03-08-2025, 02:25 AM
அந்த காலைப் பொழுது வழக்கமான நாட்களைப் போல அன்றும் அலுப்புடன்தான் விடிந்தது.
அவ்வளவு அலுப்பாகத் துவங்கிய அந்த நாளின் காலையில் அவன் அப்படி ஒரு விபத்தைச் சந்திக்க நேரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
காலை எழுந்து அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து குளித்தோம் என்று பெயர் பண்ணிக் கொண்டு, டிப்டாப்பாக பேண்ட் சர்ட் போட்டு டை கட்டி கழுத்தில் ஐடி கார்டு மாட்டிக் கொண்டு அழுக்குத் துடைத்த ஷூ அணிந்து கொண்டு வண்டியைக் எடுத்துக் கொண்டு கிளம்பினால், அலுவலகம் போய் மீட்டிங் என்கிற பெயரில் அரைமணி ஒருமணி நேரம் அலுப்புத் தட்ட உட்கார்ந்து கேட்டு, கேள்விகளுக்கு பொய்யான காரணங்களைச் சொல்லி வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினால் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு ஏரியாவாக ஒவ்வொரு கடையாக மாலைவரை அலைந்து கஸ்டமர் பிடித்து, முகம் சுளிக்காமல் சிரித்துப் பேசி, ஒரு வழியாக தலையில் கட்டிவிட்டு ஹப்பாடா என்று திரும்ப அறைக்கு வந்து சேரும்போது என்னடா வேலை இது என்று மிகவுமே வெறுத்துப் போகும்.
ஆனால் அதை விட்டால் வேறு வேலை இல்லை. தினசரி எழுந்து ஓடியாக வேண்டும்.
அவ்வளவு அலுப்பாகத் துவங்கிய அந்த நாளின் காலையில் அவன் அப்படி ஒரு விபத்தைச் சந்திக்க நேரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே இல்லை.