Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதுமிதா [completed]
#1
அந்தி சாயும் மாலைப் பொழுது கதிரவன் விடை பெரும் நேரம் மதியும் விஜயும் அட்வான்ஸ் ந்யூ இயர் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

நாளைக்கு எனக்கு என்ன கிப்ட் தருவ விஜி?

உனக்கு என்ன வேணும் மதி?

நீ என்ன குடுத்தாலும் ஓகே

நீ மறக்க முடியாத கிப்ட் தரேன்

ஹே என்ன கிப்ட் இப்ப சொல்லு ப்லீஸ்

சொன்னா சஸ்பென்ஸ் போயிரும்

அஞ்சு வருஷமா பழகுறோம் இப்பவும் உன் புத்தி மாரல

காலேஜ் வந்ததும் உன் முன்னாடி என் கிப்ட் இருக்கும் பை செல்லம்

விஜய் குடுக்கும் கிப்ட் என்னவாக இருக்கும் மதிக்கு விளங்கவில்லை

மதிய காதலிப்பதாக சொல்லுவான்ணு மூணு வருஷமா காத்துக்கிட்டு இருக்கா

இன்னைக்கு விஜி கண்ணுல தெரிஞ்ச பளபளப்பு நாளைக்கு அவன் தன் காதலை சொல்லிறுவாண்ணு நம்பிக்கை வந்துச்சு

மதுமிதாவும் விஜய ராகவனும் ஒரே காலேஜில் வேறு வேறு பிரிவில் படிப்பவர்கள்.

எல்லோரும் மது என்று அழைத்த பெயர் விஜைய் மதியாக அழைத்த காரணம் அவன் பால் அவளுக்கு காதல் வந்து விட்டது.

ஐந்து வருடம் பழகினாலும் விஜைய் கேரக்டர் மதிக்கு தெரியாது என்பதே உண்மை. ஸ்கூலில் பழகிய பழக்கம் காலேஜிலும் தொடர்ந்தது
<t></t
இருவரும் நல்ல நண்பர்கள். மதியின் தந்தை இறந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது.

விஜயின் தந்தை நிறுவனத்தில் அவர் பணியில் இருந்ததால் அவர் மனைவிக்கு வேலை போட்டு கொடுத்தார். மதியின் கல்விக்கும் கை கொடுத்தார்.

இப்போது பி.ஈ ஈஸி பிரிவில் கடைசி செமஸ்டர், தன் முதலாளி மகன் விஜைய் என்பதை மறந்து, அவன் பால் அன்பு கொண்டிருந்தாள்.

நாளை விடியும் இரவு எனக்காக மட்டுமே என்ற மிதப்பில் கண்களில் கனவோடு உறங்கினாள். காலை விடிந்தது. மதுவிடம் இருப்பத்ிலேயே நல்ல துணியை எடுத்து அணிந்து கொண்டாள்.

ஒப்பணையொடு கிளம்பும் மகளை கடைக்கண்ணால் கவனித்த லலிதா அம்மாள் தன் மகள் வாழ்வு செழிக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டாள்.
<t></t>
அவசரமாக பஸ் பிடித்து இதோ காலெஜும் வந்து விட்டது. இன்று விடுமுறை என்றாலும் ந்யூ இயர் கொண்டாட்டம் நடந்துகொண்டு இருந்தது.

விஜைய் வந்தான் மயக்கும் புன்னகை சிந்தினான். வெரி பியியூடிஃபுல் என்றவனின் முகத்தை பார்க்க கூசி நின்றாள்.

சட்டென்று சுதாரித்து என் கிப்ட் குடு என்று கண்ணை மூடி கையை நீட்டினாள்.
அவள் கை மேல் மெல்லிய பஞ்சு போன்ற கைகள் இணையவும் குழப்பத்தோடு கண் திறந்தாள்.
அங்கே காவ்யா தன் தெத்து பல் சிரிப்போடு நின்று இருந்தாள்.

நான் புரியாமல் விஜய்
முகத்தை பார்த்தேன். மீட் மை லவ் காவ்யா என்றான்.

நான் இயன்றவரை புன்னகை புரிந்து வெளியேறினேன்.
வாயில் படியில் நின்றிருந்த உதய சந்திரனின் உதட்டில் ஒரு ஏளன புன்னகை மலர்ந்தது.

அப்பாடா என் நண்பன் தப்பிசிட்டான் என்ற பெரு மூச்சுடன் விலகி வழி விட்டான்.
அவன் ஏளன உதட்டு வளைவில் கூனிக் குறுகி வெளியேறினாள் மதி


உதய சந்திரன் விஜயின் நண்பன். பணத்தை விட்டெறிந்தால் எவலும் பல்லிலிப்பாள் என்ற மனப்பாங்கு உள்ளவன்.
மதி வீஜயுடன் பழகுவது அவன் பணத்திக்குதான் என்பதை ஆணிதனமாக நம்புகிறவன்.

காவ்யா பணக்கார வீட்டுப் பெண் சோ பணம் பணத்தோடு சேரப் போகிறது.
மதுவுக்கு ஏமாற்றம் அவமானம் எல்லாம் ஒன்று சேர்ந்து அழுதாள்.

இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. தான் சொந்தக் காலில் நின்று நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்
என்று முடிவுக்கு வந்தவள் மறந்தும் தன் நண்பனை பிறகு சந்திக்க வில்லை.
அவனும் காவ்யா காதலில் திளைத்து மதியை மறந்தான்.
<t></t>
விஜி என்னை நேசிக்க வில்லை என்பதை விட உதயசந்திரன் என்னை பணப்பேய் என்று நினைத்தது அதிகமாக வலித்தது .

கல்லூரி இறுதி தினம் விஜி என்னை சந்திக்க வந்தான்.

மதி..மதி..யேய் என்ன மதி பேசமா போற?

உனக்கு என் கியாபகம் எல்லாம் இருக்கா.

ஐயோ என்னப்பா நான் காவ்யாகூட இருந்தாலும் உன்னை நினச்சுட்டுதான் இருந்தேன்.

பாரு இல்லானே நீ எம் பி ஏ படிக்க அப்பாகிட்ட சீட் வாங்க சொல்லி இருப்பேனா?

அதெல்லாம் வேண்டாம் விஜி நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.

என்னது நீ வேலைக்கு போறயா..சரிதான் போ இந்த காலத்துல வெறும் பி ஈ வெச்சு என்ன சம்பாதிக்க முடியும்னு நினைக்குற?


அது உன்னை மாதிரி வசதியான பிள்ளைகளுக்கு விஜி

லூசு மாதிரி உளறாம நாளைக்கு என் பெர்த் டே பார்ட்டி கு வா மாத்தெல்லாம் அங்க வெச்சு சொல்லுறேன் ஓகே பை மதி.

மாலையில் நடந்து கொண்டிருக்கும் விழாவில் நான் கலந்து கொள்ள வில்லை.

என் தோழியின் அக்கா மூலமாக சென்னை சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனம் துடித்தது .

அந்த சந்திரன் என்னை என்னவென்று எண்ணி விட்டான்.

விழாவில் நான் கலந்து கொள்ளாமல் இருந்தது உதயனுக்கு வருத்தம் என்று அப்போது எனக்கு தெரியாது
<t></t>
அம்மாவிடம் பேசி இந்த ஊரை விட்டு போவது என்று முடிவு செய்தேன். இரவில் அம்மாவிடம் பேசிய போது அம்மா ஏதோ புரிந்தாவளாக சரிடா கண்ணா தங்கை, தம்பி படிப்பு கெடுமேனு யோசிக்கூறேன் என்றார். அம்மா நான் வெளியூர் போயி வேலை செய்ய்யட்டுமா ப்லீஸ். யாருமில்லாம வெளியில் தங்குறதது தப்புமா. நான் என் தோழி கிட்ட கேட்டு இருக்கேன் மா ப்லீஸ். சரி அதுக்கு இன்னும் டைம் இருக்கு நீ நல்லா ப்ரிபர் பண்ணு சரியா. ஓகே மா.

சென்னையில் வேலைக்கு சேர்ந்த பின் குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்தது. அம்மா என்னை மூத்த மகனாகவே நினைத்துவிட்டார் என்று பிறகுதான் புரிந்தது. விஜி காவ்யாதிருமணம் முடிந்திருக்கும் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன்.நான் எதை பற்றியும் நினைக்கும் நிலமையில் இல்லை. நல்ல வேளை உதய சந்திரனை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை.

தம்பி வேளி நாட்டில் ஸ்காலர் ஷிப் பில் படித்து கொண்டு இருக்கிறான். கையோடு வேலையும் கிடைத்து விடும். அப்படி இப்படி என்று ஏழு வருடங்கள் கடந்து விட்டது.

என் தங்கை என்னை விட இரண்டு வயதும்,என் தம்பி மூன்று வருடமும் சிறியவர்கள். ஒவ்வொரு கடமையாக முடித்துக்கொண்டு இருந்தேன். மனதில் ஆராத ரணமாக உதய சந்திரனின் முகம் அடிக்கடி வந்து போனது.

நான் வேலை செய்வது ஒரு எலெக்ட்ராநிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில். என் துறையில் தவறுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று ஆனால் என் மேனேஜர் குமார் என் தவறு அறிந்து என்னை தன் வழிக்கு கொண்டு வர திட்டம் போட்டார். வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம், ஏனோ மனம் சஞ்சலம் அடைந்தது.என்னுடன் வேலை செய்யும் குமார் என்னை ப்ளேக் மெயில் செய்வது பிடிக்க வில்லை. கூட்ட நெரிசலில் இருந்து விடுபட்டு நெரிசலில் தப்பித்து வீடு வருவதற்க்குள் அப்பாடா என்று ஆயாசமாக இருந்தது.

