Fantasy சப்தஸ்வரங்கள்
#41
வீட்டின் நடுவே இருந்த அந்த பெரிய ஹாலில் கிழக்கு பக்கமிருந்த ஜன்னலை ஒட்டினாற்போல போடப் பட்டிருந்த சிங்கிள் ஸ்டீல் கட்டிலில் கால்களை தொங்க விட்ட படி வாணியும் ராகவனும் எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். வாணி இன்னும் ஈரமான தலை முடியை முழுவதும் பின்னாமல் பின்பக்கம் விரித்துப் போட்டு பேருக்காக ஒரு கோடாலி முடிச்சு போட்டு இருந்தாள்.

குளித்து முடித்து விட்டு குளியலறை கதவில் ஒட்டி வைத்து இருந்த ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றியில் வைத்து இருந்தாள். முகத்துக்கு மஞ்சள் பூசியிருந்ததால் அந்த மஞ்சள் வாசனையும் கூடவே அவள் உடம்பில் போட்டுக் குளித்த மைசூர் சாண்டல் சோப்பின் சுகந்தமான சந்தன மனமும் தலைக்கு மேலே ஓடிய விசிறிக் காற்றில் இரண்டடி இடைவெளியில் உட்கார்ந்திருந்த ராகவனுக்கு மூக்கில் உறைக்க... வீட்டின் பின்புறத்தில் வைத்து அவளருகே நின்றபோது உணர்ந்த மனத்தை விட இப்போது அந்த மனம் அதிகமாக தெரிய ... அந்த வாசனையில் அவன் சற்று கிறங்கத்தான் செய்தான். திருவிளையாடல் படத்தில் வரும் 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்ற வசனம் நினைவுக்கு வர...அதை நினைத்து தனக்கு தானே லேசாக சிரித்தான்.

அவர்கள் இருவரையும் உட்கார சொல்லி விட்டு இருவருக்கும் சாப்பாடு எடுத்து வர சாந்தி அடுக்களைக்கு சென்று இருந்ததால் ... இருவர் மட்டுமே அருகருகே தனியாக இருந்த நிலையில் எதிரே இருந்த ராகவன் சப்தமில்லாமல் திடீரென சிரித்ததை கவனித்த வாணி....ராகவனை பார்த்து. 'எதுக்கு சிரிக்கிறீங்க...?' என்று கேட்கவே...தான் சிரித்ததை அவள் கவனித்து விட்டாள் என்பதை கண்டு மேலும் சிரிக்காமல் அடக்க முயன்று தோற்றுப் போன ராகவன்....'இல்ல சும்மாதான்....' என்று இழுத்தான்.

'ம்ஹூம்....இல்லை....என்னை பாத்துதானே சிரிச்சீங்க....சொல்லுங்கண்ணா....எதுக்கு சிரிச்சீங்க....?' என்று அழுத்தமாக கேட்டாள்.

'இல்ல வாணி....சும்மாதான் சிரிச்சேன்....காரணம் எல்லாம் ஒண்ணுமில்ல....'
'ம்ஹூம்...அதெல்லாம் இல்ல....காரணம் இல்லாம யாராவது சிரிப்பாங்களா...? என்னை பார்த்துதான் சிரிச்சீங்கன்னு எனக்கு தெரியும்...சொல்லுங்க...'

'ம்ம்...அது வேற ஒண்ணுமில்ல....ஒரு சினிமா வசனம் ஞாபகம் வந்துட்டு...அதான்...'
'அப்டியா....என்ன வசனம்....?'

'திருவிளையாடல் படத்தில் 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்ற வசனம் வருமே...அதான்....'
'அந்த வசனம் எதுக்கு இப்போ ஞாபகம் வந்திச்சி...?'

'காரணம் இல்லாம வருமா....நீ இந்த மாதிரி தலை முடியை விரிச்சு போட்டுட்டு இருக்குறப்போ மஞ்சள் வாசனையும் சந்தன வாசமும் சேர்ந்து வருது.... அதான் உடனே எனக்கு அந்த படத்துல வர்ற அந்த வசனம் ஞாபகத்துக்கு வந்துட்டு....'
ராகவன் சொல்வதை கேட்டு விட்டு சற்று வெட்கப் பட்ட வாணி....மெதுவான குரலில் அவனை நேராகப் பார்த்து ....'ம்ம்...பரவாயில்லியே....உங்களுக்கு நல்ல ரசனைதான்...ஆனா எனக்கு அந்த மாதிரில்லாம் இல்ல....குளிக்கும்போது போட்ட மஞ்சளும்....சோப்பும்தான் காரணம்....' என்று சொல்ல...அதை கேட்டு...
ராகவன் மெதுவாக சிரிக்க....அவனுடன் சேர்ந்து வாணியும் சிரிக்க....கையில் இரண்டு சில்வர் தட்டுகளோடு சாந்தி அடுக்களையில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தாள்.

'என்ன....அண்ணனும் தங்கச்சியும் என்ன பேசி சிரிச்சுகிட்டு இருக்கீங்க....?' என்று வினவியபடியே அவர்களை நெருங்கி இருவருக்குமிடையே அந்த சில்வர் தட்டுகளை வைத்தாள். அவளிடம் எதற்காக சிரித்தோம் என்பதை சொல்லவா வேண்டாமா என்று இருவருக்குமே ஒரு தயக்கம் உண்டாக....ராகவன் அந்த தயக்கத்திலேயே சாந்தியை ஏறெடுத்துப் பார்க்க....வாணிதான் பதில் சொன்னாள்.

