
இது நினைவோ ஒரு பறவை போல ஒரு காதல் கதை.நினைவோ ஒரு பறவை போல இந்த கதைக்கும் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்னோட காற்றாய் வந்த அசுரனின் வேட்டையும் இந்த கதையும் மாறி மாறி update வரும்.
Romance ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️
|
![]()
இது நினைவோ ஒரு பறவை போல ஒரு காதல் கதை.நினைவோ ஒரு பறவை போல இந்த கதைக்கும் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்னோட காற்றாய் வந்த அசுரனின் வேட்டையும் இந்த கதையும் மாறி மாறி update வரும்.
09-10-2023, 09:59 PM
(This post was last modified: 24-11-2024, 06:00 PM by Geneliarasigan. Edited 7 times in total. Edited 7 times in total.)
பாகம் -1
"தாரிணி உனக்கு ஏதோ ஒரு லெட்டர் வந்து இருக்கு பாரு" அவள் அம்மா பார்வதி அழைத்தார். டியுஷன் எடுத்து கொண்டு இருந்த தாரிணி வந்து லெட்டரை பிரித்து பார்த்து அவள் அழகு முகம் மலர்ச்சி அடைந்தாலும் உடனே வாடியது. என்ன தாரிணி என்ன லெட்டர் இது ?அவள் அம்மா கேட்க, வேற ஒன்னும் இல்லம்மா,சென்னையில் உள்ள கம்பெனியில் இருந்து நேர்காணலுக்கு அழைத்து உள்ளார்கள்...!நாளை மறுதினம் காலை 9 மணிக்கெல்லாம் அவர்கள் பெருங்குடி ஆபிசில் இருக்கணும். அப்போ நாளை இரவே நீ கிளம்ப வேண்டி இருக்கும்.ஒரு வயசுக்கு வந்த பொண்ணு இரவு எப்படி தனியா போவே..! அது ஒன்றும் பிரச்சினை இல்லை அம்மா,இதோடு 49 நேர்காணல் முடிந்து விட்டது.இது 50 வது நேர்காணல். கம்பெனி வேறு கொஞ்சம் பெரிய கம்பெனி.கண்டிப்பாக என்னை விட தகுதி வாய்ந்தவர்கள் நிறைய பேர் அங்கு வருவார்கள்.இதில் வேலை கிடைக்குமா என்று தான் சந்தேகம்? அது எப்படி கிடைக்காமல் போகும் தாரிணி.?அந்த வேலைக்கான தகுதியான படிப்பை நீ முடித்து உள்ளாய் தானே? அதற்கான தகுதி இருக்கவே தான் அம்மா,எனக்கு கால் லெட்டர் அனுப்பி இருக்காங்க..என்று தாரிணி சொல்ல அப்புறம் என்ன பிரச்சினை தாரிணி,தைரியமாக போய் அட்டென்ட் பண்ணு என்று அவள் அம்மா ஊக்கம் கொடுத்தார். இங்கே படிப்பு மட்டும் முக்கிய தகுதியாக பார்ப்பது இல்லை அம்மா, படுக்கவும் எதிர்பார்க்கிறார்கள்.அதனால் தான் இங்கே என்னை போன்றவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக உள்ளது. புரியுது தாரிணி,நம்மை போன்றவர்களுக்கு இங்கே தன்னம்பிக்கை தான் முக்கியம்.உன் அப்பா இறந்த பிறகு உன் அண்ணன், நீ மற்றும் உன் தங்கையை வளர்க்க நான் என்ன பாடுபட்டு இருப்பேன் தெரியுமா?எத்தனை ஆண் கழுகுகளின் வக்கிர பார்வையையும் உரசலையும் ,சீண்டல்களையும் தாண்டி,என் கற்பையும் காப்பாற்றி கொண்டு தான் இந்த சமூகத்தில் உங்கள் மூன்று பேரை வளர்த்து ஆளாக்கினேன்.உன் அண்ணனுக்கு வசதியான இடத்தில் பெண் கிடைத்த உடனே ,கூட பிறந்த இரண்டு தங்கைகளின் வாழ்க்கை பற்றி கவலை படாமல் அம்போ என்று தவிக்கவிட்டு சென்று விட்டான்.இப்பொழுது நீயும்,உன் தங்கையும் மட்டுமே.நீ வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடை வருமானம்,பசங்களுக்கு ட்யுஷன் எடுத்து வரும் வருமானம் இவை மட்டுமே நம் குடும்பத்தின் ஆதாரம்.