ஹெய் மதி ஏன்டி இவ்ளோ நெரம், உனக்காக எல்லொரும் வெய்ட் பண்ணுராங்க வா சீக்கிரம்

அம்மாவின் பதற்றம் என்னையும் தொற்றிக் கொண்டது. மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வந்து இருந்தார்கள். என் தங்கை பட்டு புடவை சகிதம் கூடத்தில் அமர்ந்து இருந்தாள். ஆம் என் கடைசி கடமை...

என் தங்கைக்கு வயது இருபத்து நான்கு, ஆறு மாதம் கழித்து திருமணம் என்று நிச்சயம் செய்தோம்....வந்தவர்களின் ஒரே கேள்வி மூத்த பெண்ணுக்கு செய்யாம ஏன் சின்னவலுக்கு திருமணம் செய்யுறீங்க? நான் கேள்வி கேட்ட பெண்ணிடம் சொன்ன பதில் : இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை நான், எனக்குனு சில கடமைகள் இருக்கு...அது முடிஞ்சாதான் நான் என்னை பத்தி யோசிக்க முடியும்.

அம்மா என்னை பெருமையாக பார்ப்பதை அறிந்து தலை குனிந்தேன்...உண்மை எனக்குத்தானே தெரியும்...காதல் வலி கொண்ட யாராலும் அடுத்த திருமணத்தை நினைக்க கூட முடியாது..எனக்கு பிடித்த என்னவனை தவிர நான் யாரையும் மணக்கப் போவதில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தது, இரவு உணவின் போது அம்மா என் திருமணம் பத்தி பேசினார்கள்,

ப்ளீஸ் மா...நிரய கடன் இருக்கு எல்லாம் அடஞ்சதும் யோசிக்கலாம்.

அடுத்த நாள் பதற்றம் மாறாமல் ஆஃபீஸ் சென்றேன். குமார் வந்திருக்கவில்லை! இனி அவன் வரப்போவதும் இல்லை!!!

எம்டி அழைப்பை ஏற்று உள்ளே சென்ற எனக்கு குப்பென்று வியர்த்தது...இவனா இவன் எப்படி இங்கே, இவன் இங்கே எம்டி சேரில் எப்படி?? தலை சுற்றி மயங்கி விழுந்தேன்....

கண் மிழித்த போது அவன் முகத்தில் ஏளனம் புன்னகையாக விரிந்தது.... புது டெக்நிக் நிரய கத்துக்கிட்ட போல இருக்கு.... ஹா ஹா ஹா...
<t></t>
உதய் நீ ..ங்கள்... நீங்கள் எப்படி இங்கே?

அவன் முகம் சுழித்து, எம் டி யை பெயர் சொல்லி அழைப்பது தவறு தெரியுமா?

ஸா....ஸாரி.. ஸார்

ஹ்ம் நீ மயங்கி விழும் அளவுக்கு நான் அழகாகவா இருக்கிறேன்..ஐ மீன் என் அழகில்தன் மயங்கி விழுந்தாயா?

அழகாம் அழகு கருவாயன்க்கு ஆசைய பாரு என்றவள் உதய சந்திரனை உற்று பார்த்தாள்.
ச்சே ச்ச்சே அவ்ளோ கருப்பு இல்லை கொஞ்சம் மாநிரம் ஆனாலும் கலையான முகம்.
இப்படி எத்தனை பேருக்கு அமையும். எடுப்பான நாசி, கூர்மையான விழிகள், உதடு மட்டும் இளம் ரோஸ் நிறம், சிகரட் பழக்கம் இல்லை போல.
தன் மனம் போகும் போக்கை கண்டு மிரண்டு இவ்வுலகத்துக்கு மீண்டு வந்தாள்.

ஸோ நான் பாஸ் மார்க் வாங்கி விட்டேனா?

அவள் முகம் கன்றி சிவந்ததை ரசித்து நின்றவன் முதலில் சுதாரிதான்.

உதட்டில் மீண்டும் ஏளனம் மலர்ந்தது.

சொல்லுங்க ம்ம் சொல்லு மிஸ். மதுமிதா ..மிஸ் தானே?

எஸ்

ஹ்ம் ஒரு பெரிய அமவுண்ட் லோன் கேட்டு இருக்க

ஆமா ஸார் இன்னும் ஆறு மாசத்துல என் தங்கை கல்யாணம்

நீ கல்யாணம் பண்ணாம உங்க தங்கைக்கு கல்யாணம் செய்ய காரணம்?

ஸார் அது என் பர்ஸநல்

ஹோ...இன்னும் எந்த பணக்காரணனும் மாட்டலையா?

ஸார் என்னை பத்தி தவறா பேச உங்களுக்கு உரிமை இல்லை

உனக்கு லோன் தர முடியாதே மிஸ்

ஐந்து வருடமா நான் இங்கு வேலை செய்கிறேன். உங்களுக்கு என் அனுபவம் தெரியாது!

ஏழு வருடத்துக்கு முன்பே எனக்கு உன்னை தெரியும்

ஸார் இது என் தங்கை வாழ்க்கை ப்லீஸ் உங்க கோபத்தை இதுல காட்டாதீங்க

சரி உனக்கு லோன் தர முடியாது பதில் ஒரு உதவி செய்கிறேன்.

சொல்லுங்க ஸார்

அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் ஒரு காண்ஃபெரெந்ஸில் கலந்து கொள்ள போகிறேன்.
என்னோடு நீயும் வர வேண்டும். ஒரு மாதம் என்னுடன் இருந்து என் வேலையை முடித்து தர வேண்டும். டீல் ஓகே

ஸார் என்னால் முடியாது. நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள்.

உன் குலம் கொத்திரம் எனக்கு தேவையில்லை. நான் உன்னை பெண் கேட்டு வரவில்லை.
எனக்கு நீ உதவினால் உன் லோன்க்கு பதில் நீ கேட்ட தொகை சம்பளம் கிடைக்கும்.

என்னை தேர்ந் தெடுத்த காரணம்

உன் அழகு,உன் பணத் தேவை அதோடு ஒரு மாதம் தங்குவதற்க்கு மற்றவர் வீட்டில் ஒத்துகொள்ள மாட்டார்கள்.

எனக்கு யோசிக்க நேரம் வேண்டும்

நாளை காலை எனக்கு பதில் தெரிய வேண்டும்

சரி ஸார்

தளர்ந்த நடையொடு எம் டி இன் அறையில் இருந்து வெளியே வந்தேன்.
இவன் எப்படி இங்கு என்ற குழப்பத்துடன் என் அறை தடுப்புக்குள் சென்று அமர்ந்தேன்.

ஐந்து நிமிடத்தில் ஒரு காஃபியும் ப்ரெட் டோஸ்ட் பீயுன் கொண்டு வந்து தந்தான்.

எம் டி இன் உத்தரவாம்

உள்ளே சென்ற காஃபியின் உற்சாகத்தில் வேலையை முடித்து வீடு செல்ல பஸ் நிலையம் வந்தேன்.

அமெரிக்கா செல்ல அம்மாவிடம் எப்படி அனுமதி வாங்குவேன்
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அம்மாவிடம் விஷயத்தை சொல்லும் போது அம்மாவுக்கு விருப்பம் இருக்காது என்று நினைத்துதான் சொன்னேன்
ஆனால் நேர் மாறாக அம்மா என் வாயில் சர்க்கரை கொண்டு வந்து போட்டார். கடவுள்தான் நமக்கு வழி காட்டி இருக்கார் மதிக்குட்டி.

பையன் வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுராங்க. மாப்பிளைக்கு துபாய்ல வேலை கிடைச்சு இருக்காம் .
உன் தங்கை வந்த நேரம்னு அவங்க அம்மாக்கு அவ்ளோ சந்தோஷம். உன்கிட்ட எப்படி பணம் பெரட்ட சொல்லுறதுணு கைய பெசஞ்சுட்டு இருந்தேன்.
பெருமாள்க்கு என் வேண்டுதல் கேட்டுருச்சு.
அம்மா கண் கலங்க என் கையை பிடித்தபடி பேசியவர், என் முக மாறுதலை கண்டதும் பின் வாங்கினார்.

என்ன மதி ஏன் இப்படி பாக்குற? நீதான் கல்யாணம் பண்ண மாட்டேனு அடம் பிடிக்குற!
உன் தங்கை தம்பியாவது சந்தோஷமா இருக்கட்டுமே டா!

என் கண்களில் நீர் கோர்த்தது. மாற்றாந்தாய் என்பதை நிரூபித்து விட்டாள்.

ஒரு வயதாக இருந்த போது தாயை இழந்து தன்னை பார்த்துக்கொள்ள வந்த ஸித்தியைஅம்மாவாக ஏற்றாள்.
இப்போதல்லவா புரிகிறது. இனி புரிந்து என்ன பிரயோஜனம்!

இரவில் உணவருந்தாமல் உறங்கினேன். காலையில் என் தங்கையின் தலையனைக்குள் மாப்பிளையில் ஃபோட்டோ கண்ட போது மனம் வலித்தது.

ஆபீஸ் சென்றதும் எம் டி அறையை தட்டினேன்.

எஸ் கம் இன்

அவன் முகம் பாராது சொன்னேன், உங்களுடன் அமெரிக்கா வர எனக்கு சம்மதம்

தட்ஸ் குட், விசா எல்லாம் ரெண்டு நாளுல ரெடி ஆயிரும். அது வரைக்கும் கொஞ்சம் நீ கத்துக்க வேண்டியதிருக்கு!

ஓகே ஸார்

இந்த ஃபைல்ல இருக்க டீடேல்ஸ் ப்ரிபர் பண்ணிக்கோ. ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோ. உனக்கு திங்ஸ் ரெடி பண்ணிக்கோ ஓகே.

ஓகே ஸார்.

குட் நீ போகலாம்.
<t></t>
அன்றைய பணிகள் செய்யும் போது மனம் கனத்தது. மாலையில் வீடு செல்லும் உற்சாகம் குறைந்து இருந்தது.
வேலை முடிந்து பஸ் ஸ்டேன்ட் செல்லும் வழியில் உதயனின் கார் என்னை வழி மறித்தது.

