வலையில் சிக்காத மான்!
#1
வலையில் சிக்காத மான்!



இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது!

ஒரு பெண்ணை இப்படியும் வலை விரித்து பிடிப்பார்கள் என்பதை முடிந்த அளவு சுருக்கி எழுதி உள்ளோம்.


நஸ்ரினா! அவள் ஒரு ஏழை வீட்டு அழகி. 
கஷ்ட்டப்பட்டு படித்து O/L இல் 8D சித்தி பெற்று பாடசலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துவிட்டாள்,
ரிசால்ட் வந்து ஒரு 10 நாட்கள் பாடசாலை, குடும்பத்தில் ஒரே புகழாரம்,

அந்த மகிழ்ச்சியிலும்,
" எப்படியடா பக்கத்து நகரத்திற்கு சென்று ஏ எல் படிப்பது. பஸ் செலவிற்கு மாத்திரமே 1500 ரூபாய் தேவைப்படுமே" என்ற கவலை அவர்களை உறுத்தியது.

புகழ்ந்தவர்களும் புகழ்ச்சியோடு நழுவிக் கொள்ள, நஸ்ரினாவின் ஆசிரியை தனக்கு தெரிந்த ஒரு நபரைக் காட்டி அவரிடம் உதவி கேட்கும் படி சொல்லி அனுப்ப, அவரது கடைக்கு இவளும் வாப்பாவும் உதவி கேட்டு போனார்கள். 

வந்தவர்களிடம் 38 வயது மதிக்கத்தக்க அந்த நபர் விபரம் கேட்டு விட்டு,
" இந்தாங்க நாளைக்கே ஸ்கூல் போங்க 2500 வெச்சி கொள்ளுங்கள், உடுப்பு வேர தேவைக்கு உதவும் " என்று கொடுத்தவருக்கு நன்றி கூறி வெளியாகும் போது,

"ஒவ்வொரு மாசமும் ஸ்கூல் முடிந்து போற வழில  நீங்களே கடைக்கு வந்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்க"  என்று  நஸ்ரினவிடம் அன்பாக கூறி விட்டு அவர் வேலையை கவனிக்கலானார்.

மூன்று மாதங்கள் படிப்போடு போய்விட்டது, அன்றும் மாத தொடக்கத்தில் பணத்தை எடுக்கப் போன நஸ்ரினா  கையில் 1500ற்கு பதில்  2500 ரூ.பா வை கொடுத்தார், 

"பணம் கூடுதலாக உள்ளதே " என்று அவள் கூற,
" படிக்கிர வயசு, இது என்ஜோய் பன்ற வயது அத வெச்சு விருப்பமானதை வாங்கிக் கொள்ளும், வேறு என்ன தேவைண்டாலும் என்கிட்ட தயங்காமல் கேளுங்க, நான் நிறை பணம் தருவதை வீட்டில் சொல்ல வேண்டாம், நீ உன் சொந்த செலவுக்கு வெச்சிகோ"  என்று கூறி அனுப்பி விட்டார்.

சின்ன வயது, ஆசைகள் நிறைந்த வயது , பாடசாலையில் வறுமை காரணமாக பட்ட தனிமை, என்று இருந்த நஸ்ரினா..

முதலில் தயங்கினாலும் பிறகு அதை வீட்டுக்கு தெரியாமல் எடுத்து நன்பிகளோடு பழகி செலவு செய்ய தொடங்கி விட்டாள்,
இப்படி இரண்டு மாதம் முடிய நோன்பு விடுமுறை கொடுக்கப்படும் காலம் வந்தது.

ஒரு வார்த்தை நன்றிக்கு, அவரிடம் சொல்லி விடுவோம் என்று கடைக்குப் போனவள்  கையில் ஒரு பேக் இணை கொடுக்க." என்ன இது"  என்று கேட்க, 

"வீட்டுக்கு போய் பாருங்க ஒங்களுக்குதான் பெருநாள் உடுப்பு, உங்கட கலருக்கும்.சைஸிற்கும்.அழகா இருக்கும்." 
என்று கூறி கையில் கொடுக்கும் அதே வேலை இன்னும் ஒரு #என்விலப்பை கையில் கொடுத்து,

" இதில் 3000 ரூ.பா இருக்கு, நான் கொடுத்தது என்று வாப்பாக்கு கொடுங்க, இந்த 2000 ரூ.பா உங்க பெருநாள் காசு நல்லா எஞ்சாய் பன்னுங்க. என்று அவளது  கைகளில் திணித்துபடி அவள் கண்ணத்தை கிள்ளி லேட் ஆவுது வீட்டுக்கு போங்க என்று அவளை அவசரமாக அனுப்பி வைத்தார் அவர்.

