15-12-2018, 09:45 AM
பிளிப்கார்ட் ஹானர் டேஸ் சேல் தொடக்கம்: எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், பிளிப்கார்ட்டில் தனது சிறப்பு தள்ளுபடி விற்பனையான ஹானர் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது டிச.13 முதல் 16 வரை நடைபெறுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை நாட்களில் ஹானர் 10, ஹானர் 9i, ஹானர் 9லைட், ஹானர் 9N, ஹானர் 7s மற்றும் 7A உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த ஹானர் டேஸ் சேலை தொடர்ந்து, தற்போது மீண்டும் இந்த தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.இந்த விற்பனையில் மிகுந்த விலை உயர்ந்த மாடலான ஹானர் 10 ஸ்மார்ட்போன் அதாவது சாதாரணமாக அதன் விலை ரூ.32,999 ஆகும். இந்த பிளிப்கார்ட் ஹானர் டேஸ் தள்ளுபடி விற்பனையில், அதன் விலை ரூ.24,999 ஆகும். கிட்டத்தட்ட ரூ.8000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அடுத்து ஹானர் 9i ஸ்மார்ட்போனாது ரூ.14,999 சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த போன் ரூ.11.999 விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் அளிக்கிறது பிளிப்கார்ட், அதன்படி ஹானர் 9N ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம்/32ஜிபி நினைவகம் கொண்ட வேரியண்ட் ரூ.8,999 விலையில் கிடைக்கிறது. 4ஜிபி/64ஜிபி நினைவகம் கொண்ட மாடல் ரூ.10,999 கிடைக்கிறது. இந்த போன்களின் தற்போதைய சந்தை விலையானது ரூ.10,999 மற்றும் ரூ.13,999 ஆகும். ஹானர் 9N ஆனது நாட்ச் டிஸ்பிளே கொண்ட புதிய மாடலாகும். இதில் பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம் 16 மெகா பிக்செல்ஸ் செல்பி கேமரா கொண்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 3,000 mAh ஆகும்.