Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"காணொளி சாட்சி"
கையில் மைக்குடன் ராகுலிடன் கேள்வி கேட்பதாக இருக்கும் அந்த சிறுமி, உண்மையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை.
படத்தின் காப்புரிமைKIDS & STAGE
அந்த சிறுமியின் புகைப்படம் ஒரு யூ- டியுப் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
பாலின பாகுபாடு குறித்து அந்த காணொளியில் அந்தச் சிறுமி பேசுகிறார்.
அந்த காணொளியானது, KidsandShare யு- டியூப் சேனலால் தரவேற்றப்பட்டுள்ளது.
உண்மையில் அங்கு நடந்தது என்ன?
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உண்மையில் அங்கு நடந்தது என்ன?
ராகுல் மூன்று இடங்களில் உரையாற்றி இருக்கிறார்.
பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் சமூகத்துடன் மற்றும் ஆயிரகணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
தொழிலாள சமூகத்துடன் முதலில் பேசிவிட்டு பின் அந்த மக்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
ஆயிரக்கணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆயிரக்கணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசினார்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் அவ்வாறான கேள்வி எழுப்பப்படவில்லை.
துபாயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிலால் அலியாருடன் பேசினோம்.அவர், "துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த நிகழ்வில், உண்மையில் அந்த நிகழ்ச்சியில் யாரும் கேள்வி கேட்கவே இல்லை. வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணிக்கு ராகுல் பேச தொடங்கினார். அந்த பேச்சில் சகிப்புத்தன்மையின் தேவை. இந்திய வள்ர்ச்சியில் என்.ஆர்.ஐ-இன் பங்கு குறித்து பேசினார்"என்றார்.
படத்தின் காப்புரிமைBILAL ALIYARImage captionஇடதுபுறம் இருப்பவர் பிலால் அலியார்
அந்த நிகழ்வில் வேறு யாரேனும் கேள்வி எழுப்பினார்களா என்ற நம் கேள்விக்கு, " முறையான கேள்வி பதில் அமர்வு எல்லாம் இல்லை. ஆனால் உரை முடிந்த பின் ஒருவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று சொன்னார்" என்று பிபிசி தமிழிடம் கூறினார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
படத்தின் காப்புரிமைBILAL ALIYAR
செய்திதாள்களில் வெளியிட்டது போல அந்த இறுமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றார் பிலால்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வறண்ட ஏரிகள் - கழிவு நீரிலிருந்து குடிநீர் - புதுமையான தீர்வை எதிர்நோக்கும் சென்னை
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது குடிநீர் வாரியம். இந்த நிலையில், கழிவுநீரை மிகத் தூய்மையாகச் சுத்திகரித்து விநியோகிப்பது ஒரு தீர்வாக அமையக்கூடும்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன.
இந்த ஆண்டு மட்டுமல்லாமல், பெரும்பாலான வருடங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால், அடுத்த ஆண்டு இந்தக் குடிநீர் விநியோகம் துவங்கலாம்.
முதற்கட்டமாக, நெசப்பாக்கத்திலும் பெருங்குடியிலும் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான பணிகளை குடிநீர் வாரியம் துவங்கியுள்ளது.
படத்தின் காப்புரிமைAFP
ஒவ்வோர் இடத்திலும் ஒரு நாளைக்கு தலா 10 மில்லியன் லிட்டர் கழிவு நீர் குடிப்பதற்கான தகுதியான வகையில் சுத்திகரிக்கப்படும்.
சென்னை நகரைப் பொறுத்தவரை தற்போது ஆறு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு நாளைக்கு மொத்தமாக 727 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டவை.
கழிவுநீரைச் சுத்திரித்து பயன்படுத்துவது சென்னை குடிநீர் வாரியத்திற்கு புதிதல்ல. "இந்தியாவிலேயே முதன் முதலில் கழிவுநீரைச் சுத்திகரித்து விநியோகிக்க ஆரம்பித்தது சென்னைக் குடிநீர் வாரியம்தான்" என்கிறார் அங்கு பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர்.
