11-10-2019, 09:36 AM
காதல் தோல்வி… போதைக்கு அடிமை.. – சினிமாவில் ஒதுங்கியிருந்த ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!
நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் காதல் முறிவு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஸ்ருதிஹாசன், “நன் மிகவும் கூலான நபர். உணர்வுப்பூர்வமானரும் கூட. எனக்கு அது ஒரு நல்ல அனுபவம். இது சினிமா காதல் அல்ல.
ஒரு சிறந்த காதலை தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். அது என்னைத் தேடி வரும்போது இதற்காகத்தான் காத்திருந்தேன் என உலகத்துக்கு அறிவிக்க காத்திருக்கிறேன்” என்றார்.
அதேபோல் சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ள ஸ்ருதிஹாசன், ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டமராயுடு என்ற தெலுங்கு படம் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil