Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#1
Heart 
தோழியா... காதலியா...


இது ஒரு கற்பனை கதை
 
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


வானில் இருக்கும் சூரியனின் கதிர்கள் பூமிக்குள் நுழைந்து பொழுது நன்றாக விடிந்ததும் கடற்கரையின் ஓரத்தில் நடை பயிற்சி செய்தவர்கள் உற்சாகத்துடன் அதை தொடர்ந்தனர்.
 
விடுமுறை தினமாக இருந்தாலும் சாலைகளில் நிறைய வாகனங்கள் நிரம்பி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
 
எனக்கு எப்போதும் ஓய்வே இல்லை. எல்லா நாளும் இதேபோல் புத்துணர்ச்சியோடு இயங்குவேன் என்று கண்ணிற்கு காட்டியது அந்த மாநகரம்.
 
இப்படி எல்லோரும் சுறுசுறுப்புடன் இயங்கினாலும் அந்த ஊரில் வசிக்கும் நான் மட்டும் என்னுடைய வீட்டிற்குள் அறையில் இருக்கும் கட்டிலின் மீது அமைதியாக படுத்துக்கிடந்தேன்.
 
என் மனதிற்குள் கவலையும் சோர்வும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் மெத்தையில் இருந்து எழுவதற்கு மனமே இல்லை.
 
அப்போது...
 
“டிங். டா.ங்”
 
வீட்டிற்குள் காலிங் பெல்லின் ஓசை கேட்டது.
 
“காலங்காத்தால யாருடா வந்து இப்படி தொல்ல பண்ணுறது. ச்சை.”
 
அதிக சலிப்போடு மெத்தையில் இருந்து எழுந்து வெளியில் வந்தேன்.
 
“டிங். டா.ங். டிங். டா.ங்”
 
மீண்டும் காலிங் பெல்தான்.
 
“கொஞ்சம் பொறுங்க. நான் வந்துட்டே இருக்கேன்”
 
“டிங். டிங். டா.ங்ங்ங். டிங். டிங். டா.ங்ங்ங்”
 
விடாமல் தொடர்ந்து ஒலி எழுப்பியது.
 
“அதான் வந்துட்டு இருக்கேன்னு சொல்றேன்ல. என்ன அவசரம்.? ஏன் இத்தன தடவ பெல்ல அடிச்சு டென்ஷன் பண்ணுறீங்க.?”
 
நான் அதிக ஆவேசத்துடன் வாசல் கதவை திறந்தேன்.
 
அங்கே!
 
வாசலில்!
 
என் கண்முன்னே!
 
என்னுயிர் தோழி அபிராமி நின்றுக்கொண்டு இருந்தாள்.
 
அவளது கோதுமை நிற உடலுக்கு ஏற்றவாறு மஞ்சள் நிற டி ஷர்ட்டும் நீல நிறத்தில் ஸ்கர்ட்டும் போட்டுகொண்டு அழகாக இருந்தாள்.
 
மெல்ல அவளது முகத்தை நன்றாக பார்த்தேன்.
 
அவள் கண்கள் சிவக்க கடுங்கோபத்துடன் என்னை பார்த்து முறைத்தாள்.
 
திடீரென்று அபிராமியைப் பார்த்தவுடன் பதற்றத்துடன் பேசினேன்.
 
“அபி நீ நெஸ்ட் வீக் தான் வருவேன்னு சொன்னே! என்னடி திடீர்னு வந்துருக்கே?”
 
“ஏன்டா நாயே! ராத்திரி எத்தன தடவ கால் செஞ்சேன். ஒரு தடவ கூட உனக்கு எடுக்கனும்னு தோணவே இல்லையா?”
 
அபிராமி எதிர் கேள்வி கேட்டு திராட்சை விழிகளால் என்னை முறைத்தாள்.
 
“ஸாரி அபி”
 
அவள் என்னுடைய பேச்சை ஒரு பொருட்டாக நினைக்காமல் மீண்டும் பேசினாள்.
 
“அப்படி என்னடா உனக்கு என் மேல திடீர்னு புதுசா கோபம் வந்துருச்சு? சொல்லுடா”
 
அபிராமி மீண்டும் சத்தம் போட்டாள்.
 
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அபி. நைட் உன்னோட கால் பாத்தேன். ஆனா திரும்ப பேசுறதுக்கு மறந்துட்டேன். ஸாரிடி”
 
“என்னது மறந்துட்டியா ? நீ இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டியே! ஏன்டா திடீர்னு மாறிட்டே?”
 
அபிராமி சொல்லிக் கொண்டே கண் கலங்கினாள்.
 
ஐயோ! நான் இவளை ஒருமுறைகூட ஆழ வைத்தது இல்லயே!
 
