Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#1
புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... சந்தையில் இழந்த இடத்தை மீட்டெடுக்குமா மைக்ரோமேக்ஸ்?


மைக்ரோமேக்ஸின் முதல் நாட்ச் ஸ்மார்ட்போன்கள் இதோ.
[Image: 145085_thumb.jpg]
டந்த சில வருடங்களில் சந்தையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்திய மொபைல் நிறுவனங்களைப் பட்டியலிட்டால் அதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இடம்பெறும். சில வருடங்களுக்கு முன்னால் வரை சந்தையில் குறிப்பிட்ட அளவிலான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்த மைக்ரோமேக்ஸ், பின்னர் அதன் இடத்தை இழந்தது. அதற்குச் சந்தையில் உருவான கடுமையான போட்டி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடாதது எனப் பல காரணங்கள் அதற்குப் பின்னால் இருந்தன. ஆனாலும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதிய ஸ்மார்ட்போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. 
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு தகவல் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, விற்பனையில் முதல் முறையாக நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது மைக்ரோமேக்ஸ். மீண்டும் எப்படியாவது சந்தையில் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதற்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 13 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னபடியே நேற்றைக்கு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மைக்ரோமேக்ஸின் முதல் நாட்ச் ஸ்மார்ட்போன்கள் 

[Image: rtkjbwr_21350.JPG]
[img=600x0]https://image.vikatan.com/news/2018/12/19/images/rtkjbwr_21350.JPG[/img]
ஸ்மார்ட்போன்களை எடுத்துக்கொண்டால் இந்த வருடம் முழுவதும் நாட்ச்தான் ட்ரெண்டில் இருந்தது. சாம்சங் தவிர்த்து பெரும்பாலான நிறுவனங்கள் நாட்ச் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திவிட்டன. இறுதியாக அந்த வரிசையில் மைக்ரோமேக்ஸும் இணைந்திருக்கிறது. Infinity N11, Infinity N12 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் செக்மென்ட்டை குறி வைத்துக் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாட்ச்தான் மிக முக்கியமான அம்சம் என்றாலும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது நாட்ச் சற்று பெரிய அளவிலேயே இருக்கிறது. வசதிகளைப் பொறுத்தவரையில் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டிலுமே 6.19 இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமாக 13 MP+5 MP டூயல் கேமரா இருக்கிறது. போட்டோக்களை மேம்படுத்துவதற்காக AI வசதியும் உண்டு. இன்ஃபினிட்டி N12-யில் 16 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இன்ஃபினிட்டி N11-யில் 8 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. குறைவான ஒளி கொண்ட இடங்களில் செல்ஃபி எடுக்க உதவும் வகையில் ஃபிளாஷ் வசதியும் உண்டு.
Like Reply
#3
[Image: wdw_22556.JPG]

சமீப காலமாக ஷியோமி உட்பட சில நிறுவனங்கள் மீடியாடெக் புராசாஸர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஆனால் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொடக்கம் முதலே அதன் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் புராசஸர்களையே பயன்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களிலும் அந்த நிறுவனத்தின் புராசஸரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2GHz திறன் கொண்ட Helio P22 புராசஸர் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இருக்கிறது. டிஸ்ப்ளே, கேமராவுக்கு அடுத்தபடியாக மொபைல் வாங்குபவர்கள் எதிர்பார்க்கும் விஷயம் பேட்டரி. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஷியோமி அதன் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் 4000 mAh பேட்டரியைக் கொடுப்பது வழக்கம். பலரின் விருப்பமாக இருப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணம். எனவே, பேட்டரி விஷயத்தில் ஷியோமியைப் பின்பற்றியிருக்கிறது மைக்ரோமேக்ஸ். 
Like Reply
#4
[Image: Capture_21172.JPG]

இன்ஃபினிட்டி N11-னில் 2 GB ரேம் உள்ளது, இதன் விலை 8,999 ரூபாய் மற்றும் இன்ஃபினிட்டி N12-ல் 3 GB ரேம் உள்ளது இதன் விலை 9,999 ரூபாய். இரண்டிலும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை மேலும் மெமரி கார்டு மூலமாக நீட்டித்துக்கொள்ளவும் முடியும். அதற்காக ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டை பயன்படுத்தும் வகையிலான சிம் ஸ்லாட்டும் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனைக்கு வருகின்றன. இந்திய மொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் அதிக போட்டி இருப்பது பட்ஜெட் செக்மென்டில்தான். இதில் முதல் ஐந்து இடங்களில் ஷியோமி, ஒப்போ, விவோ எனச் சீன நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஒரு வேளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட்டால் மைக்ரோமேக்ஸ் தற்பொழுது பிடித்திருக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புண்டு.
Like Reply
#5
'2.0' ரியல்மீ ப்ரோ & '3.0' ரியல்மீ U1... இரண்டில் எதை வாங்கலாம்?