அதில் வரும் சம்பளம் நம் மூவரின் வயிற்றுக்கு இரண்டு வேளை மட்டுமே படி அளக்கிறது.சின்னவள் அடுத்த வருடம் காலேஜ் சேர்ந்து விடுவாள்.அவளுக்கு காலேஜ் பீஸ் கட்ட கொஞ்சம் பணம் வேணும்.இந்த உலகில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.தைரியமாக போ,உனக்கு இந்த தடவை நல்லதே நடக்கும்.. "சரிம்மா" என்ற தாரிணி உள்ளே சென்று நேர்காணலுக்கு தேவையானவற்றை தயார் செய்தாள். தாரிணி வறுமையில் இருந்தாலும்,அவள் மேனியில் வறுமை இல்லை.பிரம்மன் அவள் மேனியில் அழகை அள்ளி தெறித்து இருந்தான். வட்டவடிவ முகத்தில் அடர்த்தியான வில் போன்ற புருவங்கள்.சற்றே சப்பையான மூக்கு.பலாசுளையை வெட்டி ஒட்டி வைத்து போல் ஆரஞ்சு நிற உதடுகள்.இடுப்பு குறுகி இருந்தாலும் சற்றே நிமிர்ந்து அவள் குன்றின் மேடுகளை பார்த்தால் ஒரு நிமிடம் தலை சுற்றி விடும்.அந்த அளவு வனப்பு.கூந்தலில் மீன் பிடிக்கலாம் என்று கவிஞர்கள் இவள் கூந்தலை பார்த்து தான் பாடல் எழுதினார்களோ என்னவோ அந்த அளவு நீளம்.பொன்னிற மேனி அந்த ஏரியாவில் உள்ள வாலிபர்களை சுண்டி இழுத்தது.அவளை மடக்கி போட பல வாலிப இளைஞர்கள் அவள் பின்னால் சுற்றி திரிந்தனர்.ஆனால் அவள் யாரையும் ஏறேடுத்து கூட பார்ப்பது இல்லை.அவள் வேலை செய்யும் ஜெராக்ஸ் கடையின் முதலாளி அவளை எப்போதும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்.ஓவ்வொரு தடவை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் தளிர் கரங்களை தீண்ட அந்த காமுகன் தவறுவதே இல்லை.அந்த நேரத்தில் அவளுக்கு உடம்பில் கம்பளி பூச்சி ஊர்வது போல் இருக்கும்.ஆனால் என்ன செய்வது?இந்த வருமானம் அவள் குடும்பத்திற்க்கு அவசியமான ஒன்றாக இருந்தது. தன் தந்தையின் வயது உள்ள ஒருவன் தீண்டுவது அவளுக்கு அருவெறுப்பாக இருந்தாலும் குடும்பத்திற்காக சகித்து கொண்டு இருந்தாள்.இப்பொழுது இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் இந்த காமுகனிடம் இருந்து தப்பித்து விடலாம்.மேலும் தன் குடும்பத்திற்கு ஒரு நல்ல வழியும் கிடைக்கும் என தாரிணி நினைத்தாள். ஆனால் செல்லும் இடத்தில் காதலில் விழுந்து எதை இழக்க கூடாது என்று நினைத்தாளோ,அதுவே ஒருவனிடம் கல்யாணம் ஆகாமலே அவள் இழக்க கூடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.அவனை கூடிய விரைவிலேயே சந்திக்க போகிறாள்.ஆண்கள் என்றாலே வெறுத்து ஒதுங்கும் தாரிணி அவனிடம் மட்டும் மயங்கி எப்படி வியர்வை பன்னீராய் சிந்த தன்னையே திகட்ட திகட்ட கொடுத்தாள்?.வரும் பகுதிகளில் தாரிணி ![]()
09-10-2023, 11:34 PM
ஆரம்பம் சூப்பர். ஹீரோயின் ஃபோட்டோ நன்றாக உள்ளது
10-10-2023, 05:31 AM
மிக மிக மிக அருமையான தொடக்கம் நண்பா சூப்பர்
10-10-2023, 05:43 PM
நினைவோ ஒரு பறவை போல ஒரு காதல் கதையை எதிர்பார்க்கிறோம்
10-10-2023, 08:04 PM
10-10-2023, 08:04 PM
10-10-2023, 08:05 PM
10-10-2023, 08:05 PM
10-10-2023, 08:06 PM
10-10-2023, 08:07 PM
(This post was last modified: 10-10-2023, 09:06 PM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
பாகம் -2