ஏறிக்கோ என்று முன் காரின் முன் கதவை திறந்து விட்டார். ஒன்றும் பேசாமல் ஏறிக்கொண்டேன். நான் இருக்கும் மனநிலையில் வீடு செல்ல இயலாது.

கார் ஒரு பெரிய ஷாப்பிங் மால் முன்பு நின்றது.

ஏன் என்ற கேள்வியோடு பார்த்தேன்.

உன்னிடம் நல்ல உடைகள் இருப்பது போல தெரியவில்லை. என்னுடன் வரும் பி ஏ எனக்கு தகுந்த மாதிரி உடையில் வர வேண்டும்.

சார் என்னிடம் இப்போது காசு இல்லை. உன்னிடம் காசு இல்லை என்று தெரிந்துதானே அழைத்து வந்து இருக்கிறேன் .
நான் மவுனமாக இருந்தேன்.

நான் பார்த்த வரையில் நீ நல்ல உடை உடுத்தியதில்லை. அவமானத்தில் முகம் கன்றி அடி பட்ட மானாக அவர் முகம் பார்த்தேன்.
சாரி சார் நான் என் ஏழ்மையை நினைத்து கலங்குவதில்லை, அது எனக்கு பழகிய ஒன்று!!

இட்ஸ் ஓகே பட் நான் என்ன சொல்லுகிறேன் என்றால் நீ முதலில் எல்லாம் சுடிதார் அணிவாயே ?
அது போல ஒரு முப்பது செட் வாங்க வேண்டும்.

இல்லை சார் அவ்வளவு வேண்டாம்.

சரி உன் அளவு கொடு நானே வாங்கி வருகிறேன். ஐயையோ வேண்டாம் சார் நானே வருகிறேன்.

சுடிதார் பிரிவுக்கு சென்று அவரின் விருப்ப படியே உடைகள் வாங்கினோம், அவர் உள்ளாடை பிரிவை பார்த்த போது வெட்கமும்
அருவருப்பும் ஒரு சேர வந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை. வா என்று அங்கேயும் அழைத்து சென்றார்.
அங்கே விற்பனை பிரிவில் உள்ள பெண்ணிடம் ரகசியமாக என் அளவை சொன்னேன்.

அவர் புரிந்து விலகுவார் என்று நினைத்தால் அவரோ என் உள்ளாடையை எடுத்து அளவை பார்த்தார்.
என் முகம் சிவந்து காலின் கட்டை விரலை நிலத்தில் அழுத்தி பிடித்து நின்று இருந்தேன்.
அவர் கண்கள் என் அளவை பார்த்து வியந்ததை என் கடைக்கண்ணால் கண்டேன். பிறகு முப்பது செட் கொடுங்கள் என்று ஆணை இட்டார்.
நான் எதுவும் பேசவில்லை. விற்பனை பெண் என்னை பொறாமையோடு பார்த்தாள்.

காரில் வரும் பொது உதயன் என்னிடம் அன் பிலீவபில் என்று சொன்ன பொது
அவர் எதை சொல்கிறார் என்று தெளிவாக புரிந்தது என் முகம் சிவந்ததை என்னால் மறைக்க முடியவில்லை .

ஸார் ...

சொல்லு மதுமிதா நான் இந்த உடைகள் இப்போது என் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது

ஒய்

அம்மா திட்டுவாங்க..

ரியலி உன்னை ஒரு மாசம் அனுப்பும் பொது அவங்க திட்ட மாட்டாங்களா?

என் கண்ணில் கண்ணில் கண்ணீர் தழும்பி கன்னத்தில் வழிந்தது...

இட்ஸ் ஓகே கூல் கூல் இப்போது உதயனின் கைகள் என் தோள் தொட்டு என்னை ஆதரவாய் தடவியது.
<t></t>
நிமிடத்தில் சுதாரிது அவர் கையை மெல்ல தட்டி விட்டேன்

அவரும் அதற்க்கு மேல் என்னை கம்பல் செய்யவில்லை.

வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலின் அருகில் இறங்கி கொண்டேன்.
ஏன் மதுமிதா உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டாயா. இல்ல சார் அம்மாக்கு நம்ம ரெண்டு பேர் மட்டும் போறது தெரியாது,
ஆபிஸ்ல இன்னும் சில பேர் வராங்கன்னு சொல்லி இருக்கேன்.

இட்ஸ் ஓகே என்று தொலை குலுக்கி வண்டியை கிளப்பி கொண்டு சென்றார்.

பிள்ளையாரிடம் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன். என் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து கண்மிழித்தேன்.
தங்கையின் வருங்கால மாமியார் நின்று என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.

வாங்க அம்மா எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் கண்ணு நீ அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்துருக்க நான் உன்னை பார்த்து இருக்கேன்.

அப்படியா நான் உங்களை பார்த்ததில்லை.

எங்க நீ தலையை நிமிர்தினால்தானே தெரியும்!

சொல்லுங்க அம்மா ஏதாவது விசேஷமா.

பெரிய விசேஷம் என் ஒரே பையனோட கல்யாணம்தான்..ஹ ஹ ஹா.

அந்த அம்மாவின் தெத்துபல் சிரிப்பு எனக்கு காவியாவை ஞாபக படுத்தியது.

நீங்க சிரிக்கும் பொது ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா.

எல்லோரையும் அம்மான்னு கூப்பிடலாமா? நான் உனக்கு அத்தையாக்கும்!!

சாரி ஆன்ட்டி. ஹ்ம்ம் ஆன்ட்டி நு சொல்லாம நீ அத்தைன்னு சொல்லி இருக்க வேண்டியது எல்லாம் மாறி போச்சு..

என்ன ஆன்ட்டி ரொம்ப சலிப்பா பேசுறீங்க.

மனசுல வெச்சுக்க முடியலம்மா நான் உன் அம்மா கிட்ட உன்னைத்தான் பெண் கேட்டேன்.
அவங்கதான் உனக்கு திருமணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க.

ஆமா ஆன்ட்டி நான்தான் வேண்டாம்னு சொன்னேன்.

அப்புறம் ஏண்டா பிள்ளையார் கிட்ட வேண்டிகிட்டு இருக்க.. உன் முகம் கலக்கமா இருந்துச்சு அதான் பேசிட்டு போலாம்னு நினச்சேன்.

அம்மா எனக்கு என் குடும்பம் நிமிரனும், என் தம்பி சம்பாதிச்சு எனக்கு கல்யாணம் கட்டி வெப்பான் போதுமா என்றேன் முகம் மலர்ந்த சிரிப்புடன்.

நல்லா இரு கண்ணு என்று என்னிடம் பேசி விட்டு நகர்ந்தார்.

நானும் வீடு நோக்கி நடந்தேன். மனதில் சஞ்சலம் குறைந்தது.


வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா காப்பியோடு வந்தாள்


என்னாச்சு மதிக்குட்டி அமெரிக்கா ட்ரிப்க்கு ஓகே சொல்லிட்டைல்ல

அம்மாவை தீர்க்கமாக பார்த்தேன்

ப்ளீஸ் டா அப்படி பாக்காத

அம்மா ப்ளிஸ் இனி அந்த ட்ரிப் பத்தி நீ எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம்.
நான் நாளைக்கு கிராமத்துக்கு போயி பாட்டியை பார்த்துட்டு அமெரிக்கா கிளம்பலாம்னு இருக்கேன் என்றேன் உணர்ச்சியற்ற குரலில்.

சரிடியம்மா உன் இஷ்ட்டம் போல செய் , எல்லாம் நம்ம குடும்பத்துகாகதான்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ

வேண்டா வெறுப்பாக காப்பி அருந்தி விட்டு சிறிது நேரம் கட்டிலில் கண் அயர்ந்தேன்.

சிறிது நேர உறக்கத்து பின் உதயன் என் சேலை கொசுவத்தை அவிழ்ப்பது போல கனவு வந்தது

ஹேய் சீய் என்று தட்டி விட்டு எழுந்து பேந்த பேந்த விழித்தேன்.


ச்சே என்ன கனவு இது. முதல்ல இங்க இருந்து கிளம்பனும்.

கிளம்பும் பொது அம்மா என்னிடம்"ஏன் மதிக்குட்டி ஒரு வாரம் டைம் இருக்கே " இப்பவே ஏன் கிளம்புற

இங்க பாருமா ஒரு மாசம் நான் வெளியூர் போயிருக்கேன்னு வெளில சொல்லாத.
வீட்டு பொண்ணு வெளிநாடு போறது உங்களுக்கு வேணுமின்னா சரியாக தெரியலாம் ஆனா
நாளைக்கு தங்கச்சி வீட்டுல தப்பா நினச்சு கல்யாணம் நடக்க விடாம பண்ணினா என்ன பண்ணுறது?.

உனக்கு பாசம் இருக்குன்னு எனக்கு தெரியாதா மதிக்குட்டி.

முன்பெல்லாம் இனித்த மதிக்குட்டி இப்போது அனாயசமாக காதில் விழுவது போல இருந்தது.

ஆமா உன் துணி எல்லாம் பேக் பண்ணலையா?

இல்லம்மா அதெல்லாம் ஆபிஸ்ல ஸ்போன்சர் பண்ணுவாங்க.

நான் பாட்டியை பார்த்துட்டு மறுபடியும் ஆபிஸ் போயிருவேன். நீ உடம்பை பார்த்துக்கோ.
தங்கச்சியை நல்லா தூங்கி எழுந்து, சாப்பிட்டு உடம்பை தேத்த சொல்லுங்க.
நீங்க ஏர்போர்ட் வரவேண்டாம். அடுத்த மாசம் நான் வந்துருவேன்

சரிடா செல்லம் என் மேல கோபம் வெச்சுக்காத டா.

உங்க மேல எனக்கு கோபம் இல்லமா சின்ன வருத்தம் தான். அதுவும் இந்த ஒரு மாச பிரிவில் சரி ஆயிரும் .

ஓகே மா பை. தங்கசிகிட்ட சொல்லிரு.

