18-10-2019, 02:10 PM
(This post was last modified: 18-10-2019, 02:13 PM by karimeduramu. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-10-2019, 01:38 PM)game40it Wrote: மன்னிக்கவும். நான் படித்த ரிசர்ச் பெபெரிகளில் வந்தததை வைத்து அப்படியே எழுதிவிட்டேன். தமிழராக இருந்துவிட்டு ஆங்கிலம் நல்ல தெரியல என்று வருத்தப்படவோ வெட்கப்படவோ தேவை இல்லை. சொந்த தாய் மொழியான தமிழ் சரியாக வரவில்லை என்று தான் வெட்கமும், வேதனையும் பாடணும். அதனால் தான் நான் தமிழில் எழுதி எனது தமிழ் திறமையையும் அறிவையும் மேம்படுத்த முயற்சிக்கிறேன்.
உரையை மொழிபெயர்க்க உங்கள் முயற்சியிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பரவாயில்ல நண்பா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஏக்கம், ஏமாற்றம். எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கிடைத்து விடுவது இல்லையே. ஆங்கிலம் சரியாக பேச தெரிய வில்லை என்றால் நம்மை நாயை விட கேவலமாக தான் பார்க்கிறார்கள் வேலைக்கு போகும் இடத்தில. இங்கு வேலை செய்றவங்க நெறய பெரு வடநாட்டை சேர்ந்தவங்க அவுங்க கிட்ட நீங்க தமிழ் கத்துக்கிட்டு வாங்க னு சொல்ல முடியுமா இல்ல அது மாதிரி ஆளுங்கள வேலைக்கு சேர்த்த நிர்வாகத்தை குறை சொல்ல முடியுமா.
இதுல இன்னோர் கொடுமை என்னென்ன அவுங்க எல்லாம் அவுங்க தாய் மொழி இந்தி ல பேசிக்கிறாங்க தமிழ் நாட்டுல இருந்துகிட்டு இந்தியாவோட மொழி இந்தி தான் அது கூட உனக்கு தெரியல நீ எல்லாம் எங்கேயுமே போயி பொழைக்க முடியாதுனு கேவலமா பேசுறாங்க.
நம்மோட இயலாமையை நினைச்சி நொந்துக்க வேண்டியது தான்.