[Image: 143567_thumb.jpg]

Realme 2 Pro ஸ்மார்ட்போனைப் போலவேவடிவமைக்கப்பட்டிருக்கிறது ரியல்மீ U1. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசங்களும் இல்லை
று மாதங்களுக்கு முன்னால்தான் முதன்முதலாக இந்திய சந்தையில் கால் பதித்தது ரியல்மீ நிறுவனம். அதற்குள்ளாக நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது. மிகக் குறுகிய காலத்திற்குள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. சந்தையில் இருக்கும் தேவை அறிந்து அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதுதான் அதற்குக் காரணம். ஷியோமியைப் போலவே ஒரு திட்டத்தோடுதான் செயல்படுகிறது ரியல்மீ. இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களை மட்டுமே இதுவரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னால் ரியல்மீ U1 என்ற ஸ்மார்ட்போனை புதிதாகச் சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு மொபைலில் செல்ஃபி எடுப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதனால் இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான மொபைல்கள் அதற்கேற்றவாறே வடிவமைக்கப்படுகின்றன. ரியல்மீ U1 ஸ்மார்ட்போனிலும் முன்புற கேமராவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 
Like Reply
#6
25 MP முன்புற கேமரா... Helio P70 புராஸசர்
[Image: Captureijpwd_23029.JPG]

ரியல்மீ U1


கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 2 Pro ஸ்மார்ட்போனைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது ரியல்மீ U1. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசங்களும் இல்லை. முந்தைய ஸ்மார்ட்போனைப் போலவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவின் அளவும் மாற்றம் செய்யப்படவில்லை அதே 6.3 இன்ச் 19.5:9 ரேஷியோ டிஸ்ப்ளேதான். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு விஷயங்கள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒன்று இதிலிருக்கும் புராஸசர், மற்றொன்று இதில் இருக்கும் கேமரா. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எடுத்துக் கொண்டால் சந்தையில் குவால்காம் நிறுவனத்தின் ஆதிக்கமே அதிகம். ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் புராஸசர்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை சற்று அதிகம் என்றாலும் வேகம், திறன் போன்றவற்றின் காரணமாக ஸ்னாப்டிராகன் புராஸசர்கள் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
Like Reply
#7
[Image: mediatek_23075.JPG]

பட்ஜெட் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை இதன் பயன்பாடு அதிகம்தான். ரியல்மீ நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட மூன்று ஸ்மார்ட்போன்களில் இரண்டில் இருப்பது ஸ்னாப்டிராகன் புராஸசர்கள்தான். குவால்காமுக்கு அடுத்தபடியாக இருப்பது மீடியாடெக் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புராஸசர்களை சில நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்நிலையில் ரியல்மீ U1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக்கின் Helio P70 புராஸசரை இதில் பயன்படுத்தியிருக்கிறது ரியல்மீ. இந்த புராஸசர் முதன்முதலாக இந்த ஸ்மார்ட்போனில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Like Reply
#8
[Image: Capturei_23587.JPG]

