11-10-2019, 07:44 PM
ஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது
மயங்க் அகர்வால் 108, புஜாரா 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 63 ரன்களுடனும், ரகானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான இன்று விராட் கோலி அசத்தலாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ரகானே 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 173 பந்துகளில் சதம் அடித்த விராட் கோலி, 295 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இது அவரது 7வது இரட்டை சதம். 150 ரன்களை கடந்த பிறகு அவர் ஒரு நாள் போட்டியைப் போல் விளையாடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜாவும் 79 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதன் பிறகு விராட் - ஜடேஜா ஜோடி முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளை போல் விளையாடினர். சில ஓவர்களில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினர். தென்னாப்ப்ரிக்க பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் பளிக்கவில்லை. இந்த ஜோடி 215 பந்துகளில் 200 ரன்களை குவித்தது. விராட் கோலி 334 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ரன் இதுதான். அத்துடன், சச்சினையும்(248) அவர் முந்தினார்.

first 5 lakhs viewed thread tamil