வயது ஒரு தடையல்ல! - Completed
76.

 
நான் எதிர்பார்த்த மாதிரியே, சாப்பிடும் போது, குமார், மணி மற்றும் லாவண்யா மட்டும் அந்த  இடத்தில் இருந்தனர்.
 
நான் இருந்ததை அறியாத மணி, லாவண்யாவை அசிங்கமாக, அவன் ஃபிரண்டிடம் ஜாடை பேசினான், அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.
 
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில், அந்த டேபிளுக்கு சென்றேன்!
 
ஹலோ மிஸ்டர் மணி, ஹாய் குமார், லஞ்ச் ஆச்சா? என்றவாறே அருகில் அமர்ந்தேன்.
 
மணிதான் அசிங்கமாகப் பேசுபவன், குமார் சும்மா கேட்டுக் கொண்டிருப்பவன்.

 
அப்புறம் குமார், எப்படி இருக்கீங்க? வேலை எப்டி போகுது?


அவர்களெல்லாம் அவ்வளவு எளிதில் என்னிடம் நெருங்க முடியாது, அப்படியிருக்கையில், நானே வலியப் போய் பேசும் போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! கொஞ்சம் தள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் கூட, இதை அதிசியமாகப் பார்த்தார்கள்.

 
நல்லா போகுது சார்! 


கால் மீ மதன்! நோ சார்!


எஸ் சார்… சாரி மதன்!

ஹா ஹா. அப்புறம் குமார், உங்க அப்பா, நீங்க காலேஜ் படிக்கிறப்பவே இறந்துட்டாருல்ல?


நான், அவனுடைய பெர்சனல் விஷயங்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது!


எஸ் சார்….!


இப்போது மணியிடம் கேட்டேன். ஆனாலும் மிஸ்டர் மணி, காலேஜ் படிக்கிறப்பங்கிறது ரொம்ப சின்ன வயசு இல்ல?


ஆமா சார்.


என்னா, உங்க அப்பாவுக்கு 45 வயசு கூட ஆகியிருக்காது! பாவம்தான்! அப்படியிருந்தும் உங்கம்மா உங்களை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்களே, பெரிய விஷயம்தான்!


அவர்கள் மவுனமாயிருந்தார்கள்! ஆனால் ஆச்சரியமாய் பார்த்தார்கள்!


மணி உங்க க்ளோஸ் ஃபிரண்டா? வீட்டுக்கெல்லாம் வருவாரா?


ஆமா சார், க்ளோஸ் ஃபிரண்டுதான். வீட்டுக்கு நிறைய தடவை வந்திருக்காரு!


என்ன, மிஸ்டர் குமார், ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே?


என்ன சார் சொல்றீங்க?


இந்த உலகம் ரொம்ப மோசமானது மிஸ்டர் குமார்! மணி மாதிரியான ஆளுங்கல்லாம் இந்த உலகத்துலதான் இருக்காங்க!


உங்களுக்குதான் தெரியுமே, மணி மாதிரி ஆளுங்களுக்கு, சின்ன வயசுலியே புருஷனை தொலைச்ச பெண்களை மடக்குறதெல்லாம் ரொம்ப ஈசி! எந்த நம்பிக்கையில இவரை வீட்டுக்குல்லாம் கூட்டிட்டு போறீங்க? உங்க அம்மா வேற....


சார்… திஸ் ஈஸ் டூ மச். இருவரும் கோபத்தில் கத்த ஆரம்பித்தனர்!

 
கூல் கைஸ்… நான் பொறுமையாதானே பேசிட்டிருக்கேன். ஏன் டென்ஷன் ஆகுறீங்க? சுத்தி எல்லாம் பாக்குறாங்க. அவிங்களுக்கெல்லாம் கேட்டா உங்கம்மாவுக்குதானே அசிங்கம்!


சார், நீங்க பேசுறது என் அம்மாவைப் பத்தி! நீங்க தப்பா பேசுனா, எங்கம்மாவுக்கு என்ன அசிங்கம்? நீங்க என் பாஸ்னு கூட பாக்க மாட்டேன், பாத்துக்கோங்க. கோபத்தில் குமார் படபடத்தான்.

