சூப்பர் நண்பா.
ஒரு வழியாக கதையை வெற்றிகரமாக முடித்து விட்டிர்கள், அதற்கு முதல் நன்றி.
மாறுபட்ட கருத்துக்கள். நன்றிகள், கோபங்கள், எரிச்சல்கள், ஆச்சர்யம் தான். மனித மனம் எத்தனை விசித்திரம் கொண்டது. கள்ள காதலும் வேண்டும் அதன் பின்பு தண்டனையும் வேண்டும். என்ன ஒரு மனப்போக்கு இது. நிச்சயமாக புரியவில்லை தான்.
கதை முடிவை பற்றி எனது எண்ணம்: பெரிதாக பதிவிட்டதற்கு மன்னிக்கவும்.
நான் இங்கு கள்ள காதலில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு தான் ஆகா வேண்டும் என்று வாதிடவில்லை. நிஜ வாழ்வில் வேண்டுமானால் அப்படி நடக்கலாம். கணவன் மனைவியை கொன்று விடலாம் அல்லது மனைவி கணவனை கொன்று விட்டு கள்ள காதலனுடன் சென்று விடலாம். இங்கு அப்படி ஒரு எண்ணம் படிப்பவர்கள் மனதில் எப்படி உண்டானது என்று தான் இதுவரை விளங்கவில்லை. ஒரு வேளை நீங்கள் மோகன் கதாபாத்திரத்தை ரொம்ப நல்லவன் போல வடிவமைத்து விட்டதால் தான் என்னவோ. மோகன் பழி தீர்ப்பான் என்று சிலர் ஆர்வமாக காத்திருந்து ஏமாந்து போயி விட்டதால் வந்த எதிர்வினையோ.
ஆசிரியர் சொன்னது போல ஒரு ஆண் தவறு செய்தால் இந்த சமூகம் இத்தனை கொதித்து இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. இது எல்லாமே பெண்களுக்கு எதிராக மட்டுமே இயற்கையில் ஆண்களுக்கு உள்ள கோபம். அதனால் பெண்கள் இவ்வாறு செய்தால் தப்பில்லை சரி என்றும் எடுத்து கொள்ள கூடாது. இங்கு உள்ள பலரும் இது நிஜமல்ல, இது ஒரு கதை என்பதை மறந்து இந்த சம்பவங்கள் அவர்களை சுற்றி நடப்பதை போல கற்பனை செய்து கொண்டு அதற்குள் தங்களை உட்படுத்தி விட்டதால் வந்த பிரச்சனை தான் இது.
எனக்கும் பலர் தெரிவித்தது போல மோகன் தான் அதிகமாக பாதிக்கப்பட்டான் என்று தோன்றுகிறது. ஒருவன் கோபத்தால் ஒரு பேரழகியை பிரிந்தான் என்று சொன்னால் அவனை இந்த சமூகம் தூற்ற தான் செய்யும். விவாக ரத்தில் மோகன் அவ்வாறு போட்டதால் வந்த பிரச்சனை இதுவாக இருக்கும். எப்பவுமே ஒரு பெண் கணவனை பிரிந்து உடனே மறுமணம் செய்து கொண்டால், ஒன்று கணவன் அவளை கட்டிலில் சரியாக கவனிக்க வில்லை, இல்லை என்றால் அவளுக்கு ஏற்கனவே அவனுடன் கள்ள காதல் இருந்து இருக்க வேண்டும் அதனால் தான்அவனுடன் போயி விட்டாள் என்று தான் சொல்வார்கள்.
மோகன் தன மனைவி மற்றும் விக்ரம் செய்த செயல்களால் அவமான பட்டது மட்டுமன்றி உறவினர்கள், நண்பரகள், போன்றோராலும் இது போன்ற கேவலமான பேச்சுக்களை நிச்சயம் சந்தித்து இருக்க கூடும். அது ஒரு சில வருடங்கள் அவனை துன்பத்தில் ஆழ்த்தி இருக்க வேண்டும். ஒரு வழியாக அவன் துன்பம் தீர்ந்து மறுமணம் செய்து ஒரு நல்ல அன்பான மனைவி பிள்ளைகளை பெற்றான் என்பது மட்டும் பெரிய ஆறுதல்.
விக்ரம், பவனி இருவரும் திருமணம் செய்து கொண்டதால் எந்த விதமான தண்டனையும் அவர்கள் அனுபவிக்க வில்லை என்றே தோன்றுகிறது. பவனி அவள் கணவன் மற்றும் குடும்பத்தை விட்டு விலகி பெங்களூரு போயி விட்டதால் அவர்கள் யாரும் அவளை தூற்ற வாய்ப்பில்லை. விக்ரம் அவன் குடும்பத்துடன் இல்லை என்பதால் அவர்களும் பெங்களூரில் இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டியது தான். விக்ரமுடன் இருக்கும் நேரத்தில் பவனி தன மகனை பற்றியோ இல்லை குடும்பத்தை பற்றியோ நினைப்பதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது தன்னுடைய குடும்பத்தை, மகனை பிரிந்ததை பற்றி பவனி சிறிதும் வருத்தப்பட மாட்டாள். விக்ரம் ஒரு பேரழகியை மணந்ததனால் அவனது குடும்பமும், நண்பர்களும் காலப்போக்கில் அவர்கள் செய்ததை மறந்து அவர்களை மன்னித்து ஏற்று கொண்டு விடுவார்கள்.
இறுதியில் இங்கு ஒரு வாசகர் குறிப்பிட்டதை போல பவனி குடும்பம் தான் முழுவதும் பாதிக்க பட்டு இருக்கும். மோகன் குறிப்பிட்டதை போல அவர்கள் சொன்னாலும் பவனி விக்ரமை கல்யாணம் செய்து கொண்டதால், அவர்கள் இருவரும் ஏற்கனவே பேசி பழகியதை அவர்கள் உறவினர்கள் பார்த்து இருக்கிறார்கள் என்பதால் நிச்சயம் இது ஒரு கள்ள காதல் உறவு தான் என்றும் அதனால் தான் மோகன் பவானியை விவாகரத்து செய்தான் என்றும் அவள் உறவினர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். அதனால் பவனி தங்கை திருமணம் நடக்காமல் போயி இருக்கலாம். பவனி குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லாம் இப்படி பட்டவர்கள் தான் என்று பேச தொடங்கி இருப்பார்கள். மகள் மற்றும் குடும்பம் பற்றி உறவினர்களின் கேவலமான பேச்சுக்களை தாங்க முடியாமல் பவனி குடும்பம் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். இதுவும் ஒரு யூகமே.
அழகு மட்டுமே எல்லோருக்கும் அனைத்தையும் தந்து விடுவது இல்லை. அது சமயங்களில் ஆபத்தானதும் கூட. இங்கு இன்னொருவர் சொன்னார்.
"நீ நேசிக்கும் பெண்ணை விட உன்னை நேசிக்கும் பெண்ணே நல்ல வாழ்வுக்கு உத்திரவாதம்" என்று. உண்மைதான்
மோகன் இதை விக்ரமை பார்த்த நாளிலேயே தனக்கு இருக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்டான். அது இறுதியில் உண்மையாகி போனது பரிதாபம் தான்
"
நான் வெளியே போகும் போது என் மனைவியை சில வினாடிகள் நோட்டம் விட்டு சென்றேன். சிவந்த மேனி, தளதளவென்ற உடல், அழகிய முகம், எந்த அலங்காரமும் இல்லாமலே கவர்ச்சியாக தோற்றம் அளித்தாள். நான் ஏன் இவ்வளவு அழகானவளை கல்யாணம் செய்தேன் என்று முதல் முறையாக வருந்தினேன்."
இன்று பலருக்கு பெண்களின் நிஜ முகம் தெரிவதில்லை. அவர்கள் உள்ளம் புரிவதில்லை. தோற்றத்தை கண்டு ஏமாந்து, தனக்கு அது போல ஒரு மனைவி அமைய வில்லை என்று எண்ணுகிறார்கள். சிலர் அழகுதான் ஆனால் மனம் குப்பை. அலை பாயும் மனம் கொண்ட பெண்கள் பெரும் ஆபத்தானவர்கள் பவானியை போல. சில அழகான பெண்கள் அருகில் சென்றால் நாற்றம் அடிக்கும். அவர்கள் எல்லாம் தூர நின்று மட்டுமே ரசிக்க முடியும். சில பெண்கள் ஒப்பனை இல்லாமல் பார்த்தால் பயந்து விட கூடும். ஒரு சிலருக்கு மட்டுமே அழகும்ம் குணமும், வாசமும் ஒருங்கே அமையும். நிஜமான அழகு மனம் சம்பந்த பட்டதே. அழகு என்பது மறைய கூடியது. அழிய கூடியது.
பட்டினத்தார் சொன்னது போல
"
காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா"
என்பதை உணர்ந்தால் இது போல ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.
ஆக மொத்தம் இது வெறும் கதை மட்டும் தான் என்று புரிந்து கொண்டு நாம் இதை கடந்து போக வேண்டும். இனிமேல் கதை வேறு நிஜம் வேறு என்று உணர்ந்து தேவை இல்லாமல் சோசியல் மீடியா போன்ற வலை தளங்களில் பொங்குவதை போல இங்கு பொங்க வேண்டாம். பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவோம், இல்லையேல் மௌனம் காப்போம். எந்த வித லாபமும் இன்றி தங்கள் ரசிகர்களுக்காகவும், மனதிருப்திக்காகவும் மட்டுமே இங்கு கதை எழுதும் எழுத்தாளர்களை எழுத்துக்களால் /வார்த்தைகளால் இம்சிக்க வேண்டாமே.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
கீ போர்டினால் சுட்ட வடு.
விளக்கம்:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் கீ போர்டினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
அனைவருக்கும் நன்றி. வணக்கம்