேசினார்.

[Image: vaiko9455667-20-1503218791-1548761219.jpg]
  
முன்பு
அதில் வைகோ, திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு. நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை நான் எடுத்துக்காட்டாக கூறினேன். நீர்நிலைகள் மாசாவதை அரசு கருத்தில் கொள்ளவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுபோன்ற எதையும் கருத்தில் கொள்ளவில்லை.

[Image: nationalgreentribunal--1548761430.jpg]
  
கமிட்டி அதிகாரம்
கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. அதற்கான அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளிக்க முடியாது. அதனால் ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது. இது ஒருதலைப்பட்சமான அறிக்கை.

[Image: sterlite-plant5-30-1527322439-1548761343.jpg]
  
ஸ்டெர்லைட் காரணம்
இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் இயங்குவதற்கு தமிழக அரசுதான் காரணம். 30 விதிகளில் 29 விதிகளை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்துவிட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பழைய வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க நீதிபதி சம்மதம் தெரிவித்தார்
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]

[Image: sterlite-copper31-1548761573.jpg]
  
Like Reply
அரசு மோசம்
என்னுடைய வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது. இந்த வழக்கு நாளையோடு முடியுமா என்று தெரியவில்லை. 2013ல் அரசு ஸ்டெர்லைட்டை எதிர்த்து தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது. அது சுப்ரீம் கோர்ட்டில் 5 வருடமாக நிலுவையில் உள்ளது. ஆனால் இதை அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கவில்லை.


[Image: sterlite-copper-1548761608.jpg]
  
[color][size][font]
அதிர்ச்சி
நான் சொன்னபின் நீதிபதிகள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. விசாரணை நல்ல நிலையில் செல்கிறது. ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பான விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.[/font][/size][/color]
Like Reply
மிரட்டும் போல்ட்... சீட்டுக்கட்டாகச் சரிந்த இந்திய வீரர்களின் விக்கெட்டுகள்! #NZvIND

இந்தியா  நியூஸிலாந்து அணிகள் மோதும் 4 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். 
[Image: tss_07523.jpg]
Photo Credit: Twitter/BCCI


இந்திய அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவருகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்று,  இந்திய அணி தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இன்று 4 -வது ஒருநாள் தொடர், ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
மீதம் இருக்கும் இரண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங் உள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு இது 200 -வது ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.  தொடரைக் கைப்பற்றிவிட்ட காரணத்தால், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
[Image: cap_06598.jpg]
Photo Credit: Twitter/BCCI
19 -வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட சுப்மான் கில், இன்றைய போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்க உள்ளார். இளம் வீரரான அவருக்கு, போட்டிக்கான தொப்பியை தோனி வழங்கினார். 
Like Reply
இன்றைய போட்டியில், டாஸில் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இந்த மைதானம் சேஸிங்கிற்கு சாதகமான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோலிக்குப் பதிலாக சுப்மான் கில் மற்றும் ஷமிக்குப் பதிலாக கலீல் களமிறங்குகிறார்கள். தோனி, காயத்திலிருந்து இன்னும் முழுமையாகத்  தயாராகாத காரணத்தால், அணியில் இடம்பிடிக்கவில்லை. நியூஸிலாந்து அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே நியூஸிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தது. குறிப்பாக, போல்ட் பந்துவீச்சை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள கடும் சிரமப்பட்டனர். 
தவான், 13 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து அறிமுக வீரர் கில் களமிறங்கினார். நிதானமாக ஆடிவந்த ரோகித், போல்ட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்திக் டக் அவுட் ஆக, இந்திய அணி திணறியது. 
அதன்பின்னர், சுப்மான் கில்லும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர்,  9 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜாதவ், 1 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி தற்போது 35 ரன்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. தற்போது, பாண்ட்யா மற்றும் புவனேஷ்வர் குமார் களத்தில் உள்ளனர். போல்ட், 7 ஓவர்கள் வீசி 8 ரன் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
Like Reply




Users browsing this thread: 174 Guest(s)