நைட்டே நான் பாட்டி ஊருக்கு கிளம்பியதில் அம்மாவுக்கு வருத்தம் என்று தெரியும் ஆனாலும் இப்போது அதை பற்றி கவலை பட நேரமில்லை.
இரவு எட்டு மணி பேருந்தில் ஏறி பாட்டி வீட்டுக்கு பயணம் ஆனேன்.
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
அதிகாலை ஐந்து மணிக்கு பாட்டியின் ஊரில் கால் வைத்தேன். நாய்கள் குறைக்கும் ஒளியை தவிர எதுவுமே கேட்கவில்லை.

கொஞ்ச தூரம் நடந்த பொது ஒரு வீட்டின் திண்ணையில் இருந்த பெரியவர்
"யாரது இந்த நேரத்துல?" என்று அதட்டினார்.

தாத்தா நான் செங்கனியம்மா பேத்தி , டவுன்ல இருந்து வாறேன்.

அவர் பாஷையில் பேசியதாலா? இல்லை பாட்டியின் பெயரை கேட்டதாலா தெரியவில்ல! தாத்தாவின் முகம் அந்த இருட்டிலும் பளபளத்தது.

செங்கண்டி பேத்தியா. வா வா என்று நாலு சந்து கடந்த ஒரு பண்ணை வீட்டில் சென்று கதவை தட்டினார். பாட்டிதான் வந்து கதவை திறந்தார்.
கையில் ஒரு அருவாள் இருந்தது.

என்ன பாட்டி ஒரே போடா போட்டுரலாம்னு பாக்குறியா?

என்னை பார்த்ததும் பாட்டி இழுத்து கட்டி அணைத்துக்கொண்டார். என் கண்ணே எப்படியம்மா இருக்க?

நான் நல்லா இருக்கேன் பாட்டி நீ எப்படி இருக்க?

உன் கல்யாணத்தை பாக்குற வரைக்கும் என் கட்டை போகாது என்று சிரித்தார்.

பாட்டி ஒரு ரெண்டு நாள் உன் கூட தங்கிகலாம்னு வந்துருக்கேன்.

இன்னும் ரெண்டு நாள் சேர்ந்தாப்புல தங்கிக்கோடா இது உன் வீடு.

இப்படி எனக்கென வீடு இருப்பது சித்தி அம்மாவுக்கு தெரிந்தால் உடனே விற்று காசாக தரும்படி கேட்பாள் என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.

உருவத்தில் நான் என் அம்மா சாயல் ஒத்து இருந்ததால் பாட்டி என்னை கட்டி
கொண்டார்.

பொழுது புலர தொடங்கியது.

சித்தி வந்த பிறகு பாட்டி வீட்டுக்கு வருவது குறைந்து போயிருந்தது.
அப்பா இறந்த பிறகு சுத்தமாக நின்று இருந்தது. ஆனாலும் அருகில் இருக்கும்
மருந்து கடைக்கு இடையில் போன் செய்து பாட்டியிடம் பேசுவேன்.

நான் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி. காலை சமையலே தட புடலாக இருந்தது.

பாட்டி

சொல்லுடிம்மா

எனக்கு அடுத்தவாரம் தீட்டு எனக்கு அந்த சமயத்துல வயிறு வலி அதிகமா இருக்கும் ஏதாவது மருந்து குடேன்.

இதொண்ணும் பெரிய ஆரிய வித்தை இல்லை தண்ணீருள கொஞ்சம் வெந்தயம் இரவில் ஊற வெச்சு
அதை காலைல குடிச்சா வயிறு சூடு குறையும்.

அந்த நாட்கள்ல தேங்காய் எண்ணெக்கு பதில் விளக்கெண்ணெய்யும் நல்லெண்ணையும் கலந்து அதுல ரெண்டு
குருமொலகு ரெண்டு பூண்டு போட்டு எண்ணை காய்ச்சி தலைக்கு தேச்சு குளிச்சா உடம்பு சூடு காணாம போயிரும் .

நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ நான் உனக்கு போறதுக்கு கொஞ்சம் பொருட்கள் ரெடி பண்ணுறேன் சரியா

சரி பாட்டி

இரண்டு நாளில் இரண்டு வார கவனிப்பு ஒரு சேர கொடுத்தார்.

அம்மாவை பற்றியும், அம்மாவின் புகை படங்களை பார்த்தும் இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை.

இந்த இரண்டு நாட்களில் நான் அளவில்லாத இன்பம் கண்டேன் என்றால் அது மிகையல்ல.

சுத்தமான காற்று, பச்சை பசேலென்ற புல்வெளிகள், இயற்கையான கிணற்று தண்ணீர். பெரிய நீச்சல் தொட்டி.

பாட்டியின் ககவனிப்பிலும் சமையலிலும் என் கன்னங்களில் மினுமினுப்பு ஏறியது.

பேஷியல் செய்து பழக்கம் இல்லை. அமெரிக்கா போவதற்கு முன்பு பேஷியல் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
அதற்க்கு அவசியம் இல்லாது போனது.

பாட்டியிடம் அம்மாவிடம் சொன்ன அதே பொய்யை சொன்னேன். என்னுடன் சிலர் அமெரிக்கா வருகிறார்கள் என்று.
பாட்டி பலவித கை மருத்துவம் சொல்லி தந்தார். பத்திரமாக சென்று வாடி என் ராஜாத்தி என்று வழி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் ஆபிஸ் சென்று எம் டி கதவை தட்டினேன்.

பாட்டி கொடுத்த புது அடர் நீல புடவையில் தங்க சரிகை இட்ட சேலை என் நிறத்தை கூட்டி காட்டியது.

உதயனுடன் இன்னுமொரு வயதானவரும் இருந்தார். அவரை நான் பல முறை பார்த்து இருக்கிறேன் ஆனால் சரியாக ஞாபகம் வரவில்லை.

மதுமிதா மீட் மிஸ்டர் வெங்கட் நாராயணன். நம்ம ட்ரிப் சம்மந்தமா நான் இவரை நியமிச்சு இருக்கேன்.
நமக்கு தேவையான எல்லாம் இவர் பர்சனல்லா டீல் பண்ணுவார்.

அப்போ நான் கிளம்புறேன் சார...வரேன் மேடம்.

நம்ம ஆபிஸ்ல நீ ஒரு மாசம் லீவ் போட்டுக்கோ.

ஒய் சார்.

உன்னோட பியுட்ச்சர்ல ப்ரோப்ளம் வரக்கூடாது.

சார் இவ்ளோ பர்சனல்லா நாம கிளம்பனுமா.

உன் தங்கச்சி கல்யாணம் மறந்துட்டியா. எனக்கு கான்பெரென்ஸ் இருக்குனு
மறந்துட்டியா என்று பல்லை கடித்தார்.

சாரி சார் அது கம்பெனில எல்லோர் கிட்டயும் சொல்லலாமே சார்.

சொன்னா உன்னை விட சீனியர்ஸ் பிரச்சனை பண்ணுவாங்க.
ஃபூல் இந்த சின்ன விஷயம் கூட நான் சொல்லனுமா உனக்கு.

ஏன் இப்படி கடிக்கிறார் என்று புரியாமல் சாரி சார் என்று முனுமுனுத்தேன்.

இன்னும் ஃ போர் டேஸ்ல எல்லாம் ரெடி பண்ணனும் உன் கேபின் என் ரூம்க்கு மாத்த சொல்லிருக்கேன் ஓகே.

ஓகே சார்.

ஹ்ம்ம் ட்ரெஸ் வாங்க காசு இல்லன்னு சொன்ன இப்ப புடவை புதுசா இருக்கு?

பாட்டி எடுத்து குடுத்தாங்க சார்.

பாட்டியா? அம்மா சொந்தமா? அப்பா சொந்தமா?

அம்மாவோட அம்மா.

அப்போ எல்லோரும் குடும்பத்தோட போனிங்களா.

இல்ல சார் பாட்டி எனக்கு மட்டும்தான் சொந்தம்.

என்ன உளறுற?

என் அம்மா இறந்துட்டாங்க, இப்ப இருக்கிறது என் சித்தி.

ஹ்ம்ம் அப்போவே நினச்சேன்.

இட்ஸ் ஓகே வொர்க் பாரு.

சார்

என்ன .

நான் நம்ம கோட்டர்ஸ்ல நாலு நாள் தங்க உங்க அனுமதி வேணும்.

ஒய்

வீட்டுல சொல்லிட்டு வந்துட்டேன் சோ .

நம்ம கெஸ்ட் ஹவுஸ் யூஸ் பண்ணிக்கோ.

வேண்டாம் சார்

நான்...சொன்னதை செய். ஒரு மாசம் நான் சொல்றதை மட்டும் செய் ஓகே.

கம்பெனி விஷத்துல மட்டும் ஓகே ஸார்.

எப்படி அவ்வளவு தைரியம் வந்ததுன்னு எனக்கு புரியவில்லை.

நான்கு நாட்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்தோம்.

நாங்கள் அமெரிக்க கிளம்பும் நாள் வந்தது.

நானும் உதயனும் ஏர்போர்ட் செல்லும் வழியில் ஒரு பெரிய மாலுக்கு சென்றோம். இரண்டு ஸ்வெட்டர் , ஜெர்கின், ஸ்னக் ,
ஸ்கார்ப் வாங்கி கொண்டு ஏர்போர்ட் சென்று செக்கிங் முடிந்து விமானத்தில் ஏறினோம்.

எனக்கு எல்லாமே புதியதாக இருந்தது. நான் முதன் முதலாக ஃ ப்ளைட்டில் ஏறுகிறேன்.
ஏறி அமர்ந்ததும் என் உடலில் மெல்லிய குளிர் ஏறியது, மெல்ல நடுங்கியது.