மும்பை to புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் இன்னும் சற்று சில நிமிடங்களில் காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடையும் என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. மணி இரவு 12 மணி அதில் ஒரு ஜெனரல் கம்பார்ட்மெண்டில் கூட்ட நெரிசலில் இருந்து ஒரு சற்றே வாட்டசாட்டமான இளைஞன் இறங்கினான்.ஏறக்குறைய 14 மணிநேரம் சரியாக உட்கார கூட முடியாமல் பயணம் செய்து வந்த அலுப்பு அவன் கண்களில் தெரிந்தது.மார்கழி மாத குளிர் வேறு.குளிருக்கு இதமாக ஒரு தம் அடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.ஆனால் அவன் அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. "டேய் கண்ணு ராஜா என் தங்கம் இந்த சிகரெட் கொஞ்சம் விட்டு தொலைடா"என்று அவர் கூறியது நினைவுக்கு வர அந்த எண்ணத்தை விட்டொழித்தான். எதிரே டீ விற்று கொண்டு வருபவரை பார்த்து " ஒரு டீ கொடு அண்ணா" என்றான். டீ குடிக்க,சுடுதண்ணீரே தேவலாம் போல் இருந்தது.அவ்வளவு கேவலமாக இருந்தது டீ.மும்பை தாராவியில் வசிக்கும் அவன் செல்ல வேண்டிய இடம் சென்னை.ஆனால் கடைசி நேரத்தில் வந்த இன்டர்வியூ லெட்டர் காரணமாக அவனால் சென்னை செல்லும் எந்த ரயிலும் ஏறமுடியவில்லை.அந்த அளவு கூட்டம்.அதனால் புதுச்சேரி செல்லும் ரயில் ஏறி காட்பாடி வந்து பின் வேலூர் மூலமாக சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தான்.மும்பையில் பெயருக்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவனுக்கு இருந்த ஒரே உறவான அவன் அன்னையும் சில மாதங்களுக்கு முன் காலமாகி விட்டார்.அவர் தாயார் விருப்பப்படி சென்னை அருகே உள்ள சொந்த ஊரில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வந்து அடக்கம் பண்ணி இருந்தான்.இதற்கு மேல் தன் சொந்த மாநிலமான தமிழ் நாட்டில் சென்று வாழ வேண்டும் என்று முடிவெடுத்து இங்கு இருக்கும் கம்பெனிகளுக்கு apply செய்து கொண்டே இருக்க ஒரு கம்பெனி மட்டும் அவனுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. ஆறடிக்கு சற்றே குறைவான உயரம்.கருப்பும் கிடையாது,சிவப்பும் கிடையாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம்.எப்பொழுதும் புன்னகை தவழும் முகம்.மும்பை கலாச்சாரத்தில் வாழ்ந்து இருப்பதாலும், யாரும் அவனுக்கு உறவினர் இல்லாததால் காண்போர் எல்லோர் இடத்தில் சகஜமாக பழகுவான்.எவ்வளவு கஷ்டம் வந்தாலும் just like that என்று கடந்து சென்று விடுவான்.கடவுள் கொடுத்த வாழ்கையை அந்தந்த நொடி என்ன நிகழ்கிறதோ,அது துன்பமாய் இருந்தாலும் சரி,இன்பமாய் இருந்தாலும் சரி ,ரசித்து ஏற்று கொள்வான்.அவனுக்கு கடவுள் கொடுத்த வரம் புன்னகை.அவன் வெண்மை நிற முத்து பற்கள் வெளியே தெரிய சிரிக்கும் போது,பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் ஒரு கணம் தடுமாறி தான் போவாள். அங்கு சுமையை தூக்கி கொண்டு தனியாக தள்ளாடி சென்று இருந்த பாட்டியிடம், "என்ன பாட்டி,வெளியே வரை நான் தூக்கி வரட்டுமா?"என்று கேட்டான். அவரும் சந்தோசத்துடன் தலையாட்ட,அவன் பாட்டியின் சுமையை வாங்கி கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே சென்றான். வெளியே பாட்டியின் மகன் காரில் காத்து இருக்க,அவரிடம் அழைத்து சென்றான். "ஏண்டா,என் லக்கேஜ் தூக்க உள்ளே வர வேண்டியது தானே"என்று பாட்டி அவன் மகனிடம் கேட்டார். ஆனால் அந்த நடுத்தர வயது மனிதனோ அவன் அம்மாவின் மீது எரிந்து விழுந்தான். "ஏ கிழவி,உன்னை யாரு இந்த தள்ளாத வயதில் இவ்வளவு சுமை தூக்கி கொண்டு வர சொன்னது.இங்கே வந்து ஏன் எங்கள் உயிரை வாங்கற.?சரியான இம்சை"என்று திட்டினான். அதற்கு அந்த இளைஞன் உடனே,"சார் கொஞ்சம் பார்த்து பேசுங்க சார்.அவங்க உங்களையும், உங்க பசங்களையும் பார்க்க எவ்வளவு ஆசையா வந்து இருக்காங்க.அவங்க என்ன அவங்களுக்காகவா இவ்வளவு பெரிய சுமையை எடுத்து வந்து இருப்பாங்க என்று நினைக்கிறீங்க.எல்லாம் உங்களுக்காக தான் சார் ஆசையா ஊரில் இருந்து பொருட்கள் வாங்கி வந்து இருப்பாங்க" என்று கூறினான். அதை கேட்டு அந்த பாட்டியின் மகன்"ஏய் நீ யாரு முதல்ல,நான் யார் தெரியுமா?எனக்கு வந்து புத்தி சொல்லிகிட்டு.இடத்தை காலி பண்ணு முதலில் என்று விரட்டினான். அதை கேட்டு இளைஞன் இன்னும் பொறுமையாக,"சார் நீங்க இந்த நாட்டின் பிரதமராகவே இருந்தாலும் இன்னமும் இந்த அம்மாவின் மகன் தான்.இந்த வயதிலும் நீங்கள் அம்மா என்று அழைக்க அவர் உங்களுடன் இருக்கிறார்" என்று அவன் சொல்லும் போதே கண்களில் நீர் துளிர்த்தது.துடைத்து கொண்டு "அந்த அம்மா உயிரோடு இருக்கும் போதே அவர்களுடன் பத்து நிமிஷம் அன்பா பேசுங்க சார்.அதை விட சந்தோஷம் அவர்களுக்கு கிடையாது.இந்த வயசிலும் சுமார் 1000 kms பயணம் செய்து உங்களை ஆசையா பார்க்க வந்து இருக்காங்க.பாட்டி நான் போய்ட்டு வரேன் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க "என்று அவர் காலில் விழுந்தான். பாட்டிக்கே ஆச்சரியம் ஆகி விட்டது.இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா என்று?அவனுக்கு ஆசீர்வாதம் செய்து தூக்கி நிமிர்த்தி அவன் நெற்றியில் அன்புடன் முத்தம் இட்டார். அவர் மகனுக்கே இதை பார்த்து ஒரு மாதிரி ஆகி விட்டது.யாரோ முன்பின் தெரியாத ஒருவன் தன் அம்மா காலில் விழுந்ததை பார்த்து அவரே ஒரு நிமிசம் தடுமாறி தான் போனார். "என்னை மன்னிச்சிடு அம்மா,வாம்மா நாம நம்ம வீட்டுக்கு போவோம்" என்று பாட்டியின் மகன் அன்புடன் சொல்ல அதை பார்த்து இளைஞன் முகம் மலர்ந்தது. அவன் புன்னகை முகத்தை பார்த்ததும் பாட்டி இளைஞனின் தலையை ஆசையாக தடவி திருஷ்டி கழித்தார். ராசா நீ எப்பவும் இதே மாதிரி சிரித்து கொண்டே இரு.உன் பேரு என்ன? "என் பேரு சிவா.நான் போய்ட்டு வரேன் பாட்டி" என்று விடைபெற்றான். இவன் லேட்டஸ்டாக ஆடை அணிந்து இருந்த விதத்தை பார்த்ததும் "ஆகா கிராக்கி இன்று வசமாக சிக்கி விட்டது"என்று ஆட்டோ டிரைவர்கள் சூழ்ந்து கொண்டனர். "சார் எங்கே போகனும்" என்று இந்தியில் கேட்டார்கள். சிவாவும் கொஞ்சம் அவர்களிடம் விளையாட எண்ணி,இந்தியில் பேச தொடங்கினான். வேலூர் புது பஸ் ஸ்டாண்டு என்றான். உடனே ஆட்டோ டிரைவர்கள் 300 ரூபா கொடுங்க சார் என்று கேட்க, சிவா சிரித்து இந்தியில்"என்ன சார் இங்கே இருந்து வெறும் 5 kms தான் காமிக்குது.