 
ஓ, அப்ப, வேற பொண்ணைப் பத்தி, இதே மாதிரி பேசுனா, நீ கம்முனு கேப்ப, உன் அம்மாவைப் பத்தி பேசுனா மட்டும் கசக்குதா?

அவன் கண்கள் விழியகலப் பார்த்தான்!

 
மணி மாதிரி ஆளுங்கல்லாம் சாக்கடை, அப்படித்தான் இருப்பாங்க! ஆனா, உனக்கு, ஒரு பொண்ணு, அதுவும் யார் சப்போர்ட்டும் இல்லாத பொண்ணு, கஷ்டப்பட்டு மேல வர்றது, எவ்ளோ கஷ்டம்னு தெரியும்ல? அவன் பேசுனப்ப, அதுவும் லாவண்யா காதுலியே விழுற மாதிரி பேசுனப்ப, நீதானே முதல்ல அவனைத் தடுத்திருக்கனும்?! உங்க அம்மாவும், இது மாதிரி, எத்தனை பேரு பேச்சைக் கேட்டிருப்பாங்களோன்னு தோணலை?

 
சாரி சார்!


என்கிட்ட ஏன் சொல்ற? பாதிக்கப்பட்டவங்ககிட்ட போய் சொல்லு!

 
லாவண்யாவைப் பார்த்தேன். அவள் விழியகல, இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து பக்கத்தில் வருமாறு தலையசைத்தேன்.

 
அவளும் வந்தாள். குமார், சாரி லாவண்யா என்றான்.

 
இட்ஸ் ஓகே! இனி இந்த மாதிரி தப்பு செய்யாதீங்க!

 
மணி ஒரு மாதிரி பயத்திலும், அவமானத்திலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி இருந்தவர்கள், அவனை மிகக் கேவலமாக பார்ப்பது போல் தோன்றியது!

 
குமாரை மன்னிச்சிடலாம். மணிக்கு என்ன தண்டனை கொடுக்குறதுன்னு நீயே சொல்லு. நீ கம்ப்ளெயிண்ட் கொடுத்தா அவனை வேலை விட்டு கூட டிஸ்மிஸ் பண்ணலாம். என்ன சொல்ற?

 
மணியின் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.


அதைப் பார்த்த லாவண்யாவோ, மன்னிச்சு விட்டுடலாம் என்றாள்.

 
எனக்கு கடுப்பானது. என்ன பெரிய தியாகியா நீ?

 
இப்போது என் கண்களைப் பார்த்தாள்.

இவன் தன்மானம் இருக்கிறவனா இருந்தா, மான, ரோஷம் இருக்கிறவனா இருந்தா வேலையை விட்டு இவனே போயிடுவான்.  


திறமை இருக்கிறவனா இருந்தா, இந்த வேலை இல்லாட்டி இன்னொன்னுன்னு திமிரா இருப்பான்.

 
ஆனா, இவன், எதுக்கும் உதவாத, சுயமரியாதையும் இல்லாத கோழை. அதான் பயப்படுறான்.

 
இவனை மன்னிச்சு விட்டு, இவன் முன்னாடி, நான் பழைய மாதிரியே நடமாடுறதுதான், இவனுக்கான தண்டனை. ஆனா, இனி, இது மாதிரி பேசனும்னு நினைச்சாக் கூட, பளார்னு அறைதான் கொடுப்பேன், என்றாள்! முடிஞ்சா, இவன், இதே கம்பெனியிலியே இன்னும் மூணு வருஷம் ஒர்க் பண்ணனும்னு அக்ரிமெண்ட் போடுங்க!

 
மணிக்கு வேலையை விட்டு அனுப்பியிருந்தாலே தேவலாம் போலிருந்தது! அவ்வளவு அசிங்கமாய் இருந்தது!

 

நான் அவளை மெச்சுதலாகப் பார்த்தேன். குட்!

