29-04-2021, 08:13 AM
“ஐயோ.. அம்மா.. இருந்த ஒரே ஆதரவும் நீதானே. இப்படி சொல்லாம கொள்ளாம போயிட்டியே…”
“அம்மா… அம்மா…”
“எனக்குன்னு யார் இருக்கா அம்மா..”
“சோறு தின்னியானு கேட்க இனி எனக்கு நாதியுண்டா.. அம்மா..”
“உன்னையும் என் கூடவே கூட்டிக்கிட்டு போயிருக்கலாமுள்ள..”
தொட்டியம் வேலைக்காரத்தெருவின் மூலையில் இருந்த வீட்டிலிருந்து இப்படியொரு குரலில் ஓலம் கேட்டுக்கிட்டு இருந்தது. அந்த வீட்டினைச் சுற்றியுள்ளவர்கள் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள்.
“பாவம்ப்பா.. அந்தப் பொண்ணு. இதுக்கு இருந்த ஒரே ஒரு சொந்தம் அவ அம்மாதான். அதுவும் போயிடுச்சே” என்றாள் சொர்ணம்.
“என்ன பண்ண.. அவளுக்கு கல்யாணம் காட்சி நடந்திருந்தாலாவது இன்னைக்கு புருசன், அவன் சொந்தம், புள்ளை குட்டின்னு இருந்திருக்கும்” என பெருமூச்சுவிட்டாள் கமலம். கமலம்மா என்றுதான் அவளை அழைப்பேன். என்னுடைய அம்மாவைப் போல அவள் பார்த்துக் கொள்வாள். அம்மா வேலைக்கு போன காலத்தில் எல்லாம் கமலம்மாவிடம் தான் சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன்.
அவர்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ரம்யா. அடுத்த சில மாதங்களில் முப்பத்தி ஐந்து வயதினை நெருங்கும் முதிர்கன்னி. ஆமாம் இன்றைக்கு என்னைப் போல முதிர்கன்னிகள் பலர் இருக்கிறார்கள். திருமணம் என்பது இருமணங்கள் இணையும் விழா என ஊரில் சொல்லிக் கொண்டு இருந்தாலும்… அது மணங்களை மட்டுமே கொண்டு நடப்பதில்லை. திருமணத்திற்கு அந்தஸ்து வேண்டும், பணம் வேண்டும், காலம் முழுக்க சீர் செய்து கொடுக்க அண்ணனோ, தம்பியோ வேண்டும். இதெல்லாம் இல்லாமல் ஒரு குடிசை வீட்டில் வாழுகின்ற என்னைப் போன்ற கன்னிகளை இந்த சமூதாயத்திற்கு கண்ணே தெரியாது.
அம்மாவின் சடலத்தினை நடுவீட்டில் போட்டுக்கொண்டு செய்வது அறியாது இருந்த போதுதான்.. என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. சிகப்பு நிற போர்டு கார். அதன் தோரணையே அதிலிருப்பவர்களின் பணக்காரத் தனத்தை காட்டியது. அதில் பட்டுபோன்ற துணியில் வேட்டியும், சட்டையும் போட்டுக் கொண்டு ஒருத்தர் இறங்கினார். எப்படியும் ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும், அதிகமாக அறுபது இருக்கலாம். நல்ல உயரம். திடமான உடல்வாகு. அந்த துணியிலிருந்து இதுவரை கேள்வியேப் பட்டிராத மனோரஞ்சித வாசனை பரவியது. கழுத்தில் ருத்ராட்சத்தை தங்க சங்கிலியில் போட்டிருந்தார். கையில் பிரேஸ்லெட்டும், கை விரல்களில் தங்க மோதிரமும் அவருடைய பணக்காரத் தனத்தை காட்டியது.
“ஏம்மா.. இதுதானே.. செங்கம்மலம் வீடு”
“ஆமாங்க… அவதான் செத்துப் போயிட்டா…”
“கேள்விப்பட்டு தான்மா வந்திருக்கேன்..”
“நீங்க யாரு. இதுநாள் வரை அவளை பார்க்க யாருமே வரலையே..”
“நான் அவளோட அண்ணன் மா.. “
“அண்ணனா.. அவ உயிரோட இருந்தப்ப.. உங்களைப் பத்தி ஒரு வார்த்தை சொன்னதே இல்லையே..”
“எல்லாம் விதிமா..விதி. அவள நானும் அப்பாவும் பாராட்டி சீராட்டி வளர்த்தோம்மா. எங்க அம்மாகூட கொஞ்சம் கடிஞ்சு பேசுவா. ஆனா நாங்க அவ சொல்தான் மந்திரமுனு இருந்தோம். எல்லாம் அவளோட பதினெட்டு வயசு வரைக்கும்தான்.,,” அவர் பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தார்.
“செங்கம்மலம் வீட்டைவிட்டுப் போனது நேத்து நடந்தமாதிரி இருக்கு.. இன்னைக்கு 37 வருசம் ஓடிப்போச்சு. நாங்க தேடாத இடமில்லை. சொல்லாத ஆட்களில்லை. அவ முத்துப்பனு ஒருத்தனோட நல்லா வாழ்ந்திக்கிட்டு இருக்கா.. நீங்க போய் கெடுக்காதீங்கனு கடுதாசி வந்துச்சு. அந்த கடுதாசியை நம்பிக்கிட்டு இருந்துட்டோம்.”
“இப்ப அவ சாவுக்கு மட்டும் வந்திருக்கீங்க. அவ உயிரோட இருக்கிறப்ப வந்திருந்தா எவ்வளவு சந்தோசப் பட்டிருப்பா..”
“உங்களுக்கெல்லாம் தெரியாதும்மா. அவ வீம்புக்காரி. நான் மூனு முறைவந்து அவ காலுல விழாத குறையா கெஞ்சி கேட்டிருக்கேன். ஆனா எங்களோட வர மாட்டேனு சொல்லிட்டா.. அவ புருசனை இழந்து பெண் குழந்தையை வைச்சுக்கிட்டு கஷ்டப்படறாளேனு கூட நாங்க நிறைய உதவி செய்ய வந்தோம். எல்லாத்தையும் மறுத்துட்டா..” என்று நெஞ்சுருக பேசினார். கமலாம்மா அவரை நம்பினாள்.
“அவ ஒரு கிறுக்கின்ணா. உங்களைப் போல ஒரு அண்ணன் இருந்தும் அனாதை மாதிரி செத்திருக்காளே..”
“அவ அநாதையெல்லாம் இல்லைமா. எங்க ஜமீனோட வாரீசு. அவளை இந்த குடிசை வீட்டுல பார்த்து சாகனுமுனு எங்க விதி..” காரிலிருந்து ஒரு பெரிய ரோஜா மாலையை எடுத்துவந்து செங்கலமத்தின் உடல்மீது போட்டு அந்த பெரிய மனிதர் அழுதார்.

sagotharan