வயது ஒரு தடையல்ல! - Completed
73.

 
எங்கள் இருவரிடமும் காதல் இருந்தாலும், கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.
 
ஒரு தடவை சொல்லி, பின் ரிஜக்ட் செய்ததனால், அவளே வந்து என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன்.
 
அதான் என் லவ்வை ஓபனா சொல்லிட்டேன்ல. அவ ஒத்துகாட்டியும், அதை கண்டினியு பண்ணுவேன்னும் சொல்லிட்டேன்ல? இனி, அவதான, அவ மனசுல என்ன இருக்கனும்ங்கிறதை சொல்லனும்? நாந்தான் அவளைப் பாக்கிற பார்வையிலியே என் லவ்வைச் சொல்றேன்ல? என்று உள்ளுக்குள் கடுப்பானேன்.
 
பெண்களிடம் அதிகம் மனம் விட்டுப் பேசாததால், ஒரு பெண்ணுடைய வெட்கங்கள், தடுமாற்றங்கள், எண்ணங்களை நான் கவனிக்கத் தவறினேன்.
 
லாவண்யாவோ, வலிய வந்தவனை வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு போய், நீ இன்னமும் என்னை லவ் பண்றியான்னு கேக்குறது?
 
லூசு அவன், லவ்வை எப்படிச் சொல்லனும், எப்படிச் சொல்லனும்னு, ஒரு ஃபீல் வேணாம்? என்னமோ வீட்டுக்கு போயிட்டு வர்றேங்கிற மாதிரி, லவ்வைச் சொல்றான்?
 
அப்ப, நான் இன்னும் காலேஜே கூட சேரலை. +2 முடிச்ச பையன் கூட, சுத்துறா பாருன்னு மத்தவிங்க சொன்னா, எனக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்?
 
நாந்தான், என் ஆசையை, காதலை எல்லாத்தையும், இண்டிகேட் பண்ணிட்டு இருக்கேன்ல?! இப்பதான் MBA லாம் முடிச்சு, பெரிய பிசினஸ் மேக்னட் ஆகிட்டான்ல? இப்ப வந்து, என்கிட்ட கேக்குறதுக்கு என்ன? ஒரு பொண்ணாடா வந்து, வெட்கத்தை விட்டு கேப்பா? சரியான ஜடம்! இவனை வெச்சுகிட்டு என்னென்ன பாடு படப் போறேனோ என்று உள்ளுக்குள் சராமரியாக அவனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.

இப்படியாக, அவர்கள் தங்களது காதலையும், கூடவே தயக்கத்தையும் வளர்த்துக் கொண்டு சென்றார்கள்.

 
MBA முடித்து வந்தவன் கம்பெனியில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றினேன். அதை விஸ்தரிக்க ஆரம்பித்தேன். அதற்கு, தாத்தா எனக்கு முழு ஒத்துழைப்பாக இருந்தார். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார். அந்தச் சமயத்தில், நான் என் அக்காவை, என் கம்பெனியிலேயே, பொறுப்பினை எடுத்துக் கொள்ளச் சொன்னதற்குதான் அவள் மறுத்திருந்தாள். அவளே மறுக்கும் போது, லாவண்யாவும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

 
அதன் பின் தான், அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தது, தாத்தாவின் மரணம், அதன் பின், சில மாதங்களில் அக்காவின் திருமணம் எல்லாம் நடந்தது. 

தாத்தாவின் மரணமும், அக்காவின் பிரிவும் எனக்குள் மிகப்பெரிய ஒரு துயரத்தைக் கொடுத்திருந்தது. என் நலனை விரும்பும் மிக முக்கிய இரு ஜீவன்கள், ஏறக்குறைய ஒரே சமயத்தில், என் வாழ்விலிருந்து விலகிச் செல்வது, என்னால் உள்ளுக்குள் தாங்க முடியவில்லை.

 
எப்பொழுதும், எதையும் கவனிக்கும் என் அக்கா கூட, உள்ளுக்குள், தாத்தா இறந்த சோகத்திலும், தன் கணவன் தன்னை புரிந்து கொள்வானா? என்ற குழப்பத்திலும், இனி மதன் என்ன பண்ணுவான், இப்பவும் வாயைத் திறக்க மாட்டேங்குறானே, என்ற கடும் வருத்ததிலும் இருந்ததால் என்னை முழுதாக கவனிக்க வில்லை.

