Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மொபைலை விற்கப்போறீங்களா... அப்போ இதைச் செய்ய மறந்துடாதீங்க!’
புதிய போனை எக்ஸ்சேஞ்சில் வாங்கப்போகிறீர்களா. இல்ல, மொபைலை விற்கப்போறீங்களா? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை!
பழைய போன், டேப்லட், லேப்டாப் அல்லது ஹார்ட்டிஸ்க்கை விற்று புதிய சாதனங்களை வாங்குவது இன்று மிகவும் எளிதான ஒரு செயல் ஆகிவிட்டது. அமேசான், ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் நிறைய எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கொடுக்கின்றன. Cashify போன்ற தளங்கள் நேரடியாகப் பழைய சாதனங்களை விலைகொடுத்துப் பெற்றுக்கொள்கின்றன. இவை உள்ளூர் வியாபாரிகளைவிட நல்ல விலைக்கு, பழைய சாதனங்களைப் பெற்றுக்கொள்கின்றன. இப்படி பழைய மொபைல் மற்றும் சாதனங்களை விற்கும் வேலை எளிதாகிவிட்டாலும், இப்படிக் கொடுப்பதற்கு முன்பு சற்றே அலர்ட்டாக இருப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் பழைய மொபைலில் இருந்து உங்கள் தகவல்கள் மற்றும் முக்கிய ஃபைல்கள் திருட்டுப்போக வாய்ப்புண்டு. இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிரபல ஆன்டிவைரஸ் மற்றும் கணினி பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பெர்ஸ்கை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை டார்க் வெப் சமூகத்துக்கு 3,500 ரூபாய்க்கும் மேலான தொகைக்கு விற்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் புகைப்படங்களாக இருக்கலாம், மெசேஜ்களாக இருக்கலாம், முக்கிய ஆவணங்களாக இருக்கலாம். எனவே, பாதுகாப்பாக இருக்க வேண்டியது நமது கடமையே. பிரபல டேட்டா ரெகவரி நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொள்ள, ஏற்கெனவே பயன்படுத்திய ஹார்ட்டிஸ்க் பலவற்றை வாங்கி சோதனை செய்தது. இதில் அதிகமானவை முழுதாக டேட்டா நீக்கம் செய்யாமல் வெறும் ஃபார்மட் மட்டும் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஃபார்மட் செய்தால் போதாதா என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்திருக்கும்.
ஆம், ஃபார்மட் செய்வதன் மூலம் மட்டும் டேட்டா அனைத்தும் அழிந்துவிடாது. அவற்றை சில ரெகவரி டூல்கள் மூலம் வெளியே எடுக்க முடியும். எனவே, சரியாக அனைத்து டேட்டாவையும் நீக்காமல் இப்படி விற்பது ஆபத்தான ஒரு விஷயம். எனவே, இந்த வழிமுறையைப் பின்பற்றுவது நல்லது.
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதலில் உங்கள் போனில் இருக்கும் டேட்டாவை ஏதேனும் பென் டிரைவ் அல்லது ஹார்ட்-டிஸ்க்கில் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. பின்பு ஃபேக்டரி ரீசெட் செய்யுங்கள். இது கணக்குகள், ஆப்கள் என அனைத்தையும் நீக்கும். ஆனால், இது மொத்தமாக அனைத்தையும் அழித்துவிடும் எனக் கூற முடியாது. இதற்குப் பின் மொத்தமாக வைப் செய்ய வேண்டியது அவசியம்.
இதை, பல முறைகளில் செய்ய முடியும். இதற்கென்றே சில ஆப்கள் மற்றும் டூல்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி இதைச் செய்ய முடியும். இதன்மூலம் ரெகவரி செய்ய முடியாத அளவு டேட்டாவை அளிக்க முடியும்.
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அப்படி என்ன செய்யும் இந்த டேட்டா வைப்பிங் மென்பொருள்கள்? இவை டேட்டாவை அழிப்பதுடன் நிற்காமல் அவற்றைப் பல்வேறு தேவையற்ற ஃபைல்கள் கொண்டு பலமுறை ஓவர்-ரைட் செய்யும். இதன்மூலம் பழைய பைல்கள் யாவும் தடயமற்று போகும். இது முடிந்தளவு உங்கள் போனில் இருக்கும் தகவல்கள் ரெகவர் செய்யப்படாமல் இருக்க உதவும். மொபைல் என்றல்லாமல் லேப்டாப், டேப்லட், ஹார்ட்டிஸ்க் என அனைத்து சாதனத்துக்கும் இந்த டேட்டா வைப்பிங் டூல்கள் கிடைக்கின்றன. உதாரணத்துக்குக் கூற வேண்டும் என்றால் 'BitRaser', 'Android Data Eraser', 'Safe Eraser' போன்ற பல மென்பொருள்கள் இதற்கென்றே கிடைக்கின்றன. இதில் சிக்கல் வந்தாலும், நீங்களே பலமுறை வெவ்வேறு ஃபைல்களை ஏற்றி மீண்டும் ஃபார்மட் செய்யுங்கள். இதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் உங்கள் பழைய டேட்டாக்கள் முற்றிலும் காணாமல் போகும்.
ஆனால், இதுவும் மொத்தமாக டேட்டாவை அழித்துவிடாது என்கின்றனர் சில டெக் வல்லுநர்கள். முற்றிலுமாக சாதனத்தை அழித்தால் மட்டுமே முற்றிலுமாக டேட்டா அழியும். இல்லையேல் ஏதேனும் ஒரு வழியில் பழைய டேட்டாவை எடுத்துவிட முடியும் என்கின்றனர் அவர்கள். இருப்பினும் சொற்ப அளவிலான விடுபட்ட டேட்டாவே அப்படியும் கிடைக்கும். எனவே, டேட்டா வைப்பிங் மூலம் 99% இந்த டேட்டா ரெகவரி ஆபத்துகளிலிருந்து தப்பிக்க முடியும். இனி மொபைல்களை விற்கும் முன் இதைச் செய்ய மறந்துடாதீங்க!
Posts: 42
Threads: 0
Likes Received: 25 in 19 posts
Likes Given: 76
Joined: May 2019
Reputation:
0
|