உதய் என் நிலை அறிந்து என்னை பயப்பட வேண்டாம் என்று என் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டார்.
அவரின் உள்ளங்கையில் வியர்த்து இருந்தது ஆனாலும் ஒரு மிதமான சூடு என் உடலுக்குள் ஊடுருவி பாய்வதை என்னால் உணர முடிந்தது.
மூளை கையை இழுத்து கொள்ள சொன்னது, அனால் மனமோ வேண்டாம் என்று தடுத்தது. உதய் உடம்பின் சூட்டினால் அல்ல
என் உள்ளே இருந்த பயத்தினால் அவர் கையை அழுத்தி பிடித்துக்கொண்டேன்.

இவ்ளோ பயம் எதுக்கு?

இல்ல நான் ஃ பஸ்ட் டைம் ஃ ப்ளைட்ல ட்ராவல் செய்யுறேன்.

ஹ்ம்ம் கொஞ்சம் சிரித்தவர் மக்கு மக்கு இத்தனை பேர் இருக்கோம் அப்புறம் என்ன பயம்?

ஹி...ஹஇ .. என்று இளித்தேன்.

அப்புறம் நல்லா தூங்கிக்கொ.

எனக்கு தூக்கம் வரல ஸார்.

முந்திரி கோட்டை மாதிரி இடைல பேசுறதை நிறுத்து! அப்புறம் இந்த சார் மோர் எல்லாம் அமேரிக்கா வரைக்கும் கொண்டு வர வேண்டாம்.
உதய்ன்னு கூப்பிடு ஓகே.

ஓகே சார் (மனதுக்குள் "சும்மாவே கடிக்குற இதுல உதை உதை ன்னு கூப்பிட்டா சொல்லவே வேண்டாம் " உதை ஒண்ணுதான் மீதம் இருக்கு.)

அமெரிக்கா ல இந்நேரம் நைட் பதினோரு மணி ஆயிருக்கும் நாம இப்போ தூங்கினாத்தான் நாளைக்கு அங்க டைம் மேனேஜ் பண்ண முடியும்.

ஓகே சார்.

மூஞ்சிய உம்முன்னு வெச்சுக்காத இனி ஒரு மாசத்துக்கு நீதான் என் ப்ரெண்ட் டைம் பாஸ் எல்லாம்.

ஓகே சார்.

உனக்கும் அப்படிதான் சரியா?

சரி உதய் .

அவன் கண்கள் சிரித்தது "நானும் உன்னை மதின்னு கூப்பிடலாமா?"

ம் ..ஓகே உதய்.

இருவருக்கும் குத்தல் பேச்சு இல்லாத மேன்மை பிடித்து இருந்தது.

நானே வியக்கும் அளவுக்கு அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்தேன்.

அமேரிக்காவில் விமானம் தரை இறங்கும் அறிவிப்பு அறிவித்தார்கள்.
உதய் என் ஸ்வெட்டர் எடுத்து தந்தார். அவர் ஜெர்க்கின் அணிந்து செக் அவுட் முடிந்து வெளியே வந்தோம்.

என் மனம் சின்ன பிள்ளை போல ஆர்பரித்தது. எங்கும் பனி மூட்டம் , வெள்ளை பஞ்சு போல பனி சாலையெங்கும் படர்ந்து இருந்தது.

எப்படி இருக்கு என்று உதய் காதருகே கேட்டார். ரியலி ஃ பென்டாஸ்டிக் உதய்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக நான்கு நாட்கள் கழிந்தது. கான்பெரென்சும் நல்ல விதமாவே நடந்தது.
என்னுடைய உதவியால்தான் எல்லாம் ஒழுங்காக செய்ய முடிகிறது என்று உதய் மனதார பாராட்டினார்.

இருவரும் ஒரே அறையை ஷேர் செய்து கொண்டோம் ஆனால் எந்த களங்கமும் இல்லாமல் நாட்கள் நகரத்தொடங்கியது.
ஆறாவது நாளில் நான் எதிர் பார்த்த அந்த தினம் வந்தது.
<t></t>
அந்த நாள்.... அந்த மூன்று நாட்கள், நான் வயிறு வலியில் துடித்தேன் உதய் ரொம்ப பயந்து விட்டார். இரவு நேரம் என்பதால் ஹோட்டல் டாக்டர் யாராவதை அழைக்கிறேன் கொஞ்சம் பொறுத்துக்கோ மதி

டாக்டர் வேண்டாம் என் பெட்டியில ஒரு வெள்ளை டப்பா இருக்கும் எடுங்க அப்படியே ரூம் பாய் கிட்ட சுடுதண்ணி கொண்டு வர சொல்லுங்க

ஓகே ஓகே

இந்த வலியே இவரால் காண முடியவில்லை இவர் மனைவியின் பிரசவ வலியை எப்படி காண்பார் என்று அந்த நேரத்திலும் உதயின் மீது பரிதாபம் வந்தது.

மின்னல் வேகத்தில் எல்லாம் கொண்டு வந்தார்.நான் பாட்டி வறுத்து அரைத்து கொடுத்த வெந்தய பொடியை சுடு தண்ணியில் கலக்கி குடித்தேன், கசப்பாக இருந்ததாலும் வெந்தய மணம் குமட்டிக்கொண்டு வந்தது. எப்படியோ சமாளித்தேன்.

சிறிது நேரத்தில் வயிற்று வலி குறைந்தது கொஞ்சம் கண்ணயர்ந்து உறங்கினேன்.கால் குடைச்சல் அதிகமாக இருந்தது கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்த பொது உதய் என் காலை பிடித்து விட்டு கொண்டு இருந்தார்.

வாட் இஸ் திஸ் உதய் ?

பரவாயில்லை மதி என் பிரெண்டுக்காகதானே .

தேங்க்ஸ் உதய்.

எழுந்து பாட்டி கொடுத்த எண்ணெய் மிக்ஸ் தலையில் தேய்த்தேன்.

ஹேய் இந்த ஸ்மெல் நல்லா இருக்கு என்று உதய் என் பின்னால் இருந்து மணந்து பார்த்தார்.

நெல்லிக்காய், சீயக்காய், புனுகு எல்லாம் போட்டு என் பாட்டி காய்ச்சி கொடுத்தாங்க உதய்.

அப்படியே என் தலை முடியை கோதி விட்டார்.என் பின்னங்கழுத்தில் இருந்து மேலே என் முடியை அலைந்து பார்த்தார்.

என் கணுக்காலில் இருந்து மயிர்கூச்செரிந்தது. உதையின் மூச்சுக்காற்று என் கழுத்தில் ஊர்ந்தது.

என் கண்கள் மூடிய நிலையில் ஒரு மோன நிலையில் நின்றிருந்தேன்.

மெல்ல என்னை தன பக்கம் திருப்பினார்.

நான் ஏதோ ஒரு மோன நிலையில் மிதந்து கொண்டு இருந்தேன்.

இது என்ன என்று உணர்வதற்கு முன்னே உதயின் இதழ் என் இதழ்களை சுவைக்க தொடங்கியது. என் உடல் நிலை மறந்து நானும் ஒத்துழைத்து கொண்டிருந்தேன்.

திடீரென்று சுய நினைவை அடைந்தவர், என்னை மாற்றி நிறுத்தி ஐ எக்ஸ்ட்ரீம்லி சாரி மதி என்று விலகிச்சென்றார்.

எதையும் விளங்கிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. இது காதலா? காமமா?

இது காதல் என்றால் விஜி மீது வந்த காதலுக்கு என்ன பெயர்.

இருவரின் நெருக்கம் மட்டுமே இந்த நிலைக்கு காரணமா?

இல்லை என் மனதில் உதயின் மீது காதல் மலர்ந்து விட்டதா?

அன்று விஜிமீது வந்தது வெறும் இன்பாச்சுவேஷன் என்று புரியத்தொடங்கியது!!!

ஆனால் உதய் வெளியே சென்றவர் திரும்ப வராமல் போகவே அவருக்கு என் மீது காதல் இல்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உறங்கி இருப்பேன் என்று முடிவு செய்து அறைக்குள் வந்தவர் யாருக்கோ போன் செய்தார். அது அவருடைய அம்மா என்பது பேச்சிலேயே தெரிந்தது.

இல்ல மா...தூக்கம் வரலை அதான் கூப்பிட்டேன்...
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
.................................................

ஹ்ம்ம் நல்லா இருக்கேன்...

................................................

இல்லம்மா....

..............................................

ஹ்ம்ம்....

...............................................

ஹ்ம்ம்...

அந்த அம்மாள் ஏதோ சொல்ல சொல்ல அவரும் ஹ்ம்ம் கொட்டி கொண்டு இருந்தார்.

கடைசியில் "அம்மா நாம கடைசியா கேட்ட பொன்னை மறுபடியும் ட்ரை பண்ணி கல்யாணத்துக்கு ஓகே பண்ணிருங்க என்றார்".

என் தலையில் இடி விழுந்த போல ஆனேன். அப்படி என்றால் இவர் மனதில் நான் இல்லை. உடல் சோர்வும் சுயபச்சாதாபமும் சேர்ந்து மனதை அழுத்தியது.

என் பெட் சீட்டை நன்றாக இழுத்து போர்த்தி குட் நைட் மதி என்றார்.

குட் நைட் என்று முனங்கி விட்டு உறங்க ஆரம்பித்தேன்.

பின் வந்த ஆறு நாட்கள் உதய் என்னை பார்த்துக்கொண்டது ஒரு அம்மாவின் அன்பு கலந்து இருந்தது. அன்றைய தினத்துக்கு பிறகு தினமும் என் தலை கொதி கூட் நைட் சொல்வது வாடிக்கை ஆனது.

இருபத்து ஐந்து நாட்கள் முடிந்தது.

அப்புறம் மதி அமெரிக்கா புடிச்சு இருக்கா?

நல்லா இருக்கு உதய் .

பேசாம இங்கயே வேலை வாங்கி தருகிறேன் இருந்து கொள்கிறாயா?

ஐயோ என்னால் முடியாது"" சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா" என்று பாடி காட்டினேன்.

ஹ ஹ ஹா நீ சொல்லுறதும் சரிதான். சேலை தாவணி எல்லாம் இங்க பார்க்க முடியுமா என்று கண் அடித்தார்.

