Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்த நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டாம்! ஆதார் மட்டும் போதும்!

[Image: Tamil-image.jpg]

Highlights
  • குறிப்பிட்ட வயதினர் நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.
  • அல்லது பாஸ்போர்ட் மற்றும் அரசின் ஏதேனும்புகைப்பட அடையாள அட்டை போதும்.


இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் ஆகியவற்றுக்கு 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் 65 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் ஆதார்அட்டையை மட்டுமே வைத்துக்கொண்டு பயணிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இந்த குறிப்பிட்ட இரு வயது வரம்புகளுக்குள் உள்ளவர்கள் விசா இல்லாமலே, ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தலாம். 

இதேபோல பாஸ்போர்ட் மற்றும் இந்திய அரசின் ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருக்கும் இந்தியர்கள் இந்த இரு நாடுகளுக்கும் செல்ல விசா தேவையில்லை. 

இதற்கு முன்பு 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் 65 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் இந்த இரு நாடுகளுக்குச் செல்லும்போது ஆதாரை அடையாளச் சான்றாக பயன்படுத்த அனுமதி கிடையாது. பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய அரசு வழங்கும் சுகாதார சேவை அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டை அடையாளச் சான்றாகக் காட்ட வேண்டிய நிலை இருந்தது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்... கதிகலங்கும் போட்டியாளர்கள்!
மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். 
ன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிவிப்பு, இ-காமர்ஸ் சந்தையில் ஏற்கெனவே கோலோச்சிவரும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பெரும்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டி அதிகரித்து, பொருள்கள் மீதான விலைக்குறைப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

[Image: reliance_dijital_18485.jpg]

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கணிசமான பங்களிப்பைக்கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட் ஆகிய நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து நிர்வகித்துவருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், ஃப்ளிப்கார்ட்டின் 70 சதவிகிதப் பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது அமெரிக்க நிறுவனமான வால்மார்ட். இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுடன் கடுமையாகப் போட்டிபோட்டு வருகிறது ஃப்ளிப்கார்ட். 



இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் களம் இறங்க உள்ளது. குஜராத்தில் ஜனவரி 18-ம் தேதி, `துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் இணைந்து, புதிதாக ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக அறிவித்தார். 
Like Reply
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது


[Image: 201901210348161505_The-Indian-cricket-te...SECVPF.gif]
Like Reply
ஆக்லாந்து, 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்று வரலாறு படைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அங்கிருந்து நியூசிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. ஆக்லாந்து விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர். 

இந்திய அணி, நியூசிலாந்தில் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேப்பியரில் நாளை மறுதினம் (புதன்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியாவை எதிர்கொள்ள, கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, வலுவான அணியாக களம் இறங்குகிறது. ஓய்வு அளிக்கப்பட்டிருந்த டாம் லாதம், காலின் டி கிரான்ட்ஹோம் மற்றும் காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
Like Reply
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு? தொழில்நுட்ப வல்லுநருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தவறான தகவலை பரப்பியதாக சையது சுஜா மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்துவருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Like Reply
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி? -பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்!

நரேந்திர மோடி அரசாங்கத்தின்மீது எதிர்க்கட்சிகள் வைத்துவரும் முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தல்களில் வெல்கிறார்கள்” என்பது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்தே, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால், 2014 -ம் ஆண்டுக்குப் பின்னர், அந்த இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை அதிக அளவில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. 
[Image: evm1_03323.jpg]
உத்தரப்பிரதேசம், கர்நாடகம், குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின்போது, அத்தகைய குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்தன. ”மற்ற கட்சிகளின் சின்னங்களை அழுத்தினால், தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாகிறது” போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தேர்தல் ஆணையம், “அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானது” என்று சொன்னது. 


