Romance உன் ஆசை முகம் தேடி
#1
01


குமாரமங்கலம், பார்க்கும் திசையெங்கும் பச்சை பசலேன பசுமையாக கண்ணை கவர்ந்தது! மலைத் தொடரின் அருகில் அமைந்திருந்த அந்த அழகான ஊரில், கம்பீரமாக நின்றிருந்த வீட்டின் முன் வேகமாக வந்து நின்றது அந்த பென்ஸ் கார். அதற்காகவே காத்திருந்தது போல் ராஜேஸ்வரி அவசரமாக வெளியே வந்தாள். காதோரம் மின்னிய வெள்ளி மின்னல்கள் அவளின் வயதை பறைசாற்றின. வாசலில் நின்ற கார் அவள் எதிர்பார்த்தவர்கள் வந்துவிட்டதை கூற அவளின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.

“செல்லம்மா, கனகம், மகேஷும், ப்ரியாவும் வந்தாச்சு... சீக்கிரம் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வாங்க...”

ராஜேஸ்வரியின் குரலுக்காகவே காத்திருந்தது போல் அடுத்த வினாடியே செல்லம்மாவும், கனகமும், ஆரத்தி தட்டுடன் அவசரமாக வந்தார்கள்.
வீட்டினுள் இருந்து வெளியில் வந்த மூவரையும் பார்த்து புன்னகைத்த படியே மகேஷும், ப்ரியாவும் காரில் இருந்து இறங்கினார்கள். ராஜேஸ்வரியை பார்த்து சந்தோஷமாக கை அசைத்த ப்ரியாவின் முகத்தில் மின்னிய வெட்கம் கலந்த புன்னகையும், அவளின் கழுத்தில் பளிச்சென்று மின்னிய தாலியும் அவள் புது மணப்பெண் என்பதை தண்டோரா போட்டு அறிவித்தன. பிரம்மனின் படைப்பில் மாஸ்டர்பீஸ் என்று நினைக்க வைக்கும் அழகு தேவதையாக மின்னினாள் அவள்.

அவளின் அருகில் நின்றிருந்த மகேஷும் ஆணழகனாகவே தோன்றினான். இயல்பாகவே அவன் முகத்தில் இருந்த கம்பீரத்துடன் கூடவே அந்த அழகு தேவதையை மனைவியாக அடைந்து விட்டு பெருமையும் இருந்தது.

செல்லம்மாவும், கனகாவும் ஆரத்தி எடுத்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ப்ரியா, அவர்கள் ஆரத்தி தட்டுடன் நகரவும், அருகில் நின்றிருந்த ராஜேஸ்வரியின் காலில் விழுந்து வணங்கினாள்.

“என்னம்மா ப்ரியா இது? எதுக்கு இதெல்லாம்? நல்லா இரும்மா, எழுந்திரு...”

“வந்த உடனேயே உங்க கிட்ட தான் ஆசிர்வாதம் வாங்கனும்னு நினைச்சேன் அத்தை, நீங்க சொன்னதற்காக தான் ஆரத்தி எடுத்து முடிக்கும் வரை காத்திருந்தேன்...” என்றாள் பிரியா வெகு அடக்கமாக.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 12-09-2019, 07:57 AM



Users browsing this thread: 1 Guest(s)