10-09-2019, 09:49 AM
ரூ. 2 லட்சம் வரை வீடு கட்ட மானியம்! எங்கு? எப்படி பெற வேண்டும் தெரியுமா?
ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும்.
first 5 lakhs viewed thread tamil
ரூ. 2 லட்சம் வரை வீடு கட்ட மானியம்! எங்கு? எப்படி பெற வேண்டும் தெரியுமா?
|
10-09-2019, 09:49 AM
ரூ. 2 லட்சம் வரை வீடு கட்ட மானியம்! எங்கு? எப்படி பெற வேண்டும் தெரியுமா? ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும்.
first 5 lakhs viewed thread tamil
10-09-2019, 09:50 AM
எலிவளையானாலும் தனிவளை வேண்டும்’ என்பார்கள். ஆம், நம் நாட்டில் சொந்தவீடு என்று ஒன்று இருந்தால் பிறவிபலனை அடைந்தமாதிரி. இந்த அவசர உலகில் நாள் முழுதும் உழைத்துக் களைத்து வந்தாலும் நமக்கு ஆறுதலைத் தருவது நம் வீடு தானே. ஆனால், இன்றைக்கு உள்ள விலைவாசி, ரியல் எஸ்டேட் துறையின் உச்சபட்ச வளர்ச்சியினால் சொந்தவீடு என்பது பலருக்கும் கானல்நீர் தான்.
அதிலும் நம் ஒட்டுமொத்த சேமிப்பையும் கொட்டி வீடோ நிலமோ வாங்குவது என்பதும் நல்லதல்ல. இதற்குத் தான் வங்கிகளும், வீட்டு நிதி நிறுவனங்களும் பல்வேறு கடன் திட்டங்களை வைத்துள்ளன. அதற்கேற்றாற் போல் வீட்டுக்கடனுக்கான தேவையும், மக்களின் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக அதிகமாகி வருகிறது. ஆகவே, வங்கிகளும் பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் எனப் பலதரப்பட்ட மக்களுக்காகப் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தவித முன்பணமும் இல்லாமல் ரூ. 2 லட்சம் வரையில் சொந்த வீடு கட்டுவதற்கான மானியம் எப்படி பெறுவது என்று இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 1. முதல் தகுதி சொந்த வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். 2. ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும். 3. கடன் வாங்கிய 15 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டும். 4. குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி பெயரில் வீடு மனை இருக்க வேண்டும். 5. பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, கூட்டறவு வங்கிகளில் இந்த திட்டம் அமலில் உள்ளது. 6. முதலில் வங்கிக்கு நேரில் சென்று வீடு கட்டுவதற்கு லோன் வேண்டும் என விசாரித்தால் இதுக் குறித்த தகவல்களை வங்கி அதிகாரிகள் உங்களிடம் விவரிப்பார்கள்.
first 5 lakhs viewed thread tamil
|
« Next Oldest | Next Newest »
|