இந்த நிலையில், ”2014-ம் ஆண்டு தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பி.ஜே.பி-யினரால் ஹேக் செய்யப்பட்டது. அதன் மூலமாகவே, மோடி பிரதமர் பதவியைப் பிடித்தார்” என்று, அமெரிக்காவில் வசிக்கும் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர் சையத் சுஜா, அதிரவைத்திருக்கிறார். 2014 -ம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்புக் குழுவில் அவர் அங்கம் வகித்ததாகச் சொல்லப்படுகிறது. 
Like Reply
[Image: modi1_03415.JPG]
லண்டனில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில், சையத் சுஜா ஸ்கைப் மூலம் உரையாடினார். அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் கலந்துகொண்டிருந்தார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படியெல்லாம் ஹேக் செய்ய முடியும் என்பதுகுறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார் சையத். தொடர்ந்து அதிரவைக்கும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
* 2014 -ம் ஆண்டு தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிசெய்தே பிரதமரானார் மோடி
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் பி.ஜே.பி-க்கு உதவியது  
* இந்த மோசடியால் கிட்டத்தட்ட 201 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தது காங்கிரஸ்
* இந்த விவகாரத்தை அறிந்தவராக இருந்ததால், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே கொலைசெய்யப்பட்டார்
* இதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்து எழுத முன்வந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷும் கொலையானார்
இத்தனை குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருப்பவர், அதுகுறித்த எந்த ஆதாரத்தையும் அந்தக் கூட்டத்தில் வெளியிடவில்லை. ஆதாரங்களை விரைவில் அளிப்பதாக, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பா.ஜ.க மட்டுமல்லாது, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்யும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார்
Like Reply
[Image: ec1_03220.jpg]
லண்டன் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) மற்றும் ஈ.சி.ஐ.எல் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) நிறுவனங்களில், மிகுந்த பாதுகாப்புடனும் தீவிர கண்காணிப்புடனும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஹேக் செய்வது என்பது நடக்க முடியாத ஒன்று” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதோடு, ”லண்டனில் நடந்த அந்தக் கூட்டம், எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அறிவித்துள்ளது.
பி.ஜே.பி தலைவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “வாக்குப்பதிவு இயந்திரங்களை எவராலும் ஹேக் செய்ய முடியாது. தேர்தலில் தோற்றுப்போனால் என்ன காரணம் சொல்வது என்ற பயம் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். அந்தக் கட்சியில், தேச விரோத சக்திகள் அதிகமாகிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். “லண்டனில் நடந்த கூட்டத்துக்கு கபில் சிபல் சென்றது எதேச்சையானது தானா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “ரஃபேல் போல இதுவும் பொய்யான குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம்குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “ஜனநாயகத்தைக் காக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். இந்த விவகாரத்தை, அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கொண்டுசெல்வோம்” என்று அறிவித்திருக்கிறார்.
Like Reply
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
[Image: 201901230710506633_New-Zealand-opt-to-bat_SECVPF.gif]
நேப்பியர்,

ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நேப்பியரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.  

உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.  

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:- ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ் டோனி, கேதர் ஜாதவ், அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்குமார், முகம்மது சமி,
Like Reply
வறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்!
பக்கத்து தோட்டக்காரங்க வயல்கள்ல பெரிய பலமான மரங்களே காத்துல சாய்ஞ்சுட்டு. ஆனா, எனது அஞ்சு ஏக்கர் வாழைத்தோட்டத்திலிருந்து ஒரு வாழை மரத்தைக்கூட கஜாவால் கீழே தள்ள முடியலை. கஜா புயலைத் தடுத்து, வாழைத்தோட்டத்தைக் காப்பாத்தியது நான் வளர்த்த இந்த நந்தவனக் காடுதான்.
[Image: 147678_thumb.jpg]
யற்கையாக அமைந்து, நமக்கெல்லாம் மழை, பல்லுயிர்ப் பெருக்கம், ஆறுகள் மூலம் தண்ணீர் என்று பல்வேறு வகையில் இயற்கை சமநிலையைப் பாதுகாத்துப் பலன் தந்தவை காடுகள். ஆனால், நமது பொல்லாத சுயநலம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகளை அழிக்க வைத்து, இயற்கைப் பேரிடருக்குக் காரணமாகி இருக்கிறது. கரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணோ, வறட்சி மிகுந்த தனது ஊரில் இருக்கும் தனது தோட்டத்தில், 1 ஏக்கர் நிலத்தில், பல்வேறு மரங்களை வளர்த்து, `நந்தவனம் காடு' என்ற பெயரில் காட்டை உருவாக்கி அசத்தியிருக்கிறார். சமீபத்தில் டெல்டாவை பலிகடாவாக்கிய கஜா புயலின் கோர தாண்டவத்திலிருந்து இவரது வெள்ளாமையை இந்தக் காடு காத்ததாகப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்.
 [Image: 100_vayasai_thaandiya_veppamara_adiyil_s..._11136.jpg]
[color][font]
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்தான் இந்த சரோஜா. கணவர் தொழிலை கவனிக்க, மகன்கள் இருவரும் வேலையில் இருக்க, சரோஜாவோ தங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதோடு, 1 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க மரங்களை மட்டுமே வளர்த்து, செயற்கை காட்டை உருவாக்கியிருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெண் சிஷ்யைகளில் ஒருவர் இவர். அவரிடம் கற்ற இயற்கை குறித்தான விழிப்புஉணர்வைக் கொண்டு தனது நிலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர். தான் உருவாக்கிய காட்டில் ஆசைதீர உலாவிக் கொண்டிருந்த சரோஜாவைச் சந்தித்துச் பேசினோம். [/font][/color]
Like Reply
[Image: vaazhaith_thottaththil_saroja_11027.jpg]