 
பின் அவர்களிடம், கெட் லாஸ்ட் என்று சொல்லி விட்டு என் ரூமிற்குள் சென்றேன்! என் பின்னாலேயே அவளும் வந்தாள். 

 
தாங்க்ஸ் டா!

டா வா! அவள் எப்போதும் எனக்கு மரியாதை கொடுத்ததில்லை! நானும் எதிர் பார்த்ததில்லை. நீ, வா, போ தான் பெரும்பாலும். அதுவும், அதீத கோபத்திலோ, இல்லை ரொம்ப சந்தோஷத்திலோ இருந்தால் ’டா’ தான்!
 

இங்கு வேலைக்குச் சேர்ந்த பின், அலுவலகத்தில் பெரும்பாலும், கொஞ்சம் மரியாதையாகத்தான் பேசுவாள். தனியாக இருக்கும் சமயத்தில் மட்டும் ஒருமையில்தான் பேசுவாள்!

 
அப்படிப்பட்டவள் இப்போதுதான் ’டா’ என்கிறாள்!
 

நான் திரும்பி அவளை முறைத்தேன். செருப்பைக் கழட்டி அவனை ரெண்டு அடி அடிச்சிருக்க வேண்டியதுதானே? என்கிட்ட வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டிருக்க? என்ன குழந்தையா நீ?

 
இன்னிக்கு தெளிவா பேசுன மாதிரி, எப்பியும் இருக்கிறதுக்கென்ன?

 
இப்ப நீ பக்கத்துல இருந்த! (அவள் முணுமுணுத்தது என் காதில் மிக லேசாக விழுந்தது)

 
நீதாண்டி ரொம்ப படுத்துற என்னை! 

 
அவள் அமைதியாக வெளியேறி விட்டாள். ஆனால், முகம் மலர்ந்து இருந்தாள்!

 
அலுவலகத்தில், அவள் என் கண் பார்வையிலேயே இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு விதத்தில் மன நிறைவைத் தந்தது.

 
அவளுக்கும், எவ்வளவு கோபமாகக் காட்டிக் கொண்டாலும், என்னை தினமும் பார்த்தபடி இருப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது போலும். பல சமயங்களில் என்னை ரசித்தாள்.

என்னதான் பிரச்சினை அவளுக்கு என்று யோசித்தேன்.

அடுத்த ஒரு வாரத்தில் இயர்லி வெண்டார் (Vendor) சந்திப்பு நடக்கப் போகிறது. ஊட்டியிலுள்ள எங்களுடைய ஒரு ரிசார்டில்தான் நடத்துவதாக திட்டம்! அதற்கான ஏற்படுகள் முழுக்க அவளுடைய கையில். கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு கேட்டாள்,

 
நானும் வரனுமா?

 
நான் அவளையே பார்த்தேன். அவளோடு முழுதாக ஒரு வாரம் இருக்கப் போகும் வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. அவளுடைய கோபத்திற்க்கான காரணத்தை கண்டு பிடித்தேயாக வேண்டும்! அதனாலேயேச் சொன்னேன். நீதான என் செக்ரட்டரி? தவிர ஏற்பாடுல்லாம் நீதான பண்ண? நீயில்லாம எப்படி?

 
இல்ல, ஒரு வாரம் வீட்டை விட்டு….

 
ஏன், உன் வீட்ல, உன்னை ஆசையா சீராட்டிகிட்டு இருக்காங்களா? வீட்டை விட்டு தனியா லேடீஸ் ஹாஸ்டல்லதானே இருக்க? அப்புறம் என்ன?

 
நான் லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?