1980களின் இறுதியிலேயே கழிவுநீரைச் சுத்திரித்து தொழிற்சாலை பயன்பாட்டிற்காக சிபிசிஎல், எம்எஃப்எல் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியது குடிநீர் வாரியம். தற்போதும் இதுபோல பல நிறுவனங்களுக்கு கழிவுநீர் இருகட்டங்களாகச் சுத்திகரித்து வழங்கப்பட்டுவருகிறது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விரிவாக்கப்பட்ட சென்னை நகருக்கான ஒரு நாள் குடிநீர்த் தேவை அதிகபட்சமாக 1,200 மில்லியன் லிட்டரும் குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டராகவும் இருக்கிறது.
இவற்றில் 50 சதவீத நீர் ஏரி, குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கிறது. 25 சதவீதம் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளில் இருந்து கிடைக்கிற
மீதமுள்ள 25 சதவீதம் நிலத்தடி நீரிலிருந்து பூர்த்திசெய்யப்படுகிறது. ஏரி, குளங்கள் வற்றும்போது நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது அதிகரிக்கிறது.
சென்னை நகரிலும் நகரைச் சுற்றியும் அமைந்துள்ள ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 11 டிஎம்சி தண்ணீரைச் சேமித்துவைக்க முடியும்.
ஆனால், சென்னை நகரின் ஒரு வருட நீர்த் தேவையே 12 டிஎம்சியாக இருக்கிறது. மழை பொய்த்துப்போகும் வருடங்களில் நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதும் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து தண்ணீரை லாரிகளைக் கொண்டுவருவதும் வெகுவாக அதிகரிக்கும்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இரு ஆண்டுகளுக்கு முன்பாக இதே போல வறட்சி ஏற்பட்ட போது, சென்னையைச் சுற்றியுள்ள குவாரிகளில் தேங்கியிருந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவை மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பல ஏரிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.
ஆனால், குவாரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மிகக் குறைவு என்பதால் தொடர்ந்து நீர் ஆதாரங்களைத் தேட வேண்டிய தேவை சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டில் இப்படி ஒரு யோசனையை அதிகாரிகள் முன்வைத்தனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏற்கனவே சென்னை ஐஐடியில் இதேபோல, கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்தும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே பாணியிலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த குடிநீர் வாரியம் திட்டமிட்டிருக்கிறது.
முதற்கட்டமாக பெருங்குடியிலும் நெசப்பாக்கத்திலும் இதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. முதலில் கழிவு நீரிலிருந்து திடக்கழிவுகள் பெரிய சல்லடைகளின் மூலம் பிரிக்கப்படும். இதன் பிறகு பல்வேறு கட்டங்களில் அதிலுள்ள சிறு சிறு துகள்கள், உயிர்மத் துகள்கள் அகற்றப்படும்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதன் பிறகு, அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் முறையில் அதிலுள்ள அனைத்துத் துகள்களும் நீக்கப்பட்டு, கிருமிநீக்கம் செய்யப்படும். இதற்காக முதற்கட்டத்தில் ஓசோன் செலுத்தப்படுவதோடு, அதற்கடுத்த கட்டத்தில் குளோரினும் கலக்கப்படும்.
இந்த நிலையிலேயே இந்த நீர் குடிக்கத்தக்கதாகிவிடும் என்றாலும்கூட நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கப்படாது. இந்த நீர் அருகிலுள்ள ஏரியில் விடப்படும். பெருங்குடி கழிவுநீரகற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர், பெருங்குடி ஏரியிலும் நெசப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்படும் போரூர் ஏரியிலும் தேக்கப்பட்டு, பிறகு மீண்டும் சுத்திகரிக்கப்படும். இந்தத் தண்ணீர், வேறு நீர் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீருடன் கலக்கப்பட்டு பிறகு நுகர்வோருக்கு வழங்கப்படும்.
தற்போது முதற்கட்டமாக 20 மில்லியன் லிட்டரும் பிறகு படிப்படியாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் இந்த வகையில் சுத்திகரித்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இப்படி கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராக்குவதால் பல்வேறு பயன்கள் இருக்கின்றன என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். நிலத்தடி நீரையோ, ஏரி நீரையோ பயன்படுத்தாமல் புதிய நீர் ஆதாரம் கிடைக்கிறது.
கழிவுநீரை பாதியளவுக்கு சுத்திகரித்து ஆற்றிலும் ஏரியிலும் விடுவது குறையும். இதனால் ஆறுகளும் ஏரிகளும் சுத்தமாகும். கடல் நீரைச் சுத்தமாக்கிப் பயன்படுத்துவது போன்ற செலவுமிக்க, மையப்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டங்களைச் சார்ந்திருப்பது வெகுவாகக் குறையும்.
கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது இந்தியாவில் பெரிதாக வரவேற்கப்படுவதில்லையென்றாலும் உலகில் பல நாடுகள் இந்த முறையில் நீரை வீணாக்காமல் பயன்படுத்துகின்றன.
ஆஸ்திரேலியாவில் 20 சதவீதமும் சிங்கப்பூரில் 30 சதவீதமும் கழிவுநீர் சுத்திகரித்து பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் 85 சதவீத கழிவு நீர் சுத்திகரித்துப் பயன்படுத்தப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை தற்போது 6.5 சதவீத நீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலை பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. 2020வாக்கில் இதனை 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக வைத்திருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னைக் குடிநீர் வாரியத்தின் இந்த நடவடிக்கையை சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ஜனகராஜன் வெகுவாக வரவேற்கிறார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"நாம் இப்போது சுத்திகரிப்பது மிக மிகக் குறைவு. நம்முடைய கழிவுநீர் மொத்தத்தையும் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும். காரணம், குடிநீர் வாரியம் எந்த அளவுக்கு நீர் விநியோகம் செய்கிறதோ, அதைவிட அதிகமாக கழிவுநீர் உருவாகிறது. ஆகவே, கழிவு நீர் முழுவதையும் சுத்திகரித்து வழங்கினால், புதிதாக நீர் ஆதாரம் எதையும் தேடவேண்டியதில்லை” என்கிறார் ஜனகராஜன்.
கடல் நீரை சுத்திகரித்து வழங்குவதைவிட மிகக் குறைவான செலவில் கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியுமென்று கூறும் அவர், இவை ஏரியில் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதோடு, அந்தந்தப் பகுதிகளுக்கு ஆங்காங்கே சுத்திகரிப்பு செய்து வழங்க முடியும். இதனால், மையப்படுத்தப்பட்ட விநியோகத்தில் உள்ள அழுத்தம் குறையும். உதாரணமாக கடல் நீரை குடிநீராக்கினால், கடலோரத்தில் சுத்திகரித்து நகரின் பல பகுதிகளுக்கும் குழாய் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு தண்ணீரை மோட்டர்களின் மூலம் 'பம்ப்' செய்ய வேண்டும். ஆனால், கழிவுநீரை ஆங்காங்கே உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் செய்வதால் விநியோகம் செய்வது எளிது என்கிறார் ஜனகராஜன்.
கழிவுநீரைச் சுத்திகரித்த பிறகு உருவாகும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். சென்னைக் குடிநீர் வாரியம் மிகச் சிறிய அளவில் அதைச் செய்துவருகிறது. "பெரிய அளவில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும்போது, இன்னும் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும். எஞ்சியிருக்கும் திடக் கழிவை உரமாகப் பயன்படுத்த முடியும். இது எல்லாவிதத்திலும் நன்மைதரக்கூடிய விஷயம்" என்கிறார் ஜனகராஜன்.
சென்னையில் தற்போது சுமார் 4800 கி.மீ நீளமுள்ள நீர் விநியோகக் குழாக்களும் சுமார் 4200 கி.மீ. தூரத்திற்கான கழிவுநீர் குழாய்களும் உள்ளன. சுமார் 7 லட்சம் பயனாளிகள் சென்னைக் குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீரைப் பெற்றுவருகின்றனர்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
nd vs Aus: ஆஸி மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை
ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
Highlights
-
- ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை.
- டெஸ்ட் தொடரை தொடா்ந்து ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றி சாதனை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிபந்துவீச்சை தோ்வு செய்தாா்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனா். ஆஸ்திரேலியா அணியின் ஹேன்ட்ஸ்கோப் மட்டும் 58 ரன்கள் சோ்த்தாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனா். இதனால் அந்த அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[/url]
Quote:
cricket.com.au
✔@cricketcomau
Australia have certainly had their chances to dismiss both Kohli and Dhoni... #CloseMatters#AUSvIND | @GilletteAU
359
2:04 PM - Jan 18, 2019
[size][font][color][size][font]
85 people are talking about this
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
[/font][/size]
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான ரோகித் ஷா்மா 9 ரன்களிலும், ஷிகா் தவான் 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா். கேப்டன் விராட் கோலி 46 ரன்களில் வெளியேறினாா்.