``ஆரம்பத்தில், `நான் இயற்கை விவசாயம் செய்யப் போறேன்'ன்னு சொன்னதும் வீட்டுல எதிர்ப்பு. `முதலுக்கே மோசமாயிரும்'னு பயந்தாங்க. ஆனா, நான் விடாப்பிடியாதான் செஞ்சேன். முருங்கை, கிழங்கு, வாழைன்னு போட்டேன். இந்தப் பகுதியே வறட்சி மிகுந்த பகுதி. எது போட்டாலும் விளையாத சுண்ணாம்பு மண் நிறைந்த பூமி. கருவேலம் மரங்கள் மட்டுமே வளரும். இன்னொருபக்கம், நிலத்தடி நீர்மட்டமும் 900 அடிக்குக் கீழே போயிட்டு. எங்களுக்கு மூன்று கிணறுகள் இருந்தது. அந்தத் தண்ணீரைக் கொண்டு, மிகவும் சிக்கனப்படுத்தி விவசாயம் பார்த்தேன். மாட்டுச் சாணம், கிடைத்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்குன்னு போட்டு மெள்ள  மெள்ள இந்தப் பூமியை பொன் விளையிற நிலமா மாத்தினேன். அப்புறம், வாழை, முருங்கை, கிழங்குன்னு இந்த மண்ணுக்கு ஏற்ற பயிர்களைப் பயிரிட்டேன். இயற்கை முறையில்தான் வெள்ளாமை பண்ணினேன். பெரிய அளவில் முதலில் லாபம் இல்லை. அப்புறம், எனது தோட்டத்தை ஒருங்கிணைந்த பண்ணையம் பண்ணுற இடமா மாத்தினேன். மெள்ள மெள்ள இயற்கை விவசாயம் எனக்குக் கைகொடுக்கத் தொடங்கிச்சு. என் கணவரும் என்னைப் புரிஞ்சுகிட்டு, உற்சாகப்படுத்தத் தொடங்கினார்
Like Reply
[Image: saroja_uruvaakkiya_nanthavanak_kaadu_2_11024.jpg]
அதன்பிறகுதான் எனக்குக் காடு வளர்க்கும் எண்ணம் தோன்றியது. 1 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க மரங்களை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். மா, பலா, நுணா, முள் சீத்தா, சப்போட்டா, கொய்யா, அத்தி, நாவல், கொடுக்காப்புளி, மலைவேம்பு, இலுப்பைன்னு ஏகப்பட்ட மரங்களை வளர்த்தேன். அவை வளர சிரமப்பட்டன. நம்மாழ்வார் கற்றுக் கொடுத்த வித்தைகளை களமிறக்கினேன். அதன்பிறகு, அனைத்து மரங்களும் செழித்து வளர்ந்தன. மரங்களைச் சுற்றிப் பல்வேறு செடிகொடிகளும் வளர்த்தொடங்கின. அவற்றை  அப்புறப்படுத்தாமல் காடு போல் மாற்றினேன். `நந்தவனம் காடு'ன்னு இதற்குப் பெயரும் வைத்தேன்.


