Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கீழடி அகழ்வாராய்ச்சிக்காக நிலத்தை தானமாக வழங்கிய நில உரிமையாளர்கள்...!

[Image: keeladi_10.png]

தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தங்களது நிலத்தை நில உரிமையாளர்கள் தானமாக வழங்கியிருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. நிலத்திற்காக அரசிடம் இருந்து எந்த இழப்பீட்டையும் எதிர்பார்க்கவில்லை என்றும் நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடி 2600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்கிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி பணியில், கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் ஆதி தமிழரின் பெருமையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. 
முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில், நான்கு மற்றும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கப்படவுள்ள நிலையில், 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத கீழடியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் முத்துலெட்சுமி, முருகேசன், மாரியம்மாள், நீதியம்மாள், சேதுராமு ஆகிய ஐந்து பேரும் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். தங்களது நிலத்திலிருந்து பழங்கால பொருட்கள் கிடைத்திருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் நிலத்தை அகழ்வாராய்ச்சிக்கு கொடுத்திருப்பதாகவும், இழப்பீட்டை எதிர்பார்த்து நிலத்தை அளிக்கவில்லை என்றும் நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நில உரிமையாளர்களிடம் இருந்து நிலங்களை பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக தொல்லியல்துறை உயர் அதிகாரி ஒருவர்,  கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தேவைப்படும் நிலங்கள், நில உரிமையாளர்களிடம் இருந்து வருவாய்த்துறை ஒப்பந்தம் முறையில் பெறப்பட்டதாக விளக்கம் அளித்தார். 
நிலங்களை எவ்வாறு பெறப்பட்டதோ, அப்படியே நில உரிமையாளர்களிடம் திருப்ப ஒப்படைக்கப்படும் என்றும் தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்தார். தென்னை மரங்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு தர முன் வந்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 10-10-2019, 05:17 PM



Users browsing this thread: 104 Guest(s)