நாளை நான் சேலை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன் மேட்ச் ப்ளவுஸ் என்னிடம் இருக்கும் சரி உதயுடன் ஷாப்பிங் செல்லலாம் என்று சேலை கிடைக்கும் மாலுக்கு போக சொன்னேன்.

உதய் என்னை போதயோடு பார்த்து என்னை நல்லவனாகவே நாட்டுக்கு திரும்ப விடு தாயே என்று சலாம் போட்டார்.

போங்க நீங்க வேற என்று முதுகை பிடித்து தள்ளினேன்.

ஒரு பெரிய கடையில் சென்று தேட துடன்கினோம். ஒரு இளம் ரோஸ் நிறத்தில் முத்து வேலை செய்த புடவை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதன் விலை இந்தியன் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய். வேகமாக வைத்து விட்டு ஒரு ஆகாய நீல புடவையை தேர்ந்தெடுத்து பில் போட செய்தேன்.

சிறிது நேரத்தில் உதயும் சில பர்சேஸ் பேகோடு வந்தார். இருவரும் மகிழ்ச்சியாகவே ஹோட்டல் அறைக்கு திரும்பினோம், வழியில் சித்திக்கு, தங்கைக்கு, பாட்டிக்கு என்று பரிசுகள் வாங்கினேன். வீட்டுக்கு செல்லும் பொது எப்படி மகிழ்வார்கள் என்று கற்பனை செய்து கொண்டேன்.

அடுத்த நாள் ஆகாய நிற சேலை அணிந்து உதயுடன் கான்பெரென்ஸ்க்கு சென்றேன். எல்லோர் பார்வையும் என் மேல்தான் இருந்தது.

உதய் என் இடையோடு தன்னை சேர்த்து நடந்தார். வேறு எந்த ஆணும் என்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டார். கடைசி நாள் என்பதால் சிறிய பார்ட்டியும் நடந்தது. உதய் பிசினெஸ்காக கொஞ்சம் மது அருந்தினார்.

மாலை நேரம் இருவரும் அறைக்கு திரும்பினோம். வழக்கம் போல நான் உடை மாற்ற குளியலறைக்குள் செல்ல முயற்சிக்கும் பொது உதய் என்னை இழுத்து அவர் மேலே போட்டுக்கொண்டார்.

என் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தார். என் இதழை சப்பி உறிஞ்சு சுவைத்தார். என் கழுத்தில் அவர் மீசை கோலம் போடும் பொது நான் என்னை மறந்தேன், விண்ணில் பறக்க ஆரம்பித்தேன்.
<t></t>
IP Address: Logged
PM Find Rate Edit Delete Reply Quote Report Warn
manigopal Offline
Posting Freak
*****
அவர் கன்னங்களில் இரண்டு நாள் தாடி என் கன்னங்களை உரசியது சுகம் என்றால், அதை விட சுகம் அவர் மீசை என் உதட்டில் குத்தியதுதான்.
தலையெல்லாம் கிறுகிறுத்து இருந்தது. எது சரி எது தவறு என்று யோசிக்கும் மன நிலையில் நான் இல்லை.

அவர் கைகள் என் இடையில் ஸ்பரிசித்து மெல்ல என் இடுப்பை பிணைய ஆரம்பித்தார்.

அஹ் ...என்ற ஒலியுடன் அவரின் மீது அழுந்த படிந்து கொண்டேன்.

உதய் உள்ளே இருக்கும் மது வேலை செய்து கொண்டிருப்பதை அறியாமல் நானும் மதமதத்து ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.

எங்கே சென்றது என் விழிப்பு?

எங்கே சென்றது என் நாணம்?

எல்லாம் மறந்து இவரோடு உடலின் ஒவ்வொரு அணுவிலும் சுகம் கண்டு கொண்டிருக்கேன்?

இவர் யார்?

என்னை திருமணம் செய்து கொள்வாரா ?

என்ற கேள்விகள் என்னுள் மூழ்கி என் உடலெங்கும் காதலும் காமமும் ஆட்சி செய்ய தொடங்கியது.

உதய் என் சேலை தலைப்பையும் என் கொசுவத்தயும் ஒரே நேரத்தில் பிடித்து இழுத்தார். அந்த நேரத்தில் "மதி" என்று பாட்டியின் அதட்டல் குரல் கேட்டது.

எங்கிருந்து அந்த பலம் வந்தது என்றே தெரியவில்லை, உதயை உதறி விட்டு மாற்றுத் துணியுடன் குழியலறையில் சென்று கதவை அடைத்து தாழ் போட்டேன்.

ஷவர் திறந்து நனைந்தேன்.

உதய் கதவை வேகமாக தட்டினார். மதி கதைவை திற....ஏய் கதவை திறன்னு சொல்லுறேன்ல.
கொஞ்ச நேரம் தட்டியவர் வெளியே சென்று கதவை அடைக்கும் சத்தம் கேட்டது.

நான் நிதானமாக குளித்து உடை மாற்றி அறைக்குள் வந்து அறையின் ஹீட்டரை ஆன் செய்தேன்.
குளிருக்கு கதகதப்பு மனதின் பாரத்தை குறைத்தது.

நான் வீட்டில் இருக்கும் பொது வந்த அந்த கனவு"உதய் என் கொசுவத்தை அவிழ்க்கும் கனவு ஞாபகம் வந்தது.

" ச்சே கொஞ்சம் நேரத்துல இப்படி அறிவில்லாம நடந்துகிட்டேனே!

சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவர் கையில் ஒரு பார்சல் இருந்தது. இப்போது என் முன்னாடியே அவர் அம்மாவுக்கு கால் செய்தார்.

அம்மா நான் உதி பேசுறேன்

..........................................

என்னம்மா எல்லா ஏற்பாடும் முடிந்ததா?

.....................................

ஹ்ம்ம் ஓகே நாளைக்கு சாயந்திரம் வந்துருவேன்

.................................................

நாளை மறுநாள் தானே நிச்சயம் செய்ய போகிறோம்

.............................................

என்னை கீழ்க்கண்ணால் பார்த்தபடியே "ஒரு வாரத்தில் திருமணம்! பெண் வீட்டார் சம்மதித்தார்கள் தானே?
இப்போது என் கண்ணில் கண்ணீர் உருண்டு கீழே விழுவது போல அமர்ந்திருந்தேன்.
தேவை இல்லாமல் சீன க்ரியேட் செய்ய விரும்பாமல், என் முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து கழுவினேன்.

பிறகு நானோ அவரு பேசவே இல்லை. விமானத்தில் ஏறி ஊருக்கு பயணமானோம் .
சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதும் என்னை ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பினார்.

தேன்க் யு சார் என்றேன் நிமிராமலேயே!

ஹ்ம்ம் குட் இப்படித்தான் ஞாபகமா இருக்கணும்.

நம்ம ரெண்டு பெரும் ஒன்னா ஆபிஸ் போக வேண்டாம்! நீ இப்போ பாட்டி வீட்டுக்கு போறியா இல்லை உன் வீட்டுக்கு போகிறாயா?

பாட்டி வீட்டுக்கு சார். ரெண்டு நாள் அங்க இருந்துட்டு என் வீட்டுக்கு வந்துருவேன்.

ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ் வந்தால் போதும். நாம பேசியதை விட கூடவே உன் அக்கவுண்ட்டில் க்ரெடிட் ஆகி இருக்கும்.

எனிவே பை & தேங்க்ஸ் பார் யுவர் கம்பெனி என்று நக்கலாக சொல்லி விட்டு சென்றார்.

நான் பாட்டி வீட்டுக்கு கனத்த மனதுடம் பயணம் செய்தேன். என் கண்ணீர் மட்டும் நிக்கவே இல்லை.
<t></t>
IP Address: Logged
PM Find Rate Edit Delete Reply Quote Report Warn
manigopal Offline
Posting Freak
*****
பாட்டி வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் க்கு முன்பு வண்டியை நிறுத்த சொல்லி முகம் அலம்பினேன். என் சோர்வு ஒரு பயண களைப்பாகவே இருக்கட்டும்.

டவுனில் உள்ள பிரவுசிங் செனடர் சென்று என் அக்கவுண்ட்டில் இருந்த பணம் பாதியை அம்மாவின் அக்கவுன்ட்டுக்கு மாற்றினேன்.

என்னுள் எல்லாவற்றையும் புதைத்துக்கொண்டு பாட்டி வீட்டில் இறங்கினேன்.

பொங்கல் அடுத்து வருவதால் பாட்டியின் வீட்டை சுற்றிலும் வெள்ளை அடித்து சுத்தம் செய்து இருந்தார்கள்.
வீட்டின் அருகே செல்லும் பொது நெய் மனம் வந்தது, எல்லோர் வீட்டிலும் காப்பு கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஓ நாளை விடிந்தால் தை பொங்கல்... ஊ ரே விழாக்கோலம் பூண்டிருந்தது. சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடினார்கள்.
பாட்டி வெளியே வந்து என்னை கட்டி தழுவிக்கொண்டார்.

பாட்டி...நான் வருவேன்னு உனக்கெப்படி தெரியும்...

என் பேத்தி என்னை பார்த்துட்டுதான் ஊருக்கு போவான்னு என் மனசு அடிச்சு சொல்லுச்சு டா.

என் செல்ல பாட்டி ...ப்ச்.... ப்ச் ...

போதும்டியம்மா கட்டிக்க போறவனுக்கு பாக்கி வெய்யு...

உனக்கு போகத்தான் அவனுக்கு.

ஏய் என்னடி இது அவன் இவன்னு பேசுர? மரியாதையா அவருன்னு சொல்லு.

ஆமா என்ன கட்டிக்க க்யுல ஆள் நிக்குதுன்னு உனக்கு நினைப்பா பாட்டி, எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம் பாட்டி
நான் இப்படியே உன் கூட ஜாலியா இருந்துக்குறேன்

நீ மட்டும் உம் ன்னு சொல்லு இப்பவே பேக் பண்ணி இங்க வந்துறேன்.