இயற்கையான காடு போல் இந்த ஓர் ஏக்கர் நிலமும் மாறியதால், இங்கே பல்வேறு சிறுசிறு உயிர்களும் வாழ ஆரம்பித்திருக்கின்றன. கரூர் மாவட்டத்திலேயே அரிதாகிப்போன வகைவகையான பட்டாம்பூச்சிகளும் இந்தக் காட்டைச் சுற்ற ஆரம்பித்திருக்கின்றன. இங்கே நான் வளர்த்திருக்கிற மரங்களில் பழங்களைப் பறிப்பதில்லை. அதனால், நிறைய பறவைகளும் இங்கே தங்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக வந்தால், நிஜமாக எனக்குக் காட்டுக்குள் போய்ட்டு வந்த உணர்வு ஏற்படுது. மனசு சரியில்லன்னா, இந்தக் காட்டுக்குள் காலாற நடந்து வந்தா, உடனே மனசு லேசாயிடும்
Like Reply
[Image: 100_vayasai_thaandiya_veppamara_adiyil_saroja_11472.jpg]
இயற்கையா உருவாகி நமக்குப் பலன் தந்த காடுகளை அழித்துவிட்டோம். அதனால், மழை குறைஞ்சுப் போய்ட்டு. வறட்சி ஏற்படுது. புயல், பெருவெள்ளம்ன்னு ஏற்படுது. அதனால், நாம் அனைவரும் நமக்கிருக்கும் மொத்த இடத்தில் சிறிய இடத்தில் இதுபோல மரங்களை வளர்க்க வேண்டும். இல்லைன்னா, நாம் இயற்கைக்குச் செய்த பாவத்தைச் சரி பண்ண முடியாது. நான் வளர்த்த இந்தக் காடு எனது 5 ஏக்கர் வாழைத் தோட்டத்தை கஜா புயல் தாக்குதலிலிருந்து காப்பாத்திட்டு. பக்கத்து தோட்டக்காரங்க வயல்கள்ல பெரிய பலமான மரங்களே காத்துல சாய்ஞ்சுட்டு. ஆனா, எனது 5 ஏக்கர் வாழைத்தோட்டத்திலிருந்து ஒரு வாழை மரத்தைக்கூட கஜாவால் கீழே தள்ள முடியலை.
கஜா புயலைத் தடுத்து, வாழைத்தோட்டத்தைக் காப்பாத்தியது நான் வளர்த்த இந்த நந்தவனக் காடுதான். அதேபோல், இந்த மாவட்டத்திலேயே 100 வயசைத் தாண்டிய வேப்பமரம் ஒன்று எங்க தோட்டத்தில் இருக்கு. எங்க வீட்டைச் சமீபத்தில் சரிபண்ணினோம். அதற்கு, `பலகை செய்ய இந்த மரத்தை வெட்டலாம்'ன்னு பலரும் யோசனை சொன்னாங்க. `வேண்டவே வேண்டாம்'ன்னு ஒத்தக்கால்ல நின்னு அதைத் தடுத்துட்டேன். ஏன்னா, இந்த மரத்தைச் சில மணிநேரத்துல அழிச்சுரலாம். ஆனா, என்ன பண்ணுனாலும், நம்ம வாழ்நாளுக்குள்ள இதுபோல் ஒரு மரத்தை உருவாக்கிவிட முடியாது" என்றார்
Like Reply
இந்தியா வென்றது எப்படி?! #NZvIND
[Image: 147826_thumb.jpg]
நியுசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை 2-1 என வென்று சரித்திரம் படைத்தது இந்திய அணி. அதே நேரம் டாஸ்மனியக் கடலின் இந்த பக்கம் உள்ள நியூசிலாந்தில், இலங்கையை 3-0 என புரட்டிப் போட்டது நியூசிலாந்து அணி. இந்த இரண்டு அணியும் இப்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவதாக இருக்கும் நியூசிலாந்து அணி மோதுவதால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  #NZvIND
[Image: IndVsNZ_(2)_16141.jpg]
[color][font]
கடைசியாக 2014-ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி 4-0 என படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தமுறை தொடரை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது விராட் தலைமையிலான இந்திய அணி.[/font][/color]
Like Reply
நேப்பியரில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்கும் முன்பு “பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் 300 ப்ளஸ் ஸகோர் எல்லாம் அசால்ட்” என்றார்கள் வல்லுநர்கள். மைதானமும் சிறியதுதான். ஆட்டத்தில் பத்திற்கும் குறைவாகவே இரண்டு ரன்கள் ஓடப்பட்டது. 300 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய அளவுக்கு பிட்ச் இல்லையென்றாலும் 250 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய விக்கெட்தான். ஆனால், நியூசிலாந்தோ 157 ரன்களுக்கு ஆல் அவுட்.




ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலியே ஷமி நியூசிலாந்து ஓப்பனர் கப்டிலை வெளியேற்றினார். அற்புதமான இன்ஸ்விங்கரில் கப்டில் இன்சைட் எட்ஜ் ஆக, பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. தன் அடுத்த ஓவரில் மற்றுமொறு ஓப்பனரான கார்லின் முன்ரோவையும் பெவிலியன் திரும்ப வைத்தார்.  அரௌவுண்டு தி ஸ்டெம்ப்பில் அதே லென்த்... அதே இன் ஸ்விங்கர்... இந்தமுறை ஸ்விங் அதிகம். முன்ரோ அதை டிரைவ் செய்ய முற்பட்டு பந்தை முழுவதுமாக மிஸ் செய்தார். பந்து பைல்ஸை தட்டிச்சென்றது. இரண்டு பந்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முதல் பந்து வலது கை ஆட்டக்காரருக்கு போடப்பட்டது. இரண்டாவது பந்து இடது கை ஆட்டக்காரருக்கு போடப்பட்டது.
[Image: IndVsNZ_(4)_16244.jpg]
ஆட்டத்தின் நான்காவது ஓவரிலியே நியூசிலாந்து ஓப்பனர் இருவர்களையும் வெளியேற்றி இந்தியாவை தொடக்கத்திலேயே ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். இன்னும் சொல்லப்போனால் அவரது ஓப்பனிங் ஸ்பெல்தான் இந்திய வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்களான வில்லியம்சன், டெய்லர் இருவரும் வந்தபோது ஸ்கோர் 18-2. அந்த நிலையில் பேட்டிங்குக்கு வந்தால் யாருக்கும் பிரஷர் இருக்கத்தானே செய்யும். அதுவே அவர்களின் யதார்த்த ஆட்டத்துக்கு தடைப்போட்டது. காரணம் ஷமியின் அந்த ஸ்பெல்.
வில்லியம்சன் - டெய்லர் ஜோடி சரிவிலிருந்து மெல்ல ஸ்கோரை நகரச்செய்துக் கொண்டிருந்த சமயத்தில் சாஹலை அழைத்தார் கோலி. 14-வது ஓவரில் டெய்லரை `காட் அண்ட் போல்ட்’ செய்து ஜோடியைப் பிரித்து, தொடர்ந்து ஆறு போட்டிகளில் அரைசதம் கடந்த டெய்லரை 24 ரன்களில் வெளியேற்றினார். இரண்டு புல் லென்த் பாலை தொடர்ந்து ஒரு ஷார்ட் லென்த்தில் பிட்ச் செய்தார் சாஹல். நேராக அவர் கையில் விழுந்தது. அதன் பின் விக்கெட் மளமள வென விழத்தொடங்கியது. பின் சாஹல் உடன் குல்திப் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து பேட்ஸ்மென்களை திணறடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் வில்லியம்சன் அரைசதம் கடந்தார். அவரும் குல்தீப் சுழலில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பாக குல்தீப் 4, ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
Like Reply
“மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஸ்பின்னர்களை எதிர் கொள்ளும் விதத்தைப் பொறுத்தே இந்தத் தொடரின் வெற்றி நிர்ணயிக்கப்படும். அவர்களை சரியாகக் கையாளவேண்டும்” என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தொடர் தொடங்கும் முன் எச்சரித்தார். அவர் எச்சரித்ததைப் போலவே இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்களை சரியாகக் கையாளாமல் நியூசிலாந்து வீரர்கள் பணிந்து விட்டனர். இந்தப் போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் 7 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
[Image: IndVsNZ_(3)_16461.jpg]
அடுத்து158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் ஓப்பனர்கள் தவான்-ரோஹித் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. 41 ரன்கள் எடுத்த போது சூரிய வெளிச்சம் கண்ணில் படுவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் டக்வொர் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டு, 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கபட்டது. பிரேஸ்வெல் பந்தில் ரோஹித் 11 ரனில் ஸ்லிப்பில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஐசிசி டோர்னமென்ட் வருகிறதென்றாலே ஃபார்முக்கு வந்துவிடுகிறார் தவான். ஷூபம் கில் அணியில் ‘ஓப்பனர் பேக்கப்பாக ‘அணியில் சேர்க்கபட்டதால் தவான் இந்தப் போட்டியில் எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். கடந்த 12 போட்டிகளில் அவர் அடித்த டாப் ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே. ஆனால், இந்தப் போட்டியில் அரைசதம் கடந்து (75 ரன்) தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த ஃபார்ம் உலகக் கோப்பையிலும் தொடர வேண்டும்.
45 ரன்னில் பெர்குசன் பந்தில் கோலி வெளியேற பிறகு வந்த அம்பதி ராயுடு ஆட்டத்தை முடித்தார். இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. ஆட்டநாயகன் விருதை முகமது ஷமி தட்டிச்சென்றார். 
Like Reply
``ஏற்றுக்கொள்ளவே முடியாது; மன்னிப்பு கேட்க வேண்டும்” -பாகிஸ்தான் கேப்டனுக்கு எதிராகச் சீறிய அக்தர்
கிரிக்கெட் விளையாட்டில் ஸ்லெட்ஜிங்கும் ஒரு பகுதிதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஒரு வீரர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவரின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக அவரிடம் வம்பிழுப்பதை சிலர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். நடந்து முடிந்த இந்திய ஆஸ்திரேலிய தொடரில், பலமுறை ஸ்லெட்ஜிங்கைப் பார்த்தோம். ஆனால், எல்லாம் எல்லை மீறாமல் இருக்கும் வரைதான். 
[Image: sarfraz_05193.jpg]
ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் இனவெறியையோ நிறவெறியையோ தூண்டும் விதமாகப் பேசப்படும் கருத்துக்கள், எப்போதுமே பெரும் சர்ச்சையையும் சம்பந்தப்பட்ட வீரர்களுக்குச் சிக்கலையும் ஏற்படுத்தும். அதற்குப் பல சான்றுகள் உள்ளன. தற்போது, இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி,  சமீபத்தில் நடைபெற்ற 2 -வது ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், டூசன் மற்றும் பெஹ்லுகுவயோ ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் வெற்றிபெற்றது தென்னாப்பிரிக்கா அணி. 
Like Reply
[Image: sar_05407.jpg]
இவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாத காரணத்தால் கடுப்பான பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, பெஹ்லுகுவயோவிடம்,  ``ஹே கறுப்பு மனிதனே... உனது தாய் எங்கே இருக்கிறார்?” என உருது மொழியில் சொன்னது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் தெளிவாகப் பதிவானது.
பாகிஸ்தான் கேப்டனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்தும் சர்ஃப்ராஸ் அகமதுவுக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. பலர், சர்ஃப்ராஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் சர்ஃப்ராஸ் மீது நடவடிக்கை தேவை எனவும் கூறிவருகின்றனர். 
[Image: aktar_05284.jpg]
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதி வேகப்பந்து வீச்சாளரான அக்தர், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார். ட்விட்டரில் பேசியுள்ள அக்தர்,  ``ஒரு பாகிஸ்தானியாக இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டியின் தாக்கத்தில் அப்படி பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் பொது தளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார் ஆவேசமாக..
Like Reply
கோடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை




[Image: 201901232032257009_The-Chennai-High-Cour...SECVPF.gif]


சென்னை,

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக, வழக்கை நாளை எடுத்து கொள்வதாக நீதிபதி கல்யாண சுந்தரம் கூறி இருந்தார். 

இந்நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் குறித்து ஆதாரமின்றி பேசவும், ஆவணங்களை வெயிடவும் கூடாது என்று மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு  நீதிபதி கல்யாண சுந்தரம் தடை விதித்துள்ளார்.  முதல்-அமைச்சரின் மனுவுக்கு 30-ம் தேதிக்குள் பதிலளிக்க மேத்யூ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
Like Reply
`நல்ல சம்பளம் வாங்கியும் ஏன் போராடுறீங்க?’ - ஆசிரியர்களுக்கு எதிராகக் களமிறங்கிய கிராம மக்கள்
`40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களே, இது உங்களுக்கே நியமாக இருக்கிறதா. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீக்குங்கள். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்களைப் பணியில் அமர்த்துங்கள்' என்று ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                                                  [Image: 2_13458_12169.jpg]
 
தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் போராட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாவட்டத்திலுள்ள 80 சதவிகித அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது 



                                            [Image: vlcsnap-7193-10-06-20h56m29s465_12506.png]
 
இதைக் கண்டித்து, அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர், பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டு, ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பளம் போதவில்லை எனக் கூறும் ஆசிரியர்கள், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைக்குச் செல்லட்டும். அதிக சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைவிட, குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த கல்வியை அளிக்கின்றனர்' என்று கோஷங்களைப் போட்டனர். 
Like Reply




Users browsing this thread: 181 Guest(s)