அன்பு ஒன்றுதானே அனாதை - நீலியின் கதை
#1
அன்பு ஒன்றுதானே அனாதை
[Image: IMG-20200521-125804.png]

அன்பு ஒன்றுதானே அனாதை


"கவலையை விடுங்க சிஸ்டர். நான் இருக்கேல்ல.. உங்களுக்கே தெரியும்.. அவருக்கு 54 வயசாகுது. எங்க குழந்தைங்க எல்லாம் யூஎஸ், யூகேனு செட்டில் ஆகிட்டாங்க. வருசத்துக்கு ஒரு தடவை இந்தியா வரதே பெருசு. கோடிக்கணக்கான பணம் இங்க பிசினசில் வருது. இதெல்லாம் வைச்சு என்னதான் பண்ண போறாம்." என்றாள் வேதா. 
"உங்களை மாதிரி நாளு பணக்காரங்க இருந்தா போதும் மேடம். சாரை எப்படியோ  கன்வீனியஸ் பண்ணி தத்து எடுக்க வைச்சிருக்கிங்க." என்று குழைந்தாள் சிஸ்டர் ரூபல்லா.
"அதெல்லாம் பெரிய காரியம் இல்ல ரூபல்லா. அவர் மட்டும் நினைச்சா இங்க அனாதை ஆசிரமே இல்லாம பண்ண முடியும். அவ்வளவு பணம் இருக்கு. எங்க பேரன் பேத்திங்களுக்கு அவங்க பேரன்ஸ் சம்பாதிக்கிற சொத்தே போதும். இந்தியாவுல இருக்கிறதை எங்களுக்கு அப்புறம் பார்த்துக்க ஆளே இல்லை. மகன், மகள், பேரன், பேத்திகள் இல்லாம பங்களாவே வெறிச்சோடி போயிருக்கு. அதான் எனக்கு துணையா இருக்க ஒரு பொண்ணை கேட்டேன். சம்மதம் சொல்லிட்டாரு. "
"கிரேட் மேடம். உங்க மனசு யாருக்கு வரும். வாங்க.. பிள்ளைகளை காட்டறேன்." என அழைத்துச்சென்றாள். அங்கிருக்கும் பிள்ளைகளில் இரண்டு பெண்களை வேதா தேர்ந்தெடுத்தாள்.
"சிஸ்டர் அந்த புளு சட்டை, பாவாடை போட்டிருக்கும் பொண்ணு பேர் என்ன? அவ பேக்ரவுண்ட் பத்தி சொல்லுங்க"
"அந்த பொண்ணு பேரு.. ஜெஸ்ஸி. சென்னை வில்லிவாக்கத்தில் பிறந்து வளர்ந்தவ. அவளோட அப்பா ஸ்மக்லிங் ஆளு, அம்மா பிராஸ்டியூட். ஏதோ பிரட்சனையில இரண்டு பேரையும் கொன்னுடாங்க ஆப்போசிட் பார்டி. இவளை கூட மர்டர் பண்ண முயற்சி நடந்திருக்கு மேடம்.
ஓ.. ஐசி. ரொம்ப கஸ்டப்பட்ட பொண்ணு.. பட் பேக்ரவுண்ட் கொஞ்சம் யோசிக்க வைக்குது. அந்த யல்லோ கவுன் போட்டிருக்கிற பொண்ணைப் பத்தி சொல்லுங்க.
அவ கமலா. திருச்சி கருமண்டபம் ஆசிரமத்தில் இருந்து இங்க வந்திருக்கா மேடம். அவளோட பேரன்ஸ் உட்பட பல பேர் கல்யாண மண்டபத்துல நடந்த தீ விபத்துல இறந்து போயிட்டாங்க. யாருமே ஆதரிக்கல.. நல்ல பேமிலி பேக்ரவுண்ட் மேடம். 
சரிங்க சிஸ்டர். நான் கமலாக்கிட்ட கொஞ்சம் பேசறேன். பிறகு ஏன்னோட ஒப்பினியனை தெரிவிக்கிறேன். இவங்களுக்கு ஸ்னாக்ஸ், கேக், சாக்லேட் வாங்கி வந்திருக்கேன் அதை இப்போ  கொடுத்திடலாமா?
சியூர் மேடம்..
"டியர் சைல்ட்ஸ்.. அட்டென்சன் பிளீஸ்." எல்லா குழந்தைகளும் சிஸ்டரைப் பார்த்தன. இவங்க மேடம் வேதா. காளிங்கராயன் இன்டர்ஸ்டியலோட ஓனர். சே வெல்கம்.
எல்லாக் குழந்தைகளும் வெல்கம் மேடம் என்றன கோரசாக. பிறகு டிரைவர் ஸ்னாக்ஸ் பெட்டிகளை எடுத்துவர.. வேதா அவர்களுக்கு வழங்கினாள். எல்லா குழந்தைகளும் சாப்பிடும் போது கமலாவையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. பிறகு அவளருகே உட்கார்ந்து இருவரும் பேசினார்கள். வேதாவுக்கு அந்த பேச்சு திருப்தியாக இருந்தது. வேதா பேச்சை முடித்து எழும் போது.. "அம்மா என்னை இங்கிருந்து சீக்கிரம் கூட்டிட்டு போயிடுங்க. பிளீஸ்" என்றாள் கமலா. "கண்டிப்பா கூட்டிட்டு போறென்மா" என கைகளை பிடித்து உறுதியாக சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.
***
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அன்பு ஒன்றுதானே அனாதை - நீலியின் கதை - by sagotharan - 21-05-2020, 01:13 PM



Users browsing this thread: 1 Guest(s)