Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
“உங்க கண்ணுக்கு லாஸ்லியா மட்டும்தான் அழகா”.. ‘கத்தரிக்காயை’ வீசி போராட்டம் நடத்திய ஷெரின் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் - ஷெரின் காதல் காட்சிகளை ஏன் அதிகம் காட்டவில்லை எனக் கேட்டு கத்தரிக்காய் வீசி போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3யில் கவின், லாஸ்லியா காதலைப் போலவே ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது ஷெரின் - தர்ஷன் கெமிஸ்ட்ரியும் தான். இருக்கு ஆனா இல்ல என்ற ரேஞ்சுக்கு அவர்கள் ரொமான்ஸ் காட்சிகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்தது.
அதோடு தர்ஷனை ஷெரின் காதலிக்கிறார் என வனிதா கொளுத்திப் போட்டதும் பிக் பாஸ் வீட்டில் இரண்டு முறை பெரும் பரபரப்பான சம்பவமாக மாறியது.


[Image: xsherin2-1570711972.jpg.pagespeed.ic.bEPyAynUmn.jpg]


[size=undefined]



ஷெரின் - தர்ஷன் காதல்
ஆ[/size]னால், நிகழ்ச்சியில் ஷெரின் - தர்ஷன் காட்சிகளை ஊறுகாய் மாதிரி தான் காட்டினார்கள். இதனால் அவர்களது அவர்களது ஆர்மியினருக்கு பிக் பாஸ் மீது தனிப்பட்ட ஒரு கோபம் இருந்து வந்தது. அதனை தங்களது சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர்.



[url=https://twitter.com/endrum_tamil]




படத்தொகுப்பாளர்கள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, பிக் பாஸ் படத்தொகுப்பாளர்கள் நான்கு பேருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் ஷெரின் ரசிகர்கள் பொங்கி எழுந்து விட்டனர்.
[Image: xlosliya-1570711989.jpg.pagespeed.ic.iYl9S5dLJ1.jpg]
கோபம்
‘உங்கள் கண்களுக்கு லாஸ்லியா மட்டும் தான் அழகா? லாஸ்லியா கவின் காதல் காட்சிகளை மட்டும் தான் புரொமோவில் போடுவீர்களா? ஏன் எங்கள் தர்ஷன் - ஷெரின் காதல் காட்சிகளைக் காட்டவில்லை' என ஆளாளுக்கு சண்டைக்கு வந்து விட்டனர்.

Quote:கத்தரிக்காய் போராட்டம்
கோபத்தில் ஒரு ரசிகர், ‘வாங்க நம்ம கத்தரிக்காயை வீசி போராட்டம் நடத்துவோம்' என ஜாலியாக ஷெரின் ஆர்மியினருக்கு அழைப்பு விடுக்கிறார். உடனே சில நெட்டிசன்கள் கத்தரிக்காய் எமோட்டிகன்களாக அனுப்பி தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளனர். இப்படியாக ஷெரினுக்காக கத்தரிக்காய் போராட்டம் டிவிட்டரில் களை கட்டியது.
first 5 lakhs viewed thread tamil
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-10-2019, 09:35 AM



Users browsing this thread: 5 Guest(s)