 
ஆனால், இதை ஓரளவு கவனித்திருந்த லாவண்யாவோ, அக்காவின் திருமணம் முடிந்தவுடன், என்னிடம் வந்தவள், லேசான கோபத்துடன் பேசினாள்.

நீ, இப்படியே, உன் ஃபீலிங்சை காமிக்காமியே இரு மதன்! மத்தவிங்ககிட்ட வேணா, நீ மறைக்கலாம். ஆனா என்கிட்ட முடியாது! இப்பிடியே இரு! அப்புறம் என்னிக்காவுது, இதுக்காக வருத்தப்படுவ! அவ பாவம்! மனசே இல்லாம போறா!

 
தாத்தா இறந்தப்பதான், அவளுக்கு ஆறுதல் சொல்லலை. இப்ப, புது வீட்டுக்கு போறப்பனாச்சும், அவளுக்கு தெம்பு சொல்லியிருக்கலாம்ல? நீ தம்பி மாதிரியா நடந்துக்குற? பல சமயங்கள்ல நீதானே அண்ணன் மாதிரி நடந்துக்குற? இந்த மேரேஜைக் கூட, தாத்தாவோட ஆசைன்னு சொல்லி, அவளைச் சம்மதிக்க வைச்சில்ல? அவகிட்ட, கொஞ்சம் தெம்பா பேசியிருக்கலாம்ல? என்னதான் பிரச்சினை உனக்கு!

 
அவ அம்மாகிட்ட கூட, அதை எதிர்பாக்கலைடா அவ! ஆனா, நீ கொஞ்சம் மனசு விட்டுப் பேசியிருந்தா எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பா தெரியுமா? உனக்கு, உன் ஃபீலிங்ஸ்தான் முக்கியம், இப்படியே கல்லு மாதிரி இருக்கனும் இல்ல? எதுக்காகவும், யார்கிட்டயும் ஃபீல் பண்ணி பேசிடக் கூடாது. இரும்பு மனசுன்னு பாராட்டி, அவார்டு தரணுமா? சரியான செல்ஃபிஸ் என்று வறுத்தெடுத்தாள்.

 
எதற்காகவும் மனம் திறக்காத நான், ஏற்கனவே சோகமாய் இருந்ததால், அன்று கொஞ்சம் மனம் திறந்தேன்!


தெம்பா பேசி, என்ன பண்ணச் சொல்ற? இத்தனை நாள் பாசம் காட்டாம, இப்ப புதுசா காமிக்கச் சொல்றியா? வாழ்க்கைல, இத்தனை நாளா, பெருசா சந்தோஷத்தையே எதுவும் அனுபவிக்காதவ அவ, இப்பதான் அவளுக்குன்னு ஒரு உறவு வந்திருக்கு.

 
தாத்தா பாத்த மாப்பிள்ளைன்னாலும், நான் தனிப்பட்ட முறையில நல்லா விசாரிச்சிட்டேன். ஹரீஸ் ரொம்ப நல்லவரு. கண்டிப்பா, அவளுக்கு கரெக்ட்டான மேட்ச்சா, அவ வாழ்க்கையை இன்னும் சந்தோஷமா மாத்துவாரு.

 
கல்யாணத்துக்கு முன்னாடியே, இந்த லூசு, அவருகிட்ட என்னைப் பத்தி புலம்பியிருக்கு. இன்னும் கல்யாணமே நடக்காட்டியும், தான் கட்டிக்கப் போற பொண்ணுக்காக, அவரு, என்கிட்ட வந்து தனியா பேசுறாரு. உங்க அக்கா உன் மேல நிறைய பாசம் வெச்சிருக்கான்னு சந்தோஷமா சொல்றாரு. இப்பியே எனக்காக அவ்ளோ கவலைப் படுறவ, இன்னும் நான் பாசத்தைக் காமிச்சா அவ்ளோதான். அங்க போயும் எனக்காக ஃபீல் பண்ணிட்டு இருப்பா.