ஒரேயடியா 300 ரூபா கேட்கறீங்களே என்று அவன் இந்தியில் கேட்க, சுற்றி இருந்த பாதி ஆட்டோ டிரைவர்கள் காணாமல் போயினர். கடைசியில் கொஞ்ச கொஞ்சமாக பேரம் இறங்கி வந்து நூறு ரூபாய்க்கு செல்வது என ஒரு ஆட்டோ டிரைவரிடம் முடிவானது. சிவாவும் ஒப்பு கொண்டு ஏறினான்.பஸ்ஸில் சென்றால் பத்து ரூபா தான் ஆகும் என்று அவனுக்கு தெரியும்.இருந்தும் பாவம் இந்த ராத்திரியில் ஒரு சவாரிக்காக இந்த இரவு பறவைகள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.ஏதோ நம்மால் முடிந்த சின்ன உதவி.அதற்காக அவன் ஏமாறவும் தயாராக இல்லை. பேசிய தொகையை கொடுத்து விட்டு "ரொம்ப நன்றி அண்ணா" என்று சொல்லி அவன் கீழே இறங்க, ஆட்டோ டிரைவர் அதிர்ந்து " என்ன சார்,தமிழ் பேசறீங்க"என்றான். சிவா தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து" நான் சுத்த தமிழன் அண்ணா,நீங்கள் என்னுடன் முதலில் இந்தியில் பேசியதால் நானும் இந்தியில் பேசினேன்.இருந்தாலும் 5 km க்கு 100 ரூபா அதிகம் தான் " ஆட்டோ டிரைவர் உடனே,"சார் இரவு கண் விழித்து தான் ஒட்ட வேண்டும்,வேறு வழி இல்லை"என்று அவன் அசடு வழிந்தான். "சரி பரவாயில்லை அண்ணா,வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிஸ்கட் கொடுங்கள் " என தன் பையில் இருந்து பேக்கரியில் இருந்து வாங்கி வந்த வெண்ணெய் பிஸ்கட்டுகளை அவனிடம் கொடுத்து விட்டு "நான் வருகிறேன் அண்ணா"என்று கிளம்பினான். ஆட்டோ டிரைவருக்கு அவன் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டுகளை பார்த்ததும் கண் கலங்கி விட்டது. அவனை நிறுத்தி"சார் நீங்க மூச்சுக்கு முப்பது தடவை என்னை அண்ணா என்று அழைக்கும் போதும்,என் குழந்தைகளுக்கு அன்பாய் பிஸ்கட் கொடுத்ததும் என் மனதை நெகிழ செய்து விட்டது.அவன் 50 ரூபா எடுத்து கொடுக்க,சிவா மீண்டும் அதை அவன் கையில் வைத்து அழுத்தினான். அண்ணா,எனக்கு இந்த உலகில் யாரும் இல்லை.நான் பார்க்கும் எல்லோரையும் என் சொந்தமாகவே பார்க்கிறேன்.உழைக்கும் உங்கள் கஷ்டம் எனக்கு புரியும்,வைத்து கொள்ளுங்கள் பரவாயில்லை என்று அவர் தோளில் தட்டி விட்டு கிளம்பினான். ஏற்கனவே ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் தூக்கம் இல்லாமல் தவித்து வந்ததால் ,கொஞ்சம் நேரமாவது தூங்க ஏதாவது சொகுசு பஸ் கிடைக்குமா என்று காத்து இருந்தான்.ஆனால் சென்னை செல்ல ஒரே ஒரு நார்மல் பஸ் மட்டுமே நின்று கொண்டு இருந்தது.வேறு வழியின்றி அதில் ஏற முற்பட்ட வினாடி,பெங்களூரில் வந்த ஒரு AC NON SLEEPER பஸ் ஒன்று உள்ளே நுழைந்தது. அப்பாடா என்று நிம்மதியுடன் ஓடி போய் அதில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தான்.சிறிது நேரத்தில் ஒரு முதியவர் வந்து,"தம்பி கொஞ்சம் பின்னாடி உட்கார முடியுமா,எனக்கு கொஞ்சம் முதுகு வலி பின்னாடி உட்கார முடியாது"என கெஞ்சினார்.