Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#1
Heart 
நான் எழுதும் நெஞ்சை தீண்டும் அம்பு...! கதையுடன் இந்த கதையும் ஏற்கனவே எழுதி நிறைவு செய்த உன்னால் தவிக்கும் மனமே...! கதையும் இணைந்து பயணிப்பதால் முதலில் திமிருக்கு மறுபெயர் நீதானே...! கதையை நிறைவு செய்துவிடலாம் என்று நினைத்து மீண்டும் தொடங்குகிறேன்.

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.


திமிருக்கு மறுபெயர் நீதானே...!

1


இது ஒரு கற்பனை கதை
 
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு அழகான பௌர்ணமி இரவில் அந்த தெருவுக்குள் வேர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருந்தேன்.
 
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் மின் கம்பத்தில் விளக்குகள் சரியாக எரியவில்லை.
 
இருட்டில் தனியாக செல்வது எனக்கு பயமாக இருந்தாலும் நிலவொளியின் துணையோடு எனது கால்களின் வேகத்தை மட்டும் அதிகரித்தேன்.
 
நான் இப்படி ஓடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
 
அந்த தெருவின் ஆரம்ப பகுதியில் என் ஆருயிர் காதலி மதுமிதா மயங்கி கிடக்கிறாள்.
 
ஒரு கேடுகெட்ட பொறுக்கி அவளுக்கு துன்பம் விளைவித்து விட்டான்.
 
எனது நண்பர்களை மதுமிதாவுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு அவனை தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கிறேன்.
 
அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் போதும்!
 
அந்த நிமிடமே அவனை குழி தோண்டி புதைத்து விடுவேன்.
 
இப்படி வெறியோடு தேடும்போதே அந்த தெரு முடிவடையும் இடத்தில் அவன் தனியாக நிற்பதை கண்டேன்!
 
அவனும் என்னை பார்த்துவிட்டான்!
 
நான் வேகமாக காலடி எடுத்து வைத்ததும் அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.
 
“டேய்! நீ எங்க போனாலும் உன்னைய உயிரோட விடமாட்டேன்டா”
 
கோபத்தில் எனது நெஞ்சம் துடித்தது.
 
மிக வேகமாக அவனை துரத்திக்கொண்டு ஓடினேன்!
 
அவன் என்னைவிட அதிவேகத்தில் ஓட்டமெடுத்தான்.
 
என்னால் ஈடு கொடுக்க முடியாமல் போனது.
 
நான் கொஞ்சம் சோர்வடைந்ததும் அவன் கண்ணில் இருந்து மறைந்துவிட்டான்.
 
“பொறுக்கி பயலே! எங்கடா போனே ?”
 
அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்திக்கொண்டே நான்கு சாலைகள் இணையும் இடத்திற்கு வந்தேன்.
 
அதன் மத்தியில் நின்றபடி கண்களை சுழற்றி அவனை தேடினேன்.
 
அப்போது திடீரென்று எனக்கு பின்னால் ஒரு சலசலப்பு கேட்டது.
 
சட்டென்று திரும்பி பார்த்தேன்.
 
நான் எதிர்பார்த்தது போலவே அவன்தான் என் எதிரில் நின்றான்.
 
அவனை ஓங்கி அடிப்பதற்காக கையை அசைத்தேன்.
 
ஆனால் அவன் கையில் ஒரு பெரிய உருட்டு கட்டை வைத்திருந்தான்.
 
நான் அதை கொஞ்சம் தாமதமாகத்தான் கவனித்தேன்.
 
“ஏன்டா! நீ என்னைய உயிரோட விடமாட்டியா ? இந்தா வாங்கிக்கோ”
 
பெயர் கூட தெரியாதவன் நான் சுதாரிப்பதற்குள் உச்சந்தலையில் கட்டையால் பலமாக தாக்கினான்.
 
“ஐயோ!”
 
நான் தலையில் கை வைத்தபடி கத்தினேன்.
 
அவன் என்னை தாக்கிவிட்டு விலகி ஓடுவது போல் தெரிந்தது.
 