பாட்டி நான் அம்மாவையும் தங்கச்சியும் பாக்க போகணும்.

இப்பவே என்னடி அவசரம் ரெண்டு நாள் கழிச்சு போ.

இல்ல பாட்டி தங்கச்சி கல்யாணதுக்காகதான் இந்த பணம் சம்பாதிக்க போனேன், அதை முறையாக கொண்டு சேர்க்கணும்.

நீ சொல்லுறதை பார்த்தா நான் பிடுங்கிக்குவேன்னு எனக்கே சந்தேகமா இருக்கு.

அய்யோ அப்படி இல்ல பாட்டி, சித்திகிட்ட ஒப்படைச்சா என் மனசு ஆறும். (பாட்டியிடம் அம்மா என்று சொல்ல மாட்டேன் ).

பரவாயில்லடா உனக்கு ரொம்பவும் அசதியா இருக்கும், வெந்நீர் போட்டு வெச்சுருக்கேன் குளிச்சுட்டு வா சேந்து சாப்பிடலாம்.

பாட்டியிடம் சிறிது நேரம் கொஞ்சிவிட்டு குளிக்கப்போனேன். குளியலறைக்கு சென்றதும் உதயின் ஞாபகம் வந்தது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அறியாத வயதில் விஜியை இழந்தேன். இப்போது விவரம் தெரிந்தும் உதியை இழக்கிறேன்.

நிமிடத்தில் உதய் உதி ஆகிப் போனான். அவர் அவன் ஆனது. ஆம் இனி யார் வந்தாலும் என் காதல் மாறாது!!!
அவன் யாரை கல்யாணம் செய்தாலும் என் கணவன் அவன் மட்டுமே.

குளித்து வெளி வந்து பாட்டியின் கைவண்ணத்தை ஒரு பிடி பித்தேன்.

காதல் வந்தாலும், காதலனை பிரிந்தாலும் சோறு உன்ன முடியாது, தூங்க முடியாது என்று சொல்வதெல்லாம் பொய்!!!
நான் நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக தூங்கினேன். ஏன் தெரியுமா?

என் தங்கை திருமணத்துக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது. இனி இந்த பாட்டியுடன் என் மீதி காலத்தை கழிக்க போகிறேன்.
அம்மாவை தம்பி மூன்று மாதங்களுக்கு பிறகு கூடவே அழைத்து சென்று விடுவான். பிறகென்ன எனக்கான ஒரே ஜீவன் பாட்டிதான்.

மீண்டும் ஆபிஸ் போயி அவனின் திருமணத்தை காணும் சக்தி எனக்கு இல்லை. எங்கோ அவன் இருக்கட்டும் நிம்மதியாக!!!

ஆனால் என் மனதுக்குள் எப்போதும் இருப்பான்.

அப்படி யோசிக்கும் போதுதான் என்னுள் இன்னுமொரு விபரீதமான எண்ணம் முளைத்தது!!!!
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
பேசாமல் உதியிடம் கலந்து பிள்ளை பெற்றுக்கொண்டால் என்ன?

அவன் சொத்து வேண்டாம்! மனைவி என்ற அங்கீகாரம் வேண்டாம்!அவனின் ஜீவன்...அவன் உயிரை மட்டும் பெற்றுக்கொண்டால் என்ன?

ஒரு நிமிடம் என் உடல் சிலிர்த்தது! மறு நிமிடம் உதியின் ஏளன பார்வை கண் முன் வந்தது...

ச்சீ ...ச்சீ ...என் புத்தி ஏன் இப்படி யோசிக்கிறது?

அவனின் பணத்துக்காக அவனை நெருங்குகிறேன் என்று தப்பாக நினைத்து விட்டால்? விட்டால் என்ன நிச்சயம் அப்படித்தான் நினைப்பான்.
அதோடு அவன் பேசிய பணத்தை விட அதிகமாக கொடுத்ததற்காக இளிக்கிறேன் என்று வாய் விட்டே சொல்லி விடுவான்.

நான் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்த்தால் என்ன? ஐய்யயோ இன்னுமொரு அனாதை வேண்டாம்...நான் ஒருவள் படுவது பத்தாதா!!

மனசெல்லாம் குழப்பத்தோடும் பல கனவுகளும் மாறி மாறி சரியான தூக்கம் இல்லாமல் தவித்தேன். காலை பொழுது புலர்ன்தது.
வெளியே சித்தியின் குரலும் தங்கையின் குரலும் கேட்பது போல இருந்தது.

கனவா என்று ஒரு முறை கிள்ளிப்பார்த்தேன். கனவில்லை நிஜம்தான். என் மனம்தான் தெளிவில்லாமல் குழம்புகிறது.

வெளியே வந்து வாங்க அம்மா ..வாடா குட்டி!

இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவாயா அக்கா ? நல்ல வேலை பாட்டி எங்களை பொங்கல்க்கு
அழைத்ததால் உன்னை முன்பே பார்க்க முடிந்தது? தங்கையின் கொஞ்சல் பேச்சை ரசித்தேன்.

ஹேய் செல்ல கல்யாணப் பெண்ணே உனக்காகத்தானே அக்கா இவ்வளவும் செய்கிறேன் என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டேன்.

அப்போது பாட்டி வந்து மதிம்மா போயி பல்லு தேசு குளிச்சு இந்த புது பொடவையும் உன் அம்மா நகைகள் கொஞ்சம் எடுத்து வெச்சுருக்கேன்
அதையும் போட்டுக்கிட்டு வா கோவிலுக்கு போகலாம்.

எதுக்கு பாட்டி இதெல்லாம். நாந்தான் என் செயின் போட்டு இருக்கேனே.

நல்லா இருக்குடி உன்னை விட சின்ன பொண்ணு அவளே கைலயும் காலுளையும், கழுத்துலயும் போட்டுக்கிட்டுதானே வந்துருக்கா?
அப்புறம் உனக்கு மட்டும் என்ன? உன் அம்மா போயிட்டாலும் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்.
என் கட்டை வேகுற வரைக்கும் நீ மங்கள கரமா இருக்குறதை கண்ணார பாக்கணும்.

பாட்டி அறைக்குள் வைத்து பேசினாலும் சித்திக்கும் கேட்டுதான் இருக்கும்.
ஆம் என்று அவர் முகமே சொன்னது. ஒரு வழியாக சமாளித்துக்கொண்டார். மதிக்குட்டி நீ அனுப்புன பணம் கிடச்சுது
மாப்பிள்ளை வீட்டுல பேசிட்டேன், எண்ணி ரெண்டாம் மாசத்துல கல்யாணம் வேசுக்கலாம்ன்னு சொல்லிடாங்க.

நானும் குளித்து பாட்டி சொன்ன நகைகள் அணிந்து கோவில் செல்ல தாயாரானேன். வெளியில் வந்து கோவிலுக்கு கிளம்பினோம்.

அம்மன் தரிசனம் தை ஒன்னாம் நாள் சிறப்பு பூஜையில் கலந்து எல்லோரும் வெளியில் வந்தோம்.
அங்கே ஒரு அம்மாளின் முகம் கண்டு சித்தியின் முகம் பேயறைந்தது போல ஆனது.

மதிக்குட்டி சீக்கிரம் வா போகலாம். சித்தியின் முகத்தை நான் கவனித்து விட்டதால் அந்த அம்மாள் யார் என்று பார்த்தேன்.
அவர் என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.

எங்கேயோ பார்த்த முகம் நானும் பதிலுக்கு முறுவலித்து சித்தியுடன் வீடு திரும்பினேன். அங்கேயும் அந்த அம்மாள் நின்று இருந்தார்.

சித்தி பதட்டம் மாறாமல் என் முகம் பார்த்தார்.

பாட்டி அந்த அம்மாவை வீட்டினுள் அழைத்து சென்றார்.

எனக்கு ஏனோ அந்த அம்மாவை மிகவும் பிடித்து இருந்தது.

சித்தியின் கலவரம்தான் ஏன் என்று புரியவில்லை ?????
<t></t>
வீட்டுக்குள் நுழைந்த பொது அந்த அம்மாளுடன் இன்னும் சில பெண்கள் இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன் வெளியில் ஓரத்தில்
பத்து ஆண்கள் சேரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஒன்றுதான் வித்தியாசமாக இருந்தது "எதற்க்காக இங்கே பழங்கள் தட்டில் வெய்க்கபட்டு உள்ளது."

பாட்டி என்னை ஒரு ஓரத்தில் அமர வெய்த்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
பாட்டியையும் சித்தியையும் மாறி மாறி பார்த்தேன்.

பாட்டியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

பொன்னை முதல்ல கோவில்ல வெச்சு பார்க்கனும்ன்னு சொன்னதாலதான் வெளியே அனுப்பினேன்
இல்லனா இங்கயே வெச்சு பார்த்து இருக்கலாம்

அதனால என்ன பாட்டிம்மா எங்களுக்கு பொன்னை ரெம்ப பிடிச்சுருக்கு.

கோவில்ல அம்மன் முகத்துல இருக்குற அதே சாந்தம் உங்க பேத்தி கிட்ட இருக்கு.
எங்களுக்கு சீர் எதுவும் வேண்டாம் உங்க பேத்தியை மட்டும் தந்தால் போதும்.

பாட்டியை என்ன என்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் கண்களால் சும்மாயிரு என்று ஜாடை செய்தார்.

ஏற்கனவே ஒரு தரம் இந்த பொன்னை தர மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.
அவங்க சின்ன பொண்ணுக்குதான் திருமணம் நடக்கும் அவளை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க ஆனா
எங்க பையனுக்கு மதியைத்தான் பிடிச்சுருக்கு என்று புதிய அம்மாள் சொன்னதும் பாட்டிக்கு சந்தோஷம் மிகையானது.

சித்தியை ஓரக்கண்ணால் கவனித்தேன் அவர் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.

