Yesterday, 12:32 PM
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கும் ஒரு வெல்-விஷரின் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டிற்கு நானும் என் மனைவியும் காரில் வந்திருந்தோம். என் மனைவிதான் கார் ஓட்டினாள்.
இரு நிமிஷ பயணத்திற்கு பின் பஸ் நெடுஞ்சாலையிலிருந்து சற்று உள்ளே தள்ளி கிராமத்து சாலை ஓரமாக பஸ் நிறுத்தப்பட்டது. பஸ் உள்ளே விளக்குகள் எரிந்தபடி இருந்தன. குளிர் காரணமாக எல்லா ஜன்னல்களும், இரண்டு கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. அந்த ஸ்டாப்பில் யாரும் இறங்கவில்லை.
முன் இரவு நேரம். கார் வழியில் பழுதாகிவிட்டது. மலை பகுதியில் இருந்த அந்த சிறு நகரத்தில் காரை ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தினோம். இரவு 8 மணிக்கு கடைசி பஸ் ஏறி வெல்-விஷரின் வீட்டிற்கு கிளம்பினோம்.
பஸ் கிளம்பியதும்தான் கவனித்தேன், பஸ்ஸில் என்னை தவிர ஆண் பிரயாணிகள் யாருமில்லை. அந்த பஸ் ஒரு வேளை மகளிர் மட்டும் பஸ்ஸாக இருக்குமோ என்று மனைவியிடம் கேட்டபோது முன் வரிசையில் இருந்த இளம் பெண் ஒருத்தி, “இல்லைங்க, இது ரெகுலர் பஸ்தான்,” என்றாள்.
பஸ் புறப்பட்டபோது மொத்தம் ஏழெட்டு பெண்கள்தாம் இருந்திருப்பர். அவர்களில் பெரும்பாலும் மலை கிராமத்தவர்களாக தோன்றினர்.
முன் வரிசையில் இருந்த அந்த இளம் பெண்ணை அடுத்து உட்கார்ந்திருந்த இன்னொரு இளம் பெண், “இன்னைக்கும் நீ தப்பிச்சிட்டேன்னு தோணுது,” என்றதும் அடுத்தவள் கலுக்கென சிரித்துவிட்டாள்.
அவள் பேசியது ஒரு கேஷுவல் விஷயம் என்று நாங்கள் இருந்துவிட்டோம். பஸ்ஸில் இருந்த மற்ற பெண்கள் எங்களை அடிக்கடி நோட்டமிட்டபடி தங்களுக்குள் எதையோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தனர்.
அரை மணி நேர பயணத்திற்கு பின்பு நெடுஞ்சாலையில் பஸ் நின்றது. இரண்டு ஆண்கள் பஸ் ஏறினர். அதில் ஒருவன் நன்றாக சலவை செய்யப்பட்ட டீக்கான சட்டை-வேட்டியில் கம்பீரமாகவும் களையான தோற்றத்திலும் இருந்தான். வயசு 35 இருக்கும்.
அவனை எதிர்பார்த்த கணக்காக டிரைவரும் கண்டக்டரும் அவனுக்கு, “வணக்கம்க எஜமான்!” என்று மரியாதை சொல்லினர். அவன் பஸ் ஓனராகவோ, அல்லது அந்த பக்கத்து ஜமீன் மாதிரியான ஆளாகவோ இருக்கும் என்று நினைத்தேன். அவனுடன் வந்த மற்றவன் சாதாரணமாக இருந்தான்.