என் கண்ணில் இருந்து அவனது உருவம் அகன்றதுமே நான் சுய நினைவை இழந்து கீழே விழுந்தேன்.
 
எனது இமைகள் தானாக மூடப்பட்டது.
 
நான் மொத்தமாக மயங்கி போனேன்.
 
என்ன நடக்கிறது ?
 
எந்த நிலையில் இருக்கிறேன் ?
 
இப்படி எந்த ஒரு சிந்தனையும் இல்லை.
 
ஆனால் திடீரென்று என் இமைகள் தானாக திறந்துகொண்டதை மட்டும் உணர்ந்தேன்.
 
இப்போது எனக்கு நன்றாக நினைவு வந்துவிட்டது.
 
என்னை சுற்றி அதிக வெளிச்சம் தெரிந்தது.
 
ஒரு அறைக்குள் இருந்த கட்டிலில் படுத்து கிடப்பதை அறிந்தேன்.
 
அந்த சூழலை வைத்து பார்க்கும்போது மருத்தவமனையில் இருப்பது போல் தோன்றியது.
 
அந்த நொடியே! எனக்கு மதுமிதாவின் நினைவு வந்தது.
 
அவளுக்கு என்ன ஆயிற்று ?
 
நான் எப்படி இங்கே வந்தேன் ?
 
யார் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது ?
 
எனது நண்பர்கள் எங்கே ?
 
இப்படி விடை தெரியாத பல கேள்விகளுடன் கட்டிலில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்தேன்.
 
என்னால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.
 
எனது கழுத்தை மெல்ல அசைத்து தலையை திருப்பி பார்த்தேன்.
 
எனக்கு பக்கத்தில் ஒரு நாற்காலி இருப்பதை கவனித்தேன்.
 
அதில் ஒரு பெண் உட்கார்ந்தபடி உறங்கிக்கொண்டு இருந்தாள்.
 
அவள் நல்ல சிவந்த நிறத்தில் கொஞ்சம் சதைபிடிப்புடன் அழகாக இருந்தாள்.
 
அந்த பெண் இருக்கும் நிலையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.
 
மேலே மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் கீழே நீல நிறத்தில் தொடைகள் தெரியும் நைட் பைஜாமாவும் அணிந்துகொண்டு படு கவர்ச்சியாக இருந்தாள்.
 
மேலும் அந்த பெண்ணின் முலை காம்புகள் டாப்ஸில் முட்டிக்கொண்டு நன்றாக தெரிந்தது.
 
அவள் நெஞ்சில் காய்த்து குலுங்கும் மாங்கனிகளுக்கு ப்ரா போடவில்லை.
 
ஒருவேளை ஜட்டியும் இல்லாமல்தான் உறங்கிக்கொண்டு இருப்பாளா என்று நினைக்கும்போதே எனது உடல் உஷ்ணம் அடைந்தது.
 
இப்படி ஒரு அழகான பெண்ணை நான் இதுவரை எங்குமே பார்த்தாக நினைவில் இல்லை.
 
இவள் மதுமிதாவின் சொந்தமாக இருக்குமோ என்று தோன்றியது.
 
பிறகு இதுபோல் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை ரசிப்பது தவறான விஷயம் என புரிந்ததும் அவளை மெல்ல அழைக்கலாம் என்று முயற்சித்தேன்.
 
“ஹலோ! மேடம்!”
 
கொஞ்சம் சத்தமாக அழைத்தேன்.
 
அவள் உடனடியாக விழித்துகொண்டாள்.
 
அவளது நீள் வட்ட முகத்தில் ஒரே பரவசம்.
 
திராட்சை போன்ற விழிகளால் என்னை அதிசயமாக பார்த்தாள்.
 
அடுத்த நொடியே அவளது ரோஜா நிற இதழ்கள் வேகமாக அசைந்தது.
 
“அங்கிள்! விக்ரம்! எழுந்துட்டான்!”
 
எனது பெயரை சொல்லிகொண்டே துள்ளிக்குதித்து எழுந்தவள் இடுப்புக்கு கீழ் புட்ட சதைகள் குலுங்க அறை கதவை திறந்துக்கொண்டு வெளியே ஓடினாள்.
 
உள்ளே ஜட்டி போடவில்லை என்கிற சந்தேகம் எனக்கு முழுவதுமாக தீர்ந்தது.
 
ஆனால் இவள் யாரென்று இன்னும் தெரியவில்லை என்பதால் சோகத்துடன் அப்படியே படுத்து கிடந்தேன்.
 
சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பெண் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.
 
அப்போது எனக்கு இன்பம் தரும் ஒரு நிகழ்வு நடந்தது.
 
அவளுக்கு பின்னால் எனது அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வந்து அறைக்குள் நுழைந்தனர்.
 
இவர்கள் இருவரும் ஊரில் இருந்து எப்போது வந்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
 
“நீங்க எப்போ வந்தீங்க ?”
 
“இப்பதான் வந்தோம் விக்ரம்! நீ எப்படி இருக்கே ?”
 
அம்மா என்னை அன்போடு விசாரித்தார்கள்.
 
“ஹ்ம்ம் பரவாயில்லமா”
 
நான் பதில் சொல்லிவிட்டு அப்பாவை பார்த்தேன் சிரித்த முகத்துடன் இருந்தார்
 
“வெளிய போகும்போது பாத்து போக கூடாதா ?” 
 
மீண்டும் அம்மாதான் பாசத்துடன் கேட்டார்கள்.
 
"நான் பாத்துதான் போனேன். அது சரி நீங்க எப்படிமா இங்க வந்தீங்க. என்னோட ஃப்ரண்ட்ஸ் ஃபோன் பண்ணாங்களா ? இப்போ மதுமிதா எங்க இருக்கா ?”
 
“டேய்! விக்ரம்! யாருடா அவங்கலாம் ?“
 
அந்த அழகான பெண் கேட்டாள்.
 
“ஆமா நீ யாரு ?” என்றேன்.
 
“பாத்தீங்களா அங்கிள்! என்னையே யாருன்னு கேக்குறான்”
 
கொஞ்சம் கோபத்துடன் பேசினாள்.
 
“அடிபட்டதுல எல்லாத்தையும் மறந்துட்டியா விக்ரம் ?”
 
அம்மா பதறினார்கள்.
 
“ஐயோ! என்னம்மா சொல்றீங்க ? நான் எத மறந்தேன் ? இவ யாருனே எனக்கு ஞாபகம் இல்லமா” என்று கத்தினேன்.
 
நான் சொன்னதை கேட்டதும் அவள் கண்களை கசக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
 
அந்த நொடி மீண்டும் அவளது குண்டி குலுங்குவதை பார்த்தேன்.
 
இந்த முறை ஜட்டிக்குள் இருப்பவன் எழுவதற்கு முயன்றான்.
 
அதை கடினப்பட்டு அடக்கி கொண்டேன்.
 
“டேய்! விக்ரம்! எங்கள யாருனு தெரியுது! ஆனா அவள மட்டும் உனக்கு தெரியலையா ? பாரு அவ எப்படி அழுதுட்டு போறானு. இருந்தாலும் உன்னோட விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சுடா”
 
என்ன இவர்கள் என்னை போட்டு இப்படி குழப்புகின்றனர்.
 
நான் எங்கே இருக்கிறேன் ?
 
என்னுடைய நண்பர்கள் எங்கே ?
 
மதுமிதா எங்கு சென்றாள் ?
 
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே என்று யோசித்துவிட்டு பேசினேன்.
 
“என்னப்பா நீங்களும் இப்படி சொல்லுறீங்க! நிஜமாவே எனக்கு அவ யாருனே தெரியல”
 
“என்னங்க சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க! நம்ம பையனுக்கு என்னமோ ஆகிருச்சு”
 
அம்மா கண் கலங்கினார்கள்.
 
“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. கொஞ்சம் அமைதியா இரு. நான் பேசி பாக்குறேன். இங்க பாரு விக்ரம்! அவ என் நண்பனோட பொண்ணு! பேரு நந்தினி! அவ உனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். இப்பவாச்சும் ஞாபகம் வருதா ?”
 
எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.
 
அது மட்டும் இல்லாமல் வெகுதூரத்தில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் எப்படி இவ்வளவு விரைவாக என்னை பார்க்க வந்தார்கள் என்று புரியாமல் தவித்தேன்.
 
“நீங்க சொல்லுறது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லப்பா. நான் எவ்வளவு நாளா ஹாஸ்பிட்டல்ல இருக்குறேன் ?”
 
“டேய் நேத்து நைட் பைக்ல போகும்போது ஸ்லிப் ஆகி பள்ளத்துல விழுந்துட்டே! உன்னோட கால்ல சின்ன ஃப்ராக்சர் ஆகிருக்கு! உனக்கு மெடிசின் குடுத்து கால்ல கட்டு போட்டுருக்காங்க! ஒரு பத்து மணி நேரமா நல்ல தூக்கத்துல இருந்தே. அதுக்கு அப்புறம் இப்பதான் நீ கண்ண திறந்தே பாக்குறே” என்றார்.
 
என்ன எனக்கு காலில் அடிபட்டதா ?
 
குழப்பத்துடன் கீழே பார்க்கும்போதுதான் வலது காலில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது.
 
அதனால்தான் கட்டிலில் இருந்து எழுவதற்கு முடியவில்லை என்பது புரிந்தது.
 
மேலும் மதுமிதாவை துன்புறுத்திய அந்த பெயர் தெரியாதவனை துரத்தி செல்லும்போது அவன் என்னை தலையில் தாக்கியதும் மயக்கம் அடைந்தது எனக்கு நன்றாக நினைவில் பதிந்து இருக்கிறது.
 
ஆனால் இவர்கள் ஏதோ புதிதாக கதை சொல்கின்றனர்.
 
என்னால் எதையுமே நம்ப முடியவில்லை.
 
மெல்ல எனது கையை எடுத்து உச்சந்தலையை தொட்டு தடவி பார்த்தேன்.
 
ஒரு கட்டும் போடவில்லை.
 
மேலும் சிறு காயம் கூட ஏற்படாமல் சாதாரணமாக இருந்தது.
 
இதெல்லாம் எப்படி சாத்தியம் ?
 
எனக்கு தலையே வெடித்து சிதறிவிடும் போல் இருந்தது.
 
“என்னைய யாருப்பா இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது ?”
 
“நந்தினிதான் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு உன்னைய அட்மிட் பண்ணுனா. அவள போயி தெரியாதுன்னு சொல்லுறியேடா”
 
“யாருப்பா அந்த நந்தினி ?”
 
“நந்தினி உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்னு இப்பதானே சொன்னேன்! திரும்ப அதையே கேக்குறியே!”
 
“ஐயோ! எனக்கு ஒண்ணுமே புரியலையே. சரி நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்கபா. மதுமிதாவுக்கு என்ன நடந்துச்சு ? அப்புறம் என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எங்கதான் போனாங்க ? கெஞ்சி கேக்குறேன் தயவு செஞ்சு சொல்லுங்கப்பா”
 
“என்னடா விக்ரம்! கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம பேசுறே! யாருடா இந்த மதுமிதா ?”
 
“அம்மா நீங்க எல்லாத்தையும் மறந்துட்டீங்களா ?”
 
“நான் சென்னைல பி.டெக். படிக்கிறேன்.”
 
“நேத்து மிட் நைட் ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமா பாத்துட்டு வரும்போது என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் மதுமிதாவ எவனோ ஒருத்தன் துரத்திட்டு வந்தான்.”
 
“அப்போ அவ அந்த இடத்துலயே மயங்கி விழுந்துட்டா!”
 
“நான் அவன ஏன்டா துரத்துனேன்னு கேட்டதும் அந்த இடத்த விட்டு ஓடிட்டான்!”
 
“அப்புறம் நான் ஓடி போயி அவன தேடுனேன்!”
 