இன்று என்னை அறியாமலேயே அவளது மனதை நோகடித்து விட்டேன்.
 
நான் ஒரு முட்டாள்.
 
மனதிற்குள் என்னை நானே நன்றாக திட்டிக் கொண்டேன்.
 
“அபி தெரியாம செஞ்சுட்டேன். ப்ளீஸ்டி என்னைய மன்னிச்சிடு”
 
நான் அவளது கண்களை துடைத்தேன்.
 
“ரொம்ப நாளைக்கு அப்பறம் உன்னைய நேர்ல பாத்து பேசப்போறேன்னு ஆசையா கிளம்பி வந்தேன்டா. ஆனா கொஞ்சம் கூட என்னைய புரிஞ்சுக்காம ஆழ வச்சுட்டியேடா”
 
அபிராமி எனது கைகளைத் தட்டி விட்டாள். நான் விடவில்லை. மீண்டும் அவளது கண்களை துடைத்துக்கொண்டே கெஞ்சினேன்.
 
“அபி ப்ளீஸ்டி வெளியே நின்னு இப்படியெல்லாம் அழாத! ரோட்ல போறவங்க பாத்தா என்னைய தப்பா நினைப்பாங்க. உள்ள போலாம் வாடி”
 
இப்போது அவளுக்கு நான் சொன்ன சூழ்நிலை புரிந்ததும் மெதுவாக அழுகையை நிறுத்தினாள். பிறகு என்னிடம் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
 
அபிராமி ஹாலில் இருக்கும் சோபாவில் சோகத்துடன் வந்து அமர்ந்ததும் நான் எதிரில் இருந்த நாற்காலியில் அவளுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டேன்.
 
“எதுக்குடா நேத்து பேசாம இருந்தே? ஒழுங்கா சொல்லுடா?”
 
அபிராமி மீண்டும் கோபம் மாறாமல் கேட்டாள்.
 
“ப்ளீஸ் அபி! அத பத்தி இப்போ பேச வேணாமே”
 
“சரிடா அத விடு. திடீர்னு என் மேல அப்படி என்ன தான் கோவம்டா ? அத மட்டுமாவது சொல்லேன்”
 
“இல்ல அபி எனக்கு கோபமே இல்லடி. கொஞ்சம் அமைதியா இரு”
 
அவளை சமாதானம் செய்ய முயற்சித்தேன்.
 
“நீ வேலைக்கு போனதுல இருந்தே சரியில்லடா”
 
“ஏய். என்னடி சொல்லுறே”
 
“ஆமா! நான் எப்போ கால் செஞ்சாலும் அட்டென்ட் பண்ணி கொஞ்சம் நேரம் மட்டும் கடமைக்கு பேசிட்டு உடனே வச்சுடுறே. அதே மாதிரி நேத்து நைட் பாத்தா கால் அட்டென்ட் பண்ணாமயே இருந்துட்டே. உனக்கு என்ன ஆச்சுடா?”
 
அபிராமியின் கேள்வியில் அன்பும் பாசமும் அதிகமாக வெளிப்பட்டது.
 
“அபி வொர்க்ல கொஞ்சம் டென்ஷன் அதான் பேச முடியல. இனிமே உன்கிட்ட ஒழுங்கா பேசுறேன் ஸாரிடி”
 
“டேய். ஆஃபிஸ்ல முதல் ஆளா டார்கெட் முடிக்கிறதே நீதான்னு எனக்கு நல்லா தெரியும். எதுக்காக என்கிட்ட பொய் சொல்லி நடிக்கிறே ?”
 
“இல்ல அபி நான் நிஜமாதான் சொல்றேன். என்னைய நம்பு”
 
அபிராமி என் முகத்தை சில நொடிகள் எந்த வித சலனமும் இன்றி பார்த்தாள்.
 
“நீ ரொம்ப பெருசா எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறேனு மட்டும் தெரியுது. ஆனா விஷயம் என்னனுதான் எனக்கு ஒழுங்கா புரியல”
 
அபிராமி ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.
 
“அபி அதெல்லாம் ஒன்னும் இல்லடி. நீ பெங்களூர்ல இருந்து எப்பவும் மாச கடைசிலதான் வருவே! ஆனா இன்னைக்கி திடீர்னு எப்படி வந்தே ?”
 
நான் என்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி பேச்சை மாற்றினேன்.
 
“நான் அத சொல்றதுக்குதான் நேத்து நைட் கால் பண்ணேன். நீதான் அட்டென்ட் பண்ணலயே நாயே!”
 
“ஏய்! நீ இன்னொரு தடவ நாய்னு சொன்னே அப்படியே கடிச்சு வச்சுடுவேன்”
 
அவளை முறைத்தவாறு கொஞ்சம் சத்தமாக கத்தினேன்.
 