 
எனக்கு வேண்டியதெல்லாம், இந்த டைம்ல அவ ரொம்ப சந்தோஷமா இருக்கனும். தன் கணவன் மேல முழு அன்பையும் காட்டனும். ரெண்டு பேரும் நல்லா இருக்கனும். முக்கியமா, மத்தவங்க மேல மட்டும் அன்பைக் காட்டிட்டு இருந்தவ மேல, முழு அன்பைக் காட்ட ஒருத்தர் இருக்காருன்னு, அவ புரிஞ்சிக்கனும்!
 

எனக்குத் தெரியும், அவ மனசுக்கு, அவ எப்பவும் நல்லா இருப்பான்னு. அவ இடத்துல, நான் இருந்திருந்தா கூட, அவளை மாதிரி நடந்திருப்பேனான்னு எனக்கு தெரியாது. அந்தளவுக்கு அன்பு காட்டுறவ அவ, அப்படிப்பட்டவளோட முழு அன்பும், ஹரீசுக்கு போகனும். அதே அன்பை ஹரீஸ்கிட்ட இருந்து, அவ வாங்கனும். அதான் நான் தள்ளி நிக்குறேன். புரியுதா?

 
இந்தச் சமயத்துல அவ மனசுல ஹரீஸ் மட்டும்தான் இருக்கனும். அவ குழப்பத்துல இருந்தாலும் பராவாயில்லை. இந்தச் சமயத்துல ஹரீஸ் காட்டுற அன்பு, அவளுக்கு வாழ்க்கை முழுக்கச் சந்தோஷத்தைக் கொடுக்கும். எனக்கு அதுதான் வேணும்!

 
இதுவரை, லாவண்யாவின் மனதினுள் ஏதேனும் குழப்பம் இருந்திருந்தால், அது அத்தனையும் அன்று நீங்கியிருந்திருக்கும். அந்தளவு நான், அவள் மனதில், அந்த நிமிடம் விஸ்வரூபமெடுத்திருந்தேன். என் அக்கா வெளிப்படையாக காட்டிய தூய அன்பிற்கு, சற்றும் குறையாதது, என் அன்பு என்று அன்று நான் நிரூபித்திருந்தேன்.

 
சற்றே நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், ஆசையுடனும் என்னைப் பார்த்த லாவண்யா, பெரு மூச்சுவிட்டபடி திரும்பச் சென்றாள்.

சென்றவளை லாவண்யா என்று கூப்பிட்டேன்.

 
வந்து…இங்கப்…

 
நான் சொல்ல வருவதற்குள், என்னைப் புரிந்திருந்த லாவண்யாவே பதில் சொன்னாள். டோண்ட் ஒர்ரி, அவகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று புன்னகைத்தாள்.

 
அதன் பின் நான் மீண்டும் தனியானேன். அக்கா ஹரீசுடன் கிளம்பி விட்டாள். லாவண்யாவும் கிளம்பி விட்டாள். அக்கா இல்லாத வீட்டிற்கு, அவளால், முன்பு போல் வர முடியாது.

 
என் வாழ்வின் மூன்று மிக்கிய ஜீவன்கள், ஒரே நேரத்தில், என்னிடமிருந்து விலகி இருக்கும் சூழ்நிலை எனக்கு ஒருவித மனநிம்மதியின்மையைக் கொடுத்தது.

 
அதனாலேயே, நான் என் வெறியை, என்னுடைய நிறுவன விஸ்தரிப்பில் காட்டினேன். முதல் 4 மாதங்கள், நிறுவனத்தில் சில முக்கிய முடிவுகள் எடுத்து பெரிதாக விஸ்தரிக்க ஆரம்பித்திருந்த நான், அடுத்த 4 மாதங்களில் தான், என்னுடைய தந்தையை, என் நிறுவனத்திலிருந்து ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கும் வேலையை ஆரம்பித்தேன். 

 
நான் நினைத்தது போல் என் தந்தை எளிதில் விட்டுக் கொடுத்துவிடவில்லை. இதற்காகத்தானே, கட்டிய மனைவியையே ஏமாற்றினார். பல வழிகளில் அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டார். ஒரே சமயத்தில், விஸ்தரிப்பும், தந்தையின் சவால்களையும் சமாளித்து நான் விரும்பும் நிலைக்கு கொண்டு வரவும் எனக்கு அந்த 8 மாதங்கள் தேவைப்பட்டிருந்தது.

