Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
இது எனக்குத் தெரிந்து பெரும்பாலான வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் தருகிறது. சற்று முன் நான் கணக்கெடுத்த போது 30 கதைகள் இருக்கின்றன. எதையும் அவர் பின்னுக்கு செல்ல விடுவதில்லை. அதனால் பத்திலிருந்து பதினைந்து அவருடைய முடிவில்லாத கதைகளே குட்டிப் பதிவுகளுடன் முதல் பக்கத்தில் நிற்கின்றன. இதனால் நமக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நல்ல சுவாரசியமான கதைகள் பின்னுக்குப் போய் வ்யூஸும், கமெண்ட்ஸும் குறைந்து விடுகின்றன. அதனால் அவர்கள் எழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. சிலர் இடைவெளி விட்டு அப்டேட் செய்கிறார்கள். சிலர் நிறுத்தியே விடுகிறார்கள்.
இதில் அவர் ப்ரைவேட் மெசேஜில் வந்து கமெண்ட்ஸ் போடுங்கள் என்றும் கூட்டுக்கதை எழுதலாமா என்றும் பலருக்கும் மெசேஜ் போடுகிறார். அதிலும் பிட்டு பிட்டு தான். ஒரு மெசேஜுக்கு பதில் அளித்தால் இன்னொன்று வரும்.
Hi
Hi nanba
I need two help from you nanba
Help 1 : en stories ku comment podunga nanba pls
Help 2 : namma rendu perum serthu oru story eluthalama nanba
நான் ஆரம்பத்தில் பழைய ஆட்களுக்கு நட்புடன் எழுதுகிறார் என்று நினைத்து அவருக்கு அன்பாக ‘முடியாது’ என்று நாகரிகமாக பதில் அளித்தேன். பின் பார்த்தால், அவர் கதைகளையே படித்திராத பல புது ஆட்களுக்கும் இதே மெசேஜ் போயிருக்கிறது.
இதில் கொடுமை என்ன என்றால் நான் முடியாது என்று பதில் அளித்து இரண்டு நாட்களில் எனக்கு ஆரம்ப மெசேஜ் திரும்ப வந்தது.
Hi nanba
நான் பயந்து போய் “ஐயோ மறுபடியுமா?” என்று பதில் அனுப்பினேன். அடுத்த மெசேஜ் தான் மிகப் பெரிய கொடுமை
I need two help from u nanba
தனிப்பட்ட மெசேஜ்களை வெளியிடுவது நாகரிகம் அல்ல என்று உறுதியாக நினைப்பவன். ஆனால் அடுத்தவரைப் பைத்தியக்காரனாக்கும் இது போன்ற பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.
இப்போதும் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. ஒரு காலத்தில் நன்றாக எழுதியவர். பலரையும் ஊக்கப்படுத்தியவர். ஆனால் இப்போது இப்படி ஆகி விட்டார். அதனால் புகார் செய்ய மனம் வரவில்லை. அவர் பெயர் பார்த்தாலே அந்த திரியைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
Posts: 200
Threads: 0
Likes Received: 141 in 99 posts
Likes Given: 168
Joined: Jul 2019
Reputation:
1
08-06-2023, 11:52 PM
(This post was last modified: 08-06-2023, 11:52 PM by Rajar32. Edited 1 time in total. Edited 1 time in total.)
Paithiyatha ena soliyum thirutha mudiyathu, but moderators than itha handle pananum. Ilati neenga sonnathu than nadakum site mella saagum yarum story eluthama stop paniruvanga.. ithula avan story ku support panravangala than sollanum...