அதற்கடுத்ததாக முன்புற கேமரா, Realme 2 Pro-வில் இருப்பது 16 MP கேமராதான். ஆனால் இதில் 25 MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது சிறப்பான தரத்தில் செல்ஃபி எடுக்க ஏற்றதாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில் பின்புற கேமராவில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தையும் கவனிக்க வேண்டும். Realme 2 Pro-வில் இருந்த 16 MP+ 2 MP கேமராவிற்கும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் 13+2 MP கேமராவுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன. முந்தையதில் இருந்த மெயின் கேமராவில் PDAF (Phase Detection Auto Focus) வசதி இருந்தது, ஆனால் இதில் வெறும் AF (Auto Focus ) மட்டும்தான். மேலும் அபெர்ச்சரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 3500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 3 GB ரேம் + 32 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 11,999 ரூபாய்க்கும், 4 GBரேம்+64 GB இன்டெர்னல் மெமரி வேரியன்ட் 14,499 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. நீலம், கோல்டு மற்றும் கறுப்பு என மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். 14,499 ரூபாய் என்பது கிட்டத்தட்ட Realme 2 Pro-வின் விலையை நெருங்கி விடுகிறது. எனவே இதை வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு Realme 2 Pro-வா அல்லது Realme U1-னா என்ற குழப்பம் வரக்கூடும். Realme 2 Pro-வில் பயன்படுத்தப்பட்டுள்ள Snapdragon 660-ஐ விட Helio P70 சற்று திறன் கூடிய புராஸசர்தான். முன்புற கேமராவின் திறன் கூட அதிகம்தான். ஆனால் விலை மற்றும் பின்புற கேமரா போன்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால் Realme 2 Pro-வே சிறந்த தேர்வாக இருக்கும். முன்னர் சொன்னதைப் போலவே செல்ஃபிக்கு மட்டும் என்றால் ரியல்மீ U1-னை வாங்கலாம்.
Like Reply
#9
2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா?! - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2

[Image: 144481_thumb.jpg]
மொபைல் சந்தையில் இருக்கும் போட்டியைச் சமாளிக்க சில மாதங்களுக்கு முன்னால் ஃபிளிப்கார்ட்டுடன் கைகோத்தது அஸுஸ் நிறுவனம். அதன்படி பட்ஜெட் செக்மென்டில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தியதுடன் ஆன்லைன் விற்பனையை அதிகப்படுத்தவும் முடிவு செய்தது. அதன்படி ஆன்லைனில் ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே புதிய அஸுஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டணியில் வெளியான முதல் ஸ்மார்ட்போனான Asus Zenfone Max Pro M1 சந்தையில் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அந்த ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிறது அஸுஸ் நிறுவனம். Asus ZenFone Max Pro M2 மற்றும் ZenFone Max M2 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள்  வெளியிடப்பட்டுள்ளன.
Like Reply
#10
இரண்டு நாள் பேட்டரி, பவர்புல் புராசஸர்
[Image: iuq_20288.jpeg]



Asus ZenFone Max Pro M2 என்ற ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே 19:9 ரேஷியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 6 புரோவில் உள்ள அதே அளவு. இதில் உள்ள மற்றொரு சிறப்பு இந்த டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போன்களிலும் இது கிடையாது. கொரில்லா கிளாஸ் 6 பெரும்பாலும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில்தான் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் இருப்பது இதுதான். கொரில்லா கிளாஸ் 6 என்பதால் டிஸ்ப்ளேவுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பு கிடைக்கும். அதே போல் இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய மற்றொரு விஷயம் இதன் புராசஸர். இதில் Snapdragon 660 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் சில ஸ்மார்ட்போன்களே இந்த புராசஸரைப் பயன்படுத்துகின்றன. இதே புராசஸரை கொண்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் ரியல்மீ 2 புரோ. பட்ஜெட் செக்மென்டில் அதிகப் பேரால் விரும்பப்படும் ஷியோமி நிறுவனம் கூட ரெட்மி நோட் 6-ல் இதை விடக் குறைவான திறன் கொண்ட புராஸரையே பயன்படுத்துகிறது.
Like Reply
#11
இந்த ஸ்மார்ட்போன்களில் அஸுஸ் குறிப்பிட்டுக் காட்டும் மற்றொரு முக்கிய விஷயமாக இதன் பேட்டரி இருக்கிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுமே 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்டைப் பொறுத்தவரையில் பேட்டரி பேக்அப் என்று வந்து விட்டால் அதில் ஷியோமிக்குத்தான் முதலிடம். அந் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பலர் விரும்புவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே மற்ற நிறுவனங்களும் அதே திறன் கொண்ட பேட்டரிந்த் தங்களது ஸ்மார்ட்போனில் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றன. அஸுஸ் நிறுவனமும் இதற்கு முன்பு Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனில் சற்று கூடுதலாக 5000 mAh பேட்டரியைக் கொடுத்திருந்தது. அதைக் குறைக்க முயற்சி செய்யாமல் அதே திறன் கொண்ட பேட்டரியை இதிலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக இரண்டு நாள்களுக்கு மேலாக பேட்டரி பேக்அப்பைப் பெறலாம் என விளம்பரப்படுத்துகிறது அஸுஸ். உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மேலாவது மொபைலில் சார்ஜ் நிற்கும் என்றும் எதிர்பார்க்கலாம் 12 +5 மெகாபிக்சல் டூயல் கேமரா பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 13 MP கேமரா முன்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய்க்கும், 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 14,999 ரூபாய்க்கும் மற்றும் 6 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 16,999 ரூபாய்க்கும் கிடைக்கும். 
[Image: iuqwd_20311.jpg]
Like Reply
#12
மற்றொரு ஸ்மார்ட்போனான Asus ZenFone Max M2-க்கும் Max Pro M2-வுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவிலும் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தையதைப் போலவே இதிலும் 6.26 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. Max Pro M2 ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி இருக்கிறது. Qualcomm Snapdragon 632 ஆக்டாகோர் புராசாஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறமாக 13 MP + 2MP கேமராவும் 8 MP முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 9,999 ரூபாய்க்கும் மற்றும் 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.
Like Reply
#13
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது.

புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஓ அல்லது இன்ஃபினிட்டி யு நாட்ச், எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, உயர் ரக மாடலில் 6 ஜிபி. / 8 ஜி.பி. ரேம் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, கேலக்ஸி ஏ7 மாடலில் வழங்கப்பட்டிருந்ததை போன்ற சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. 

[Image: 201812291620473448_1_Galaxy-A50-Leak-1._L_styvpf.jpg]
Like Reply
#14
சாம்சங் கேலக்ஸி ஏ50 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ., வயர்லெஸ் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எனலாம். யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் முற்றிலும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் 2019, பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Like Reply
#15
[Image: -giC4AYehvxJ4M4jEtRULzXSGjRimizwDzxHOBGr...OGdp8=s0-d]
Heart
happy new year
Like Reply
#16
ஆப்பிள் முதல் சாம்சங் வரை...மொபைல் நிறுவனங்களுக்கு 2018 எப்படி இருந்தது
ஸ்மார்ட்போன் சந்தை என்பது ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. முந்தைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் 4G வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம். பல ஏற்ற இறக்கங்களுக்கு நடுவே இந்த வருடம் மொபைல் நிறுவனங்களுக்கு எப்படி இருந்தது ?
[Image: AP18255671343599_02165.jpg]
Like Reply
#17
செப்டம்பர் மாதத்தில் ஐபோன் XS, XS மேக்ஸ், மற்றும் XR என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள். கடந்த வருடம் வெளியான ஐபோன் X-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவே இவை இருந்தன. புதிய வசதிகள் எதுவும் இதில் கொடுக்கப்படவில்லை. விலை அதிகம் என்பதால் XS மேக்ஸ் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு ஐபோன் விற்பனை இந்தியாவில் சரிவைச் சந்தித்தது என அறிக்கை வெளியானது. இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே கிட்டத்தட்ட இதே நிலைமைதான். அடுத்த வருடமும் ஐபோனில் 5G-க்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஆப்பிள் அடுத்த வருடமும் நாட்ச்-சையும் பேஸ்-அன்லாக்கையும் வைத்து ஓட்ட வேண்டியிருக்கும். இந்த இரண்டை மட்டும் வைத்துக் கொண்டு ஆப்பிள் எப்படி வாடிக்கையாளர்களைச் சமாளிக்கப்போகிறது என்பதைப் பார்க்க மற்ற நிறுவனங்கள் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றன.
[Image: 133743_thumb_02189.jpg]
Like Reply
#18
ஆப்பிளுக்கு அடுத்து உலக அளவில் கவனம் பெறும் மொபைல் நிறுவனமாக சாம்சங் இருக்கிறது. கேலக்ஸி S9 சீரிஸ் மற்றும் நோட் 9 என இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்த வருடம் வெளியிட்டது. இந்த இரண்டுமே வழக்கம்போல விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற மொபைல் நிறுவனங்கள் அனைத்துமே டிஸ்ப்ளேவில் நாட்ச்சைக் கொடுத்து விட அந்த வடிவமைப்பில் இன்னும் ஒரு ஸ்மார்ட்போனைக் கூட வெளியிடவில்லை சாம்சங். ஐபோன் x-க்குப் பின்னரே பல நிறுவனங்கள் அதைப் பின்பற்றியதால் தானும் அதைச் செய்ய வேண்டாம் என நினைக்கிறது சாம்சங். ஆனால் அதற்குப் பதிலாக வேறு சில திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. போல்டபிள் டிஸ்ப்ளே, புதிய வடிவத்தில் இன்பிஃனிட்டி டிஸ்ப்ளே என புதிய வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறது. வழக்கம் போலவே இந்த வருடமும் மொபைல் சந்தையை எடுத்துக் கொண்டால் உலக அளவில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது சாம்சங்.
ஷியோமி 
[Image: 135265_thumb_02451.jpg]
தொடங்கி சில ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் சாம்சங், ஆப்பிள் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கிறது ஷியோமி. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைக் கைவசம் வைத்திருக்கிறது. இது வரை ஷியோமி வைத்த குறி எதுவும் தவறியதே இல்லை. அதிலும் POCO F1 என்றால் உலகத்துக்கே தெரியும். இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இதை 'எங்கள் ஊருக்குச் சீக்கிரம் கொண்டு வாங்க' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள். பட்ஜெட் செக்மென்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஷியோமி இந்த வருடமும் அதை கடைப்பிடிக்கத் தவறவில்லை.
Like Reply
#19
ஹுவாய்
[Image: Captureoi_02122.JPG]
 