 
அந்த 8 மாதங்களில் நான், என் அக்கா, லாவண்யா என யாரைப் பற்றியும் யோசிக்காமல் வெறி பிடித்தாற் போல் வேலை செய்தேன். மாதக் கணக்கில் நான் கம்பெனி கெஸ்ட் அவுசிலும், ட்ரிப்பிலும் மட்டும் இருந்தேன். ஆஃபிஸ் பர்சனல் நம்பரைத் தவிர வேறெதையும் பார்க்கவே இல்லை. வீட்டிற்கும் அதிகம் போகவில்லை.

 
இது எல்லாவற்றையும் முடித்து விட்டு இனி லாவண்யாவை மீட் பண்ணி வெளிப்படையாக பேசிடனும்னு நினைத்த சமயத்தில்தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் என் கல்லூரி சீனியர் பிரேம் மூலமாக.
 

அது, லாவண்யாவிற்கு 1 மாதம் முன்பாகத்தான், அவளுடைய மாமா முறை சார்ந்த ஒருவருடன் (சித்தியின் தம்பி) திருமணம் நடந்திருந்தது என்ற உண்மைதான்.

 
அதை விட அதிர்ச்சி, அது, ஒரு வலுக்கட்டாயமாக நடந்த திருமணம் என்பதும், அவள் எதிர்பாராத தருணத்தில், அவளை கோவிலுக்கு கூட்டிப் போவது போல் சென்று, தாலி கட்டப்பட்டது என்றும், இதற்கு அவளுடைய தந்தை, சித்தி அனைவரும் உடந்தை என்பதும் தெரிய வந்தது.

 
நடந்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தவள், இயல்பாக பயந்த சுபாவம் கொண்டவள், மிகவும் கோபாவேசம் கொண்டு, அன்றே போலீஸ் ஸ்டேஷனில் சொந்த அப்பா முதற்கொண்டு அனைவரின் மீது புகாரும், பின் உடனே, வீட்டைக் காலி செய்து விட்டு ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என்பதும், இதெல்லாம் நடந்து 15 நாட்கள் கழித்து, அந்தத் தாலி கட்டியவன், குடித்து விட்டு ஒரு ஆக்சிடெண்டில் அடிபட்டு இறந்து விட்டான் என்பதும், அப்பொழுதும் அவளுடைய ராசிதான் இதற்கு காரணம் என்று சொந்த வீட்டினராலேயே பேசப்பட்டாள் என்பதும் மிகவும் அதிர்ச்சியளித்தது. 

அவள் தேடிப்பிடித்து பார்க்கச் சென்ற போது, அவள் என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக என்னையே வெறித்துப் பார்த்தாள்.


ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று நான் கேட்ட கேள்விக்கு, அவள் பார்த்த பார்வை என்னை மிகவும் உலுக்கியது. ஆனால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

 
அவள் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான்! அது,
 

இனி என்னைப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான்.

 
அக்கா கேட்டான்னா, நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் வெதும்பினேன்.

 
சரியாக, அதற்கடுத்த நாள்தான் என் அக்கா, அவள் பிரச்சினைக்காக ஃபோன் செய்திருக்கிறாள். இவள் பிரச்சினை பற்றி தெரிந்து என்னைத் திட்டத்தான் கூப்பிட்டிருக்கிறாள் என்று நானாகவே நினைத்து, அவளிடம் சரியாக பேசவில்லை. பின் அவள் மீண்டும் வீட்டுக்கே வந்து பேச முயற்சித்த போது கூட, அவளிடம் பட்டென்று பேசினேன்.

 
அக்கா ஃபோன் செய்த போதே பேசியிருந்தால், குறைந்தபட்சம் சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.

 
நேரமும் சூழ்நிலையும், என் வாழ்க்கையில் கன்னாபின்னாவென்று விளையாடியிருக்கிறது…
 
அதை எப்படி நான் சரி செய்யப் போகின்றேன்???
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 16-10-2019, 10:33 AM



Users browsing this thread: 13 Guest(s)