 
நீ எந்த ரூம்ல இருக்கிற, என்னென்ன பண்றங்கிறது வரை தெரியும். போதுமா? கம்முனு கெளம்பி வா! ஒரு தடவை தள்ளி நின்னதுக்கே, ரொம்ப அனுபவிச்சிட்டேன். இனி அப்படி இருக்கிறதா இல்லை! [b]நீ என்னை ஏத்துக்குவியோ, மாட்டியோ, ஆனா, ஜென்மத்துக்கும், என் கண் பார்வையை விட்டு உன்னை விலக்குறதா இல்லை![/b]



 ஊட்டியை முந்தைய நாள் மதியத்திற்க்கும் மேல் ரிசார்ட்டை அடைந்தோம். நானும் அவளும், மூன்று ரூம்கள் உள்ள ஒரு ஃபாமிலி ஹவுஸ்ஸில் தங்கினோம். மற்ற ரூம்களுடன் ஒப்பிடுகையில், அது கொஞ்சம் தள்ளியே இருந்தது. மற்ற வெண்டார்கள், எம்ப்ளாயிகளுக்கு இன்னொரு பக்கமாக அறை இருந்தது.

 
நான், எனக்கும், அவளுக்கும் தனிமை வேண்டியே அப்படி ஏற்பாடு செய்திருந்தேன்.

 
மத்த எம்ப்ளாயிஸ் இருக்கிற இடத்திலேயே எனக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல?

 
நான் கடுப்பானேன். உனக்கு வேணா, அவங்களைப் போல, நான் பாஸா இருக்கலாம்! ஆனா, என்னைப் பொறுத்த வரை, நீ என்னிக்குமே, மத்தவிங்க மாதிரி எம்ப்ளாயி கிடையாது!

 
இல்லை, என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?

 
நான் மீண்டும் கடுப்பானேன், உன்னையே நினைச்சிட்டிருந்த நான் என்ன நினைப்பேன்னு கூட நீ எதுவும் கண்டுக்கலை, இவிங்களை மட்டும் ஏன் கண்டுக்கற? ம்ம்? எப்பப் பாரு அடுத்தவிங்க என்ன நினைப்பாங்கன்னுகிட்டு? என்று கோபமாகக் கேட்டேன். இந்தக் காரணத்தைச் சொல்லிதாண்டி ஒவ்வொரு வாட்டியும் தள்ளிப் போற.

 
அவனுடைய பேச்சு, அவளுக்கு கடும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்தது. முன்பு, தான் நழுவ விட்ட சொர்க்கத்தை நினைத்து கலங்கினாள். கண்ணீரை மறைக்க, வேகமாக அவளுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். 

 
மாலையில் அக்கா ஃபோன் பண்னியிருந்தாள்.

 
சொல்லு!

 
என்னடா, ஊட்டி போயாச்சா?

 
ம்ம்… வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது!

 

ஓ… அப்புறம் கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுக்கப் போற?

 
யாருக்கு கல்யாணம்?

 
லாவண்யாவுக்குத்தான்! அவிங்க சித்தி, ரெண்டாந்தாராமா, ஒரு 50 வயசு ஆளுக்கு கட்டி வெக்க, இவகிட்ட சம்மதம் கேட்டிருக்காங்களாமே! இவளும் யோசிக்கிறேன்னு சொன்னாளாமே!

 
அதான் கேக்குறேன், ஊட்டியிலேயே, நல்ல கிஃப்ட்டா வாங்கிட்டு வா! வாங்குறப்ப சொல்லு, எனக்கும் சேத்தே வாங்கிடுவியாம்! அவள் குரலில் செம நக்கல். 

 
என் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் லாவண்யா?! 

 
நான் கோவமாய் அவள் அறை வேகமாய் தள்ளினேன்.
 
அவள் அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தாள். புடவையை முந்தானையில் அணியும் சமயம், நான் உள் நுழைந்தேன்!

என் திடீர் வரவு அவளை அதிர்ச்சியிலும், ஆழ்த்தியது!

 

எ..என்ன மதன்?

 

உன் சித்தி, ரெண்டாம் தாரமா போகச் சொல்லி, உனக்கு ஒரு மாப்ளை பாத்தாங்களா?

 

அவள் உதட்டைக் கடித்து நின்றாள்!

 

சொல்லு! நான் கத்தினேன்!

 

ஆ… ஆமா!

 
நான் உக்கிரமடைந்தேன்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 20-10-2019, 10:11 AM



Users browsing this thread: 14 Guest(s)