Fantasy தளிச்சேரி புத்தன்
#1
வெண்குறுதி


கொடிய மார்கழி இரவொன்றில்..
"ரிசபா.. செல்லலாம்" என்றது ஒரு பெண்குரல். 
"ஆணை இளவரசி" என அவன் புதர்களூடே சென்றான். அவனை இளவரசி பின் தொடர்ந்தாள். புதரிலிருந்து மயானமொன்றை கடந்தார்கள். விரைவுத்தேரொன்று குறுங்காட்டிற்குள் நின்றது. ஒற்றை செந்நிற குதிரை அதில் பூட்டப்பட்டிருந்தது. அதனை "ருத்ரா" என அழைத்தான் ரிசபன். எஜமானின் வருகையை அறிந்து புறப்பட தயாரானது. இளவரசி பின்னால் ஏறிக்கொள்ள.. ரிசபன் முன்னால் ஏறி குதிரைக்கு கிளம்ப சமிஞ்சை செய்தான். டொக் டொக் என குதிரையின் குளம்போசை மெதுவாக கேட்க விரைவுத்தேர் பெருநடை போட்டது. எல்லாம் பௌத்த ஆலமரத்தினை கடக்கும் வரைதான். அதன்பின் ருத்ரா சிலிரித்துக்கொண்டு ஓடத்தொடங்கியது. 

காற்றை கிழித்துக்கொண்டு விரைவுத்தேர் கலிங்கத்தின் பிரதான சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. ரிசபன் கோட்டை தெற்கு வாயில் காவலர்களுக்கு தகவல் தருவதற்கு வில்லில் நெருப்பு அம்பு ஒன்றை வான் நோக்கி எய்தான். அதைக்கண்ட காவலர்கள் தெற்குவாயில் கதவை திறந்தனர். விரைவுத்தேர் வேகமாக கோட்டைக்குள் நுழைந்து இடது சாலையின் வழியே அரண்மனை அந்தப்புறத்தின் பின்புற வாசலில் வந்து நின்றது. இளவரசி இறங்கினாள். "ரிசபா ருத்ரனோடு தளிச்சேரி எச்சு மண்டை வீட்டில் இரு. தேவைப்பட்டால் மீண்டும் அழைக்கிறேன்" என்றாள்.
"தங்கள் சித்தம் இளவரசி" என தலையை குணிந்து கொண்டான். 

 கலிங்கத்தின் தளிச்சேரி பெண்களின் தலைவி எச்சு மண்டை. அவளிடம் இருபத்து ஏழு பெண்கள் இருந்தனர். நட்சத்திரங்களின் பெயர்களை அவர்களுக்கு சூட்டி தன்னுடன் வைத்திருந்தாள். ரிசபன் தளச்சேரி சென்றான். வாயிற்காவலனிடம் இளவரசியின் முத்திரை மோதிரத்தை காண்பித்தான். அவர்கள் விட்டனர். ருத்ரனை தொழுவத்தில் கட்டி தீணி வைத்துவிட்டு.. எச்சு மண்டை வீட்டிற்குள் சென்றான்.அரைத்த சந்தனத்தின் வாசனை வரவேற்றது. 
"வாங்க.. வாங்க.." என வரவேற்றாள் ஒரு கன்னி. கச்சை இல்லாத மார்புகளை ஒரு மெல்லிய பச்சைப்பட்டால் மூடியிருந்தாள். இடைக்கச்சாயாக வெண்பட்டு இருந்தது. 
"இளவரசி மேனகை இங்கு தங்கும்படி கூறினார்" என முத்திரை மோதிரத்தை காண்பித்தான்.
"ஆ.. " என வியந்தவள். அவனை அமர சொல்லிவிட்டு அறையொன்றிற்கு ஓடினாள். "அம்மையே.." என அழைப்பது கேட்டது.

"வாருங்கள்.. வாருங்கள்.." என ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொத்தி வெளிப்பட்டாள். "இளவரசி எப்படியுள்ளார்?"
"நலம்"
"அவள் பூப்பெய்திய பொழுது பணிவிடை செய்தது நான்தான். அப்போதிலிருந்து தனிப்பிரியம் என்மீது."
"ஓகோ.. நானறியேன். குதிரையுடன் இங்கு வந்து தங்கிக் கொள்ள ஆணை"
"நீங்கள்?"
"இளவரசியின் விரைவுத்தேரின் சாரதி ரிசபன்"
"ரிசபன். தொழுக்கு ஏற்ற பெயர். குதிரையை காணலாமா?"
"தொழுவத்தில் உள்ளது"
"குணமெப்படி? மனுசனா பூதமா?"
"பறவை"
"ஆகா" ருத்ரனைக் காண தொழுவத்திற்கு எச்சுமண்டையும், ரிசபனும் நடந்தார்கள். 
"அந்தக் குதிரையை அவிழ்த்து இப்படி நடத்திக் கூட்டிவா ரிசபா" ருத்ரன் மிடுக்காக நடந்து காட்டியது.
"சுழிசுத்தம். இதன் பெயர் என்ன?" என கேட்டாள் எச்சு மண்டை.
"ருத்ரன்"
"அருமை. ரிசபரே நீங்கள் ருத்ரனை தொழுவத்தில் கட்டிவிட்டு.. அதோ பந்தம் எரிகிறதே அந்த மாளிகைக்கு செல்லுங்கள். யவன பெண்கள் இருக்கிறார்கள். சல்லாபித்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்." என சொல்லிவிட்டு.. குதிரையே பார்த்துக்கொண்டு இருந்தாள். 

horseride sagotharan happy
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Excellent start..
Super narration nanba..
Continue in your style.. But pls don't stop in the middle
[+] 2 users Like Its me's post
Like Reply
#3
சரித்திர கதை. நல்ல தமிழ்நடை, தொடருங்கள் சகோதரரே ..
[+] 1 user Likes spike.buster's post
Like Reply
#4
super starting
good
continue
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 1 user Likes badboyz2017's post
Like Reply
#5
Story super bro
Like Reply
#6
இவ்வளவு அருமையான கதையை ஆரம்பித்த கதாசிரியர் சகோதரன் கடந்த 9 மாதங்களாக இங்கே வருவதில்லை போல் தெரிகிறதே !
Like Reply




Users browsing this thread: