Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மோடியின் தமிழகம் வருகை : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெடித்தது வார்த்தைப்போர்
#1
#GoBackModi, #MaduraiThanksModi, #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. ட்விட்டரில் பதிவான பெரும்பாலான போஸ்ட்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவி ஏதும் செய்யவில்லை என்றும், தமிழகத்தை புறக்கணித்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

Go Back Modi என்ற வாசகத்துடன் கூடிய கார்ட்டூன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

CHENNAI: 
ஹைலைட்ஸ்

  1. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார் மோடி

    Go Back Modi என்ற வாசகத்துடன் பதிவுகள் செய்யப்படுகின்றன.

    ட்ரெண்டிங்கில் #GoBackModi, #MaduraiThanksModi, #TNWelcomesModi

[color][size][font]


பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். மதுரைக்கு செல்லும் அவர் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பதிவுகள் செய்யப்படுகிறது. 
இதனால் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்ட போஸ்ட்களில் மத்திய அரசை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. பேரிடர் காலங்களில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக #GoBackModi என்ற பதிவின் கீழ் புகார்கள் கூறப்படுகின்றன. 
கஜா புயலின்போது 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். 11 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆனால் கஜா புயல் நிவாரண பணியின்போது தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதள பதிவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
பெரும்பாலான பதிவுகளில் தமிழ்நாட்டின் வரைபடம் பெரியாரின் முகத்துடன் கூடியதாக இருப்பது போன்றும், அவர் Go Back Modi என்று சொல்வதைப் போன்றதுமான கார்ட்டுன் அதிகம் இருக்கின்றன. 
இதேபோன்று பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்ட் செய்து வருகின்றனர். #MaduraiThanksModi மற்றும் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்குகளில் மோடியை வரவேற்கும் போஸ்ட்கள் செய்யப்படுகின்றன. இங்கு நாம் குறிப்பிட்ட 3 ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளன. [/font][/size][/color]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றால் மத்திய அரசு மீது தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. 
இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில், ''மோடி எதிர்ப்புக்கு பின்னால் நாங்கள் இல்லை. இது மக்களின் கோபம். எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். இப்போது அது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். எதற்காக அடிக்கல் நாட்டு விழாவை தாமதம் செய்துள்ளனர்?. தேர்தல் வருவதால் இதுபோன்ற வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது'' என்றார். 

#GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகுவது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள மோடி வந்தார். அப்போது இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. பிரமாண்ட பலூன்களிலும் Go Back Modi என்று எழுதி மோடி எதிர்ப்பாளர்கள் பறக்க விட்டனர்.
மேலும் படிக்க -''தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டு கொண்டிருக்கிறது''- தமிழிசை
எதிர்ப்புகளை தவிர்க்க சாலை மார்க்கமாக வருவதை விட்டு விட்டு ஐ.ஐ.டி. மெட்ராசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். இன்று மோடி பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சிக்கு அருகே வைகோவின் மதிமுக கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மோடி எதிர்ப்பு பிரசாரங்களை பாஜக மறுத்திருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறுகையில், '' ஆன்லைனில் மோடிக்கு எதிராக பணம் செலவழிக்கப்பட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது. அவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். அவர்களை நாங்கள் கண்டுகொள்ளவில்லை'' என்றார். 
மோடி எதிர்ப்பு பிரசாரம் என்பது சரியான அணுகுமுறை அல்ல என்று சிலர் கூறியுள்ளனர். அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் தனது ட்விட்டர் பதிவில், ''#GoBackModi என்ற ஹேஷ்டேக்கை இப்போது ட்ரெண்ட் செய்வது சரியான அணுகுமுறை அல்ல. அவர் மிகச் சிறந்த மருத்துவமனையை அமைக்க அடிக்கல் நாட்ட வருகிறார். எதிர்ப்பைக் காட்ட சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் அவரை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல'' என்று கூறியுள்ளார்
Like Reply
#3
மோடி வரும் போதெல்லாம் தமிழகத்தில் எதிர்ப்பு.... மீண்டும் டிரெண்டிங்கில் கோ பேக் மோடி 



கூட்டணி தலைவர்களுடன் இன்று கோவையில் மோடி பிரச்சாரம்- வீடியோ
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர உள்ள நிலையில், டுவிட்டரில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி கேவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.