Quote:
cricket.com.au
✔@cricketcomau
Not much of an appeal from the Aussies, but it looks like Dhoni has edged that! Not out... #CloseMatters#AUSvIND | @GilletteAU
259
2:28 PM - Jan 18, 2019
[size][font][color][size][font]
68 people are talking about this
[url=https://twitter.com/cricketcomau/status/1086185991721836544][/font][/size][/color]
[/font][/size]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
View image on Twitter
Quote:
[/url]cricket.com.au
✔@cricketcomau
India win the match and the series! Dhoni has done it again to guide them home unbeaten on 87* with four balls to spare: https://cricketa.us/AUSvIND19-3 #AUSvIND
937
4:16 PM - Jan 18, 2019
[color][size][font][color][size][font]
232 people are talking about this
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
[/font][/size][/color]
இதனைத் தொடா்ந்து அணி சோ்ந்த மகேந்திர சிங் தோனியும், கேதா் ஜாதவ்வும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயா்த்தினா். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 49.2 ஓவா்களில் 234 ரன்கள் சோ்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனி 87 ரன்களுடனும், கேதா் ஜாதவ் 61 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனா்.
View image on Twitter
Quote:
BCCI
✔@BCCI
Another Trophy in the cabinet. 2-1 [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
Jai Hind #TeamIndia #AUSvIND
7,188
4:55 PM - Jan 18, 2019
[color][size][font][color][size][font]
1,695 people are talking about this
[url=https://twitter.com/BCCI/status/1086222977073438720]
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
[/font][/size][/color]
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
முன்னதாக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது அதே அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி நிறைவு: சிறந்த வீரருக்கு கார் பரிசு
மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிக கெடுபிடியுடன் செய்யப்பட்டதால், எந்த வித அசம்பாவிதங்களும் இல்லாமல் முழு நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியும் சுமூகமாக நடந்து முடிந்தது. அதைப் போல நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியும் எந்த விதப் பிரச்னைகளுமின்றி நடந்து முடிந்தது.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியசாமி கோயில் திடலில் இன்று காலை மணியளவில் கோலாகலமாக துவங்கியது. இதில், தமிழகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் காளைகளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கியுள்ளனர். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஐபி-க்கள் காளைகள் போக்கு காட்டின.
குறிப்பாக டிடிவி தினகரனின் காளை, இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, சசிகலாவின் காளை, அதிமுக, திமுக பிரபலங்கள் சிலரின் காளைகள் போட்டியில் இடம்பெற்றன. டிடிவி தினகரனின் காளை மீது ரூ. 5 ஆயிரம் ரொக்கம் அறிவிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளிவந்த காளை இளைஞர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றது. மிரண்டுபோன இளைஞர்களால் காளையை நெருங்கவில்லை.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வின் காளை பிடிபட்டுச் சென்றது. சசிகலாவின் காளை கருப்பு நிறத்தில் இருந்தது. வாடிவாசலில் இருந்தே துள்ளிய காளை, யாரிடமும் பிடிபடாமல் சென்று விட்டது. இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பியின் காளை உள்ளிட்டவையும் போக்கு காட்டி விட்டுச் சென்றன. 9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மாலை 4.45 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.
COMMENT
சிறந்த காளையாக பரம்பப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 10 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு 2வது பரிசும், 9 காளைகளை பிடித்த அஜய் என்பவருக்கு 3வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 2 பெண்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம்
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு இளம் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, கேரளாவை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள், ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இவர்கள் சிசிடிவி உதவியால் அடையாளம் தெரிந்துவிட்ட நிலையில், இந்து அமைப்புகளின் மிரட்டலுக்கு உள்ளானார்கள். இருவருமே வீடு திரும்ப முடியாமல் தலைமறைவாகினர். இந்த நிலையில், சில தினங்கள் முன்பாக வீடு திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் அடித்து துன்புறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மூலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கவனத்திற்கு, இரு பெண்களும் கொண்டு சென்றனர். இன்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இதற்கு மாநில அரசே பொறுப்பு என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டும் விவகாரத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் 5.7 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.40,470 கோடி) அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கோரி வருகிறார். இதை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி நிராகரித்து விட்டது.
