10-10-2019, 05:15 PM
நெட்ஃப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய ஆர்எஸ்எஸ்!
இணையதளங்களில் டாக்குமெண்டரி மற்றும் தொடர்களை வெளியிட்டுவரும் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்களின நிர்வாகிகளுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்
நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம்களில் வெளியாகும் பல தொடர்கள் திரைப்பட ரசிகர்களிடையே பிரபலமடைந்துவருகிறது. எனினும், ஐ லவ் US, மிஸ் மேட்ச், சேக்ரட் கேம்ஸ், மாயா 2, லஸ்ட் ஸ்டோரிஸ், ஆர்ட்டிகிள் 17, லெய்லா உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சில இணையதொடர்கள் இந்திய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தவறாக சித்தரிப்பதாகவும், இந்திய அரசுக்கு எதிராக, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தன. திரைப்படங்களுக்கு இருப்பது போன்று சென்சார் போர்டுகள் இந்த இணைய தொடர்களுக்கு இல்லாததால் இது போன்ற தொடர்கள் வெளியாவதாக தேசபக்தர்களிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக நெட்ப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட OCCP எனப்படும் online curated content providers நிர்வாகிகளை அழைத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசவிரோத, இந்துவிரோத கருத்துகளைக் கொண்ட தொடர்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக உண்மையான இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் தொடர்களை வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் 6 ஆலோசனைக் கூட்டங்களை மும்பை மற்றும் டெல்லியில் அந்த அமைப்பு நடத்தியுள்ளது.
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அல்லது இந்துக்களின் சின்னங்கள் மற்றும் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடர்களை தவிர்க்குமாறு ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வாரம் “லெய்லா” இணைய தொடர் பல்வேறு எதிர்ப்புகளை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து நெட்ஃப்லிக்ஸ் நிர்வாகிகளை அழைத்து பேசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகம், வலதுசாரி ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியதை சுட்டிக்காட்டினர். மேலும், அவர்களிடம் எது விற்குமோ அதையெல்லாம் அனுமதிக்காமல் இந்திய உணர்வுகளை மனதில் வைத்து தேர்வு செய்யுமாறு வலியுறுத்தியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, பெரும்பாலான OCCP நிர்வாகிகளோடும் தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நெட்ஃபிலிக்ஸ் நிர்வாகிகள் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர்.
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கருத்துகளை கேட்பதற்காக, இந்நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தை
திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நடத்தியதாகவும், திரைப்படங்கள் போன்று ஒழுங்கு படுத்துதல் மற்றும் சான்றிதழ் வழக்குவது தொடர்பாக அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இணைய தொடர்கள் குறித்து சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கும்பல் தாக்குதல்கள் இணைய தொடர்களில் எவ்வாறு காட்டப்படுகிறது என்பது குறித்து கவலையுறுவதாகவும், அவைகள் இந்து தேசியவாதிகளை சம்பந்தபடுத்தி வெளியாவதாகவும், இவைகள் எல்லாம் சிறுபான்மையினர் உணர்வுகளை சுரண்ட தீயசக்திகளுக்கு தான் உதவும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

first 5 lakhs viewed thread tamil