[Image: modi33-1554780341.jpg]


பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று மோடியே திரும்ப போ என டுவிட்டரில் டிரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் டிரெண்ட் செய்வதை தமிழகத்தில் பலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு போட்டியாக பாஜகவும் பிஎம் மோடி வெல்கம் டு தமிழ்நாடு என டிரெண்ட் செய்வதும் வழக்கம்.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் பிரதமர் நரேந்திரமோடி கோவை வருவதை எதிர்த்து டுவிட்டரில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆகி வருகிறது. எனினும் இதையெல்லாம் மோடி ஒரு போதும் கண்டுகொள்ளவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
Like Reply
#4
கோ பேக் மோடியை சைலன்ட்டாக்கிய தர்பார்.. ஒரே நேரத்தில் வைரலான இரண்டு டேக்.. பின்னணி என்ன?

ஒரே நேரத்தில் வைரலான இரண்டு டேக்.. வீடியோ
சென்னை: டிவிட்டரில் தற்போது #GoBackModi மற்றும் #Darbar ஆகிய இரண்டு டேக்குகள் வைரலாக டிரெண்டாகி வருகிறது. ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் டிரெண்டாவது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவர் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார்.

கோவை பாஜக வேட்பாளர் மற்றும் மற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
[Image: memes22-1554788694.jpg]


பிரதமர் மோடி வருகை
பிரதமர் மோடியின் வருகையை அடுத்து கோ பேக் மோடி மீண்டும் வைரலாகி வருகிறது. எப்போதும் போல இணையத்தில் #GoBackModi வைரலாக டிரெண்டாகி வருகிறது. இதில் நிறைய எண்ணிக்கையில் டிவிட்டுகள், மீம்ஸ்கள் போடப்பட்டு வருகிறது.


[Image: darbar-1554788775.jpg]
  
[color][size][font]
ரஜினிகாந்த் வைரல்
அதேபோல் #GoBackModi டிரெண்டாகும் அதே வேளையில் தற்போது #Darbarஎன்ற டேக்கும் டிரெண்டாகி வருகிறது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த வருடம் வெளியாக உள்ள படம் தர்பார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை அடுத்து #Darbar டேக் வைரலாகி உள்ளது.
[/font][/size][/color]

[Image: twitter-1554788945.jpg]
  
[color][size][font]

என்ன இடம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் #Darbar டேக்தான் தற்போது தேசிய அளவில் நம்பர் ஒன்னில் இருக்கிறது. காலையில் இருந்து #GoBackModi நம்பர் 1ல் இருந்து, பின் தர்பார் பர்ஸ்ட் லுக் வந்ததும் இரண்டாம் இடத்திற்கு சென்றுவிட்டது . தற்போது தேசிய அளவில் #GoBackModiஇரண்டாம் இடம் பிடித்துள்ளது.[/font][/size][/color]

[Image: gobackmodi-1554789007.jpg]
  
[color][size][font]
டிரெண்ட் என்ன
#GoBackModi டேக் டிரெண்ட் செய்யப்பட்டால் எப்போதும் அதுதான் முதலிடத்தில் இருக்கும். ஆனால் தற்போது தர்பார் அதை முந்தி இருக்கிறது. இதனால் தேர்தல் நேரத்தில் மோடிக்கு எதிரான டேக் வைரலாவதை தடுக்கத்தான் இந்த டிரெண்ட் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #GoBackModi டிரெண்டாவதை தடுப்பதற்காக இந்த #Darbar டேக் டிரெண்ட் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது[/font][/size][/color]
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)