வாஷிங்டன்,
செனட் சபையில் செலவின மசோதாவை நிறைவேற விடாமல் முட்டுக்கட்டையும் போட்டுள்ளது. இதனால் அங்கு நிதி ஒதுக்கீடு இன்றி அரசு துறைகள் பல முடங்கி விட்டன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
சுமார் 8 லட்சம் ஊழியர்களும், அதிகாரிகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆப்கானிஸ்தான் மற்றும் பிரசல்ஸ் சென்று அங்குள்ள ராணுவ அதிகாரிகளை சந்திக்க இருந்தார்.
அவர் நேற்று முன்தினம் விமானத்தில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, அவரது இந்த அரசு முறை பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்து விட்டார். அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமரச பேச்சு வார்த்தைக்கு அவர் தேவை என ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.
இதேபோன்று சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் நடக்கிற வருடாந்திர உலக பொருளாதார பேரவை கூட்டத்துக்கு செல்லவிருந்த அமெரிக்க தூதுக்குழுவின் பயணத்தையும் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக ரத்து செய்து விட்டார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளா
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா
மத்தியில் பாரதீய ஜனதா கட்சி கடந்த நிதி ஆண்டில் 437 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
பதிவு: ஜனவரி 17, 2019 16:27 PM மாற்றம்: ஜனவரி 17, 2019 16:56 PM
புதுடெல்லி
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட ஒரு அறிக்கையில் பாரதீய ஜனதா இந்த தகவலை தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 'பிரவுண்ட் எலக்ட்ரானிக் ட்ரஸ்ட்' என்ற அமைப்பு மூலம் அதிக நன்கொடைகளை பெற்றுள்ளன. இந்த அமைப்புக்கு பெரிய நிறுவனங்களின் ஆதரவு உள்ளது. இதில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்புத் துறையுடன் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள் அடங்கும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
2025-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் : ஆர்.எஸ்.எஸ். முதல்முறையாக கெடு
உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பையாஜி ஜோஷி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பதிவு: ஜனவரி 19, 2019 03:50 AM
பிரயக்ராஜ்,
பையாஜி ஜோஷி பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “கும்பமேளா நமது கலாசாரத்தையும், பழமையான பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில், 2025-ம் ஆண்டு மீண்டும் ஒரு கும்பமேளா நடைபெறும். அப்போது நமக்கு ராமர் கோவில் கிடைத்து இருக்கும். அது தேசத்தின் பெருமை மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் இருக்கும்” என்றார்.
இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். முதல்முறையாக 2025-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று மறைமுகமாக கெடு விதித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை - தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை - மத்திய அரசு முடிவு
* மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்திற்காக முன்வைத்துள்ள விரிவான திட்ட அறிக்கை நகல் தந்தி டி.விக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
* அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும், தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை திட்டமாகவும் இதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* இதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என கூறப்படுகிறது.
* தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
* 2022ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
2000 காளைகள், 500 வீரர்கள், லட்சம் பார்வையாளர்கள்; விராலிமலையில் உலக சாதனை ஜல்லிக்கட்டு!
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தவறாமல் நினைவுக்கு வரும். முன்னதாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் பங்குபெற உள்ளனர்.
அதிக அளவிலான காளைகளை ஜல்லிக்கட்டில் இடம்பெறச் செய்து, உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு களிக்க 30,000 பேர் அமரும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விராலிமலை ஜல்லிக்கட்டு
இதையொட்டி 2,000க்கும் மேற்பட்ட போலீசார் காவலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போட்டிகளை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர் கார், இருசக்கர வாகனங்கள், சைக்கிள், பிரிட்ஜ், டிவி, மிக்ஸி, தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில் போன்ற பொருட்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த ஜல்லிக்கட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையில், சாதனை முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆயிரத்து 353 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 600 வீரர்கள் காளைகளை தழுவினர். இதைத் தொடர்ந்து உலக சாதனை அமைப்பின் உறுப்பினர்கள், அதற்கான சான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் விழாக் குழுவினரிடம் வழங்கினர். துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். சிறப்பாக விளையாடிய காளை மற்றும் காளையர்களுக்கு தலா ஒரு கார் பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
•
|