Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 973 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
 140
	 
 
	
	
		ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்... கதிகலங்கும் போட்டியாளர்கள்!
மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். 
ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிவிப்பு, இ-காமர்ஸ் சந்தையில் ஏற்கெனவே கோலோச்சிவரும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பெரும்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டி அதிகரித்து, பொருள்கள் மீதான விலைக்குறைப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.  
இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கணிசமான பங்களிப்பைக்கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட் ஆகிய நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து நிர்வகித்துவருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், ஃப்ளிப்கார்ட்டின் 70 சதவிகிதப் பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது அமெரிக்க நிறுவனமான வால்மார்ட். இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுடன் கடுமையாகப் போட்டிபோட்டு வருகிறது ஃப்ளிப்கார்ட்.  
இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் களம் இறங்க உள்ளது. குஜராத்தில் ஜனவரி 18-ம் தேதி, `துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் இணைந்து, புதிதாக ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக அறிவித்தார்.  
	 
	
	
	
	
 
	  
	
	  • 
 
 
 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 973 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
 140
	 
 
	
	
		முதலாவதாக, குஜராத்தில் தொடங்கப்பட உள்ள இந்த ஆன்லைன் வர்த்தகம், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 12 லட்சம் சிறு வியாபாரிகள் பலன் அடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.  
இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகம் இருப்பதை `மறைமுக காலனியாதிக்கம்' என்று பொருள்படும்படி பேசிய அவர், ``இந்தியாவில் அரசியல் காலனியாதிக்கத்துக்கு எதிராக, காந்தி போராட்டம் நடத்தினார். இதுபோல் டிஜிட்டல் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்ட இயக்கத்தைத் தொடங்க வேண்டும். இந்த நவீன உலகத்தில், இன்டர்நெட்தான் புதிய சொத்து. இந்தியாவில் இன்டர்நெட் சேவை என்பது இந்திய மக்களால் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாக இருக்க வேண்டாம். மாறாக, வெளிநாட்டவர்கள் கைகளில் இது போகக் கூடாது. இந்தப் புரட்சியில் நாம் வெற்றி பெற்றால், இந்திய இன்டர்நெட் கட்டுப்பாட்டை நாம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவர முடியும்" என்றார். 
![[Image: mukesh_ambani_600_18325.jpg]](https://image.vikatan.com/news/2019/01/20/images/mukesh_ambani_600_18325.jpg)  
ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் களம் இறங்கப்போவதாக முகேஷ் அம்பானி அறிவித்திருப்பது, ஏற்கெனவே இதில் முன்னணியில் இருக்கும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் மூலம், இந்தியா முழுவதும் பரந்துபட்ட அளவிலான நெட்வொர்க்கை வைத்திருப்பதால், இ-காமர்ஸ் சந்தையில் நுழைவது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எளிதான ஒன்றாகவே இருக்கும். அப்படி ரிலையன்ஸ், ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கிவிட்டால் போட்டி அதிகரித்து, அது மேலும் விலை குறைப்புக்கு வழிவகுக்கும்.  
	 
	
	
	
	
 
	  
	
	  • 
 
 
 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 973 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
 140
	 
 
	
	
		இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவைத் துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம், மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தியவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலேயே போய்விட்டன.  
இ-காமர்ஸ் சந்தையில் நுழையும்போதும் ரிலையன்ஸ் இதே உத்தியைக் கடைப்பிடித்தால், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களும் அதே சலுகைகளையோ அல்லது விலைக்குறைப்பையோ செய்யும் நிலை ஏற்படும். ஏற்கெனவே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பணத்தை அள்ளி இறைப்பதால், இந்த நிறுவனங்களின் நஷ்டம் அதிகரித்து வருகிறது.  
ஏற்கெனவே இருக்கும் கடும் போட்டியின் காரணமாக 2017-18-ம் நிதியாண்டில், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு 2,064 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட 244 கோடி ரூபாய் நஷ்டத்துடன் ஒப்பிடுகையில், இது 750 சதவிகிதம் அதிகமாகும். 
	 
	
	
	
	
 
	  
	
	  • 
 
 
 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 973 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
 140
	 
 
	
	
		இத்தனைக்கும் இந்த நிறுவனத்தின் வருவாய், கடந்த 2017-18ம் நிதியாண்டில் 21,650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய 15,560 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவிகிதம் அதிகமாகும். ஆனாலும், 2017-18ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அறிவித்த பல்வேறு சலுகைகள், விலை குறைப்புகள், அதிகமான குடோன்கள் அமைத்தல் மற்றும் இபே (இந்தியப் பிரிவு) உள்ளிட்ட சில சிறிய இ-காமர்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது  உள்ளிட்டவற்றுக்காக 23,700 கோடி ரூபாய் அளவுக்குச் செலவிட்டதால், இழப்பையே சந்தித்துள்ளது.  
அதே கதைதான் அமேசானுக்கும். வருவாய் அதிகரித்தபோதிலும், நஷ்டம் அதைவிட அதிகம். உதாரணத்துக்கு, அமேசானின் துணை நிறுவனமான க்ளவுடெயில் (Cloudtail) நிறுவனம், 2017-18ம் நிதியாண்டு காலகட்டத்தில் 7,149 கோடி ரூபாய் அளவுக்கு, அதாவது முந்தைய நிதியாண்டைவிட 27 சதவிகித அளவுக்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளபோதிலும், இழப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், செலவினங்கள் 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டலாம்.   
ரிலையன்ஸ் வருகையால் போட்டியைச் சமாளிக்க மேலும் விலைக் குறைப்பில் ஈடுபட்டால் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கலக்கம் அந்த இரு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் போட்டி அதிகரிக்கும்போது, அதனால் கிடைக்கும் விலைக் குறைப்பு மற்றும் சலுகைகளால் பயனடையப்போவது வாடிக்கையாளர்கள்தான். அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களால் இந்தியாவில் டிஜிட்டல் காலனியாதிக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ரிலையன்ஸின் வருகையால் விலகியுள்ளது என்றும், கடைசியில் வெற்றி நுகர்வோர்களுக்குத்தான் என்றும் கூறுகிறார் முதலீட்டு நிபுணரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியுமான மோகன்தாஸ் பாய். 
	 
	
	
	
	
 
	  
	
	  • 
 
 
 
	 
 |