எத்தனையோ பெருநாள்கள் உடுக்க உடை இல்லாமல் பள்ளிக்கு தொழக் கூட போகாமல் இருந்தவளுக்கு, நோன்பே வரவில்லை அதற்கு முன் அடைந்த இத்தனை இன்ப  அதிர்ச்சி காரணமாக, அவன் கன்னத்தில் கிள்ளியது கூட நினைவில் வரவே இல்லை.

வீடு வந்து பார்த்தவளுக்கு அப்படி மகிழ்ச்சி, அவள் கனவிலும் வாங்க முடியாத விலையில் மூன்று ஷல்வார்கள் அவள் கண் முன். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது அந்த பிஞ்சு மனது.

இப்படி அடிக்கடி அவளது டீன் ஏஜ் ஆசைகளுக்கு அவளை கேட்காமலேயே விருந்து அவன் மூலம் கிடைத்துக் கொண்டே இருந்தது. கடந்த 8 மாதங்களில், அவளுக்கு கிட்டத்தட்ட 50-60000 ரூ.பா விற்கு மேல் அவன் செலவு செய்திருப்பான்..

அன்றும் அப்படித் தான் பாடசாலை விடும் நேரம் அடை மழை பொழிந்து கொண்டிருந்தது, நஸ்ரினா பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கையில் அவள் அருகில் ஒரு வேண் வந்து நின்றது,

அதற்குள் இருந்த அவன் ஜன்னலைத் திறந்து " வேன்ல ஏருங்க, நான் உங்க வீட்டு கிட்ட தான் போகிறேன் " என்று கூற,எதையும் யோசிக்காத அவள், எதோ ஈர்க்கப்பட்டவள் போல் வேனின் கதவை திறந்தாள், ஆனால் அது திறபடவில்லை.

ஒரு சில வினாடிகளில் முன் கதவைத் திறந்த அவன் " அந்த கதவில் சிக்கல் இருக்கு சில நேரம் திற படாது முன்னால் ஏறுங்க" என்று அவளை ஏற்றிக் கொண்டான்.அதற்குள் அவள் முழுதும் நனைந்து தொப்பாகி இருந்தாள். 

வேனுக்குள் அந்தக் கொட்டும் மழையில் கூட ஏசி யை உச்சத்தில் இல் வைத்து வேனை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றதால் கூதலில் அவள் நடுங்க ஆரம்பிக்க,

"நல்லா நளஞ்சி கூதல் போடுது எனா, கிட்டத்துல டெர்ம் டெஸ்ட் வேற வருதே, இரிங்க் தலய கொஞ்சம் தொடச்சிட்டு, ஏண்ட வைப்ட உடுப்ப் மாத்திட்டு போகலாம்" என்று கூறி வேனை வேகமாக ஓட்டினான்.

அவளது தயக்கத்தை வெளிப்படுத்த முன், " எண்ட மகள் ஒங்கல போக உடுவாளோ தெரியல" என்று கதையை கொடுத்து அவள் வாயை அடக்கி விட்டான்.

அவனது மாளிகை போன்ற வீடு வர, வேன் அதற்குள் சென்று நின்றது. வீட்டைத் திறந்தவன்" வாங்க வாங்க " என்று அவளை அழைக்க அவள் வீட்டினுள் சென்றாள்.


ஆனால் அங்கு அவர்களை தவிர வேறு யாரும் இருக்கவில்லை,
" இந்த ரூம்ல போய் தலையை தொடச்சிட்டு,எதாச்சம் உடுப்ப சீக்கிரம் மாத்திட்டு வாங்க. நான் வேன்ல இருக்கேன்' வீட்டில் எல்லாரும் எங்கயோ போயிருக்காங்க போல" என்று கூறி வேணுக்கு சென்று விட்டான்.

அவளுக்கு தயக்கம் வந்தாலும் வேனில் தானே அவன் இருக்கிறான், நல்ல மனுஷன் என்று நினைத்த படி அங்கு சென்று கதவை மூடி தாள் போட்டு விட்டு தலையை துவைத்து, உடையை மாற்றக் கழட்டும் போது ,

அந்த அறையில் இருந்த இன்னொரு ஒரு கதவு திடீர் என்று திறக்கபட்டு இவளை யாரோ இருக்கிக் கட்டிப் பிடித்து முத்தம் இட..இவள் அதிர்ச்சியில் உரைத்துப் போனாள். அத்தனையும் நொடிப் பொழுதில் நடந்து முடிந்து விட்டது..

அவள் சுதாகரித்துக் கொள்ளும் முன்  அவளை கட்டிப் பிடித்து இருந்த அந்த உருவம் அவள் வாயை  நெசுக்கிப்பிடித்துக் கொண்டது.