புதிய அம்மாள் பாட்டியிடம் "அப்போ தட்டை மாத்திக்கலாமா "

ஓ மாத்திக்கலாம் பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

என்ன நடக்குது இங்கே?

யார் இவர்கள்?

உதிக்கு நிச்சயம் நடக்கும் அதே நாள் எனக்கும் நிச்சயமா?

கண்ணில் நீர் கோர்த்த போதுதான் அந்த அம்மாளின் முகம் எங்கே பார்த்தேன் என்று பிடி கிட்டியது...உதி... உதியின் ...அதே சிரிப்பு
அப்படியென்றால் உதி எங்கே? என் கண்கள் அலை மோதியது?

இப்போது அந்த அம்மாள் "சந்திரா மறைந்து இருந்தது போதும் உதயமாகி வெளியே வா"என்று கலை நயத்தோடு பேசினார்.

அங்கே என் உதி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தார்.

எனக்கு உலகமே சுழல்வது போல இருந்தது, நடப்பது கனவா இல்லை நனவா???
நான் சுதாரித்து "எனக்கு மாப்பிளையிடம் தனியே பேச வேண்டும் " என்றேன்.

மதி என்ன இது...

பாட்டி ப்ளீஸ் அவர் கிட்ட நான் சில கேள்விகள் கேக்கணும்.

உதியின் அம்மா "தாராளமா கேட்டுக்கோ ஆனா நல்ல நேரம் முடியறதுக்குள்ள தட்டை மாத்திக்கலாம்"
என்று பாட்டியிடம் தட்டை மாற்றிக்கொண்டார்கள்.

உதியின் விரலில் மதுமிதா என்ற பெயரிலும் என் விரலில் உதய சந்திரன் என்ற பெயரிலும் மோதிரங்கள் பரிமாறினோம்.

இப்போவாவது நான் மாப்பிள்ளை கிட்ட பேசலாமா?

ஓகே என்று அனுமதி தந்தார்கள்.

பாட்டி வீட்டில் இருந்து தள்ளி இருந்த ஆத்தங்கரைக்கு சென்று அமர்ந்து கொண்டேன்!
என்னை விட்டு கொஞ்சம் தள்ளி உதி அமர்ந்து கொண்டார்.

சிறிய சிரிப்புடன் உதி "என்னிடம் கேக்க வேண்டியதை கேக்கலாம்"

என்னை கல்யாணம் செய்ய பெண் கேட்டீர்களா?

ஆமாம்

எப்போது

45 நாட்களுக்கு முன்னாள்

என்னிடம் நீங்கள் சொல்லவில்லையே ?

உன் சித்தி சம்மதிக்கவில்லை !

என்னிடம் கேட்டு இருக்கலாம்!

நீ அப்போது என்ன பதில் சொல்லி இருப்பாய் என்று தெரியும்!

நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன் ?

நீ விஜியை காதலிப்பதாக உன்னையே ஏமாற்றி கொண்டு இருந்தாய்

உங்களுக்கு எப்படி தெரியும்?

நான் உன்னை ஏழு வருடங்களுக்கு முன்பே சந்தித்திருக்கிறேனே?

ஏன் இந்த ஏழு வருடங்களில் நான் வேறு யாராவதை காதலித்து இருக்க மாட்டேனா?

சொன்னால் கோப பட மாட்டாயே?

சொல்லுங்கள்

நீ அப்படி யாரையும் விரும்பக்கூடாது என்றுதானே அன்றே உன்னை இழிவாக பேசினேன்.

பழைய ஞாபகத்தில் என் கண்களில் நீர் கசிந்தது.

இப்போது என்ன என் மேல் திடீர் காதல்?

திடீர் காதல் எல்லாம் இல்லை எட்டு வருடமாக காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.!

முகத்தை குழப்பமாக பார்த்தேன்.

அது சரி உனக்கெப்படி தெரியும்
"நீதான் விஜியுடன் நேரம் செலவழிப்பதிலேயே குறியாக இருந்தாயே."

விஜி என் நல்ல நண்பன்

நண்பர்கள் தூய்மையாக இருக்கட்டும் என்றுதான் இடையில் கொஞ்சம் விளையாடினேன்.

புரியவில்லை

புரியும் படியே சொல்கிறேன் கேள்.

நீயும் விஜியும் நட்பை காதலாக குழப்பும் தருணத்தில்தான் நான் உன்னை சந்தித்தேன்.
விஜி உன்னை காட்டிய அன்றே என் மனதை தொலைத்து விட்டேன்

......................................

அப்போது வெறும் பனிரெண்டாம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன்
நீ பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தாய்.

ம்..ம்

விஜி உன்னை காட்டி என் தோழி என்றான். அதன் பின் நட்பின் பல கதைகளை எடுத்து சொல்லி உன்னிடம் இருந்த ஈர்ப்பை மாற்றினேன்.
அவனும் காவியாவை விரும்பி இப்போது மனம் முடித்து நன்றாக வாழ்கிறான்.

...........................................................

ஆனால் என் அப்பா நான் சுயமாக கால் ஊன்றினால் மட்டுமே திருமணம்னு சட்டம் போட்டார்.,
உன்னை என் அப்பா கம்பெனிக்கு ரெக்கமெண்டு செஞ்சதே நாந்தான். நீ எங்கயும் போயிட கூடாதுன்னு நான் கவனமா இருந்தேன்.

...........................................

வெளி நாட்டுல படிக்க போனப்பவும் உன் ஞாபகம்தான். உன் ஈகோவை தூண்டி விட்டதால
நீ யாரையும் கல்யாணம் பண்ண மாட்டன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.

..........................................

அப்புறம் உன் சித்தி கிட்ட பொண்ணு கேக்க அம்மாவை அனுப்பினேன்.
அவங்க உன் தன்கைக்குதான் கல்யாணம் செய்யலாம்னு பிடிவாதமா சொல்லவும் அம்மா வேற வழி இல்லாம திரும்பி வந்துட்டாங்க.

நீ வேற என்னை கண்டால ஓடுற? உனக்கு என்னை பிடிச்சு இருக்கணும்ன்னா நாம ரெண்டு பெரும் நெருங்கி பழகனும்னு தான்
அமெரிக்காக்கு ரெண்டு பெறுமா போக ஏற்பாடு செஞ்சேன்.

என்னதான் கல்யாணம் பண்ணினாலும் உன் தங்கச்சிக்கு நான் செலவு பண்ணினா உனக்கு பிடிக்காதுன்னுதான்
உனக்கு சம்பளம் சேர்த்து கொடுத்தேன்.

உண்மையை சொல்லனும்னா கடந்த ஒரு மாசமும் நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் தெரியுமா?
அந்த சந்தோஷம் நிலைக்கனும்னுதான் உன்னிடம் கொஞ்சம் அதிகமாவே நெருங்கினேன்.

ஆனா நீ என் முத்தத்தை மட்டும்தான் ஏற்றுக்கொண்டாய்! அதிலேயே உன் சம்மதம் கிடைத்து விட்டது!
அதனால்தான் அம்மாவிடம் போன் செய்து பாட்டியை சந்திக்குமாறு சொன்னேன்!

என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?
என் குரலில் இருந்த வலி உதி உணர்ந்திருக்க வேண்டும்!

ப்ளீஸ் மதுக்குட்டி என்று என் முன் மண்டியிட்டு என் கைகளை பிடித்துக்கொண்டார்.

அந்த நேரம் நான் எல்லாம் மறந்து அவர் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் இட்டேன்.
நான் கொடுத்த முதல் முத்தம்! உதி என்னை அவர் தோளில் சாய்த்துக்கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தார்!


அமெரிக்காவில் என்னை கண்ட்ரோல் பண்ண ரொம்ப சிரம பட்டேன்.
எட்டு வருடம் காத்திருந்த எனக்கு எட்டு நாட்கள் காத்து இருக்க முடியவில்லை தெரியுமா?

நான்...

நீ எதுவும் சொல்ல வேண்டாம்டா நீ எதையும் நினச்சு கவலை பட வேண்டாம்"இனி உனக்கு நான் இருக்கேன் " என் நெற்றி முத்தமிட்டார்
நான் அவர் தொழில் சாய்ந்து அழுது விம்மினேன். என் பாரம் குறைந்தது.

வீட்டுக்கு வந்தோம். என்னம்மா என் பையனுக்கு இண்டர்வியு முடிஞ்சுதா?

முடிஞ்சுதுங்க அத்தை.

பாருடா...ஹ்ம்ம் அவ்ளோக்கு போயிடுச்சா? அடுத்த மாசம் கல்யாணம். உங்க ரெண்டு பேருக்கு ஓகே தான.

அம்மா என்ன இது? உதி பதறினார்.

ஹ ஹ ஹா அவசரம் பாரு! பத்து நாளுல கல்யாணம். என்னடா சந்திரா உனக்கு சந்தோஷம்தானே .

என்ன என்று உதயை பார்த்தேன்.

உன் கல்யாணம் முடிஞ்சுதான் உன் தங்கை கல்யாணம் ஓகே தான.

அனைவர் முன்னிலையில் உதயை அணைத்துக்கொண்டேன். அந்த பொன்னான வேளையில் அங்கு சந்தோஷம் மட்டுமே இருந்தது.

பாட்டியின் ஆசிர்வாதத்துடன் எங்கள் கல்யாணமும் முடிந்தது.

பத்தே மாசத்தில் அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தோம். கணவர் என் குழந்தைக்கு ஸ்மிதா என்று பெயரிட்டார்.

எங்கள் குடும்பம் நிறைவோடு செல்கிறது.

(முடிந்தது )
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
#6
ரமணி சந்திரன் கதை மாதிரி இருக்கு. அருமையான காதல் கதை
Like Reply
#7
(21-02-2023, 11:26 PM)Eros1949 Wrote: ரமணி சந்திரன் கதை மாதிரி இருக்கு. அருமையான காதல் கதை

not sure. I just posted from my Backups. Exbii / Xossip la irunthu eduthathu !
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)