“அந்த டைம்ல அவன் எனக்கு பின்னாடி வந்து என்னோட தலையில உருட்டு கட்டையால அடிச்சுட்டு எஸ்கேப் ஆகிட்டான்”
 
“என்னங்க நம்ம பையனுக்கு நிஜமாவே என்னமோ ஆகிருச்சு! இப்பவாச்சும் டாக்டர கூப்பிடுங்க”
 
நான் விபரமாக சொன்னதை கேட்டு அம்மா மீண்டும் பதறினார்கள்.
 
“ஆமா! நீ சொல்லுறதும் கரெக்ட்தான். நான் உடனே போயி டாக்டர அழைச்சுட்டு வரேன்” என்று அப்பா கூறினார்.
 
அய்யோ! எனக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டது என முடிவு செய்துவிடுவார்களோ என்று பயந்து பேச ஆரம்பித்தேன்.
 
“ஒரு நிமிஷம் நில்லுங்கபா! நீங்க எப்போ சென்னைக்கு வந்தீங்க ?”
 
“அடேய்! விக்ரம்! நாம பல வருஷமா மும்பைல இருக்கும்போது சென்னைக்கு எதுக்குடா போகணும் ? நீயே மும்பைல இருக்குற யூனிவர்சிட்டிலதான் பி.டெக். படிக்கிறே! ஏன்டா எங்கள இப்படி போட்டு கன்ப்யூஸ் பண்ணுறே ?”
 
என்னது மும்பையா ?
 
அதை நான் வரை படத்தில் மட்டும்தானே பார்த்திருக்கிறேன்.
 
எப்படி எனக்கே தெரியாமல் பல வருடமாக இங்கே இருந்துள்ளேன் ?
 
ஒன்றுமே விளங்கவில்லையே!
 
“அப்பா நீங்க சொல்றது எதையுமே என்னால நம்ப முடியல”
 
“இனி சரிப்பட்டு வராது. நான் டாக்டர அழைச்சுட்டு வரேன்” என்று அறையைவிட்டு வெளியேறினார்.
 
“அம்மா! நீங்க சொல்றத கேக்கும்போதே பயமா இருக்கு. அதோட உங்களுக்கு மதுமிதாவ ஞாபகம் இல்லையா ? அவ நம்ம வீட்டுக்குலாம் வந்துருக்காமா”
 
“விக்ரம்! உனக்கு நிஜமாவே என்னமோ ஆகிருச்சுடா! இப்ப எதுவும் பேசாம ரெஸ்ட் எடு! எதுவா இருந்தாலும் டாக்டர் வந்ததும் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அம்மாவும் அறையைவிட்டு வெளியில் சென்றார்கள்.
 
இப்போது நான் மட்டும் அறையில் தனியாக படுத்து கிடந்தேன்.
 
இவர்களுக்கு நான் சொல்வது எதுவுமே புரியவில்லை.
 
அதோடு அம்மாவும் அப்பாவும் பேசுவது அனைத்துமே எனக்கும் சுத்தமாக நினைவில் இல்லை.
 
பிறகு எப்படி மதுமிதாவுடன் பழகிய நினைவுகள் அனைத்தும் மனதில் இருந்து அழியாமல் நன்றாக பதிந்து இருக்கிறது ?
 
அப்படியென்றால் நிஜமாகவே மதுமிதா என்பவள் யார் ?
 
என்னுடைய கற்பனையா ?
 
நான் பலத்த சிந்தனையோடு இடது கையை மடித்து என்னுடைய நெற்றியில் வைத்துகொண்டேன்.
 
அப்போது மணிக்கட்டில் ஒரு கைக்கடிகாரம் இருப்பதை கவனித்தேன்.
 
அது எனக்கு மதுமிதா அளித்த பரிசு என்கிற விஷயம் நினைவுக்கு வந்ததும் உடல் முழுவதும் மகிழ்ச்சி பரவி உற்சாகம் பிறந்தது...
[+] 2 users Like feelmystory's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 17-12-2023, 07:24 PM



Users browsing this thread: 1 Guest(s)