'அது ஒண்ணுமில்லை...அத்தை....பொம்பளைங்க தலைமுடியில இருந்து இயற்கையாவே மணம் வருமா வராதான்னு அண்ணனுக்கு சந்தேகம்...அதான்...'

குனிந்து நின்று கட்டிலில் சில்வர் தட்டுகளை வைத்து விட்ட நிமிர்ந்த சாந்தி ..வாணி சொன்னதை கேட்டு விட்டு...அவளையும் ராகவனையும் பார்த்து புன்னகைத்தபடியே....'அப்டியா....என்ன திடீர்னு பொம்பளை தலை முடி வாசனை பத்தின ஆராய்ச்சி...?' என்று எடுத்துக் கொடுப்பதை போல வினவ...வாணியே தொடர்ந்து பதில் சொன்னாள்.
'அதுவா.....என்கிட்டே இருந்து மஞ்சளும் சந்தனமும் கலந்த வாசனை வருதாம்...அதான் அண்ணனுக்கு அந்த ஆராய்ச்சி...' என்று வாணியின் பதிலை கேட்ட சாந்தி....சிரித்துக் கொண்டே ராகவனை பார்த்து....'ம்ம்...நல்ல ஆராய்ச்சிதான்... ' என்று சொல்லி விட்டு....'சரி...சாப்பிடுங்க....இட்லி சூடா இருக்கு....'என்று சொல்லவே....ராகவனும் வாணியும் சாப்பிட தயாரானார்கள்.

தான் ஆசைபடுகிற படி இருவரையும் சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் கஷ்டப் பட வேண்டியதில்லை....ரொம்ப சுலபமாக அது நடந்து விடும் போலத்தான் இருக்கிறது என்று மனதுக்குள் சந்தோஷித்தபடி....
'உன் தங்கச்சி...மூணு நாளைக்கு அப்புறம் இப்பதான் ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட போறா...' என்று அடுத்த கட்ட பேச்சை தொடங்க...அதை செவியுற்ற ராகவன்...கண்கள் விரிய....'அப்டியா....எதுக்கு வாணி....?' என்று வாணியைப் பார்த்து கேட்க....அதற்கு வாணி பதில் சொல்லுவதற்கு முன்பாக அவளை முந்திக் கொண்டு சாந்தியே பதில் சொன்னாள்.
'வேற என்ன....கழுதைக்கு என்மேல கோபம்....சொன்னதை சரியா புரிஞ்சுக்காம என்மேல கோபப்பட்டுட்டு சரியா சாப்பிடாம இருந்தா.....இப்போ நீ போயி விவரமா பேசினதுக்கு பிறகுதான் சாப்பிட வந்து உட்காந்து இருக்கா...' என்று அங்கலாய்ப்பதை போல சொல்ல....வாணி தலையை இட்டிலி தட்டை பார்த்து குனிந்தபடியே முனகுவதை போல....'சொல்றதை விவரமா சொன்னா நான் எதுக்கு கோபப் படப் போறேன்....டக்குன்னு அந்த மாதிரி சத்தம் போட்டா கோபம் வராம என்ன செய்யும்...?' என்று சொல்ல...'கழுதைக்கு இன்னும் வீராப்பு குறைஞ்சு இருக்கான்னு பாரேன்......மூணு நாளா நானே வலிய வந்து உன்கிட்ட பேசினாலும் நீதான் நான் சொல்ல வந்ததை கேட்கவே இல்லியே...அப்புறம் எப்படி உனக்கு புரியும்....?' என்று சற்று (போலியான) கோபத்தோடு சாந்தி வாணியை பார்த்து கேட்க....அதை கண்ணுற்ற ராகவன் மீண்டும் அவர்களுக்குள் சண்டை வந்து விடுமோ என்று பயந்து....'ஐயோ...அக்கா...அதான் அதெல்லாம் அப்பவே முடிஞ்சு போயிருச்சே....திரும்பவும் எதுக்கு தேவை இல்லாம அந்த பேச்சை எடுக்குறீங்க....விடுங்க அக்கா...அவளுக்கு இப்ப உங்க மேல எந்த கோவமும் இல்ல...'என்று வாணியின் சார்பாக பேச....'அது சரி....நீ உன் தங்கச்சியை விட்டுக் குடுப்பியா என்ன....?' என்று சொல்லி விட்டு....'சரி...சட்டினியும் சாம்பாரும் எப்படி இருக்குன்னு சொல்லு தம்பி....'என்று சட்டென்று குரலில் பரிவை வெளிப்படுத்தி கேட்க....'கொஞ்சம் இருங்க...'என்று சொல்லி விட்டு....இட்டிலியை எடுத்து இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு ...''ம்ம்...சூப்பரா இருக்கு அக்கா....'என்று சப்புக் கொட்டியபடி சொல்ல....

'ம்கும்....அதெல்லாம் நல்லாத்தான் செய்வாங்க....'என்று முகவாயை செல்லமாக இடித்தபடி வாணி சொல்ல...அதை கவனித்த ராகவனும் சாந்தியும் அவளைப் பார்த்து சிரித்தார்கள்.

(ஆசைகள் தொடரும்)

write your comments about this story friends..!!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் - by Kaja.pandiyan - 12-10-2019, 09:17 PM



Users browsing this thread: 1 Guest(s)