உலக சந்தையில் இந்த வருடத்தின் ஹீரோ ஹுவாய்தான். இந்த வருடம் முழுவதுமே ஹுவாய் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஏறுமுகத்திலேயே இருந்தது. அதன் காரணமாக சாம்சங்கிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்த ஆப்பிளை வீழ்த்தியது. இப்பொழுது இரண்டாம் இடம் ஹுவாய்குத்தான். இந்த வருடம் ஃப்ளாக்ஷிப் செக்மென்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்போன் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. 
Like Reply
#20
ஒன்பிளஸ்
 [Image: 141140_thumb_02277.jpg]

மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்டிற்கு ஷியோமி என்றால் ஃப்ளாக்ஷிப்பிற்கு ஒன்பிளஸ்தான் ராஜா. சந்தையில் அதற்கென தனிப்பட்ட ரசிகர்களைக் கைவசம் வைத்திருக்கிறது. வருடத்திற்கு இரண்டே இரண்டு ஸ்மார்ட்போன்கள் என்பதுதான் ஒன்பிளஸின் பிளான். அதே போல இந்த வருடம் வெளியான ஒன்பிளஸ் 6, 6T இரண்டுமே இந்த வருடத்தின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்றன. அடுத்த வருடம் 5G நிச்சயம் என முதலில் அறிவித்தது ஒன்பிளஸ்தான். எனவே இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடமும் ஒன்பிளஸ் சந்தையைக் கலக்கும் என எதிர்பார்க்கலாம். 

நோக்கியா 
மீண்டும் சந்தைக்கு திரும்பி இரண்டு வருடங்களை நிறைவு செய்யப்போகிறது நோக்கியா. ஆனால் அதற்குள்ளாகவே அதன் மீது இருந்த எதிர்பார்ப்பை எல்லாம் வீணடித்து விட்டது என்றே கூறலாம். இது வரை நோக்கியாவின் பேர் சொல்லக்கூடிய வகையில் ஒரு ஸ்மார்ட்போன்கள் கூட வெளியாகவில்லை. அதே நேரத்தில் 5G-யை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகிறது எனவே அடுத்த வருடமாவது நோக்கியா அதன் பேரைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கலாம். 
மற்ற நிறுவனங்கள் 
மேலே இருக்கும் மொபைல் நிறுவனங்கள் தவிர்த்து சோனி, எல்ஜி போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் அவ்வப்போது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருந்தன என்றாலும் கூட அவற்றின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். அதே நேரத்தில் ஒப்போ, விவோ போன்ற சீன நிறுவனங்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் இடத்தைப் பிடித்திருந்தன. 
 
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)