Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது!
சிவகங்கை: அதிக மதிப்பெண்கள் அளிப்பதாக கூறி நர்ஸிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவரும் குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரி தாளாளருமான சிவகுரு துரைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கையை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் சென்னையை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அப்பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.


[Image: sivaguru2-1570761498.jpg]
இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அப்பெண் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக அப்பெண் கூறுகையில், சிவகங்கை குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரியில் தாம் படித்த போது அக்கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜ் அதிக மதிப்பெண் அளிப்பதாக கூறி தம்மை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தால் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இப்புகாரை விசாரித்த போலீசார் தற்போது சிவகங்கை குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜை கைது செய்துள்ளனர். இக்கல்லூரியில் சிவகுரு துரைராஜால் பாலியல் ரீதியாக எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டனர்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சிவகுரு துரைராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 11-10-2019, 09:25 AM



Users browsing this thread: 95 Guest(s)