சரியென அவனும் எழுந்து வேறு இடத்தில் சென்று அழகான யுவதி அருகில் உட்கார,அவள் கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டாள். "ஏய் மிஸ்டர்,லேடீஸ் பக்கத்தில் வந்து உட்கார உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல.அழகான பெண்கள் என்றால் போதும் அப்படியே ஓடி வந்து பக்கத்தில் உட்கார்ந்து விடுவீர்களா "என்று கத்த தொடங்கினாள். சிவா ஒரு நிமிடம் என சுற்றும் முற்றும் பார்த்தான். "என்ன மிஸ்டர் சுத்தி முத்தி பார்க்கறீங்க"அவள் கோபமாய் கேட்க, சிவா அதற்கு "இல்ல தோழி,ஏதோ அழகான பெண் என்று சொன்னீர்களே..!அவர் எங்கே என்று தேடுகிறேன்." இதை அவன் சொன்னவுடன்,பக்கத்தில் இருந்தவர்கள் "கொல்லென்று" சிரித்து விடவே அவள் முகம் கன்றி விட்டது. பின்பு சிவாவே "தோழி இந்த பஸ்ஸில் பெண்கள் இருக்கை என்று தனியாக இல்லயே."என்ற கூற ஆனால் அவள் மீண்டும்"அது தான் பின்னாடி சீட் இருக்குல்ல போய் அங்க உட்காருங்க" என்று கத்தினாள்." சிவா புன்னகை மாறாமல் அமைதியாக எழுந்து கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டான். டிக்கெட் வாங்கி கொண்டு அமைதியாக உறங்கி விட்டான்.பேருந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது.ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப அழகான பெண்ணின் முகம் அவன் தோளில் சாய விழித்து கொண்டான். யார் என பார்த்தால் சற்று முன் சண்டையிட்ட அதே அழகான பெண் தான். சிவா தன் தோளில் சாய்ந்து அயர்ந்து உறங்கி கொண்டு இருந்த அந்த பெண்ணின் முகத்தை சிறு வெளிச்சத்தில் பார்த்து ரசித்தான். "மிக அழகாக இருக்கிறாள்.ஆனால் வார்த்தைகள் மட்டும் வெடுக்கென்று வெடுக்கென்று கோப கனலாய் வந்து விழுகிறது.இவள் அழகான நிலவு முகத்தை போலவே வெளிவரும் வார்த்தைகளும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சிவா நினைத்தான்.ஆனால் கோபமாக பேசுவது அவள் சுபாவம் அல்ல.அவள் அப்படி பேசியது தற்காப்புக்காக தான் என்று அவன் அப்பொழுது அறியான்.மேலும் அவனின் வாழ்க்கை துணையாக கடைசி வரை அவள் தான் கூட வரப்போகிறாள் என்று அவனுக்கு அப்பொழுது தெரியாது. "பாவம் அயர்ந்து தூங்குகிறாள் என்று அவனும் அப்படியே விட்டு விட்டான்." எதேச்சையாக தூக்கத்தில் அறியாமல் அவள் சாய்ந்த அவன் தோள் தான் காலம் முழுக்க உரிமையோடு அவள் சாய போகிறாள் என்று அவளும் இதுவரை அறியவில்லை.காலம் குறிப்பால் அவர்கள் இருவரும் பின்பு இணைய போகிறார்கள் என இந்த சம்பவத்தின் மூலம் நிகழ்த்தியது. அவள் வேறு யாருமல்ல இந்த கதையின் நாயகி தாரிணி காலம் எப்படி தன் சித்து விளையாட்டுகளை நிகழ்த்தி இருவரை ஒன்றிணைக்க போகிறது என அறிய காத்து இருங்கள்.காதல்,காமம்,காமெடி எல்லாம் கலந்து வரும். வானம் தாலாட்டு பாட, மலைகள் பொன் ஊஞ்சல் போட, நீயும் என் கையில் ஆட, சுகம் தேட ,கூட ![]()
11-10-2023, 01:23 AM
இரு பாகமும் இனிமை பழமை புதுமை கவனம் பொறாமை ஏக்கம் சோகம் என கலந்துகட்டி எழுதியுள்ளீர்கள் மிக நன்றாக கதை துவங்கியுள்ளீர்கள் இந்த கதையும் வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே
11-10-2023, 09:29 PM
11-10-2023, 09:30 PM
11-10-2023, 09:30 PM
|
« Next Oldest | Next Newest »
|