“ஹ்ம்ம் ஸாருக்கு ரொம்பத் தான் கோவம் வருது போல”
 
அபிராமி என்னை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.
 
“போடி லூசு”
 
“டேய்! பாட்டி வீட்டுக்கு போயி ரொம்ப நாள் ஆகிருச்சுடா. அதான் அம்மா இந்த வாரமே என்னைய ஊருக்கு வர சொல்லிட்டாங்க. நான் அத சொல்றதுக்குதான் உனக்கு நைட் கால் செஞ்சேன்டா”
 
“ஓஹோ அப்படியா!"
 
“என்ன நொப்படியா! நான் கால் செஞ்சா எடுக்கமாட்டேல. இனிமே என்கிட்ட எதுவும் பேசாத போடா”
 
இந்த முறை அபிராமிக்கு கோபம் இல்லை. அவள் என்னிடம் செல்லமாக சிணுங்கினாள்.
 
“ப்ளீஸ் அபி! தெரியாம அது மாதிரி செஞ்சுட்டேன். தயவு செஞ்சு மறந்துரு. இப்போ வேற ஏதாச்சும் பேசலாம்டி”
 
நான் வழக்கம்போல் கெஞ்சினாலும் அது நல்ல பலனை அளித்தது.
 
“ஓகே இப்போதைக்கு மட்டும் மன்னிச்சு விடுறேன். ஆனா எனக்கு திரும்ப டைம் கிடைக்கும். அப்போ உன்னைய நல்லா கவனிச்சுக்கிறேன். நீ ஒழுங்கா பொழைச்சுபோ”
 
அபிராமி அனைத்தையும் மறந்து அதிக புன்னகையுடன் சொன்னாள். அவள் கோபப்படுவதை நிறுத்திவிட்டாள் என்று தெரிந்தவுடன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 
“ஹ்ம்ம். ஒகேடி” என்று நிம்மதி அடைந்தேன்.
 
“சரிடா கேக்கனும்னு நினைச்சேன். வீட்டுல யாருமே இல்லையா.?”
 
“அம்மாவும் அப்பாவும் ரிலேடிவ் ஒருத்தங்க கல்யாணத்துக்கு போயிருக்காங்க! நைட்தான் வருவாங்க.“
 
“ஓ சாப்பாடுலாம் எப்படிடா?”
 
“இன்னும் கொஞ்ச நேரத்துல ஹோட்டலுக்கு போயி சாப்பிட வேண்டியதுதான்”
 
“டேய்! ஹோட்டல் எதுக்கு ? அதான் நான் வந்துருக்கேன்ல. இருடா வீட்டுக்கு போயி கொண்டு வரேன்” என்று அபிராமி எழுந்தாள்.
 
“அதெல்லாம் வேணாம் அபி”
 
அவளது கைகளை பிடித்து உட்காருமாறு அமர்த்தினேன்.
 
“இப்படியெல்லாம் சொன்னே பல்ல உடச்சுடுவேன். நான் வீட்டுக்கு போயி டிபன் ரெடி பண்ணி எடுத்துட்டு திரும்ப இங்க வருவேன். நீ கண்டிப்பா சாப்பிடனும்”
 
அபிராமி செல்லமாக கோபப்பட்டு சொன்னதும் நான் அவளது கைகளை விடுவித்தேன்.
 
“டேய்! அதுக்கு முன்னாடி நீ ஒழுங்கா போயி குளிச்சுட்டுவா. உன்னோட கழுவாத மூஞ்சிய பாக்கவே முடியல”
 
அபிராமி என்னை பார்த்து கிண்டலாக சொல்லி சிரித்தாள்.
 
நானும் பதிலுக்கு புன்னகையுடன் சரி என்று தலை ஆட்டியதும் அவள் மகிழ்ச்சியுடன் நடந்து வெளியில் சென்றாள்.
 
நான் அபிராமி செல்லும் திசையை சோகத்துடன் பார்த்தேன்.
 
என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அபிராமியிடம் என்னை அறியாமலேயே.
 
நேற்று இரவு கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதை நினைத்து வருந்தினேன்.
 
அதன் பின் அவள் சொன்னபடி எழுந்து குளிப்பதற்கு சென்றேன்.
 
சில நிமிடங்களுக்கு பிறகு குளித்து உடைமாற்றி புத்துணர்ச்சியுடன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன்.
 
அபிராமி இன்னும் வரவில்லை.
 
நான் என்னுடைய கடந்த கால நினைவுகள் சிலவற்றை மனதிற்குள் எண்ணி பார்க்க ஆரம்பித்தேன்...
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
தோழியா... காதலியா... [COMPLETED] - by feelmystory - 09-11-2023, 12:11 AM



Users browsing this thread: 2 Guest(s)