ஆம் இத்தனை நாள் நல்லவன் போல் இருந்த அந்த கடைக்காரன் வேஷம் கலைந்து அவளை பலாத்காரம் செய்ய தயாராக அங்கு இருந்தான்.

" இங்க பாரு, என் ஆசைக்கு நீ இனங்கிரு, ஒன்ன இந்த வீட்டுலயே ராணி போல வெச்சிக் கொள்ரேன்."

"ஒன்ன பாத்த மொத நாளே நான் ஒன்ன வெச்சி கொள்ள முடிவு செஞ்சிட்டன்."

" ஒனக்கு என்ன வேனுமோ அத்தனையும் நா...."

அவன் கூறி முடிக்க முன் வெறி கொண்டவள் போல் அவனை தள்ளி மேசையில் இருந்த பழைய காலத்து தொலை பேசியால் அவனை தாக்கி விட்டு அடுத்த கணம் அந்த வீட்டை விட்டு ஓடி வந்து, கிடைத்த ஆட்டோ ஒன்றில் ஏறி தன் ஆசிரியை வீட்டை சென்றடைந்தவள்,

நடந்ததை அவரிட்ம் நடு நடுங்க கண்ணீர் சொட்ட் சொட்ட்  கூறி முடிக்க, அதிர்ச்சி அடைந்த அவரால் அவனை எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டு,

மேலதிகமாக சிக்கலை வளர்த்து இவள் வாழ்வை நாசம் செய்யாமல் காதோடு காது வைத்தால் போல் விடயத்தை  மறைத்துவிட்டு,

நஸ்ரினாவை தான் அறிந்த இன்னும் சில ஆசிரியர்களுடன் சேர்ந்து வேறு ஒர் ஊரில் படிக்க வைத்தாள்.

இன்று நஸ்ரினா ஒரு தலை சிறந்த உயிரியல் ஆசிரியை.
தன் மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை மட்டுமல்ல ஒரு நல்ல ஆலோசகராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சகோதரிகளே
உங்கள் வறுமைக்கு எவர் வேண்டுமானாலும் உதவலாம்.
ஆனால் அதற்கு கைமாறாக உங்கள் கை விரலை கூட உதவி செய்வார்க்கு கொடுக்க நினைக்க வேண்டாம்.

உங்கள் அப்பன் வயதில் உள்ளவர் தான் உங்களுக்கு உதவி செய்தாலும் அவரை விட்டு தள்ளியே இருங்கள். உங்கள் வயதை விட உடலும் இளமையும் தான் பலருக்கு தேவை என்பதை மறக்க வேண்டாம்.

உங்கள் இயலாமை, வறுமை, அழகு,வயதின் தேவைகளை அறிந்து கனக்கச்சிதமாக உம் கற்பினை வேட்டை ஆட இது போல் பல மிருகங்கள் காத்திருக்கும். அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் நம்பிக்கையை வெள்ள மிகவும் நல்லவர்களாக நடித்தும் சில சமயம் குடும்ப சிக்கல்களை பேசியும் அனுதாபத்தை எடுத்தும், ஏன் உங்கள் அழகை வர்ணித்தும் உங்களை வலையில் வீழ்த்திடுவர்.

பெற்றுக் கொண்டிருக்கும் உதவி, பண ஆசை, நன்றிக் கடன், போன்ற உணர்ச்சிகள் உங்களை கட்டிப்போட்டு இது போன்றவர்களுக்கு உம்மை விருந்து வைத்திடும், எனவே இது போன்ற உணர்ச்சிகளுக்கு கட்டுப்படவோ, மதி மயங்கிடவோ வேண்டாம்.

செய்யும் உதவி இடையில் நின்று விடுமே என்ற பயத்தில் கூட உங்கள் ஆடையின் ஒரு அணுவை கூட அகற்றிட துனிய வேண்டாம். கிடைக்க வேண்டிய பணம், உதவியை விட கற்பு பெருமதி மிக்கது.

இது போல் உதவிகள் எடுக்கும் போது முடிந்தவரை நீங்கள் செல்ல வேண்டாம்.
அக்கவுண்ட்டில் போட சொல்லுங்கள், ஆண்களை அனுப்புங்கள் அல்லது துணைக்கு எவரையும் அழைத்து செல்லுங்கள்.


வாழ்க்கையை வாழ கற்பினை விலை பேசும் பல அபாயமான கையவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

நஸ்ரினாவை போல "வலையில் சிக்காத மான்" ஆக இருங்கள்.

நன்றி.
[+] 1 user Likes Ishitha's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: